முன்னோக்கு

லிபியா, ஏகாதிபத்தியம் மற்றும் "இடது" புத்திஜீவிகளின் சரணாகதி: பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்

மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

லிபியாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ தாக்குதலின் மிகவும் அதிர்ச்சியூட்டும் விடயங்களில் ஒன்று இடது-தாராளவாத கட்சிகள் மத்தியிலும் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களின் முக்கிய பாகமாக உள்ளடங்கியிருக்கும் வசதிபடைத்த மத்தியவர்க்க பிரிவினரும் இந்த "யுத்த தேர்வுக்கு" காட்டும் பரந்த ஆதரவாகும். ஏகாதிபத்திய யுத்தத்திற்கான அனைத்து நியாயப்பாடுகளிலும் மிகவும் போலித்தனமாகவும், ஏமாற்றுத்தனமானதாக உள்ள “மனித உரிமைகள்" என்ற முழக்கத்துடன், தாராளவாத இடது இந்த யுத்தத்தை அவர்களின் சொந்த யுத்தமாக ஏற்றுக் கொண்டது. தனது சூறையாடும் நலன்களுக்கு, “மனித உரிமைகள்" மற்றும் ஜனநாயகத்தை, போர்வையாக ஏகாதிபத்தியம் பறைசாட்டிக் கொண்டிருப்பது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும் என்பதை ஒருவர் ஊகித்து கொள்ளலாம்.

லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சிற்கு இடது-தாராளவாதத்தின் நியாயப்படுத்தல்கள் கேர்னல் கடாபிக்கு எதிரான அறநெறி அட்டூழியங்களுடன் ஒன்றுகலந்துள்ளன. ஆனால், லிபியாவிலும் சர்வதேசஅளவிலும், அவரை தூக்கியெறிய கோரிவரும் சக்திகளின் உந்துதல்கள் மற்றும் நலன்களைப் பகுத்தாராயும் வழியில், தோற்றப்பாட்டளவில் கூட அவ்வாறான நியாயப்பாடுகள் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வக்காலத்துவாங்கும் அனுதாபிகள், அதிர்ச்சியால் மூளைகுழம்பிய சமூகத்தின் அங்கத்தவர்களைப் போல வாதிட்டு, எழுதுகிறார்கள். அவர்கள் மத்தியில் வரலாறே கிடையாது. கடந்தகாலத்தில் நிகழ்ந்த எதுவுமே நினைத்துப் பார்க்கப்படவில்லை. அறநெறி-கலப்படம் செய்யப்பட்ட ஏகாதிபத்திய காலனித்துவத்தின் இனப்படுகொலைகளின் புள்ளிவிபரங்கள் கைவிடப்பட்டுள்ளன. 1911 மற்றும் 1940க்கு இடையில் இத்தாலிய ஆக்கிரமிப்பின் போது லிபிய மக்களில் சுமார் ஒரு பாதியினர் இத்தாலிய காலனித்துவத்தால் துடைத்தழிக்கப்பட்டதைக் குறித்து இத்தகைய எழுத்துக்களில் ஒரு ஆதாரமும் கிடையாது. அல்லது 1956 அக்டோபர்-நவம்பரில் வட ஆபிரிக்காவில் கடைசி மிகப்பெரிய ஆங்கிலோ-பிரெஞ்சு கூட்டு இராணுவ நடவடிக்கையே எகிப்து ஆக்கிரமிப்பாக இருந்தது என்பதையும் அவர்கள் குறிப்பிடுவதில்லை. இஸ்ரேலின் நயவஞ்சக ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கை, மற்றொரு அரபு கேர்னலான கமால் அப்துல் நாசரின் தேசியவாத ஆட்சியைத் தூக்கியெறிய செய்து, தேசியமயமாக்கப்பட்டிருந்த சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுக்க வழிவகுத்தது. பிரிட்டிஷ் பத்திரிகைகளால் நாசர் பரவலாக "வெறி நாய்" (mad dog) என்று பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு வந்தார். பிரதம மந்திரி அந்தோனி ஏடன் அவரின் படுகொலைக்கு களம் அமைத்தார். அப்பிராந்தியத்தில் அதன் சொந்த திட்டங்களைக் கொண்டிருந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவற்றின் காலனித்துவ பேரரசுகளை மீண்டும் நிறுவும் முயற்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருந்ததால், ஆங்கில-பிரெஞ்சு ஆக்கிரமிப்புத் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஓர் அவமானகரமான பின்னடைவை தடுக்க பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் இஸ்ரேலியர்களை ஜனாதிபதி ஐசென்ஹோவர் நிர்பந்தித்தார்.

லிபியா மீதான தாக்குதலை மனித உரிமைகள் சார்ந்த விஷயத்தில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றியென்று வரவேற்கும் ஒருவர், அமெரிக்காவின் மூலோபாய அரசியல் மற்றும் பொருளாதார நலன்களில் ஏதோவொரு வழியில் குறுக்கிட்ட நாடுகளை அது தாக்குவதிலும், சீர்குலைப்பதிலும் அது ஆற்றிய நாசகரமான பாத்திரத்தைக் குறித்து எதையுமே நினைத்துப் பார்க்கவில்லையென்று தெரிகிறது. வியட்நாம், நிக்கராகுவாவில் இருந்த "கொன்ட்ராஸ்" (Contras) மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான யுத்தம், தெற்கு ஆபிரிக்காவில் இருந்த இனவெறி ஆட்சிக்கு அது அளித்து வந்த நீண்டகால ஆதரவு, ஈராக் ஆக்கிரமிப்பு என மறக்கப்பட்டிருப்பது கடந்தகாலம் மட்டுமல்ல, மாறாக நிகழ்காலமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடும் ஆளில்லா விமானங்கள் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் குண்டுமழை பொழிந்து ஒவ்வொரு நாளும் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தாலும் கூட, கடாபி அவருடைய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறார் என்பதற்காக அவரை அகற்றும் வேலையை, யுத்தத்திற்கு ஆதரவு காட்டும் இந்த "இடதுகள்", அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றன.

யுத்தத்திற்கு இடது-தாராளவாத புத்திஜீவிகள் காட்டும் விடையிறுப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக, மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் அவருடைய பரவலாக-பின்தொடரப்படும் "Informed Comment” வலைப்பதிவில் (http://www.juancole.com) மார்ச் 27இல் பதிந்த ஓர் அறிக்கை உள்ளது. இது Nation இதழிலும் பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்டது. மத்தியகிழக்கின் வரலாற்றாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் கோலெ, “இடதிற்கு ஒரு பகிரங்க கடிதம்" என்ற தலைப்பில், லிபியா மீதான தாக்குதலுக்கு அவரின் ஆதரவை வலியுறுத்தி கூச்சலிடுகிறார்.

அவர் பழியுணர்ச்சியோடு எழுதுகிறார்: “இடதுகள் ஒரேநேரத்தில் சுயிங்கம் (chew gum) மென்று கொண்டே நடக்க பழகிக்கொள்ள வேண்டுமென்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” இன்று நிலவும் சூழ்நிலைகளுக்குள் தங்களின் பாரம்பரிய யுத்த-எதிர்ப்பு கொள்கைகளை எவ்வாறு இணங்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவற்றிற்குத் தெரியாமல் இருப்பது தான் இடதின் பிரச்சினையென்று கோல் வாதிடுகிறார். அமெரிக்கா தொடுக்கும் யுத்தங்களுக்கு இடது அதன் மனோபாவத்தை, “அந்தந்த விஷயத்திற்கேற்ப" மாற்றிக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். …" வலதுகள் கருச்சிதைவு செய்வதை ஒரு முற்றான தொடக்கூடாத விடயமாக கருதுவதுபோல், "அன்னியநாட்டு தலையீட்டை", ஒரு முற்றான தொடக்கூடாதவிடயமாக பார்ப்பதை, இவ்வாறு செய்வது நம்மை இதயமற்றவர்களாக செய்வதாகும் என்று பார்ப்பதை அது தவிர்த்துக் கொள்ள வேண்டும். (அசௌகரியமான முன்னிலை நிலைப்பாடுகள் பெரும்பாலும் இரக்கமற்றத்தனத்திற்கே இட்டு செல்கின்றன). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏகாதிபத்தியத்துடன் ஒரு நடைமுறை இணக்கத்தை கோல் வலியுறுத்துகிறார். அவர் எழுதுகிறார், “முட்டாள்தனமான வழியில் 'ஏகாதிபத்திய-எதிர்ப்பு' துருப்புச்சீட்டைக் காட்டுவது,” ஏனைய எல்லாவற்றையும் விட "வெளிப்படையாகவே அர்த்தமற்ற நிலைப்பாட்டிற்கு இட்டுச்செல்கிறது.”

நேர்மையாக கூறுவதானால், இந்த கருத்துக்களில் கணிசமான அளவிற்கு அறிவுஜீவித்தன குழப்பம் வெளிப்படுகிறது. “ஏகாதிபத்திய-எதிர்ப்பு" என்பது ஒரு "மதிப்பு" (value) அல்ல (ஏனைய மதிப்புகளோடு நடைமுறைரீதியில் வேண்டுமானால் அதை கொண்டு குழப்பலாம்) மாறாக உலகளாவிய முதலாளித்துவத்தின் புறநிலையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வடிவமைப்பின் ஒரு பகுப்பாய்வில், தத்துவார்த்தரீதியாக, ஓர் அரசியல் நிலைப்பாடு அடித்தளத்தில் உள்ளது. லிபியா மீதான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முதலாளித்துவ ஆளும் மேற்தட்டின் முக்கிய நலன்களை எடுத்துக்காட்டும் இந்த பகுப்பாய்வை கோலெ தவிர்த்துக்கொள்கிறார்.

இவ்வாறு, கோலை பொறுத்தவரையில் யுத்த விவகாரம், உண்மையான மற்றும் எதிர்பார்த்த, லிபிய குற்றங்கள்மீது அவர் கவனம் முழுவதும் திரும்பி இருப்பதோடு சேர்ந்து, இன்றிருக்கும் லிபிய ஆட்சியை முற்றாக நிராகரிப்பதும் உள்ளடக்கி உள்ளது. அவர் குறிப்பிட்டது, "நான் வெட்கமில்லாமல் இந்த சுதந்திர போராட்டத்தை வரவேற்கிறேன். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ தலையீடு அவர்கள் நசுக்கப்படுவதிலிருந்து அவர்களை காப்பாற்றி உள்ளதை நினைத்து மகிழ்கிறேன்.” தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், “கடாபி சுதந்திர போராட்டத்தை ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கி, அந்நாட்டை இரகசிய பொலிஸ் ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, அவரை அவரே மீண்டும் ஸ்திரப்படுத்திக்கொண்டிருப்பார்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“சுந்திர போராட்டத்தின்" உட்கூறுகளின் ஆழமான பகுப்பாய்வை அளிக்காத பேராசியர் கோல், போராட்டங்களில் அல்கொய்தா சம்பந்தப்பட்டிருந்ததான எவ்வித குறிப்புக்களையும் “அஸ்திவாரமே இல்லாதவை" என்று ஏளனம் செய்கிறார். லிபியாவின் சமீபத்திய வரலாற்றில், அதுமட்டுமின்றி வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கினுள் நடந்துவரும் மோதல்களிலும் பரிச்சயம் இல்லாத எவரும், இந்த விஷயத்தில் பேராசிரியர் கோலின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளக்கூடும். அல்ஜீரியா மற்றும் லிபியாவில் உள்ள இஸ்லாமிய மெஹ்ரெப்பில் அல்கொய்தாவின் நடவடிக்கைகள், அப்பிராந்தியத்தின் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்கின்றன. அல்கொய்தாவின் ஒரு பிரிவாக கருதப்படும் லிபிய இஸ்லாமிய போராட்ட குழு (LIFG), 1990களில் கடாபி ஆட்சிக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. அந்த சவாலை நிலைகுலைக்கும் முயற்சியின் தாக்கமாக, கடாபி ஆட்சி அதன் பாரம்பரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்ஜாலத்தைக் கைவிடவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனும் தான் இணங்கிப்போவதற்கு அவர் எடுத்த முடிவில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. வெகுசமீபத்தில் 2007இல், செய்திகளின்படி, லிபிய அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது.

லிபிய எதிர்ப்பியக்கத்தில் அல்கொய்தா ஈடுபட்டிருந்த பிரச்சினையானது, அமெரிக்க தலைமையிலான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற சூழலிற்குள், ஒரு முக்கியமான பிரச்சினையாகும். குறிப்பாக, அமெரிக்க-நேட்டோ தலையீட்டைக் கொண்டு செல்லும் காரணங்களை நியாயப்படுத்துவதில். 1990களில், எதிர்ப்பாளர்களின் ஒடுக்குதலுக்குப் பின்னர் லிபியாவிலிருந்து தப்பிக்க முயன்ற கடாபிக்கு எதிரான LIFGஇன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக்திகள், "லிபியாவிற்கு வெளியில் பன்னாட்டு வலையமைப்புகளுடன் மிகநெருக்கமாக செயல்படத்தொடங்கின. இவ்வாறு ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அல்கொய்தா கள தளபதிகளின் பெயர்கள் இப்போது லிபியர்கள் என்றே அறியப்படுகின்றன. இதற்கிடையில், லிபியாவிலேயே இஸ்லாமிய போராளிகளை திரட்டுவதற்கு ஒரு கணிசமான சாத்தியக்கூறு நிலவியதாக தெரிகிறது.” [கெய்டோ ஸ்டீன்பெர்க் மற்றும் இசாபெல் வெரென்பெல்ஸால் எழுதப்பட்ட, Mediterranean Politics, “Between the ‘Near’ and the ‘Far’ Enemy: Al-Qaeda in the Islamic Maghreb,” 12: 3, 407-413]

இந்த ஆய்வின்படியே, ஐரோப்பிய பாதுகாப்பு முகமைகள் "இஸ்லாமிய மெஹ்ரெப் பிராந்தியத்தில் அல்கொய்தாவை மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஒரு கணிசமான விநியோக கட்டமைப்புகளை அந்த அமைப்பு பெற்றுவந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிற்கு நிலவும் மிகவும் தீவிர அச்சுறுத்தலாக கருதின. [ஆசிரியர் குறிப்பு] அப்படியானால், அமெரிக்காவும், நேட்டோவும் ஏன் இந்த சக்திகளோடு கூடி நிற்கின்றன?

பேராசிரியர் கோலிற்கு நிச்சயமாக இந்த உண்மைகள் தெரியும். ஆனால் தெரிந்தே அவற்றை அவர் நிராகரிக்கிறார். எவ்வாறிருப்பினும், கடாபிக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா மற்றும் அல்கொய்தாவிற்கு இடையில் நடைமுறையில் இருந்த கூட்டணி, உலகளாவிய "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" பொய்வேஷத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அது லிபியா மீதான தாக்குதலில் இருக்கும் காரணங்களை இன்னும் ஆழமாக ஆராயவும் கோருகிறது.

அமெரிக்க-நேட்டோ தலையீடானது, முற்றிலும் மனிதாபிமான உந்துதலுக்குக் குறைவில்லாத வேறு எதனாலும் தூண்டப்படவில்லை என்ற கருத்துக்களை பேராசிரியர் கோல் உடனடியாக உதிர்த்தார். “கடாபியிடமிருந்து அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக லிபியாவில் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குப் பாதையைத் திறந்துவிடுவதற்காகவே கடாபியை தூக்கியெறிய சதி செய்து வருகிறது. இந்த வாதம் முரண்பாடானது” என்ற கருத்தோடு அவர் பொறுமையற்றிருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மதிப்பீடுகள் என்னவாக இருந்தபோதினும் எண்ணெய்வளம் அதில் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்று கோல் வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்ல. அந்த பேராசிரியர் அறிவிக்கிறார்: “பல ஆண்டுகளுக்கு முன்னரே தேசியமயமாக்கப்பட்டுவிட்ட லிபிய பெட்ரோலிய எண்ணெய்வயல்களை மேற்கத்திய நிறுவனங்கள் சொந்தம் கொண்டாட அனுமதிப்பதற்கு அங்கே எந்த வாய்ப்பும் இல்லை.” இந்த வாக்குறுதிகளை பேராசிரியர் கோல் யாரிடமிருந்து பெற்றார் என்று ஒருவர் ஆச்சரியப்படக்கூடும்.

பேராசிரியர் கோல் தொடர்கிறார்: “இறுதியாக, நிறைய பெட்ரோலியத்தை சந்தையில் இறக்குவதால் அது விலையையும், மதிப்பையும், நிறுவன இலாபத்தையும் குறைக்கிறது என்பதால், சந்தையில் நிறைய பெட்ரோலியத்தைக் கொண்டு வருவதென்பது பெரிய எண்ணெய் நிறுவனங்களின் நலன்களில் ஒருபோதும் இருப்பதில்லை. பெட்ரோலியத்தின் உலக விலையைக் குறைக்கும்விதத்தில், ஏற்கனவே கட்டுப்பாடற்ற உடன்படிக்கைகளை கொண்டிருக்கும், மற்றும் விலையுயர்வுகள் சாதனையளவு இலாபங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த உலகில் இன்னும் நிறைய மற்றும் மேம்பட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்காக லிபியா மீதான ஒரு யுத்தம் என்பது அர்த்தமற்றது. லிபியா பற்றி எண்ணைக்கான யுத்தம் என்ற விவாத்த்தில் அது எழுப்பட்டவித்த்திலேயே எவ்வித அர்த்தமுள்ளது என நான் கருதவில்லை”.

ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் பொருளாதார நனல்களுக்கும் இடையில் தொடர்பு உண்டு என்று கூறும் "அடிமட்ட மார்க்சிச" விமர்சகருக்கு எதிராக மட்டும் பேராசிரியர் கோல் வாதிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் அவருடைய சொந்த கடந்தகால எழுத்துக்கள் வெளிக்காட்டுவதற்கு மீள்பார்வையாக, அவருக்கு எதிராகவே கூட அவர் வாதிடுகிறார்.

ஆகஸ்ட் 6, 2006இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு "informed Comment” வலைப்பதிவில், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பெண்டகனால் லெபனான் முழுதும் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த அழிப்பை" அவர் எதிர்த்தபோது, பேராசிரியர் கோல் ஓர் அருமையான அறிவுரையையும், அத்துடன் சம்பவங்கள் காட்டியுள்ள அதேவிதத்தில் மத்தியகிழக்கின் எண்ணெய் வளத்திற்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடையிலிருக்கும் உறவின் ஒரு தீர்க்கதரிசன பகுப்பாய்வையும் அளித்திருந்தார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முக்கிய ஆதாரவளங்கள் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அமெரிக்காவின் ஒரு பரந்த நீண்டகால மூலோபாயத்தின் ஒரு பாகமாக லெபனானின் சம்பவங்களை அவர் விளக்குகிறார். அமெரிக்காவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைப்பட்டதால் மட்டும் தான் இந்த நோக்கத்தை எட்ட அமெரிக்கா தீர்மானித்தது என்று கோல் விளக்குகிறார். சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய போட்டியாளர்கள் இந்த ஆதாரவளங்களை அணுகவிடாமல் அமெரிக்கா தடுக்க விரும்பியது.

சந்தையின் சராசரி நடவடிக்கைகள் எண்ணெய் ஆதாரவளங்களின்மீது நேரடியான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியதன் தேவையைக் குறைக்கிறது என்ற வாதத்திற்கு கோல் மிகச்சரியாக பதிலளித்தார். “பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையைவிட இந்த புதிய சூழலில் எண்ணெய் 'கொடுக்கல்-வாங்கல்' (எளிய பரிமாற்றம்) குறைந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மத்தியகிழக்கின் மண்ணிலிருந்து பெட்ரோலியம் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தால் பெரும் இலாபங்கள் கிடைக்கும் என்பதால், அங்கிருக்கும் எண்ணெய் வயல்களைச் சொந்தமாக்க அமெரிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் விரும்பக்கூடும். … நம்முடைய புதிய சுற்றுச்சூழலில், கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடுவதற்கு பிரயோசனமானதாக எண்ணெய் ஒரு பண்டமாகி வருகின்றது.” [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

எண்ணெய்வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான போராட்டமானது, ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கான அமெரிக்க தயாரிப்புகளில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்று பேராசிரியர் கோல் எச்சரித்தார். அவர்; “ஒரு மோசமான விதத்தில், வாஷிங்டன் ஈரானின் ஆதாரவளங்களை அணுகவும், அதன் போட்டியாளர்களுக்கு அவற்றை மறுப்பதற்காகவும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் வாய்ப்பைத் தக்கவைக்க விரும்பும்,” என்று எச்சரித்தார்.

லெபனானில் பரந்த பூகோளமூலோபாய கருத்துக்களுக்கு அமெரிக்க-பின்புலத்தில் இஸ்ரேலிய நடவடிக்கைகளைத் தொடர்புபடுத்தி, கோல் அமெரிக்காவின் நீண்டகால திட்டங்களின் இந்த முன்னோக்கு சுருக்கவுரையை அளித்துள்ளார்:

“லெபனானை அழித்தால், ஹிஸ்புல்லாவை அழித்தால் உங்களால் ஈரானின் மூலோபாய ஆழத்தைக் குறைக்க முடியுமென்று ஒருவேளை பருந்துகள் வேண்டுமானால் இவ்வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். லெபனானிற்கு இஸ்ரேலியர்கள் என்ன செய்தார்களோ அவ்வாறு செய்ய வேண்டுமானால் ஈரானிய அணுசக்தி திட்டத்தை அழித்து அதை ஆதரவில்லாமல், முடமாக்கி விடுங்கள். அதை ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு மற்றும் ஈரானை திரும்பவும் அமெரிக்க செல்வாக்கு வட்டாரத்திற்குள் சவாரிசெய்ய வையுங்கள். சீனாவை மறுத்து அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயுவின் 500 tcfக்கு உத்தரவாதம் அளிக்கச் செய்யுங்கள். நீங்கள் அரசியல்ரீதியாக ஒட்டுமொத்த வளைகுடாவையும், சதாம் மற்றும் காமெனி இருவருடனும் சேர்த்து, அமெரிக்காவை நோக்கி திருப்புங்கள். இங்கே, ஒரு தொழில்நுட்ப தீர்வு கண்டறியப்படும் வரையில் அமெரிக்காவில் உள்ள முக்கிய எண்ணெய் பிரச்சினைகளைத் தவிர்த்துவிடுங்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா ஈரான் மற்றும் வளைகுடாவில் சிறப்பு அணுதலைப் பெறும் ஒரு நிலைமையைத் தடுங்கள்.”

“இரண்டாவது அமெரிக்க நூற்றாண்டு உறுதி செய்கிறது. 'புதிய மத்திய கிழக்கு' என்பது 'அமெரிக்க மத்திய கிழக்கு' என்பதைக் குறிக்கிறது.

“மேலும் அது அனைத்தும் லெபனானின் பேரழிவுடன் சேர்ந்து தொடங்குகிறது.”

“லெபனானை தாக்குவதென்பது ஓர் அரசியல்வாதியின் பாதுகாவலனை தாக்குவது போன்றதாகும் என்பதால், இந்த விதத்தில், இன்னும் நிறைய யுத்தங்கள் வரவிருக்கின்றன. பாதுகாவலனை கொல்வது என்பது சாதாரணமாக நீங்கள் ஒரு பாதுகாவலனைக் கொல்வதற்காக அல்ல. இதுதான் ஒரு பெரிய நடவடிக்கையின் முதல்கட்டமாக இருக்கிறது.”

ஏனென்று விளக்காமலேயே, பேராசிரியர் கோ்ல் தம்முடைய சொந்த பகுப்பாய்வை அவரே நிராகரிப்பதாக தெரிகிறது. ஆனால் பேராசிரியர் கோல் அவருடைய மனதை மாற்றிக் கொண்டிருந்தாலும் கூட, அவருடைய 2006 எழுத்துக்கள் அவருடைய தற்போதைய யுத்த-ஆதரவு நிலைப்பாட்டைத் துல்லியமாக நிராகரிப்பதாக உள்ளன.

கோல் ஒரு வரலாற்றாளராக தொடர்ந்தார் என்றால், அமெரிக்க பின்புலத்தில் இருந்த மன்னர் இட்ரிஸின் ஆட்சியைத் தூக்கியெறிந்த செப்டம்பர் 1969 ஆட்சிகவிழ்ப்பிற்கு பின்னர் வெகு விரைவிலேயே, எண்ணெய் விலையை கணிசமாக அதிகரிக்க தீர்மானித்த கடாபியின் முடிவிலிருந்து தொடங்கி அமெரிக்காவிற்கும் லிபியாவிற்கும் இடையிலிருந்த வெறுப்பை அவரின் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். கடாபியின் தீவிர தேசியவாத ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரையில், OPEC விலை நிர்ணயம் அமெரிக்காவின் சவூதி அரேபிய கைப்பாவை ஆட்சிகளின் மூலமாக அமெரிக்கா தான் துல்லியமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கடாபியின் புதிய ஆட்சியால் எடுக்கப்பட்ட முடிவானது, எண்ணெய் விலை அமெரிக்க கட்டுப்பாட்டைக் கடந்து போய்விட்டதையும், தீவிர தேசியவாதிகளின் அரசியல்ரீதியான மதிப்பீடுகளாலும் செல்வாக்கு பெற்றிருந்தது.

சக்திகளின் இந்த புதிய உறவால் முன்னிறுத்தப்பட்டிருந்த அபாயத்தை முதலில் உணர்ந்தவர்களில், நிக்சன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு செயலர் (பின்னர் வெளிவிவகாரத்துறை செயலராக இருந்தவர்) உளவுத்துறையின் டாக்டர். ஹென்ரி கிசிங்கரும் ஒருவராக இருந்தார். கிசிங்கர் அவரின் மலரும் நினைவுகளில் நினைவுகூர்ந்ததைப் போல, கடாபி மேற்கத்திய ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க "பகிரங்கமாகவே தீவிரத்தோடு" இருந்தார். அந்த நிகழ்வுபோக்கில் உலகளாவிய பொருளாதாரத்தை அவர் மோசமடையச் செய்வது குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை.” [Years of Upheaval (Boston: 1982), p. 859]. கிசிங்கர் மீண்டுமொருமுறை செயலில் இறங்கினார். “நவம்பர் 24, 1969 கூட்டத்தில், நடவடிக்கையில் இறங்க சாத்தியக்கூறுக்கு ஆதரவுதிரட்டும் 40 உறுப்பினர் குழுவை ஏற்பாடு செய்ய வேண்டுமான என்ற கேள்வியை நான் எழுப்பினேன்.” [Ibid, pp. 859-86] கிசிங்கருக்கு பெரும் ஏமாற்றமாக, அவரால் அந்த நேரத்தில் ஒப்புதலைப் பெற முடியவில்லை. ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், பேர்லினில் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத சம்பவத்தைப் போலிக்காரணமாக பயன்படுத்தி, திரிபொலியில் ஒரு விமானத் தாக்குதலுக்கு றேகன் நிர்வாகம் உத்தரவிட்டது. இதில் கடாபியே கூட இலக்காக இருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளின் வரலாற்றை கோல் மௌனமாக கடந்துவிடுகிறார். சமகாலத்திய பூகோளஅரசியலுக்கு அறிவுசார்ந்த ஆய்விதழ்களில் லிபிய எண்ணெய்வளம் குறித்த விஷயம் பெரும் பகுப்பாய்விற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது என்றபோதினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மூலோபாய மதிப்பீடுகளில் லிபிய எண்ணெய்வளம் எந்த முக்கிய பங்கும் வகிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். 2004இல் புரூசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தாலும், 2007இல் பாரீசாலும், 2009இல் ரோமாலும் இந்த “பைத்தியக்கார நாய்" கடாபிக்கு ஏன் விருந்து உபச்சாரம் வழங்கப்பட்டது என்பதையோ, அல்லது அந்த விஷயத்தில், கடாபியின் மகன் செயிஃப் எல் இஸ்லாம் ஏன் 2009இல் வெளிவிவகாரத்துறைக்கு ஹிலாரி கிளிண்டனால் வரவேற்கப்பட்டார் என்பதையோ அவர் குறிப்பிடவும் இல்லை, விளக்கவும் இல்லை.

வட ஆபிரிக்காவின் பூகோள-அரசியலில் வல்லுனர்களான பேராசிரியர் டெரெக் லுற்றர்பெக் மற்றும் பேராசிரியர் ஜோர்ஜிஜ் எங்கெல்பேர்ட்டால் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. "லிபியா தற்போது மேற்கத்திய மற்றும் ரஷ்ய எரிசக்தி நலன்களுக்கு இடையில் இருக்கும் குறுக்கீடுகளில் தன்னை கண்டுகொள்கின்றது…" என்று அவர்கள் நவம்பர் 2009இல் எழுதுகையில் அவர்கள் குறிப்பிட்டனர். 2006இல் கோலால் முன்னெடுக்கப்பட்ட வாதங்களை மெய்பிப்பதற்கான ஒரு பகுப்பாய்வில், லிபியாவின் பரந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை அணுகுவதைப் பாதுகாத்துக் கொள்ள ரஷ்யாவால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தொடர்புபட்ட லிபியாவின் விருப்பங்கள் குறித்து மேற்கத்திய கவலைகளின் கவனத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்றனர். [“The West and Russia in the Mediterranean: Towards a Renewed Rivalry,” Mediterranean Politics, 14: 3, 385-406]

அரசுகள் நீண்ட நினைவுகளைக் கொண்டுள்ளதுடன், நீண்ட காலவரையறைக்குள் செயல்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பொறுத்த வரையில், லிபியாவில் பெப்ரவரியில் வெடித்த சிக்கல்கள் கடந்த 40 ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் சந்தையில் அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்குக் குழிபறித்திருந்த ஓர் அரசியல் மற்றும் பொருளாதார உறுத்தலில் இருந்து அவர்களை அவர்களே விடுவித்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. எகிப்து மற்றும் துனிசியாவில் ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களின் போர்வையின்கீழ், அமெரிக்காவும், ஐரோப்பாவும் கடாபியைத் தூக்கியெறிய முனைந்தது. கடந்த தசாப்தத்தில் ஏகாதிபத்திய சக்திகளுடன் அவர் (கடாபி) மிக தீவிரமாக ஆதரவு காட்டினார் என்பதுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளையும் ஏற்படுத்தினால் என்ற உண்மை இருந்த போதினும், வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸ் திரிபொலியில் ஒரு முழு-அளவிலான கைப்பாவை காலனித்துவ-பாணியிலான ஆட்சியைக் கொண்டு கடாபியை மாற்றி, 42 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு திருப்பவும் முடிவெடுத்தன. இவ்வாறு, பெங்காசியில் ஆரம்பகட்ட மக்கள் போராட்ட அலையின் நோக்கங்கள் என்னவாக இருந்தபோதினும், ஏகாதிபத்திய சக்திகளின் அணியின்கீழ் அந்த போராட்டம் மிக விரைவாக கொண்டு வரப்பட்டது.. அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு ஒரு "மனித உரிமைகள்" என்ற போலித்தனத்தை அளிக்க, ஏகாதிபத்திய சக்திகளின் முகவர்கள் இராணுவ-பாணியிலான முன்னெடுப்புகளை ஊக்குவிக்க விரும்பினர். இது தான் கடந்தகாலத்தின் பல நேரங்களிலும் பெரும் விளைவை அளிக்க ஏகாதிபத்தியத்தால் இந்த விதத்தில் தான் பயன்படுத்தப்பட்டது.

வரலாற்றை மறப்பதும், நேற்று தான் எழுதியதை தானே மறுப்பதும், சமகாலத்திய பூகோளமூலோபாயம் மற்றும் வர்க்க பிரச்சினைகளை நிராகரிப்பதும், பேராசிரியர் கோலின் எழுத்துக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துவிட்ட ஒரு மனிதனின் பிம்பத்தை அளிக்கிறது. அதற்கு பின்னர் மார்ச் 30இல் பிரசுரித்த ஒரு வலைப்பதிவில் அவர், “நேட்டோவிற்கு நான் தேவைப்பட்டால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்,” என்று எழுதுகிறார்.

ஒரு பிரபல மேதையான பேராசிரியர் கோல் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்த ஒரு மதிப்பார்ந்த பாதை பற்றி சிந்திக்க முடியாமல் இருப்பது வெட்கக்கேடாக உள்ளது.

Loading