மக்ரோனுக்கு எதிரான பாரிய சமூகக் கோபம் இருந்து வருகின்றபோதிலும், பிரதமர் பார்னியரின் வீழ்ச்சியுடன் அதிதீவிர வலதுசாரி சக்திகள் வலுவடைகின்றன என்றால், அதற்கு தொழிலாளர்களை முடக்குவதற்கு வேலை செய்துவரும் புதிய மக்கள் முன்னணியின் (NFP) திவால்தன்மையே காரணமாகும்.
மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தை நவ-பாசிச லு பென் மற்றும் பார்னியே அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவிய புதிய மக்கள் முன்னணியின் ஜோன்-லூக் மெலோன்சோனின் நாடாளுமன்ற சூழ்ச்சிகளுக்கு விட்டுவிட முடியாது.
ஆளும் வர்க்கத்திற்குள் அதன் கொள்கைகளை எவ்வாறு மறுபரிசீலனை செய்வது என்பது குறித்து இப்போது ஒரு கடுமையான விவாதம் கட்டவிழ்ந்து வருகிறது. அது விரைவிலோ, தாமதமாகவோ, வெடிப்பார்ந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும்.
ஆம்ஸ்டர்டாம் மோதல்கள் பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் ஒரு அருவருப்பான பொய்யாகும். இது, ஆம்ஸ்டர்டாமிலுள்ள மக்களுக்கு எதிரான யூத எதிர்ப்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பாசிசம் மற்றும் காஸா இனப்படுகொலையைப் பாதுகாக்க ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இராணுவ மேலாதிக்கத்தையும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர் தாக்குதல்களையும் தடுக்கக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். இது மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NPF) போன்ற அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும்.
மக்ரோனுடன் கூட்டணி சேர்வதன் மூலமும், அவரை நவ-பாசிசவாதத்தின் எதிரியாக பொய்யாக சித்தரிப்பதன் மூலமும், மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி, அதிதீவிர வலதுசாரிகளின் ஆதரவிலான ஒரு அரசாங்கத்தை மக்ரோன் உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.
இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசியல் பொறியை அமைத்து வருகின்ற புதிய மக்கள் முன்னணியானது, பிரான்சில் இழிவான "பணக்காரர்களின் ஜனாதிபதி" உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதை தவிர, வேறு எந்த முன்னோக்கையும் வழங்கவில்லை.
ஐரோப்பாவை ஒரு புதிய உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்த, பைடெனும் மக்ரோனும் ஜூன் 6, 1944 இல் நோர்மண்டியில் அமெரிக்க-பிரிட்டிஷ்-கனேடிய படைகளின் தரையிறக்கங்களை சிடுமூஞ்சித்தனமாக கையிலெடுக்க முயன்றுள்ளனர்.
ஒரு ஆழமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் பசிபிக் பகுதியில் சீனாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போருக்கான தயாரிப்புகளால் உந்தப்பட்ட ஒரு சமூக கிளர்ச்சியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நசுக்க முயல்கிறது.
ரஷ்யாவிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது தரைவழிப் படையெடுப்பு நடத்தப் போவதாக மூத்த ஐரோப்பிய அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள் ஒரு தீவிர சுழற்சியைத் தொடங்குகின்றன. இதை தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே தடுக்க முடியும்.
ரஃபாவில் 1.5 மில்லியன் நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது குண்டுவீசுவதற்கான இந்த அழைப்புகள், காஸா மீதான இஸ்ரேலின் போரை ஆதரிப்பதன் மூலமாக, நேட்டோ அரசாங்கங்கள் இனப்படுகொலை போர்க் குற்றங்களை ஆதரிக்கின்றன என்பதை அம்பலப்படுத்துகின்றன.
உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போரானது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் உலக மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்ய தொடுத்த உலகளாவிய போரின் பாகமாகும் என்பதை சீனாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிரான பாரிய சர்வதேச எதிர்ப்புக்களுக்கு, இஸ்ரேலிய அரசு மற்றும் அதன் ஏகாதிபத்திய நேட்டோ ஆதரவாளர்களின் பிரதிபலிப்பாக ஜபாலியா அகதிகள் முகாம் மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
வாஷிங்டனில் உக்ரேன் போரை நடத்துவது தொடர்பாக வளர்ந்து வரும் நெருக்கடி மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ விரிவாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.