மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
(866) 847-1086 க்கு ஆட்டோவுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வாகன ஒப்பந்த போராட்டம் குறித்த உரை செய்தி புதுப்பிப்புகளுக்கு பதிவு செய்யவும். வாகனத் தொழிலாளர்கள் சாமானியர் குழு வலையமைப்பின் அடுத்த இணையவழி கூட்டத்தில், ஒட்டுமொத்த வாகனத் தொழில்துறையிலும் தொழிலாளர்களை ஒன்றிணைத்து வேலைநிறுத்தம் செய்வது பற்றி விவாதிக்கவும். கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யவும்.
வெள்ளிக்கிழமை காலை, ஒரு முகநூல் நேரலை வீடியோவில், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஷான் பெயின், மூன்று பெரிய விநியோக ஆலைகளின் வாகனத்துறை தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இது வோல் ஸ்ட்ரீட்டுக்கு நிவாரணத்தையும், 97 சதவீதம் பேர் முழு வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்த சாமானிய தொழிலாளர்களிடையே விரக்தியையும் உருவாக்குகிறது.
தயாரிப்பு அல்லது உதிரிப்பாக ஆலை தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பதற்குப் பதிலாக, பெயினும் UAW அதிகாரத்துவமும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸில் மட்டும் உதிரிப்பாக விநியோக மைய தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைத்தனர். PDCs, என்று அழைக்கப்படும் இந்த மையங்கள், தரகர்களுக்கு விநியோகம் செய்யும் வாகன விநியோக சங்கிலியின் கடைசியில் சந்தைக்குப் பிந்தைய வசதிகளாகும்,
PDCs இல் வேலைநிறுத்தம் மூன்று பெரிய ஆலை உற்பத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. “போர்டு உடனான உண்மையான முன்னேற்றத்தை” மேற்கோள் காட்டி, போர்டின் PDCs க்களில் எந்த வேலைநிறுத்தங்களும் இருக்காது என்றும் பெயின் கூறினார்.
அமெரிக்க எல்லைக்கு வடக்கே ஒரு வேலைநிறுத்தத்தை தடுப்பதற்காக போர்டு உடனான கனேடிய தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கடைசி நிமிட உடன்பாட்டைக் கருத்தில் கொண்டால் இது குறிப்பிடத்தக்கதாகும். தொழிலாளர்களுக்கு இந்த உடன்படிக்கை பற்றி எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை மற்றும் இந்த வார இறுதியில் அதன் மீது வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயினின் அறிவிப்புக்குப் பின்னர், அதாவது UAW உற்பத்தியைத் தொடரும் என்ற செய்திகளுக்கு மூன்று பெரிய ஆலைகள் அவற்றின் நிதி ஆதரவாளர்கள் சாதகமான பதிலை அளித்ததாக CNBC குறிப்பிட்டது: “வோல் ஸ்ட்ரீட் பகுப்பாய்வாளர்கள் உள்ளிட்ட பலர், நிறுவனங்களின் இலாபத்திற்கு முக்கியமான டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களின் முழு அளவிலான டிரக் ஆலைகளுக்கு வேலை நிறுத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்த்தனர்.”
UAW அதிகாரத்துவமானது, போர்டின் PDCs களில் வேலை நிறுத்தம் செய்யாது என்று அறிவித்ததன் மூலம், போர்டு ஊதியங்கள் குறித்து என்ன வழங்குகிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் தொழிலாளர்களுக்கு பெயின் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, போர்டு இலாபப் பகிர்வை பராமரிக்கும் என்றும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு “வருமான பாதுகாப்பை” வழங்கும் என்றும் பெயின் கூறினார்…
இந்த மாற்றத்தின் மூலம் நிறுவனம் தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்ற உண்மையை மறைக்க வெறும் சர்க்கரை பூசுவதாகும். போர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் பார்லி இந்த ஆண்டின் தொடக்கத்தில், “எங்களிடம் சில இடங்களில் மிக அதிகமானவர்கள் உள்ளனர், அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
போர்டு 2009 வாழ்க்கைச் செலவு சரிசெய்தல் (COLA) என்ற சூத்திரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்றும் பெயின் கூறினார். ஆனால் விவரங்களில் தான் பிசாசு இருக்கிறது. தற்காலிக தொழிலாளர்களை 90 நாட்களுக்குப் பிறகு பணியில் அமர்த்துவது என்பது தற்போதைய தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவருக்கும் பொருந்துமா என்பதை பெயின் குறிப்பிடவில்லை. 2021 ஜோன் டீர் வேலைநிறுத்தத்தின் போது, (COLA) கோலாவை வென்றதாக UAW அறிவித்தது, ஆனால் பணவீக்கத்தை சமாளிக்க இந்த சூத்திரம் போதுமானதாக இல்லை என்பதை தொழிலாளர்கள் பின்னர் அறிந்து கொண்டார்கள்.
தயாரிக்கும் ஒன்று கூட்டு ஆலைகள் அனைத்து பெரிய மூன்று ஆலைகளுக்கும் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்ற பெயினின் உத்தரவுக்கு பல தொழிலாளர்கள் கோபத்துடன் பதிலளித்தனர்.
போர்டின் கன்சாஸ் நகர தயாரிப்பு ஒன்று கூட்டும் ஆலையின் ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார், “இது ஒரு மோசமான பேச்சு, கார்ப்பரேட் மற்றும் UAW அதிகாரத்துவம் இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.”
இதர தொழிலாளர்கள் பெயினின் முகநூல் நேரலையில் கருத்து தெரிவித்தனர்: “அவர் போர்டு நிறுவதனத்தை இன்னும் ஒரு வாரம் சுவாசித்து வாழ அனுமதித்துள்ளார். ... போர்டு இன்னும் கார்ப்பரேட் பேராசையைக் கொண்டுள்ளது மற்றும் நாங்கள் இருக்க வேண்டிய வழியில் ஊதியம் பெறுவதை எதிர்க்கிறது ... ம்ம்ம்ம்.” “தயாரிப்பு ஆலைகள் எங்கே????” “இப்போது தயாரிப்பு ஒன்று கூட்டு வரிசை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தள்ளப்படுவார்கள்.
தனது அறிவிப்பின் போது, தொழிலாளர்கள் வேலையில் இருப்பதை உறுதி செய்வதில் பெயின் முக்கியமாக அக்கறை காட்டினார். “உங்களில் அதிகமானோர் நடக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்,” என்று கூறிய அவர், “எங்களுடன் ஒட்டி இருங்கள் மற்றும் தயாராக இருங்கள்” என்று தொழிலாளர்களை மன்றாடினார்.
“உறுப்பினர்கள் வேலையில் வலுவாக நிற்பதைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,” தொழிலாளர்கள் “வலுவாக நிற்கிறார்கள்” என்ற பொய்யை பெயின் ஊக்குவிக்கும் அதே சமயம், UAW அதிகாரத்துவம் பெருநிறுவனங்கள் இலாபங்களை இறைப்பதற்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை சேமித்து வைப்பதற்கும் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்ய அவர்களை கட்டாயப்படுத்துகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு ஆர்ப்பாட்ட மறியல் வரிசையைப் பார்வையிடுமாறு பெயின் ஒரு நட்பு அழைப்பை விடுத்தார். இருப்பினும் இது கார்ப்பரேட் சார்பு ஜனநாயகக் கட்சியின் மீது பிரமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பகட்டான வீரியம் தவிர வேறொன்றுமில்லை. 100,000 இரயில்வே தொழிலாளர்கள் முன்னர் நிராகரித்திருந்த ஒரு காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை வலிந்து திணிப்பதற்காக ஒரு சாத்தியமான இரயில்வே வேலைநிறுத்ததை சட்டவிரோதமாக்க பைடனும் காங்கிரஸும் கடந்த ஆண்டு தலையிட்டனர்.
UAW தொழிற்சங்க அதிகாரத்துவமும் கூட்டாட்சி அரசாங்கமும் சாமானிய தொழிலாளர்களின் இயக்கத்தை நசுக்க சதி செய்வதால், வேலைநிறுத்தம் நாடு முழுவதும் பெரிய மூன்று ஆலைகளில் விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசரமாக அவசியமாகிறது. புதனன்று, வாகனத் தொழிலாளர் சாமானியர் குழு வலையமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், வாகனத் தொழில்துறை முழுவதும் ஒரு முழு வேலைநிறுத்தத்தைக் கோரும் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும், வாக்களிப்பதற்கும் ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் முழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.