புகழ்பெற்ற கோவிட்-19 விஞ்ஞானிகள் நெடுங் கோவிட் நோயை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜியாத் அல்-அலி (Ziyad Al-Aly) மற்றும் எரிக் டோபோல் (Eric Topol) ஆகியோரின் நெடுங் கோவிட் (Long COVID) பற்றிய முன்னோக்கு பகுதி இன்று (23-02-2024) அறிவியல் (Science) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது உடல் அல்லது மனச் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் நோய் (disorder) பற்றிய விஞ்ஞான சமூகத்தின் தற்போதைய அறிவையும், அதைத் தீர்க்க முக்கியமான அறிவின் மீதமுள்ள இடைவெளிகளையும் திறனாய்வு செய்கிறது. நெடுங் கோவிட்-ஐப் பற்றி படிப்பதிலும், தடுப்பதிலும் மற்றும் சிகிச்சை செய்வதிலும் சமூகம் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான கொள்கைப் பரிந்துரைகளுடன் இது முடிவடைகிறது.

இந்த ஆசிரியர்கள் நெடுங் கோவிட் பற்றிய அறிவில் சிறந்த அறிஞர்கள் மற்றும் நிபுணர்களாக இருக்கின்றனர். டாக்டர் அல்-அலி, செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவராகவும்-விஞ்ஞானியாகவும் இருக்கின்றார். அவர் கோவிட்-19 மற்றும் நெடுங் கோவிட் பற்றிய பல அதிக தாக்கங்களை ஏற்படுத்திய வெளியீடுகளைக் கொண்டிருக்கிறார் மற்றும் சமீபத்தில் காங்கிரஸில் உடல் அல்லது மனச் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் நோய்க்கு (Disorder) ஈடுபடுத்தப்பட்ட ஒரு விசாரணையில் சான்றாதாரங்களோடு விளக்கியுள்ளார். மற்ற அவருடைய முக்கியமான கட்டுரைகள், கோவிட்-19 மறுநோய்த்தொற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேடுங் கோவிட் மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் அவர் கோவிட்-19 மற்றும் சளிக்காய்ச்சல் போன்றவற்றினால் ஏற்படும் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வுகளை வழிநடத்தியுள்ளார்.

டாக்டர் அல்-அலி [Photo: Dr. Al-Aly]

டாக்டர் டோபோல் (Dr. Topol) ஒரு விஞ்ஞானி மற்றும் ஸ்கிரிப்ஸ் (Scripps) கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கான நிர்வாக துணைத் தலைவராக இருக்கின்றார். நேச்சர் ரிவியூஸ் மைக்ரோபயாலஜியில் (Nature Reviews Microbiology) வெளியிடப்பட்ட நெடுங் கோவிட் பற்றிய முக்கிய ஆய்வுக் கட்டுரையின் மூத்த ஆசிரியராகவும் இருக்கின்றார். தொற்றுநோய்களின் தொடக்கத்தில் அவர் அறிவியலில் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியுள்ளார். அது இதயத்தில் ஏற்படும் கோவிட்-19 இன் தாக்கங்களை விவரிக்கிறது.

இந்த விஞ்ஞானிகள், தெரிந்தவற்றைச் சுருக்கமாகக் கூறுவதன் மூலம் தங்கள் முன்னோக்குக் கட்டுரையைத் தொடங்குகின்றனர். மனித உடல் அல்லது மனச் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் நோய் (Disorder) ஒவ்வொரு உறுப்பு அமைப்பையும் பாதிக்கிறது மற்றும் அடிக்கடி பலவீனமடையச் செய்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், மற்ற விஞ்ஞானிகள் உலகளவில் 400 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். இது பாலினம் மற்றும் மரபணு அமைப்புகளில் எல்லா வயதினரையும் பாதிக்கிறது.

டாக்டர் டோபோல் (Dr. Topol) [Photo by Juhan Sonin / CC BY 4.0]

இந்த ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல, “நெடுங் கோவிட் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆனல் அவை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமலிருக்கின்றன.”

ஆபத்துக் காரணிகளாக வைரஸிஇன் கடுமையான நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்று ஆகியவை அடங்கும். கடுமையான கோவிட்-19 நெடுங் கோவிட்-ஐ உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றாலும், லேசான அல்லது அறிகுறியற்ற SARS-CoV-2 வைரஸ் நோய்த்தொற்றுகள் நெடுங் கோவிட் நோயை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு மறுநோய்த்தொற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது.

நெடுங் கோவிட் நோயின் காரணத்திற்கான பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதற்கான ஆதாரங்கள் அதிகரித்தும் வருகின்றன. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தாக்கி அழிப்பதால் ஏற்படும் கோளாறுகள் (autoimmune disorders), இரத்த நாளத்தின் வீக்கம் (inflammation of blood vessel) மற்றும் நரம்பு திசுக்கள் (neural tissues),மற்றும் நுண்ணுயிரிகளுக்கு (microbiome) இடையூறுகள் உட்பட, வைரஸ் அழிக்கப்படாமல், பாதிக்கப்பட்ட நபர்களின் குறிப்பிட்ட செல்களில் இருப்பது (persistent reservoirs of the virus), நரம்புச் சிதைவு பாதிப்புகள் (mitochondrial dysfunction), நோயெதிர்ப்பு சீர்குலைவு (immune dysregulation) ஆகியவை இதில் அடங்கும்

மத்திய நரம்பு மண்டலத்தில் [central nervous system (CNS)] கடுமையான மற்றும் ‘நெடுங்-கோவிட்’ உட்படுத்தப்பட்டுள்ள வெளிப்பாடில் உள்ள சாத்தியமான நோய்க்குறியியல் வழிமுறைகள் (pathophysiological mechanisms) [Photo: "Neurological manifestations of long-COVID syndrome: a narrative review"]

கூடுதலாக முதலில் SARS-CoV-2 நோய்த்தொற்றைத் தவிர்ப்பதுடன், நெடுங் கோவிட் நோயைத் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் மூலம் தடுக்கலாம். தடுப்பூசிகள் 15-75 சதவீதம் ஆபத்தைக் குறைக்கின்றன. ரிடோனாவிர் (ritonavir) மற்றும் நிர்மத்ரெல்விர் (nirmatrelvir) வைரஸ் தடுப்பு மருந்துகள் கலவையானது (இவை பாக்ஸ்லோவிட் (Paxlovid) நிறுவன வர்த்தக குறியுள்ளவை) ஆபத்தை 26 சதவீதம் குறைக்கிறது. நீரிழிவு மருந்தான மெட்ஃபோர்மின் (metformin) மாதிரி கட்டுப்பாட்டு சோதனையில் அது ஆபத்தை 41 சதவீதம் குறைத்திருக்கிறது.

நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்களை அந்தப் பகுதி விபரமாக விவரிக்கிறது.

ஆசிரியர்கள் பல பரிந்துரைகள் மற்றும் ஒரு எச்சரிக்கையுடன் அதனை முடித்திருக்கிறார்கள். முதலாவதாக, அவர்கள் கூடுதல் ஆராய்ச்சிக்கு கோரிக்கை விடுக்கின்றனர் - மேலும் அதற்கு உதவுவதற்கு அரசாங்க நிதியின் அளவை பெரிதும் அதிகரிக்க வேண்டும் - நெடுங் கோவிட்டின் பல அம்சங்களில், உடல் அல்லது மனச் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் நோயைச் (disorder) சிறப்பாக வரையறுப்பதில் இருந்து, அதன் தோற்றத்தின் உயிரியல் வழிமுறைகளை மேலும் தெளிவுபடுத்துதல், அதன் நீண்ட காலப் பாதை மற்றும் விளைவுகளைத் தீர்மானித்தல், எதிர்கால ஆராய்ச்சியை எளிதாக்க விலங்கு மாதிரிகளை உருவாக்குதல், இறுதியாக மேலும் மேலும் சிறந்த சிகிச்சைகளை உருவாக்குதல்.

இரண்டாவதாக, அவர்கள் பல கொள்கை பரிந்துரைகளை செய்கிறார்கள். தொற்றுநோய்க்கு முன்னர் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த பொது சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் மற்றும் நோய் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவது ஒரு பரிந்துரை, மற்றும் தொற்றுநோய்க்கான எதிர்வினையால் இயக்கப்படும் ஒரு சுருக்கமான புத்தாக்கம் இருந்தபோதிலும், அது படிப்படியாக அகற்றப்பட்டுவிட்டது.

நெடுங் கோவிட் நோயின் மிகவும் பொதுவான சில அறிகுறிகள்

கோவிட்-19 தொடர்பான பொது சுகாதார அவசரநிலை முற்றுப்பெற்றுவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. அது கண்காணிப்பை அகற்றுவதில் முதன்மையானதாக இருக்கிறது. இந்த நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் நோய் கண்காணிப்புக்கான தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்புவதற்கு உதவியுள்ளது, இதன் மூலம் கிட்டத்தட்ட அனைத்து தரவு சேகரிப்பு மற்றும் கோவிட்-19 பற்றிய அறிக்கையிடல் முடிவுக்கு வந்தது மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிரபலமான கோவிட்-19 முகப்பு தரவு பக்கம் (dashboard) அழிவுக்கு வழிவகுத்தது.

நெடுங் கோவிட் நோயாளிகளின் பூர்த்தி செய்யப்படாத சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வது மற்றொரு பரிந்துரையாகும். “நெடுங் கோவிட் அடையாளம் கண்டு நிர்வகிக்க சுகாதாரப் பாதுகாப்பு பணிவழங்குபவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்”, சிறப்பு மருத்துவ நிலையங்களை அடைவதற்கான வசதிகளை விரிவுபடுத்துதல், மற்றும் குறைந்த வள அமைப்புகளில் மாற்றியமைக்கக்கூடிய பராமரிப்பு வழிகளை உருவாக்குதல்.” என ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இறுதியாக, இவ் ஆசிரியர்கள் நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்றைத் தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்தை பரிந்துரைக்கின்றனர். “இப்போது SARS-CoV-2 நோய்த்தொற்றின் ஆதிக்கம் செலுத்தும் வகையாக இருக்கும் மறுநோய்த்தொற்று, பயனற்றது அல்ல; இது மீண்டும் தொடங்கும் நெடுங் கோவிட் ஐ தூண்டலாம் அல்லது அதன் தீவிரத்தை அதிகரிக்கலாம்“ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, காற்றை வடிகட்டுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மருந்து அல்லாத நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். “காற்றில் பரவும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகத் தணிக்க வேண்டிய கட்டிடக் குறியீடுகளைப் புதுப்பித்தல் மற்றும் பூகம்பங்கள் மற்றும் பிற இயற்கை ஆபத்துக்களில் இருந்து ஏற்படும் ஆபத்துகளைத் தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப்போன்று அதே தீவிரத்துடன் பாதுகாப்பான உட்புறக் காற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

தடுப்பூசியை எடுத்துக்கொள்வதை அதிகரிப்பதற்கான பிரச்சாரங்களையும், நாசி மூலம் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டையும் அவை வலியுறுத்துகின்றன.

நெடுங் கோவிட் வழங்கியிருக்கும் சவால்களை எதிர்கொள்ள “அவசர தேவை” என்று எச்சரிப்பதன் மூலம் ஆசிரியர்கள் முடிக்கிறார்கள்: “உலகம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எழுந்து இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும்; தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு இதில் தங்கியிருக்கிறது.”

கோவிட்-19 நோய்த்தொற்றுகள் எதிர்பாராதவிதமாக அதிகரித்து வருகின்றன என்ற செய்தியுடன் இந்தப் பகுதியின் வெளியீடு ஒத்துப்போகிறது. பிப்ரவரியில் தொற்றுநோய்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் கடந்த பருவகால மாற்றங்களில் இருந்ததற்குப் பதிலாக, விடுமுறைக் கூட்டங்கள் காரணமாக, ஜனவரி மாதத்தில் வழக்கமான கடும் காய்ச்சல், சமீபத்திய கழிவு நீர் கண்காணிப்பு தரவு, தொற்றுநோய்களின் அளவு இன்னும் அதிகரித்து வருவதாக நிரூபிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 1.35 மில்லியன் நோய்த்தொற்றுகள் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, மேலும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 86 சதவீதமாக இருந்த காலத்தைவிட ஒட்டுமொத்தமாக கோவிட்-19 பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இவ்வாறு, நோய்த்தொற்றுகள் மற்றும் மறுநோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் மில்லியன் கணக்கானவர்களுக்கு நெடுங் கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த விஞ்ஞானிகளும் அவர்களது பரிந்துரைகளும் பாராட்டுக்குரியவையாக இருந்தாலும், அவர்களின் அரசியல் நோக்குநிலை மற்றும் நெடுங் கோவிட் நோயில் சமூக முன்னேற்றம் இல்லாததற்கு யார் காரணம் என்பது பற்றிய சுருக்கமான பகுப்பாய்வு ஆகியவை தவறாக வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் குற்றம் சுமத்தும் அளவிற்கு, அவர்கள் தீவிர வலதுகளுக்கு மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், எழுதுகிறார்கள்:

எவ்வாறாயினும், ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளும் இலாபங்கள் மற்றும் போரை விட மக்களின் ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்துவதற்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை நிரூபித்துள்ளன. பொது சுகாதார அமைப்பு மற்றும் வெகுஜன தொற்று மற்றும் இறப்பு கொள்கைகளின் அழிவிலிருந்து எத்தனை முறையீடுகள், மனுக்கள் அல்லது வேண்டுகோள்கள் வந்தாலும் அவர்களைத் தடுக்கவில்லை. ஜோ பைடன் தனது முன்னோடியின் கொள்கைகளிலிருந்து போக்கை மாற்றவில்லை, விஞ்ஞானமற்ற மற்றும் பொது-சுகாதாரத்திற்கு எதிரான “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

உண்மையில், பொது சுகாதாரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. இந்த வாரம் தான், நாடு முழுவதும் தட்டம்மை நோய் தீடிரெனப் பரவியது, அறிவியலுக்கு இழிவானமுறையில் எதிரானவரும், தடுப்பூசிக்கு எதிரானவரும், பொது சுகாதாரத்திற்கு எதிரானவருமான புளோரிடா மாநில அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ்பே லடாபோ (Dr. Jospeh Ladapo) ஏற்கனவே ஆறு தட்டம்மை (measles) பாதிப்புகள் கண்டறியப்பட்ட ப்ரோவர்ட் (Broward) தொடக்கப் பள்ளியை மூட மறுத்துவிட்டார். பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த பரிந்துரையையும் அவர் தவிர்த்துவிட்டார். இறுதியாக, மற்றும் மிக மோசமான முறையில், தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்போது பள்ளிக்கு திருப்பி அனுப்புவது என்பதில் தங்களின் சொந்த விருப்பப்படி செயற்படலாம் என்று கூறியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேலான பொது சுகாதார முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், முன்னர் அமெரிக்காவிலிருந்து அம்மை நோயை ஒழித்திருந்த இந்தக் கொள்கைகளை இவை பறக்கவிட்டிருக்கின்றன. ஆனால், இதற்கு லடாபோ மட்டும் குற்றவாளியில்லை. உலக சோசலிச வலைத் தளத்தில் கடந்த வாரம் ஆவணப்படுத்தியபடி, பைடனின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கைவிட்டிருக்கின்றன.

மேலும், கடந்த மாதம் நெடுங் கோவிட் குறித்த விசாரணையில், பெர்னி சாண்டர்ஸ் அல்லது செனட்டின் உடல்நலம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியக் குழுவின் வேறு எந்த உறுப்பினரும் இந்த குளிர்காலத்தில் கோவிட்-19 அதிகரித்திருப்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் தெரிவிக்கவில்லை. தொற்றுநோயை நிறுத்துவதற்கு தேவையான பாரிய முதலீட்டிற்கும் அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை.

கோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் அதன் நீண்ட கால விளைவுகளைப் பொறுத்தமட்டில் மட்டும் அல்ல, இது வெகுஜன தொற்று, பலவீனம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் கொள்கையில் உறுதியாக உள்ளது என்பதை ஆளும் வர்க்கம் பலமுறை நிரூபித்துள்ளது. காஸா மற்றும் உக்ரைனில் நடக்கும் கொடூரங்களுக்கும் இது உறுதியளிக்கிறது.

விஞ்ஞானிகளின் குரல்கள் எவ்வளவு அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், இந்தக் கொள்கைகளை மாற்றுவதில் அரசியல்வாதிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனளிக்கப்போவதில்லை. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், போர் மற்றும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பெருநிறுவனங்களுக்கு மேலாக மக்களின் நல்வாழ்வை நிலைநிறுத்துவதற்கும் திறன் கொண்ட ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். குடியரசுக் மற்றும் ஜனநாயகக் கட்சிகள் மற்றும் அவர்களுக்குப் பொறுப்பான அமைப்புகளிலிருந்து முற்றிலும் தனியாக, அதன் சொந்த சோசலிச அரசியல் வேலைத்திட்டம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பணிகளில் வெற்றி பெறமுடியும்.

Loading