நிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரிட்டன்) தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் பின்வரும் உரையை நிகழ்த்தினார்.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பெயர் "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொலைகாரக் கொள்கையுடன் எப்போதும் தொடர்புடையதாக இருக்கும்.

இது பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காவுகொண்டு இத்தாலியை முந்திக்கொண்டு நேரடியாக ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக மாறியுள்ளதுடன் மற்றும் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது.

உண்மையான இறப்பு விகிதம் குறித்து அரசாங்கம் பொய் கூறுவதால் உத்தியோகபூர்வ குற்றத்தின் முழு அளவும் இன்னும் மறைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில்தான் பராமரிப்பு இல்லங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இதுபோன்ற சோதனைகள் பெரும்பாலும் கிடைக்காதபோது பரிசோதனையில் நேர்மறையான சோதிக்கப்பட்டவை மட்டுமே இதில் அடங்கும்.

பெரும்பாலான மதிப்பீடுகள் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இது 50,000 க்கும் அதிகமாக உள்ளது.

பாதி முதல் முக்கால்வாசி மில்லியன் கணக்கான இறப்புகள் வரையில் நிகழலாம் என அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தொற்று பரவுவதைத் தடுக்கவோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களை இருப்பில் வைக்காதமை மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) க்கான செலவினங்களைக் குறைத்தது பற்றி பிடிபட்டபோது, அதன் குற்றங்களை மறைக்க முயன்றது.

டோரிகள் "தாட்சர் புரட்சியை முடிவிற்குகொண்டுவர" விரும்புவதாகக் கூறினர். இதன் பொருள் என்ன என்பதை இப்போது நாம் அறிவோம்! அமெரிக்காவிற்கு வெளியே, நிதி தன்னலக்குழு சார்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிக நீடித்த மற்றும் மிருகத்தனமான தாக்குதலால் இங்கிலாந்து ஒரு கொலைக் களமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த தசாப்தங்களிலிருந்து ஒன்றுதிரண்ட அனைத்து கருத்தியல் அழுக்குகளும், அதாவது "சமூகம் என்று எதுவும் இல்லை" என்ற தாட்சரின் பிரகடனத்திலிருந்து டோனி பிளேயரின் புதிய தொழிற் கட்சி "மக்கள் இழிவானமுறையில் பணக்காரர்களாகின்றனர் என்பதில் தாம் தீவிரமான நிதானத்துடன் இருக்கின்றோம்" என்று அறிவித்தது வரை, இந்த தொற்றுநோய்க்கான ஜோன்சனின் பதிலில் இவை அனைத்தும் தமது பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்பாட்டைக் காண்கிறது.

அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன?

வயதுமுதிர்ந்தவரகளையும் மற்றும் பலவீனமானவர்களையும் அழியவிடு!

நிறுவனங்களின் பொக்கிஷங்களில் பில்லியன்களை செலுத்து!

மக்களை மீண்டும் வேலைக்கு அனுப்பு!

வலிமிகுந்த நோய் மற்றும் அகால மரணம் என்ற எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலுடன் அவர்களை பழக்கப்படுத்திக் கொள்ள விடு!

நாங்கள் எப்படி இங்கு வந்தோம்? பிளேயரைக் குறிப்பிடுங்கள், தொழிற் கட்சியை ஒரு போருக்கும் மற்றும் சமூக பிற்போக்குத்தனமானதாகவும் மாற்றியதற்கும், தொழிற்சங்கங்களை நிர்வாகங்களின் கையாட்களாகவும், அரசாங்கத்திற்கான ஒரு தொழில்துறை பொலிஸ் படையாகவும் மாற்றுவதற்கும் இதன் மூலம் நீங்கள் ஒரு பெயரைக் கொடுக்கிறீர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஜெரெமி கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இதையெல்லாம் மாற்றியமைத்து, தொழிற்கட்சி அவர்களுக்கு ஒரு கட்சியாக மறுபிறவி எடுக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த கற்பனை இன்று எப்படி இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

கோர்பின் தலைமையின் ஐந்து ஆண்டுகள், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக சீர்குலைப்பதற்கான ஒரு பயிற்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் மீதான அரசாங்கத்தின் நெருக்கடிக்கு மத்தியில், டோரி வெட்டுக்களுக்கு எதிராக எந்தவொரு வேலைநிறுத்தத்தையும் அல்லது அரசியல் அணிதிரட்டலையும், சிரியாவில் மற்றும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக போரிடுவதையும், பிளேயர்வாதிகளை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு காப்டன் கோர்பின் தலைமை வகித்தார்.

இப்போது நாம் டொளனிங் வீதி 10 வது இலக்கத்தில் போரிஸ் ஜோன்சனையும், தொழிற் கட்சியின் தலைவராக சேர் கெய்ர் ஸ்டார்மரையும் கொண்டிருக்கிறோம்.

கோர்பின் பாராளுமன்றத்தில் கடைசியாகச் செய்த செயல் என்னவென்றால், மார்ச் 27 ஆம் தேதி அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பதிவு குறித்து "இடைவிடாமல் எதிர்மறையாக" குறிப்பிட விரும்பவில்லை என்று அறிவித்ததாகும். "சமூக நோயெதிர்ப்பு சக்தி" கொள்கை அல்லது 350 பில்லியன் டாலர் பெருநிறுவன பிணை எடுப்பு பற்றி கூட குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக "ஒருவருக்கொருவர் மதிப்பையும், அனைவரையும் கவனித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தின் வலிமையையும் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம்" பற்றி அவர் பிரசங்கித்தார்.

கடைசியாக போராட மறுத்தது, ஸ்டார்மருக்கு விசுவாசமான ஆதரவை வழங்க கோர்பின் அளித்த உறுதிமொழியுடன், தொழிற் கட்சியும் மற்றும் தொழிற்சங்க காங்கிரஸும் தேசிய ஒற்றுமைக்கான ஒரு அரசாங்கத்தில் உண்மையான தங்கள் இடத்தைப் பிடிக்க களம் அமைத்துள்ளது.”

தொழிற்சங்க காங்கிரஸ் தனது வெளிப்படையான நோக்கம், “கடைசியில் பணிக்கு திரும்புவதை நிர்வகிப்பது அல்லது அடைத்தலை தளர்த்தவது” என குறிப்பிட்டது.

அதன் கொள்கை ஆவணம் அறிவிக்கிறது: ஒரு தொற்றுநோயை எவ்வாறு நிர்வகிப்பது, அல்லது வேலைக்கு திரும்புவதற்கான வேகம் அல்லது தன்மை குறித்த விஞ்ஞானம் பற்றி தொழிற்சங்க காங்கிரஸ் ஒருநிலைப்பாட்டை எடுக்கவில்லை. பொது சுகாதாரத்திற்கா அல்லது பொருளாதார வளர்ச்சிக்கா முன்னுரிமை கொடுப்பது பற்றி வாதிடுவது தவறானது: இவை இரண்டும் உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கு முக்கியம்.”

தங்களுக்கு சம்பளம் வழங்குபவர்களின் இலாப வரம்பைப் பற்றிய ஒரே அக்கறை கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், டோரி அமைச்சர்களுடன் உட்கார்ந்து, தொற்றுநோயின் தவிர்க்க முடியாத இரண்டாவது அலைகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்கும் திட்டங்களை வகுக்கின்றனர்.

இதற்கிடையில், ஸ்டார்மர் டோரிகளை ஒரு இன்றையகால பிரபல பாடகரான யூரியா ஹீப் போல பார்த்து, அதன் “சமூக விலக்கல் மற்றும் கவனமான பராமரிப்பு திறன் குறித்த பணிகளை” “ஆச்சரியமாக” புகழ்ந்தார்.

"நான் சாத்தியமற்றவற்றை கேட்க மாட்டேன் என்று சொன்னேன், நான் அதையே செய்வேன்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார். அவர் தனது வார்த்தையை நன்றாகவே பாதுகாத்தார்.

ஒரு காலத்தில் கோடிக்கணக்கானோரின் விசுவாசத்தை வைத்திருந்த பழைய கட்சிகள் கால்களின் கீழே அழுகி வருகின்றன. பிரிட்டனில் உள்ள தொழிலாள வர்க்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர சகோதரிகளைப் போலவே, இப்போது முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான உடன்பாடுகாண முடியாத போராட்டத்தை நடத்தத் தேவையான தலைமையை உருவாக்க வேண்டும். முடிவை நோக்கி செய்யவேண்டும்.

நான்கு தசாப்தங்களாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், சந்தையின் அதிசயங்கள் பற்றிய முடிவற்ற மற்றும் பெருகிய முறையிலான பொய்யுரைகளுக்கும் மற்றும் சோசலிசத்தின் தோல்வி என்று கூறப்படுவதற்கும் ஆளாகியிருந்தனர். கோர்பின் எப்போதும் மோசமடையும் சமூக சமத்துவமின்மை மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வறுமைக்கு மத்தியில் இந்த பொய்யை ஆரம்பத்தில் பரவலாக நிராகரிக்கப்பட்டதனுள் கோர்பின் அகப்பட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தாக்கும் முன்பு பிரிட்டன் பணக்காரர்களுக்கான விளையாட்டு மைதானமாகவும், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு ஒரு சமூக தரிசு நிலமாகவும் மாற்றப்பட்டது. பாரிய வேலையின்மை, ஊதிய வெட்டுக்கள், வேலைகள் வேகமாக்கப்பட்டது மற்றும் மீதமுள்ள அனைத்து சமூகப் பாதுகாப்புகளையும் அழித்தல் போன்ற “புதிய இயல்பை” ஏற்குமாறு இப்போது எம் அனைவருக்கும் கூறப்படுகின்றது. பொதுவான துன்பத்திற்கும் துயரத்திற்கும் மத்தியில் பெரும் செல்வந்தர்கள் தொடர்ந்தும் பிரபுக்களைப் போல வாழ முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி தவிர்க்கமுயாத வெகுஜன எதிர்ப்பின் வெடிப்பிற்கு இப்போது தயாராகி வருகிறது. இது இங்கிலாந்திலும் உலகம் முழுவதும் தூண்டிவிடப்படும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் நமது இணை சிந்தனையாளர்கள் மற்றும் தோழர்களுடன் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில், இந்த இயக்கத்திற்கு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தையும் வெற்றிக்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழங்குவோம்.

Loading