மொழியபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தவாரம் பிப்ரவரி 1984 அன்று, அப்பொழுது வேர்க்கஸ் லீக்கின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) தேசிய செயலாளராக இருந்த டேவிட் நோர்த் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிச தத்துவார்த்த கருத்துருக்களையும் வேலைத்திட்ட கோட்பாடுகளையும் கைவிடுதல் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். அப்பொழுது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவு பற்றிய ஒரு அரசியல் பகுப்பாய்வை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நோர்த் வழங்கினார். அவ்வறிக்கை, மத்திய கிழக்கில் முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி இணங்கிப்போதலை, 1950 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்திற்குள்ளே எழுந்த ஒரு கலைப்புவாதப் போக்கான பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் தசாப்த காலங்கள் நீடித்த போராட்டத்தின் உள்ளடக்கத்தில் முன்வைத்தது. அந்த அறிக்கையானது பிரிட்டனில் உள்ள சீர்திருத்தவாத போக்குகளுடனான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத உறவுகளைப் பற்றியும் மதிப்பாய்வு செய்தது.
பல ஆண்டுகளாக, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளின் பாதுகாப்பானது தொழிலாளர் புரட்சிக் கட்சி (1973 இல் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தால் ஸ்தாபிக்கப்பட்டது) தலைவர்கள் ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிவ் சுலோட்டர் ஆகியோரால் வழி நடத்தப்பட்டிருந்தது. ஆயினும் 1970 மற்றும் 1980களில், சோசலிச தொழிலாளர் கழகம் / தொழிலாளர் புரட்சிக் கட்சி அதிகரித்தளவில் தேசிய-சந்தர்ப்பவாத நோக்குநிலையிலும் நடைமுறையிலும் அபிவிருத்தி அடைந்தது.
வேர்க்கஸ் லீக் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு இடையிலான வேறுபாடுகள் 1982 அக்டோபரில் பகிரங்கமாக வெளிப்பட்டன. ஹீலியால் எழுதப்பட்ட சிற்றேடான இயங்கியல் சடவாத ஆய்வுகள் என்பதன் மீதான ஒரு விரிவான விமர்சனத்தை நோர்த் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு சமர்ப்பித்தார். இந்த விமர்சனம், ஹீலியின் மெய்யியல் வழிமுறையானது சடவாதத்தை மறுதலிப்பதிலும் அகநிலைக் கருத்துவாதத்தின் ஒரு வடிவத்திற்குத் திரும்புவதாகவும் அடிப்படையில் மார்க்சிச விரோதமாகும் என்றும் நிலைநாட்டியது. ஹீலியின் இயங்கியல் பற்றிய கருத்துவாத விளக்கமற்றதன்மையானது, மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவ தேசியவாதிகளுடனான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறவுகள் பற்றிய ஒரு ஆய்வுடன் தொடர்புடையதாக இருந்தது.
நோர்த்தின் விமர்சனம், ஆரம்பத்தில் மைக்கல் பண்டா மற்றும் கிளிவ் சுலோட்டரால் ஆதரிக்கப்பட்டது, அவரது எழுத்து மூலமான விமர்சனத்திற்கு அனைத்துலகக் குழுவிற்குள் ஒரு விரிவான கலந்துரையாடல் இருக்குமென இருவரும் உறுதி அளித்தனர், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இரு மூத்த தலைவர்களும் ஒரு சில வாரங்களிலேயே வேறொரு திருப்பம் எடுத்துவிட்டனர். 1982 டிசம்பரில் அனைத்துலகக் குழுவின் அடுத்து வந்த கூட்டத்தில் நோர்த்தின் விமர்சனத்தைப் பற்றி விவாதிப்பதை அவர்கள் எதிர்த்தனர். டேவிட் நோர்த்தின் விமர்சனத்தை விவாதிக்க அவர் வற்புறுத்துவாரேயானால் அனைத்துலகக் குழுவிற்குள் ஒரு பிளவை உருவாக்கும் மற்றும் வேர்க்கஸ் லீக்குடன் உறவுகள் துண்டிக்கப்படும் என்ற ஹீலியின் அச்சுறுத்தலை அவர்கள் ஆதரித்தனர். சாதகமற்ற இந்த நிலைமைகளின் கீழ், ஒரு பிளவைத் தவிர்க்க வேண்டி, நோர்த் அவரது விமர்சனத்தை திரும்பப்பெற்றார்.
ஆயினும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்றுமிராதவாறு வெளிப்படையான சந்தர்ப்பவாத தன்மையை ஏற்றுக்கொள்வதாகவே தொடர்ந்து இருந்தது. 1983 நவம்பரில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் மீதான வேர்க்கஸ் லீக்கின் “கடும் வலியுறுத்தல்” மீதான கிளிவ் சுலோட்டரின் விமர்சனத்தை நோர்த் நிராகரித்தார். ஜனவரி 23,1984 தேதியிட்ட பண்டாவிற்கு விடுத்த நீண்ட கடிதமொன்றில் நோர்த், “முடிவுகள் மற்றும் வழிமுறை இரண்டிலும் வரலாற்றுரீதியாக பப்லோவாதத்துடன் தொடர்புபட்டிருக்கும் அதேபோன்ற அரசியல் நிலைப்பாட்டை நோக்கிய அரசியல் வழிவிலகலின் வளர்ந்துவரும் அறிகுறிகளால் வேர்க்கர்ஸ் லீக் மிகவும் தொந்திரவுக்குள்ளாகி உள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஒரு விரிவான சர்வதேச தீர்மானத்தை வரைவதற்கும், நிரந்தரப் புரட்சி தத்துவமானது “சோசலிசப் புரட்சியின் உலக கட்சியைக் கட்டுவதற்கான “தவிர்க்கமுடியாத விஞ்ஞான அடித்தளமாக தொடர்ந்து இருக்கும்” என்ற அதன் நம்பிக்கையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுதிப்படுத்துவதற்கும் நோக்கங்கொண்ட, “ஒரு சர்வதேச முன்னோக்கு மீதான ஒரு சக்தி மிக்க விவாதத்திற்கான அடித்தளத்தை தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட அனைத்துலகக் குழு கூட்டத்தால் முன்வைக்கப்பட்ட வாய்ப்பை” அனைத்துலகக் குழு பயன்படுத்திக் கொள்வதற்கு அழைப்பு விடுப்பதன் மூலம் நோர்த் அவரது கடிதத்தை முடித்தார்.
ஆனால் தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த வேறுபாடுகள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட மறுத்து வந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணிப் பகுதிகள் பங்கேற்ற 11 பிப்ரவரி 1984 கூட்டத்திலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி தன்னிச்சையாக விலகிக்கொண்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்கள் அறிக்கையின் எந்த விஷயத்திற்கும் விடைசொல்லாமல் வேர்க்கஸ் லீக்கை கண்டனம் செய்து நோர்த்துக்கு பதிலிறுத்தனர். கிரேக்கப் பகுதியின் தலைவரான சவாஸ் மிஷேல், அவரது தெஹ்ரான் விஜயமும் இடதுசாரிக் கட்சிகளை ஈரானிய ஆட்சி களையெடுத்ததை பகிரங்கமாக அங்கீகரித்ததும் குறிப்பாக நோர்த்தால் விமர்சிக்கப்பட்டதும், அவர் சுயகட்டுப்பாட்டை இழந்து வெறித்தனமான சண்டையில் இறங்கினார்.
மீண்டும் ஒருமுறை உடனடியான பிளவுக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அச்சுறுத்தியது. நோர்த்தின் விமர்சனத்தின் உள்ளடக்கம் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மைப் பகுதிகளுக்கு இன்னும் தெரிந்திராத நிலையில், அல்லது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கீழணி உறுப்பினர்கள் மத்தியில் தெரிந்திராத நிலையில், வேர்க்கஸ் லீக் பேராளர் குழு, `தொடர்ச்சியான ஆலோசனையை கருத்தில் கொண்டு காலத்தை எதிர்பார்த்து விமர்சனத்தை திரும்பப்பெற்றது.
ஜனவரி 23, 1984ல் நோர்த் தனது கடிதத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியால் அனைத்துலகக் குழுவிற்குள் திணிக்கப்பட்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டை ஆய்வு செய்யவில்லை எனில் திருத்திக்கொள்ளவில்லை எனில், “அதன் பகுதிகளுக்குள்ளேயே அரசியல் பேரழிவுகளை உண்டு பண்ணும்” என எச்சரித்திருந்தார்.
ஒரு வருடத்திற்கும் பின்னர் 1985 கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியை அரசியல் பேரிடர் தாக்கியது. தொழிலாளர் புரட்சிக் கட்சி அமைப்பு ரீதியான நெருக்கடியால் சிதறுண்டு போனது, அதற்கான ஏற்கத்தக்க விளக்கத்தை அவ்வமைப்பின் ஒரு தலைவராலும் கூட அளிக்க முடியவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி கன்னைவாத மோதல்களுக்குள் சறுக்குகையில், டேவிட் நோர்த்தால் 1982 மற்றும் 1984 இல் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்துலகக் குழு முழுவதற்கும் அத்தோடு பிரிட்டிஷ் பகுதி உறுப்பினர்களுக்கும் விரைந்து விநியோகிக்கப்படத் தொடங்கின.
அனைத்துலகக் குழுவின் தீர்க்கமான பெரும்பான்மை மற்றும் பிரிட்டிஷ் பகுதியின் கீழ்மட்ட அணி உறுப்பினர்களின் கணிசமான பெரும்பான்மை, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. பண்டாவும் சுலோட்டரும் கட்சியின் நெருக்கடிக்குப் பின்னே இருக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் விடயங்களை ஆய்வு செய்வதை தவிர்க்கும்பொருட்டு, ஒரு பாலியல் குற்றச்சாட்டை முக்கியத்துவப்படுத்துவதன் மூலம், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மிக நோக்குநிலை தவறிய மற்றும் வலதுசாரி உறுப்பினர்களிடையே வெறித்தனத்தைத் தூண்டிவிட அவற்றைப் பயன்படுத்தினர்.
சுலோட்டர் அனைத்துலக் குழுவின் அனைத்துப் பகுதிகளும் “சமமான அளவில் சீரழிந்து” விட்டன என்ற அப்பட்டமான நேர்மையற்ற கூற்றை இட்டுக்கட்டினார். ஆனால் 1982க்கும் 1984க்கும் இடையில் வேர்க்கஸ் லீக்கினால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் 1985க்கு முன்னரும் ஹீலிக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான எதிர்ப்பு இருந்திருந்தது என்பதை நிலைநாட்டின. மேலும் வேர்க்ஸ் லீக்கினால் தயாரிக்கப்பட்ட ஆவணம் அனைத்துலகக் குழுவிற்குள் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளின் வெற்றிக்கும் புதுப்பித்தலுக்குமான தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட அடித்தளத்தை வழங்கியது.
1985 டிசம்பர் 16ம் திகதி, தொழிலாளர் புரட்சிக் கட்சியால் முதலாளித்துவ தேசிய அரசாங்கங்கள் மற்றும் அமைப்புக்களுடன் ஊழல்மிக்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன என்ற ஆவணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையின் நிறைவேற்றத்திற்குப் பின்னர், அனைத்துலகக் குழுவானது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அங்கத்துவத்தை இடைநீக்கம் செய்தது. அதன் தீர்மானம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் தொழிலாளர் புரட்சிக் கட்சியை மீண்டும் சேர்ப்பது என்பது வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளை அது தெளிவாக ஏற்றுக்கொள்ளலைச் சார்ந்திருக்கிறது என்று வரையறை செய்தது. ஹீலியின் கன்னையானது அனைத்துலகக் குழுவிலிருந்து ஏற்கனவே பிளவுற்றிருந்தது. பண்டா சுலோட்டர் குழு ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் மீண்டும் சேர்ப்பது என்பதை எதிர்த்து வாக்களித்தமை எதிர்பாரததாய் அமைந்தது. ஆயினும், தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் சர்வதேசிய போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய டேவ் ஹைலண்ட் அனைத்துலகக் குழுவால் வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார். இந்தப் போக்கினர் 1986 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை (பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) நிறுவினர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக்கொண்ட தொழிலாளர் புரட்சிக் கட்சி விரைவில் தனித்தனியாக உடைந்தது. நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றின் மீதும் கடும் தாக்குதலை எழுத்துமூலம் அளித்த பண்டா, பின்னர் தன்னை ஸ்ராலினின் ஆதரவாளர் என்று பறைசாற்றிக்கொண்டார். 1990களின் ஆரம்பத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மிச்ச்சொச்சங்கள் ட்ரொட்ஸ்கிசத்தோடு அனைத்து தொடர்புகளையும் அறுத்துக் கொண்டன. சுலோட்டர், லெனினிச–ட்ரொட்ஸ்கிச கட்சியின் அவரது நிராகரிப்பை பறைசாற்றிக் கொண்டார்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவுடனான பிளவு பற்றிய ஒரு விரிவான ஆய்வு அடங்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை “How the Workers Revolutionary Party Betrayed Trotskyism,” (தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது) வெளியிடப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிப்ரவரி 11, 1984 கூட்டத்திற்கு டேவிட் நோர்த் முன்வைத்த அறிக்கை உட்பட, பிளவின் ஆவணங்கள் துணைத் தொகுதியான “The ICFI Defends Trotskyism: 1982-1986.” (“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாக்கிறது: 1982-1986”) என்பதில் அடங்கியுள்ளன.
ட்ரொட்ஸ்கிசம் மீதான பண்டாவின் தாக்குதல்களுக்கு டேவிட் நோர்த்தால் அளிக்கப்பட்ட விடை நாம் காக்கும் மரபியம் என்ற நூலில் உள்ளது, அது1986-87 இல் அனைத்துலகக் குழுவின் பத்திரிகைகளில் தொடராக பிரசுரிக்கப்பட்டிருந்தது, 1988 இல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது. நாம் காக்கும் மரபியத்தின்புது பதிப்பு2018 இல் அனைத்துலகக் குழுவின் நூல் வெளியீட்டகமான மெஹ்ரிங் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.
1982க்கும் 1986க்கும் இடையில் கட்டவிழ்ந்த போராட்டமானது ஆழமான வரலாற்று மற்றும் நிகழ்கால முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடுத்தடுத்த முழு தத்துவார்த்த. அரசியல் மற்றும் நடைமுறை அபிவிருத்திக்குமான ஒரு அடித்தளத்தை வழங்கியுள்ளது.
பிப்ரவரி 11, 1984 அறிக்கை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான 1982-1986 போராட்டத்தின் முழு சான்றும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அத்தியாவசிய அடித்தளமாக இன்றைய நாளும் தொடர்ந்து இருக்கும் தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் செறிந்த சுருக்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்துகிறது.
Joseph Kishore
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு டேவிட் நோர்தால் வழங்கப்பட்ட அரசியல் அறிக்கை
February 11, 1984
1. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 30 ஆண்டுகால வரலாறென்பது புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தின் பதிவுச் சான்றாக இருந்து வருகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்திய அனைத்து சக்திகளுக்கும் —ஸ்ராலினிசவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பப்லோவாதிகள்— எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அனைத்து முந்தைய தலைமுறை மார்க்சிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த மற்றும் அமைப்பு ரீதியான போராட்டங்களினூடாக நிலைநாட்டப்பட்ட மரபுகள் மற்றும் கோட்பாடுகளை அனைத்துலகக் குழு அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இந்த முந்தைய தலைமுறைகளுடனான அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சி அபிவிருத்தி செய்யப்பட்ட வழியானது, மார்க்சிச விரோதத்தின் ஒவ்வொரு வகைக்கும் எதிரான போராட்டத்தினூடாக, தொழிலாளர் இயக்கதிற்குள்ளே வெளிப்பட்ட, குறிப்பாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளேயான போராட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றாலும் கருதப்பட்ட வடிவம் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அப்போதைய உள்ளடக்கத்தால் தீர்மானிக்கப்பட்டது. வரலாற்று சடவாதத்தையும் இயங்கியல் வழிமுறையையும் தனக்கு அடித்தளமாகக் கொண்டு அனைத்துலகக் குழுவானது இந்தப் போராட்டம் ஒவ்வொன்றிலும் உள்ள வர்க்க சக்திகளை வெளிக்காட்டவும் ஏகாதிபத்தியம் மார்க்சிசத்தை அழிப்பதற்கு நாடிய கருத்தியல் வடிவங்களை திருத்தல்வாதத்தின் புதிய விளக்கிக்காட்டல்கள் ஒவ்வொன்றிலும் அம்பலப்படுத்தவும் தொடர்ந்து போராடி இருக்கிறது.
2. புரட்சிகர இயக்கத்தின் வரலாறு முழுவதும் மார்க்சிசத்தின் மீதான கருத்தியல் தாக்குதல்களின் அத்தகைய வடிவங்கள், வர்க்கப் போராட்டமானது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தபொழுது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு மிக நேரடியான அச்சுறுத்தலை முன்வைத்த பொழுது துல்லியமாக வெளிப்பட்டன. ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியோடு மற்றும் இந்த சகாப்தத்தின் ஆரம்பத்தில் சோசலிசப் புரட்சியின் (1905 ரஷ்யப் புரட்சியில் ஏற்கனவே தெளிவாக காணப்பட்டது) அபிவிருத்தியோடு பேர்ன்ஸ்டைன் வாதம் எழுந்தது. உலக முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு எப்போதும் மாபெரும் சவாலாக இருக்கும் முதலாவது தொழிலாளர் அரசின் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வெளிப்பாடாகவே ஸ்ராலினிசம் இருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே திருத்தல்வாதத்தின் வளர்ச்சிக்கும் ஏகாதிபத்தியத்தின் அவசியமான தேவைகளுக்கும் மிகவும் நேரடியான தொடர்பாகவும் இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய நெருக்கடியின் மிகப்பெரிய புள்ளியில், பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் போக்கு வெளிப்பட்டது “தற்செயல்நிகழ்வு” அல்ல. பப்லோவாதத்தின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி நாம் பலதடவை வலியுறுத்தல் செய்திருக்கிறோம். அது உலக ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த நெருக்கடியை எதிரொலித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் போருக்குப் பிந்தைய மாபெரும் நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் திட்டவட்டமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே எழுந்தது. வர்க்க அழுத்தத்திற்கு காரியாளர் பாதிக்கப்படும் ஆபத்தானது, வழிமுறை பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளுடன் இணைந்த ஏகாதிபத்திய முரண்பாடுகள் மிகவும் பிரத்தியேகமாகக் கூர்மை அடைந்திருக்கும் புள்ளியில் சக்திமிக்கதாக ஆகிறது.
இயங்கியல் சடவாத மற்றும் வரலாற்று சடவாத வழிமுறையை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான ஆய்விற்கு தங்களின் மேலோட்டமான பதிவுவாதங்களை பதிலீடாக வைக்கின்ற பப்லோ மற்றும் அவரது அமெரிக்க சகா கிளார்க் போன்ற அனுபவவாத மற்றும் நடைமுறைவாதிகள் ட்ரொட்ஸ்கிசத்தின் திரித்தலுக்கும் “உயிரோடிருக்கும் சம்பவங்களின் யதார்த்தம்” என்பதுடன் இணைந்த வகையில் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வதற்கு கோட்பாடு சார்ந்த நிலைப்பாட்டை கைவிட்டனர். கோட்பாட்டின் அடிப்படையில் நிற்பவர்கள் “அதி இடது” மற்றும் “குறுங்குழுவாதி” என பழக்கரீதியில் கண்டனம் செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், அதன் “புதிய யதார்த்தம்” எனக் காட்டப்பட்ட பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ஏகாதிபத்தியத்தின் மீதான பிரமையான ஸ்திரத்தன்மையையும் தொழிலாளர் இயக்கத்திலும் தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் தற்காலிகமாக மேலாதிக்கம் செய்த அரசியல் சக்திகளையும் விமர்சனமற்ற முறையில் ஆரத்தழுவுதலுக்கு அதிகமாக வேறொன்றுமில்லை என காட்டியது.
3. 1961க்கும் 1964க்கும் இடையில் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு (SWP) எதிராக சோசலிச தொழிலாளர் கழகத்தால் (SLL) தொடுக்கப்பட்ட போராட்டம் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அடிப்படையான அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகளையும் முன்னுக்குக் கொண்டுவந்தது: முதலாளித்துவத்திற்கு புதை குழி தோண்டும் மற்றும் சோசலிச சமூகத்தைக் கட்டும் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரித்தல்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிராகரித்தல்; தன்னிச்சைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மறுத்தல் மற்றும் மார்க்சிச தத்துவத்திற்கான நனவான போராட்டத்தின் அவசியத்தை நிராகரித்தல்; நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை கைவிடல். சோசலிச தொழிலாளர் கட்சிக்கான அதன் முதலாவது கடிதத்தில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு இந்த எச்சரிக்கையை விடுத்தது:
“புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் ஆபத்து கலைப்புவாதம், அது ஏகாதிபத்தியத்தின் பலத்துக்கு அல்லது தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அதிகாரத்துவ அமைப்பின் பலத்துக்கு அல்லது இரண்டுக்கும் சரணடைவதிலிருந்து ஊற்றெடுக்கிறது. பப்லோவாதம், சர்வதேச மார்க்சிச இயக்கத்தில் உள்ள கலைப்புவாதப் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது 1953 ஐ விட இப்பொழுது மிகவும் தெளிவாகவே உள்ளது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் அனைத்து மாரக்சிச தத்துவ மற்றும் மூலோபாயத்தின் மையமாக இருக்கும் முன்னேறிய தொழிலாள வர்க்கமானது பப்லோவாதத்தின்படி, இனி வரலாற்றின் முன்னணிப்படையே அல்ல, இதுவே, மாறாக உலக வரலாற்றுக் காரணிகளின் விளையாட்டுப்பொருளாக அருவமாக கணிப்பிடப்பட்டு மதிப்பிடப்பட்டது…. இங்கு புரட்சிகர இயக்கத்தின் வரலாற்று சாத்தியம் மறுக்கப்படுகிறது, அனைத்தும் பரந்த சக்திகளுக்கு (panoramic forces) கீழ்ப்படுத்தப்படுகிறது; சோவியத் அதிகாரத்துவத்தின் பாத்திரம் மற்றும் காலனித்துவப் புரட்சியில் வர்க்க சக்திகளின் பங்கு தீர்க்கப்படாமல் விடப்படுகிறது. அது இயற்கையானது, ஏனெனில் இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியமானது, முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் பங்கும் அவற்றின் தொழிலாளர் இயக்கங்களின் தலைமை நெருக்கடியும் ஆகும்….
“தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதுமான மூலோபாயத்திலிருந்து எந்த பின்வாங்கலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பங்கில் உலக வரலாற்று தவறின் முக்கியத்துவத்தை எடுக்கும்.” (Trotskyism Versus Revisionism, தொகுதி.3, பக்கம். 48-49)
காஸ்ட்ரோவால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட தோல்விகளின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்தைப் புதுப்பிப்பதற்கு SWP இன் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, SLL 1961 மே இல் எழுதியது:
“இந்த சகாப்தத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் இன்றியமையாத கூறு, வளர்ச்சி குன்றிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கமானது ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்கவும் ஒரு சுயாதீனமான தேசிய அரசை நிறுவவும் திராணியற்றது என்ற தத்துவம் ஆகும். இந்த வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் உறவுகள் வைத்துக்கொள்ளும் மற்றும் அப்படி இருந்தாலும் அது நிச்சயமாகவே ஒரு சுதந்திரமான முதலாளித்துவ அபிவிருத்திக்கு திராணியற்றது. தேசிய விடுதலைப் போராட்டங்களில் தொழிலாளர் இயக்கமானது லெனினின் முழக்கங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் உடனடி ஒத்துழைப்பாளர்களுக்கு எதிராக “சேர்ந்து நட தனித்து போராடு என்பதைப் பின்பற்ற வேண்டும். மார்க்சைப் பின்பற்றி நாம் கூறலாம்: நமது எதிரிக்கு எதிராக பொதுவாக தாக்குதல் தொடுக்கும்வரை நாம் முதலாளித்துவ கட்சிகளுக்கும் குட்டி முதலாளித்துவ கட்சிகளுக்கும் ஆதரவு தரலாம்; அவர்களது சொந்த ஆட்சி நிலைப்பதற்கும் அவர்களின் இருப்புக்கான சொந்த நிலைகளை ஸ்திரப்படுத்த விரும்பும் ஒவ்வொரு விடயங்களிலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும். அத்தகைய தேசியவாத தலைவர்களின் பங்கை ஊக்குவிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலை அல்ல. அவர்கள் வெகுஜனங்களின் ஆதரவை ஆணையிட முடிவது எல்லாம் சமூக ஜனநாயகவாதிகளின் தலைமையின் மற்றும் குறிப்பாக ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணத்தினால் மட்டுமே ஆகும், மற்றும் இந்த வழியில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளர் மற்றும் விவசாய வெகுஜனங்களுக்கும் இடையில் இடைத்தடைகளாக ஆகியுள்ளனர்.” (தொகுதி. 3, பக்கம் 64-65)
4. 1982 டிசம்பர் 31 அன்று “புதிய அகிலம்” (New International) என்பதன் முதலாவது பதிப்பில் வெளியிடப்பட்டதும் ஜாக் பார்ன்ஸ் ஆல் வழங்கப்பட்டதுமான உரை, அனைத்துலகக் குழுவால் தொடுக்கப்பட்ட போராட்டத்தை சக்திமிக்க வகையில் நிரூபணம் செய்தது. பிளவுக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகள் கழித்து SWP நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் 1938 இல் இடைமருவு வேலைத்திட்டத்தில் விரிவாக்கப்பட்டவாறான நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட அடித்தளத்தையும் நிராகரிப்பதாக இப்பொழுது தெளிவாகவே விளக்குகிறது. எழுதியிருப்பது என்னவென்பதை நாம் கவனிப்போம், ஏனெனில் பிரசுரிக்கப்பட்ட பதிப்பு, இந்த கோடையில் வேர்க்கஸ் லீக்கால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட சுருக்கமான நகலெடுப்பை விடவும் மிகத் தெளிவான படத்தை நமக்கு வழங்குகிறது.
5. ஸ்ராலினின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி போராடியதில் அவர் வகித்த முக்கியமான பாத்திரத்தை தான் மறுக்கவில்லை மற்றும் “ட்ரொட்ஸ்கியின் பங்களிப்புகள் உலகப் புரட்சி முன்னேறிக் கொண்டிருக்கையில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் அவற்றின் இடத்தைக் கண்டுகொள்ளும் என்ற சாத்தியத்தை அவர் திறந்து விட்டுச் சென்றிருக்கிறார்”. ஆயினும், நிரந்தரப் புரட்சி தந்துவம் மீதான ட்ரொட்ஸ்கியின் தவறிலிருந்து கட்டாயம் இந்தப் “பங்களிப்புக்களை” (பக்கம் 83)சிக்கலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பார்ன்ஸ் கூறுகிறார்.
“வார்த்தையின் இந்தப் பிரயோகம் எம்மைப் பொறுத்தவரை மிகப்பெரிய அரசியல் பிரச்சினையை முன்வைக்கிறது, ஏனெனில் அது ட்ரொட்ஸ்கியின் 1917க்கு முந்தைய தவறான தத்துவத்துடன் தொடர்புடையதாக எமது இயக்கத்திற்கு பலவீனத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அது கிராமப்புற சுரண்டலாளர்களுக்கு எதிராக விவசாய தொழிலாளர்களுடனும் ஏழை விவசாயிகளுடனும் பாட்டாளி வர்க்க கூட்டுக்கு கவனம் செலுத்த வைக்கும் ஒரு போக்குக்கு வழிவகுக்கும், ஐயத்திற்கிடமில்லாமல், நாட்டுப்புறத்தில் மையப் பணி காலனித்துவ உலகில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மற்றும் நிலப்பிபிரபுத்துவ-முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக பரந்த சாத்தியமான கிராமப்புற உற்பத்தியாளர்களுடனான பாட்டாளி வர்க்கக் கூட்டின் மையத்தன்மையை அங்கீகரிக்காமல் விலக்குதற்கு வழிவகுக்கும். இரண்டாம் உலகப் போரிலிருந்து உலக வர்க்கப் போராட்டம், குறிப்பாக 1959க்குப் பின்னர் இந்த அரைக்கோளத்தில், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் இந்தப் பலவீனங்களைத் தளமாக கொண்டிருக்கும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ற மட்டத்திற்கு இடதுசாரி இயக்கங்களுக்கும் குறுங்குழுவாத அரசியல் தவறுகளுக்கும் கதவு திறந்துவிட்டிருக்கிறது என்று எம்மை நம்பச்செய்யும்.
“நிரந்தரப் புரட்சி. நம்மையும் சரி அல்லது இதர புரட்சியாளர்களையும் சரி தொழிலாள வர்க்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அந்த அதிகாரத்தைக் கொண்டு உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கும் ஆயுதபாணியாக்குவதற்கு இன்று பங்களிப்புச் செய்யவில்லை. அது ஒரு சிறப்பான அல்லது தனித்தன்மையான குறிப்பு என்ற வகையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் மற்றும் கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு காங்கிரசுடனான அரசியல் தொடர்ச்சியை மறுபடியும் புத்துயிர் பெறச்செய்வதற்கு ஒரு தடையாக இருக்கிறது. எமது இயக்கத்தில் மார்க்சிசத்தின் ஆசிரியர்களை, குறிப்பாக லெனினது எழுத்துக்களைப் புறநிலையாக வாசிப்பதற்கு ஒரு தடையாக இருந்து வந்திருக்கிறது.
இன்றைய உலகில் பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களிடையே சென்று கொண்டிருக்கும் அரசியல் கூட்டுக்களின் பகுதியாக கற்றுக்கொள்ளக்கூடியதை கற்றுக்கொள்வதாக இருந்தால், மற்றும் அந்த செயல்முறைகளுக்குள் ட்ரொட்ஸ்கியின் பெரும் அரசியல் பங்களிப்புக்களை கொண்டுவந்தால், பின்னர் நமது இயக்கம் கட்டாயம் நிரந்தரப் புரட்சியைக் கைவிட்டுவிட வேண்டும்” (New International, Vol. 1, எண்1, பக்கம் 12-13)
பார்ன்ஸ் சொல்வது என்னவெனில் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளின் அனைத்துப் பகுதியினரையும் ஒன்றிணைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டை பலியிட்டு, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் மீது ஒரு பக்க வலியுறுத்தலை ட்ரொட்ஸ்கி வைத்தார் என்பதாகும். பார்ன்ஸின் படி, போருக்குப் பிந்தைய அபிவிருத்திகள் —அனைத்திற்கும் மேலாக, 1959 இல் காஸ்ட்ரோவின் வெற்றியோடு தொடங்கியவை— ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மக்கட்தொகையின் அனைத்துப் பகுதிகளையும் ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்ட வடிவமாக ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தாலும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் மகத்தானதாக இருக்கின்றது என்று நிரூபிக்கின்றனவாம். ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அந்த இயக்கங்களுடனான உறவுகள், அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் ஒரு சந்திப்பின் வாய்ப்புவளங்கள் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான பாத்திரம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மீது நிரந்தரப் புரட்சியால் வைக்கப்பட்ட தவறான வலியுறுத்தலின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றனவாம்.
6. பார்ன்ஸுடன் தொடர்வோம்:
“ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்பு, விவசாயப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றன என்று கொமின்டேர்ன் (மூன்றாம் அகிலம்) எமக்கு கற்பித்தது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டவும் அவர்களின் பாட்டாளி வர்க்கத் தலைமைக்கு போராடுவதற்குமான பாதையை வரைந்தது. கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒவ்வொரு ஸ்தூலமான போராட்டத்தையும் அது எவ்வளவு வரையறைக்குட்பட்டதாக இருந்தாலும் எந்த தலைமையின் கீழ் இருந்தாலும் பரவாயில்லை, அதனை ஆதரிக்கும் அதேவேளை, தொழிலாளர் விவசாயிகளின் அடிப்படையிலான புரட்சிகர தேசிய இயக்கங்களுக்கும் தேசிய விடுதலைக்கான உழைக்கும் மக்களின் போராட்டத்திற்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவவாதிகள் மேலாதிக்கம் செய்யும் தேசிய இயக்கங்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது.” (பக்கம்.33)
“ட்ரொட்ஸ்கி, விவசாயிகளுடனான பாட்டாளி வர்க்க கூட்டை ஒட்டுமொத்தமாக கிராமப்புற ஏழைகளுடனான கூட்டுக்கு எதிராக வைத்தார் மறுபுறம் லெனினோ, ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை வகிக்கக்கூடியதாக்கும் அணிவகுப்பின் வழியாக தொழிலாள வர்க்கத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட மற்றும் அங்கிருந்து சுரண்டலாளர்களிடமிருந்து பறிப்பதை நோக்கி முன்னேறுவதற்குரிய வலுவான சாத்தியமான நிலையில் இருக்க வைக்கும் ஒரு பாதையை பின்பற்றினார். ட்ரொட்ஸ்கியை போலல்லாமல், லெனின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களின் பெரும் நிகழ்ச்சிப்போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் வர்க்கக் கூட்டுக்களை மாற்றும் ஒரு ஸ்தூலமான அரசியல் புரிதலின் அடிப்படையில் ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சிக்கு மாறுவதற்கான ஒரு மூலோபாயத்தை முன்வைத்தார்.” (பக்கம்.44)
7. ஜனநாயகப் புரட்சியை ஒரு வேறுபட்ட இடைமருவும் கட்டமாக அதன் மீது பெரும் வலியுறுத்தலை வைக்கையில், அதற்கு முதலாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலிருந்து நீங்கி, அவர் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கிறார், பார்ன்ஸின் எதிர்ப்புரட்சிகர நிலைப்பாடு முற்றுமுழுதாக தெளிவானதாக ஆகிறது. இங்கு சம்பந்தப்படுவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு வகை தத்துவார்த்த இலட்சினையை சவால் செய்வது அல்ல. அங்கு திட்டவட்டமான அரசியல் உட்குறிப்புக்கள் உள்ளன. ஜனநாயகப் புரட்சியை அடையக்கூடிய ஒரு கருவியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பார்ன்ஸ் நிராகரிக்கிறார். அவர் விவசாயிகளின் வர்க்கத் தன்மையை மறுக்கிறார் (அது லெனினின் அடிப்படைக் கல்வியூட்டலை மறுதலிப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது, பின் அது 1917க்கு முந்தைய கருத்துருவான ஜனநாயக சர்வாதிகாரம் என்றொரு பிற்போக்கு கொச்சைப்படுத்தல் மற்றும் திரித்துலுக்கு இட்டுச்செல்கிறது) மற்றும் “ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்குள்ளே உள்ள அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் அலட்சியம் செய்கிறார், அல்லது அவை ஒப்பீட்டளவில் முக்கியமானவை அல்ல என்று கூறுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன்னரே ஏற்படுத்தாமல், புரட்சியின் ஜனநாயக கட்டத்திலிருந்து “சோசலிச” கட்டத்திற்கு உருமாறுவது அமைதியான முறையில் மற்றும் மெதுவாக இருக்க முடியும் என அவர் தெளிவாக குறிப்பால் உணர்த்துகிறார், அப்படியிருக்க, யதார்த்தத்தில், வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியதுபோல, பலவந்தமான புரட்சி இல்லாமல் ஒரு வர்க்கத்தின் ஆட்சியிலிருந்து இன்னொரு வர்க்கத்தின் ஆட்சிக்கு அமைதியாக “கடந்து செல்லல்” இருக்க முடியாது. இதுதான் லெனினின் 1917க்கு முந்தைய ஜனநாயக சர்வாதிகாரம் தத்துவத்தில் ட்ரொட்ஸ்கி கண்டுபிடித்த அடிப்படைக் குறைபாடாகும். இந்த சகாப்தத்தின் இயல்பை அடிப்படையாக வைத்து, ட்ரொட்ஸ்கி விவசாயப் புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக கடமைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் மற்றும் தலைமையின் மூலம் மட்டுமே அபிவிருத்தியடைய முடியும் என்று முன்கூட்டிப் பார்த்தார்.
இவை அனைத்தும் பார்ன்ஸால் அவரது ட்ரொட்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் மறுக்கப்படுகிறது:
“ஸ்ராலினின் வலதுசாரி தவறுகளை எதிர்த்துப் போராடுகையில், 1928ல் ட்ரொட்ஸ்கி இடதுசாரி தவறுகளை உட்செலுத்தினார். ரஷ்யாவுக்கு பிரயோகப்படுத்திய 1917க்கு முந்தைய போல்ஷிவிக்குகளின் மூலோபாயத்தை நேரடியாக சவால் செய்யாமல் ட்ரொட்ஸ்கி உண்மையில் அவரது 1917க்கு முந்தைய அவரது சொந்த நிலைப்பாட்டை, ஜனநாயகப் புரட்சியில் ஒட்டுமொத்தமாக விவசாயி உடனான ஒரு கூட்டை நிராகரிக்கிறார். அவர் இப்பொழுது இதனை சீனாவிற்குப் பிரயோகப்படுத்துகிறார், மற்றும் காலனித்துவ உலகின் மற்ற நாடுகளுக்கும் குறிப்பால் உணர்த்துகிறார். ட்ரொட்ஸ்கியின் 1928 ஆவணம் இந்த தொழிலாளர் விசாயிகள் கூட்டின் அடிப்படையிலான இடைமருவு ஆட்சி மற்றும் காலகட்டம் பற்றிய கருத்துருவைக் கொண்டிருக்கவில்லை. சுரண்டலாளர்களிடமிருந்து சுவீகாரம் செய்வதிலும் அரசு சொத்து மற்றும் திட்டமிடல் மீது அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்தி உறவுகளை ஏற்படுத்துதலிலும் அவர்களின் மிகவும் நிலையான கூட்டாளிகளான விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு சீனத் தொழிலாளர்களை தலைமை ஏற்க வைக்கவும் அனுபவத்தை ஈட்டவும் வைக்கக்கூடிய ஒரு மூலோபாயத்தை அது முன்னெடுக்கவில்லை.” (பக்கம் 53)
8. இறுதியில், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி பற்றிய விமர்சனத்திலிருந்து அவர் பெறும் முடிவுகளை பார்ன்ஸ் தொகுத்து சுருக்கமாகத் தருகிறார்.
“வெற்றிகரமான முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சியிலிருந்து தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் வெளிவரும் என்று நம் சகாப்தத்தில் வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது என்று நாம் நம்புகிறோம். அது, முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக வெற்றிகரமான எழுச்சியைத் தொடர்ந்து வரும் முதல்வடிவமான அரசாங்கம், அது, முதலாளித்துவவாதிகளுக்கு அதிகாரத்தை திருப்பித்தராத அரசாங்கம், ஆனால் அவர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துச்சென்றுவிடும் மற்றும் அதனை, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டுவதற்கும் மற்றும் சுரண்டலாளர்களிடமிருந்து சுவீகரிப்பதை ஆழப்படுத்தும் பாதையைத் திறப்பதற்கும் பயன்படுத்தும்.
“ஆனால் இது ஒரு நிகழ்ச்சிப்போக்கு. காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளில் புதிய புரட்சிகர அரசாங்கத்தின் ஆரம்பக் கடமைகளே பிரதானமாக ஜனநாயகப் புரட்சியினுடையவையாகும். அதாவது தேசிய விடுதலை, விவசாய சீர்திருத்தம், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் நிலைமைகளை முன்னேற்றுதல் மற்றும் உரிமைகளை விரிவுபடுத்தல் ஆக இருக்கும் …. இவை அனைத்தும் முக்கியமான இடைமருவு காலகட்டமாகும், மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளமான உறுதித்தின்மை மற்றும் அதன் நட்புநாடுகளின் பாட்டாளி வர்க்கத் தலைமை இந்த இடைமருவல் காலகட்டத்தின் போது தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் நிராகரிக்கப்படும்பொழுது அது பார்வை இழந்துவிடும்.
“எமக்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம்தான் [பாட்டாளிவர்க்கசர்வாதிகாரம்அல்ல- டேவிட்நோர்த்] தீர்க்கமான பிரச்சினை” (பக்கம் .76)
9. பார்ன்ஸின் நிலைப்பாட்டின் மூலம் உண்மையில் அவரது அல்ல; அது ஸ்ராலினிசத்தின் பழைய கருத்துருவாகும், அதில் அதிகாரத்துவம் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடன் கொண்டுள்ள அதன் கோட்பாடற்ற கூட்டை நியாயப்படுத்துவதற்கு, “முதலாளித்துவம் அற்றபாதை” எனும் முழக்கத்தின் கீழ் இப்பொழுது முன்வைக்கிறது. ஸ்ராலினிஸ்டுகளது நிலைப்பாடு மிகவும் வெளிப்படையானது: அங்கு முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய நாடுகளுக்கு “முதலாளித்துவம் அல்லாத பாதை” இருக்கிறது, அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமலே அது ஜனநாயகப் புரட்சியை பூரணப்படுத்த அனுமதிப்பதோடு சோசலிச கட்டுமானத்தின் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கும்.
கம்யூனிஸ்டுகளது தந்திரோபாயமும் மூலோபாயமும் தேசியப் புரட்சியாளர்கள் மற்றும் புரட்சிகர ஜனநாயகவாதிகள் உடன் தவறாமல் ஒத்துழைக்கவேண்டும்: இது காலகாலமான பின்தங்கிய நிலைக்கு முதலாளித்துவம் ஒரு தீர்வு என்று கருதாத அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் வெற்றிக்கான அடிப்படை முன்நிபந்தனை ஆகும். இந்த சூழ்நிலைமைகளின் கீழ் முதலாளித்துவம் அல்லாத பாதைக்கான ஒரு மாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் முழக்கம், இடதுகளுக்கு உண்மையில் ஒரு வர்க்க விலகலை நோக்கிய நோக்குநிலையாகும். அது நிலையாக ஜனநாயக சக்திகளை அதிகாரத்திற்கு கொண்டுவரும். ஆனால் அவர்கள் ‘சோசலிசத்தை நோக்கிய அடிவைப்பை’ செய்யாமல் அத்தகைய பணிகளைச் செய்வதில் தோல்வியுறுவர், ஆனால் அவர்கள் இந்த அடிவைப்புக்களை “இடதுசாரி கூட்டு” எனும் தந்திரோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே செய்ய முடியும். நடைமுறையில், இது பெரும்பாலும் முதலாளித்துவ ஜனநாயகம் மீது பெரும் அழுத்தங்களை கொண்டுவந்து அதற்கு தனது முற்போக்கான தகைமைகளை உணர்ந்துகொள்வதற்கு உதவி செய்யும். அதேவேளை ஜனநாயகக் கடமைகளை தீர்க்கமுயலும் அதன் மிகவும் தீர்க்கரமான பிரிவு புரட்சிகர ஜனநாயகத் தன்மையுடையதாகிவிடும் அல்லது அத்தகைய ஒன்றானதாக முயன்று அக்கடமைகளை நிறைவேற்றக்கூடும். …. இவ்வாறு முதலாளித்துவம் அல்லாத பாதையை ஏற்றல் படிப்படியான செயல்முறையாகும் மற்றும் மற்றெவரையும் விட அதை செய்ய ஆர்வமுள்ள கம்யூனிஸ்டுகள் அத்தகைய நகர்வை விருப்பம்போல் கொண்டுவர முடியாது ... முதலாளித்துவம் அல்லாத பாதையைத் தழுவ அழைக்கும் முழக்கத்தை முன்னிலைப்படுத்தல் எந்தவகையிலும் அது சோசலிசப் புரட்சிக்கான அழைப்பும், மக்கள் ஜனநாயகத்தை நிறுவல், கம்யூனிஸ்டுகளால் அதிகாரத்தைக் கைப்பற்றல் என்று குறிப்பால் உணர்த்தாது. அதற்கு பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதுதான் ஜனநாயகப் புரட்சியின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறனுள்ளது என்று உறுதிப்படுத்துவதைக் கூட்டும்.முதலாளித்துவம் அல்லாத பாதையை ஏற்றுக்கொள்ள அழைக்கும் முழக்கத்தை முன்னேவைப்பதன் மூலம், கம்யூனிஸ்டுகள் ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்பு உருமாறலையும் அதேவேளை தங்களை சோசலிசத்தை நோக்கி நோக்கு நிலைப்படுத்தலையும் ஆழப்படுத்த விரும்புவர்.” (உலயினோவ்ஸ்கி, தேசிய விடுதலை, முன்னேற்றப் பதிப்பகம் பக்கம் 51-53, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
10. 1972 இல் நான்காம் உலக காங்கிரசின் முன்னோக்குத் தீர்மானங்களில் அனைத்துலகக் குழுவினால் செய்யப்பட்ட மதிப்பீடுகளை திரிபுவாதத்தின் பரிணாமம் முற்றிலும் நிரூபணமாக்கி உள்ளது:
“காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளின் உள்ளே, திரிபுவாதமானது மீண்டும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் தேசியவாத தலைவர்களுக்கும் மக்களின் புரட்சிகர பிரதிநிதிகள் என்று காட்டிக்கொள்ள நேரடியாகவே உதவி இருக்கிறது. அவர்கள் லெனினிது நிலைப்பாட்டின் சாரத்தையும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் முற்றிலும் நிராகரித்தனர்: அதாவது சுயாதீனமான பாட்டாளி வர்க்க கட்சிகளைக் கட்டுதல் மற்றும் சர்வதேச சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக தொழிலாளர் அதிகாரத்திற்கு கொண்டு செல்லும் ஜனநாயகப் புரட்சிக் கடமைகளை தீர்க்கவல்ல ஒரே சக்தியாக தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கப்படும் விவசாயிகளுக்கு தலைமை ஏற்க வைத்தல். (தொகுதி 1, பக்கம் 32)
11. பார்ன்ஸ் நிலைப்பாட்டின் திவால்தன்மையானது: தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கு உதாரணமாக அவர் குறிக்கும் “மாதிரிகள்” அல்லது “கம்யூனிஸ்டுகளின்” புதிய கூட்டுக்கள் எழக்கூடிய சக்திகளாக இருப்பவை நியூ ஜிவெல் மூவ்மென்ட், சாட்டினிஸ்டாஸ், தி பாராபுன்டோ மார்ட்டி, மற்றும் காஸ்ட்ரோயிசம் ஆகியனவாகும். இவை ஒவ்வொன்றிலும், ஏகாதிபத்தியத்தின் உலக நெருக்கடியின் அபிவிருத்தியானது அழிவுகரமான பாதிப்பைக் கொண்டிருந்ததுடன் மற்றும் பார்ன்ஸின் நிலைப்பாடு இட்டுச்செல்லக்கூடிய காட்டிக்கொடுப்புக்களை காட்டுகிறது. எந்தவகையிலும் நமது நிலைப்பாடு உடனடி நிலைமைகள் கிளர்ச்சி செய்யும் சக்திகளுக்கு வெற்றிக்குச் சாதகமாக காணக்கூடிய தனி ஒரு நாட்டுக்குள்ளே உள்ள சக்திகளின் மீது தங்கி இருக்கவில்லை. மாறாக சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மீதாக எங்கள் நிலைப்பாடு இருக்கிறது. இந்த அடிப்படையின் மீதுதான் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியை அமைக்கிறோம். அவ்வப்போது மேலாதிக்கம் செய்யும் தேசியவாத இயக்கத்திற்குள்ளே அந்த அரசியல் போக்குகளுக்கு ஒருபோதும் அடிபணிந்து போவதல்ல. மேலும், அரைக்காலனித்துவ நாடுகளில் பிற்போக்கு பொம்மை ஆட்சிகளை கவிழ்ப்பது பிரச்சினைகளை தாமாகவே தீர்க்காது. லெனினும் ட்ரொட்ஸ்கியும் சுட்டிக்காட்டுவதைப்போல, அத்தகைய நாடுகளில் வெற்றிகரமான புரட்சிக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்தான் பெரும் பிரச்சினைகள் எழும். இதுதான் நிச்சயமாய் நிக்கராகுவா மற்றும் கியூபாவில் மட்டுமல்லாது சிம்பாவே, மொசாம்பிக், அங்கோலா, கென்யா, நைஜீரியா முதலியவற்றிலும் எடுத்துக்காட்டப்பட்டது.
12. அனைத்துலகக் குழுவின் வளர்ச்சி திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் தொடர்ந்தது. 1970களின் பொழுது வெளியிடப்பட்ட ஆறு தொகுதிகளுள் பதிவு செய்யப்பட்ட போராட்டம், 1920களின் பொழுது நான்காம் அகிலத்தின் ஆரம்பகால சக்திகளை அரசியல் கல்வியூட்டுவதற்கான அடிப்படையை அமைத்த ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் போல எமது காரியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான தத்துவார்த்த அடித்தளம் ஆகும். ட்ரொட்ஸ்கிசம் மீதான பார்ன்ஸின் அண்மைய தாக்குதல் இந்த வரலாறு முழுவதையும் கட்டாயம் முன்னுக்குக் கொண்டு வரும்; துல்லியமாக ஏனெனில், அனைத்துலகக் குழு எப்பொழுதும் அறிந்துகொள்கிறது - திரிபுவாதிகளின் அணிகளுக்குள்ளே அத்தகைய முக்கிய அபிவிருத்தியானது உலக சோசலிசப் புரட்சியில் மாபெரும் புதிய அத்தியாயங்களை தவிர்க்க முடியாதபடி முன்கூட்டிக் காண்கிறது. மேலும், திரிபுவாதம் என்பது சோதனைக்கூடத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனைக் குழாய்க்குள் சில வகை பாக்டீரியா இருப்பதைப்போல நாம் சாதாரணமாகப் பார்க்கவில்லை, துல்லியமாக ஏனெனில், திரிபுவாதம் நாமும் ஒரு பகுதியாக இருக்கும் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான அபிவிருத்தியில் பொருளாதாய வேர்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் முன்னணிப் படை மீதுமான எதிர் வர்க்க சக்திகளின் அழுத்தத்தை பிரதிபலிக்கிறது, திரிபுவாதத்திற்கான எமது பதில், எமது அரசியல் அபிவிருத்தியின் ஆய்வில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டுகொள்ளும்.
13. இந்த காரணத்தினால்தான் கடந்த தசாப்தத்தின்பொழுது அனைத்துலகக் குழுவின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் ஆய்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டதாக நாம் உணர்கிறோம். பப்லோவுடனான மூலப் பிளவிற்குப் பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் விடாப்பிடியுடன் போராடிய நிலைப்பாடுகளிலிருந்து நாம் தொடர்ச்சியாக வழிவிலகியிருக்கிறோம் என்ற கருத்தில் நாம் வலுவாக உள்ளோம். தோழர் பண்டாவுக்கு 1984, ஜனவரி 23 அன்று எழுதிய கடிதத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பானதில் முழு அனுபவத்தின் ஒரு இருப்புநிலைக் குறிப்பை வரைவதற்கு நேரம் வந்திருக்கிறது என்று நான் கூறினேன். அத்தகைய இருப்புநிலைக் குறிப்பு அவசியமானது ஏனெனில் எமது அனுபவத்தை —ஒரு உலகக் கட்சி என்ற வகையில்— நாம் உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பல்வேறு தேசியவாத முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் பற்றிய ஒரு புறநிலையான ஆய்வு இருந்திருக்கவில்லை. அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சியைப் பேணுவதற்கும் ஒவ்வொரு பகுதியிலும் காரியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் காத்திரமான விமர்சனத்திற்கு தகுதியான சான்று ஒன்று இருக்கிறது என நாம் உணர்கிறோம். நாங்கள் குற்றங்களைச் சுமத்துவதற்காக இங்கே இருக்கவில்லை, மாறாக சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக அனைத்துலகக் குழுவை அபிவிருத்திக்கு செயற்படுவதற்காக இருக்கிறோம்.
14. 1976 கோடையில், அனைத்துலக் குழுவானது தேசிய விடுதலை இயக்கங்களுடன் — பிரதானமாக பிஎல்ஓ உடன் மிகவும் செயலூக்கமான தொடர்பை முன்னெடுப்பது பற்றி முதலில் விவாதித்தது. அந்த நேரம், அத்தகைய வேலையில் உள்ளார்ந்து இருக்கும் ஆபத்துக்கள் பற்றி தெளிவாகவே வலியுறுத்தப்பட்டது— அத்தகைய இயக்கங்கள் பலவகைப்பட்ட தன்மையைக் கொண்டிருந்தன, அவற்றின் உள்ளே ஏகாதிபத்தியவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் செயலூக்கத்துடன் செயற்பட்டனர். இந்த அணுகுமுறை சரியானது மற்றும் கோட்பாடு அடிப்படையிலானது. 1977 மே இல் அனைத்துலகக் குழுவின் ஏழாவது காங்கிரசில் மேலும் கலந்துரையாடல் இடம்பெற்றது, கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசின் புதிதாக பிரசுரிக்கப்பட்ட நெறிமுறைகளால் அவ்வேலை நடத்தப்பட்டது. காங்கிரசை அடுத்து அனைத்துலகக் குழு லெபனானுக்கு ஒரு பேராளர் குழுவை அனுப்பியது. 1977 ஜூலையில் லிபியன் ஜமஹிரியா (Libyan Jamahiriya) உடன் ஒரு கூட்டில் கையெழுத்திட்டது. பின்னர் ஈராக்கின் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சியுடன் உறவுகள் அபிவிருத்தியுற்றன. 1978 நடுப்பகுதியில் தொழிலாள வர்க்கத்திற்குள் எமது சொந்த சக்திகளை உண்மையில் கட்டுவதற்கானது தொடர்பான முன்னோக்கு எதுவுமின்றி தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் உடனான உறவுகளை நோக்கிய ஒரு பொது நோக்குநிலை அபிவிருத்தி அடைந்தது. எமது சொந்தப் பத்திரிகைக்குள்ளேயே முற்றிலும் விமர்சனமற்ற மற்றும் சரியில்லாத மதிப்பீடு என்றுமில்லா வகையில் மிக வெளிப்படையாகவே வெளிப்படத் தொடங்கியது, இந்த முதலாளித்துவ தேசியவாதிகளை அரசியல் ஆதரவு கட்டாயம் அளிக்க வேண்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைவர்களாகக் காணுமாறு காரியாளர்களையும் தொழிலாளர்களையும் அழைத்தது.
15. ஈராக் — ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் 21 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்தது உட்பட ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சதாம் ஹூசைனின் போராட்டத்திற்கு அரசியல் உதவியை வழங்கி, அவரது ஆட்சியை நோக்கிய அதிகரித்த அளவிலான விமர்சனமற்ற அணுகுமுறையை நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
“உண்மை என்னவெனில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி விவாதித்த, அனுமதித்து அமல்படுத்த உடன்பட்ட இராணுவ நடத்தை விதிகளின்படி அவர்கள் மரதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர், இராணுவத்திற்குள் இரகசிய அமைப்பை உருவாக்க தடைசெய்யும் இராணுவ சட்டங்களை இரத்துச்செய்ய இன்றுவரை ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அழைத்திருக்கவில்லை. அது கைது செய்யப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக இருந்தனர் என்ற நிகழ்வை ஒருபோதும் எதிர்க்கவில்லை.
“இது ஆட்சியைக் கீழறுக்கும் நோக்கத்திற்காக ஈராக்கிய ஆயுதப் படைகளில் இரகசிய அமைப்புக்களை அமைக்க முயற்சிக்கும் மாஸ்கோவின் நேரடி விடயம். அது அதன்விளைவை கட்டாயம் ஏற்றாக வேண்டும் … அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளாக இருந்தாலும்சரி அல்லது சமூக ஜனநாயகவாதிகளாக இருந்தாலும்சரி, முதலாளித்துவ அரசின் தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களை நாம் பாதுகாக்கவேண்டும் என்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கோட்பாடாகும். ஆனால் உண்மை காட்டுவது போல, ஈராக்கில் நடக்கும் சம்பவங்களில் ஒன்றும் செய்வதற்கில்லை.” (நியூஸ் லைன், மார்ச் 8, 1979)
ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே அதற்கு முன்னுதாரணமாக எதுவும் இல்லாதிருந்தபோதிலும் கூட, இந்த நிலைப்பாடானது ஒருபோதும் திருத்தியமைக்கப்படவில்லை. குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகளில் ட்ரொட்ஸ்கி தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி எழுதியதை நாம் சர்வசாதாரணமாய் அலட்சியம் செய்தோம் —அதன் தலைவர்கள் ஹூசைன் ஆட்சியின் களையெடுப்புக்குப் பலியாகியோர் மத்தியில் இருந்தனர்— ஹூசைன் மீதான எமது புகழ்பாடல் குறையாமல் தொடர்ந்தது. 1980 கோடையில், நாம் வெளியிட்ட ஆறு பகுதி கொண்ட தொடரில் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சியையும் சதாம் ஹூசைனையும் பகட்டான புகழ்பாடலின் கருப்பொருளாக்கினோம். இக்கட்டுரைகள் ஒரு சிறுவெளியீடுகளாக மறுபடியும் உருவாக்கப்பட்டது, அப்பொழுதும் அவை நிராகரிக்கப்படவில்லை.
இந்தக் கட்டுரைகள் ஈராக்கால் ஈரான் ஆக்கிரமிக்கப்படுகையில் வெளிவந்தன. இந்த அபிவிருத்திக்கு நமது பிரதிபலிப்பை கவனிக்க வேண்டியது முக்கியமானது. ஈராக்கியர்களுடனான எமது சொந்த உறவுகள், அந்த அளவு நன்கறியப்பெற்றது. எமது சொந்த அறிக்கை, எமது நிலைப்பாடுகளுக்குள்ளே இருக்கும் தெளிவற்றதன்மையை எதிரொலித்தது என்ற அளவுக்கு நன்கு அறியப்பெற்றது. நாம் சரியாக போரை எதிர்த்தோம், ஆனால் ஈராக், ஏகாதிபத்தியத்தின் சார்பில் செயல்படுகிறது என்பதைக் கண்டனம் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் குழு அறிக்கை அறிவித்தது:
“ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஈரானியப் புரட்சி உட்பட தேசிய புரட்சிகர இயக்கங்களுக்கான முழு ஆதரவை வழங்குமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.” (நியூஸ் லைன், செப்டம்பர் 25,1980)
16. நாம் தொடர்ந்து போரை எதிர்க்கிறோம் மற்றும் போருக்கு முடிவு கட்டுமாறு அழைக்கிறோம். பின்னர் ஈராக்கிற்குள் சென்ற ஈரானிய தாக்குதலை அடுத்து, 1982 ஜூலை 16 நியூஸ் லைன் வெளியிட்ட தலையங்கம் அறிவித்தது:
“ஈராக் மீதான ஈரானிய படையெடுப்பு பெய்ரூட்டில் உள்ள முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனியருக்கோ லெபனிய போராளிகளுக்கோ மட்டுமல்ல ஈரானியப் புரட்சிக்கே கெடுதி விளைவிப்பதாகும், அது கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும்".
17. 1983 செப்டம்பர் அளவில், நாம் எமது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்ற இருந்தோம். சீரிய ஆய்வு மற்றும் விளக்கம் எதுவும் இன்றி ஈராக் மீதான ஈரானின் இராணுவ வெற்றிக்கான ஆதரவு நிலைப்பாட்டை ஏற்றோம். எக்ஸோசெட் ஏவுகணைகள் ஈராக்கிற்கு விற்றதற்குப் பதிலாக நியூஸ் லைன் எழுதியது:
“ஈராக்கிய ஆட்சி இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு அது ஏகாதிபத்தியத்தின் கருவி என்று முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. காலதாமதம் இல்லாமல் அந்த ஆட்சி ஈராக்கிய மக்களால் உடனடியாக தூக்கி வீசப்பட வேண்டும். அதன் தொடர்ந்த இருப்பானது ஏகாதிபத்தியத்திற்கு ஒரு இராணுவ தளத்தை வழங்கும் மற்றும் அவர்களின் போர்த் திட்டங்களுக்கான சாக்குப்போக்காக அமையும்.
18. இது எமது நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்தது — அது இஸ்லாமிய குடியரசு பற்றிய விமர்சனமற்ற நோக்காக இருந்தது, இந்த நிலைப்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானியப் புரட்சி பற்றி அனைத்துலகக் குழுவால் செய்யப்பட்ட ஒரே ஒரு ஆய்வுடன் நேடியாக முரண்படுகிறது. பிப்ரவரி 12, 1979 அனைத்துலகக் குழு அறிக்கை —நியூஸ் லைனில் பிப்ரவரி 17, 1979ல் வெளியானது— தெளிவான ஐயத்திற்கு இடமற்ற அறிக்கையை வழங்கி இருந்தது:
“உண்மை என்னவெனில் வெகுஜனங்கள் வர்க்கப் பிரச்சினைகளால் நகர்ந்தனர், மதவகைப்பட்ட ஒன்றால் அல்ல.
“எவ்வாறாயினும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகரத் தலைமை இல்லாமையும் டுடே கட்சியில் (Tudeh party) ஈரானிய ஸ்ராலினிசத்தின் கோழைத்தனமான வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளின் காரணமாகவும், அயத்துல்லா கொமேனி மற்றும் ஷியைட் பிரிவின் மற்றைய மதத் தலைவர்களினால் எதிர்ப்பு சக்திகளின் மீது ஒரு உண்மையான அரசியல் ஏகபோகத்தை நிலைநாட்ட முடிந்திருக்கிறது….
“கொமேனியின் கொள்கைகள், கடைத்தெரு வணிகர்கள் மற்றும் ஈரானிய உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிற கூறுபாடுகளின் முரண்பாடான மற்றும் தெளிவற்ற தன்மையை பிரதிபலிக்கிறது….
“ஆனால் அவர்கள் ஈரானில் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தை சவால் செய்யமாட்டார்கள் அவர்களால் செய்யவும் முடியாது… ஸ்ராலினிஸ்டுகளும் அனைத்துவகையான மத்தியவாதிகளும் ஈரானில், அங்கு புரட்சியானது முதலும் முக்கியமாகவும் ஒரு முதலாளித்துவப் புரட்சி, அதாவது நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை அகற்றுவதற்கான ஜனநாயக கோரிக்கைகளுக்கான ஒரு புரட்சி என்றும் அது, தேசிய முதலாளித்துவத்தையும் ஜனநாயகத்தையும் சுதந்திரமாக அபிவிருத்தியடைய அனுமதிக்கும் என்ற அடிப்படையில், சோசலிசப் புரட்சியை முன்னெடுக்கும் மூலோபாயத்தை எதிர்த்தனர்.
“முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து சுயாதீனமாக மற்றும் அதற்கு எதிரானதாக தொழிலாள வரக்கத்திற்கான கொள்கைகளை ஆதரிப்பதை, அவர்கள் ‘குறுங்குழுவாதம்’ எனக் கூறுவர்.”
19. அதன் பின்னர் ஈரானியப் புரட்சி தொடர்பாக மேலும் வர்க்கப் பகுப்பாய்வு ஒருபோதும் செய்யப்படவில்லை. ஈரானில் ஒவ்வொரு தனி இடதுசாரி அமைப்பையும் களையெடுத்தல் அதிகரித்துக் கொண்டிருந்தபோதும், எமது நிலைப்பாடு சர்வசாதாரணமாய் கொமேனிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பதைக் கொண்டிருந்தது. இந்தப் புரட்சியை பற்றிய எந்த மார்க்சிச பகுப்பாய்வும் இல்லாத நிலையில், உண்மையில் ட்ரொட்ஸ்கிசம் அல்லாத மற்றும் திரிபுவாத நிலைப்பாடு எமது சர்வதேச பத்திரிகையில் இடம்பெற்றது — மிகவும் குறிப்பாக தோழர் சவாஸ் ஈரானுக்குப் பயணம் செய்து வந்ததைத் தொடர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளில், அவை டுடே கட்சித் தலைவர்களை கைது செய்து வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு மத்தியில் இடம்பெற்றன. இந்த கட்டுரைத் தொடரின் தொனி “ஒடுக்கப்பட்டவர்களின் ஆட்சி” என்று தலைப்பிடப்பட்ட முதல் கட்டுரையில் அமைந்தது. அவற்றில் செய்யப்பட்ட முதலாவது புள்ளி பின்வருமாறு:
“மேற்கிலிருந்து வரும் ஒரு நபரைப் பொறுத்தவரை, குறிப்பாக வலதுசாரி போலீஸ் அரசின் கீழ் மற்றும் சர்வாதிகாரத்தின் கீழ் பல தசாப்தங்கள் கடந்துவந்திருக்கும் கிரீஸ் போன்ற நாட்டிலிருந்து வரும் ஒருவருக்கு, ஒரு உண்மை பளிச்சென்கிறது: எங்கும் ஒரு போலீஸ்காரரை பார்க்க முடியாது.”
பளிச்சென்று நாம் கண்டறிந்தது என்னவென்றால், உண்மையில் SWP இன் மேரி–அலிஸ் வாட்டர்ஸ் நிக்கராகுவாவிலிருந்து திரும்பியதும் செய்யப்பட்ட கவனிப்பை ஒத்ததாக அது இருந்தது:
“நீங்கள் உணர்கின்ற முதலாவது விடயம் போலீசைக் கண்டு நீங்கள் பீதி அடையவில்லை. இராணுவம், குடிப்படை போலீஸ். அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர். ஆனால் அதைப் பற்றி நீங்கள் நல்லவிதமாய் உணர்கிறீர்கள் மற்றும் அவ்வாறே ஒவ்வொருவர் விடயத்திலும். ஏறத்தாழ எல்லோரிடத்தும். ஒடுக்குமுறை சக்திகள் அனைத்தும் அவர்களைச் சுற்றி உள்ள சாதாரண உழைக்கும் மக்களுடன் சிரித்துக் கொண்டும், புன்னகைத்துக் கொண்டும், நகைச்சுவை உதிர்த்துக்கொண்டும் இருக்கின்றனர்.” (சோசலிஸ்டுகளுக்கான கல்வி, டிசம்பர் 1980, பக்கம் 5)
போலீஸ் இல்லாத நிலையில் அடக்குமுறையும் இல்லாதுள்ளது என்று கருதிக்கொண்டு, கட்டுரை பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:
“ஒரு ஆட்சியின் அரசியல் ஸ்திரத்தன்மையை மதிப்பிட, வெகுஜன ஆதரவின் அளவை அடிப்படை அளவுகோலாக நாம் கருதினால், சந்தேகத்திற்கிடமின்றி தெஹ்ரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதிகூடிய ஸ்திரத்தன்மை கொண்டதாக கட்டாயம் கருதப்பட வேண்டும். அதன் அடித்தளம் வெகுஜனங்களாகும். வெகுஜனங்களுக்கும் அதன் தலைமைக்கும், குறிப்பாக இமாம் கொமேனிக்கும் இடையில், புரட்சியின் உலையில் ஒன்றிணைக்கப்பட்ட வலிமையான பிணைப்புக்கள் இருக்கின்றன.
“இந்த மிகவும் ஆழமான பிணைப்புக்களை ஒருங்கிணைப்பதில் வெகுஜனங்களின் மீது இஸ்லாத்தின் கருத்தியல் செல்வாக்கால் ஆழமான பாத்திரம் ஆற்றப்பட்டது மற்றும் ஆற்றப்பட்டு வருகிறது. எனவே, குறிப்பாக இதற்கு எதிராக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளும் அத்தோடு ஸ்ராலினிச பிரச்சாரங்களும் இதற்கு எதிராக சீற்றங்கொள்வது தற்செயலானதல்ல.”
20. அனைத்துலகக் குழுவை பொறுத்தவரை இக் கட்டுரை விதிவிலக்கான முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது மற்றும் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் அது மிக நெருக்கமான மற்றும் மிக ஈவிரக்கமற்ற விமர்சன பகுப்பாய்வை பெறுவதற்கான தகுதி அதற்கு உண்டு. இது, தோழர் சவாஸின் பயணம் மட்டுமல்ல, அந்தவேளையில் ஈரானில் பாரிய அளவிலான கைதுகள் நடந்துகொண்டிருக்கையில் தொலைக் காட்சியில் தோன்றியதும் உள்ளடங்கும், அது தொழிலாள வர்க்கத்தின், கண்முன்னே அனைத்துலகக் குழுவை சமரசம் செய்ய வைத்தது. இந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்டது ஒரு வழிமுறையாகும், அது அனைத்துலகக் குழுவுக்குள்ளும் அதன் தலைமைக்குள்ளும் உள்ள நோக்குநிலை தவறலை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. நாம் இங்கு மார்க்சிசத்திற்காக முற்றிலும் வெட்கங்கெட்ட முறையில் பதிவுவாதத்தை பதிலீடு செய்வதற்கான அதிஅற்புத எடுத்துக்காட்டை கொண்டிருக்கிறோம். வர்க்க சக்திகள் இனி இல்லை. அனைத்துமே “வெகுஜனங்களைக” மாறிவிட்டது — இந்த வகையினம் ஈரானுக்குள்ளே உள்ள வர்க்க இயக்கவியலையும் முரண்பாடுகளையும் பற்றி ஒன்றையும் விவரிக்கவில்லை. பகுப்பாய்வானது சாதாரண கவனிப்பாக குறைக்கப்பட்டுவிட்டது: “நான் ஒரு போலீசையும் பார்க்கவில்லை எனவே இனி அரசே இல்லை!” அனைத்து அரசியல் அபிவிருத்திகளின் சடவாத அடிப்படைகளை திறப்பதற்கு முயற்சிக்கும் வரலாற்று சடவாத வழிமுறையை ஒரு பத்திரிகையாளரின் கண்ணைக் கொண்டு பதிலீடு செய்யப்படுகிறது. ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதியது போல, “அனுபவவாதமும், அதன் வளர்ப்பு சகோதரன் பதிவுவாதமும், உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலாதிக்கம் செய்கிறது.”
21. அது வெறுமனே தோழர் சவாஸின் குற்றம் அல்ல, திருத்தப்படாத ஒரு தவறு, தவிர்க்க முடியாதவகையில் ஏனைய தவறுகளுக்கு வழிவகுக்கும். 1977க்கும் 1983க்கும் இடையில் நியூஸ் லைனில் இடம்பெற்ற லிபியன் ஜமஹிரியா பற்றிய டசின் கணக்கான கட்டுரைகளிலிருந்து அடிப்படையில் இவை வேறுபட்டதல்ல. அக்கட்டுரைகளில் லிபியாவில் உள்ள வர்க்க உறவுகள் பற்றியும் லிபிய ஆட்சியின் வர்க்கத் தன்மை பற்றியும் ஒரு ஒற்றை மதிப்பீடு கூட ஒருபோதும் அங்கு இல்லை. கடாபி ஆட்சியோடு எமது உறவுகளின் உச்சக்கட்டத்தில், பின்வரும் மதிப்பீடு டிசம்பர் 21, 1981 தேதியிடப்பட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சி அரசியல் குழுவின் அரசியல் அறிக்கையில் காணப்பட்டது:
“கடாபியும் சுதந்திர தொழிற்சங்கவாத அதிகாரிகளும் 1969 இல் மக்கள் கட்டுப்பாட்டை கைப்பற்றியபொழுது, அவர்கள் லிபியாவை சோசலிசப் பாதை அபிவிருத்தியிலும் விரிவாக்கத்திலும் அமைத்தனர்…. கடாபி புரட்சிகர சோசலிசத்தின் வழியில் அரசியல் ரீதியாக அபிவிருத்தி அடைந்திருக்கிறார் மற்றும் அவர் மற்றைய சில அரபு தலைவர்களின் அரண்மனைகளையும் அந்தப்புரங்களையும் அதிரவைத்திருக்கிறார்.”
லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்குப் பின்னர், கடாபி தொடர்பான எமது அணுகுமுறை அதன் முந்தைய உற்சாகத்தை இழந்துவிட்டிருக்கிறது. ஆனால் திரிப்போலியில் நடந்த அண்மைய போராட்டம் முழுவதிலும், அரபாத்திற்கு எதிரான சதித்திட்டத்தில் கடாபியின் பங்கு பற்றிய நேரடி விமர்சனத்தை நாம் கவனமாக தவிர்த்து விட்டோம்.
22. நாம் இப்போது எகிப்துக்கு [அரபாத்தின்] பயணம் மேற்கொள்கிறோம். இது, முந்தைய அறிக்கைகள் அவை எவையாக இருந்தாலும் குறிப்புக்கள், ஆய்வுகள் எதுவுமின்றி பாராட்டப்பட்டது. நாம் எமது காரியாளரையும் தொழிலாள வர்க்கத்தையும் வழிவிலக வைக்கிறோம். எமது அரசியல் நிலைப்பாடு தொடர்பான எரிச்சலை வரவேற்கிறோம். எமது அரசியல் நிலைப்பாட்டில் தொடர்ச்சியான வழிவிலகல், அதில் புதிதாக வந்த முடிவுக்கு எந்த ஆய்வும் தொடர்பில்லாத நிலையில், இரண்டும் ஒன்றை ஒன்று பதிலீடு செய்வதாகவும் முரண்படுவதுமான நிலை, செயல்முறைவாதத்தின் தனித்தன்மையாக இருக்கின்றது.
பேர்ன்ஹாம், சாக்ட்மன் பற்றி ட்ரொட்ஸ்கி கூறியது போல:
“எதிரணித் தலைவர்கள், சமூகவியலை இயங்கியல் சடவாதத்திலிருந்து பிளவுபடுத்துகின்றனர். அவர்கள் அரசியலை சமூகவியலில் இருந்து பிரிக்கின்றனர். அரசியலின் அரங்கில் ஸ்பெயினில் எமது அனுபவங்களில் இருந்து போலந்தில் எமது பணிகளைப் பிளவுபடுத்துகின்றனர் — போலந்தில் எமது நிலைப்பாட்டிலிருந்து பின்லாந்தில் எமது பணிகளைப் பிளவுபடுத்துகின்றனர், வரலாறு விதிவிலக்கான சம்பவங்களின் தொடருக்குள் உருமாறுகிறது; அரசியல், தொடரான ஆயத்தமின்மைகளினூடாக உருமாறிச்செல்வதாக ஆகின்றது. நாம் இங்கே அதன் முழு அர்த்தத்தில், மார்க்சிசத்தின் சிதைவை, தத்துவார்த்த சிந்தனையின் சிதைவை, அரசியலின் சிதைவை அதன் உள்ளடக்கக் கூறுகளுக்குள் கொண்டிருக்கிறோம். (In Defense of Marxism, பக்கம் 114-115)
நாம் இந்தப் பிரச்சினைகளை எழுப்பவில்லை, ஏனெனில் அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளில் இந்த அல்லது அந்த தவறான சூத்திரப்படுத்தலை நாம் கவனித்திருக்கிறோம். ஒவ்வொரு பகுதியும் அதன் பங்குக்கான தவறுகளைச் செய்கின்றது. இந்த தவறுகள் சரிசெய்யப்படாது போனால், நீண்ட காலத்திற்குப் பின்னே அவை ஒரு போக்காக மாறுகின்றன, மற்றும் இந்தப் போக்கு எமது அரசியல் வேலையின் ஒவ்வொரு பரப்பிலும் தவிர்க்கமுடியாத வகையில் உணரப்படும். பப்லோவாதத்தை நோக்கி பின்வாங்கிய சோசலிச தொழிலாளர் கட்சி அமெரிக்காவின் மத்தியவாத மற்றும் நடுத்தர வர்க்க தீவிரப் போக்கினரிடையே என்றுமிராத வெளிப்படையான நோக்குநிலையில் அதன் வெளிப்பாட்டை காட்டியது போல, அதேபோக்கு பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வேலைகளுக்குள்ளேயும் அதனது வெளிப்பாட்டை காட்டிக்கொண்டது என்ற கவலையையும் நாம் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும்.
24. மால்வினாஸ் போர் மீதான கட்சியின் பதிவு — உண்மையில் நாம் எடுத்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது: இது எமது யுத்தம் அல்ல. ஆனால் அனைத்துலகக் குழுவிற்குள் இந்த நிலைப்பாடு தொடர்பாக ஒரு ஆய்வும் ஒருபோதும் செய்யப்படவில்லை.
25. லிவிங்க்ஸ்டன், நைட் மற்றும் பொதுவாக உயர் லண்டன் மாநகர சபை (Greater London Council GLC) உடனான எமது உறவுகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம் உணர்கிறோம். இந்த சக்திகள் தொடர்பாக என்ன அரசியல் மதிப்பீடுகளை கொண்டிருக்கிறோம். GLC க்கு தலைமை தாங்கும் தொழிற் கட்சிக் குழு, நியூஸ் லைனால் கொடுக்கப்பட்ட தங்குதடையற்ற அரசியல் நம்பிக்கைக்கு தகுதியுடையதா? இந்த சமூக ஜனநாயகவாதிகளின் எதிர்கால நடவடிக்கைகளால் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆபத்தான வகையில் சமரசப்படும் விளிம்பில் இருக்கிறது என்று நாம் மிகவும் கவலைப்படுகிறோம். 1926 இல் பொதுவேலை நிறுத்தத்தின் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்த மிக சந்தர்ப்பவாத தவறுகளையே நாம் செய்கிறோம் என கவலை கொண்டுள்ளோம். லிவிங்ஸ்டன் ஏனைய தொழிற் கட்சி வாதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டவர் என பாராட்டுவதற்கு எங்கள் வழியிலிருந்து நாம் வெளியேறி இருக்கிறோம். டோரிக்களுக்கு எதிராக உள்ளூர் அரசாங்கத்தைப் பாதுகாப்பது சரியானதுதான் என்றாலும், லிவிங்ஸ்டன் மீது ஒருபோதும் எந்த நம்பிக்கையையும் வைக்கக் கூடாது. New Left Review 1983 ஜூலை-ஆகஸ்டு இதழில் வெளியிடப்பட்ட லிவிங்ஸ்டனுடனான நேர்காணல் பற்றி நியூஸ் லைனோ அல்லது லேபர் ரிவீவோ கருத்து எதுவும் கூறவில்லை என்பது எம்மை சங்கடப்படுத்துகிறது. இந்த பேட்டியை எடுத்தது வேறு யாருமல்லர், தாரிக் அலி. இந்தக் கட்டுரையில், லிவிங்ஸ்டனின் “சோசலிசம்” என்பது குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல், அமைதிவாதம், இடது சமூக ஜனநாயகம், மற்றும் மார்க்சிச சொற்றொடர்களின் துண்டு துணுக்கு இவற்றின் திரட்டுவாத கலவையை விட வேறோன்றும் இல்லை எனக் காட்டவில்லை. நிச்சயமாக அவர் ஒரு ட்ரொட்கிசவாதி அல்ல, மற்றும் தொழிற் கட்சிவாத துரோகிகளைப் பற்றிய அவரது கருத்து, முற்றிலும் வக்காலத்துவாங்குவதாக உள்ளது:
“அறையைச் சுற்றி அவர்களை உதைப்பதற்கு முன்னர் ஒரு சிலர் தூய பிழைப்புவாத அரசியலுக்கு போய்விட்டார்கள் என்பதில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இது இடதுகளின் பிறவிப் பலவீனம் ஆகும். கிட்டத்தட்ட ஒருவர் பின்ஒருவராக தொழிற் கட்சித் தலைவர்களின் காட்டிக்கொடுப்பின் நிலையான பதிவுச் சான்றை எடுத்துக்கொண்டால், அடுத்து ஒருவரிலிருந்து மற்றவருக்கு செல்ல மக்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டுவிட்டார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியது என்று நான் நினைக்கிறேன். ஆயினும், பல சந்தர்ப்பங்களில், நாம் தோழமையற்ற கண்டனங்களை விடவும் தோழமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்தால் நாம் இழந்துவிட்டவர்கள் பலரை தக்கவைத்திருக்கலாம். உங்கள் சொந்த உறுப்பினர்களது மேலேயே காட்டுவது உங்களது பிரதான தொழிற்பாடாக இருந்தால் மற்றைய இடது குழுக்கூடல்கள் மீதாக ஓயாத தாக்குதல்களுடன் போய் முடிவது தவிர்க்க முடியாதது. ஒரு குழு மற்றொரு குழுவிற்கு எதிராக வெறி பிடித்தவர்களைச் சுற்றிவளைப்பது போன்ற தாக்குதல்களில் குதர்க்கமாய் இடது செயல்பாட்டாளர்கள் செலவழிக்கும் காலத்தின் அளவு எப்பொழுதும் என்னை வியப்பட வைத்தது. இவ்வாறு ஒழுங்கமைக்கும் வழிமுறை மாற்றப்படாவிட்டால் இடதை ஐக்கியப்படுத்துவது கடினமாக இருக்கும்.”
பெண் விடுதலை பற்றி லிவிங்ஸ்டனால் விளக்கப்படும் கருத்துவாத பார்வைகளுக்குள் —அவை அவரது வளர்ச்சியில் பிரதான செல்வாக்கு செலுத்துகின்றன என அவரே ஒப்புக்கொள்கின்ற (“பணியிலுள்ள வெள்ளைத் தொழிலாள வர்க்கம் மீது கிட்டத்தட்ட தொழிற் கட்சியின் பிரத்தியேக கவனக் குவிப்பு ஒரு பலவீனம் என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்”) அல்லது வர்க்க சமுதாயத்தின் இயல்பு மீதான அவரது கொச்சைப் பார்வையான (“நான் இடதுசாரி அரசியலுக்குள் வந்தது ஒரு தத்துவார்த்த மார்க்சிச பின்புலத்தின் ஊடாக அல்ல, மாறாக விலங்குகளின் நடத்தை மற்றும் பரிணாமம் பற்றிய படிப்பின் வழியாக”)— போன்ற பார்வைகளுக்குள் நாம் போகப் போவதில்லை. அவர் தாரிக் அலியால் நேர்காணல் செய்யப்பட்டவர் என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை! ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த மனிதர்தான் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் லண்டனில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தலைவராக விளம்பரப்படுத்தப்பட்டார் மற்றும் நிபந்தனையற்ற விமர்சனமற்ற வகையில் ஆதரவளிக்கப்பட்டார். நாம் அவருக்கும் நைட்டுக்கும் ஒரு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இடது புறத்திலிருந்து வந்த விமர்சனத்திற்கு எதிராக நாம் அவர்களைப் பாதுகாத்திருக்கிறோம். நாம் நைட் பற்றி குறைவாகவே அறிந்திருக்கிறோம் — இரு ஆண்டுகளுக்கு முன்னால் தொழிற் கட்சியினரோடு சேருவதற்கு கட்சியிலிருந்து விட்டோடியதில் தொடர்புடையதாக அவரது பெயரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் கேள்விப்பட்டவரைக்கும் தவிர. இப்போது அவர் நமது ஆள் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. அது அவ்வாறில்லை என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும். 1963ல் அவர் எம்மை விட்டுச்சென்றது தற்செயலானது அல்ல.
26. லிவிங்ஸ்டன் மற்றும் நைட் மற்றும் GLC உடனான உறவுகள் பற்றிய எமது கவலைகள் NGA வேலைநிறுத்தத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் ஆற்றப்படும் அண்மைய பாத்திரத்தால் உச்சமடைந்திருக்கின்றன. தொழிலாளர் புரட்சிக் கட்சி NGA தலைமையை தொடரும் வழியோடு, அவர்களுக்காக மூடி மறைப்பது, சுயாதீனமான கோரிக்கைகளை முன்வைக்காதிருத்தல், மற்றும் முடிவில், அபராதத்தை அவர்கள் கட்டியதன் மூலம் மற்றும் வாரிங்டன் ஆர்ப்பாட்டத்தை திரும்பப் பெற்றதன் மூலம் சமரசம் செய்த வழியோடு நாம் உடன்படவில்லை. NGA ஐ விமர்சனம் செய்தவர்களை தாக்கிய தொழிலாளர் புரட்சிக் கட்சி அறிக்கையானது பிரிட்டிஷ் பகுதியின் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் இருந்தது:
“அதன் கோட்பாடுகளுக்கான தீர்மானகரமான போராட்டத்தின் மூலம் NGA ஆனது, ஒரு சுயாதீனமான தொழிற்சங்கங்களைக் கட்டுவதற்கு சட்டவிரோத மற்றும் அரச ஒடுக்குமுறைகளின் நிலைமைகளின் கீழ் போராடிய தங்களின் முன்னோடிகளின் அடிச்சுவடுகளில் அணிநடையிடுகிறது….
“இந்த சக்திமிக்க வழியில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மட்டத்தை உயர்த்தி இருக்கும் NGA ஆனது இப்பொழுது TUC வர்க்க ஒத்துழைப்பாளர்களின் ஆட்சிக்கு அடிபணிய மறுக்கிறது. அது தொழிலாள வர்க்கத்தின் தோற்கடிக்க முடியாத வலிமையை தனக்கு அடித்தளமாகக் கொண்டு போராடுகிறது.
“தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கொள்கை சிறிதும் குழப்பத்திற்கு இடமில்லாததாக இருந்தது — அதன் துணிவான நடவடிக்கைக்காக நாம் NGA க்கு மரியாதை செலுத்துகிறோம் மற்றும் டோரிகளின் சதியிலிருந்து தொழிற்சங்கத்தை காப்பதற்கான அதன் போராட்டத்துடன் முழு ஐக்கியத்தில் நிற்கிறோம்…
“NGA இப்போராட்டத்தை TUC இன் மையத்திற்குள் சரியான முறையில் எடுத்துச்சென்றுள்ளதுடன் யார் தொழிற்சங்க உரிமைகளை கீழான வகையில் விற்றுத்தள்ளுகிறார்கள் என்பதையும் காட்டியுள்ளது. இது அரசியல் ரீதியாக மிதமான கருத்துக் கொண்ட ஒரு கைவினை தொழிற்சங்கம், திரிபுவாதிகள் நினைப்பதுபோல புரட்சிகரக் கட்சி அல்ல. மற்றும் அரசு துன்புறுத்தலின் விதிவிலக்கான நிலைமைகளின் கீழ் அவர்கள் தங்களை நன்றாகவே விடுவித்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்”.
NGA தலைவர்களின் “அரசியல் ரீதியாக மிதமான” கருத்துக்கள் எவை? அவர்கள் மத்தியில் ஸ்ராலினிஸ்டுகளும் சமூக ஜனநாயகவாதிகளும் இல்லையா. இத் தலைவர்கள் இளம் சோசலிஸ்ட்டுக்களின் (YS) ஆண்டு இறுதிக் கூட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் “நாயகர்களாக” கொண்டுவரப்பட்டனர். இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பயிற்றுவிக்கப்படல் இவ்வாறுதானா?
27. வேலைநிறுத்தத்தின்போது, தொழிலாளர் புரட்சிக் கட்சி தொழிற்சங்க விரோத சட்டங்களின் தன்மை பற்றி உண்மையில் நம்பமுடியாத நிலைப்பாட்டை விவரித்தது. தோழர் பண்டாவால் இந்த பேச்சு வழங்கப்பட்டது: 1983 டிசம்பர் 7 நியூஸ் லைனை நாம் மேற்கோள் காட்டுவோம்:
“இந்த சட்டமானது என்ன? பண்டா கேட்டார். சாதாணமாக, அனைத்து சட்டங்களும் தனிமனிதர்களின் உரிமைகளை (!), அல்லது பொது நலன் (!!) தொடர்பானதில் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் டோரி வேலைவாய்ப்பு சட்டங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை வெறுமனே சட்டங்கள்(!) அல்ல. மாறாக அடிப்படை அரசியலமைப்பு மாற்றங்கள், ஏனென்றால் அவை வர்க்கங்களுக்கு இடையிலான உறவைப் பேசுகின்றன(!!). இந்த சட்டங்கள் வரலாற்று நிலைப்பாட்டிலிருந்தும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தும் முற்றிலும் விரோதமானவை. அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான யுத்தப் பிரகடனம் ஆகும்.”
நாம் வர்க்கங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் “கெட்ட” சட்டங்களுக்கு எதிராக இருக்கிறோம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் “நல்ல” சட்டங்களைப் பாதுகாக்கிறோம். இக் கூட்டத்தில் வேறு எந்த மேற்கோளும் வாசிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு பற்றிய மிகத் தெளிவான பகுப்பாய்வை நியாயப்படுத்துவதற்கு இதுவே போதுமானதாக இருக்கும்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. சமூகப் புரட்சியின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்? தொழிற் கட்சி மீதும் அதன் தொழிற்சங்கங்கள் மீதும் ஏதேனும் அரசியல் கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டுமா? பிந்தையது தொடர்பான விடயத்தில், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் முன்னர் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு நாம் காத்திருந்தோம். நாம் புதிய தேர்தலுக்கும் தொழிற் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு திரும்புவதற்கும் கோரவில்லை. தொழிலாள வர்க்கத்தின் எந்த குறிப்பிடத்தக்க தலைமையையும் நாம் கைப்பற்றி இருக்காத நிலைமைகளின் கீழ் தொழிலாளர் புரட்சிகர அரசாங்கத்திற்கான எமது முழக்கம் மிகவும் அருவமானது. அது மிகவும் “இடதாக” தோன்றும், ஆனால் வலதுசாரி “அரசியல் ரீதியாக மிதவாத” தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்துகொண்டுள்ளது. நாம் தொழிற் கட்சி மீது எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை — அவர்களை அம்பலப்படுத்தும் பணி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்ததைப் போல.
28. இது ஒரே இரவில் அபிவிருத்தி அடைந்திருக்கவில்லை —குட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு ஒத்துழைக்கும் நீண்ட நிகழ்ச்சிப்போக்கில் வளர்ச்சி அடைந்திருந்தது. இது மிகவும் திட்டவட்டமான தத்துவார்த்த மூலத்தைக் கொண்டிருக்கிறது —ஹெகலிய சொற்றொடரை அணிந்துகொண்ட அனுபவவாத வழிமுறை— மார்க்சிசத்துடன் முற்றிலும் சம்பந்தம் இல்லாதது. உணர்வை உணர்தலைப் புகழ்தல் மற்றும் வரலாற்று சடவாதத்தை நிராகரித்தல்.இயங்கியலைக்கற்றல்பற்றிஒருசீரியவிமர்சனம்கட்டாயம்செய்யப்படவேண்டும்.
29. சுலோட்டரின் கடிதம் வேர்க்கஸ் லீக் தலைமையால் மிகவும் ஆபத்தான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. நாம் அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளின் ஆழத்தினால் கவலையுறுகிறோம். ஆனால் அக்கறையுள்ள மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களின் மூலம் நாம் பிரச்சினைகளை வென்றுவரமுடியும் என்று நம்புகிறோம். தேவைப்படுவது என்னவெனில் அனைத்துலகக் குழுவிற்குள்ளும் தேசிய பகுதிகளின் தலைமைக்குள்ளும் உண்மையான கலந்துரையாடல் ஆகும். ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட வேண்டும். மேற்கொள்ளப்பட வேண்டியது இந்த வழிதான். அனைத்துலகக் குழு வலிமையானதாக எழ முடியும். வேர்க்கஸ் லீக்கானது விவாதத்தில் பங்கேற்கவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் மிக ஆர்வத்தோடு உள்ளது. நாம் பிரிட்டிஷ் தோழர்களோடும் அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு பகுதியோடும் எமது ஒத்துழைப்பின் வளத்தை நல்குவோம். இந்த கலந்துரையாடலுக்கு ஒரு திட்டவட்டமான அட்டவணையை வகுப்போம், மற்றும் அந்த அடிப்படையில் அனைத்துலகக் குழுவின் மாநாட்டை நோக்கி செயற்படுவோம்.