wsws : Tamil
 

உலக நெருக்கடியின் தாக்கங்கள்
The Historical Setting
 The New Tasks of The International Committee
The  workers League and the Labor Party Demand
The Formation of a New Party

 

Marxism and the Trade unions

 

The New Tasks of The International Committee

அனைத்துலகக் குழுவின் புதிய பணிகள்

Use this version to print | Send this link by email | Email the author


உலக நெருக்கடியின் தாக்கங்கள்

The Implications of the world Crisis

இதுவரை குறிப்பிட்டவை அபிவிருத்தி கண்டுவரும் நெருக்கடியின் முக்கிய அம்சங்கள் பற்றிய ஒரு குறிப்பு மட்டுமேயாகும். நான் குறிப்பிட விரும்பும் முக்கிய அம்சம் பின்வருமாறு: உலக முதலாளித்துவத்தின் பழைய சமநிலை உடைந்துவிட்டது. நாம் அனைத்துலக முதலாளித்துவ சமநிலையின்மையின் ஒரு புதியதும் நீண்டதுமான காலகட்டத்தினுள் வேகமாகச் சென்று கொண்டுள்ளோம். யுத்தத்தின் முடிவில் பின்னர் முதலாளித்துவத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்ட உலகளாவிய உற்பத்தி சக்திகள் தேசிய அரச முறையுடனும், உற்பத்தி சக்திகளின் தனியார் உடமையுடனும் பொருந்தாதவையாகிவிட்டன. வரலாற்று அர்த்தத்தில் இன்று பெருகிவரும் வீழ்ச்சிகள் இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியதைப்போல ஆழமானதும் வெடிக்கும் சாத்தியமும் கொண்டவையாகும். நாம் கண்ணெதிரே யுத்தங்களையும், புரட்சிகளையும் எதிர்நோக்குகின்றோம்.

முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து இதுவரை தொழிலாள வர்க்கத்தின் மேல் ஆதிக்கம் கொண்டிருந்த பழைய கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்களின் வீழ்ச்சி மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் ஆளுமையை நிறுவும் சாத்தியம் இன்று தோன்றியுள்ளது.

ஒரு வரலாற்று வேலைத்திட்ட அர்த்தத்தில் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிக் கட்சிகளாகும். எமது பகுதிகளுள் ஒரு பலம்வாய்ந்த பாரம்பரியமும் அனுபவமும் திரண்டுபோயுள்ளன. அனைத்துலகக் குழுவுக்கு வெளியே புரட்சியாளர் என்ற பெயருக்கு பொருத்தமான எந்தவொரு போக்கும் கிடையாது. ஆனால் நீண்டகாலத்திற்கு எமது பகுதிகள் ஒரு பரந்த புரட்சிக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கு சாதகமற்ற நிலைமைகளின் கீழேயே தொழிற்பட்டு வந்துள்ளன. நடைமுறை அர்த்தத்தில் நாம் இன்னமும் தொழிலாள வர்க்கத்தினுள் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

மார்க்சிசம் ஒரு விஞ்ஞானம். ஆனால் ஒரு புரட்சிக் கட்சியை கட்டுவதற்கு தொடரப்பட வேண்டிய திட்டவட்டமான நடவடிக்கைகளை முன்கூட்டியே விளக்குகின்ற ஒரு தொகை சம்பிரதாயபூர்வமான அறிவுறுத்தல்களை மார்க்சிசம் கொண்டிருக்கவில்லை. மேலும் வரலாற்று நிகழ்வுப்போக்கின் இயல்பிலிருந்தே கடந்தகாலம் எதிர்காலத்திற்கான திட்டவட்டமான வழிகாட்டலை வழங்கவில்லை. ஒருவர், கடந்தகாலத்தின் பாரம்பரியங்களில் இருந்து பாடங்களையும், உந்து சக்தியையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதிர்காலம் என்பது ஒரு மங்கலான விதத்தில் கடந்தகாலம் திரும்ப நிகழ்வது போன்ற ஒரு வடிவத்தை எடுக்காது.

அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தி, இன்றைய காலகட்டத்தின் விசேடமான பிரச்சனைகளுக்கு அதனது காரியாளர்களிடம் இருந்து ஒரு ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கின்றது. நான்காம் அகிலம் அடிப்படையாகக் கொண்டுள்ள வரலாற்று வேலைத்திட்டத்தினை பேணுகையில் நாம் எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆனால் இவ் வேலைத்திட்டம், தொழிலாள வர்க்கம் இறுதியாக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு வேண்டிய அமைப்பினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தினால் தொடர்ச்சியாக வளமாக்கப்பட்டதாகும்.

பல தசாப்தங்களுக்கு பரந்த தொழிலாளர்களுக்கு தலைமை வழங்கும் சாத்தியம் புறநிலை நிலைமைகளால் எமது இயக்கத்திற்கு மறுக்கப்பட்டிருந்தது. நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் பிரதானமாக ஒரு பிரச்சார இயல்புடையதாக விளங்கியது என்பதனை எந்தவிதமான மனக்குழப்பமும் இன்றி கூறுகின்றோம். பெரும்பாலும் நாம் எமது போராட்டங்களை ஒரு கருத்தியல் மட்டத்திலேயே மேற்கொண்டோம். எப்படியிருந்தபோதிலும், வேர்க்கஸ் லீக்கின் முழு வரலாற்றையும் விசேடமாக என்ன வித்தியாசப்படுத்தியது என்றால், நாங்கள் மிகவும் சாதகமற்ற நிலைமையின் கீழும் கூட எங்களது வேலைகளை ஒரு சாத்தியமான உயர்ந்த மட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் உயிர்வாழும் அனுபவங்களுடன் இணைப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்தோம். உண்மையில் கட்சியின் நடவடிக்கைகள், நேரடியாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினர் மீது நேரடியாக செல்வாக்குச் செலுத்திய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஹரி ரெய்லர், வாஷிங்டன் போஸ்ட் தொழிலாளர்களை காக்கும் பிரச்சாரங்கள், 1974, 1977-78 சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் வேர்க்கஸ் லீக் வகித்த மையப்பாத்திரம், ''பற்கோ'' வேலைநிறுத்தம், பெல்ப்ஸ் டொட்ஜ் வேலைநிறுத்தம், றொஜே கவுத்திரா பாதுகாப்பு, மக் அவனியூ கமிட்டி வேலைகள், மிக சமீபத்தில் பாடசாலை பஸ் சாரதிகள் பாதுகாப்பு என்பனவற்றில் எமது கட்சி முன்னணிப்பாத்திரம் வகித்தது. இவை வேர்க்கஸ் லீக் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே- குறிப்பாக அதனது அரசியல் ரீதியில் முன்னேற்றமான பகுதியினரிடையே தமது செல்வாக்கினை ஆழமாக்கிக்கொண்ட பல பிரச்சாரங்களில் மிகவும் முக்கியமானவையாகும்.

மார்க்சிசமும் குறுங்குழுவாதமும்

Marxism and Sectarianism

பல தசாப்தங்களாக குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளிடையே இருந்து வந்த எமது எதிரிகள் எம்மை குறுங்குழுவாதிகள் என கண்டனம் செய்து வந்தனர். அதன் மூலம் அவர்கள் கொள்கையின் மீதான எமது உறுதி, ஸ்ராலினிசத்தின் பேரிலான எமது சமரசமற்ற குரோதம், மத்தியதர வர்க்க தீவிரவாதிகள் தொடர்பான குரோத மனப்பாங்கு, வர்க்க உடனுழைப்பு அரசியலுடன் சமரசம்காண மறுப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டிருந்தனர். வேர்க்கஸ் லீக்கின் நடைமுறைத் திறனுக்காக தனது பாராட்டினை என்னிடம் அடிக்கடியும் சக்திவாய்ந்த முறையிலும் தெரிவித்து வந்த ஹீலி கூட ''குறுங்குழுவாதம்'' என்ற குற்றச்சாட்டை எம்மீது வீசி எறிந்தார். அவர் ஆதர்ஸ் கார்கிலுடனான தனிப்பட்ட சந்திப்புக்களில் இருந்து திரும்பும்போதும், கிரெம்ளினில் கொர்பச்சேவுடனான தரிசனங்களுக்கு செல்லும்போதும் இம்முடிவுக்கு வந்தார்.

ஒரு சிறப்புப் பதமாக அல்லது விஞ்ஞானபூர்வமான முறையில் பயன்படுத்துகையில் ''குறுங்குழுவாதம்'' என்ற பதம் மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கையில் தொழிலாளர் இயக்கத்தின் அனுபவங்களுக்கும் தேவைகளுக்கும் ஸ்தூலமான முறையில் தொடர்புபடுத்த முடியாததாகவும், தொடர்புபடுத்த அனுமதிக்க முடியாததாகவும் காணும் ஒரு போக்கினை குறித்து நிற்கிறது. நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ட்ரொட்ஸ்கி அத்தகைய போக்குகளுக்கு எதிராக போரிட்ட சம்பவங்களும் உண்டு. அத்தகைய போக்குகளுக்கு எதிராக அவர் நின்று வந்தமையை நாம் எமது அரசியல் மரபுகளின் பாகமாகக் கொள்கின்றோம்.

1935ல் ட்ரொட்ஸ்கி எழுதுகையில் ''முதலாளித்துவ சமுதாயத்தின் செயற்பாட்டை வரையறுப்பதும், அதனால் கண்டுபிடிக்கப்பட்டதுமான விதிகளின் அடிப்படையிலான ஒரு விஞ்ஞான ரீதியிலான வேலைத்திட்டத்தினால் கட்டப்பட்டதே மார்க்சிசமாகும். இது ஒரு பிரமாண்டமான வெற்றியாகும்! எவ்வாறெனினும் ஒரு சரியான வேலைத்திட்டத்தினை உருவாக்க இது போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்வது தொழிலாள வர்க்கத்திற்கு அவசியம். ஆனால் குறுங்குழுவாதிகள் தமது இயல்பின் காரணமாக, மேற்கூறிய பணியின் முதல் அரை இறுதியிலேயே தம்மை நிறுத்திக்கொள்வர். அவர்களுக்கு பரந்த தொழிலாளர்களின் நிஜப்போராட்டங்களுள் தலையீடு செய்வது என்பது மார்க்சிச வேலைத்திட்டத்தின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சாரங்களின் பிரதியீடாகும்.

''ஒவ்வொரு தொழிலாள வர்க்கக் கட்சியும், ஒவ்வொரு பிரிவும் அதன் ஆரம்ப கட்டங்களில் முற்றிலும் பிரச்சார காலப்பகுதியினூடாக அதாவது அதன் காரியாளர்களை பயிற்றும் கட்டத்தைக் கடந்து செல்கின்றது. ஒரு மார்க்சிச வட்டமாக (Marxist circle) இருந்துவரும் காலப்பகுதி தொழிலாளர் இயக்கத்தின் பிரச்சனைகளை அணுகும் போக்கினுடன் தவிர்க்கமுடியாதபடி ஒட்டிக் கொள்கின்றது. இந்த வட்டத்தின் விளிம்புக்கு அப்பால் உரிய தருணத்தில் பயணம் செய்ய எவர் முடியாது உள்ளாரோ அவர் ஒரு பழமை பேணும் குறுங்குழுவாதியாக பரிணாமம் அடைகின்றார். குறுங்குழுவாதி சமுதாயத்தின் வாழ்க்கையை ஒரு பெரும் பாடசாலையாகவும், அதற்கு தம்மை ஒரு ஆசிரியனாகவும் நோக்குகின்றார். அவரின் கருத்தப்படி, தொழிலாள வர்க்கம் அதனது சிறிய முக்கியத்துவமற்ற விடயங்களை மறந்துவிட்டு அவரின் பிரசங்க மேடையைச் சுற்றி வளைத்து திரளவேண்டுமென அவர் நினைக்கின்றார். அதுதான் பிரச்சனைக்கு அவர்களின் தீர்வாகும்.

''ஒவ்வொரு வசனத்திலும் அவர் மார்க்சிசத்தின் பேரால் சத்தியப்பிரமாணம் செய்தாலும் குறுங்குழுவாதம், இயங்கியல் சடவாதத்திற்கு நேரெதிரானது. அது அனுபவத்தினை, புறப்படும் புள்ளியாகக் கொண்டு எப்போதும் அதற்கே திரும்பவும் செல்கின்றது. ஒரு குறுங்குழுவாதி பூரணத்துவமான வேலைத்திட்டத்திற்கும், ஒரு போராட்டத்திற்கும் இடையேயான இயங்கியல் செயல்பாட்டையும் புரிந்துகொள்வதில்லை. குறுங்குழுவாதம் இயங்கியலுக்கு எதிரானது. (வார்த்தைகளில் அல்ல செயலில்) அது தொழிலாள வர்க்கத்தின் நிஜ அபிவிருத்திக்கு புறமுதுகு காட்டுகின்றது. (writings of Leon Trotsky, New York, Pathfinder, 1977, pp. 152-53)

வேர்க்கஸ் லீக்கின் உள்ளோ அல்லது அனைத்துலகக் குழுவின் உள்ளோ ஒரு குறுங்குழுவாதப் போக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. எப்படியிருந்தபோதும் தொழிற்சங்கங்களினதும் சீர்திருத்தவாத கட்சிகளதும் அசிங்கமான நாற்றமெடுப்பினால் உக்கிரமாக்கப்பட்ட நிர்ப்பந்தமான தனிமைப்படுத்தல்களுக்கு இரையாக பல ஆண்டுகள் விளங்கியதன் பின்னர், வேர்க்கஸ் லீக்கும் அதன் சகோதரக் கட்சிகளும் புறநிலை நிலைமைகளைப் பற்றி செய்துகொண்டுள்ள அதன் ஆய்வுகளின் அடிப்படையில் செயல்படவும் புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இருந்துவரும் புதிய வாய்ப்புக்களை இனங்காணவும் தவறும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது. சம்பவங்களின் புறநிலைத் தாக்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆரம்பிப்புக்களை அதனது நடைமுறை வேலைகளுள் அறிமுகம் செய்யத் தவறுவதன் மூலம் தரப்பட்ட ஒரு நிலைமையினுள் இருந்துகொண்டுள்ள சாத்தியங்களை நிஜமாக்க கட்சி தவறிவிடலாம்.

மிகவும் புரட்சிகரமான அமைப்பினுள் கூட ஒரு சக்திவாய்ந்த மந்தப்போக்குகள் இருந்துகொண்டுள்ளன. யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவை எப்படி அபிவிருத்திகாணாது இருக்க முடியும்? உண்மையில் எமது அமைப்புக்களின் விடாப்பிடியான போக்கு, கோட்பாட்டு பாரம்பரியங்களை பேணும் அவற்றின் சமரசமற்ற போக்கு, மேல்மட்டமாக விளங்கிக்கொள்ளப்பட்டதால் ஆழமாக சிந்திக்கப்படாத புதுமைப்படுத்தல்களான ''புதிய உலக யதார்த்தங்கள்'' போன்றவற்றிக்கு எதிரான எமது எதிர்ப்பு என்பன நான்காம் அகிலத்தின் புரட்சிகர அனைத்துலகக் குழுவின் புரட்சிகரப் பண்பின் ஒரு அத்தியாவசியமான மூலமாக விளங்கியது. ஆனால் உறுதியானதும், சிருஷ்டிகரமானதுமான ஆரம்பிப்புக்களை வேண்டிநிற்கும் நிஜ ஆழமான மாற்றங்களின் இச்சமயத்தில் இந்தப் போக்குகள் பழமை பேணும் வாதத்திற்கும், திருப்திக்குமான ஒரு மூடுதிரையாக மாறும் ஆபத்து இருந்துகொண்டுள்ளது. காலம் மாறியுள்ளது என்பதையும் பல வருடங்களாக நிலவிய எமது வேலையின் வடிவங்கள் இன்றுள்ள புதிய நிலைமைக்கு இனியும் பொருந்தாது என்பதும், வெறும் பிரச்சார விளக்கம்தான் எமது இயக்கத்தின் பொதுஇலக்கு என்பது காலாவதியாகிவிட்டது. அதன் அர்த்தம் இனிமேல் பிரச்சாரம் தேவையில்லை என்பதயோ அல்லது அது அத்தியாவசியமில்லை என்பதோ அல்ல. அல்லது தெளிவாகக் கூறினால் நாம் எதற்காக போராடுகின்றோம் என்பதை விளங்க்கப்படுத்துவது அவசியமில்லை என்பதல்ல. எனினும் இது வரலாற்று அபிவிருத்தியின் பரந்த பணியினைப் பற்றியும் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பங்கு பற்றியும் எமது பொதுக் கருத்துப்பாடு பற்றி தெரிவிக்கும் ஒரு வெறும் பிரச்சனை அன்றி இந்தப் போராட்டங்களின் தலைமையை ஏற்பது பற்றிய பிரச்சனையாகும்.

லீக்குகளின் நிர்மாணம்

The Formation of Leagues

கட்சியின் வடிவங்கள் (திஷீக்ஷீனீs) நிரந்தரமானவையல்ல. அவை நாம் தொழிற்படும் வரலாற்று நிலைமைகளினால் நிர்ணயம் செய்யப்படுவதோடு அதை பிரதிபலிக்கவும் வேண்டும். ஒரு தரப்பட்ட வரலாற்று நிலைமையினுள் உள்ள புரட்சிகர சாத்தியங்கள், கட்சி வேலையின் வடிவங்கள் அவற்றின் அபிவிருத்தியை நோக்கி நனவு பூர்வமாக நெறிப்படுத்தப்படும் அளவுக்கு மட்டுமே முற்போக்கு வெளிப்பாட்டினை பெறமுடியும் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அல்லது இதை நன்கு தெளிவாகச் சொல்வதானால் சோசலிசப் புரட்சி அடைபட்டுக் கிடக்கும் வரலாற்றின் கடினமான உறையினுள் இருந்து அதை (சோசலிசப் புரட்சியை) பிரித்தெடுக்க வேண்டியுள்ளது.

எமது நடவடிக்கைகள் அபிவிருத்தி காண்பது எவ்விதமான அமைப்பு வடிவத்தினுள் (Organization) என்பதை ஒரு புறநிலை வரலாற்றுப் போக்கு என்ற விதத்தில் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் அபிவிருத்தியும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியும் தீர்மானிக்கின்றன. இந்த வடிவங்களும் தொழிலாள வர்க்கத்துடனான உறவுகளும் அவை தோன்றியதும் ஆரம்பத்தில் வளர்ச்சி கண்டதுமான வரலாற்று நிலைமைகளுடன் குறிப்பிட்ட உறவுகளைக் கொண்டிருக்கவில்லையென நம்புவது ஒரு தவறாகும். 1959ல் பிரித்தானியாவில் சோசலிஸ்ட் லேபர் லீக் (S.S.L) 1966ல் வேர்க்கஸ் லீக் (W.L), 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (R.C.L) தொடக்கம் 1971 புண்ட் சோசலிஸ்ட் ஆர்பைற்றர் (ஙி.ஷி.கி), 1972ல் அவுஸ்திரேலியாவில் சோசலிஸ்ட் லேபர் லீக் (B.S.A) வரையிலான லீக்குகளின் ஸ்தாபிதம் திட்டவட்டமான வரலாற்று நிலைமைகளுடனும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் பற்றிய மூலோபாய கருத்துப்பாட்டுடனும் பிணைக்கப்பட்டுள்ளது என நான் குறிப்பிடுகின்றேன்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியின் இந்த முதல் கட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முகம்கொடுக்க நேரிட்ட மைய மூலோபாய பிரச்சனையாக, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேற்றமான பகுதியினர் பரந்த ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் காட்டிய நடைமுறையானதும், போர்க்குணம் மிக்கதுமான விசுவாசம் விளங்கிற்று.

ஆதலால் வித்தியாசமான உபாயங்கள் இருந்தபோதிலும், எமது பிரிவுகளின் அரசியல் நடவடிக்கைகள், இந்த அமைப்புக்களின் அங்கத்தவர்களாக இருக்கும் வர்க்க நனவும் அரசியல் துடிப்பும் அதிகம் கொண்ட மூலகங்களை புதிதாக அணிதிரட்டும் தன்மையை கொண்டிருந்தது. சமூக ஜனநாயகத்தினதும், ஸ்ராலினிசத்தினதும் சமரசமற்ற எதிரிகள் என்ற முறையில் அனைத்துலகக் குழுவின் கிளைகள் இந்த இயக்கத்திற்கு வெளியே பரந்த புரட்சிக் கட்சியை நிறுவும் உண்மையான சாத்தியப்பாடுகளில் ஒரு திடமான பாத்திரத்தை வகிக்கும். இந்த மூலோபாய தகவமைவானது பப்லோவாதிகளுக்கு நேரெதிரானது. அவர்கள் தமது அமைப்புக்களை, அதிகாரத்துவ தலைமைகளை நோக்கி தகவமைத்தனர். அவர்களுக்கு புரட்சிகர சாத்தியங்கள் இருப்பதாக இவர்கள் கற்பித்தனர். மறு வார்த்தையில் சொன்னால் அவர்கள் மேலிருந்து அதிகாரத்துவத்தினூடாக செல்வாக்கு செலுத்த முயன்ற வேளையில் நாம் இந்த பரந்த இயக்கத்தினை கீழிருந்து புரட்சிகரமானதாக்க முயன்றோம்.

சோசலிஸ்ட் லேபர் லீக் 1959 மேயில் தொழிற் கட்சியின் ஒரு போக்காக (Tendency) நிறுவப்பட்டது. ஸ்தாபக மாநாட்டின் அரசியல் பிரேரணையில் குறிப்பிட்டதுபோல்,

* சோசலிஸ்ட் லேபர் லீக், தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கத்தினுள் உள்ளே உள்ள இன்றைய வர்க்க காட்டிக்கொடுப்புகளுக்குப் பதிலாக சோசலிச கொள்கைக்கு போராடும் ஒரு மார்க்சிஸ்டுகளின் அமைப்பாகும்.

* சோசலிஸ்ட் லேபர் லீக் தடைகள், மறுப்புக்கள், வெளியேற்றங்கள் மத்தியிலும் தொழிற்கட்சியினுள் தொழிலாள வர்க்கக் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுவதோடு தொழிற்கட்சியுடன் இணைக்கப்படும் உரிமைக்காகவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும்.

* சோசலிஸ்ட் லேபர் லீக் ஒரு சுயாதீனமான புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சி அல்ல. ஆனால் அது பிரித்தானியாவில் முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் தொழிலாள வர்க்கம் ஆட்சியை ஈட்டவும் அத்தியாவசியமான அதன் தொழிற்பாடுகளும் நடவடிக்கைகளும் அத்தகைய வகையறாவைச் சேர்ந்த ஒரு எதிர்காலக் கட்சிக்கான அத்திவாரத்தை இடுகின்றது.

* அதேசமயம் சோசலிஸ்ட் லேபர் லீக், தொழிற்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினுள் இருக்கும் சீர்திருத்தவாதத்தினதும், ஸ்ராலினிசத்தினதும் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக புரட்சிகர பதிலீட்டைக் கட்டி எழுப்புவது அவசியம் எனக் கருதும் தொழிலாளர்களையும் அத்தகைய மனப்பாங்கு கொண்ட ஏனைய சகல தொழிலாளர்களையும் அதன் அங்கத்துவத்தினுள் வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. (Labour Review, Juli-August 1959)

இலங்கையில் பழைய அமைப்புக்களின் ஆளுமையினால் உருவாக்கப்பட்ட மூலோபாயப் பிரச்சனை, பரந்த கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியில் பிணைந்து கொண்டிருந்தமை ஒரு உக்கிரமான வடிவத்தை எடுத்தது. அவுஸ்திரேலியாவில் எமது அரசியல் அபிவிருத்தியின் வடிவம், தொழிற்கட்சியின் ஆளுமையினால் நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1972ல் கவ் விட்லம் (Gough whitlam) ஆட்சிக்கு வந்த வேளையில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினரின் ஆதரவை பெற்றிருந்தது. அவ்வாறே 1971ல் ஜேர்மனியில் BSA அமைக்கப்பட்டதானது பிராண்ட் (Brandt) சகாப்தத்தின் முக்கிய காலப்பகுதியில் இடம்பெற்றது. ஒரு பாராளுமன்ற சதியின் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி முயற்சித்ததை அடுத்து ஒரு அரசியல் வேலைநிறுத்தத்திற்கு சமானமான ஒன்று தூண்டிவிடப்பட்டது.

அந்த காலப்பகுதியில் எமது பிரிவுகளை அரசியல் கட்சிகளாக அமைப்பது என்பது, அந்த பதத்திற்கு உரிய சொந்தமான அர்த்தத்தில் புரட்சிகர இயக்கத்தின் முன் தலைதூக்கிய திட்டவட்டமான அரசியல் பணிகளில் இருந்து நழுவுவதை பிரதிநிதித்துவம் செய்வதாக விளங்கியிருக்கும். ஒரு போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்கம் அதனுடன் பலமான முறையில் இனங்காட்டிக்கொண்ட அமைப்புக்களையும், கட்சிகளையும் இன்னமும் பரீட்சிக்கும் போக்கில் இருந்துகொண்டு இருந்தது. ஒரு புதிய அமைப்புக்கான அவசியத்தைக்காண தொழிலாள வர்க்கம் இன்னமும் தொடங்கும் முன்னர், அந்தக்கட்டத்தில் நாம் எம்மை ஒரு கட்சியாக பிரகடனம் செய்துகொண்டிருப்பின் அது அதனை நியாயப்படுத்தும் தீவிரவாத வார்த்தைகளை பொருட்படுத்தாது ஒரு விதத்திலான குறுங்குழுவாத நழுவல் வாதமாக விளங்கியிருக்கும்.

Copyright 1998-2002
World Socialist Web Site
All rights reserved