மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போர் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்ற வளர்ந்து வரும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா புதன்கிழமை அமெரிக்க அணு ஆயுதங்களை நாட்டில் நிலைநிறுத்துவது பற்றி வாஷிங்டனுடன் பேசியதாக கூறினார்.
போலந்து 120 மைல் எல்லையை ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியுடன் பகிர்ந்து கொள்கிறது.
'எங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதே முதல் பிரச்சனை' என்று கஸெட்டா போல்ஸ்காவிற்கு டுடா கூறினார். “அணுசக்தி பகிர்வு திட்டத்தில் பங்கேற்க எப்போதும் சாத்தியமான வாய்ப்பு உள்ளது. இந்த சாத்தியத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறதா என்பது குறித்து அமெரிக்க தலைவர்களிடம் பேசினோம்.”
கியேவில் உள்ள அதிகாரிகள் பொட்டாசியம் அயோடின் மாத்திரைகளை —அணு வெடிப்பிலிருந்து கதிர்வீச்சு வெளிப்பாட்டிலிருந்து பாதுகாக்கப் பயன்படும்— நகரம் முழுவதும் உள்ள வெளியேற்றும் மையங்களில் விநியோகிக்கத் தொடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வியாழக்கிழமை, சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களம் அறிவித்தது 'கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளில் பயன்படுத்துவதற்காக' 290 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள Nplate ஐ வாங்கியுள்ளது.
தேசிய சுகாதார நிறுவனங்களின் கருத்துப்படி, Nplate 'ஒரு பேரழிவு நிகழ்வு மக்களை அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாக்கினால் கிடைக்கும் மருத்துவ எதிர் நடவடிக்கைகளின் கருவிப்பெட்டியை விரிவுபடுத்தியுள்ளது. அத்தகைய நிகழ்வு, அணு வெடிப்பு, அணு உலையில் விபத்து, கதிரியக்க சிகிச்சை விபத்து அல்லது கதிரியக்கக் கழிவுகள் வெளியேறுவது' போன்றவையாக இருக்கலாம்.
இந்த வார தொடக்கத்தில், டைம்ஸ் ஆஃப் லண்டன் தெரிவித்தது
உக்ரேன் எல்லையில் அணு ஆயுத சோதனை மூலம் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி புட்டின் நிரூபிக்க உள்ளார், நேட்டோ அதன் உறுப்பினர்களை எச்சரித்ததாக நம்பப்படுகிறது.
அறிக்கை தொடர்ந்தது,
நேட்டோ, அதன் உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு உளவுத்துறை அறிக்கை ஒன்றை அனுப்பியதாக ஆதாரங்கள் கூறுகின்றன, ரஷ்யா தனது அணுசக்தி திறன் கொண்ட டோர்பிடோ ட்ரோன் போஸிடான் (torpedo drone Poseidon) ஐ ஒருவேளை அது கட்டுப்படுத்தும் கருங்கடலில் சோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் ஒரு பதிலுக்கான சாத்தியமான காட்சிகளை வரையும்போது, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் K-329 பெல்கொரோட் ஆர்க்டிக்கிற்குச் செல்கிறது என்று நேட்டோ அறிவித்ததாகக் கருதப்படுகிறது, இது ஜூலை மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.
கூடுதலாக, அணு ஆயுதங்களுக்குப் பொறுப்பான ரஷ்ய ஆயுதப்படைகளின் பிரிவால் இயக்கப்படும் ஒரு இரயில் போர்முனையை நோக்கி முன்னேறுவதைக் கண்டதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திங்களன்று, பின்னணிச்சூழல் தொடர்பான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அந்த அறிக்கைகள் குறித்து கேட்டபோது, பென்டகன் செய்தித் தொடர்பாளர் அறிக்கைகளை பார்த்ததை உறுதிப்படுத்தினார், ஆனால் அவை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உக்ரேனிய முன்னேற்றங்களை எதிர்கொண்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கிய நிலையில், உக்ரேன் தனது தாக்குதலை முன்னணியின் பெரும்பகுதிகளில் தொடர்ந்ததால், அணுசக்தி அதிகரிப்பு பற்றிய பெருகிய எச்சரிக்கைகள் வந்துள்ளன.
முதன்முறையாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்ய வரிசையின் ஸ்திரமின்மையை ஒப்புக்கொண்டார், நிலைமை 'ஸ்திரப்படுத்தப்படும்' என்று தான் எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
'புதிய பிராந்தியங்களின் நிலைமை உறுதிப்படுத்தப்படும் என்ற அனுமானத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்' என்று புட்டின் கூறினார்.
புதன், புட்டின் நான்கு உக்ரேனிய மாகாணங்களை ரஷ்யா இணைப்பதை உறுதிப்படுத்தும் நான்கு சட்டங்களில் கையெழுத்திட்டார், ரஷ்ய அதிகாரிகளால் அவர்கள் எந்த பிரதேசத்தை இணைத்தார்கள் என்பதை சரியாக விளக்க முடியவில்லை.
உக்ரேனிய அதிகாரிகள், கடந்த மாதம் முதல் ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவைக் கைப்பற்றியதாகவும், சமீபத்திய நாட்களில் டஜன் கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.
'வடகிழக்கு மற்றும் தெற்கு முனைகளில் உக்ரேன் தாக்குதல் நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறது' என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “வடகிழக்கில், கார்கிவ் பிராந்தியத்தில், உக்ரேன் இப்போது ஓஸ்கில் ஆற்றின் (Oskil River) கிழக்கே ஒரு கணிசமான நிலப்பரப்பை ஒருங்கிணைத்துள்ளது.”
உக்ரேனியப் படைகள் தங்கள் தாக்குதலை லுஹான்ஸ்க் மாகாணத்திற்குள் நகர்த்துவது போல் தோன்றியது. 'லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஆக்கிரமிப்பு நீக்கம் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக தொடங்கிவிட்டது' என்று உக்ரேனிய பிராந்திய லுஹான்ஸ்க் அரசாங்கத்தின் தலைவரான செர்ஹி ஹைடாய் டெலிகிராமில் எழுதினார்.
ரஷ்யாவின் அணிதிரட்டல் இயக்ககத்தில் தொடர்ச்சியான 'திருத்தங்களை' செய்ததாகவும் புட்டின் அறிவித்தார், பரந்த அளவிலான மாணவர்களை அழைப்பதில் இருந்து விலக்கு அளித்தார்.
உக்ரேன் 'வெற்றி பெறும்' என்று இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் புதன்கிழமை அறிவித்தார். அவர் கூறினார், “எங்கள் உக்ரேனிய நண்பர்களுடன் நாங்கள் நிற்போம், எவ்வளவு நேரம் எடுத்தாலும். உக்ரேன் வெல்ல முடியும். உக்ரேன் வெல்ல வேண்டும். உக்ரேன் வெற்றி பெறும்.”
இந்த அறிக்கையானது டொன்பாஸ் மற்றும் கிரிமியா அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கான உக்ரேனின் கூறப்பட்ட நோக்கத்திற்கு ஒப்புதல் அளிப்பதாகத் தோன்றியது.
ரஷ்ய படைகள் பின்வாங்குவதைத் தொடர்ந்தாலும், கியேவுக்கு தெற்கே 50 மைல் தொலைவில் கமிகேஸ் ட்ரோன்களின் (kamikaze drones) திரளைப் பயன்படுத்தி ரஷ்யா ஒரு தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய படைகளுக்கு வளர்ந்து வரும் தோல்வியின் மத்தியில், அமெரிக்க அதிகாரிகள் மோதலில் தங்கள் தலையீட்டின் குறிக்கோள்களைக் கூறுவதில் மிகவும் வெளிப்படையாக உள்ளனர்.
ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி பிரிட்டிஷ் டெலிகிராப்பிடம், 'கிரிமியாவை உக்ரேன் மீண்டும் கைப்பற்றுவது இப்போது ஒரு தனித்துவமான சாத்தியமாகும், இனி அதை உதாசீனம் செய்ய முடியாது' என்று கூறினார்.
அவர் தொடர்ந்தார், 'முக்கிய நிலைகளை பாதுகாக்கும் திறனோ அல்லது மன உறுதியோ ரஷ்யாவிற்கு இனி இல்லை என்பது தெளிவாகிறது, மேலும் உக்ரேனியர்கள் கெர்சனை மீண்டும் கைப்பற்றும் இலக்கில் வெற்றி பெற்றால், அது இறுதியில் கிரிமியாவை மீண்டும் கைப்பற்ற முடியும் என்பதற்கான உண்மையான வாய்ப்பு உள்ளது.”
இதற்கிடையில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் முன்னாள் ஐ.நா. தூதரும், டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஜோன் போல்டன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தின் மறைமுகமான இலக்கை முறையாக தெரிவிக்குமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
'ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் இல்லாமல் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நீண்ட கால வாய்ப்பு இல்லை' என்று போல்டன் ஒரு இணையவழி பத்திரிகைக்கான ஒரு கட்டுரையில் எழுதினார், 'முழு ஆட்சியும் செல்ல வேண்டும்' என்று அறிவித்தார்.
மார்ச் மாதம் பைடென் விடுத்த, புட்டினை வெளியேற்றுவதற்கான அழைப்பை போல்டன் பாராட்டினார், மேலும் பைடெனின் கருத்தில் இருந்து தன்னை விலக்கி இருக்க வெள்ளை மாளிகை மேற்கொண்ட முயற்சிகளை கண்டித்தார்.
போல்டன் எழுதினார், “ஏன் கோபம்? ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் இல்லாமல் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நீண்டகால வாய்ப்பு இல்லை. ரஷ்யர்கள் ஏற்கனவே வெளிப்படையான காரணங்களுக்காக அமைதியாக விவாதிக்கின்றனர். அமெரிக்காவிற்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினை தங்களுக்கு முன் இல்லை என்று பாசாங்கு செய்வது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.”
அவர் தொடர்ந்தார், “ஆட்சி மாற்றத்தைத் தொடர ரஷ்ய எதிர்ப்பாளர்களுக்கு கவனமாக உதவுவதுதான் தீர்வாக இருக்கும். ரஷ்யா, வெளிப்படையாக ஒரு அணுசக்தி சக்தியாகும், ஆனால் அது உக்ரேனிய தற்காப்புக்கு உதவுவதை விட ஆட்சி மாற்றத்தை நாடுவதற்கு எதிரான வாதமல்ல.”
போல்டன் மேலும் கூறுகையில், 'இது புட்டினை மாற்றுவதை விட மிக அதிகமாக இருக்க வேண்டும். அவரது உள் வட்டத்தில், பல சாத்தியமான மோசமான வாரிசுகள் இருப்பார்கள். பிரச்சனை ஒரு மனிதர் அல்ல, ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட கூட்டுத் தலைமை. கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் நிகிதா குருஷ்சேவ் ஓய்வு பெற்றதைப் போன்ற ஒரு பொலிட்பீரோ மாற்றத்தை ஏற்படுத்தக் கூட எந்தவொரு சிவில் அரசாங்க கட்டமைப்பும் அங்கு இருக்கக்கூடாது. முழு ஆட்சியும் செல்ல வேண்டும்.”
அவர் முடித்தார், 'இது கேர்னல்கள் மற்றும் ஒரு-நட்சத்திர ஜெனரல்கள் மற்றும் அவர்களின் சிவிலியன்-ஏஜென்சிக்கு சமமானவர்கள் [ரஷ்யாவில்], பெரும்பாலும் சக-சதிகாரர்கள் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள [வருவார்கள்].'