ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால யுத்தத்தின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் மீது வழக்குத் தொடர சாத்தியமான விசாரணையை முன்னெடுத்து செல்ல முடியும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மேல்முறையீட்டு குழு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

விசாரணையை தொடர்வதற்காக அமெரிக்காவிற்கான உள்நுழைவு அனுமதி இரத்து செய்யப்பட்ட காம்பியனில் பிறந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுனரான Fatou Bensouda, வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பைப் பாராட்டி "இன்று ஆப்கானிஸ்தானில் நீதிக்கான ஒரு முக்கியமான நாள்" என்று குறிப்பிட்டார்.

வாஷிங்டன் மற்றும் காபூல் ஒத்துழைக்க மறுத்துவிட்டதால், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் அதன் கைபொம்மை ஆட்சியும் செய்த குற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு “நீதிக்கான நலன்களுக்கு சேவை செய்யாது” என்ற முன்னைய ICC நீதிபதிகள் கடந்த ஆண்டு எடுத்த தீர்ப்பை இந்த தீர்ப்பு இரத்து செய்தது. நீதிமன்றத்திற்கு எதிராக பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல்கள், பொருளாதாரத் தடைகள் உட்பட, விசாரணையை முன்னோக்கி நகர்த்த அனுமதித்தால் அதன் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவார்கள் போன்ற அமெரிக்காவின் அச்சுறுத்தல்களின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ICC மேல்முறையீட்டு குழுவின் நீதிபதிகள்

"விசாரணையைத் தொடங்க நியாயமான அடிப்படை உள்ளதா என்பதை அரசு வழக்குத்தொடுனர் தீர்மானிக்க வேண்டும்." என்ற நிலைப்பாட்டில் மேல்முறையீட்டு நீதிபதிகள் கடந்த ஆண்டு முடிவானது ICC இன் சொந்த சட்டங்களுக்கு முரணானது என்று தீர்ப்பளித்தனர், மேல்முறையீட்டு நீதிபதிகள் இந்த வழக்கு "நீதிக்கான நலன்களுக்கு" சேவை செய்யுமா என்பதை தீர்மானிக்கும் எந்தவொரு தேவையும் மேல்முறையீட்டு மன்றத்திற்கு இல்லை என்றும், ஆனால் குற்றங்கள் நடந்துள்ளன மற்றும் அவை நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று நம்புவதற்கான காரணங்கள் உள்ளதா என்பது மட்டுமே அவசியமானது என்று கூறினர்.

இந்த விசாரணையானது ICC இனால் ஒரு பெரிய ஏகாதிபத்திய சக்திக்கு எதிராக தொடங்கப்பட்ட முதலாவதொன்றாகும். அதன் வழக்குகள் பெரும்பாலும் வறிய ஆபிரிக்க நாடுகளில் ஆட்சிகள் மற்றும் தலைவர்கள் செய்த குற்றங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான 2003 ஈராக் படையெடுப்பில் பிரிட்டிஷ் படைகள் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்த ஆரம்ப விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை போலன்றி, சர்வதேச நீதிமன்றத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ளது.

ICC இன் வழக்குத்தொடுனர்கள் ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஆரம்ப விசாரணையை முதலில் தொடங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2002 ஆம் ஆண்டின் தீர்மானத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதிலிருந்து ICC மீதான வாஷிங்டனின் அடையாள முத்திரையாக இருந்த போர்க்குணமிக்க அச்சுறுத்தல்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு தொடர்பாக பதிலளித்தார். விசாரணையை ஒரு "அரசியல் பழிவாங்கல்" என வர்ணித்து பொறுப்பெடுக்கமுடியாத அரசியல் நிறுவனம் ஒரு சட்டபூர்வமான அமைப்பாக முகமுடியணிந்துள்ளது" என்று விவரிக்கிறார். வெளிவிவகார செயலாளர் இந்த "நீதிமன்றம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத துரோகியிடமிருந்து நமது குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வாஷிங்டன் எடுக்கும்” என்று உறுதியளித்தார்.

ICC மேல்முறையீட்டு நீதிபதிகளின் தீர்ப்பை "பொறுப்பற்றது" என்று அவர் வகைப்படுத்தினார். ஏனெனில் வாஷிங்டன் ஐந்து நாட்களுக்கு முன்னர் தலிபான்களுடன் "சமாதான ஒப்பந்தம்" என்றழைக்கபடுவது செய்து கொண்ட பின்னர் அது வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்தானின் அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியின் படைகள் மீது இஸ்லாமிய இயக்கம் பல தாக்குதல்களை நடத்திய பின்னர், அமெரிக்க இராணுவம் தலிபான்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அந்த ஒப்பந்தம் ஏற்கனவே செயலிலக்க தொடங்கியுள்ளது. பொம்பியோவின் கருத்துக்களில் கூறப்படாத அனுமானம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் “அமைதி” என்பது வாஷிங்டனின் குற்றங்களை மூடிமறைப்பதன் அடிப்படையிலேயே அடையமுடியும் என்பதாகும்.

ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவுத்துறை செயலாளர், “அமெரிக்க படையினர்கள், மரைன்ஸ், விமானப் படையினர், கடற்படையினர் ஆகியோரைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் எடுக்கப்போகும் பாதை குறித்து சில வாரங்களுக்குள் நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்”. அது எங்கள் இராணுவத்தினர் உளவுத்துறையினர், மரைன்ஸ், ஆகாயப்படையினர் கப்பல் படையினர் வெளியுறவுத்துறையில் பணியாற்றிய இராஜதந்திரிகள் ... பல ஆண்டுகளாக ஒவ்வொருவரின் செயற்பாடுகளின் உன்னத தன்மையின் மீது ஐ.சி.சி யின் அழுத்தம் பிரதிபலிக்காதவகையில் இந்த அமெரிக்கர்களின் பாதுகாப்பு உறுதிசெயப்படும்” என மேலும் தெரிவித்தார்.

வாஷிங்டனின் அக்கறை அதனது துருப்புக்கள் மீது அல்ல, மாறாக ஆப்கானிஸ்தானில் நடந்த குற்றங்களின் உண்மையான காரணகர்த்தாக்களும், என்றோ ஒரு நாள் அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய, ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் அமைச்சரவையும் உயர் தளபதிகளுடன், இரு முக்கிய கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகள், பெருவணிக நலத்தின் பேரில் போரை ஆதரித்த மற்றும் அதை ஊக்குவித்த ஊடக பண்டிதர்களையும் பற்றியதாகும்.

பொம்பியோ தொடர்ந்து வலியுறுத்தினார், “அமெரிக்காவில் எங்களிடம் ஒரு திடமான அமைப்புமுறை உள்ளது. ஒரு அமெரிக்கர் தவறு செய்யும்போது, அது திருத்திக்கொள்வதற்கு ஒரு வழிமுறை எங்களிடம் உள்ளது.” ஆப்கானிஸ்தானில் சட்டவிரோதக் கொலைகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியதன் மூலம் இந்த “திடமான அமைப்பின்” தன்மை கடந்த ஆண்டு தெளிவுபடுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் கைதிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் சித்திரவதை, கொடூரமாக நடத்தப்பட்டமை, தனிப்பட்ட கௌரவம், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை போன்ற செயல்களைச் செய்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி ICC வழக்குத்தொடுனர் Bensouda விசாரணை செய்யுமாறு 2017 ல் கோரினார்.

வியாழக்கிழமை தனது தீர்ப்பில், ICC மேல்முறையீட்டு நீதிமன்று "மே 1, 2003 முதல் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் ஆயுதமோதலில் அங்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணையைத் தொடங்க பொருத்தமானவகையில் மேன்முறையீட்டில் திருத்தங்களை மேற்றக்கொள்ள வழக்குத்தொடுனருக்கு அதிகாரம் உள்ளது என பிரகடனப்படுத்தியது.

விசாரணையின் இந்த நீட்டிப்பு, போலந்து, லித்துவேனியா ருமேனியா போன்ற நாடுகளில் சிஐஏ நடத்தும் 'கறுப்பு தளங்கள்' என்று அழைக்கப்படும் பாக்ராம் விமானத்தளத்திலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பிற அமெரிக்க முகாம்களிலும் அமைக்கப்பட்ட சித்திரவதை மையங்களுடனான “தொடர்பு” பற்றியும் உள்ளடக்கியிருக்கும் என வழக்குத்தொடுனர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். இது ஈராக்கில் இழி புகழ்பெற்ற அபு கிரைப் தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை மையத்துடன் தொடர்புபடுத்தப்படலாம். ஆப்கானிஸ்தானில் கைதிகளை சித்திரவதை செய்த பின்னர் அமெரிக்க இராணுவ விசாரணைக்காக அவர்கள் இங்கு அனுப்பப்பட்டனர். அண்டை நாடான பாகிஸ்தானில் அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் படுகொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான படுகொலைகளையும் இது உள்ளடக்கக்கக்கூடும்.

அக்டோபர் 2001 ல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் எண்ணற்றவை. குண்டுஸ் நகர முற்றுகைக்குப் பின்னர் மூடி அடைக்கப்பட்ட உலோகக் கப்பல் கொள்கலன்களில் மூச்சுத்திணறல் மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட போர்க் கைதிகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் உட்பட நிராயுதபாணியான கைதிகளின் படுகொலைகளுடன் அவர்கள் ஆரம்பத்தில் தொடங்கினர்.

ஆப்கானிஸ்தானில் படைகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 100,000 வரை அதிகரித்த ஒபாமா நிர்வாகத்தின் 2009-2010 “எழுச்சியின்” ஒரு பகுதியாக கந்தஹார் மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவத்தின் 5 வது Stryker படைப்பிரிவின் ஒரு பிரிவினால் உருவாக்கப்பட்ட “கொலைப்பிரிவு” என்று அழைக்கப்படுவதால் செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட குற்றங்கள், மிகவும் இழிவான குற்றங்களில் அடங்கும். இந்த பிரிவின் அங்கத்தவர்கள் இதை ஒப்புக் கொண்டதுடன் மற்றும் கொடூரமான புகைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்ட, அவர்கள் பொதுமக்களை திட்டமிட்டு கொலை செய்வததுடன் அவர்களின் உடல்களை சிதைத்ததுடன், விரல்களையும் மண்டை ஓடுகளையும் வெற்றிக்கேடயங்களாக எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் தம்மால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குல் முடின் என்ற 15 வயது சிறுவனை நோக்கி ஒரு கையெறி குண்டு வீசி பின்னர் அவரை மிகவும் நெருங்கிய இடத்தில் பலதடவை சுட்டு பின்னர் அவரின் உடலை கவர்ந்துகொண்டனர். உடலை அடையாளம் காண அவரது தந்தையை அழைத்து வந்த பிறகு, சிறுவனின் விரல்களில் ஒன்றை வெட்டுவதற்கு முன்பு, அவர்கள் மாறிமாறி சடலத்துடன் படம் எடுத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். இந்தக்குழுவின் உறுப்பினர்கள் கிராமங்கள் வழியாக வாகனம் ஓட்டும்போது தங்கள் Stryker கவச வாகனத்தில் இருந்து இனிப்புகளை எறிந்துவிட்டு, அதை எடுக்க ஓடிய குழந்தைகளை சுட்டுக் கொன்றதையும் விவரித்தனர்

15 வயது குல் முடினின் உடலுடன் அமெரிக்க சிப்பாய்

பென்டகன் இந்த அட்டூழியங்களை ஒரு சில மோசமானவர்களின் வேலையாகக் காட்ட முயன்றபோது, கொலைகள் அவற்றின் தளபதிகள் மற்றும் இதேபோன்ற செயல்களில் பங்கேற்ற பிற பிரிவுகளுக்குத் தெரிந்தன. அவை ஒரு குற்றவியல், காலனித்துவ ஆக்கிரமிப்பின் விளைபொருளாக இருந்தன, அதில் முழு குடிமக்களையும் சாத்தியமான எதிரிகளாகவும் மனிதர்களை விடக் தரம்குறைவாகவும் கருதுவதற்கு துருப்புக்கள் கற்பிக்கப்பட்டன.

மோதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் எண்ணிக்கை 175,000 க்கும் அதிகமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் போரின் அழிவினால் மறைமுக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக உள்ளனர். கிட்டத்தட்ட 2,400 அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அமெரிக்க குற்றங்களில் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்கள், திருமண விருந்துகள், கிராமக் கூட்டங்கள் மற்றும் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஊழியர்களை அழித்தன.

அமெரிக்க போர்க்குற்றங்களின் மிக விரிவான வெளிப்பாடுகள் ";ஆப்கான் போர் குறிப்புக்கள்" என்றழைப்படுவதில் அடங்கியுள்ளன, இதில் தைரியமான அமெரிக்க இராணுவ தகவல்கசியவிட்டவரான செல்சியா மானிங் 2010 இல் விக்கிலீக்ஸுக்கு வழங்கிய 91,000 ஆவணங்கள் உள்ளடங்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 175 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது மோசமான சிறைத்தண்டனை விதிக்கும் உளவுச் சட்டக் குற்றச்சாட்டுக்களில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை இங்கிலாந்தில் எதிர்கொள்கிறார். அவரது பங்கிற்கு, அசாஞ்சிற்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்ததற்காக மானிங் வேர்ஜீனியாவில் உள்ள ஒரு அமெரிக்க மத்திய தடுப்பு மையத்தில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ICC 2002 இல் நிறுவப்பட்ட உடனேயே அதன் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சர்வதேச விசாரணையிலும் வாஷிங்டனின் கடுமையான விரோதப் போக்கு தெளிவாகத் தெரிந்தது. புஷ் நிர்வாகம் ஆரம்பத்திலிருந்தே அதை நிராகரித்தது, மேலும் அமெரிக்க காங்கிரஸ் அதன் ஒரு சட்டம்மூலம் இரு கட்சியினரதும் பெரும்பான்மையுடன், 'அமெரிக்கா கலந்துகொள்ளாத சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவியல் வழக்கு தொடரப்படுவதிலிருந்து அமெரிக்க பிரஜைகளை பாதுகாத்தது. அதே ஆண்டு, ஆப்கானிஸ்தானில் போர் தொடர்பான ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு அமெரிக்கா கட்டுப்படாது என்று அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் கூடும் ICC முன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் எந்தவொரு அமெரிக்க குடிமக்களையும் விடுவிக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது காங்கிரஸால் இயற்றப்பட்ட ICC எதிர்ப்புச் சட்டத்தை "ஹேக் படையெடுப்பு அங்கீகாரச்சட்டம்" என்று அமெரிக்க அதிகாரிகள் அகங்காரமாக குறிப்பிட்டார்கள்.

ICC இன் ஆப்கானிஸ்தான் விசாரணைக்கு அமெரிக்காவின் பதில் சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக நிராகரிப்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைத் தவிர வேறு எதையும் வாஷிங்டன் வழிநடத்தவில்லை என்ற எந்தவொரு பாசாங்கையும் அம்பலப்படுத்துகிறது. இது குறித்து, ட்ரம்ப் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியில் உள்ள அதனது எதிரிகள் எனக்கூறிக் கொள்வோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை அவர்கள் நிபந்தனையின்றி பாதுகாப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும், அமெரிக்க ஏகாதிபத்தியம் "பெரும் வல்லரசு" மோதல்களுக்குதயாராகி வருவதால் மிகப் பெரிய குற்றங்கள் மேற்றக்கொள்ள தயாரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

Loading