வலென்சியாவை வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை எச்சரித்து வந்தனர். ஆனால், பெருந்திரளான பொதுமக்களுக்கு, அவர்களது வீடுகள் மற்றும் பணியிடங்களில் நீரினால் சுவர்கள் உடைந்து விழும்வரை எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) அதன் சிக்கன உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, ஸ்பெயினின் புதிய சோசலிஸ்ட் கட்சி - சுமர் (PSOE-Sumar) அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தின் மத்தியிலும், தொழிலாள வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சமூகச் சலுகைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
காஸாவில் அமெரிக்கா தலைமையிலான போர்க் கப்பல் குழுவில் சேர ஸ்பானிய போர்க் கப்பல்களை அனுப்பியதானது, காஸாவில் இனப்படுகொலையை எதிர்ப்பதற்கான போலி-இடது பொடெமோஸ் கட்சியின் பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறது.
வாஷிங்டனில் உக்ரேன் போரை நடத்துவது தொடர்பாக வளர்ந்து வரும் நெருக்கடி மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ விரிவாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி ஆளும் உயரடுக்கு திரும்பி இருப்பது, அதீத சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் ஏகாதிபத்திய போரின் விரிவாக்கத்தில் வேரூன்றி உள்ளது.
"பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம்" என்ற அழைப்புகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு, தொழிலாளர்களை ஒரு புதுப்பிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி-சுமர் அரசாங்கத்திற்குப் பின்னால் ஐக்கியப்படுத்த எத்தனிக்கும். இந்த அரசாங்கம், அதன் போர் ஆதரவு மற்றும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்களுக்கு எதிரான இடதுசாரி இயக்கத்தை நசுக்க முயற்சிக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியைத் தொடங்கியுள்ள ஸ்பெயினின் தற்காலிகப் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் முகாமின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்ட, கடந்த சனிக்கிழமையன்று கியேவுக்கு ஒரு போர்வெறி விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் சோசலிஸ்ட் கட்சி (PSOE)- பொடமோஸ் அரசாங்கத்தின் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அழைப்பு விடுத்துள்ள திடீர் தேர்தல்களுக்கு முன்னதாக ஸ்பெயின் முழுவதும் பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன.
பொடெமோஸ், சுமர் மற்றும் ஐக்கியப்பட்ட இடது (IU) அனைத்தும் உக்ரேனில் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களை நியாயப்படுத்த உத்தேசித்துள்ளன.
ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) மற்றும் பொடமோஸ் அரசாங்கம், அதிகாரத்தை வலதுசாரிகளிடம் ஒப்படைக்கவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஐரோப்பிய பங்களிப்பை அதிகரிக்கவும் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளாலும் பகிரப்பட்ட இந்த பொறுப்பற்ற போர்க் கொள்கையானது, பொடெமோஸினதும், ஐரோப்பா முழுவதும் உள்ள அதன் போலி-இடது கூட்டாளிகளின் ஏகாதிபத்திய-சார்பு, தொழிலாளர்-விரோத தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது.
அரசியல் ஸ்தாபகம் மற்றும் முதலாளித்துவ அரசின் ஜனநாயக விரோத சதிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசியல் அதிகார மையத்தை ஸ்தாபிக்க வேண்டும். இதுதான் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பின் முக்கியத்துவமாகும்
ஐரோப்பாவில் மிகப்பெரிய காட்டுத் தீ பிரான்சின் ஜிரோண்டில் நிகழ்ந்துள்ளது, அங்கு இதுவரை 20,000 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு 40,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
UNHCR இன் படி, பலர் சாட், நைஜர், சூடான் மற்றும் தெற்கு சூடானில் இருந்து வந்தவர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி புகலிடக் கோரிக்கையாளர்களாக கருதப்படுவார்கள்
விமானத் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள்தொகையில் ஒரு மூலோபாயப் பிரிவாக உள்ளனர், அதன் அணிதிரட்டல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக மற்றும் தொழில்துறை சக்தியை சுட்டிக்காட்டுகிறது
சமீபத்திய வாரங்களில், ஸ்பெயின் முழுவதும், அதிக ஊதியங்கள், ஆபத்தான தற்காலிக வேலைகளுக்கு முற்றுப்புள்ளி மற்றும் சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன