மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
“அழுகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் உலகம் கடும் நெரிசலாகியுள்ளது. …விமான போக்குவரத்து, தந்திப்பொறி, தொலைபேசி, வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஆகிய வசதிகள் நிறைந்த சகாப்தத்தில், நாட்டுக்கு நாடு பயணிப்பது கடவுச்சீட்டு (passport) மற்றும் வதிவிட அனுமதியின் (visa) பேரில் முடங்கிபோயுள்ளது. …பரந்த நில விரிவாக்கங்கள், மற்றும் மனிதனுக்காக வானத்தையும் பூமியையும் வென்றெடுத்த தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் மத்தியில், முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஒரு மோசமான சிறைச்சாலையாக மாற்ற முடிந்துள்ளது.”
“ஏகாதிபத்திய போர் மற்றும் பாட்டாளி வர்க்க உலகப் புரட்சி குறித்த நான்காம் அகிலத்தின் அறிக்கை” மே 19-26, 1940 தேதிகளில் நடந்த அவசர மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அவசர மாநாடு போருக்கான முக்கிய காரணம் தொடர்புபட்ட ஒரு விரிவான குற்றச்சாட்டை முன்வைத்தது, அதாவது இந்த அடித்தளத்தின் மீது தங்கியிருக்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்போடு இணைந்த உற்பத்தி வழிமுறைகளின் தனியார் உரிமையை குறை கூறியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள அடுத்தடுத்து நாடுகள் முயற்சித்து வரும் நிலையிலும், அரைக்கோளத்தில் சீன மற்றும் ரஷ்ய செல்வாக்கை அழிக்க முற்படும் வெனிசுவேலாவுக்கு எதிராக அடுத்தகட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கு வாஷிங்டன் தயாராகி வரும் நிலையிலும், இந்த குற்றச்சாட்டு இலத்தீன் அமெரிக்காவுக்கு இன்று இன்னும் அதிக வீச்சுடன் பொருந்துகிறது.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்கள் அதிகரித்துள்ள நிலையில், இலத்தீன் அமெரிக்காவில் வரலாற்று ரீதியாக தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் மற்றும் பிற்போக்குத்தனமான முதலாளித்துவம், பல தசாப்த கால முடிவற்ற ஸ்திரமின்மை, சதி முயற்சிகள் மற்றும் கொள்ளை ஆகியவற்றால் விளையும், பொருளாதார, சமூக மற்றும் சுகாதார பேரழிவுகளிலிருந்து தப்பிக்கும் மில்லியன் கணக்கான வெனிசுவேலா மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தனது எல்லைகளை மூடுகிறது.
பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடோர் மற்றும் பெரு ஆகிய நாடுகளிலுள்ள ஏகாதிபத்திய சார்பு, வலதுசாரி ஆட்சிகள், பிராந்திய புலம்பெயர்வு அதிகரிப்பை தமது எல்லைகளை இராணுவமயமாக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்துவதுடன், இந்த செயல்பாட்டின் மூலம் வெளிநாட்டவருக்கு எதிரான அநீதியாக புலம்பெயர்வு எதிர்ப்புணர்வைத் தூண்டுகிறது.
டாங்கிகளையும் கவச வாகனங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான துருப்புக்கள், ஒழுங்கற்ற எல்லை சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளர்களை வலுப்படுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த வெனிசுவேலா மக்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் கொடுமையான ஏமாற்றுத்தனம் என்பது நிரூபணமாகியுள்ளது. உண்மை என்னவென்றால், ஆதரவற்ற புலம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் ஆழ்ந்த நெருக்கடியை அரசியல் நன்மைக்காக பயன்படுத்த மட்டுமே அதிவலது அரசாங்கங்கள் அக்கறை காட்டின.
இன்று, ஒருபுறம் பிரேசிலுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையிலான சந்திப்புக்களையும், மேலும் மறுபுறம் கொலம்பியாவுக்கு இடையிலான சந்திப்புக்களையும் இராணுவப் படைகள் கண்காணிக்கின்றன. எல்லையை கண்காணிக்க கொலம்பியா 600 தேசிய காவல் படையினரையும் இராணுவ படையினரையும் அனுப்பியுள்ளது. வெனிசுவேலாவுடனான தங்களது எல்லையைக் கட்டுப்படுத்த கொலம்பியாவின் ஜனாதிபதி இவன் டியூக்கின் வலதுசாரி அரசாங்கம் கடந்த ஆண்டு “Operation Wall” திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கொலம்பியா-ஈக்வடோர் எல்லை, ஈக்வடோர்-பெரு எல்லை, அத்துடன் பெரு-பிரேசில் மற்றும் சிலி-பொலிவியா எல்லைகளில் ஏராளமான படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, 500 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தோர், முக்கியமாக ஹைட்டியிலிருந்து கிளம்பியவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பெருவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட அமசோனிய எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர். இரு நாடுகளையும் இணைக்கும் “சர்வதேச நட்பு பாலம்” வழியாக பிரேசிலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் அகதிகளை, காவல்படையை தாங்கிப்பிடிக்க அணிதிரட்டப்பட்ட பெருவியன் ஆயுதப் படைகள் நுழைய விடாமல் தடுக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை, பாதுகாப்புப் படையினர் அநாதரவாக நிற்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கட்டுப்படுத்தினர். வியாழக்கிழமை, எல்லைக் கட்டுப்பாட்டுக்கு 60 நாட்கள் பொறுப்பேற்கும் வகையில் இராணுவப் படைகளை அனுப்பி பிரேசில் பதிலிறுத்தது.
இது ஜனவரி மாத இறுதியில், ஈக்வடோரிலிருந்து டம்பெஸ் வழியாக இடம்பெயர்ந்த வெனிசுவேலா மக்கள் மீது பெருவியன் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தையடுத்து நடத்தப்பட்டுள்ளது. சுமார் 500 பேர், பெரும்பாலும் வெனிசுவேலா நாட்டவர்கள் டம்பெஸ் பிராந்தியத்தில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். ஈக்வடோருக்கும் பெருவுக்கும் இடையேயுள்ள 30 க்கும் மேற்பட்ட ஒழுங்கற்ற எல்லை சந்திப்புப் புள்ளிகளை கட்டுப்படுத்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில், பெருவியன் அரசாங்கம் 1,200 துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும், மற்றும் தேசிய காவல் படையினரையும் அங்கு நிலைநிறுத்தியது. ஈக்வடோரிய அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்தது. ஜனவரி 27 ஆம் தேதி, ஈக்வடோர் ஆயுதப் படைகள் எல் ஓரோ துறையில் பெருவின் எல்லையில் 200 சிப்பாய்களையும், 20 ஹம்மர் தந்திரோபாய வாகனங்களையும் அணிதிரட்டின.
“முறையற்ற நுழைவுச் சீட்டுடன் நாட்டிற்குள் நுழையும் ஒரு நபர் ஒரு குற்றவாளிக்கு சமமாக பார்க்கப்படுகிறார். முறையற்ற நுழைவுச் சீட்டுடன் எல்லையை கடந்து வருவது பெரு குடியேற்றச் சட்டத்தின் படி ஒரு குற்றமாக கருதப்படாது,” என்று பெருவைச் சேர்ந்த மனித உரிமை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மார்டா காஸ்ட்ரோ கூறினார்.
என்றாலும், இது ஒரு துல்லியமான நோக்கமாகும். மேலும், அதிகரித்தளவில் வெனிசுவேலா மற்றும் ஏனைய அகதிகளுக்கு எதிராக தாக்குதல்களையும் படுகொலைகளையும் தூண்டிய புலம்பெயர்வு குற்ற அலைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை ஊதிப் பெரிதாக்கியும் கொடூரப்படுத்தியும் உள்ளூர் பெருநிறுவன ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதை இது எளிதாக்குகிறது. இவை தேசிய பேரினவாதம் மற்றும் இனவெறி அடிப்படையிலான மனநிலையை வளர்த்து வருவதுடன், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிக வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை மனிதநேயமற்ற வகையில் நடத்துகின்றன.
சிலியின் உள்துறை அமைச்சர் ரொட்ரிகோ டெல்கடோ இராணுவ பயன்பாட்டை நீட்டிக்கும் ஆணை அதிகாரிகளுக்கு அகதிகளை “உடனடியாக வெளியேற்றுவதற்கான கருவிகளை” வழங்குகிறது என்று கூறி இந்த கருத்தின் சிறப்பை விளக்கினார். மேலும், “இன்று எல்லை மீறுவது ஒரு குற்றமாக வகைப்படுத்தப்படவில்லை, என்றாலும் புதிய சட்டத்தின் படி இது ஒரு குற்றமாக வகைப்படுத்தப்படுகிறது” என்று தொடர்ந்து கூறினார். இது வெறுமனே தேசியம் சார்ந்தது அல்ல, மாறாக பிராந்திய பதிலிறுப்பாக உள்ளது.
பிப்ரவரி 9 ஆம் தேதி துணை இராணுவ கராபினெரோஸ் காவல்துறையினரால் 23 வயது பொலிவிய நாட்டவரான ஜெய்ம் வீசாகா சான்செஸ் கொல்லப்பட்டது இந்த சூழலின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும். சுரங்க நகரமான கலாமாவில் உள்ள மருத்துவ சட்ட சேவைக்கு (சட்டபூர்வ சவக்கிடங்கு) வெளியே ஒரு சோதனைச் சாவடி வாகனத்திலிருந்து காவல்படையினர் வெளிப்படையாக நனவாக அந்த மனிதரை தாக்கினர். அவர் ஏழு நாட்களுக்கு முன்னர் தான் நாட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த வாரம், சிலியின் வடக்கிலுள்ள இக்விக் நகரிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அகதிகளுக்கு உரிய செயல்முறை மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியேற்ற உத்தரவை இரத்து செய்தாலும், பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வெனிசுவேலாவில் உள்ளனர்.
“அவர்கள் சுகாதாரமான குடியிருப்பில் இருந்தபோது வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அவர்களுக்கு இது பற்றி அதிகாலை 2 மணிக்கு தெரிவிக்கப்பட்டது, பின்னர் 24 மணி நேரம் கழித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றாலும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாட்டிற்கும் சாத்தியமில்லாத அந்த இடத்தை விட்டு அவர்கள் ஒருபோதும் வெளியேறவில்லை,” என்று அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்குரைஞர் விளக்கினார்.
வெனிசுவேலா வெளியேற்றம்
ஒரு முடிவில்லாத ஏகாதிபத்திய தாக்குதல் மற்றும் முதலாளித்துவ தேசியவாத “பொலிவேரிய புரட்சியின்” படுதோல்வி ஆகிய இரண்டின் அழிவுகளிலிருந்து தப்பிய 5.4 மில்லியன் வெனிசுவேலா நாட்டவர்களில் சுமார் 4.6 மில்லியன் பேர், மேலதிக சிரமங்களால் பாதிக்கப்படுவதற்கு மட்டுமே அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில், சிலியின் தீவிர வலதுசாரி பில்லியனர் ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவும், பிரேசிலின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோவும், சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை வழங்குவதை அவசியமாக்கி அகதிகளை ஏற்றுக்கொள்வதை கட்டுப்படுத்தும் மசோதாக்களை கொண்டு வந்தனர். ஏனைய ஒவ்வொரு ஆட்சியும் இதைப் பின்பற்றியுள்ளன. புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பெலிப்பே கோன்சலஸ் அகதிகளை அதிகரித்தளவில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி விமர்சித்தார்.
“ஒப்பீட்டு அனுபவம், இலத்தீன் அமெரிக்காவிலும் கூட, புலம்பெயர்வு விடயங்களுக்கு ஆயுதப் படைகளை பயன்படுத்துவது மக்களின் இடம்பெயர்வுக்கான மனித உரிமைகளை கடுமையாக மீறுவதுடன், எந்த வகையிலும் சிக்கலைத் தீர்க்க உதவாது, மாறாக அதை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது,” என்று கோன்சலஸ் கூறினார்.
“புலம்பெயர்வு கொள்கை நடவடிக்கைகளில் இந்த தீவிர மாற்றம் எதிர்கொள்ளப்படுவதால், அகதிகளின் முறையற்ற வருகைகளும், அதன் விளைவாக மக்களின் இடம்பெயர்வின் போது மக்கள் கடத்தலும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்,” என்றும் கூறினார்.
(வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஏலத்தை நடத்தும் கனடா மற்றும் 13 இலத்தீன் நாடுகளை உள்ளடக்கியதான) லிமா குழுவின் ஆதரவுடன், பொருளாதாரத் தடைகளையும், தடையுத்தரவுகளையும் பிறப்பித்து வாஷிங்டனும் ப்ரூசெல்ஸ்ஸும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுராவின் அரசாங்கத்தின் மீது தங்களது தாக்குதல்களை கூர்மையாக அதிகரிக்கத் தொடங்கிய போது, பெருந்திரளாக வெனிசுவேலா மக்கள் இடம்பெயர்வது 2019 இல் ஒரு திருப்புமுனை கண்டது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் அகதிகளின் நிலைமைகள் தொற்றுநோய் காலத்தில் மட்டும் மிகவும் மோசமடைந்தது, ஏனென்றால் அப்போது மில்லியன் கணக்கானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர், மேலும் வீடற்றவர்களாக்கப்பட்டனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு விபரப்படி, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் வெனிசுவேலா நாட்டவர்களில் ஐந்து பேருக்கு இருவர் வீதம் தொற்றுநோய் காலத்தின் போது வெளியேற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மனித உரிமைகளுக்கான அமெரிக்க உள்விவகார ஆணையமும் (IACHR), ஐ.நா. முகமைகளும் நடத்திய ஆய்வு, ஒட்டுமொத்த வாடகைதாரர்களில் 11 சதவிகிதம் பேர் வெளியேற்றப்பட்டது அவர்களுக்கு வீடற்ற தன்மையை உருவாக்கியது, அதேவேளை ஒருமுறை வெளியேற்றப்பட்ட பின்னர் வெனிசுவேலா நாட்டவர்களில் நான்கு பேரில் மூன்று பேருக்கு இடம் கிடைக்கவில்லை.
மிக பிரமாதமாக, கொலம்பிய அரசாங்கம் வெனிசுவேலா புலம்பெயர்ந்தவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு நிலை (Temporary Protection Status) பற்றி அறிவித்தது, இது வெளிப்படையாக வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், கொலம்பியாவிலுள்ள 1.7 மில்லியன் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து, பதிவுசெய்து, அவர்கள் பற்றிய விபரங்களை முறையாக ஆவணப்படுத்தவுள்ளது. இந்த நடவடிக்கை அவர்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்க எதையும் செய்யாது, மாறாக அதிகரித்தளவிலான வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்று அரசாங்க கஜானாக்களை நிரப்பும்.
கடந்த வாரம் மற்றொரு அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான UNHCR, கொலம்பியாவிலுள்ள 1.7 மில்லியன் வெனிசுவேலா புலம்பெயர்ந்தவர்களில் வெறும் 2 சதவிகிதம் பேர் மட்டுமே அடிப்படைத் தேவைகளை பெற முடியும் என்று எச்சரித்தது. 84 சதவிகிதம் பேர் உணவு, உறைவிடம் அல்லது உடைகளை பெற முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசி பேர் “முறையற்ற” அல்லது ஆவணமற்ற அகதிகளாக நம்பப்படுகிறார்கள்.
எல்லைகளின் இராணுவமயமாக்கம் கொரோனா வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று லிமா குழுமத்தின் அரசாங்கங்கள் கூறினாலும், யதார்த்தம் என்னவென்றால், 2020 க்கு முன்னர் வலுவான பாதுகாப்பு ஏற்பாடு இருந்தது என்பதுடன், அமெரிக்க திட்டங்களுக்கு விசுவாசத்தை நிரூபிப்பதற்கு அதிகம் செயலாற்றப்பட்டது. இது, கண்டம் முழுவதுமான அமெரிக்காவின் “போதைப் பொருட்களுக்கு எதிரான போரின்” விரிவாக்கமாக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீட்டில் ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவதுடன், பல்லாயிரக்கணக்கான துருப்புக்களையும் அதில் ஈடுபடுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இலத்தீன் அமெரிக்க ஆயுதப்படையினர், எல்லைப்பகுதிகளில் “நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை” இடைமறிக்க அதிகரித்தளவில் அதிநவீன ஆயுதக் களஞ்சியத்தை பயன்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய்தொற்று தென் அமெரிக்க நாடுகளை நாசமாக்கியுள்ளது மக்கள் புலம்பெயர்வினால் மட்டுமல்ல, மாறாக துல்லியமாக கூறுவதானால், ஒவ்வொரு வலதுசாரி அரசாங்கமும் ஏராளமான மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைக்கு மேலாக இலாபத்திற்கு முன்னுரிமை அளித்து குற்றகரமாக பொறுப்பற்ற “சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும் கொள்கைகளை” செயல்படுத்தியுள்ளதே இதற்கு காரணம். மேலும், இலாப நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அத்தியாவசியமற்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் 2020 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
இப்போது, அனைத்து அரசாங்கங்களும் “சட்டவிரோதமான புலம்பெயர்ந்தோர் கடத்தல் மற்றும் மனித கடத்தல்” என்றழைக்கப்படுவதைக் கட்டுப்படுத்த தனது ஆயுதப் படைகளை பயன்படுத்துகின்றன. செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில், கொலம்பியா, பெரு, பொலிவியா, ஈக்வடோர் மற்றும் சிலி நாடுகளின் பொலிஸ் படைகள் நாடுகடந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனுமதிக்கும் ஒரு திட்டம் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் ஆபத்துக்கள் 20 ஆம் நூற்றாண்டின் இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் எரியும் பிரச்சினைகளாக இருந்தன, 1970 கள் மற்றும் 1980 களின் இராணுவ சர்வாதிகாரத்தின் உளவுத்துறை சேவைகள் CIA-backed Operation Condor பிரச்சாரத்தின் கீழ் தங்கள் அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதிலும் கொலை செய்வதிலும் ஒன்றிணைந்தன.
இலத்தீன் அமெரிக்காவில் தற்போது நிலவும் முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் ஒத்திசைவு மற்றும் திவால்நிலை காரணமாக வெனிசுவேலா மக்களின் தலைவிதிக்கு கூர்மையான நிவாரணம் கிடைக்கிறது. நான்காம் அகிலம் அதன் 1940 மாநாட்டில், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க சோவியத் ஒன்றிய நாடுகளின் முழக்கத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்த முட்டுச் சந்துக்கு வெளியே செல்லும் வழியை சுட்டிக்காட்டியதுடன், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக உலக ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை வழிநடத்த பாட்டாளி வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கிறது.
“இது, இந்த பணிக்கு தீர்வு காண அழைக்கப்படவுள்ள வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் முழுமையான ஏமாற்று அமைப்பான தாமதப்பட்ட தென் அமெரிக்க முதலாளித்துவம் அல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தென் அமெரிக்க இளம் பாட்டாளியையே குறிக்கும்,” என்று இது தெரிவித்தது.
முதலாளித்துவ தேசியவாத, பாசிச-இராணுவ மற்றும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஒப்பீட்டு ஆட்சிகளின் தொடர்ச்சியான 80 ஆண்டுகால கண்டத்தின் ஆதிக்கத்திற்குப் பின்னர் இது முன்னெப்போதையும் விட இன்று உண்மையாகியுள்ளது. இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கம் அவசியமுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும், அதாவது கண்டம், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து முதலாளித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பொதுவான போராட்டத்தில் இணைய வேண்டும். அது, நிரந்தர புரட்சியின் முன்னோக்கு ஆகும், இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே இதற்காக போராடப்படுகிறது.