கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
அசான்ஜின் மனைவி, ஸ்டெல்லா, பத்திரிகையாளர்களிடம், "நான் வெளிப்படையாக அவரைப் பற்றி கவலைப்படுகிறேன், அவரது பொது ஆரோக்கியத்திற்கு அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும். அவர் இப்போது 24 மணி நேரமும் தனது சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.”
விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுமா என்பது பற்றி இறுதி கையெழுத்திட இந்த வழக்கு இப்போது பிரிட்டிஷ் உள்துறை செயலர் பிரிதி பட்டேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
அவர்களின் திருமணத்தை நடத்துவதன் மூலம், "எந்த விலையிலும் பொதுமக்களின் கண்ணுக்கு தெரியாத வகையில்" அசான்ஜை வைத்திருப்பதற்கான பிரிட்டிஷ் அரசின் முயற்சிகளுக்கு எதிராக அவர்கள் போராடுவதாக மோரிஸ் கூறினார்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் விடுதலைக்காக போராட இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதை ACDAE கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
•Action Committee for the Defence of Freedom of Art and Expression (Sri Lanka)
ஈக்குவடோர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை நீக்கியது. இந்த நடவடிக்கை விக்கிலீக்ஸ் நிறுவனரின் ஜனநாயக உரிமைகள் மீதான மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதல் ஆகும்
நாஜி ஆட்சியின் பயங்கரங்களுக்குப் பின்னர் அளவிலும் ஆழத்திலும் ஒருபோதும் பார்த்திராத, போர் குற்றங்களை அவர் அம்பலப்படுத்தி பத்தாண்டுகளுக்குப் பின்னர், அசான்ஜ் இப்போது பயங்கரவாதிகளையும் படுகொலையாளர்களையும் அடைக்க கட்டப்பட்ட ஓர் இடமான இலண்டனின் அதிகபட்ச காவல் கொண்ட பெல்மார்ஷ் சிறைச்சாலையின் ஓர் சிறையறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்
ஊடகவியலாளரான கசாண்ட்ரா ஃபேர்பேங்க்ஸ், தனக்கும் குடியரசுக் கட்சி செயற்பாட்டாளர் ஆர்தர் சுவார்ட்ஸூக்கும் இடையிலான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் வழக்கு தொடர்பான உக்கிரம்நிறைந்த தொடர்ச்சியான தகவல்தொடர்புகளைப் பற்றி வெளிப்படுத்தினார்
ஜூலியன் அசாஞ்ச், அமெரிக்க அரசாங்கம் அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நாடுகடத்தல் நடவடிக்கைகளில் தனது அடிப்படை சட்ட உரிமைகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நீதிமன்றத்தில் ஒரு இணக்கமற்ற எதிர்ப்பை வெளியிட்டார்.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்யக் கோரி, பெப்ரவரி 23 ஞாயிறன்று இலண்டனில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் படி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (UK) அழைப்புவிடுக்கிறது
அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையிலிருந்து, மருத்துவ நிபுணர் குழு மூலம் அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவீடன் குற்றச்சாட்டுக்களின் ஒரே நோக்கம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அமெரிக்க சிறைக்கு அவரை அனுப்புவதற்கான ஒரு மாற்று வழியை உருவாக்குவதே என்று 2010 முதல் அசான்ஜ் செய்து வந்த எச்சரிக்கைகளின் முழுமையான நிரூபணமாகவே இந்த விசாரணையின் முடிவு உள்ளது.
திபதி வனேசா பாரைட்சர் அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூறும் படி கேட்டபோது, வலுவான கண்ணாடி பலகங்களால் மூடப்பட்ட கைதி கூண்டில் நின்ற அசான்ஜ் சிந்தனையளவில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.
வீடனில் அசான்ஜூக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி M.I.A. நேரடியாக பதிலிறுத்தார்: “இப்போது இது உண்மையில் ஜூலியனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றியது.
போலி பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான அவரது காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்றே முடிந்துவிட்ட போதிலும், நேற்று நடந்த ஒரு நிர்வாக விசாரணையில், ஒரு பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜ் “தப்பித்துவிடும் அபாயம்” இருப்பதாகக் கருதி தொடர்ந்து அவரை காலவரையற்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக அசான்ஜின் மரணத்தை விரும்பும், மற்றும் உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்கள் குறித்த ஒரு ஜோடிக்கப்பட்ட விசாரணைக்கு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு அவரை நாடுகடத்துவதற்கான முழு அரசியல் ரீதியான நடைமுறைக்கு திட்டமிடும் வாஷிங்டன், இலண்டன் மற்றும் கான்பெர்ரா ஆகியவற்றை குற்றம்சுமத்த போதிய அடிப்படைகள் உள்ளன.