பொடேமோஸ் தேர்தல் தோல்வியை சந்திக்கையில் வலதுசாரி கட்சிகள் மாட்ரிட் பிராந்தியத்தை வென்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கான அனைத்து சமூக இடைவெளி நடவடிக்கைகளையும் எதிர்த்து ஒரு இழிந்த, கம்யூனிச-விரோத பிரச்சாரத்தை நடத்தி வந்த வலதுசாரி மக்கள் கட்சியானது (Popular Party - PP) ஆளும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் பொடேமோஸ் ஆகியவற்றை மே 4 மாட்ரிட் பிராந்திய தேர்தலில் தோற்கடித்தது. பொடேமோஸ் கட்சிக்கு இது ஒரு தோல்வியாகி, அதன் பொதுச் செயலாளர் பப்லோ இக்லெசியாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

136 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 44.7 சதவீத வாக்குகளில் பெரும்பான்மைக்கு நான்கு குறைவாக 65 இடங்களை மக்கள் கட்சி வென்றது. பொடெமோஸிலிருந்து பிளவுபட்ட அதிக மாட்ரிட் (The More Madrid) கட்சி 17 சதவீத வாக்குகளில் 24 இடங்களையும், PSOE கட்சி 16.9 சதவீத வாக்குகளில் மேலும் 24 இடங்களையும் வென்றன. அதிவலது வோக்ஸ் (Vox) கட்சி 13 இடங்களையும் 9.1 சதவீதங்களையும் கைப்பற்றியது. பொடேமோஸ் கடைசி இடத்திற்கு சரிந்தது, 7.2 சதவீதத்தில் 10 இடங்கள் கிடைத்தன, வலதுசாரி குடிமக்கள் கட்சி (Citizens party) சரிந்தது. நீண்ட காலமாக PSOE மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு வாக்களித்த தொழிலாள வர்க்க "சிவப்பு புறநகர்கள்" உட்பட, மாட்ரிட்டின் 179 வட்டாரங்களில் 175 ஐ மக்கள் கட்சி கைப்பற்றிக்கொண்டது.

பப்லோ இக்லெசியாஸ், முன்னாள் பொடேமோஸ் பொதுச் செயலாளர் (Image credit: PODEMOS/YouTube)

"கம்யூனிசம் அல்லது சுதந்திரம்" (Communism or freedom) என்ற கோஷத்துடன் போட்டியிட்ட தற்போதைய மக்கள் கட்சி பிராந்திய பிரதமர் இசபெல் டியாஸ் ஆயுசோ டுவிட்டரில் அறிவித்தார்: "மாட்ரிட், சுதந்திரம், ஒத்துழைப்பு மற்றும் அனைவருக்குமான ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளது. பூச்சிய மட்டத்திலிருந்து ஸ்பெயின் அனைவருக்கும் தேவையான ஒற்றுமை, சமூக அமைதி மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுப்போம்." வோக்ஸ் தேசியக் கட்சித் தலைவர் சான்டியாகோ அபாஸ்கால் மற்றும் மாட்ரிட் பிராந்திய முன்னணி வேட்பாளர் ரோசியோ மொனாஸ்திரியோ ஆகியோர் மக்கள் கட்சி தலைமையிலான மாட்ரிட் பிராந்திய அரசாங்கத்தில் வோக்ஸ் கட்சி இணையுமா என்பது குறித்து ஆயுசோ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த வாக்கு ஆதரவானது வலதுசாரிகளை வலுப்படுத்தும் பொடேமோஸ் பின்பற்றும் பாசிசக் கொள்கைகளின் நச்சு விளைபொருளாகும். "கம்யூனிஸ்டுகள்" என்று ஆயுசோவின் வாய்ச்சவடால் மூலம் தாக்கிய பொடேமோஸ், உண்மையில் ஐரோப்பா முழுவதிலுமுள்ள வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்படும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்," சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவக் கட்டமைப்பு உருவாக்க பாசிசக் கொள்கைகளை செயற்படுத்தியுள்ளது. வெளிப்படையான வலதுசாரிக் கட்சிகளுக்கும் ஒரு இழிந்த போலி-இடது கட்சிக்கும் இடையிலான தேர்வை வாக்காளர்களுக்கு முன்வைத்த நிலையில், சமூக படுகொலை கொள்கையையும் செயல்படுத்தி வரும் நிலையில், வாக்காளர்கள் பிந்தியதை விட முந்தையதை தேர்ந்தெடுத்தனர்.

மார்ச் மாதம், இக்லெசியாஸ் மாட்ரிட் பிராந்திய தேர்தல்களில் "பாசிச-எதிர்ப்பு பிரச்சாரத்தை" நடத்துவதற்காக துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். மாட்ரிட்டில் "அதிவலதுகள், நிறுவனங்களை எடுத்துக் கொள்வதைத் தடுப்பதே" தனது இலக்கு என்று அவர் கூறினார். எவ்வாறெனினும், இது ஒரு இழிந்த அரசியல் மோசடியாகும். தொழிலாளர்கள் மீது "சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்" மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை தொடர்ந்து திணிப்பதற்கான ஒரு அரசியல் கட்டமைப்பை வகுக்க அவர் நோக்கம் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, PSOE-பொடேமோஸ் அரசாங்கமானது எச்சரிக்கை நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தது —அது பொதுமுடக்கங்கள், முகக்கவச ஆணைகள், ஊரடங்கு உத்தரவுகள் அல்லது பிற சமூக இடைவெளி நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளை திணிக்க அனுமதித்தது— எனவே வைரஸ் சுதந்திரமாக பரவமுடியும். அதன் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையானது வைரஸ் பாரிய சுழற்சியில் இருந்த போதிலும், பள்ளியில் இளைஞர்களும் மற்றும் வேலையில் தொழிலாளர்களையும் வைத்தது. இது ஏற்கனவே 100,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு வழிவகுத்தது என்று ஸ்பெயினின் தேசிய புள்ளியியல் நிறுவனம் பிப்ரவரியில் தெரிவித்தது.

ஐரோப்பா முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட ஒரு பாசிச "சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்" கொள்கைக்கு உறுதிபூண்டுள்ள PSOE மற்றும் பொடேமோஸ் ஆகியவை ஆயுசோ மீது எந்த பயனுள்ள விமர்சனத்தையும் செய்ய இயலவில்லை. இடது புறத்தில் எதிர்ப்பைக் கண்டு பயந்து, தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கான ஒரு கருவியாக அதிவலதுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் செயற்பட்டனர். பொடேமோஸ் போன்ற போலி-இடது கட்சிகளின் கட்டளையின் கீழ், தொழிலாள வர்க்கம் வைரஸையோ அல்லது பாசிச-சர்வாதிகார ஆட்சிக்கான உந்துதலையோ எதிர்த்துப் போராட முடியாது என்பது ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருக்கிறது.

இக்லெசியாஸின் "பாசிச-எதிர்ப்பு" வாய்ச்சவடால்களின் ஏமாற்றுத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு, மாட்ரிட்டின் தொழிலாள வர்க்க மாவட்டங்களில் வோக்ஸ் நடத்திய ஆத்திரமூட்டும் பேரணிகளை பாதுகாக்க கனரக ஆயுதமேந்திய கலகப் பிரிவு போலீஸ் பிரிவுகளை அனுப்பும் அவரது அரசாங்கத்தின் முடிவாகும். ஸ்பெயினின் காங்கிரசில் வலதுசாரி சட்டமியற்றுபவர்கள் பகிரங்கமாகக் கண்டித்துள்ள, எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்காக கலகப் பிரிவு போலீசார் செயல்பட்டனர்.

இது வோக்ஸ் மற்றும் ஆயுசோ ஆகியோருக்கு முன்முயற்சியைக் கொடுத்தது. இக்லெசியாஸ் மற்றும் பிற வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட பாசிச மரண அச்சுறுத்தல்களால் குறிக்கப்பட்ட பிரச்சாரத்தின் போது, வோக்ஸ் மற்றும் ஆயுசோ, PSOE மற்றும் பொடெமோஸுக்கு உள்ள மக்கள் வெறுப்பைப் பயன்படுத்தி தீவிர வலதுசாரி முறையீடுகளைத் தொடங்கினர். PSOE- பொடெமோஸ் அரசாங்கத்தின் கொலைகார பதிவைப் பார்த்தால், இது வோக்ஸ் மற்றும் ஆயுசோவுக்கு அதன் குற்றவியல் அரசியலைப் பற்றிய சொந்த பதிவு இருந்தபோதிலும் தேர்தலில் வெற்றி பெற போதுமானதாக இருந்தது.

பாசிசத்திற்கு விசுவாசமாக உறுதியளித்த வோக்ஸை ஆதரிக்கும் தீவிர வலதுசாரி தளபதிகள், "26 மில்லியன்" ஸ்பானியர்களை அல்லது 55 சதவிகித ஸ்பானிய மக்களை படுகொலை செய்யும் ஒரு சதித்திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், அத்தளபதிகள் பாசிசத்தை வெல்ல முடியாதென கருதுகின்றனர். இது கடந்த ஆண்டு மாட்ரிட்டில் தொழிலாள வர்க்க மாவட்டங்களில் எதிர்ப்புக்களைத் தூண்டியது. ஆயுசோவும் தனது பங்கிற்கு, மனித வாழ்க்கைக்கு ஒரு வெளிப்படையான அவமதிப்பைக் காட்டினார்.

"நடைமுறையில் அனைத்து குழந்தைகளும், ஒரு வழி அல்லது மற்றொரு வழியில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள். ... ஒருவேளை அவர்கள் வார இறுதியில் ஒரு குடும்ப ஒன்றுகூடலில், அல்லது பிற்பகலில் பூங்காவில் அல்லது ஒரு வகுப்புத் தோழரிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளுவார்கள். எங்களுக்கு தெரியாது," என்று ஆயுசோ அறிவித்திருந்தார். ஆயினும்கூட, அவர்கள் "பள்ளிக்குத் திரும்ப வேண்டும்", "சமூக ஒன்றுகலப்பு வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். குழந்தைகளை பாதிக்கும் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்களிடமிருந்து "வேலைநிறுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள்" இருக்கக்கூடாது என்றும் ஆயுசோ கோரினார், "இது தொழிலாளர்களிடமிருந்து ‘எனக்கு, எனக்கு, எனக்கு’ என்பதற்கான நேரம் அல்ல.

ஆயுசோவின் கொள்கைகளானது, மாட்ரிட் அதிக எண்ணிக்கையிலான 24,000 இறப்புகளைக் கொண்ட ஸ்பானிய பிராந்தியமாக மாற வழிவகுத்தது. ஸ்பெயினின் 47 மில்லியன் மக்கள்தொகையில் 14 சதவிகிதம் இங்குள்ளனர், இது ஸ்பெயினின் 3.5 மில்லியன் COVID-19 நோய்த்தொற்றுகளில் 19 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும், நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்களை பெருந்தொற்று நோயின் உச்சத்தில் உயிர் காக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றுவதை தடைசெய்த மாட்ரிட் பிராந்திய அதிகாரிகள் நெறிமுறைகளை வெளியிட்டது தொடர்பாக உள் ஆவணங்கள் வெளிவந்த பின்னர் ஒரு ஊழல் வெடித்தது.

எவ்வாறெனினும், பிராந்திய தேர்தலின் போது, சமூக இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வரும் PSOE -பொடேமோஸ் அரசாங்கத்தின் சொந்த நடவடிக்கையை காட்டிலும், தனிப்பட்ட சுதந்திரங்களின் பரந்த வலியுறுத்தலாக தனது கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்" கொள்கையை வாய்ச்சவடால் முறையில் சித்தரிக்க ஆயுசோ அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாயன்று தேர்தல் முடிவு குறித்து இக்லெசியாஸின் எதிர்வினை சிடுமூஞ்சித்தனம் மற்றும் கோழைத்தனத்தின் நினைவுச் சின்னமாக இருந்தது. "அது ட்ரம்ப்-வாத உரிமையை பலப்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்ட அவர், அதற்கு எதிராக அவர் தன்னை முற்றிலும் போராடுவதற்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்ததாக கருதியவர் அரசியலை கைவிடுவதாக அறிவித்தார்.

அவர் ஒரு பிற்போக்குத்தனமான நியாயப்படுத்தலை முன்வைத்தார்: பாசிசம் குறித்த அவரது வெற்று விமர்சனங்கள், இப்போது ஸ்பானிய அரசியலை மிகவும் பிளவுபட்டுள்ளன என்ற கூற்று. "பொடெமோஸுக்கு பயனுள்ளதாக இருப்பது எனது மிகப்பெரிய அபிலாஷை", அவர் கூறினார், "ஆனால் தோழர்கள் மீதான பாசத்திற்கு அப்பால், நான் ஒன்றிணைக்கும் நபர் அல்ல என்பது தெளிவாகிறது. குறிப்பாக அவர்கள் உங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் உங்கள் பங்கைக் கட்டுப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தின் மோசமான வெறுப்பாளர்களை அணிதிரட்டுவதற்கும் உங்களை பலிகடாவாக மாற்றியபோது, இந்த அரசியல் சக்தியை பலப்படுத்த உதவக்கூடிய ஒரு நபர் நான் அல்ல.”

"நாங்கள் தோல்வியுற்றோம், நாங்கள் எங்கள் இலக்கை அடைவதற்கு வெகு தொலைவில் இருக்கிறோம்," என்று அவர் கூறினார், மொத்த மனச்சோர்வின் உணர்வை வெளிப்படுத்தினார். "நான் எனது அனைத்து பதவிகளையும் விட்டுவிடுகிறேன், தொழில்முறை அரசியலைப் புரிந்து கொண்டால், நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், நான் தொடர்ந்து எனது நாட்டுக்கு சேவை செய்வேன்" என்று அவர் முடித்தார்.

இதேபோல், தேர்தல்கள், தொழிலாளர்கள் அதிவலது கொள்கைகளை ஆதரிக்கின்றனர் என்பதை நிரூபித்துள்ளது என PSOE உடன் தொடர்புடைய El País பத்திரிகை தலையங்கம் தீட்டியது. அது எழுதியது: "மாட்ரிட் பிராந்திய தேர்தல்களின் முடிவு சமூகத்திற்கு உடனடி விளைவுகள் நிறைந்த ஒரு உண்மையான அரசியல் பூகம்பத்தை உருவாக்குகிறது, ஆனால் மறைமுகமாக தேசிய அரசியலின் நிலையிலும் உள்ளது. மாட்ரிட்டின் குடிமக்கள், மக்கள் கட்சியின் (PP) பிரதிநிதியான இசபெல் டியாஸ் ஆயுசோ தலைமையிலான தளத்தின், தொற்றுநோயை நிர்வகிக்கும் அவரது மாதிரி, அவரது தீவிர சுதந்திர சந்தை பொருளாதார நிலை மற்றும் வலுவான பிளவுபடுத்தும் அரசியல் அணுகுமுறைக்கு, அவர்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்."

ஸ்பெயினிலும் ஐரோப்பா முழுவதிலும் வெகுஜன கோவிட்-19 இறப்புக்கள் மற்றும் பாசிச ஆட்சி ஆகிய இரண்டினாலும் அவசர ஆபத்து உள்ளது. இருப்பினும், இக்லெசியாஸ் மற்றும் El Paísஆனது தொழிலாளர்களை குற்றம் சாட்டும் வாதங்களில் ஒரு விஷயத்தை விட்டுவிடுகின்றன: அதாவது அவர்கள் தாங்களே வகிக்கும் பிற்போக்குத்தனமான பாத்திரமாகும். உண்மையில், இராணுவ சதித்திட்டங்கள், பாசிச வெகுஜனக் கொலைகள், குழந்தைகளுக்கு பாரியளவிலான தொற்றுக்கள், முதியோருக்கு சுகாதாரப் பாதுகாப்பை மறுப்பது ஆகியவற்றுக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. எவ்வாறெனினும், இந்த எதிர்ப்பை பொடெமோஸின் மதிப்பிழந்த பதாகையின் கீழ் அணிதிரட்ட முடியாது.

இந்தப் பெருந்தொற்று நோய் மற்றும் சர்வாதிகார ஆட்சியின் ஆபத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேச அணிதிரட்டல் தான் முக்கியமான கேள்வியாகும். இது ஸ்பெயினிலும் சர்வதேச ரீதியாகவும் பொடேமோஸ் போன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை கட்டமைக்க வேண்டிய அவசியத்தை குறித்து நிற்கிறது

Loading