உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

மஹ்மூத் கலீலை விடுதலை செய்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலஸ்தீனிய பட்டதாரி மாணவரை தடுத்து வைத்து நாடு கடத்தும் அச்சுறுத்தல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

அமெரிக்க சிதைவு: ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புகிறார்

டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீளமுடியாத வீழ்ச்சியை குறிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தால் மட்டுமே ஒரு மாற்றீட்டை வழங்க முடியும்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

2025 புத்தாண்டு அறிக்கை

தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்

முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

சோசலிச சமத்துவக் கட்சியின் இணையவழி கூட்டம்: "தேர்தல் தோல்வியும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்"

ட்ரம்ப் தேர்வானதற்கு சோசலிச விடையிறுப்பு

சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நவம்பர் 10 இணையவழி கூட்டம், ட்ரம்ப் வெற்றியின் காரணங்களையும் விளைவுகளையும் பகுப்பாய்வு செய்ததுடன், தொழிலாள வர்க்கம் போராடுவதற்கான ஒரு அரசியல் மூலோபாயத்தை விவரித்தது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வு குறித்து

ட்ரம்ப், தனது அரசியல் வெற்றிக்கு ஜனநாயகக் கட்சியின் திவால்நிலைக்கு கடன்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, வசதியான நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலுடன், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பணவீக்கத்தின் நாசகரமான தாக்குதலுக்கு ஆணவமான அலட்சியம் மற்றும் உக்ரேனில் போர் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு இடைவிடாத ஆதரவு ஆகியவை தேர்தல் தோல்விக்கு அடித்தளம் அமைத்தன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம்: 2024 தேர்தல்களில் இருந்து முக்கியமான பிரச்சினைகள் விலக்கப்பட்டுள்ளன

அரசியல் அமைப்புமுறை செயலிழந்து, மக்களுடைய தேவைகளுக்கு பதிலளிக்க இயலாது, வன்முறையான உள்நாட்டு மோதலை நோக்கிச் செல்கிறது என்ற பரவலான உணர்வு உள்ளது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

அமெரிக்க தேர்தல்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு: தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள்

விரைவில் வர இருக்கும் இந்த தேர்தலில், பத்து மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் ஒரு பாசிச சர்வாதிகாரத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்று அர்த்தமல்ல. மாறாக, பரந்த வெகுஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கொள்கைகளை முன்னெடுப்பதுக்கு இலாயக்கற்ற, ஜனநாயகக் கட்சிக்கு எதிரான ஆழ்ந்த, பரந்த விரோதப் போக்கைத்தான் இது பிரதிபலிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையின் ஓராண்டு

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் மீதான இனப்படுகொலையின் முதல் ஆண்டு நிறைவை அக்டோபர் 7 ஆம் தேதி குறிக்கிறது. இது, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள பிராந்தியப் போரின் முதல் கட்டமாக, இப்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போராக உருமாற்றம் அடைந்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை: உலகப் போரில் ஏகாதிபத்தியம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது

ஏகாதிபத்திய சக்திகள், முன்னாள் காலனித்துவ நாடுகளின் மீது தளைகளை மீண்டும் சுமத்தும் தங்கள் முயற்சியில் எதையும் நிறுத்தப் போவதில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் ஆகட்டும் அல்லது ரஷ்யாவுக்கு எதிரான போராக ஆகட்டும், வெறுமனே படுகொலை மட்டுமல்ல, மாறாக பாரிய பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை என அனைத்து வழிவகைகளும் அனுமதிக்கப்படுகின்றன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள்

இன்னும் இரண்டு மாதங்களில் இடம்பெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரு பாரிய அரசியல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஜூலை 24 ஆம் தேதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் அரசியல் கேள்விகள்

இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை வளர்ப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

போர்க்குற்றவாளி நெதன்யாகுவை அமெரிக்க காங்கிரஸ் பாராட்டுகிறது

நெதன்யாகுவின் வருகையும், அவருக்கு கிடைத்த பரவசமான வரவேற்பும், ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன் ஹிட்லர் தோன்றியதைத் தவிர வேறொன்றையும் நினைவூட்டவில்லை. "ஹிட்லர் வாழ்க!" என்று முழக்கமிட்ட ஜேர்மன் பிரதிநிதிகளும், "அமெரிக்கா" என்று குரைத்த அமெரிக்க காங்கிரஸ்காரர்களும் ஒரே துணியிலிருந்து வெட்டப்பட்டவர்கள் ஆவர்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

பைடென் பிரச்சாரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அல்லது மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரின் தலைமையில் இருந்தாலும், ஜனநாயகக் கட்சியானது, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பாசிச குடியரசுக் கட்சியினருக்கு பிரதான உதவியாக இருக்கும்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து

இந்த தாக்குதலின் தோற்றம் எதுவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: இது, முழு அரசியல் ஸ்தாபனத்தின் மேலும் கூர்மையான வலதுசாரி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு