உக்ரேன் சோசலிஸ்ட் போக்டான் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரும் பிரச்சாரத்திற்கு சர்வதேச ஆதரவு பெருகுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சோசலிஸ்டும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் எதிர்ப்பாளருமான போக்டான் சிரோட்டியுக்கை (Bogdan Syrotiuk) விடுவிக்கக் கோரும் பிரச்சாரத்திற்கு பதிலளிப்பாக உலகெங்கிலும் ஆதரவு பெருகி வருகிறது.

உக்ரேனில் உள்ள செலென்ஸ்கி அரசாங்கத்தால் சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரும் பிரச்சாரத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 30 அன்று உலக சோசலிச வலைத் தளத்தால் தொடங்கப்பட்ட “உக்ரேனிய சோசலிஸ்டும் நேட்டோவின் பினாமி போரின் எதிர்ப்பாளருமான போக்டான் சிரோட்டியுக்கை விடுதலை செய்!” என்ற இணையவழி கோரிக்கை மனுவில் உலகெங்கிலுமான நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

போக்டன் சிரோடியுக் தனது அலுவலகத்தில் உள்ளார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, ஜேர்மனி, நியூசிலாந்து, இலங்கை, ஹாங்காங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, பிரான்ஸ், நோர்வே, துருக்கி மற்றும் தைவான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

சிரோடியுக்கின் கைது மற்றும் அவரது விடுதலைக்கான பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை விளக்குகையில், Change.org இல் உள்ள கோரிக்கை மனு பின்வருமாறு கூறுகிறது:

ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும், நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிஸ்ட்டான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (Security Service of Ukraine - SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான மோசமான உடல்நலத்துடன் இருக்கும் போக்டன், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொடூரமான நிலைமைகளின் கீழ் நிகோலேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்மையில், போக்டன் முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பிற்கும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பாளர் ஆவார். அவர் உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறார்.

போக்டன் சிரோடியுக் இன் விடுதலைக்கான பிரச்சாரம் அவசரமானது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் போலி நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது, இந்த தண்டனை உக்ரேனில் மரண தண்டனைக்கு சமமானதாகும்.

இடதுசாரி இயக்கங்கள் மீதான செலென்ஸ்கி ஆட்சியின் கொடூரமான அடக்குமுறையின் சமீபத்திய உதாரணம் போக்டனின் கைதாகும். அதன் போருக்கான எதிர்ப்பானது, உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் ஆதரவைக் கண்டு வருகிறது.

கைது செய்யப்பட்டதற்கான சூழ்நிலைகளை நோர்த் கீழ்வருமாறு விளக்கினார்:

SBU அதிகாரிகள் போக்டனின் அடுக்குமாடி குடியிருப்பையும், அரசியல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் பயன்படுத்திய அலுவலகத்தையும் சூறையாடினர். போக்டனின் அலுவலகத்தில், ரஷ்ய இராணுவ அங்கி, ரஷ்ய இராணுவப் பேரினவாதத்துடன் தொடர்புடைய ஒரு சின்னமான “Z” என்ற எழுத்தைக் கொண்ட ஒரு முதுகுப்பை, மற்றும் ஒரு வாயு முகக்கவசம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக SBU கூறுவதாக உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் புகைப்படத்தை முக்கியமாகக் காண்பிக்கும் மற்றும் பரந்த அளவிலான மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இலக்கியங்களை கொண்டிருக்கின்ற ஒரு அலுவலகத்தில், இத்தகைய பொருட்கள் இருப்பதாக கூறுவதை, மக்கள் நம்புவார்கள் என்று முட்டாள் பாசிச பொலிஸ் துறை மட்டுமே எதிர்பார்க்கும்.

போக்டனின் அலுவலகத்தில் அத்தகைய பொருட்கள் “கண்டுபிடிக்கப்பட்டன” என்றால், அவை SBU ஆல் அங்கு விட்டுச் செல்லப்பட்டுள்ளன என்பதாகும். SBU இன் ஏமாற்றுத்தனமும் கெஸ்டபோவின் வழிமுறையைப் போல பயன்படுத்துவதும் உக்ரேனில் பொதுவானவையாக இருக்கின்றன.

“நேட்டோவின் பினாமி போருக்கு எதிரான சோசலிஸ்ட்டான போக்டன் சிரோட்டியுக்கை உக்ரேனிய சிறையில் இருந்து விடுவிக்கக் கோருங்கள்” என்ற அறிக்கையையும் நோர்த் சமூக ஊடகங்களில் ஒரு காணொளியாக வெளியிட்டார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சிரோட்டியுக் உக்ரேனிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் செயலூக்கத்துடன் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) இன் ஒரு முன்னணி அங்கத்தவர் என்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இணையவழி கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டவர்களுடன் சேர்ந்து, உலக சோசலிச வலைத் தளம் பிரச்சாரத்தை ஆதரிப்பவர்களிடம் இருந்தும் எழுத்து மூலமான கருத்துக்களைப் பெற்றுள்ளது.

ஜேர்மனியின் முனிச் நகரைச் சேர்ந்த தாமஸ்:

“தோழர் போக்டனை விடுதலை செய்! அவரது கைது அனைத்து தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். இது உக்ரேனில் பாசிச ஆட்சியுடன் ஒத்துழைக்கும் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் நேட்டோ நாடுகளின் குற்றங்களை மீண்டும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி கவலைப்படுவதில்லை.

அமெரிக்க கலிபோர்னியாவின் க்யூபர்டினோவைச் சேர்ந்த டெபி:

“பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நிதியளிக்கவும், உக்ரேனின் பாசிச செலென்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆயுதம் வழங்கவும் அமெரிக்கா எனது வரிப்பணத்தை பயன்படுத்துவது கோபமடையச் செய்கிறது! இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானவை, உடனடியாக கைவிடப்பட வேண்டும்!

தென் கொரியாவைச் சேர்ந்த கிம்:

“உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஐக்கியத்துடன் போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை கொடுத்த இந்த இளைஞரை ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்ததற்காக செலென்ஸ்கி ஆட்சியையும் உக்ரேனிய பாதுகாப்பு சேவையையும் நாங்கள் கண்டிக்கிறோம்!”

சீனாவின் குய்லினைச் சேர்ந்த யோடுங்:

“அவர் குற்றவாளி அல்ல.”

இலங்கை கொழும்புச் சேர்ந்த கீதானந்தா:

“போக்டானை புட்டின் ஆட்சி மற்றும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பின் ஆதரவாளராக சித்தரிக்கும் முயற்சிகள் அரசியல்ரீதியாக அபத்தமானவை. தோழர் சிரோட்டியுக், உக்ரேனிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் செயலூக்கத்துடன் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் படையின் (YGBL) ஒரு முன்னணி அங்கத்தவராவார்.”

ஹங்கேரியைச் சேர்ந்த வேரா:

“அவரை உடனடியாக விடுதலை செய்!! போர் வெறியர்கள் விசாரிக்கப்பட வேண்டும். உலகத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து வாதிட வேண்டும், போர்களை ஊக்குவிக்கக்கூடாது. ஆயுதங்கள் மற்றும் போர்களுக்கு செலவழிப்பதைக் குறை. கல்வி, அமைதி, சுகாதாரம், சமூக பிரச்சினைகளுக்கு செலவிடுங்கள். போக்டனும் அதேபோல் அனைத்து சாதாரண உழைக்கும் மக்களும் இதையே விரும்புகிறார்கள்.”

பிரான்சைச் சேர்ந்த பிரான்சுவா:

“நீங்கள் உங்களை சமாதானத்தின் ஆதரவாளர் என்று அழைத்துக் கொள்வது ஆபத்தானது! முதலாளித்துவவாதிகளுக்கு போர் தேவைப்படுகிறது, ஏனென்றால் ‘மேகம் புயலைச் சுமந்து செல்வதைப் போல முதலாளித்துவம் போரைச் சுமக்கிறது,” உதாரணமாக முதலில் சுடப்பட்டது ஜோன் ஜூரஸ் (Jean Jaurès).”

பிரிட்டனைச் சேர்ந்த சைமன்:

“ஜனாதிபதி செலென்ஸ்கியின் இராணுவ வட்டத்தால், தோழர் போக்டானை வருந்தத்தக்க வகையில் தடுத்து வைத்திருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். அவரை விடுவிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பிக் பில் ஹேவுட்டின் (Big Bill Haywood) குறிக்கோளை உலகின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே மீண்டும் புத்துயிரூட்டுவோம்: அதாவது ஒருவருக்கு ஏற்படுத்தும் காயம் அனைவருக்கும் காயம்! போக்டன் சிரோட்டியூக் மேல் கை வைக்காதே! தோழர் போக்டனை உடனே விடுதலை செய்!”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீபன்:

“ரஷ்யாவுக்கு எதிரான போரில் இன்னும் அதிகமான உக்ரேனிய தொழிலாளர்களை மரணத்திற்கு அனுப்ப முயற்சிக்கும் கொடூரமான உக்ரேனிய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் அதிகரித்து வரும் ஒடுக்குமுறையின் பாகமாக போக்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போர் நிறுத்தப்பட்டு போக்டான் விடுவிக்கப்பட வேண்டும்.”

அனைத்து வாசகர்களும் இணையவழி மனுவில் கையொப்பமிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மற்றும் போக்டன் சிரோட்டியுக்கின் வழக்கை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முழுவதும் பணியிடங்கள், பள்ளிகள், சுற்றுப்புறங்களில் தெரியப்படுத்த பிரச்சாரத்தில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். சமூக ஊடகங்களில் உங்கள் நண்பர்களுடன் பிரச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் இந்தக் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தவும்: #FreeBogdan.

Loading