நவம்பர் 14 நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. ஏகாதிபத்திய யுத்தம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.
கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தலைமை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர் இன்று இலங்கை ஐ தொலைக் காட்சியில் 6.46 மணிக்கு கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் அதேவேளை இரவு 10 மணிக்கு நேத்ரா தொலைக் காட்சியில் அஸ்திரம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் சமகால சர்வதேச மற்றும் இலங்கை அரசியல் நிலைமைகளை பற்றி ட்ரொட்ஸ்கிச, சர்வதேச சோசலிச நிலைப்பாட்டில் இருந்து அவர் கலந்துரையாடுவார். தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கு பற்றியும் திருஞானசம்பந்தர் விளக்குவார். இந்த நிகழ்ச்சிகளை பார்க்குமாறு தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுப்பதோடு, சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.