யூகோஸ்லாவிய
உள்நாட்டுப் போரின் ஓர் அகதி, டிராகன்.
பிப்ரவரி 16, 2013
நான்கு வருடங்கள் ஒரு
உள்நாட்டுப்போரின் மத்தியில் வாழ்ந்தபின் நான் 1998ல்
யூகோஸ்லாவியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு அகதியாக வந்து, எனது மீகுதி
வாழ்நாள் முழுவதும் அப்போரின் தழும்புகளை சுமக்கிறேன். நான் சேர்ந்த தேசிய
இனம் எப்பொழுதும் ஏனைய தேசிய இனங்களால் வெறுக்கப்பட்டது போன்றே
இப்பிராந்தியத்தில் ஏனைய எல்லா பகுதியிலும் ஒரு தேசிய இனம் மற்றைய இனத்தால்
வெறுக்கப்படுகின்றது மற்றும் இதுதான் பால்கன் நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு
போரிற்கு காரணம் என்ற முடிவோடு நான் போரை விட்டு வெளியேறினேன்.
இந்த விளக்கத்தை என்னால் முழுமையாக
நம்ப முடியவில்லை, ஆனால் புரிந்து கொள்ள முடியாதவாறு நான் சிறுவனாக
இருந்த்தால், வேறு மாற்றுவழிகளைப் பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை.
உள்நாட்டுப்போருக்கு முன் வாழ்க்கை மிகவும் வேறாக இருந்தது. ஒரு குழந்தையின்
பார்வையில் அது சிறப்பாக இருப்பதாகத் தெரிந்தது. என்னுடைய தேசியம்
அடையாளம்கூட எனக்கு தெரியவில்லை. இவை அனைத்தையும் உள்நாட்டுப் போர்
மாற்றிவிட்டது.
காயப்பட்டதும் மற்றும்
பாதிக்கப்பட்ட போர்க்கைதியின் குழந்தையாக இருந்ததால், எனக்கும் என்
குடும்பத்தாருக்கும் இன்னொரு நாட்டில் புதிய வாழ்க்கையைத் ஆரம்பிப்பதற்கான
வாய்ப்பு கிடைத்தது. போரின் பின் விளைவுகளிருந்து தப்பிய அதிர்ஷ்டசாலிகளாக,
நாங்கள் மீண்டும் பள்ளிக்கு சென்று எங்கள் கல்வியைப் பூர்த்தி செய்ய
முடிந்தது. கடைசியாக வாழ்க்கை மீண்டும் வழக்கம்போலாகி, எங்களாலும்
மற்றவர்கள் செய்வதைப் போன்ற விஷயங்களை வெகு விரைவில் செய்ய முடிந்தது.
போர் எப்பொழுதும் என் சிந்தனையில்
இருந்து கொண்டிருந்தது. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்.
குறிப்பாக 2008 இல் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலிலிருந்து நான் அரசியலில்
கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இஸ்ரேல்-பாலஸ்தீன் முரண்பாட்டை புரிந்து கொள்ள
விரும்பியதுடன் மிக விரைவில் பரவலாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன்.
பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை புரிந்து கொள்ள விரும்பினேன். அதே நேரம்,
இஸ்ரேலியர்கள் பார்வையையும் புரிந்து கொள்ள விரும்பினேன். சியோனிஸம் என்றால்
என்ன? பயங்கரவாதத்தின் மீதான போர் அர்த்தமற்றது. ஆப்கானிஸ்தான் மற்றும்
ஈராக்கில் அமெரிக்கா படையெடுத்தது. ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல்கள்
மற்றும், விமானக் கடத்தல்களைப் பார்க்கும்போது, அவர்கள் பெரும்பாலும் சவுதி
அரேபியா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்த இந்த உண்மை பற்றி அமெரிக்கா எதுவும்
சொல்லவில்லை. ஈராக் பாரிய அழிவிற்கான ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பதற்கான
ஆதாரம், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் ஊடுருவலுக்கான ஒரு போலிச்சாட்டாக
பயன்படுத்தப்பட்டது. அது பொய் என்றானது. வேறு என்னென்ன பொய்கள் நமக்கு
சொல்லப்படனவோ?
இராணுவ வலைத் தளங்கள், இடதுசாரிகள்
வலைத் தளங்கள், சோசலிச வலைத் தளங்கள், அராஜகவாதி வலைத் தளங்கள் என உல
அரசியலைப் பற்றி சிறப்பான புரிதலைக் கொடுக்கும் என்று நான் நினைத்த
அனைத்தையும் படித்தேன். 2008 இன் உலக பொருளாதார நெருக்கடி பற்றி நான் அதிகம்
சிந்தித்திருக்கவில்லை. அது ஏற்பட்டபோது, அதற்கான எந்த தொடர்பையும்
காணவில்லை. அதனை அமைப்புமுறையின் ஒரு சறுக்கலாகவும் மீண்டும் பழைய நிலைக்கு
விரைவில் வந்துவிடும் என்றும் நினைத்தேன். என்னை பொறுத்த வரையில் நாம் உலக
நிகழ்வுகளிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதாக நினைத்ததால், ஆஸ்திரேலிய
அரசியலில் எனக்கு ஆர்வமிருக்கவில்லை.
தொடர்ந்து படித்தும் வாசித்தும்
வந்ததால் எனக்கு பதில்களை விட கேள்விகள் அதிகம் தோன்றுவதை உணர்ந்தேன். ஏதோ
குறைந்தது, ஆனால் அது என்ன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பரந்த
பார்வையில் தெளிவாகத் தெரிந்த கட்டுரைகள், வலைப்பதிவுகள், ஆராய்ச்சிகள் என
அனைத்தையும் படித்தேன். இவற்றில் எனக்கு கிடைக்காதது புரட்சி சிந்தனையும்,
எதிர்காலம் குறித்த முற்போக்கான சிந்தனையுமாகும். முதலில், இவை எல்லாம்
வரலாற்றுடன் தொடர்பில்லாத சதிக் கோட்பாடுகள் போல் இருந்தது.
பின்னர் உலக சோசலிச வலைத் தளத்தின்
அறிமுகம் கிடைத்தது. பொது கூட்டத்தில் உரையாற்ற பேச்சாளர்கள் என்
நகரத்திற்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பு இந்த வலைத் தளத்தில் காணப்பட்டது.
உலக மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய, ஜூலியா
கில்லார்டால் கெவின் ரூட் பதவிவிலக்கப்பட்டதும் முதுகில் குத்தப்பட்டதும்
போன்றவற்றை வழங்கினார்கள். அவர்கள் தங்களை சோசலிசவாதிகள் என்று அழைத்துக்
கொண்டதால், ஆர்வத்தால் நான் அவர்களது பொதுக்கூட்டத்திற்கு சென்றேன். நான்
ஒரு முன்னாள் கம்யூனிச நாட்டிலிருந்து வந்திருப்பதால், கம்யூனிசம் தன்
நாட்டிற்கு என்ன செய்தது என்பதை கண்ட ஒருவருக்கு சோசலிசம் குறித்து போதனை
செய்யப் போகிறார்கள் என்றால், அது அவர்கள் தங்களை தாங்களே கிண்டல் செய்து
கொள்வது போல்தான் இருக்குமென்று நினைத்தேன்.
ஆனால், ஆச்சர்யம்!. பேச்சாளர்கள்,
ஆச்சரியப்படும் வகையில் தெளிவான தர்க்கரீதியான முடிவுகளோடும் உண்மைகளோடும்
பேசினர். ஆனால் நான் நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் மீது வெளிச்சம்
விழுந்தபோது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். தொழிற்சங்கங்களின் திவால்
நிலைமை, கியூபா புரட்சி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவமயமாக்கல்,
தொழிற்சங்கவாதம் மற்றும் பாராளுமன்றவாதம், பூகோளமயமாக்கலின்
வரலாற்றுரீதியிலான படிப்பினைகள் ஆகியவை அதிசயமானவையாக இருந்தன.
சில உதாரணங்கள்; ரஷ்யா ஒரு
உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்ற மதிப்பீடு, யூகோஸ்லாவியா ஒருபோதும்
சோசலிச நாடல்ல, மிகப்பொருத்தமாக சொல்வதென்றால் ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசு
எனலாம், அங்கு பொதுவுடமை இருந்தது ஆனால் அதிகாரம் தொழிலாளர்களின் கைகளில்
இல்லை, ஸ்ராலினிசவாதிகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின்
முக்கியத்துவம் மற்றும் நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான போராட்டம் போன்றவை
என்னைக் குழப்பியது. நான் வாதம் செய்ய விரும்பினேன், ஆனால்
யூகோஸ்லாவியாவிலிருந்து அமைப்புமுறையை சரியாகப் புரிந்து கொள்ளாததால்
என்னால் விவாதிக்க முடியவில்லை. 1999 இல் யூகோஸ்லாவியா உடைவு மற்றும்
நேட்டோவின் தலையீடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அந்த சொற்பொழிவாளர் என்னை
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆவணப்பகுதியை படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவற்றை வாசிக்க ஆரம்பித்தேன்.
முதலில் அந்த விஷயங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வது சிரம்மாக இருந்தது. நான்
கடந்து வந்த போராட்டங்களால் என்னுள் ஆழமாக பதிந்திருந்த தேசியவாதத்தை
விட்டுவிட வேண்டி இருந்தது. அவற்றை ஒரு முறை படித்ததும் எனக்கு
புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருந்தது. அது கடைசியில் பிரயோசனமானதாகவும்
பகலைப் போல் தெளிவாகவும் இருந்தது. யூகோஸ்லாவியப் பிரச்சினைகள் முடிவாக
தேசிய வெறுப்பால் தோன்றியதல்ல. வெறுப்பு ஒரு பாதிப்புதான், காரணமல்ல.
முக்கிய காரணம் பொருளாதாரம், அதிகாரத்துவம், உலக சந்தையிலிருந்து வந்த
வெளிப்புற அழுத்தங்கள், பனிப்போரின் உடைவு மற்றும் தொடர்ச்சியாக
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் தன்னை சமப்படுத்திக்கொள்ள யூகோஸ்லாவியா
நடத்திய முயற்சிகளின் முடிவு ஆகியவையே.
அது எனக்கு உலகின் ஒரு பாதையையும்
நோக்குநிலையையும் காட்டியது. இந்த ஊனமுற்ற தொழிலாளர்கள் அரசில் தவறு எங்கு
நடந்தது, எது குறைகிறது என்பவையும் மற்றும் கலவரங்கள் மற்றும்
வன்முறையிலிருந்து தோன்றிய தேசியவாத வார்த்தைஜாலங்களின் பின்புலத்தையும்
என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், இப்போது என்னால் மற்ற கட்டுரைகள்
மற்றும் உலக நிகழ்வுகளை அமைதியுடன் கவனிக்க முடிகிறது. கடந்த 10 ஆண்டுகால
நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஆவணப் பகுதியை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன்.
இந்த வலைத் தளத்தின்
புறநிலைரீதியான தத்துவார்த்த அணுகுமுறை பல வருடங்களில் பிரசுரிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் காணப்படுகிறது. மார்க்சிச அணுகுமுறையை தெளிவாக
குறிக்கும் ஒரே இயக்கமாகவும் வலைத் தளமாகவும் இது இருப்பதோடு,
முதலாளித்துவத்தை தூக்கியெறிவதில் தொழிலாளர்களை வழிநடத்தவும் செய்கிறது.
ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் போராட்டங்களின் பாடங்களின் ஊடாக
வழிநடத்தப்பட்டு, உழைக்கும் வர்க்கம் உலக அரங்கில் நுழைவது காலத்தின் கையில்
உள்ளது. சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் குரலான உலக சோசலிச வலைத் தளம்
விலைமதிப்பிடமுடியாதது.
அறிவியல் புனைக்கதை ஆசிரியர் ஸ்டீவன் பிரஸ்ட்
பிப்ரவரி 15, 2013
உலக சோசலிச வலைத் தளத்தின் 15ம்
ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக why you read the WSWS -க்காக
வாசகர்களிடமிருந்து கருத்துக்களை வரவேற்கிறோம். அமெரிக்க அறிவியல் புனைக்கதை
எழுத்தாளரும் Workers League இன் நிறுவன உறுப்பினர்களான ஜீன் மற்றும் பில்
பிரஸ்ட்டின் மகனுமான ஸ்டீவன் பிரஸ்ட்டின் கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.
***
என்னைப் பொறுத்த வரையில் உலக
சோசலிச வலைத் தளம் ஒரு மாற்றீடாக செயற்படுகின்றது.
ஒரு எழுத்தாளனுக்கு அவனது சமுதாயச்
சூழ்நிலையை விட எதுவும் முக்கியமல்ல. ஒருவரது தினசரி வாழ்வில் ஒருவரோடு
சம்பந்தப்படுகின்ற மக்கள் தவிர்க்க முடியாத வகையில் அவரது படைப்பில் வலுவான
தாக்கம் கொள்கின்றனர். எதற்காக போராடுவது மற்றும் அந்த நோக்கத்தை
அடைவதற்காக தொழில்நுட்பத்தை எப்படி பன்படுத்துவது என்பவை பற்றி ஒரு
எழுத்தாளன் எடுக்கும் முடிவுகள் பெருமளவு உடனிருப்பவர்களுடனான கலந்துரையாடல்
மற்றும் கருத்துப்பரிமாற்றத்திலிருந்தே உண்டாகிறது.
ஒரு எழுத்தாளராக பணியாற்றுவது,
குறிப்பாக ஒரு இலக்கியநடை எழுத்தாளராக, எல்லா வகையிலான குட்டி முதலாளித்துவ
கருத்துக்களும் என்னைச் சூழ்ந்திருப்பதாக நான் என்னைக் கண்டுகொள்கிறேன்.
வரலாற்றிற்கு செய்வதுபோல் விஞ்ஞானத்தை நிராகரிப்பது, அனைத்து வடிவிலான
அடையாள அரசியல் மற்றும் எவ்விதமான ஒத்திசைவான தத்துவார்த்த நிலைப்பாட்டிற்கு
எதிரான அற்பத்தனம் மற்றும் வீண்புமிக்க மிகைப்படுத்தல் ஆகியவை என்னைச்
சுற்றி நான் காண்பவற்றுள் ஒரு சில மட்டுமே. நிச்சயமாக சொல்வதென்றால், இதில்
இன்னொரு பக்கம் உண்டு; இவர்கள் புத்திசாலித்தனமான மக்கள், ஒரு கதையை
சொல்வதாக என்னை நம்புகின்ற வாசகர்களை சிறப்பாக எப்படி சந்தோஷப்படுத்துவது,
பயமுறுத்துவது, நெகிழ வைப்பது சில நேரங்களில் விழிப்பூட்டுவது என்ற எனது
சொந்த கருத்துக்களை தூண்டுவதற்கு அவர்களுடனான இயக்கியம் பற்றிய
கலந்துரையாடல் சிறப்பானது.
நம்மைச் சுற்றிய உலகம்
புரிந்துகொள்ளக்கூடியது என்று நம்புவது ஒரு விஷயம். தினசரி நிகழ்வுகளை
தினசரி படிப்பது, உறுதியாக விஞ்ஞானபூர்வமாக ஆராய்வது என்று அதை விளக்குவது
முற்றிலும் இன்னொரு விஷயம்.
எப்பொழுதும் முதலில் நான் கவனிப்பது
கடிதங்களும் பதில்களும் பகுதியாகும். ஏனெனில், அவை மிகக்கூர்மையாக விஞ்ஞான
முறைகளை விளக்குவதுடன் அதற்கான காரணங்களை வாசிப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது.
அடுத்தது, அதே போன்ற ஒரு காரணத்திற்காக, விவாதத்துறையை தேடுவேன். குறிப்பாக
திரு. வால்ஷ் அவர்களின் கலை விமர்சனக் கட்டுரைகளில் இயல்பாக எனக்கு அதிக
ஆர்வம் உண்டு.
ஆனால், மிக மதிப்புள்ளதாக இருப்பது
தினசரி செய்திப்பகுதி. மத்திய கிழக்கின் போர்கள் யாவும் எண்ணெய்க்கானவை
என்றோ அல்லது, புஷ் நிர்வாகம் இருந்தது போன்று ஒபாமா நிர்வாகமும்
பிற்போக்குத்தனமானது என்று உள்ளடக்கமின்றி சிந்திப்பது எளிது. கடினமான
உண்மைகள் மற்றும் தெளிவு, துல்லியமான வாதம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட
நிகழ்வு பரந்த உள்ளடக்கத்துடன் எப்படி பொருந்துகிறது என்பதை விரிவாக
பார்ப்பது மிக முக்கியமானது; கடினமானது. impressionism அரசியலாக ஏமாற்றுவதை
சூழ்ந்திருக்கும்போதோ, அல்லது பிற்போக்குத்தனம் தாராளவாதமாக தன்னைத் தானே
மறைத்துக்கொள்ளும் போதோ அல்லது அகநிலைவாதம் தன்னை கொள்கைரீதியானதாக
காட்டப்படும்போதோ, எனது நிலையை புரிந்துகொள்வதற்கு உண்மையான விளக்கம்
முக்கியம்.
ஏனென்றால், இதுதான் விஷயம்.
மாயாஜால விலங்குகள் அல்லது சாத்தியமில்லா உலகங்கள் பற்றிய ஒரு கதையை ஒருவர்
எந்த அளவுக்கு கூறினாலும், முடிவில் அது இந்த உலகத்திலேயை மற்றும் இங்குள்ள
ஒருவரே அது பற்றி எழுதுகின்றார். உலகத்தை சிறப்பாக புரிந்து கொண்டால்,
கதைகளும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
ஸ்டீவன் பிரஸ்ட்.
ஜீன் மற்றும் பில் பிரஸ்டின்
மகனும், அமெரிக்க புனைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
Dylan, Canada
20 February 2013
எட்டு மாதங்களுக்கு முன்பு நான்
உலக சோசலிச வலைத் தளத்தை கண்டுகொண்டேன். அந்த நேரம், பிலிப்பைன்
தேசிய-ஜனநாயக அமைப்பின் (Philippine national-democratic organization)
உறுப்பினராக இருந்ததுடன், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான கோரசன்
அக்யூனோவின் இறப்புக்கான காரணங்களை தேடிக்கொண்டிருந்தேன்.
அந்த தேடல் உலக சோசலிச வலைத்
தளத்தின் ஒரு நிருபரான ஜோசப் ஸாண்டோலன் எழுதிய சிறப்புக் கட்டுரைகளை நோக்கி
என்னை இழுத்து வந்தது. அவற்றைப் படித்ததும், அதிர்ச்சியடைந்தேன். அந்த
கட்டுரையின்படி, முற்றிலும் பிற்போக்குத்தனமான முன்னாள் குடியரசுத்
தலைவருக்கு பிலிப்பைன்ஸின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழுரை மட்டும்
எழுதவில்லை, வெறுக்கப்பட்ட ஃபெர்டின்ண்ட் மார்க்கோஸின் சர்வாதிகாரத்திற்கு
பின் ஜனாதிபதி பதவிக்கான அவரது கோரிக்கைகளுக்கு உதவுவதில் முக்கிய
பங்காற்றியிருக்கிறது.
அதுவரை நான் இடதுகளின், ஆமாம்,
இடதுசாரிகளின் விமர்சனத்தைப் படித்ததில்லை, அதுவே முதல் முறை. தான்
அதிர்ச்சியான ஒன்றைப்பார்த்த குழந்தை போன்று, உடனே நான் அந்த இணைய உலாவியின்
பக்கத்தை மூடினேன். ஆனால் அது தாமதமான முயற்சி. அந்த கட்டுரை என்னுள் ஓர்
எரியும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
உண்மையுடனான அந்த ஆரம்ப மோதலால்,
எனது குழுவின் நடவடிக்கைகளுக்கும் அந்த நிகழ்வுகளின் வெளிப்பாடுகளுக்கும்
இடையேயுள்ள புள்ளிகளை இணைக்கும் முயற்சியில், சமீபத்திய பிலிப்பைன்
அரசியலின் முக்கியமான சந்தர்ப்பங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன்.
தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் தீவிர எதிர்ப்புகளுக்கான ஆற்றல்
எப்பொழுதும் செயலிழந்துபோவதாக தோன்றியது. தங்களது உண்மையான எதிரிகளை அறிந்து
கொள்வது மற்றும் விடுதலைக்கான தாக்குதலை வலுவூட்டுவதிலிருந்து எது அவர்களை
தடுக்கிறது?
இயக்கத்தின் முன்னாள் தோழர்
ஒருவரைக் கேட்டேன். எனக்கு சமாதானமான குரலில், பொறுமையை வெளிப்படுத்துகின்ற,
நடைமுறைவாதமாக ஒரு பதில் கிடைத்தது. ”நமது தலைவர்களை நம்புங்கள், அவர்கள்
உங்களை தவறாக வழி நடத்த மாட்டார்கள்” என்பதே அது.
உலக சோசலிச வலைத் தளத்திலிருந்து
மிக அண்மைக்காலம் தொடர்புடைய கட்டுரைகளின் இணைப்புடன், “The Way Forward
for the Philippine Revolution” என்ற தலைப்பிட்ட நிக் பீம்ஸின் விரிவான
வெளியீடு மூலம் உ.சோ.வ.தளத்திடம் இன்னொரு பதில் இருந்தது, பிலிப்பைன்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியினுள் இருந்த, இருக்கின்ற குழப்பங்களின் குட்டையை நான்
மெல்ல மெல்ல அடையாளம் காண ஆரம்பித்தேன். தொடர்ச்சியாக நாட்டின் ஆளும்
வர்க்கத்தின் முன் அவர்கள் காலில் விழுந்து, அக்கட்சியின் ஆரம்பத்திலிருந்து
பிலிப்பினோ தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு, அவர்கள் துரோகம்
செய்திருந்தார்கள். அரசியல் கூட்டு காலப்போக்கில் மாறியிருந்தது.
இந்த மதிப்பீட்டில் இடைவெளிகள்
இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்தின் முற்போக்கான
பிரிவு என அழைக்கப்பட்டதற்கும் இடையில் கூட்டு வைத்துக்கொள்ள அவசியமான
இரு-கட்ட புரட்சி என்ற ஸ்ராலினிச மற்றும் மாவோயிசக் கோட்பாடுகளின்
தர்க்கரீதியான மற்றும் உடனடி வெளிப்பாடுகளாகும். 1898ன் பிலிப்பைன்
புரட்சியின் அனுபவங்களைக் கருதாமல், ஒரு ஜனநாயக புரட்சியை செய்வதற்கான
முதலாளித்துவத்தின் இயலாமையை அது எடுத்துக்காட்டியது. 20ம் நூற்றாண்டில்
சீனா மற்றும் இந்தோனேஷியாவின் இரத்தம்தோய்ந்த அனுபவங்களையும் கருத்தில்
கொள்ளவில்லை. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஏமாற்றுகரமான நோக்கத்தை
நடைமுறைப்படுத்துவதில் தீர்மானகரமாக இருந்தது. நகர்புற மற்றும் கிராமப்புற
ஏழைகளிடமிருந்து திரட்டப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் முதுகில் இது
சுமத்தப்படுவது தொடர்வதுடன், முதலாளித்துவத்தினை சுற்றித்திரியும் துணை
ஆயுதக்குழுக்களுக்கு இரையாக பயன்படுத்தப்பட்டனர்.. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைமை வீழ்ந்தவர்களை பற்றி கவனம்கொள்ளாததுடன் இன்னும் ஒரு படி
மேலே போய் தங்களின் கொலைகாரர்களே பாராட்டிக்கொள்ளுமளவிற்கு சென்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அகினோ இறந்தபின் அவருக்கான இரங்கலுரையில் 13
விவசாய செயல்பாட்டாளர்கள் அவரது கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதை
தண்டிக்கவும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தவறியது.
அதிலிருந்து, உலக சோசலிச வலைத்
தளத்தின் ஆர்வமுள்ள வாசகரானேன். அரசியல் கோட்பாடுகள் பற்றிய கேள்வி என்பது,
தயக்கமற்ற மற்றும் தவறில்லாத வகையில் அது மார்க்சிசமே. அது கொள்கையின்
அடிப்படையிலானது, குழப்பமில்லாதது. அது இருட்டடிப்புகளுக்கு மத்தியில்
உண்மையின் ஒளிவிளக்காக உள்ளது. ஏனையவை உள்ளடங்கலாக விளாடிமிர் லெனின்
மற்றும் ட்ரொட்ஸ்கியின் மரபுரிமைகள் மற்றும் சிறந்த புரட்சிகர
பாரம்பரியங்கள் உ.சோ.வ.தளத்தின் பக்கங்களுக்குள் உயிருள்ள, சுவாசிக்கும்
சித்திரமாக உள்ளன.
சமூக சமத்துவத்திற்கான மாணவர்,
இளைஞர்களின் அமைப்பு IYSSE மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் புதிய
தோழர்களின் உதவியுடன் என் கல்வி தொடர்கிறது. இந்த முறை கிறிஸ்துமஸ் அன்று
காலையில் காத்திருக்கும் ஒரு குழந்தை போல் நமது அடுத்த விவாதம் மற்றும்
வாசிப்புகளை பரபரப்போடு எதிர்பார்த்து இருக்கிறேன்.
உலக சோசலிச வலைத் தளத்திற்கு
பாராட்டுக்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு நீடூழி வாழ்க!
Mirko Lukash, Serbian living in
Japan. WSWS reader since 2008
ஒரு வாலிபராகவும், பின்னர் ஒரு
பல்கலைக்கழக மாணவராகவும் இருந்த எனக்கு இப்போது வயது 30. நசுக்கப்பட்ட
மற்றும் சுரண்டப்பட்டவர்களுக்காக ஒரு வகையில் உள்ளார்ந்த, பகுதி உணர்மை
கூடிய ஒரு அனுதாபம் எனக்கு எப்போதும் உண்டு.
ஆயினும், கல்வியியல் வட்டங்களில்
ஏறக்குறைய புலப்படாத ஆனால் எப்போதும் இருக்கின்ற நடுத்தர வர்க்க
கருத்துக்களின் தத்துவங்களின் ஆளுமை நிகழ்ச்சிப்போக்கினை பற்றிய உணர்மை
ஒருபோதும் இல்லாமல் பல்வேறு அரை-அராஜகவாதிகள் மற்றும் பின்நவீனத்துவவாதிகள்
நிலைப்பாடுகளுக்கு என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது. எழுதப்பட்ட எல்லா வரலாறும்
தவிர்க்க முடியாத வகையில் எழுத்தாளர்களின் சார்பினை பிரதிபலிப்பதோடு அவற்றை
நாம் “பாரபட்சமின்றி” மதிப்பிட முடியாது அல்லது அதன் வேறுபட்ட “வர்ணனைகளை”
மறுக்க முடியாது என்று நினைத்து, பெர்டண்ட் ரஸ்ஸல் அல்லது நோம் சோம்ஸ்கி
போன்றவர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் எந்த “கருத்தியலின்”
தாக்கமும் இல்லாதிருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன், ஆனால் பல்வேறு
ஆதாரங்களை ஒப்பிடவும் “இடையில் எங்கோ” இருக்கும் உண்மையைத் தேடுவதற்கும்.
எல்லா ”அரசியலும்” எனக்கு அருவருப்பாக இருந்ததால், அவற்றை ஒதுக்கினேன்.
இவையாவும் என்னை சிறிது “அறிவொளியுள்ளவனாக”, “தனித்துவவாதியாக” மற்றும்
“சுதந்திரமானவனாக” ஆக்கிய வேளையில், உண்மையில் ஆழமில்லாது, பாதிக்கப்படும்
வகையிலும் மற்றும் நோக்கு நிலையற்றும் இருந்தேன்.
பின்னர் நான் உலக சோசலிச வலைத்
தளத்தை கண்டுகொண்டேன். அது 2008ன் இலையுதிர்காலம் என்று நினைக்கிறேன்.
தொலைக்காட்சி செய்திகளை தகவல்களுக்கான ஆதாரமாக பல காலங்களுக்கு முன்பு
கைவிட்டு, என் தனிப்பட்ட வாழ்க்கையின் நேரடித் தாக்கத்தை உருவாக்கிய தீடீர்
நிதி நெருக்கடிகள் மற்றும் உலகெங்கிலும் கொஞ்சம்கூட கேள்விப்பட்டிராத ஒரு
நிறுவனம் உருக்குலைவது எப்படி என்பவற்றுக்கான நம்பத்தகுந்த விளக்கங்களை
இணையத்தில் தேட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
இந்த வலைத் தளத்தை எப்படி கண்டு
கொண்டேன் என்பது எனக்கு துல்லியமாக ஞாபகமில்லை, ஆனால், அதை நாளாந்தம்
பார்க்கத்தொடங்க நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. தேசியமயமாக்கல், சர்வதேச
புரட்சி மற்றும் கட்சியை வலுப்படுத்துதல்... போன்ற கடைசி பத்திகளில்
இருக்கும் பலவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு
இப்போதும் போதுமான கருத்தியல் மற்றும் வரலாற்று அறிவு என்னிடம் குறைவாக
இருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகின்ற பகுப்பாய்வின் ஆழம்
மற்றும் கொள்கைகளின் உறுதித்தன்மையை நான் பாராட்டுகிறேன்.
2009ன் ஆரம்பத்தில், சக
தொழிலாளிகளுக்கு புரட்சியை வெளிப்படையாக போதிக்க ஆரம்பித்தது ஞாபகம்
இருக்கிறது. ஆயினும் இது அந்த நேரத்தில் என்னால் பதிலளிக்க முடிந்தவற்றை
விட அதிக கேள்விகளை என்னுள் எழுப்பியது. எங்கே எப்படி இத்தகைய ஒரு புரட்சி
உருவாக முடியும்? அது “புறநிலைரீதியாக தேவையாக” இருந்தால், அதில் தலைமை
மற்றும் மேல்தட்டு கூட இல்லாதிருக்க முடியுமா? இவையாவும் ஏற்கெனவே
முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளதா? மேலும், ஸ்ராலினிசத்தால் ஆளப்பட்டு
அழிக்கப்பட்ட நாட்டிலிருந்து வந்து, அந்த காலகட்டத்தையும் அந்த
அரசாங்கத்தையும் நாம் எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம்?
நிறைய கற்க வேண்டுமென்று தெரிந்தது.
தீவிர கூடுதல் வேலை மற்றும் கட்டாயமான ஒன்றும் செய்ய இயலாத நிலையோடு
முதலாளித்துவம் என்னை ஆசீர்வதித்தது. கடந்தகாலம் எனக்கு படிப்பதற்கும்
ஆராய்வதற்குமான நேரத்தை வழங்கியது. உலக சோசலிச வலைத் தளம் பொதுவான திசையை
வழங்கியது. ட்ரொட்ஸ்கி மற்றும் லெனின் குறித்த மற்றும் அவர்களால்
எழுதப்பட்டவை மூலம், தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் வளர்ந்த,
குறிப்பாக 20 ம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த சர்வதேச கட்டமைப்பு சார்ந்த
பார்வையில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது.
அடுத்தது, என் சொந்த நாடான
சேர்பியாவின் தேசிய நிலை பக்கம் திரும்பினேன். 19ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் சோசலிசத்தின் முன்னோடிகள்; சேர்பிய சமூக ஜனநாயகக் கட்சி
ஸ்தாபிக்கப்பட்டது, மற்றும் முதல் உலகப் போரின் முடிவுவரை
சீர்திருத்தவாதிகள் மற்றும் சமூக-தேசாபிமானிகளுக்கு எதிரான அதன் ஆரம்ப கால
போராட்டங்கள்; யூகோஸ்லாவியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் மற்றும்
போரினை அடுத்து உடனடியாக மத்தியவாதிகளுடனான அதன் போராட்டம்; வெள்ளை
பயங்கரவாதம் மற்றும் முழு தொழிலாள வர்க்கம் மீதான அதன் மோசமான தாக்குதல்கள்
பற்றியும் குறிப்பாக, 1920களின் ஆரம்பத்தில் முதலாளித்துவத்தால்
ஆரம்பிக்கப்பட்ட அதன் கட்சி; 1920களின் பிற்பகுதியில் கட்சியில்
புத்திஜீவிகளை முழுமையாக மறைத்த, கட்சியின் ஸ்ராலினிச மயமாக்கல்; அது 1930
மற்றும் 1940களில் மூன்றாம் அகிலத்தின் கொள்கைகளின் நிரந்தரமற்றவகையில்
தொடர்வதில் மட்டும் முடிந்தது; 1948ல் ஸ்ராலினுடனான அமைப்பு ரீதியான பிளவு,
அதன் பின்னரும்கூட யூகோஸ்லாவியக் கட்சி தத்துவார்த்தரீதியில் முழுமையாக
ஸ்ராலினிசத்தின் கட்டமைப்புக்குள் இருந்தது போன்றவற்றை அறிந்து கொண்டேன்.
ஸ்ராலினிச அதிகாரத்துவம்
தேசியவாதத்தை கிளறிவிடுவதிலும், 1990களில் யூகோஸ்லாவியாவில் பிளவுவாத போரை
ஏற்படுத்துவதிலும் விருப்பத்தோடு சேர்ந்திருக்க விரும்புவதை ஏகாதிபத்தியம்
எவ்வாறு கண்டுகொண்டது, 1999ல் கொசோவோவில் நேட்டோ போர் மற்றும் 2000ல்
மேற்கினால் ஒழுங்கமைக்கப்பட்ட மிலோசேவிக்கின் வீழ்ச்சி ஆகிய
வரலாற்றுரீதியான நெருக்கமான நிகழ்வுகள் ஆகியவை உலக சோசலிச வலைத் தளத்தால்
சிறப்பாக எழுதப்பட்டவற்றுள் அடங்கும். இந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கும்,
எனது தனிப்பட்ட முயற்சிகளுக்கான குறைந்தபட்சம் ஒரு பொதுவான வழிகாட்டியை
சிறப்பாக, விடாமுயற்சியுடன் ஆராய்ச்சி செய்யப்பட்டு உ.சோ.வ.தளத்தால்
வழங்கப்பட்ட முடிவான ஆய்வுகளில் கண்டுகொள்ள முடிந்தது.
இதனால், பின் நவீனத்துவத்தின்
புத்திசாலித்தனத்தின் முட்டுசந்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு
உதவியதற்காக நான் உலக சோசலிச வலைத் தளத்திற்கு போதுமான அளவுக்கு வெறும்
நன்றி கூற இயலாது. எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று செயல்பாடுகளின்
உள்ளார்ந்த செயல்பாடுகள் மற்றும் உண்மையான அர்த்தம் ஆகியவற்றை
வெளிப்படுத்துவதற்காகவும் அதன் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் புறநிலை
வழிமுறைகளான வரலாற்று சடவாதம் ஆகியவற்றுக்காகவும் மிக்க நன்றி.
ஆனால், இவை யாவும்கூட நான் உலக
சோசலிச வலைத் தளத்திற்கு நன்றி சொல்வதை நிறைவு செய்யாது. உலகை ஆராய்வதற்கு
மட்டும் இல்லாமல், அதை நாம் மாற்ற வேண்டும். அதை மாற்றுவதற்கு, ஒரு
வர்க்கமாக, உறுதியாக ஒரு கட்சி தேவை.
ரஷ்யப் புரட்சி வரலாறு என்ற
புத்தகத்தில் ட்ரொட்ஸ்கியின் மகத்தான வரிகளை இங்கு மேற்கோள் காட்ட
விரும்புகிறேன். புத்தகத்தின் 3ஆம் பாகத்தில் “The Art of Insurrection”,
என்ற பிரிவில், புரட்சி வெற்றி பெறுவதற்கான பல்வேறு முக்கிய முன்நிபந்தனைகளை
ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். அவை:
வரலாற்றின் பொதுவான சாட்சி
தேவைப்படுகிறது. பாரிஸ் கம்யூன், 1918களின் ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியப்
புரட்சிகள், ஹங்கேரி மற்றும் பவேரியாவில் சோவியத் புரட்சிகள், 1919இன்
இத்தாலியப் புரட்சி, 1923 இன் ஜேர்மன் நெருக்கடி, 1925-1927 இன்
சீனப்புரட்சி, 1931 ஸ்பானிஷ் புரட்சி (சமீபத்திய துனிசியா மற்றும் எகிப்தின்
உதாரணங்களை நாம் எளிதாக சேர்க்கலாம்) என இதுவரையில் அவசியமான நிபந்தனைகளின்
சங்கிலியின் பலவீனமான இழையாக கட்சி இருந்திருக்கிறது. உழைக்கும்
வர்க்கத்திற்கு அதன் வரலாற்றுப் பணியில் உயர்ந்த நிலைக்கு எழும் திறமுள்ள
ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவது இவை அனைத்திலும் கடினமான செயல்.”
உலக சோசலிச வலைத் தளமும் மற்றும்
சோசலிச சமத்துவக் கட்சியும் தளர்வின்றி பணியாற்றிக் கொண்டிருப்பது அந்த
“அனைத்திலும் கடினமான செயல்”. ”மனிதசமுதாயத்தின் வரலாற்று நெருக்கடி,
புரட்சிகர தலைமையின் நெருக்கடியாகின்றது” என்று நாம் சொல்கின்றபோது, அதன்
சரியான பொருள் இதுவே. உலகின் மிகுந்த விழிப்புள்ள, சிறந்த கொள்கையுடைய
மற்றும் பெரும் புரட்சிகர கட்சியின் உறுப்பினராக இருப்பது ஒரு
புரட்சியாளனுக்கு மாபெரும் திருப்தி. மேலும், அதுபோன்ற ஒரு கட்சியை
கட்டமைப்பது மற்றும் வலிமையூட்டுவதற்கு உலக சோசலிச வலைத் தளம் ஒரு முக்கிய
சாரக்கட்டுமானமாகும்.
Kumar
Sri Lankan living in Paris, France. WSWS reader since 2000
15
March 2013
முதலில் உலக
சோசலிச வலைத் தளத்தின் 15
வது ஆண்டு நிறைவுக்கு
எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.
இலங்கையின் வடபகுதியில்
இருந்து வெளியேறி 2000
ம் ஆண்டில் அகதியாக பிரான்சில்
அடைக்கலம் கோரியபோதே முதல் முறையாக உலக சோசலிச வலைத் தளத்தை படிக்கும்
சந்தர்ப்பம் கிடைத்தது.
இது எனது வாழ்வில் ஒரு
திருப்புமுனையாக அமைந்தது.
1980 களில்
பிறந்த நானும் எனது தலைமுறையை சேர்ந்தவர்களும் ஆரம்ப பாடசாலைக்கு சென்ற
நாளில் இருந்தே அன்றாட வாழ்க்கையில் விமான குண்டுகள்,
ஆட்டிலறிகள்,
கிரனைட்டுகள்,
பல்வேறு வகைப்பட்ட துவக்குகள்,
பிஸ்டல்கள் என பலவகை வெடிச்
சத்தங்களையே கேட்கப் பழகினோம்.
குண்டுகள் விழுந்து பாடசாலையை
விட்டு ஓடும்போது தெருக்களில் இடிந்த கட்டிடங்களையும் சிதைந்த உடல்களையும்
கண்டோம், பின்னர் மரண
ஓலங்களை கேட்டோம். மரண
பயம், அடுத்து என்ன
செய்வது என்று முடிவெடுக்க முடியாத ஒருவகை இனம்புரியாத எதுவுமே இயங்காத
நிலையில் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாது ஓடினோம்.
எனது இளமைக்கால
இலங்கை வாழ்க்கை மின்சாரத்தை,
எரிபொருளை,
தொலைபேசியை,
புகையிரதத்தை,
வாசிகசாலையை,
பத்திரிகையை,
எமது நாட்டுக்குள்ளேயே
உள்ள இன்னொரு மொழி பேசும் மக்களை கண்டறியாததாக இருந்தது.
ஊரடங்குச் சட்டங்களும்,
சுற்றிவளைப்புக்களும்,
காணாமல் போதலும்,
அதை ஏற்றுக்கொண்டு
வாழ்தலும் எமக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டதாய் இருந்தது.
வாய் சாப்பிட மட்டுமே
திறக்கப்பட வேண்டியிருந்தது.
தமது சொந்த
அபிப்பிராயத்தை கதைத்தவர்கள் இராணுவத்தால்,
ஒட்டுக் குழுக்களால்
அல்லது புலிகளால் பலதடவைகளில் பொதுமக்களின் கண்முன்னே
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மருந்துப்
பொருட்களில் இருந்து ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கொழும்பில்
விற்கும் விலையை விட பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கத் தள்ளப்பட்டோம்.
1990 களில் கொழும்பில்
20 ரூபாவாக இருந்த
1 போத்தல் மண்ணெண்ணையை
யாழ்ப்பாணத்தில் 300
ரூபா கொடுத்து வாங்கி
விளக்கு எரிக்க தள்ளப்பட்டோம்.
பலவேளைகளில் மருந்து
வாங்கமுடியாமலும் டாக்டர்கள் இல்லாமையாலும் கண்முன்னே எமது உறவினர்களை
இழந்தோம்.
அவர்களை அடக்கம் செய்வதற்குகூட
நாம் இராணுவம் அனுமதிக்கும் நேரத்திலேயே செய்யவேண்டி இருந்தது.
நாம் முகங்கொடுக்கும்
இந்த அவலநிலைக்கான காரணங்களைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியாது
இருந்தேன்.
மொத்தத்தில் முழு உலகத்தில்
இருந்து அந்நியப்படுத்தப்பட்டு நாம் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக
இலங்கையின் வட மாகாணம் என்னும் ஒரு திறந்தவெளி முகாமில் வாழ்ந்தோம்.
வெளிநாட்டுக்கு
தப்பிச் செல்லுவதற்காக கொழும்புக்கு வந்தபோது எனக்கு பல புதிய அனுபவங்கள்
கிடைத்தன.
இதுநாள் வரையும்
சிங்களவர்கள் தமிழர்களின் எதிரி என்றே பயிற்றுவிக்கப்பட்டேன்.
ஆனால் இது முதல்
முறையாக பொய்யென அங்கு நிரூபணமானது.
கொழும்பில் சாதாரண
தமிழ்,
சிங்கள மக்கள் ஒன்றாக கூடி
வாழ்வதை கண்டேன்.
தமிழ் வர்த்த
நிலையங்கள்,
உணவகங்கள்,
தமிழர்கள் கூடும்
இடங்களை கண்டேன்.
அதேபோல பல
“விடுதலை
இயக்கங்கள்”
எனக் கூறப்படுபவற்றின்
உறுப்பினர்கள் இராணுவ பொலிஸ் உளவுப் பிரிவினருடன் கூடி இயங்குவதைக் கண்டேன்.
இவற்றைப் பார்த்தபோது
ஏன் இந்த யுத்தம் நடக்கிறது?
யாருக்கு எதிராக இந்த
யுத்தம் நடக்கிறது?
என்று என்னுள் எழுந்த
கேள்விகளுக்கு என்னால் தனியாக விடைகாணமுடியாமல் இருந்தது.
இந் நிலையில்
2000 ம் ஆண்டு
பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பு கொள்ள
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அவர்கள் எனக்கு
WSWS ஐ அறிமுகம்
செய்தனர்.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச
இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
தொழிலாள
வர்க்கத்தை
அரசியல் ரீதியாக
பயிற்றுவிப்பதென்பது
ஒரு
நீண்ட
கடினமான
பணியாகும்.
இதற்கு குறுக்கு வழிகள்
எதுவும் கிடையாது என விளக்கினர்.
இலங்கையிலும்
பிரான்சிலும் உள்ள தொழிலாளர்களின் வித்தியாசமான சமூக வாழ்க்கை நிலமைகளில்
உள்ள வேறுபாடுகளைப் பற்றி நான் கேள்வி எழுப்பியபோது,
தொழிலாள
வர்க்கத்தின்
வளர்ச்சி
என்பது,
ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் அது
சடத்துவ
ரீதியாக
என்ன
பெற்றிருக்கின்றது?
என்பதில்
இருந்து
ஆரம்பிப்பதில்லை
மாறாக
தத்துவார்த்த
ரீதியாக
என்ன
தேட்டத்தை
கொண்டிருக்கிறது?
என்பதில்
இருந்தே
ஆரம்பிக்கவேண்டும்.
இது
புரட்சியை
வெற்றிக்கு
இட்டுச்செல்வதற்கு
அவசியமான
காரணிகளில்
மிகவும்
முக்கியமானதாகும்.
இந்தப்
பணிக்கே
WSWS போராடுகிறது என
விளக்கினர்.
இந்த உயரிய
கலந்துரையாடல்கள்தான் என்னையும் என்னைச் சுற்றியுள்ள புற உலகையும் ஒரு
வர்க்க அடித்தளத்தில் புரிந்து கொள்வதற்கு உதவியது.
எனது முதல்
கலந்துரையாடல்களில்
யுத்தத்துக்கும்
சமூக
சமத்துவமின்மைக்கும்
முடிவுகட்டும்
ஒரு
சோசலிச
வேலைத்திட்டம்,
மார்க்சிசமும்
இலங்கையில்
தேசிய
இனப்
பிரச்சினையும்
என்ற கட்டுரைகள்
பிரதான பங்கை கொண்டிருந்தது.
ஏகாதிபத்திய
சகாப்தத்தில்,
முன்னாள் காலனித்துவ
நாடுகளிலுள்ள தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின்
சோசலிசப் புரட்சிக்கும் இடையில் உள்ள பிரிக்கப்பட முடியாத உறவை புரிந்து
கொள்ள முடிந்தது.
தமிழ் விடுதலை
இயக்கங்களின் தோற்றம் ஒரு வரலாற்று அவசியத்தின் விளைபொருள் அல்ல.
மாறாக இன,
மத,
மொழி கடந்து தொழிலாள
வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சோசலிசப் புரட்சி முன்னோக்கில்
ஐக்கியப்படுத்த போராடிய கட்சியான
LSSP இன்
காட்டிக்கொடுப்பின் விளைபொருளே இந்த இயக்கங்களின் தோற்றம் என விளங்கிக்
கொண்டேன்.
எனது முதல் அரசியல் தலையீடாக
2002
பிரெஞ்சு தேர்தல் இருந்தது.
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம்
புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!
என்ற எமது அறிக்கையுடனும்,
அமெரிக்க,
ஜேர்மன்,
பிரித்தானிய தோழர்களுடனும் இணைந்து தலையிட்டு,
தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள தலைமை நெருக்கடி மற்றும்
முன்னோக்கு நெருக்கடிக்கு
ஒரு சோசலிச தீர்வை முன்வைத்தோம்.
சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் எம்மை பாசிசத்தின்
ஆதரவாளர்கள் என சத்தமிட்டு,
நாட்டை விட்டு வெளியேறு என்றனர்.
போலி இடதுகள்
பாசிச அபாயம் வந்துவிட்டதாக பேரிரைச்சல் வைத்து தொழிலாள
வர்க்கத்தை வழிதடுமாறச் செய்து சிராக்கிற்கு வாக்களிக்கச் செய்து பிரெஞ்சு
முதலாளித்துவத்தை பாதுகாத்தனர்.
அன்றில் இருந்து இன்றுவரைக்கும் ஒழுங்குமுறையாக பிரான்சில்
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம்,
வேலை,
சமூக நலன்கள் அழிக்கப்பட்டுள்ளதற்கும் அதேபோது நவகாலனித்துவ
முறையில் ஆபிரிக்கா,
மத்திய கிழக்கில் நான்கு நாடுகள் மீது
படையெடுத்துள்ளதற்கும் இவர்கள் அரசியல் ரீதியாக முழுப் பொறுப்பையும் எடுக்க
வேண்டும்.
11
வருட சம்பவங்களும் எமது முன்னோக்கை சரியென்றே
நிரூபித்துள்ளது.
யுத்தம்
முடிந்து
4 வருடங்களான பின்னரும்
வடக்கில் 15
படைப்பிரிவுகள்
அல்லது
150,000 இராணுவச்
சிப்பாய்கள்
அதாவது
3
பொது
மக்களுக்கு
1 சிப்பாய்
வீதம்
நிலை
கொண்டுள்ளனர்.
இலங்கையில் இன்றும்
அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகை ஆசிரியர்களும்,
விநியேகம் செய்யும்
தொழிலாளர்களும் நாளாந்தம் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலும்
WSWS தனது தமிழ் மொழி
பக்கத்தின் மூலம் முழு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள தொழிலாளர்கள்,
ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கை தொடர்ச்சியாக வழங்குகிறது.
உலக சோசலிச
வலைத் தளமும் சர்வதேச ஆசிரியர் குழுவும் நீடுழி வாழ்க!
Laurent, Montreal, Canada
22 February 2013
ஏறக்குறைய நான்கரை வருடங்களுக்கு முன்பு, நான் உலக சோசலிச
வலைத் தளத்தை கண்டு கொண்டேன். பொருளாதார நெருக்கடி காலகட்டத்தினை அடுத்த
2008 இன் பிற்பகுதியாகும். நான்
Université du Québec à Montréal (UQAM)
இல்
மாணவனாக இருந்தேன். என் வகுப்புகளில் ஒன்றில், எதிர்பாராவிதமாக, அதுவரை
நான் அறியாத ஒரு அமைப்பான
IYSSE
இன்
(சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்) உறுப்பினர்
ஒருவரை சந்தித்தேன், சோசலிசத்திற்காக போராடும் மாணவர் குழுவின் ஒரு அங்கமாக
இருப்பதாக என் நண்பன் ஒருவன் கூறினான், பிறகு நான் அரசியல் மற்றும் சமூகப்
பிரச்சினைகளில் தீவிர ஈடுபாடு கொண்டபோது உடனடியாக நாங்கள்
IYSSE
மற்றும் அதன் முன்நோக்கு பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.
அது என் இருபது
வயதின் ஆரம்பம். மனிதநேயம் மற்றும் நமது சமத்துவமற்ற சமுதாயம் பற்றிய
அவசியமான பாரிய கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக தீர்வுகாண
முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆயினும்,
கருத்தியல்வாத மற்றும் குட்டி முதலாளித்துவ நோக்கினால் சாயம்பூசப்பட்ட எனது
பல்கலைக்
கழகத்தின் சமூக-அறிவியல் கற்கைநெறிகளால் எனது எதிர்பார்ப்புகளுக்கு ஈடு
கொடுக்க முடியவில்லை. காலப்போக்கில்,
”விடயங்களை
மாற்றவேண்டுமென்றால்”,
அரசியல் கேள்விகளில் ஆர்வங்கொள்ள வேண்டுமென்று உணர்ந்தேன்.
பெரும் முதலாளித்துவ
Parti Québécoi
இற்கு இடதுசாரி திரையாக சேவை செய்யும் தேசியவாத கட்சியான
Québec Solidaire (QS)
உறுப்பினரானேன். என்னை ஆரம்பத்தில் கவர்ந்த அதன் சமூக கொள்கைகளால்
மறைக்கப்பட்ட
QS
இன் இனவாதம் பெருமளவு எரிச்சலும் ஊட்டியது, ஆனால், அப்போது
வேறு எந்த இடது-சாரி மாற்றீடும் எனக்கு தெரியவில்லை.
QS
இன்
உண்மையான குட்டி-முதலாளித்துவ இயல்பைப் புரிந்து கொள்வதற்கு, சோசலிச
சமத்துவக்
கட்சியும்
(SEP)
அதன்
இளைஞர் அமைப்பினதும் தலையீடு எனக்கு தேவைப்பட்டது. முன்னும், இப்போதும்
நான் ஒரு பகுதியாக இருந்துவருகின்ற, சர்வதேச உழைப்பாளிகள் வர்க்கத்தின்
கோட்பாடுகளை சோசலிச சமத்துவக்
கட்சி உண்மையில் பாதுகாக்கிறது என்பதை புரிந்து கொண்டது முதல் நான்
QS
பக்கம் அடி எடுத்தும் வைக்கவில்லை. ஆரம்பத்தில் உலக சோசலிச வலைத்
தளத்தை
அவ்வப்போது வாசித்து வந்தேன், பின்னர் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன்.
எனது குறைந்த அளவிலான வரலாற்று மற்றும் அரசியல் அறிவின்
காரணமாக, (குறிப்பாக ஆங்கிலம் எனது தாய்மொழியாக இல்லாததால்), கட்டுரைகளை
படிப்பதற்கும் விவாதங்களில் கலந்து கொள்வதற்கும் புத்திஜீவித்தனமான ஒரு
முயற்சி தேவைப்படுகிறது என்பதை நான் இப்பொழுதும் நினைவில் வைத்துள்ளேன்.
ஆனால் ஒவ்வொரு வாசிப்பிலும், விருப்பத்திற்கும் உணர்மையின்
அபிவிருத்திக்கும் இடையிலான இயங்கியல் உறவும் மற்றும் எனது அறிவை
ஆழமாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் தெளிவானது. வர்க்கப் போராட்டம் சார்ந்த
மார்க்சிச அணுகுமுறை மட்டுமே, புறநிலை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள
அனுமதித்தோடு, உண்மையில் ஒரு முற்போக்கான நோக்கு நிலையை வழங்கியது என்பதை
நான் படிப்படியாக உணர்ந்தேன். உலக சோசலிச வலைத்
தளம் உழைப்பாளிகளுக்கு தங்களது சொந்த விடுதலைக்கான அரசியல்
முன்னோக்கை மட்டும் வழங்கவில்லை, சுரண்டல், பொருளாதார நெருக்கடி மற்றும்
போர்கள் ஆகியவற்றிலிருந்து முழு மனித
சமுதாயத்தினையும் விடுதலை செய்ய உழைக்கும் வர்க்கம் ஆற்ற
வேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தையும் அது தெளிவாக்குகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதப்படுகின்ற பல தொடர்
கட்டுரைகள் வர்க்கம் உணர்வை அபிவிருத்திசெய்ய பெருமளவு உதவுகிறது. என்
தலைமுறையின் பல இளம் ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் போன்று, லேஹ்மன் பிரதர்ஸ் உடைவு
மற்றும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, 2008ல் நான் இந்த வலைத் தளத்தை
படிக்க ஆரம்பித்தேன். வர்க்க உறவுகளில் ஒரு அளவுரீதியான நகர்வைக் குறித்த
சம்பவம் என்று கருதும்போது, இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பெருமளவிலான
பிணையெடுப்புகள் பற்றி நமது வலைத் தளத்தில் மிகத்தெளிவாக விவரித்து
எழுதப்பட்டவை நம் உலகை இயக்குகின்ற தன்னல நிதிக்குழுக்களிடம் இருக்கும்
செல்வத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவின. உலக
முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கான விலையை உழைக்கும் வர்க்கத்தின் மீது
சுமத்துவதற்கு வர்க்க உறவுகளை பெருமளவு வலதுசாரி திசையில் மாற்றம்
செய்வதற்கு இந்த நிதி நெருக்கடிகள் பயன்படுத்தப்படும் என்று 2008-2009ல்
உலக சோசலிச வலைத் தளம் முன்கணித்தது.
இந்த அளவில், அடிப்படையான கொள்கைகளைப் புரிந்து கொண்டேன்,
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும்
குறிப்பாக கிரீஸின் சூறையாடல் குறித்த கட்டுரைகளிலிருந்து மட்டும், நான்
உண்மையில் வர்க்க போராட்டம் அபிவிருத்தியடைகின்றது என்பதைப் புரிந்து
கொண்டேன். அதே நேரம், முதலாளித்துவ அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் அது
பாதுகாக்கின்ற முதலாளித்துவ நலன்கள் பற்றிய எனது புரிதலையும் ஆழப்படுத்திக்
கொண்டேன்.
என்னை ஆளுமை
செலுத்திய மற்றும் என் அரசியல் நனவை ஆழப்படுத்திய கட்டுரைகள் பற்றி
நூற்றுக்கணக்கான வரிகளை என்னாலெழுத முடியும். நானே கலந்து கொண்ட கடந்த
வருடத்திய கியூபெக் மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட, எகிப்து, கியூபெக்
மற்றும் கனடா பற்றி மட்டும் நான் யோசிக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச
தொழிலாள
வர்க்கத்தின் இந்த முக்கிய மூலோபாயமிக்க அனுபவங்களின் உலக
சோசலிச வலைத் தளத்தின் தலையீடு பல்வேறு போலி-இடது அமைப்புக்களில் இருந்து
ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை வேறுபடுத்திப்பார்க்கவும், தொழிலாளர்கள், இளைஞர்கள்
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நேர்மையான அரசியல் மாற்றீட்டை
வழங்குவதற்கும் மற்றும் மொத்த கட்சியின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்திக்
கொள்வதற்கு உதவியுள்ளது.
உலக சோசலிச வலை தளத்தின் ஆண்டு நிறைவு, ஒரு பக்கத்தில்
தொழிலாளர்களுக்கு பிரதான உலக நிகழ்வுகளை பற்றிய மார்க்சிய ஆய்வினை வழங்கி
வரும் பல வருட தீவிர அரசியல் பணியைக் குறிக்கிறது. இன்னொரு பக்கம், உலக
சோசலிச வலை தளத்தின் 15 வருட மற்றும் தொடரும் வருடங்களின் பணி, லியோன்
ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும், ஸ்ராலினிச
சர்வாதிகாரத்திற்கு எதிரான அவரது போராட்டங்கள் மற்றும், நான்காம்
அகிலத்தின் அனைத்துலக்
குழுவை இல்லாதொழித்துவிட முயன்ற அனைத்து திரித்தல்வாத
போக்குகளுக்கும் எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் போராட்டங்களையும்
உள்ளடக்கியுள்ளது.
சோவியத் ஒன்றியம் (USSR)
வீழ்ச்சியடைந்து ஏழாண்டுகளுக்கு பின்னர் சோசலிசம் இறந்து விட்டது என
முதலாளித்துவம் அறிவித்தும் மற்றும் போலி-இடதுகள் ஏகாதிபத்தியத்தின்
அழுத்தங்களுக்கு அடிபணிந்து வர்க்க போராட்டத்தை கைவிட்ட நிலையில் உழைக்கும்
வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கான போராட்டங்களை
தீவிரப்படுத்தவும் தொடரவும் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்காக நான்காம்
அகிலத்தின் அனைத்துலக்
குழு உலக சோசலிச வலைத்
தளத்தை
உருவாக்கியது.
Prashant, Tripoli, Libya
22 February 20132
15 ஆண்டு நிறைவுக்கு பாராட்டுக்கள்.
டானியல் பாரென்பாய்ம்
Daniel Barenboim
மீதான உங்களது விமர்சனத்தை பார்த்தவுடன் கலை என்னை உலக சோசலிச வலைத்
தளத்திற்கு
கொண்டுவந்தது. உங்களது ஆசிரியர்களின் சிந்திக்க வைக்கும் விமர்சனங்கள்,
கொரின் ரெட்கிரேவ்
Corin Redgrave
போன்ற கலைஞர்களை பகுத்தாய்வது போன்றவை இந்தியாவின் சில கலை
நிகழ்வுகளை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.
எனது மாணவர் பருவத்தில் மும்பையில் இருந்தபோது, மும்பை
சேரிகளில் நான் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், அதிதீவிர மாவோவாத
குழுக்கள் சிலவற்றோடு தொடர்பிருந்தது. கலை மற்றும் செய்தியாளர்களின் உலகில்
மாவோவாதிகளுக்கு பல ஆதரவாளர்கள் இருந்தனர்.
கட்டுரைகள் பல்வேறு சர்வதேப்போக்குளை பற்றிய ஒரு பன்முக
ஆய்வுகள் போல் உள்ளன. தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தவரையில்,
அபிவிருத்தியடையாத நாடுகளில் இது கூடிய ஆதரவினை கொண்டிருக்கையில்
மாவோவாதம் மற்றும் அதன் பங்கு ஆகியவை பற்றிய பிரச்சினைகள் சிலவற்றைப்
புரிந்து கொள்வதற்கு அவை எனக்கு உதவின. இடதுசாரி-வட்டங்களில் ட்ரொட்ஸ்கி
பற்றி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பல பொய்களை தெளிவுபடுத்திக்
கொள்வதற்கும்
WSWS
இன்
கட்டுரைகள் உதவியது. இணைய
தள வசதிகள் இல்லாத என் மாணவர் பருவத்தில், நாங்கள் எங்களது
மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வோம். அவ்வாறு, பல நடவடிக்கை
குழுக்களில் இருப்பது போல் விடயங்களை அறிந்துகொள்ளும் மூலாதாரம்
அக்குழுக்களுக்கு உள்ளேயே இருந்தது. சாலை மறியல் போராட்டங்களின்
விளைவுகளில் இருந்தும், அதன் முன்னேற்றத்திலிருந்தும் மற்றும் அதைப்போன்ற
குழுக்களில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு நேரியலற்ற முன்னோக்கை
அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்பதாக இருந்தது.
பல வருடங்களில், முன்னாள் யூகோஸ்லாவியா போன்றவற்றில்
மோதல்களின் பின்னணியிலிருந்த இயங்குசக்தியை நான் அறிந்துகொள்ள முயன்றபோது,
பல சுவாரஸ்யமான கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வுகளைக் கண்டுகொண்டேன். ஓர்
இந்திய மருத்துவனாகிய நான் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் அரபு உலகில்
அதாவது திரிபோலியில் தங்கி பணியாற்றினேன். சேர்பியர்களோடு பேசும்போது, நான்
பிரதான ஊடகங்கள் வாயிலாக தெரிந்து வைத்திருந்ததற்கு முரணான ஒன்றுபட்ட ஒரு
வேறுபட்ட பார்வை இம்மோதல் பற்றி அவர்களிடம் இருந்தது.
Haymarket
மற்றும்
Neo-Marxism
போன்றவற்றில் கிடைக்கும் உங்கள் முன்னோக்குகள் உழைக்கும்
மக்களின் இயக்கங்கள் மீது ஆர்வங்கொண்டுள்ள மக்கள் யாவருக்கும் முக்கிய
வாசிப்பினை ஏற்படுத்துகிறது.
அரபு வசந்த லிபியா பற்றிய பிரிவு பல சுவாரஸ்யமான
அமைப்புக்களைக் கண்டிருக்கிறது. மோதல்களின் சமயத்தில் நான் லிபியாவில்
தங்கியிருந்து அநாமதேய பெயரில் எழுதினேன், அவற்றுள் சில உலக சோசலிச வலைத்
தளத்திலும் பிரசுரமாயின. பிப்ரவரியில் கொடூர ஒடுக்குமுறைக்குப் பின்னர்,
ஆயுதமேந்திய மக்கள் கொடுத்த பதில், ஆகஸ்ட்டில் திரிபோலியின் வீழ்ச்சி,
மேற்கினால் எண்ணெய் வளங்கள் பாதுகாக்கப்படும் வேளையில் அவர்கள் சார்பான ஒரு
அரசு எப்படி செயல்பட முயற்சிக்கிறது, என்பவை யாவும் சர்வதேச
இயங்குசக்தியின் பல தட்டுக்களைக் காட்டுகிறது.
தொடர்ச்சியாக கட்டுரைகளை படித்து, விவாதித்து, சுருக்கமாகக்
கூறிவருகின்ற ஒரு சிறு வாசகர்கள் வட்டம் நாங்கள். உங்களின் கலைப்பகுதி
தொடர்ந்து மிக சுவாரஸ்யமாக இருந்து வருகிறது. ஏனைய பகுதிகளில்
வார்த்தைப்பிரயோகங்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.
எழுதுவதையும் கற்பிப்பதையும் தொடருங்கள்.!