நியூ யோர்க் டைம்ஸ், போர்க்குற்றங்கள் மற்றும் நூரெம்பேர்க் முன்னோடி

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில்வெளியிடப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்றைய நியூ யோர்க் டைம்ஸின் தலையங்க கட்டுரையான, “உக்ரேனில் உள்ள போர்க் குற்றங்களை ஆவணப்படுத்து”, நாஜித் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டி, தண்டனை வழங்கிய 1946 நூரெம்பேர்க் நீதிமன்றம் தொடர்பாக தாமதமாக கவனத்தை ஈர்க்கிறது. ஒரு ஆக்கிரமிப்புப் போரை ஒரு சர்வதேச குற்றம் என்ற நீதிமன்றத்தின் பின்வரும் வரையறையை அது மேற்கோள் காட்டுகிறது:

“ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவது, சர்வதேசக் குற்றம் மட்டுமல்ல; இது ஒரு உச்சபட்ச சர்வதேச குற்றமாக மற்ற போர்க்குற்றங்களில் இருந்து வேறுபடுவது எதனால் என்றால், அது தன்னில் உள்ளடக்கியுள்ள முற்றுமுழுதான மூர்க்கத்தனத்தையும் அதனுடன் கொண்டு வருகின்றது”.

2004 இல், டிரினிட்டி கல்லூரியில் நடந்த விவாதத்தில், புஷ், செனி, ரம்ஸ்பீல்ட், பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயர் மற்றும் பலர் ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியதற்காக போர்க் குற்றவாளிகள் என்று சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நூரெம்பேர்க் விசாரணையை மேற்கோள் காட்டினேன்.

டேவிட் நோர்த் அக்டோபர் 14, 2004 அன்று அயர்லாந்தின் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பேசுகிறார்.

கடந்த 30 ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களின் போது, நூரெம்பேர்க் முன்னுதாரணத்தை டைம்ஸ் புறக்கணித்துள்ளது. அது இப்போது புட்டினுக்கு எதிராக இந்த முன்னுதாரணத்தை எடுத்துரைத்து, சர்வதேச சட்டங்கள் பற்றிய ஊடகங்களின் அணுகுமுறை அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நலன்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

புட்டினுக்கு எதிராக ஒரு வழக்கு இருக்கலாம். ஆனால் பல அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் (அதாவது, ஹிலாரி கிளிண்டன்) ஆகியோரின் மிகவும் அப்பட்டமான குற்றத்தை புறக்கணித்து, 'ஆக்கிரமிப்புப் போருக்கு' புட்டினை பொறுப்பேற்க வைப்பது ஒரு சட்டபூர்வ கேலிக்கூத்தாக இருக்கும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மேலும், ஆக்கிரமிப்புப் போரை நடத்தியதாக புட்டின் மீது குற்றம் சாட்டப்பட்டால், உக்ரேனை பாரியயளவில் ஆயுதமயப்படுத்தி, அமெரிக்க மற்றும் நேட்டோ தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு சட்டவிரோத பினாமிப் போரைத் தூண்டிவிட்டதாகவும், நடத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படலாம்.

டைம்ஸ் மேலும் குறிப்பிடுகிறது: “புச்சாவில் நடந்த அட்டூழியங்கள் அனைத்தும் அரங்கேற்றப்பட்டவை என ரஷ்யா கூறுகிறது. ரஷ்யர்கள் அல்லது அவர்களின் ஒத்துழைப்பாளர்களுக்கு எதிராக உக்ரேனிய துருப்புக்கள் செய்த அட்டூழியங்களின் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடிப்பார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு முழுமையான கணக்கெடுப்பை நடத்துவததாகும்'.

மோதலின் இரு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் மற்றும் குற்றச்சாட்டுகள் கவனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற இந்த ஒப்புதலளித்தல், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் ரஷ்யாவைக் கண்டிக்கும் அலைக்கு விதிவிலக்காகும்.

***

லெபனானின் பெய்ரூட்டில் உள்ள சப்ரா மற்றும் ஷாட்டிலா அகதிகள் முகாம்களில் இருந்த மூவாயிரத்து ஐந்நூறு பாலஸ்தீனிய அகதிகள் செப்டம்பர் 1982 இல் படுகொலை செய்யப்பட்டனர். பெய்ரூட்டை ஆக்கிரமித்த இஸ்ரேலிய இராணுவம், பாசிஸ்டுகளை முகாம்களுக்குள் நுழையவிட்டு, கொலைகள் நடக்க அனுமதித்தது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

லெபனானின் பெய்ரூட்டில் உள்ள சப்ரா மற்றும் ஷாட்டிலா அகதிகள் முகாம்களில் 3500 பாலஸ்தீனிய அகதிகள் செப்டம்பர் 1982 இல் படுகொலை செய்யப்பட்டனர். பெய்ரூட்டை ஆக்கிரமித்த இஸ்ரேலிய இராணுவம், பாசிஸ்டுகளுக்கு முகாம்களுக்குள் நுழைய அனுமதி அளித்து, கொலைகள் நடக்க அனுமதித்தது. 1/

ஒரு உத்தியோகபூர்வ விசாரணையில், இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோன் இந்த படுகொலைகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று கண்டறியப்பட்டது. அவர் தனது பதவியை இராஜினாமா செய்தாலும், ஷரோன் அரசாங்கத்தில் இருந்தார். ஒருபோதும் இதற்கான சட்டபூர்வமாக பொறுப்பேற்காததுடன், ஷரோன் பின்னர் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக ஆனார்.

அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் எண்ணிலடங்கா போர்க்குற்றங்களுக்கு அனுமதி அளித்து நேரடியாகச் செயற்பட்டிருக்கிறார்கள். போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் பிரதிபலிப்பான அவை கண்டிக்கப்படுவது அல்லது நியாயப்படுத்தப்படுவது அல்லது புறக்கணிக்கப்படுவது என்பவை அரசியல் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

Loading