மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நவம்பர் 3 நள்ளிரவு முதல் அரசுக்கு சொந்தமான மகாராஷ்ட்ரா மாநில போக்குவரத்து கழகத்தில் (Maharashtra State Road Transport Corporation - MSRTC) 95,000 க்கும் அதிமான பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொறிமுறையாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது, மகாராஷ்ட்ரா மாநில போக்குவரத்து தொழிற்சங்கமும் மற்றும் பிற தொழிற்சங்கங்கங்களும் சிவசேனா தலைமையிலான அரசுடன் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்ததித்திற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்குப் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது.
MSRTC தொழிலாளர்களின் ஒரு பிரிவு மட்டும் ஒரு தொழில்முறை நடவடிக்கையை மட்டுப்படுத்திய நிலைமையில், அக்டோபர் இறுதியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையை ஒப்பந்தம் கைவிட்டுவிட்டது. அதாவது அவர்கள் மாநில அரசாங்கத்தால் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் அதன் மூலம் அவர்களை வேலைகளிலிருந்து நீக்குவது, ஒப்பந்த முறையை கொண்டு வருவது அல்லது தனியார் மயப்படுத்துவதற்கு அனுமதி அளிப்பது போன்றவற்றால் கடினமாக்கப்படும்.
இந்த காட்டிக்கொடுப்பால் தொழிலாளர்கள் ஆத்திரமுற்றிருக்கிறார்கள். பல்வேறு பேருந்து போக்குவரத்து பணிமனைகளிலிருந்து வேலையிலிருந்து தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தார்கள் அல்லது அக்டோபர் 27 அன்று அவர்களால் தொடங்கப்பட்ட பகுதி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறுத்துவிட்டார்கள். இந்த தொழிலாளர்களின் சாமானிய குழுவின் (rank-and-file) வேலைநிறுத்தப் போராட்டத்தின் இயக்கம் வேகமாக பெரிதாகி பத்தாயிரக்கணக்கானவர்களை ஈர்த்துவிட்டது. தொழிலாளர்களின் சாமானிய குழுவினை மீண்டும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு தொழிற்சங்கங்களால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக நவம்பர் 3 நள்ளிரவிலிருந்து ஒட்டுமொத்த தொழிலாளர்களின் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் மிகக் குறைந்தளவு ஊதியம் பெற்றுவந்த MSRTC தொழிலாளர்கள் மிகவும் கடினமான நிலையை அனுபவித்தனர். அந்த நோய் இந்தியாவில் மில்லியன் கணக்கானவர்களை கொன்றிருக்கிறது மற்றும் நூறு மில்லியன் கணக்கானவர்களை மோசமான வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் குறைந்தபட்சம் 37 தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர் ஏனெனில், MSRTC நிர்வாகம் நீண்ட வாரங்கள் மற்றும் பல மாதங்கள் அவர்களுடைய ஊதியத்தை தாமதமாக்கியிருந்தது. ஆகஸ்ட் இறுதியில், கோவிட்-19 நோய் 304 MSRTC தொழிலாளர்களைக் கொன்றுள்ளது ஆனால் MSRTC பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்’ என்றோ அல்லது அவர்களுக்கு தடுப்பூசி மருந்து போடுவதில் முன்னுரிமை வழங்குவதற்கோ அரசு மறுத்துவிட்டது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மகாராஷ்ட்ராவில் பொதுப் பேருந்து போக்குவரத்தை முழுவதுமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அது 125 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் நிதி மூலதன சந்தையின் தலைநகர் மும்பாய் நகரத்தின் தாயகமாகவும் இருக்கிறது. ஆளும் மாநிலத்தின் தொழிற்துறை நீதிமன்றமும் பாம்பாய் உயர் நீதிமன்றமும் வேலைநிறுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தபோதிலும் கடந்த சில நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, MSRTC இன் ஒட்டுமொத்த 18,500 பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன மற்றும் 250 பணிமனைகள் மூடப்பட்டுள்ளன.
சிவசேனா தலைமையிலான அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் போக்குவரத்து நிர்வாகம் தொழிலாளர்களை மற்றும் நகர்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை பெருமளவில் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கின்ற MSRTC பல ஆண்டுகளாக குறைந்தளவு முதலீட்டின் விளைவாக ஏற்றபட்ட பாரியளவு இழப்புகளுக்காகவும் மற்றும் பெருந் தொற்றுநோய் பரவலால் பொருளாதார பேரழிவுகளுக்கும் அது விலைகொடுக்க வைக்க திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, அவர்களுடைய ஊதியத்தை சரியான நேரத்தில் கொடுப்பதற்கு, தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது MSRTC முழுமையாக மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்படவேண்டும் என்பதாகும். அப்பொழுதுதான் அவர்களுக்கான சலுகைகள் மற்றும் வேலை பாதுகாப்பு பெற்றுக்கொண்ட மாநில அரசாங்கத் தொழிலாளர்களாக நடத்தப்படுவார்கள். MSRTC போக்குவரத்து கழகம் தற்போது வெறும் இந்தியாவில் இருக்கின்ற பிற மாநில போக்குவரத்து சேவைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு “தன்னுரிமை” முதலாளித்துவ நிறுவனமாக இயங்கிக்கொண்டிருக்கிறது மேலும் மாநில முதலீடுகள் பற்றாக்குறையானதாக இருக்கிறது. இதன் விளைவாக, MSRTC எரிபொருள், ஊதியம் மற்றும் பிற தினசரி செலவுகளால் 95 பில்லியன் ரூபாய்கள் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனில் தள்ளப்பட்டிருக்கிறது.
MSRTC வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும் அதே நேரத்தில் தெற்கு பகுதியில் இருக்கும் கேரளா மாநிலத்தில் உள்ள கேரளா அரசு போக்குவரத்துக் கழகத்திலும் (KSRTC) தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போராட்டத்துடன் சேர்ந்துள்ளது. KSRTC தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் மிக முக்கியமாக அவர்களுடைய ஊதியத்தை முறையாக வழங்குதல் ஆகியவற்றை கோரி நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front - LDF) கூட்டணி ஆட்சி நடத்துகிறது அது இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால் அது KSRTC தொழிலாளர்கள் மீது விரோதம் காட்டுவதில் மகாராஷ்டிராவின் விகாஸ் அகாடி (வளர்ச்சி முன்னணி) மாநில அரசைவிட குறைந்தது அல்ல. சமீப காலம் வரை இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய அரசாங்கத்தின் விருப்பமான கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் முதலில் நரேந்திர மோடி தலைமையில் அவருடைய பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) கூட்டணி வைத்திருந்த சிவசேனா (சிவனின் படை என கருதப்படுவது) என்கிற பாசிசக் கட்சியின் தலைமையில் மூன்று கட்சிகளின் கூட்டணியாக மகாராஷ்டிராவின் விகாஸ் அகாடி (வளர்ச்சி முன்னணி) உருவாக்கப்பட்டுள்ளது. KSRTC தொழிலாளர்கள் அவர்களுடைய வேலைநிறுத்த நடவடிக்கையை பின்வாங்கவில்லையென்றால் “கடும் நடவடிக்கை” எடுக்கப்படும் என்று கேரள அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 29 தொழிற்துறை நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, நவம்பர் 3 அன்று மாலை தொழிற்சங்கங்களினால் நள்ளிரவு முதல் அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தடைசெய்து பாம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் வேலைநிறுத்த இயக்கத்தை நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கையாக MSRTC ஐ மாநில அரசாங்கத்துடன் முழுவதுமாக இணைப்பதற்கான தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவை உடனடியாக அமைக்கவேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்கு அறிவுறுத்தலையும் கொடுத்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, MSRTC தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் இரண்டு டசினுக்கும் மேலான தொழிற்சங்கங்கள் நிலுவையிலுள்ள வேலைநிறுத்த நடவடிக்கைகளிலிருந்து அவர்களுடைய அதரவை விலக்கிக்கொள்வதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர். ஆயினும், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இருவருமே திகைக்கும் வகையில் ஒட்டுமொத்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து, பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அவர்களுடைய நிலைப்பாட்டுக்கு எதிராக திரும்பியதுடன் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்தனர். ”கடந்த ஐந்து வருடங்களாக எங்களுடைய கோரிக்கைகள் ஒன்றாக இருக்கின்றன ஆனால் அரசாங்கம் அதைக் கேட்பதற்கு தயாரில்லை. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாங்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப்போவதில்லை” என்று ஒரு தொழிற்சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
MSRTC நிர்வாகம், இதை “சட்டவிரோத வேலைநிறுத்தம்” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட போர்க்குணமிக்க பெரும்பாலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து பதிலளித்துள்ளது. நேற்று (12-11-2021) மேலும் 1,135 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதன்மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,053 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமையன்று நவம்பர் 3 பாம்பாய் உயர் நீதிமன்றத்தின் “சட்டவிரோத வேலைநிறுத்தம்” தீர்ப்புக்கு எதிராக போராடும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை MSRTC போட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிர்வாகத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் கடுமையாக தலையிடுவதற்கு அது திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அதன் நடவடிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான அதன் உத்தரவை திரும்ப திரும்ப “மீறிச் செய்வதன்” மூலம் தொழிலாளர்கள் ”எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு” இது தவறிவிடுகிறது என்று கூறுகிறது. அவர்களுடைய காயங்களுக்கு அவமானம் சேர்க்கும்வைகையில், தொழிலாளர்களின் எதிர்ப்பு எதிர்காலத்தில் அவர்களூடைய தற்கொலை வரிசைகளை எவ்வாறு தடுக்கும் என்று கூச்சமில்லாமல் கேட்டுள்ளது.
இதற்கிடையில், தினமும் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் பேருந்துகளில் பயணிக்கும் 6.5 மில்லியனுக்கும் அதிமான பயணிகள் எதிர்கொள்ளும் ”இடையூறுகளைப் போக்குவதற்கு” மாநில அரசாங்கம் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் MSRTC பேருந்து தடங்களில் ஒட்டுவதற்கு விலைவாசிகளை உயர்த்தும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளது. உண்மையில்,அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், MSRTC வருடக்கணக்கில் கட்டணங்களை மேலும் உயர்த்துவதன் மூலம் வறுமைநிலையிலிலுள்ள பயணிகளின் மீது ”கடுமையான சுமையை” அதிகரித்து வருகிறது.
நோய்த்தொற்று பரவல் காலத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தொழிலாளர்கள் கோபமடைந்திருக்கிறார்கள். ”நாங்கள் அந்த நேரத்தில் ஊதியம் பெறவில்லை. எதுவும் சாப்பிடாமல் எங்கள் குடும்பத்தினர் இரவில் படுத்திருக்கிறோம், நாங்கள் வெறுமனே எங்களுடைய உரிமைகளைதான் கேட்கிறோம் மேலும் நாங்கள் கூறுவதை அரசாங்கம் கேட்கவேண்டும்” என்று ஒரு பேருந்து ஓட்டுநர் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த MSRTC வேலைக்கான விளம்பரத்தின் படி, ஓட்டுநர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் மற்றும் நடத்துநர்கள் பிரிவினருக்கு மிக மோசமாக ரூ.12,080 (163 அமெரிக்க டாலர்) இலிருந்து ரூ. 26,673 (360 அமெரிக்க டாலர்) என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அறிவிக்கப்படாத “மேலதிக” கொடுப்பனவுகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
MSRTC வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெடிப்பானது, இந்தியா முழுவதும் தொழிலாளர்களின் போராட்ட அலைகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. குறைந்த சம்பளம், வேலைப் பளு, மோடி அரசாங்கத்தின் குறைந்த கூலிக்காக தனியார்மயமக்கலுக்கான உந்துதல் மற்றும் கோவிட்-19 இலிருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பற்ற பணியிடங்கள் ஆகியவற்றை எதிர்த்து மேலும் வாகனத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், மோடியின் வணிகச் சார்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்போது 12 மாதங்களாக விவசாயிகள் அவர்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
2019 நவம்பரில், 48,000 தெலுங்கான மாநில போக்குவரத்து (TSRTC) தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து ஒரு மாதத்திற்குமேலான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தெற்கு எல்லைப் பகுதியில் இருக்கும் கர்நாடகாவின் MSRTC இன் இன்னொரு நிறுனமான KSRTC இன் சுமார் 150,000 போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் மேலும் முறையாக போராட்டத்தை தனிமைப்படுத்தி, தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில் தொழிற்சங்கங்கள் உடன்பட்டதன் காரணமாக இரண்டு வேலைநிறுத்தப் போராட்டங்களும் இறுதியில் அடக்கப்பட்டன.