wsws : Tamil
 

ஒரு புதிய கட்சியை நிறுவுதல்
The Historical Setting
 The New Tasks of The International Committee
The  workers League and the Labor Party Demand
The Formation of a New Party

 

Marxism and the Trade unions

 

The Formation of a New Party

ஒரு புதிய கட்சியை நிறுவுதல்

Use this version to print | Send this link by email | Email the author


ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகிவிட்டது

A New stage has Begun

கடந்த இரண்டு சகாப்தங்களதும் ஆழமான பொருளாதார அரசியல் மாற்றங்கள் எம்மை எமது மூலோபாய பணிகளை ஒரு புதிய மதிப்பீடு செய்யும்படி நெருக்கியுள்ளன. நாம் தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்கட்சியை அமைக்கும்படி அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில் சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியலில் ஈடுபட்ட புரட்சிகர இயக்கத்தினை பொறுத்தமட்டில், அத்தகையதொரு கட்சி ஒரு புரட்சிகரமானதாகவோ அல்லது ஒரு முற்போக்கானதாகவோ எவ்விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது சர்ச்சைக்கு இடமின்றி உண்மை என்பதாலேயே. 1966ல் இருந்து எமது இந்த அரசியல் நிலைப்பாட்டின் அபிவிருத்தியை ஆய்வுசெய்கையில் இது தெளிவாகும். நாம் இந்த முடிவுக்கு வந்தது, அதிகாரத்துவத்தின் குற்றங்கள் பற்றிய மிதமிஞ்சிய பிரதிபலிப்பாலோ ஏற்பட்ட ஒரு விளைவு அல்ல.

தொழிற்சங்கங்களும் அவை தொழிலாள வர்க்கத்துடன் கொண்டுள்ள உறவுகளும் தொடர்பாக ஒரு புறநிலைமாற்றம் ஏற்பட்டுள்ளது. தசாப்தக் கணக்கிலான அரசியல் சீரழிவானது அதிகாரத்துவத்தினை தொழிலாள வர்க்கத்தில் இருந்து ஆழமான முறையில் அந்நியப்படுத்தியுள்ளது. அது குறைந்த பட்சம் சீர்திருத்தவாத நோக்குக்களை பின்தொடருவதாக இருந்தாலும் எந்தவொரு தீர்க்கமான அர்த்தத்திலும் AFL- CIO ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக கருதப்பட முடியாதது. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் AFL- CIO இன் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என நீங்கள் கருதவில்லையா என லேன் ஹீர்க்லன்ட் (LANE KIRKLAND) இடம் கேட்டக்கபட்டதற்கு, அவர் ''நிஷீனீஜீமீக்ஷீs இன் காலத்திலிருந்து தொழிற்சங்கத்தின் கொள்கை ஒன்றாகவே இருப்பதாக குறிப்பட்டார். இது நீணடகாலத்திற்கு முன்னரல்ல. அவருக்கு மாற்றத்திற்கான காரணம் எதுவுமில்லை. நிஷீனீஜீமீக்ஷீ இடம் கிதிலி இன் நோக்கங்கள் என்ன என கேட்கப்பட்டதற்கு அவர் ''பல'' என பதிலளித்தார்.

ஒரு நேர்மையானவராக இருந்திருந்தால் லேன் ஹீர்க்லன்ட் இன் பதில் ''சில'' என இருந்திருக்கவேண்டும். AFL- CIO என்பது அதனது தொழிலாள வர்க்க அங்கத்தவர்களின் நலன்களுக்கு முற்றும் எதிரான ஒரு குட்டிமுதலாளித்துவ சமூக கூட்டை அடித்தளமாக கொண்டதாகும். அது தொழிலாள வர்க்கத்தினது நலன்களுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமற்றதொன்றாகும்.

லேன் ஹீர்க்லன்ட் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயற்குழுவில் இருந்து எந்தவொரு இராஜினாமாவுக்கான கோரிக்கையையோ அல்லது எவ்விதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பிற்கும் முகம்கொடுக்காமல் பெரும் அழிவுமிக்க ஒரு தொகை தோல்விகளை ஒழுங்கு செய்தார். இதே காலப்பகுதியில் அமெரிக்காவின் நிறுவனங்களின் இயக்குனர் சபைகளில் தலைகள் உருண்டோடின. செனட்டிலும் காங்கிரசிலும் முதலாளித்துவ வர்க்கம் லிபரல் ஸ்தாபனங்களை துடைத்துக்கட்டி வந்தது. ஆனால் தொழிலாளர் இயக்கத்தினுள், அதிகாரத்துவ உயர்மட்டத்தில் எதுவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்: 20ம் நூற்றாண்டின்போது அமெரிக்காவில் 18 ஜனாதிபதிகள் இருந்தார்கள் என நான் நினைக்கின்றேன். பிரித்தானிய மன்னர்கள் 7 பேர் இருந்தனர். 8 அல்லது 9 பாப்பரசர்கள் இருந்தனர். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் CIO உடனான இணைப்பில் இருந்து பணியாற்றிய இருவர் உட்பட AFL க்கு நான்கு தலைவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இது தொழிலாள வர்க்கத்தில் இருந்து எப்படி அந்நியப்பட்டிருந்து வந்துள்ளது என்பதற்கு ஒரு அளவீடாகும். AFL- CIO அமைப்பின் ஒரு அதிகாரி- நான் இங்கு சிறப்பாக குறிப்பிடுவது UMW (ஐக்கிய மோட்டார் தொழிலாளர்) தொழிற்சங்கத்தின் தலைவர் ரிச்சார்ட் ட்ரம்காவை (Richard Trumka) பற்றியதாகும். தம்மால் பேரளவில் தலைமை தாங்கப்பட்ட அமைப்பின் அங்கத்துவம், தாம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்த அங்கத்தவர் எண்ணிக்கையைக் காட்டிலும் அற்பசொற்பமாக வீழ்ச்சி கண்டுபோன நிலையிலும் கூட தொழிற்சங்க உயர்மட்டத்தில் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. இன்று லேன் ஹீர்க்லன்ட் பதவியிலிருந்து விலகும்படி நெருக்கப்பட்டிருப்பின் அதற்குக் காரணம் AFL-CIO அமைப்பு இறுதியில் அங்கத்துவத்தின் நெருக்குவாரத்தினை ''பிரதிபலிப்பது'' அல்ல. அதற்குப் பதிலாக அவர் விலகும்படி நெருக்கப்பட்டுள்ளமை- இறுதியில் AFL-CIO வின் சுருக்கமானது அதிகாரவர்க்கத்தின் பகுதியினரை நேரடியாக பாதிப்பதோடு அதன் அங்கத்தவர்களிடையே சஞ்சலத்தையும் ஏற்படுத்துகின்றது.

இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னவெனில், AFL- CIO வின் உடைவானது தொழிலாள வர்க்கத்தின் உள்ளே ஒரு மாற்று தீவிரவாத பரந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான இடைவெளியை உருவாக்கிவிடும் என்பது தொடர்பாக முதலாளித்துவ மூலோபாயவாதிகளிடையே ஒரு பயத்தினை உருவாக்கியுள்ளது.

எவ்வாறெனினும் எமது பணி AFL- CIO அதிகாரத்துவத்தின் தலைவிதி பற்றி ஊகிப்பதோ அல்லது இல்லாத ஒரு முற்போக்கான போக்கின் பின்னால் அணிதிரள்வது பற்றியதோ அல்ல. AFL- CIO இன் வீழ்ச்சியில் இருந்து உரிய முடிவுகளை பெறவேண்டியதோடு, கட்சியின் புதிய பணிகளையும் சரியான முறையில் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்படக் கூடிய ஒரு தலைமை இருப்பின் அதனை எமது கட்சியினாலேயே வழங்கப்பட முடியும். உழைக்கும் மக்களுக்கு ஒரு புதிய பாதையை திறப்பதாயின் அதனை எமது அமைப்பினாலேயே திறக்கமுடியும். தலைமைப் பிரச்சனையை ஒரு புத்திசாலித்தனமான தந்திரோபாயத்தின் மூலம் தீர்த்துவிட முடியாது. தொழிலாளர் வர்க்க தலைமை நெருக்கடியினை நாம் மற்றையோரை அத்தலைமையை வழங்கும்படி கோருவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. ஒரு புதிய கட்சி தேவையெனில், இதனை நாம் கட்டியெழுப்பியாக வேண்டும்.

முன்னோக்குகளும் மூலோபாய பணிகளின் உருவாக்கமும்

Perspectives and Formulation of strategic tasks

புரட்சிகர அமைப்பின் மூலோபாய பணிகள் முதலும் முக்கியமுமாக இந்த சகாப்தத்தின் முக்கிய பண்புகளைப் பற்றிய விஞ்ஞான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டாக வேண்டும்.

இன்றைய நெருக்கடி ஒரு வெறும் தற்காலிக பண்பினையன்றி ஒரு முழு அமைப்பும் தொடர்பானது என அனைத்துலகக்குழு கருதுகின்றது. இறுதி ஆய்வுகளில் இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் அடிப்படைப் பிரச்சனையில், அதாவது இலாபவீதம் வீழ்ச்சி காணும் போக்கினை ஈடுசெய்யும் விதத்தில் போதுமான உபரிமதிப்பை கறப்பதில் வேரூன்றி உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தினால் தூண்டிவிடப்பட்ட முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடுகளை ஆழமாக்கி உள்ள, தொழில்நுட்ப புரட்சி பொருளாதார சக்தியை வெறுமனே புரிந்துகொள்ளப்பட்டதற்கான ஒரு பிரதிபலிப்பல்ல, மாறாக அதற்கு நிஜ அரசியல் சமூக நோக்கங்கள் இருந்தன. இது உண்மையில் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயன்று அதனை ஒரு உயர்ந்த மட்டத்தில் மீள உருவாக்கியுள்ளது. சுரண்டல் வீதத்தினை உக்கிரமாக்கும் திசையில் பரந்த அளவிலான தொழிலாள வர்க்கப் பகுதியினரை உற்பத்திப் போக்கில் இருந்து வெளியே தள்ளியுள்ள இப்போக்கானது உழைப்பினால் உருவாக்கப்படும் மற்றும் சராசரி இலாப விகிதத்திற்கு அடித்தளமான உபரிமதிப்பின் மொத்த அளவினை குறைத்துள்ளது.

முக்கிய முதலாளித்துவ சக்திகளின் முதலாளித்துவத்தால் முன்னெடுக்கப்படும் உற்பத்தியை இடைவிடாது அதிகரிக்க செய்வதும், உற்பத்தி செலவை குறைப்பதும், மிகவும் குறைந்த ஊதியத்தை கொண்ட உழைப்பாளிகளை தேடுவதும், தனது போட்டியாளர்களின் செலவில் சந்தையில் தனது பங்கை அதிகரிப்பதுமான சகல நடவடிக்கைகளும் இந்த புறநிலையான போக்கின் மீது அழுத்தத்தை பிரதிபலிக்கின்றன.

இந்நெருக்கடியின் அபிவிருத்தியானது இரக்கமற்ற முறையில் இரண்டு திசைகளில் இட்டுச் செல்லுகின்றது.

1. சந்தையின் பங்குக்காக முதலாளித்துவ சக்திகளிடையே போராட்டத்தினை உக்கிரமாக்கும் பெறுபேறாக யுத்தத்தின் திசையிலும்.

2. பூகோளரீதியான ஆளுமைக்கான தமது போராட்டத்துக்கும் உபரிப் பெறுமானத்துக்கான தனது சமப்படுத்த முடியாத உந்துதலுக்கும் தொழிலாளர்களின் மிகவும் அடிப்படையான அவசியங்களை கீழ்ப்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் அவசியத்தினால் தோன்றும் வர்க்கப் போராட்டங்கள் உக்கிரம் அடைவதன் பெறுபேறாக சமூகப்புரட்சியை நோக்கியுமாகும்.

அமெரிக்காவின் சமூக நிலைமை

Social Conditions in the United States

புறநிலை நிலைமைகள் புரட்சியின் திசையில் இட்டுச் செல்கின்றது. ஆனால் வரலாற்றில் இருந்து நாம் அறிந்ததுபோல் புரட்சிகர நனவின் அபிவிருத்தி ஒரு தன்னியக்கப் போக்கு அல்ல. முதலாளித்துவத்தின் அடித்தளத்தில் முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட தாக்கங்கள் அவற்றை நேரடியாக சோசலிச சிந்தனை வடிவங்களாக மாற்றிவிடுவதில்லை. ஒரு குறிப்பட்ட புறநிலை நிலைமையில் தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பானது ஒரு பரந்த குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் சிக்கலுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவை உண்மையில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் மனதினுள் மேலும் சொன்னால் தொழிலாள வர்க்கத்தின் இதயத்தினுள் செல்லும் பாதையைக் கண்டாக வேண்டும்.

லீக்கினை கட்சியாக பரிணாமம் செய்கையில் நாம் உழைக்கும் மக்களின் பரந்த பகுதியினரிடையே முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி வெளிப்படும் விதத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். மிகவும் தெளிவாகச் சொன்னால் இலட்சோபலட்சம் உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் இடைவிடாத வீழ்ச்சியை அனுபவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தமது தொழில் உத்தரவாதம் பற்றி இடைவிடாமல் அச்சம் கொண்டுள்ளனர். சம்பளம் வீழ்ச்சி கண்டு, விலைவாசி உயர்ச்சி அடைகையில் அதை ஈடுசெய்யும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வாழ்க்கையில் தற்போது ஆதிக்கம் செலுத்துவது, முன்னொருபோதும் இல்லாத செல்வத்தை அனுபவிக்கும் சனத்தொகையில் சிறிய வீதத்தினருக்கும், பொருளாதார ஸ்திரப்பாட்டின்மையினதும் மற்றும் துயரத்தினதும் பல்வேறு மட்டத்தில் வாழும் உழைக்கும் மக்களின் பரந்த தட்டினருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பாகும்.

செல்வத்தினதும் வறுமையினதும் சுட்டெண்கள்

The Indices of wealth and Poverty

சமீபத்தில் எனக்கு ''வறுமைக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம்'' என்ற ஒரு புத்தகம் கிடைத்தது. அது அமெரிக்காவின் சமூகநிலைமைகள் பற்றிய பெறுமதியான புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளது. இந்த நூலிலிருந்து சில தகவல்களை முன்வைக்க எனக்கு அனுமதி வேண்டும்.

செல்வத்தினதும் வறுமையினதும் துருவப்படுத்தல்

Polarization of wealth and poverty

1977-1988 வரை செல்வந்தர்களான 1 வீதத்தினரின் வருமானங்கள் 96 வீதத்தினால் உயர்ந்தது. செல்வந்தர்களான ஐந்தில் ஒரு பங்கினரின் வருமானம் நூற்றுக்கு இருபத்தைந்து வீதத்தினாலும் உயர்ந்துள்ளதோடு, அமெரிக்க குடும்பங்களில் வறுமையான 5 ன் வருமானம் நூற்றுக்கு பத்து வீதத்துக்கும் மேலாக வீழ்ச்சி கண்டது.

1983- 89 வரை அமெரிக்காவின் முழு செல்வத்தின் அதிகரித்த பங்கின் பெரும்பங்கு நூற்றுக்கு அறுபத்திரண்டு வீதம்- அந்த நாட்டின் செல்வந்தர்களான நூற்றுக்கு ஒரு பங்கினரிடம் சென்றது. கீழ்மட்டத்தினரான 80 சத வீதத்தினருக்கு அதிகரித்த பங்கில் நூற்றுற்கு ஒரு வீதமே கிடைத்தது. 1990ல் அமெரிக்க மக்களில் வறிய ஐந்தில் ஒரு பங்கினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 3.7 வீதத்தினை பெற்றனர். இது 1954ன் பின்னர் ஆகக் குறைந்த வீதமாகும். அதே ஆண்டில் செல்வந்தரான ஐந்தில் ஒரு பங்கினர் இதுகாறும் கண்டிராத உயர்ந்த வீதமான நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசிக்கு கூடுதலாகப் பெற்றனர்.

1943ல் டொலரின் இன்றைய பெறுமதியின் படி 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வருடாந்த வருமானமாக பெற்ற சனத்தொகையினர் மத்திய அரசாங்கத்தினது குறிக்கப்பட்ட செலவுகளுக்கு தமது முழு வருமானத்தில் 78 வீதத்தினை செலுத்தினர். 1990ல் உயர்ந்த வருமானம் பெறும் நூற்றுக்கு ஒருவரின் வருமானத்தில் மத்திய அரசாங்கத்தின் வருமான வரிக்கு உட்பட்ட தொகை 21.5 வீதம் வரை வீழ்ச்சி கண்டது.

1979 வரையிலான சகாப்தத்தில் 200,000 டொலர்கள் அல்லது அதற்கும் கூடுதலான தொகையை முழுவருமானமாக பெற்ற வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை (9,400 இலிருந்து 790,000) எட்டு மடங்கால் அதிகரித்த அதேவேளையில் அவர்களின் சமஷ்டி வருமானவரி விகிதம் 45.3 வீதத்தில் இருந்து 24,1 வீதமாக வீழ்ச்சி கண்டது.

1980ல் 57,000 ஆக இருந்த சொத்துக்களின்படி மில்லியனர்களின் தொகை 1988ல் 1.3 மில்லியன் ஆக அதிகரித்தது. 1972ல் இது 180,000 ஆகவும் 1964ல் 90,000 ஆகவும், 1953ல் 27,000 ஆகவும் விளங்கியது. 1994ல் அமெரிக்க செனட் சபையில் 28 மில்லியனர்களும், பிரதிநிதிகள் சபையில் 50 மில்லியனர்களும் இருந்தனர்.

தமது குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேல் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்த வருமானம் பெறாத முழுநேரத் தொழில் புரிந்தவர்களின் எண்ணிக்கை 1979ல் இருந்து 1992 வரையிலான காலப்பகுதியில் 100க்கு 50 வீதத்தால் அதிகரித்தது, இது முழு தொழிலாளர்களிடையே 12 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரித்தது. 10 அமெரிக்கரில் ஒருவர் இலவச உணவு மானியம் வழங்கும் உணவுக்களஞ்சியங்கள், சூப் சமையலறைகள் அல்லது உணவுதான மண்டபங்களுக்கு செல்ல நேரிட்டுள்ளது.

சிறுவர் வறுமை

Child Poverty

அமெரிக்கச் சிறுவர்களில் ஐவருக்கு ஒருவர், அதாவது 14.6 மில்லியன் ஏழைகளாவர். 1965ன் பின்னர் எந்தவொரு வருடத்தைக் காட்டிலும் 1992ல் அமெரிக்கச் சிறுவர்கள் வறுமையில் மூழ்கிப்போய் இருந்தனர், எனினும் இக்காலப் பகுதியில் அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GNP) 53.2 வீதத்தினால் அதிகரித்தது. 1991ல் 18 வயதுக்கு குறைந்த 12 மில்லியன் குழந்தைகள் (அனைத்து குழந்தைகளிலும் 18.3 வீதம்) பட்டினியால் பீடிக்கப்பட்டு இருந்தனர். 1989க்கும் 1992க்கும் இடையே உணவு முத்திரை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 41 வீதத்தினால் 13.3 மில்லியனுக்கு அதிகரித்தது. 1990ல் உறையுள் தேடும் வீடற்றோரில் குழந்தைகள் 30 வீதமாக இருந்தனர்.

1990ல் 15 மாநிலங்களில் சிறுவர் வறுமை 20 வீதமாகவும் அதற்கு கூடுதலாகவும் இருந்தது. மிசுசிப்பியிலும், லூசியானாவிலும் ஒவ்வொரு மூன்று குழந்தைக்கும் ஒரு குழந்தை ஏழையாக இருந்தது. நியூ மெக்சிக்கோவிலும், மேற்கு வேர்ஜினியாவிலும், கொலம்பியா மாவட்டத்திலும், ஆர்க்கான்சாவிலும் இது நான்குக்கு ஒன்றாக இருந்தது.

அமெரிக்க குழந்தைகள் கனேடிய குழந்தைகளை விட இருமடங்கு வறியோராகவும், பிரித்தானிய குழந்தைகளை விட மூன்றுமடங்கு வறியோராகவும், பிரெஞ்சு குழந்தைகளைவிட நான்குமடங்கு வறியோராகவும், ஜேர்மனி, ஒல்லாந்து, சுவீடன் குழந்தைகளை விட ஏழு தொடக்கம் பதின்மூன்று மடங்கு வறியோராகவும் உள்ளனர்.

1984 இற்கும் 1987 இற்கும் இடையில் அமெரிக்கா ஒரு உதாரணமான கைத்தொழில் நாடுகளுக்கு இடையே குழந்தைகளை வறுமையில் இருந்து விடுவிப்பதில் ஆகக்குறைந்த வெற்றிவீதத்தினையே கொண்டிருந்தது. இந்த வீதம் ஐக்கிய இராட்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளைக் காட்டிலும் 9 மடங்கு சிறியதாக விளங்கியது.

இரத்தச்சோகை மற்றும் உணவு பற்றாக்குறை என்பன வறிய குழந்தைகள், வயது வந்தோர்களிடையே பொதுவானதாகக் காணப்பட்டது. இரும்புச்சத்து பற்றாக்குறை, பொதுசனத் தொகையினரிடையே காணப்பட்டதைக் காட்டிலும் ஒரு வயது, இரண்டு வயதைக் கொண்ட குறைந்தமட்ட வருமான குழுவினரிடையே இரண்டு மடங்கு சாதாரணமாகக் காணப்பட்டது.

1989ல் 10,000- 15,000 டொலர் வருமானத்தைக் கொண்ட வீடுகளில் வசிக்கும் உயர் பாடசாலை மாணவர்களில் 4.4 வீதத்தினர் ஒரு கணனியை (Computer) வீடுகளில் பயன்படுத்துகின்றனர். 40.000- 50,000 டொலருக்கு இடைப்பட்ட வருமானத்தைக் கொண்ட வீடுகளில் இந்த எண்ணிக்கை 27.7 வீதமாக உள்ளது.

1984- 1994 க்கும் இடையே அமெரிக்கா அதன் கூட்டு மனித தேவைகளின் பேரில் செலவிட்டதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பாதுகாப்புக்கு செலவிட்டது. கல்விக்கு செலவிட்டதைக் காட்டிலும் ஏறக்குறைய 15 மடங்கு அதிகமாக பாதுகாப்புக்கு செலவிட்டது.

சம்பளங்களும் பகுதிநேர தொழிலாளர்களும்

wages and Part- time workers

1970- 1993 க்கும் இடையே கட்டாயத்தின் பேரிலான பகுதிநேரத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 178 வீத அதிகரிப்பு காணப்பட்டது. இதேசமயம் முழுநேரத் தொழிலாளர் எண்ணிக்கை 51 வீதத்தினால் மட்டுமே அதிகரித்தது. குறைந்தபட்ச சம்பளம் பணவீக்க மட்டத்துடன் உயரவில்லை. குறைந்தபட்ச சம்பளம் பெறும் ஒரு முழுநேர -ஆண்டு பூராவும் உழைக்கும் தொழிலாளியின் வருமானம்- மூன்று பேரைக்கொண்ட குடும்பத்தின் வருமானம் வறுமைக்கோட்டுக்கு கீழாக வீழ்ச்சி கண்டது.

1979இற்கும் 1989 இற்கும் இடையே 17.2 மில்லியன் தொழில்கள் உருவாக்கப்பட்ட போதிலும் உயர்சம்பளம் பெறும், 17 லட்சம் உற்பத்தி தொழிற்துறை தொழில்கள், சுரங்கத் தொழில்கள் இல்லாமல் போனதோடு சேவைத்துறையின் (Service sector) குறைந்த சம்பளம் பெறும் தொழில்கள் 1 கோடியே 88 இலட்சத்தினால் உயர்ந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்களில் பெரும்பகுதி மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் இரண்டு துறைகளான, அதாவது வாரத்திற்கு 276 டொலர் சம்பளம் வழங்கும் சில்லறை வர்த்தக துறையும், 1 வாரத்திற்கு 357 டொலர் சம்பளம் வழங்கும் சேவை துறையும் விளங்கின.

சிறைச் சனத்தொகை

Prison Population

1980 களில் வேகமாக வளர்ச்சி காணும் ஒரு வீடமைப்பு வகையாக சிறைச்சாலைகள் விளங்கின. ஒவ்வொரு 250 அமெரிக்கரிலும் ஒருவருக்கு மேலாக ஏதேனும் ஒரு சீர்திருத்த சிறைகளில் காலங்கழித்தனர். இது உலகின் அதிகூடிய சிறையிலிடப்பட்டோர் வீதாசாரமாகும்.

1980ன் சனத்தொகைப்புள்ளி விபரங்களின்படி 315,974 பேர் சிறையில் இருந்தனர். 10 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தள்ளப்பட்டோர் எண்ணிக்கை 1.1 மில்லியன் வரை- 3 மடங்கால் அதிகரித்தது. இது முழு டெட்ரோயிட் நகரத்தினதும் சனத்தொகையை தாண்டிச்செல்லும் புள்ளி விபரமாகும்.

சுகாதார காப்புறுதி

Health Insurance

10,000 டொலருக்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட அமெரிக்கர்களில் 36 வீதமானோருக்கு சுகாதார காப்புறுதி கிடையாது. 1991ல் காப்புறுதி செய்யாத நோயாளியின் மரண விகிதம், தனிப்பட்ட காப்புறுதி செய்த நோயாளிகளைக் காட்டிலும் நூற்றுக்கு 44 வீதம் தொடக்கம் 124 வீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டது. 1992ல் ஏழை மக்களின் 5ல் ஒரு பகுதியினருக்கு சுகாதார காப்புறுதி இருக்கவேயில்லை.

புலம்பெயர்ந்தோர்

Immigrants

வறுமைக் கோட்டுக்கு கீழாக வாழும், குடிபெயர்ந்து வந்த குடும்பங்களின் வீதாசாரம் 1979ல் 11 வீதமாக இருந்து 1991ல் 31.7 வீதமாக அதிகரித்தது.

கிராமப்புற அமெரிக்கா

Rural Amerika

அமெரிக்கச் சனத்தொகையில் 1/4 பங்கினரான 70மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் 1/6 பங்கினர் வறுமையில் வாழ்கின்றனர். அமெரிக்க நிலச்சுவாந்தர்களில் உயர்மட்ட 5 வீதத்தினர், அமெரிக்க தனியுடமை நிலங்களில் 75 வீதத்தினைக் கொண்டுள்ளனர். அடிமட்டத்தில் உள்ள 78 வீதத்தினர் 3 வீதத்தினை மட்டுமே கொண்டுள்ளனர்.

1980- 1990 இற்கும் இடையே பண்ணைத் தொழில்கள் 22 வீதம் வீழ்ச்சி கண்டது.

மேலதிக புள்ளிவிபரங்கள்

Additional Statistics

குறைந்தது 2.3 மில்லியன் டொலர்கள் தேசியமதிப்புள்ள சொத்துக்களை கொண்ட 1 வீத அமெரிக்க செல்வந்த குடியிருப்பாளர்கள், நாட்டின் செல்வத்தில் 40 வீதத்துக்கும் மேலாக கொண்டுள்ளனர்.

சனத்தொகையில், 0.5 வீதத்துக்கு குறைவானோர் கம்பனி பங்குகளில் 37.4 வீதத்தையும் தனிப்பட்ட வர்த்தக சொத்துக்களில் 56.2 வீதத்துக்கும் மேலாகவும் கொண்டுள்ளனர்.

உயர்மட்டத்தைச் சேர்ந்த 5 வீதத்தினர் 1979ல் 120,253 டொலர்களை வருமானமாக கொண்டிருந்தனர். 1989ல் இதை 148,428 டொலர்களாக அதிகரித்து.

இதேசமயத்தில் வறிய 20 வீதத்தினரின் சம்பளம் 9,990 டொலர்களில் இருந்து 9,431 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. 3.8 மில்லியன் மக்களான உயர்மட்ட 4 வீதத்தினர், 49.2 மில்லியனான கீழ்மட்ட 51 வீதத்தினரினது மொத்த உழைப்பிற்கு சமமானதை உழைத்தனர்.

உயர்மட்ட 20 வீதத்தினர் 4/5 பங்கினரைக் காட்டிலும் கூடிய வருமானத்தைப் பெற்றனர்.

தொழில்நுட்ப அபிவிருத்திகளின் தாக்கமும் உற்பத்தித் தொழில்நுட்பத்திலான மாற்றங்களும்

The Impact of Technological Developments and changes in Production Techniques

தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார அந்தஸ்திலும் சமூகநிலைமைகளிலுமான சீரழிவு, அதனை அதிகரிக்க செய்த தொழில்நுட்ப புரட்சியுடனும், உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துடனும் நேரடியாகத் தொடர்புபட்டது. உற்பத்தி சக்திகளின் தனிச்சொத்துடமை ஆட்சியின் கீழ், தொழிலாள வர்க்கம் தொழில்நுட்பத்திற்கு பலியாகியுள்ளனர். 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியினதும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியினதும் பாரிய உற்பத்தி முறைகளும், Assembly Line தொழிற்சாலைகளை நிறுவிய தொழில்நுட்பங்களுக்கு முரணாக உற்பத்தியின் கணினிமயமாக்கம் இலட்சோபலட்சம் மக்களை அவர்களின் தொழில்களிலிருந்து வெளியேற்றி வருகின்றது.

1950களில் அமெரிக்கத் தொழிலாளர்களில் 1/3 பங்கினர், உற்பத்தி தொழில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 1990 அளவில் இத்தரவுகள் 17 வீதமாக விளங்கின.

1990ல் அமெரிக்க உருக்கு தொழிற்துறை 20,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, 1980ல் 120,000 தொழிலாளர்களுடன் இது உற்பத்தி செய்ய முடிந்த உருக்கினை உற்பத்தி செய்தது.

1983-1993 இற்கும் இடையே தன்னியக்க ''ரெல்லர்'' (Automatic Teller Machines) இயந்திரங்களின் அறிமுகம், 179,000 தொழில்களின் அழிப்புக்கு இட்டுச் சென்றது.

1947-1973 இற்கும் இடையே வாரச் சம்பளம் ஆண்டொன்றுக்கு சராசரியாக நூற்றுக்கு 1.9 வீதத்தினால் அதிகரித்தது. 1973- 1990 க்கும் இடையே அவை ஆண்டொன்றுக்கு உண்மையான அர்த்தத்தில் 0.9 வீதத்தினால் வீழ்ச்சி கண்டன.

1982ல் நிலையான டொலர்களில் அளக்கப்பட்டபோது, தொழிலாளர்களின் சராசரி சம்பளம், 1973ன் 308.03 டொலர்களில் இருந்து 1991ல் 260,37 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. இது வருமானத்தில் இடைவிடாத ஒரு வீழ்ச்சியாகும்.

1990களின் தொடக்கத்தில் சராசரி சம்பளத்தின் கொள்முதல் சக்தி, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட 15 வீதம் குறைவானதாகும்.

25- 34 வயதுக்கு இடைப்பட்ட ஆண் தொழிலாளர்களின் உழைப்பு வீதம் --நால்வரைக் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதரிக்க அவசியமானதெனக் கருதப்பட்டது-- 1969ல் 13.6 வீதத்திலிருந்து 1993ல் 32.2 வீதமாக அதிகரித்தது.

புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய வகையறாவிலான தொழில்கள் தோன்றுகின்றன. ஆனால் அவை குறைந்த சம்பளத்தை வழங்குவதோடு குறைந்த பாதுகாப்பையும் வழங்குகின்றன.

இத்தகைய சமூக நிலைமைகளையிட்டு வேர்க்கஸ் லீக் அக்கறை செலுத்த வேண்டும். அங்ஙனம் செய்கையில் ஸ்ராலினிசத்தின் குற்றங்களால் மதிப்பிழக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட சோசலிசத்தின் வரலாற்று முன்னோக்கினை தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுடன் ஒன்றிணைக்கவேண்டும்.

வேர்க்கஸ் லீக் ஒரு புதிய கட்சியை ஸ்தாபிதம் செய்கையில், அனைத்து குட்டிமுதலாளித்துவ தீவிரவாத குழுக்களில் இருந்தும் அவற்றின் போலிப்புரட்சிகர வார்த்தை ஜாலங்களில் இருந்தும், அவற்றின் பெயர்களான மார்க்சிச- லெனினிச கூட்டு, லெனின்- ட்ரொட்ஸ்கி கட்சி, கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் கழகம் போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்திக்கொள்ள வேண்டும். இவை அவற்றுள் சிலவாகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களின் பெயர்கள் புரட்சிகரமானதாக உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சந்தர்ப்பவாதமும் நாற்றம் கண்டுள்ளது.

கட்சியின் நோக்கம் அதனது பெயரில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிதுடன், தொழிலாளர்களால் புரிந்து கொள்ளவும் இனங்காணவும் கூடியதாகவும் இருக்கவேண்டும். உண்மையில் கலந்துரையாடல் அவசியம், பிரதியீட்டுக்கான யோசனைகள் தெரிவிக்கப்படலாம். இச் சமயத்தில் நான் வேர்க்கஸ் லீக்கினை சோசலிச சமத்துவக் கட்சியாக பரிணாமம் செய்யும் தயாரிப்புக்களை ஆரம்பிக்க பிரேரிக்கின்றேன்.

சுருக்கமாக குறிப்பிட்டால், கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கையில், அதன் நோக்கு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதாகுமென நாம் தெளிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களினால் நடத்தப்படும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தையே நாம் கருதுகின்றோம். அத்தகைய ஒரு அரசாங்கம், தொழிலாள வர்க்க நலன்களுக்கு ஏற்ப, பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைக்கவும், சமூகத்தின் நாசகரமான சந்தை சக்திகளை வெற்றிகொண்டு, அவற்றை ஜனநாயக ரீதியிலான சமூகத்திட்டமிடல் மூலம் பதிலீடு செய்யவும், உழைக்கும் மக்களின் உடனடி சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செல்வத்தை ஒரு தீவிரமானதும் சமூகரீதியில் நியாயமானதுமான முறையில் மறுபங்கீடு செய்வதன் மூலம், சோசலிசத்துக்கான அத்திவாரத்தினை இடவும் பயன்படுத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த இலக்குகளை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அனைத்துலக இயக்கத்தின் ஒரு இணைந்த பாகமாக மட்டுமே யதார்த்தமாக்க முடியுமென நாம் வலியுறுத்துகின்றோம். ஏனைய நாடுகளில் உள்ள அதனது வர்க்க சகோதரர்களையும், சகோதரிகளையும் பன்நாட்டு, ட்ரான்ஸ்நாஷனல் கூட்டுத்தாபனங்கள் சுரண்டும் வரை அமெரிக்கத் தொழிலாளிக்கு சமூக சமத்துவமும், சமூக நீதியும் கிட்டாது. மேலும் வர்க்கப் போராட்டம் அடிப்படையாகக் கொள்ளக்கூடிய எதுவிதமான தேசிய மூலோபாயமும் கிடையாது. தொழிலாள வர்க்கம் அதனது அனைத்துலக மூலோபாயத்தினை ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களின் அனைத்துலக மூலோபாயத்துக்கு எதிராக உறுதியாகவும், திட்டமிட்டவகையிலும் முன்வைத்தாக வேண்டும். சோசலிச வேலைத்திட்டத்திற்கு முக்கியமான இந்த தீர்மானகரமான பிரச்சனையில் சமரசத்துக்கு இடம் கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சிக்கான கோரிக்கைகள்

The Demands of the Socialist Equality Party

தொழிலாள வர்க்கத்தினை அரசியல் ரீதியில் அணிதிரட்ட உழைக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியானது இன்றுள்ள சமூகநிலைமைகளில் இருந்து தோன்றும் வெகுஜனங்களின் உடனடித் தேவைகளுக்கு கவனத்தைச் செலுத்தியாகவேண்டும். அனைத்துலக மூலதனம் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான இடைவிடாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஒரு சமயத்தில், சமூகக் கோரிக்கைகள் முழுமையானதும், ஒழிவுமறைவு அற்றதுமான ஒரு புரட்சிகரப் பண்பை பெறுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக பழைய அமைப்புக்கள், சீர்திருத்த நடவடிக்கைகளின் ஊடாக சீர்திருத்தக் கோரிக்கைகளை ஈட்டிக்கொள்வது சாத்தியமாக இருந்திருக்குமானால் அவை அவற்றைக் கைவிட்டிருக்க மாட்டா. உண்மையில் மிகவும் அடிப்படையான தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு கோரிக்கையும் தொழிலாள வர்க்கத்திற்கும், முதலாளித்துவ அரசுக்கும் இடையேயான ஒரு நேரடி மோதுதலை தோற்றுவிக்கின்றது.

எமது வேலைத்திட்டத்தினுள் சேர்த்துக் கொள்ளும் கோரிக்கைகளை, நாம் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். எவ்வாறெனினும் எதிர்கால சோசலிச கற்பனாவாத ராஜ்யத்துக்கான ஒரு அறிக்கையாக ஒரு வேலைத்திட்டத்தினை எழுதவேண்டியது அவசியமில்லை. மாறாக அது அதனது புறநிலை நலன்களைக் கொண்ட ஒரு கூட்டு இலக்கினை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கவேண்டும். மேலும் அது வெகுஜனங்களின் நனவில் ஒரு நரம்பை மீட்க வேண்டும். சமூக சமத்துவத்துக்கான கோரிக்கை, சோசலிச இயக்கத்துக்கான அடிப்படை நோக்கினை மட்டும் மொத்தத்தில் எடுத்துக் கூறவில்லை. அது கூடவே அமெரிக்கத் தொழிலாளர்களின் நிஜ ஜனநாயகமும், புரட்சிகரப் பாரம்பரியங்களிலும் வேரூன்றியுள்ள சமூக சமத்துவப் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்க வரலாற்றில் மாபெரும் சமூகப் போராட்டங்கள் அனைத்தும் தமது பதாகைகளில் சமூக சமத்துவத்துக்கான கோரிக்கையை பொறித்துக் கொண்டுள்ளன. இன்றுள்ள அரசியல் பிற்போக்கான சூழலில் இந்த இலட்சியம் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தற்செயலானதல்ல.

தந்திரோபாயக் கணிப்புகள்

Tactical Considerations

இந்தப் பிரேரணையை அறிமுகம் செய்யுமிடத்து இது எந்தவிதத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது என்பதையிட்டு நாம் கவனம் செலுத்தியாக வேண்டும் என நான் நினைக்கின்றேன், ஏனெனில், வேர்க்கஸ் லீக்கில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சிக்கான பரிணாமம் என்பது, இன்றுள்ள எமது சக்திகளை மறுசீரமைப்புச் செய்வதன்றி, பரந்த மக்களுடனான எமது உறவில் ஒரு மாற்றத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. எனவே இந்த மாற்றமானது ஒரு பொறுமைமிக்க தயாரிப்பை வேண்டி நிற்கின்றது. எமது பெயரை மாற்றி, எம்மை ஒரு புதிய கட்சியாகப் பிரகடனம் செய்வது மட்டும் போதாது. நாங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நிஜ சமூக இயக்கத்தினை ஊக்கி வளர்க்கவும், அதனால் இப்புதிய கட்சிக்கு ஒரு உறுதியான அத்திவாரத்தினை ஸ்தாபிதம் செய்யவேண்டும்.

நாங்கள் 1996 தேர்தல் பிரசாரத்தை இந்த மாற்றம் அடித்தளமாக கொள்ளக்கூடிய சக்திகளை கட்டி எழுப்புவதற்காக பிரயோசனப்படுத்துவோம். அதாவது, வேர்க்கஸ் லீக் 1996 இன் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் தனது சொந்த வேட்பாளர்களுடன் தலையீடு செய்யலாம். தேர்தல் அடையாளத்திற்காக சோசலிச சமத்துவ கட்சி என்ற பெயரையே பயன்படுத்தலாம். இதன் மூலம் சமூக சமத்துவத்திற்காக தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட ஒரு இயக்கத்தை தூண்டுவதனை விளங்கப்படுத்துவதற்காக இப்பிரச்சாரத்தை பயன்படுத்தலாம். இப்பிரச்சாரத்தின் ஊடாக லீக்கினை கட்சியாக மாற்றுவதற்கான பொதுவான மாற்றத்திற்கான அத்தியாவசியமான அடித்தளத்தை உருவாக்கலாம்.

தோழர்களே, இந்த வகையிலேயே நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என முன்மொழிகின்றேன்.