சிரியாவில் அலவைட் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளில் குறைந்தபட்சம் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, இஸ்லாமிய HTS ஆட்சியை ஆதரித்து சட்டப்பூர்வமாக்குகின்ற நேட்டோ சக்திகளின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.
"ஜனநாயக" கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம், அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் (AfD) எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது பாராளுமன்ற எண்கணிதத்தின் பிரச்சினை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் பிரச்சினை.
எப்போதும் ஒரு புனைகதையாக இருந்து வந்துள்ள தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பெரிதும் பேசப்படும் 'தடுப்புச்சுவர்', ஐரோப்பிய தேர்தல்களுக்குப் பின்னர் நிச்சயமாக வீழ்ச்சியடையும்.
போர் முன்னரங்கில் உக்ரேனிய துருப்புக்களின் உடனடி வீழ்ச்சியை தடுப்பதற்காக, நேட்டோ கூட்டணி முழு கண்டத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்க அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
50 பில்லியன் யூரோ என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு நிதியளிக்க பயன்படுத்திய தொகையில் ஒரு அற்பத் தொகையே ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) அதன் சிக்கன உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, ஸ்பெயினின் புதிய சோசலிஸ்ட் கட்சி - சுமர் (PSOE-Sumar) அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தின் மத்தியிலும், தொழிலாள வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சமூகச் சலுகைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற "தீர்வை" அமுல்படுத்துவது என்பது தஞ்சம் கோரும் உரிமையை ஒழித்தல், ஐரோப்பாவை கோட்டை அரணாக விரிவாக்குதல், பாரிய நாடுகடத்தலை மேற்கொள்ளுதல் மற்றும் நாடுகடத்தல் முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட தடுத்து வைத்தல் என்பதைக் குறிக்கிறது.
வாஷிங்டனில் உக்ரேன் போரை நடத்துவது தொடர்பாக வளர்ந்து வரும் நெருக்கடி மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ விரிவாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரைத் தீவிரப்படுத்த உறுதியளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள், போருக்கான செலவில் 5 பில்லியன் யூரோக்களை கூடுதலாக அறிவித்துள்ளன.
ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது ஏகாதிபத்திய வன்முறை மற்றும் முதலாளித்துவ சமத்துவமின்மையால் மிக அடிப்படையான வாழ்க்கை நிலைமைகளை இழந்துள்ள மனிதகுலத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது.
மற்றுமொரு உலகப் போரைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். உலக மக்கள்தொகையில் மிகப்பெரும்பான்மையாக உள்ள இந்த சமூக சக்தி, இன்று முன்னெப்போதும் இல்லாதவாறு அதிக எண்ணிக்கையிலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும் இருக்கிறது.
இறந்தவர்களில் பெரும்பாலோர், மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்றில், மூழ்கிய படகின் கீழ் தளத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் பகுப்பாய்வு, விவசாயத் துறை, எரிசக்தி, பயன்பாடுகள், கட்டுமானம், உற்பத்தி மற்றும் உணவு, போக்குவரத்து, வர்த்தகம் போன்ற சேவைத் துறைகளின் தொழிலாளர் செலவினங்களை விட இலாபம் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளது
கடந்த வாரம் மூன்று படகு விபத்துக்களில் குறைந்தது 29 அகதிகள் துனிசிய கடற்கரையில் மூழ்கி இறந்தனர், மேலும் 67 பேர் காணாமல் போயுள்ளனர் என்று உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன
புதன்கிழமையன்று ஸ்டொக்ஹோமில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டமானது, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை தீவிரப்படுத்துவதில் ஆதிக்கம் செலுத்தியது. கிழக்கு உக்ரேனில் போர்முனையில் இருந்த ரஷ்ய இராணுவத்தை விரட்டுவதற்கும் எதிர் தாக்குதலுக்கு செல்வதற்கும் உக்ரேனிய இராணுவத்திற்கு பாரிய அளவிலான வெடிமருந்துகளை விரைவாக வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
சர்வாதிகார ஆட்சிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், புகலிடம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளை பாரியளவில் கடுமையாக்க ஐரோப்பிய கவுன்சிலின் சிறப்பு உச்சிமாநாடு ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் ஆகியவை, வியாழனன்று, மேற்குக் கரை நகரமான ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது ஒரு படுகொலைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த ஆண்டு EU எல்லைகளில் ஏற்கனவே 2,100 அகதிகள் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1,982 அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 367 பேர் துருக்கிக்கும் கிரீஸூக்கும் இடையே கிழக்கு மத்தியதரைக் கடலில் மூழ்கியுள்ளனர்
ஐரோப்பிய ஒன்றியம் "ஐரோப்பிய மக்களின் ஒற்றுமை" அல்லது "ஜனநாயக விழுமியங்களை" பாதுகாக்கவில்லை என்பதை உச்சிமாநாடு உறுதிப்படுத்தியது. இது ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களின் கலவையாகும், அவை ஒவ்வொன்றும் தன்னைத்தானே கவனித்துக் கொள்கின்றன