மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஐரோப்பிய சபை அரச தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஒன்றுகூடி, ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாதித்தனர்.
முன்னோடியில்லாத வகையில் சர்வதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த வசந்த காலத்தில் சமூக பொது அடைப்பு (lockdown) கொள்கைகளை முன்கூட்டியே முடிவிற்கு கொண்டுவந்த பின்னர், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் ஐரோப்பாவில் வாரந்தோறும் நூறாயிரக்கணக்கானவர்களுக்கு தொற்றை ஏற்படுகிறது. அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தல்களைப் புறக்கணிப்பதற்கும், தேர்தலுக்குப் பிந்தைய சட்டவிரோத சதித்திட்டத்தில் தன்னை அதிகாரத்தில் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கவும் சூளுரைத்துள்ளார். இதற்கிடையில், பெலருஸில் நடந்த ஆகஸ்ட் தேர்தல்கள் இன்னும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன, மேலும் இந்த வாரத்தில் காக்கசஸில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே போர் வெடித்தமையானது, இந்த வெடிக்கும் நிலையிலுள்ள பிராந்தியத்தில் இராணுவ மோதல் விரிவாக்கத்திற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனநாயக சிதைவுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மாற்று அல்ல என்பதை நடந்த உச்சிமாநாடு உறுதிப்படுத்தியது. அமெரிக்க தேர்தல் நெருக்கடி குறித்து ஒரு காது செவிடான மெளனத்தை பேணிக்கொண்டிருக்கும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் தங்களது கொலைகார சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கைகளை (herd immunity policies) தொடர்வார்கள் என்பதையும், துருக்கி, ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதையும் சமிக்கை காட்டினார்கள்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட முதல் நாளின் பேச்சுவார்த்தை தொடர்பான ஒரு அறிக்கையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் "துருக்கியுடனான ஒரு கூட்டுறவு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவு" ஆகியவைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஆர்மீனியாவிலிருந்து நாகோர்னோ-கராபாக் பகுதியை கைப்பற்றுவதற்கான அஸெரி தாக்குதலையும் மற்றும் கிரேக்கத்திற்கு எதிராக கிழக்கு மத்தியதரைக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் குறித்த தனது உரிமைகோரலை தீவிரமாக வலியுறுத்தியது ஆகிய இரண்டையும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆதரித்தார். இந்த கோடையில் கிரேக்கமும் துருக்கியும் கிட்டத்தட்ட போரில் ஈடுபட முனைந்திருந்தாலும், ஆர்மீனிய-அஸெரி யுத்தத்தின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களும் இரு சக்திகளுமான ரஷ்யா மற்றும் துருக்கி இடையே மோதலிற்கான அபாயத்தையும் இது முன்வைக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியமானது மத்தியதரைக் கடல் சச்சரவிற்கு “கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான தனது முழுக் கூட்டு ஒருமைப்பாட்டை” அறிவித்தது, மேலும் கிரேக்க மற்றும் துருக்கிய கடல்சார் உரிமைகோரல் எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமீபத்திய முயற்சிகளை அது “வரவேற்கிறது”. தனது நலன்களுக்கான செயலுக்கு வெகுமதியும் அது இல்லாவிட்டால் தண்டனையும் என்ற அணுகுமுறையை இது தேர்ந்தெடுத்துள்ளது. "சுங்க ஒன்றியத்தின் நவீனமயமாக்கல் மற்றும் வர்த்தக வசதி, மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள், உயர் மட்ட உரையாடல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற-எதிர்ப்புக் கொள்கைக்கு ஏற்ப, இடம்பெயர்வு பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் ஒரு ஆக்கபூர்வமான அரசியலை ஐரோப்பிய ஒன்றிய-துருக்கிய நிகழ்ச்சி நிரலைத் தொடங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது".
துருக்கிய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அதிக அணுகலை வழங்குவதற்கான இந்த பிற்போக்குத்தனமான “நிகழ்ச்சி நிரல்” மத்திய கிழக்கு அகதிகளை ஐரோப்பாவுக்கு பயணிப்பதைத் தடுக்க அங்காராவுக்கு உத்தரவிட்டாலும், கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் காக்கசஸ் மீதான ஐரோப்பிய ஒன்றிய கொள்கையுடன் துருக்கியின் இணக்கத்தைப் பொறுத்துத்தான் இது தங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமானது ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் "கணிசமான பேச்சுவார்த்தைகளை" பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், மத்தியதரைக் கடலில் "ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை" துருக்கி கைவிட வேண்டும் என்றும் கோரியது. கிரேக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்தப் பிரச்சனை தொடர்பாக துருக்கி தொடங்கியுள்ளது. காக்கசஸில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த தரகராக ரஷ்யாவுடன் வெளிப்படையாகவும் முயற்சிக்கிறது.
பொருளாதாரத் தடைகள் மூலம் துருக்கியை அச்சுறுத்தியதற்கு ஈடாக, ஐரோப்பிய ஒன்றியமானது பெலருஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான தனது ஆட்சேபனைகளை கைவிட சைப்ரஸூடன் ஒரு உடன்படிக்கையைப் பெற்றது. ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்கோ தேர்தலைத் திருடியதாகக் கூறிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்துள்ளது, இப்போது அது லுகாஷென்கோ ஆட்சியிலுள்ள 40 அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இருப்பினும், அது லுக்காஷென்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை, ஏனெனில், முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் அரசியல் நடவடிக்கைகளுக்காக அதன் தேர்வுகளைத் திறந்து வைக்க முயற்சிக்கிறது.
ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவால்னியின் விஷம் வைத்தது குறித்த சந்தேகத்திற்குரிய மற்றும் இன்னும் தீர்க்கப்படாத விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இதை "சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்று அழைத்தது. ரஷ்ய அதிகாரிகள் "ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை உறுதிசெய்து, பொறுப்புள்ளவர்களை நீதிக்கு முன்கொண்டு வர வேண்டும்" என்று அவர்கள் கோரினர்.
பெலருஷ்ய தேர்தல்களைத் திருடியதாகக் கூறி, லூக்காஷென்கோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தபோதும், அமெரிக்க தேர்தல்களை திருடுவதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எதுவுமே கூறவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், அதன் அறிக்கையில் அமெரிக்கா அல்லது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளினதும் அமெரிக்காவுடனுள்ள நேட்டோ இராணுவ கூட்டணி பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது வளர்ந்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரிகிறது, வாஷிங்டனில் ஒரு அரசியல் முறிவானது சர்வதேச அளவில் மேலும் போர்களைத் தூண்டக்கூடும் என்ற கவலையும், ட்ரம்பின் திட்டமிட்ட தேர்தல் சதித் திட்டத்திற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வெடிக்கும் எதிர்வினை குறித்து வெளிப்படுத்தப்படாத அச்சமும் உள்ளது.
வாஷிங்டனானது பசிபிக் பகுதியில் இராணுவத்தை கட்டியெழுப்புவதோடு, சீனாவின் பொருளாதார உயர்வைத் தடுக்க வர்த்தகத் தீர்வையும் விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது சீனாவில் இலாபங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய அணுகுதலை உறுதி செய்வதற்கான முதலீட்டு ஒப்பந்தங்களையும் கோரியதுடன், சீனாவின் “மனித உரிமை நிலைமையை” விமர்சித்தது. எவ்வாறாயினும், சீனா மீதான அமெரிக்க கொள்கையிலிருந்த தொனியிலுள்ள வேறுபாடு தவறாக கருதப்பட முடியாமல் இருந்தது. ஐரோப்பிய ஒன்றியமானது சீனாவை "உலகளாவிய சவால்களை கையாள்வதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்" என்றும் ஐரோப்பிய ஒன்றிய-சீனா இராஜதந்திர உறவுகளை தீவிரப்படுத்த "ஒத்திசைவான முயற்சிகள்" செய்யுமாறும் கேட்டுக் கொண்டது. இது மார்ச் 2021 ஆண்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஒரு சந்திப்பை திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வழக்கம்போல், "பன்முகச்சார்பியல் வாதம்" (multilateralism) மற்றும் வாஷிங்டனிலிருந்து "மூலோபாய தன்னதிகாரத்தை" (strategic autonomy) அபிவிருத்தி செய்வது என்ற அதன் இராணுவ மற்றும் நிதியியல் அபிலாஷைகளை, கடந்த மாதம் ஐ.நா.வில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கருத்துக்களை இது எதிரொலித்தது.
"சீனா-அமெரிக்க போட்டியைப் பற்றி மட்டுமே உலகம் இருக்க முடியாது," ஆனால் "சமகால ஒழுங்கின் சிதைவுக்கு எந்த அதிசய சிகிச்சையும் இருக்கவில்லை" என்று மக்ரோன் கூறினார். "பெருந்தொற்று நோய்க்கு முந்தைய அனைத்து தவறான கோடுகளும் – அதாவது பெரும் வல்லரசுகளின் மேலாதிக்கத்திற்கான மோதல், பன்முகச்சார்பியல் வாதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் அல்லது கையாளுதல் மற்றும் சர்வதேச சட்டத்தை மிதித்தல் ஆகியவைகள் துரிதப்படுத்தப்பட்டு ஆழமாகிவிட்டன" என்று அவர் மேலும் கூறினார்.
மாலிக்கான கூட்டு பிரெஞ்சு-ஜேர்மன் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு போன்ற ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தன்னதிகாரத்திற்கு அழைப்பு விடுத்த மக்ரோன்: அதாவது “பன்முகச்சார்பியல் வாதம் என்பது நம்பிக்கையின் செயல் மட்டுமல்ல, அது ஒரு செயற்பாட்டுத் தேவையாகும். … ஐரோப்பிய ஒன்றியம், பெரும்பாலும் பிளவுபட்டு, பலமற்றதாக இருக்கும் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது, இந்த நெருக்கடிக்கு நன்றிகூற வேண்டும் ஏனெனில் ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஒற்றுமையை நோக்கி ஒரு வரலாற்று அடியை எடுத்து வைத்துள்ளது” என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியமானது முக்கிய ஐரோப்பிய சக்திகளின் தலைமையிலான ஒரு பிற்போக்குத்தனமான கூட்டணியாகும், வெளிநாடுகளில் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்துகிறது மற்றும் தொழிலாளர்களின் செலவில் வெளிநாட்டு போர்களுக்கும் அவர்களின் இலாபங்களுக்கும் நிதியளிக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் COVID-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கையை நனவுடன் பின்பற்றுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்க அடைத்தலை முன்கூட்டியே நீக்கியதைத் தொடர்ந்து, பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறக்க ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மேற்கொண்ட செயற்பாடானது ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸின் மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.
ஐரோப்பாவில் இப்போது 2,384,762 பேர்கள் தீவிரமான தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஐரோப்பா கண்டம் முழுவதும் எண்ணிக்கைகளின் அதிகரிப்பு வெடிப்பாகவுள்ளன. நேற்று பிரான்சில் 12,148 நோய்த் தொற்றுகளும் மற்றும் 136 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பெயினில் 3,722 நோய்த் தொற்றுகளும் மற்றும் 113 இறப்புகள் மற்றும் பிரிட்டன் (6,968 / 66) ஆகியவைகளுடன் நிலைமை பேரழிவுகரமானதாகவுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் எண்ணிக்கைகள் தினசரி தொற்றுகளின் பதிவுகளானது, போலந்து (2,292 / 27), செக் குடியரசு (1,762 / 21), ரூமேனியா (2,343 / 53), உக்ரேன் (4,633 / 68) மற்றும் ரஷ்யாவில் (9,412 / 186) ) உள்ளன. ஜேர்மனியில் நேற்று 2,832 எண்ணிக்கையானது இது ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடானது இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிரமான ஒருங்கிணைந்த முயற்சிகள் எதுவும் இருக்காது என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக: ஒரு தொழிற்துறை மற்றும் வெளியுறவு கொள்கை சக்தியை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக அதனுடைய ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக கொடிய வேலைக்கு மீண்டும் திரும்பும் பிரச்சாரம் என்பதை உச்சிமாநாட்டின் முடிவில் தனது செய்திக் குறிப்பில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென் தெளிவுபடுத்தினார்.
"முக்கிய மூலோபாய பகுதிகளில் படைகளில் இணைந்து செயற்படுவதற்கான முன்னுரிமை மற்றும் நமது தொழிற்துறை பூகோள அளவில் போட்டியிட முடியும் என்பதை உறுதி செய்வது என்று "தொழிற்துறை சம்பந்தமாக" விளக்கினார். உங்களுக்குத் தெரியும், மார்ச் மாதத்தில் எங்கள் புதிய தொழிற்துறை மூலோபாயத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம், தொழிற்துறையானது இரட்டை பச்சை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதிப்படுத்தும்” என்றார்.
"ஐரோப்பா தெளிவாக அதன் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்," என்று வொன் டெர் லெயென் வலியுறுத்தினார், போட்டியாளர்களை விஞ்சுவதற்கு ஒரு வர்த்தகப் போர் மூலோபாயத்தை திறம்பட வகுத்தார். அதாவது "மூன்றாவது நாடுகளின் வெளிநாட்டு மானியங்கள் தொடர்பான சட்டமன்ற முன்மொழிவுகளில் நாங்கள் முழு வேகத்தில் செயற்படுகிறோம். மூன்றாவது நாடுகளின் இந்த வெளிநாட்டு மானியங்கள் எங்கள் ஒற்றை சந்தையின் செயற்பாட்டை கணிசமாக சிதைக்கக்கூடும் என்பதையும், ஐரோப்பிய ஒன்றிய சந்தையை இயக்குபவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாங்கள் அறிவோம்.”
WSWS ஆனது பெருந்தொற்று நோயை ஒரு "தூண்டுதல் நிகழ்வு" என்று வகைப்படுத்தியுள்ளது, இது உலக முதலாளித்துவத்தின் ஏற்கனவே முன்னேறிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை துரிதப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை மற்றும் வெளியுறவுக் கொள்கை தாக்குதலானது ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளுடன் சேர்ந்து, கண்டம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் சமூகப் பேரழிவு மற்றும் வறுமையை தீவிரப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்பதை தனது கருத்துக்களில், வொன் டெர் லெயென் விட்டுவிடவில்லை. "முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றிய போட்டி விதிகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்து விரிவான ஆய்வு செய்கிறோம். பூகோளமயமாக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் உலகில் அவைகளின் நோக்கத்திற்காக நாம் பொருத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதன் தெளிவான பொருள் என்னவென்றால்: அதாவது வங்கிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் கையளிக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மீண்டும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து கசக்கிப்புழியப்பட வேண்டும்.
பெருந்தொற்று நோயானது ஏகாதிபத்திய சக்திகளின் போருக்கான தயாரிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று நோய்க்கு சீனா தான் காரணம் என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் இன்னும் தீவிரமான தயாரிப்புகளையும் செய்து வருகிறது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய சக்திகளும் இந்த நெருக்கடியை ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கு எதிராகவும் தங்களது பெரும் சக்திக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லச் சுரண்டிக்கொள்கின்றன.