முன்னோக்கு

லிபியா உள்நாட்டு போருக்குள் சரிகிறது: போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவினது கசப்பான விளைபயன்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லிபிய தலைநகரின் தெற்கே “ஃபீல்ட் மார்ஷல்" கலிஃபா ஹஃப்தர் (Khalifa Haftar) துருப்புகளையும் டாங்கிகளையும் அணித்திரட்டி வருவதுடன், அவரின் லிபிய தேசிய இராணுவம் என்றழைக்கப்படுவதைச் சேர்ந்த போர்விமானங்கள் அந்நகரின் செயல்பாட்டில் உள்ள ஒரே விமான நிலையம் மீது குண்டுவீசி அந்நாட்டிலிருந்து தப்பிக்க முயலும் அப்பாவி மக்களை முடக்கி வைத்துள்ள நிலையில், திரிப்போலிக்கான இரத்தக்களரியான மோதல் அச்சுறுத்தல் கூடுதலாக அதிகரித்துள்ளது.

ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர் 181 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சண்டையிலிருந்து தப்பிக்க ஆயிரக் கணக்கானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு தப்பி சென்றுள்ளனர், பல்வேறு எதிர்விரோத போராளிகள் குழுக்கள் நடத்தும் தடுப்புக்காவல் முகாம்களின் கூறவியலாத நிலைமைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான அகதிகளும் புலம்பெயர்ந்தவர்களும் நிராதரவாக படுகொலைக்கு ஆளாவோமோ என்று பித்துபிடித்த நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அது முழு-அளவிலான உள்நாட்டு போரை நோக்கி தீவிரமடைந்து வருவதற்கு மத்தியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் Michelle Bachelet, லிபியாவில் அப்பாவி மக்கள் மீதான எந்தவொரு தாக்குதல்களும் போர் குற்றங்களுக்கு நிகரானது என்று எச்சரித்ததுடன், எல்லா தரப்பும் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க" வேண்டும் என்றும், “அப்பாவி மக்களையும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகள் உட்பட மக்களுக்கான உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள" வேண்டும் என்றும் கோரினார்.

லிபியாவில் வெடித்திருக்கும் இந்த சமீபத்திய திடீர் வன்முறையை நோக்கிய ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அணுகுமுறை, கர்னல் மௌம்மர் கடாபி தலைமையிலான அரசாங்கத்தின் கரங்களில் இருந்து அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக என்ற சாக்குபோக்கின் கீழ் 2011 இல் ஒருதலைபட்சமாக அமெரிக்கா-நேட்டோ போர் தொடுத்ததன் மீதான அதன் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகிறது. லிபியாவின் பாதுகாப்பு படைகளை மற்றும் அத்தியாவசியமான உள்கட்டமைப்பை அழிக்கவும் அதன் அரசாங்கத்தைத் தூக்கிவீசவும் சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களின் ஆதரவுடன் ஏழு மாதகால குண்டுவீச்சு நடவடிக்கையை தொடங்குவதற்கு, விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிக்கு அனுமதி வழங்கிய ஐ.நா. தீர்மானமே ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டது. அந்த நடவடிக்கை கடாபியின் இரும்புகோட்டையாக இருந்த கடற்கரை நகரமான சிர்ட்டே இல் சரமாரியாக குண்டுவீசுவதிலும் மற்றும் கடாபியே கூட குண்டர்களால் விசாரணையின்றி சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதிலும் உச்சத்தை அடைந்தது.

எந்தவொரு எண்ணிக்கை மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தாலும், கடாபி ஆட்சியின் ஒடுக்குமுறைக்குத் தங்கள் வாழ்வை இழந்தவர்களை விட, இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரக் கணக்கில் மிக அதிகமாக இருந்த போதும், இந்த ஏகாதிபத்திய படுகொலை நடவடிக்கை நெடுகிலும், ஐ.நா. மனித உரிமைகளுக்கு வக்காலத்துவாங்கியவர்கள் தங்களின் நாவை அடக்கி வைத்திருந்தார்கள்.

அந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை முடிந்து பல மாதங்கள் கழித்து, மார்ச் 2012 இல் தான், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கை "அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை மற்றும் இலக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிபடுத்தி" இருப்பதாகவும், அது "எந்தவொரு இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்றும் குறிப்பிட்டது. மொத்த குண்டுவீச்சு எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக இருந்த நிலையில், அது அதன் புலன்விசாரணையை வெறும் 20 வான்வழி தாக்குதல்களுடன் மட்டுப்படுத்தி இருந்தது.

பிரதான சக்திகள் அவற்றின் மூலோபாய நலன்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வரும் முன்னாள் காலனித்துவ நாடுகளில், ஒடுக்கப்பட்ட மக்களைப் "பாதுகாப்பதற்கான பொறுப்புறுதி" என்று தாராளவாத ஏகாதிபத்தியத்திற்கு வாக்காலத்துவாங்குபவர்கள் அறிவித்த மோசடியான பதாகையின் கீழ், எட்டாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட "மனிதாபிமான" தலையீடு என்று கூறப்படுவதன் நேரடி விளைவு தான், லிபியாவில் இப்போதைய நெருக்கடியும் முழு-அளவிலான இந்த இரத்தக்களரியின் அச்சுறுத்தலுமாகும்.

அதிகரித்து வரும் மோதலின் எத்தரப்பிலும், போர் காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்டதாக கூறும் ஆஸ்தான வழிகாட்டிகளின் மத்தியில் "புரட்சியாளர்கள்" மற்றும் "ஜனநாயகவாதிகள்" என்றழைக்கப்படுபவர்கள் உள்ளனர். இவர்களில் கலிஃபா ஹஃப்தரும் உள்ளடங்குவார், இவர் பல தசாப்தங்களாக அமெரிக்க மத்திய உளவுத்துறை முகமையின் சொத்திருப்பாக இருந்து, இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வேர்ஜீனியாவின் லாங்லியில் அதன் தலைமையகங்களுக்கு மிக நெருக்கமாக வாழ்ந்த பின்னர், பெங்காசிக்குப் பறந்து வந்த கடாபியின் முன்னாள் தளபதியாவார்.

ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டுக்கு எதிராக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போருக்காக வாஷிங்டன், பாரீஸ் மற்றும் இலண்டன் முன்னெடுத்த போலி சாக்குபோக்குகளை அலங்கரித்து பெரிதாக்கிய போலி-இடது அரசியல் அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்களின் ஒரு பரிவாரம், லிபியாவில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளது "மனிதாபிமான" தலையீட்டை ஊக்குவிப்பதில் ஓர் இன்றியமையா பாத்திரம் வகித்தன.

அந்த போரை அரவணைத்தவர்களில் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் உம் உள்ளடங்குவார், இவரது Informed Comment வலைத் தளம் ஈராக் போர் மீதான அதன் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்காகவும் மற்றும் இஸ்ரேலிய கொள்கை மீதான அதன் விமர்சனங்களுக்காகவும் அதிக பின்தொடரல்களை பெற்றிருந்தது.

“நேட்டோவுக்கு நான் தேவைப்பட்டால், நான் அங்கே இருப்பேன்,” என்று அறிவித்து அமெரிக்க-நேட்டோ தலையீட்டுக்கு கோல் அவரின் உத்வேகத்தை வெளிப்படுத்தினார். இப்போது லிபியாவில் மீண்டுமொருமுறை முழு அளவிலான சண்டை வெடித்து வருகையில், பேராசிரியர் கோல் இராணுவத்திற்காக ஒரு புதுப்பிக்கப்பட்ட வலியுறுத்தல் செய்ய வேண்டியிருப்பதை உணர்கிறாரா என்று தெரியவில்லை, அவ்வாறு அவர் செய்தால் அவர் கலிஃபாவின் டாங்கிகளில் ஒன்றை நிலைநிறுத்துவதைத் தேர்ந்தெடுப்பாரா அல்லது திரிபொலி போராளிகள் குழுக்களின் எந்திர துப்பாக்கி ஏந்திய வாகனங்களைத் தேர்ந்தெடுப்பாரா என்பதும் தெரியவில்லை.

போர் தொடங்கிய போது, கோல் "இடதுக்கு ஒரு பகிரங்க கடிதம்" என்பதை பிரசுரித்தார், அதில் அவர் "இடதுசாரிகள்" என்றழைக்கப்படுபவர்கள் "ஒரே நேரத்தில் மென்றுகொண்டே நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கோரினார், அதாவது ஏதோவிதத்தில் இடதுசாரி என்று காட்டிக் கொண்டே, அதேவேளையில் ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது.

அமெரிக்கா தொடங்கிய போர்கள் மீது “இடது" “விடயத்திற்கு ஏற்ப" அதன் அணுகுமுறையைத் தீர்மானிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார், “முட்டாள்தனமான வழியில் மற்ற எல்லா மதிப்புகள் மீதும் 'ஏகாதிபத்திய-எதிர்ப்பு' துருப்புச்சீட்டைப் பயன்படுத்துவது வெளிப்படையாகவே அபத்தமான நிலைப்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது,” என்றவர் அறிவித்தார்.

“விடுதலை இயக்கத்தை [அவர்] சிறிதும் தயக்கமின்றி உற்சாகப்படுத்துவதாகவும், அவை நசுக்கப்படுவதில் இருந்து UNSC இன் [ஐ.நா. பாதுகாப்பு அவையின்] ஒப்புதல் பெற்ற தலையீடு அவற்றைக் காப்பாற்றி இருப்பதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும்" கோல் தெரிவித்தார்.

"மனித உரிமைகள்" போன்ற சமஅளவிலான ஏனைய முக்கியத்துவங்களுடன் சமப்படுத்தும் ஓர் அகநிலையான "மதிப்புக்கு" ஏகாதிபத்திய-எதிர்ப்பை கோல் குறைப்பது, ஏகாதிபத்திய போரின் பட்டியலில் இடம்பிடிக்க அவர் முண்டியடிப்பதன் அடியிலிருக்கும் முழுமையான குட்டி-முதலாளித்துவ, மார்க்சிச-விரோத கண்ணோட்டத்தை அம்பலப்படுத்துகிறது.

பொருளாதாரத்தை ஏகப்போகமாக்குவது, நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் மற்றும் ஒட்டுமொத்த புவியையும் விரல்விட்டு எண்ணக்கூடிய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே பங்குபோடுவது —அதாவது உலகளாவிய போர் மற்றும் புரட்சிக் காலகட்டத்தின் வருகை— என்ற அடிப்படையில், முதலாளித்துவத்தின் வரலாற்று அபிவிருத்தியில் ஏகாதிபத்தியம் என்பது ஒரு புறநிலையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டம் என்ற கருத்துருவை இத்தகைய குட்டி-முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் நிராகரிக்கின்றனர். அவர்கள், அதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட மக்களை "மனிதாபிமான" அடிப்படையில் மீட்பதற்குத் தகைமை கொண்ட வேறுவிதத்தில் ஆரோக்கியமான அமைப்புமுறையினது வெறும் ஒரு மிகைமிஞ்சிய நடவடிக்கை அது என்றவர்கள் வாதிடுகிறார்கள்.

இதேபோல, இன்னும் அதிக பிற்போக்குத்தனமான பாத்திரம் வகிக்கவில்லை என்றாலும், இலண்டனின் கிழக்கத்திய ஆபிரிக்க ஆய்வுகளுக்கான பயிலகத்தில் பணியாற்றும் ஒரு கல்வியாளர் ஜில்பேர் அஷ்கார் பப்லோயிச International Viewpoint இக்காக லிபியா மற்றும் சிரியா இரண்டு போர்களுக்கான ஒரு பிரதான பிரச்சாரகராக சேவையாற்றி வருகிறார். மார்ச் 2011 இல் போர் தொடங்கிய போது, அஷ்கார் அமெரிக்க-நேட்டோ தலையீட்டைப் புகழ்ந்துரைத்து ஒரு பேட்டி அளித்தார். அவர் குறிப்பிட்டார், “... கடாபியின் படைகள் பெங்காசி மீது தாக்குதல் நடத்துவதால் தவிர்க்கவியலாமல் ஏற்பட்டிருக்கக்கூடிய படுகொலைகளை அவசரமாக தடுக்க வேண்டியிருந்த நிலையில், வேறு மாற்று வழிவகைகள் மூலமாக பாதுகாப்பதற்கான இலக்கை எட்ட முடியாமல் இருந்த நிலையில், யாருமே அதை அறிவுபூர்வமாக எதிர்க்க முடியாது... அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாடுகளின் பெயரில் நீங்கள் எதிர்க்க முடியாது,” என்றார்.

அப்போர் முடிந்த பின்னர், பெங்காசியில் நடக்கவிருந்ததாக கூறப்பட்ட படுகொலைகள் திசைதிருப்புவதற்காக ஜோடிக்கப்பட்டவை என்பது நிரூபணமாயின.

போர் நடந்து கொண்டிருந்த போது, அஷ்கார் ஏகாதிபத்திய ஆட்சி மாற்றத்தை ஆதரிப்பதில் இன்னும் அதிக போர்குணத்துடன் மாறினார், அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய சக்திகளும் "கிளர்ச்சிக்கு" அதிக ஆயுதங்களை வழங்க வேண்டுமென்று கோரியதுடன், ஆகஸ்ட் 2011 இல், லிபிய மக்கள் மீது போதுமானளவில் குண்டுகளை வீச தவறியதற்காக அவர்கள் மீது எரிச்சலை வெளியிட்டார், வான்தாக்குதல்களில் பத்தாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் வான்தாக்குதல்கள் "சிறிய நடவடிக்கையே" (low-key) என்றும் வர்ணித்தார்.

இதே இன்றியமையா வாதங்கள், சமீபத்தில் கலைக்கப்பட்ட சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) அஷ்கார் மற்றும் அஸ்லி ஸ்மித் போன்ற அரசியல் பாசாங்குக்காரர்களுடன் சேர்ந்து, சிரியாவில் சிஐஏ-முடுக்கிவிட்ட "புரட்சிக்கு" அதிக ஆயுதங்களைக் கோரியும் மற்றும் பஷர் அல் அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்க அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடன் சாத்தியமான ஒரு மோதல் உட்பட ஒபாமா நிர்வாகம் அதன் "செங்கோடுகளை" பலப்படுத்தவில்லை என்று அதை கண்டித்தும், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் மீண்டும் தொடங்கப்படுவதாக இருந்தது.

இந்த அயோக்கியர்கள் மற்றும் இவர்களது அமைப்புகளின் அரசியலுக்கும், மார்க்சிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மற்றும் அவர்கள் பயன்படுத்தும் "சோசலிச" வாய்வீச்சு முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசியலுக்குள் அவர்கள் தங்குத்தடையின்றி ஒருங்கிணைவதற்கு ஒரு மூடிமறைப்பு என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. அவர்கள் ஜனநாயகத்திற்கான தேசிய உரிமைவழங்கல் நிறுவனத்தைப் போல செயல்பட்டுக் கொண்டு, சிஐஏ மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு அரசியல் முகப்புகளாக மற்றும் வடிகால்களாக சேவையாற்றிக் கொண்டு, அவர்கள் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட அரசுசாரா நிறுவனங்களின் உயிரினங்களாக செயல்படுகிறார்கள்.

தங்களைத்தாங்களே "சோசலிஸ்டுகள்" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இவர்களில் எவருமே மத்தியக் கிழக்கில் மனிதாபிமான ஏகாதிபத்திய ஓநாய்களின் உள்நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியதில்லை. லிபியா மீதான அவர்களின் போர் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் விருப்பத்தால் உந்தப்பட்டிருந்தது குறித்தும், ஆபிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் கொண்ட அந்நாட்டின் மீது கட்டுப்பாடில்லாத கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்கான அவற்றின் எரிசக்தித்துறை பகாசுர நிறுவனங்களின் விருப்பத்தால் உந்தப்பட்டிருந்தது குறித்தும் அவர்கள் எந்த அறிவுறுத்தலையும் உதறித் தள்ளினார்கள். அல்லது, அவ்விதத்தில், மத்திய கிழக்கின் மூலோபாய குறுக்குச்சந்தியில் அமைந்துள்ள ஒரு நாட்டில் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை நிறுவும் நோக்கில் சிரியாவில் போர் தூண்டிவிடப்பட்டது.

லிபியா மற்றும் சிரியாவில் அவர்கள் ஆதரித்த "புரட்சியாளர்களைப்" பொறுத்த வரையில், கோல், அஷ்கார், ஸ்மித் அல்லது வேறெந்த போலி-இடதுகளில் எவரொருவரும் அவர்கள் எதற்காக போராடுவதாக கூறுகிறார்களோ அதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையோ, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க சக்திகளைக் குறித்து எந்தவொரு பகுப்பாய்வையோ அல்லது, அதற்காக அவர்களின் நோக்கங்களைப் பேசக்கூடிய ஒரேயொரு தலைவர் என்று கூறி அவரின் பெயரையோ குறிப்பிடவில்லை. இந்த மவுனச்சுவரின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், கடாபி மற்றும் அசாத் இருவருக்கும் எதிராக அணிதிரட்டப்பட்ட சிஐஏ-ஆதரவிலான ஆயுதமேந்த செய்யப்பட்ட குற்றவாளிகள் சிஐஏ சொத்திருப்புகளால் மற்றும் இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களால் மேலாதிக்கம் செலுத்தின, அத்துடன் அல்கொய்தா தொடர்பு கொண்ட சக்திகள் அவற்றில் மேலாதிக்க கூறுபாடுகளாக இருந்தன.

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதன் 2016 அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துக குழு வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தின் பாகமாக மேலெழுந்த தீவிரமயப்பட்ட நடுத்தர வர்க்க அரசியல் போக்குகள் ஏகாதிபத்திய தலையீட்டை உற்சாகப்படுத்திய தலைவர்களாக மாறியதற்கான புறநிலை அடித்தளங்களை ஸ்தாபித்துக் காட்டியது:

கடந்த நான்கு தசாப்தங்களில், இந்த அடுக்குகள் ஒரு ஆழமான சமூக மற்றும் அரசியல் உருமாற்றத்துக்குள் சென்றுள்ளன. பங்குமதிப்புகளிலான பரந்த அதிகரிப்பானது - தொழிலாளர்கள் மீது ஊதிய மற்றும் நலன்புரி உதவி விட்டுக்கொடுப்புகள் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டதன் மூலமும், சுரண்டல் விகிதம் உக்கிரப்படுத்தப்பட்டதன் மூலமும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவிலான உபரி மதிப்பு பிழிந்தெடுக்கப்பட்டதன் மூலமும் இதற்கு வழியேற்படுத்தப்பட்டிருந்தது - நடுத்தர வர்க்கங்களின் ஒரு சலுகை படைத்த பிரிவுக்கு, அவர்கள் தங்களது தொழில்வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்பனை செய்தும் பார்த்திருக்கமுடியாத அளவான செல்வத்தின் ஒரு மட்டத்திற்கு அவர்களுக்கு அணுகல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நீடித்த பங்குச் சந்தை எழுச்சியின் மூலமாக ஏகாதிபத்தியம் உயர்-நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே தனக்கான ஒரு புதிய மற்றும் அர்ப்பணித்த பகுதியை வென்றெடுப்பதற்கு வழிகிடைத்திருந்தது. இந்த சக்திகளும், அவற்றின் நலன்களை வெளிப்படுத்துகின்ற அரசியல் அமைப்புகளும், போருக்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும் கூட, தங்களது சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்தன.

வர்க்க போராட்டத்தின் ஓர் உலகளாவிய மேலெழுச்சி இத்தகைய போக்குகளை இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்த்தி வருகின்ற நிலையில், அத்துடன் சேர்ந்து சமூக சமத்துவமின்மை மற்றும் துருவமுனைப்பாட்டின் ஒரு தீவிரமயப்படலை மட்டுமே இடைப்பட்ட ஆண்டுகள் கண்டுள்ளன.

ஏகாதிபத்திய தலையீட்டில் உடந்தையாய் இருந்த இவர்கள் தங்களின் கரங்களில் இரத்தத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே லிபிய சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. பிற்போக்குத்தனங்களுக்காகவும் மற்றும் அவர்கள் அரசியல் குற்றவாளிகள் என்பதற்காகவும் அவர்களை அம்பலப்படுத்துவது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்விக்கு அவசியமாகிறது.

Loading