மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
திங்களன்று, பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் COVID-19 பெருந்தொற்றின் முதல் இரண்டு ஆண்டுகளில் சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியை ஆவணப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டது.
அறக்கட்டளையின் கண்டுபிடிப்புகள் அறிக்கையின் தலைப்பில் சுருக்கப்பட்டுள்ளன: 'சமத்துவமின்மை கொல்கிறது.'
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மறுக்க முடியாத ஒரு யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது: முற்றிலும் பில்லியனர் செல்வவளத்திற்கான ஒரு புதிய வைரஸ் வகை என்று அது எதைக் குறிப்பிடுகிறதோ அந்த “கோவிட்-19 வைரஸ் அபாயகரமாக உருமாறுவதற்கான நிலைமைகளை அனுமதித்துள்ள” அரசாங்க கொள்கைகளைச் சர்வதேச அளவில் ஏற்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளுடன் நேரடியாக இணைத்துக் காட்டுகிறது.
இந்த 'பில்லியனர் வகையின்' அதிகரிப்பு “நம் உலகிற்கு ஆழமாக அபாயகரமானது' என்று குறிப்பிடும் பிரிட்டனை மையமாக கொண்ட, மிதமான முதலாளித்துவச் சீர்திருத்தத்தை நோக்கமாக கொண்ட, அந்த அறக்கட்டளையால், இந்த ஒட்டுண்ணித்தனமான நிதியியல் தன்னலக்குழு தான் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதிருக்கும் நோய் என்பதைக் குறித்து பேச முடியாது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை எதை நிரூபிக்கிறது என்றால்: இந்த பெருந்தொற்று ஆளும் உயரடுக்குக்குப் பாரியளவில் இலாபகரமாக ஆகியுள்ளதை நிரூபிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதனால் தான் அதை தடுக்க அவர்களுக்கு எந்த உத்தேசமும் இல்லை.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உலகளாவிய சமத்துவமின்மையை மிகவும் கூர்மையான வார்த்தைகளில் சித்தரிக்கிறது. “இந்த பெருந்தொற்று தொடங்கிய பின்னர் ஒவ்வொரு 26 மணி நேரத்திற்கும் ஒரு புதிய பில்லியனரை உருவாக்கி உள்ளது. உலகின் மிகப் பெரிய 10 பணக்காரர்கள் அவர்களின் சொத்துக்களை இரட்டிப்பாக்கி உள்ளனர், அதேவேளையில் 160 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது. இதற்கிடையே, 17 மில்லியன் பேர் கோவிட்-19 ஆல் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது—இந்தளவுக்கான இழப்புகள் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கண்டதில்லை.”
ஆக்ஸ்ஃபம் கூறுகிறது, “உலகின் 2,755 பில்லியனர்களின் ஒரு சிறிய உயரடுக்கு மொத்தம் கடந்த பதினான்கு ஆண்டுகளில் அதிகரித்ததை விட கோவிட்-19 இன் போது மிகவும் அதிகமாக தங்கள் சொத்துக்கள் அதிகரிப்பதைக் கண்டுள்ளது—அந்த பதினான்கு ஆண்டுகளே கூட பில்லியனர் செல்வவளத்திற்கான ஒரு வெகுமதியாக இருந்தவை தான்.”
பின்னர் அது பில்லியனர் செல்வவள திரட்சியின் முன்பில்லா அளவையும் வாய்ப்புவளங்களையும் வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்துகிறது. “ஆவணங்களில் பதிவு செய்ய தொடங்கியதில் இருந்து, இதுவே பில்லியனர் செல்வவளத்தில் மிகப் பெரிய வருடாந்தர அதிகரிப்பாகும். இது ஒவ்வொரு கண்டத்திலும் நடந்து வருகிறது. விண்ணை முட்டும் பங்குச் சந்தை விலைகளின் அதிகரிப்பு, நெறிமுறைப்படுத்தப்படாத அமைப்புகளின் வளர்ச்சி, ஏகபோக அதிகார வளர்ச்சி, தனியார்மயமாக்கல், அத்துடன் சேர்ந்து தனிநபர் பெருநிறுவன வரி ஏய்ப்புகள் மற்றும் நெறிமுறை மீறல்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கூலிகள் குறைப்பு ஆகியவை இதற்கு உதவி உள்ளது—இனவாதத்தை ஆயுதமயப்படுத்தியமை இவை அனைத்துக்கும் உதவியது.”
இதற்கும் கூடுதலாக, அந்த அறிக்கை தொடர்கிறது:
1995 இல் இருந்து, உலகளாவிய செல்வவளத்தின் வளர்ச்சியில் இந்த உயர்மட்ட 1சதவீதத்தினர் மனிதகுலத்தின் அடிமட்டத்திலுள்ள மொத்த 50 சதவீதத்தினரை விட 19 மடங்கு அதிகமாக கைப்பற்றி உள்ளனர். சமத்துவமின்மை இப்போது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் உச்சத்தில் இருந்த அந்தளவுக்கு மிகப் பெரியளவில் உள்ளது. செல்வவளம் கொழித்த 19 நூற்றாண்டு இறுதி காலம் முடிந்துவிட்டது.
நிதிய உயரடுக்கு இந்த பெருந்தொற்றை வரலாற்றிலேயே பில்லியனர்களுக்கான மிகப்பெரிய செல்வவள அதிகரிப்பாக எதைக் கொண்டு மாற்றியதோ அந்த இயங்குமுறையையும் ஆக்ஸ்ஃபம் அறிக்கை அம்பலப்படுத்துகிறது, “கோவிட்-19 பரவியதும், உலக பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில், மத்திய வங்கிகள் உலகெங்கிலும் பொருளாதாரங்களுக்குள் ட்ரில்லியன் கணக்கில் பணத்தைப் பாய்ச்சின. அந்த பணப்பொதிகளில் பெரும்பான்மை நிதியியல் சந்தைகளுக்குள் சென்றுள்ளது, அங்கிருந்து அது பில்லியனர்களின் நிகர மதிப்பாக மாறியுள்ளது. இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பின்னர் இருந்து அரசாங்கங்கள் உலகளாவிய பொருளாதாரத்திற்குள் 16 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சின, அதன் மிகப்பெரும் விளைவாக, பில்லியனர்கள் 5 ட்ரில்லியன் அளவில் தங்களின் செல்வவள அதிகரிப்பைக் கண்டுள்ளனர், அரசாங்க தலையீடு பங்கு விலைகளை அதிகரித்துள்ளதால், மார்ச் 2021 இல் இருந்து அது 8.6 ட்ரில்லியன் டாலரில் இருந்து 13.8 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.”
மிகப்பெரும் செல்வந்தர்களால் நடத்தப்படும் அரசாங்கங்கள் பலரின் உயிர்களையும் வாழ்வையும் விலையாக கொடுத்து வெகு ஒரு சிலருக்கு ஆதாயமான முடிவுகளை எடுத்துள்ளன என்பதையே இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. மக்கள் மீதான இத்தகைய கொள்கைகளின் பாதிப்பை 'சமத்துவமின்மையால் ஏற்பட்ட மரணங்கள்' என்று குறிப்பிட்டு ஆக்ஸ்ஃபம் கூறுகையில், அதன் அறிக்கை 'சமத்துவமின்மை என்பது வார்த்தையளவிலான பிரச்சினை என்ற கருத்தை அல்லது அது ஏதோவிதத்தில் தவிர்க்கவியலாதது என்ற கருத்தை' நேரடியாக சவால்விடுப்பதாக தெரிவிக்கிறது.
சமத்துவமின்மை என்பது பில்லியனர்கள் மற்றும் அவர்கள் கட்டுப்படுத்தும் அரசாங்கங்கள் பின்பற்றும் ஒரு திட்டமிட்ட கொள்கை என்றும், இந்த பெருந்தொற்றின் போது வறுமை, பட்டினி மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளின் அதிகரிப்பே இதற்கான ஆதாரம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. “அதீத சமத்துவமின்மை என்பது ஒரு வடிவம் இதை இந்த ஆவணம் 'பொருளாதார வன்முறை' என்று விவரிக்கிறது—மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களுக்கு அனுகூலமாக வகுக்கப்படும் கட்டமைப்புரீதியான மற்றும் அமைப்புரீதியான கொள்கை மற்றும் அரசியல் விருப்பத்தெரிவுகள் உலகெங்கிலும் பரந்த பெரும்பான்மை மக்களை நேரடியாக பாதிக்கிறது.”
இந்த பெருந்தொற்று உலகெங்கிலும் கூர்மையாக வறுமை அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது, ஆக்ஸ்ஃபம் கூறுகிறது, “இந்த பெருந்தொற்று தொடங்கிய போது இருந்ததை விட இப்போது நாளொன்றுக்கு 5.50 டாலருக்கும் குறைவாக தொகையில் 163 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. வறுமை மற்றும் பாதுகாப்பின்மையிலிருந்து நிரந்தரமாக வெளியேற முடியாது என்பதாக, மனிதகுலத்தின் பெரும்பான்மையினருக்கு, இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது. அதற்குப் பதிலாக, தற்காலிகமாக இருந்தாலும், அதிகபட்சம், இன்னும் ஆழமாக பாதிக்கப்படக்கூடிய ஒரு கால இடைவெளி வந்துள்ளது.”
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் Credit Suisse அமைப்பு ஆகியவற்றின் உத்தேச மதிப்பீடுகள் என்ன காட்டுகின்றன என்றால்,
“வறுமை மட்டங்கள் ஏறக்குறைய 2030 வரையிலும் கூட நெருக்கடிக்கு முந்தைய மட்டங்களுக்குத் திரும்பாது. வறுமை அளப்பரிய துயரங்களை மட்டும் உருவாக்குவதில்லை. வறுமை கொல்கிறது. பெரிதும் பொருளாதார வன்முறை வடிவமாக உள்ள அது, உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் சாதாரண மக்களைப் பில்லியனர்களுக்கு எதிராக வழி நடத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும், மிகவும் வறிய மக்கள் குறைந்த காலமே உயிர் வாழ்கிறார்கள், அவர்கள் வறுமையில் இல்லாதவர்களை விட முன்கூட்டியே இறப்பைச் சந்திக்கிறார்கள்,” என்று ஆக்ஸ்ஃபம் அறிவிக்கிறது.
உலகளவில் பெருந்திரளான மக்கள் தற்போது முகங்கொடுக்கும் பேரழிவு தற்செயலானதில்லை மாறாக நிதி வழங்கல் மற்றும் தடுப்பூசிகளின் வினியோகம் உட்பட நனவுப்பூர்வமான அரசாங்க கொள்கையின் விளைவாகும், “நம் பொருளாதாரங்களுக்குள் பாய்ச்சப்பட்ட, மக்கள் பணத்தில் மிகப் பெரிய தொகை, பங்கு விலைகளை வேகமாக ஊதிப் பெரிதாக்கி உள்ளன, இதன் விளைவாக பில்லியனர்களின் வங்கி கணக்குகள் முன்னெப்போதையும் விட அதிகமாக ஊதிப் பெரிதாகின. பொது பணத்திலிருந்து தடுப்பூசிகளுக்காக பாய்ச்சப்பட்ட பெரும் தொகைகளால், பத்து பில்லியன் கணக்கான டாலர் அளவில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் இலாபங்கள் அதிகரித்துள்ளன,” என்று மீண்டுமொருமுறை அந்த அறிக்கை அறிவிக்கிறது.
உலகளவில் சமநிலையற்ற தடுப்பூசி வினியோகத்தை 'நம் உயிரினங்களின் வரலாற்றில் படிந்த கரை,” என்று குறிப்பிட்ட ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, “சமத்துவமின்மையின் காரணமாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஈடுபாட்டுடன் கொடியதாகவும், மிகவும் நீண்ட காலத்திற்குரியதாக, வாழ்க்கைக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக ஆக்கப்பட்டுள்ளது. வயதாகி இறப்பதை விட கோவிட்-19 ஆல் இறப்பது என்பது வருவாய் சமத்துவமின்மையின் பலமான அறிகுறியாகும். தடுப்பூசி கிடைத்திருந்தால் மில்லியன் கணக்கானவர்கள் இப்போது உயிர் வாழ்ந்திருப்பார்கள்—ஆனால் அவர்கள் இறந்துவிட்டார்கள், பெரிய மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்கள் மீது ஏகபோக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த தடுப்பூசி ஒதுக்கீட்டுக் கொள்கை உயிரைப் பறித்து வருகிறது, இது உலகெங்கிலும் சமத்துவமின்மைகளை அளப்பரியளவில் மின்னூட்டம் செய்து வருகிறது.”
ஆக்ஸ்ஃபம் அறிக்கை என்ன காட்டுகிறது? ஜூலை 2020 இல் உலக சோலிச வலைத்தளம் எதை 'சமத்துவமின்மை பெருந்தொற்று' என்று பெயரிட்டதோ அது தெளிவான உண்மை என்பதையே அது எடுத்துக்காட்டுகிறது. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட இறப்புகள் ஒரு நோய்வாய்ப்பட்ட சமூக ஒழுங்கின் துணைவிளைவாகும், இந்த சமூக ஒழுங்கு பாரியளவில் மற்றும் வரலாற்றுரீதியில் முன்பில்லாத சமூக சமத்துவமின்மையால் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.
2020 இன் தொடக்கத்தில் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, அமெரிக்காவின் தலைமையில், உலகெங்கிலுமான அரசாங்கங்களின் விடையிறுப்பு பாரியளவில் நிதிய தன்னலக் குழுவைச் செல்வ செழிப்பாக்குவதற்காக இருந்துள்ளது. முதலாளித்துவத்தின் சமூக ஒழுங்கு உயிர்களை விடத் தொடர்ந்து தனியார் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது, இந்த கொடிய பில்லியனர் உயரடுக்கின் வளர்ச்சியானது இந்த பெருந்தொற்றுக்கு விஞ்ஞானரீதியில் வேரூன்றிய விடையிறுப்புக்கும் வேறெந்த தெளிவான அறிவார்ந்த விடையிறுப்புக்கும் ஒரு தடையாக உள்ளது.
இந்த வைரஸ் 'பரவும் திறன் மற்றும் நோய்தொற்றுகள் மூலம் வழங்கும் நோயெதிர்ப்பு சக்தியை' வைத்து பார்த்தால், 2022 ஆம் 'ஆண்டு உண்மையில் பெருந்தொற்று என்பதில் இருந்து நாம் பகுதிசார் தொற்றுநோய்க்குச் செல்லும் ஆண்டாக' இருக்குமா என்று அமெரிக்க ஜனாதிபதி பைடெனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசியிடம் இன்று உலக பொருளாதார பேரவையின் கேட்கப்பட்ட போது, இந்த அடிப்படை உண்மை காட்சிக்கு வந்தது, “அவ்விதமாக தான் இருக்குமென நான் நம்புகிறேன்...” என்று ஃபாசி தெரிவித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த பெருந்தொற்று குறித்து முன்னணி அமெரிக்க மருத்துவ அதிகாரிகளின் கருத்துப்படி, அரசாங்கத்தின் கொள்கை தொடர்ச்சியான என்றும் நீடிக்கும் ஒரு பெருந்தொற்று கொள்கையாக உள்ளது, அது இந்த வைரஸைப் பகுதிசார் தொற்றுநோயாக ஆக அனுமதிப்பதுடன், மக்களிடையே தொடர்ந்து பரவவும், நோய்தொற்று ஏற்படுத்தி, பாரியளவில் உயிர்களைக் கொல்லவும் அனுமதிப்பதாக உள்ளது.
இந்த பெருந்தொற்று ஆளும் வர்க்கத்தால் இலாபகரமாக பார்க்கப்படுகிறது என்பது முற்றிலும் தெளிவாகி உள்ளது—ஆக்ஸ்ஃபம் அறிக்கையின் உள்ளடக்கத்தில் இது எடுத்துக்காட்டப்படுகிறது. கோவிட்-19 உம், அதன் எல்லா வகைகளும், பரவியதில் இருந்தே, பில்லியனர் உயரடுக்கின் செல்வவளத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், “சமத்துவமின்மை கொல்கிறது' என்ற நியாயமான தீர்மானம் 'மரணம் இலாபம் அளிக்கிறது' என்றாகி உள்ளது. ஆகவே, அவர்கள் ஏன் அதை தடுக்க முயல்வார்கள்?
தன்னை சரி செய்து கொள்ள ஆற்றல் இல்லாத இந்த முதலாளித்துவ சமூக ஒழுங்கு தான் அடிப்படை பிரச்சினை என்பதே தவிர்க்கவியலாத தீர்மானமாகும். என்ன தேவைப்படுகிறது என்றால் அடிப்படையிலேயே இந்த சமூக ஒழுங்கிற்கு விரோதமான மற்றும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை மூலமாக ஒவ்வொரு நாட்டிலும் இந்த பெருந்தொற்றை அகற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் அவசியப்படுகிறது. இத்தகைய ஒரு போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோலிச வலைத் தளம் போராடும் சோசலிச மற்றும் சர்வதேசியவாத அரசியல் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே நடத்த முடியும்.