120. நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட கசப்பான பிளவு போராட்டம், உலகெங்கும் இருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு கனனால் எழுதப்பட்ட ஒரு பகிரங்க கடிதம் வெளியான போது நவம்பர் 1953 இல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த கடிதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமைக்கப்படுவதற்கான திட்டமிட்ட அடித்தளத்தை உருவாக்கி அளித்தது. பப்லோ மற்றும் மன்டேல், நான்காம் அகிலத்தின் தலைமையில் அவர்களுக்கு இருந்த பதவியை பயன்படுத்தி இயக்கத்தின் கட்டமைப்பை சிதைக்கவும் மற்றும் அனைத்து பகுதிகளையும் உடைக்கவும் முற்பட்டார்கள் என்ற நிலைமைகளை கனன் அந்த கடிதத்தில் வெளியிட்டார். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களின் ஆதரவுடன், நான்காம் அகிலம் எதிர்கொண்ட சூழல்களால் கனனின் நடவடிக்கை முற்றிலும் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், நான்காம் அகிலம் அமைப்பதிலும் மற்றும் ஒரு சுயாதீனமான புரட்சிகர அமைப்பாக அது நீடிப்பதற்கும் அடித்தளமாக இருந்த முக்கிய அரசியல் கோட்பாடுகளின் பாதுகாப்பு தான் இதில் பணயம் வைக்கப்பட்டிருந்தது. பப்லோவாதத்துடன் ஏன் சமரசம் ஏற்பட முடியாது என்பதை விளக்கிய கனனுடைய கடிதம் இந்த கோட்பாடுகளை சுருக்கிக் கூறியது:
(1) முதலாளித்துவம் மரணப் பிடியிலிருக்கும்போது, உலக நாகரீகத்தை, மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப்போர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தின் வெளிப்பாடுகளால் ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு இந்த ஆபத்தின் தன்மையின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.
(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகு புரி வடிவிலான முன்னேற்றத்தைத் தொடருதலை அது புதுப்பிக்கும்.
(3) இத்தகைய பணி சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையினால் தான் சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.
(4) சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய பாணியிலான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். இவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போராடக்கூடிய கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
(5) இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்தான். 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையைச் சிதைக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.
(6) நான்காம் அகிலத்தின் பல பகுதிகளும், கட்சிகளும், அதற்கு ஆதரவான குழுக்களும் தங்களது தந்திரோபாய செயல்பாட்டில் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ கைக்கூலிகளையும் (தேசியவாத குழுக்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம்) எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமாக இருந்ததுடன், அதேநேரத்தில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்துவிடாமலும், ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ கைக்கூலியான ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவதென்பதை தெரிந்திருக்க வேண்டியிருந்தது.[70]
121. இந்த கொள்கைகள் அனைத்தும் பப்லோவால் நிராகரிக்கப்பட்டன என்பதை பகிரங்கக் கடிதம் சுட்டிக் காட்டியது...ஒரு புதிய காட்டுமிராண்டித்தனத்தின் ஆபத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சோசலிசத்தை நோக்கிய உந்தலை "மாற்ற முடியாததாய்" அவர் காண்கிறார்; இருந்த போதிலும், நம் தலைமுறையில் அல்லது சில தலைமுறைகளில் சோசலிசம் ஏற்படும் என்று கூட அவர் பார்க்கவில்லை. மாறாக, வேறெதையும் அல்லாமல், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் "உருக்குலைந்த", அதாவது ஸ்ராலின் பாணியிலான தொழிலாளர் அரசுகளை உருவாக்கும் புரட்சிகளின் ஒரு "சுற்றிவளைக்கும்" அலை எனும் கருத்துருவை முன்னெடுக்கிறார். சுயாதீன புரட்சிகர கட்சிகளை கட்டியமைப்பதற்கான போராட்டம் குறித்து ஏற்கனவே அவர் குறிப்பிட்டுள்ள ஏளனத்தை ஒத்த வகையில், தொழிலாள வர்க்கத்தின் திறமைகள் மீதான பெரும் அவநம்பிக்கையை தான் இது எடுத்து காட்டுகிறது. அனைத்து தந்திரோபாயங்களையும் கையாண்டு சுயாதீன புரட்சிகர கட்சிகளை கட்டியமைப்பதற்கான முக்கிய பாதையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ட்ரொட்ஸ்கிசத்தின் "சிந்தனைகள்" மற்றும் "வேலைத் திட்டங்களை" ஏற்பதற்கு பாரிய அழுத்தத்தின் கீழ் அதனை அப்படி மாற்றிக் கொள்ளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அல்லது அதன் ஓர் தீர்க்கமான பகுதியை இவர் பார்க்கிறார்.[71]
122. ஓர் எச்சரிக்கையுடன் முடிந்திருந்த கனனுடைய கடிதம், ஒரு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கிறது: சுருக்கமாக சொல்வதென்றால், பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக ஆழமானவை. எனவே, அரசியல் ரீதியிலோ அல்லது அமைப்பு அடிப்படையிலோ எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது கிரிமினல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்திலிருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் விரட்டிவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள்.... நாம், நான்காம் அகிலத்தின் கீழ்மட்ட அணிகளுக்கு, வெளியில் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலிருந்து ஆலோசனை வழங்குகின்றோம். நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.[72] நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.[73]