ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கும், மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரை தீவிரப்படுத்துவதற்கு தைவானுக்கு பாரிய கூடுதல் நிதியுதவிகளுக்கு ஒப்புதல் அளித்தனர்.
மே மாதம் பதவியேற்கவுள்ள லாய், அமெரிக்காவின் மறைமுக ஆதரவைப் பெற்றிருந்தார், அது ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் கீழ் தீவின் அந்தஸ்து தொடர்பாக சீனாவுடனான பதட்டங்களை அதிகரித்தது. பெய்ஜிங்கை தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக நடைமுறையில் அங்கீகரிக்கும் ஒரே சீனா கொள்கைத்திட்டத்தை பெயரளவிற்கு கடைப்பிடிக்கும் வாஷிங்டன் அதே நேரத்தில், தைபேயுடனான அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா அந்தத் திட்டத்தை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருடனான தைவான் அதிபர் சாய்வின் சந்திப்பிற்கு, சீனாவின் பதில் ஒப்பீட்டளவில் மெளனமாக இருந்தாலும், அமெரிக்கா தனது ஆத்திரமூட்டல்களை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியாக தொடர்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களால் நிதியளிக்கப்பட்ட ஒரு பரந்த இராணுவக் கட்டமைப்புடன், வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பிரான்ஸ் பதிலளிக்க வேண்டும் என்று மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் மற்றும் இப்போது பைடனின் கீழ், 1979 இல் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கு வழிவகுத்த நுட்பமான சமநிலைச் சட்டத்தை வாஷிங்டன் அடிப்படையில் மாற்றியுள்ளது.
சீனா தனது சொந்தப் பிரதேசம் எனக் கூறும் தைவானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்துகிறது. 2022 ல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் வழியில் பெய்ஜிங்குடன் போரைத் தூண்டும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், "ரஷ்யாவிற்கு பொருளுதவி அளித்தால் அல்லது திட்டமிட்டமுறையில் பொருளாதாரத் தடைகளை ஏமாற்றி சீனா உதவி செய்தால் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் ஏற்படும்" என உயர்மட்ட சீன இராஜதந்திரி வாங் யி யை அப்பட்டமாக எச்சரித்தார்.
தைவானுக்கு எதிரான ஒரு போரில் சீனாவைத் தள்ளும் முயற்சிகளில், அமெரிக்கா தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் மற்றும் அவரது கட்சியான DPP இன் ஆதரவை நம்பியிருந்தது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவியேற்றதற்கு பின்னர் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்திருந்தார். அதன்போது சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரை "மேற்பார்வையிடுவதாக" உறுதியளித்து, அதை அவர் "போட்டி" என்று குறிப்பிட்டார்
வாஷிங்டன் கடந்த மாதம் தைவானுக்கு 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட ஆறாவது ஆயுத விற்பனையை அறிவித்தது, இது பைடென் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆயுத விற்பனையாகும்
தைவானிய பாராளுமன்றக் குழுவுடனான கலந்துரையாடல் சீனாவிற்கு எதிராக தைவானுக்கு அங்கீகரிக்கப்படாத அமெரிக்க இராணுவ ஆதரவை வழங்குவதற்கான ஒரு பரந்த உந்துதலின் ஒரு பகுதியாகும்
தற்போதைய சுற்றுப்பயணத்தைப் பற்றி வாட்டர்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் நான் செய்த மற்ற நிகழ்ச்சிகளைப் போலல்லாமல், இந்த முறை ஒரு விதமான இயக்கமாக மாறுவதைப் போன்ற ஒரு வித்தியாசமான உணர்வை நான் பெறுகிறேன்
அமெரிக்கா சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து உலகின் மறுபுறத்தில், சீன நீர்நிலைக்கு அருகே அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரித்துள்ளது
அமெரிக்க அணுசக்தி விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன், அதன் தாக்குதல் குழுவுடன், தைவான் அருகே உள்ள கடற்பரப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, சீன இராணுவம் தொடர்ந்து நேற்று இராணுவப் பயிற்சிகளை அறிவித்துள்ளது
பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்ட சீனாவுடனான போருக்கான தயாரிப்பில், இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் தசாப்தகால இராணுவ வலுவூட்டலின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தைவானை முழுமையாக ஆயுதபாணியாக்குகிறது
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் குற்றங்கள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர மக்களை அமெரிக்கா பாரியளவில் படுகொலைச் செய்ததை அடுத்து, இராணுவவாதத்தைப் பெருமளவில் எதிர்க்கும் மக்கள் உள்ள ஜப்பான், சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவில் வேகமாக உள்ளிழுக்கப்பட்டு வருகிறது
உக்ரேனில் நடந்த போரைப் போலவே, பேர்லின் சீனாவுடனான மோதலையும் அதன் மறுஆயுதமாக்கல் மற்றும் அதன் பெரும் சக்தி இலட்சியங்களுக்கான நீண்டகால திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது
சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவானுக்கான இந்த வாரப் பயணம், சீனாவுடனான அமெரிக்க மோதலைப் பெரியளவில் தீவிரப்படுத்தி இருப்பதுடன், இது ஒரு தலைமுறையில் இல்லாத வகையில் தைவான் ஜலசந்தியில் மிகப் பெரிய இராணுவ நெருக்கடியை தூண்டியுள்ளது
பெலோசியின் தைவான் பயணம் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளை சீர்குலைத்து, இந்தோ-பசிபிக் பகுதியை ஆழமாக சீர்குலைக்கும் என்ற சீன எச்சரிக்கைகளை பைடென் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார்