2021 மார்ச் மாதம், ஓல்டன் தோட்டத்தின் 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்களில் 22 பேர் போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர், தொழில் நீதிமன்றம் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்து விட்டதுடன் அந்த 22 பேர் இன்னும் நீதிமன்ற வழக்குகளில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இரக்கமற்ற வேலை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மூன்று தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
இந்த முத்தரப்புக் கூட்டங்களின் முடிவு எதுவாயினும் ஊதிய விகிதங்கள் ஒரு வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்தை வழங்காது அல்லது மிகவும் சுரண்டப்படும் இந்தத் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.
தோட்ட உரிமையாளர் சட்டப்பூர்வமாக தேவையான ஓய்வூதிய கொடுப்பனவுகளை வைப்பில் இடவில்லை என்றும், தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது அவர்களது ஓய்வூதியம் கிடைக்காது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களுக்கான தற்காப்பு பிரச்சாரம், அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராட தோட்டத் தொழிலாளர்களை தூண்டும் என்று தோட்ட நிர்வாகம் அஞ்சுகிறது.
கிளனுகி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களைச் சாராமல், தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் தங்கள் ஊதியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கியப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.
விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை மற்றும் அற்ப ஊதியங்கள் காரணமாக தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைகளின் கீழ் கிளனுகி மற்றும் டீசைட் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர்
நிர்வாகங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களின் பரந்த பங்கேற்பைத் தடுப்பதற்காக, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே அடையாள எதிர்ப்புகளுக்குள் போராட்டங்களை மட்டுப்படுத்தின.
ஓல்டன் தோட்டத்தில் 38 தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலானது தோட்டக் கம்பனி, பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுச் சதிய மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் கம்பனிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் அடக்குமுறையின் ஒரு பகுதியாகும்.
முதலாளிகளுடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை முன்னெடுக்கவும் கடுமையான வேலை நிலைமைகளை சுமத்தவும் தேயிலை தோட்ட முகாமையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கம்பனி மற்றும் பொலிசும் அதிகபட்சம் சுரண்டப்படுகின்ற, குறைந்த ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்குவதை முன்னெடுக்கின் நிலையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான சோடிக்கப்பட்ட வழக்கு விசாரணை மேலும் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிரேடன் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கம்பனிகள் முன்னெடுக்கும் தாக்குதலுக்கு எதிராக, ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்த ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளனர்.
தொழிற்சங்கங்களுக்கு வெளியே மீண்டும் மீண்டும் தலை தூக்கும் போராட்டங்கள், தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் கிளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகளைக் குறிக்கின்றன
ஓல்டன் தோட்டத்தில் ஒரு பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்கள், வேலைச் சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சியாகும்.
தெற்காசியாவில் ஆளும் வர்க்கங்கள், உலகெங்கிலும் உள்ள தங்கள் சமதரப்பினரைப் போலவே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றன.
இலங்கையின் பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஓல்டன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது கம்பனியினதும் அரசினதும் தாக்குதல்களை உக்கிரமாக்குவதற்கு ஆதரவளிக்கின்றது.