கொழும்பில் இன்று பகிரங்க கூட்டம்: காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்து

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) ”காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்து! என்ற தலைப்பில் மூன்று பகிரங்க கூட்டங்களை நடத்துகின்றன. முதல் கூட்டம் நவம்பர் 15 அன்று யாழ்ப்பாணத்திலும் இரண்டாவது கூட்டம் நவம்பர் 19 அன்று காலியிலும் மூன்றாவது கூட்டம் நவம்பர் 21 கொழும்பிலும் நடக்கவிருக்கின்றன.

காசாவில் நிராயுதபாணிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய வலது-சாரி சியோனிச அரசாங்கம் தனது போரை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகின்றது. இஸ்ரேலின் தாக்குதலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு குறைந்தது 70,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் ஆவர். நெதன்யாகு ஆட்சி காஸாவில் இருந்து அனைத்து பாலஸ்தீனியர்களையும் வெளியேற்றும் அதன் ”இறுதித் தீர்வை” நடைமுறைப்படுத்துகின்றது.

குறிப்பாக ஈரானை குறிவைத்து மத்திய கிழக்கில் பரந்ந போருக்கு தயாராகி வரும் அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் இந்த துடைத்தழிப்பு போரை முழுமையாக ஆதரிக்கின்றன. இந்த சத்திகள், ரஷ்யா மீது தோல்வியை ஏற்படுத்தி அதன் வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் மற்றுமொரு பயங்கரமான போரில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்தை இராணுவப் பலத்தின் மூலம் உறுதிப்படுத்த மிலேட்சத்தனமான போர் உந்துதலில் ஈடுபட்டுள்ளது. அதன் இறுதி இலக்கு, அதன் பிரதான பொருளாதாரப் போட்டியாளரான சீனாவை அடிபணியச் செய்வது ஆகும். இது, முதலாளித்துவத்தின் உலகலாவிய பொறிவினதும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் மீள் ஏழுச்சியினதும் ஒரு பாகம் ஆகும். இதன் விளைவாக மனிதகுலம் அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உட்பட உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைத்து இன மற்றும் மத எல்லைகளைக் கடந்து சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக, ”இன அழிப்பை நிறுத்து! என்று ஒரு குரலில் வெளிப்படுத்த வீதிகளுக்கு வந்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இஸ்ரேலின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக ஒக்டோபர் 07 பாலஸ்தீனியர்களின் எழுச்சியை முதலில் கண்டித்த தலைவர்களில் ஒருவராக நெதன்யாகு ஆட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். எதிர்க் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் கமாஸ் மற்றும் சியோனிச ஆட்சி இரண்டில் எதையும் தங்களால் தேர்வு செய்ய முடியாது என இழிந்த முறையில் கூறி இஸ்ரேலின் பக்கம் விளைபயனுடன் சாய்ந்துள்ளன. தமிழ் தேசியவாதக் கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சகோதரக் கட்சிகளும் இஸ்ரேலின் போரை எதிர்க்க சர்வதேச அளவில் ஒவ்வொரு நாளும் வீதிகளுக்கு வருகின்ற மில்லியன் கணக்கான மக்களை வரவேற்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மார்க்சிச குரலான உலச சோசலிச வலைத் தளம் இந்த வெகுஜன இயக்கத்திற்கு தீர்க்கமான நாளாந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகின்றது

எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் போரை நிறுத்த தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு ஒருயொரு சாத்தியமான முன்னோக்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம்.

நாம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, எமது கூட்டங்களில் பங்குபற்றி, போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப அததியவசியமான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கு பற்றிய கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்:

யாழ்ப்பாணம்

மிலேனியம் கெஸ்ட் ஹவுஸ் மண்டபம்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி (கம்பஸ் வீதி) கலட்டி

திகதி மற்றும் நேரம்: நவம்பர் 15, பி.ப 3.30. மணி

காலி

ஹோல் டி கோல் கேட்போர் கூடம் (பாலதக்ஷ மாவத்தயில் உள்ள பழைய ஒல்லாந்தர் நுழைவாயில் அருகில்)

திகதி மற்றும நேரம்- நவம்பர் 19, பி.ப 3.00.

கொழும்பு

பொது நூலக கேட்போர் கூடம்

நாள் மற்றும் நேரம்: நவம்பர் 21 மாலை 4.00 மணி.

பொது நூலக கேட்போர் கூடம்.

இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள், காஸாவில் நெதன்யாகுவின் இனப்படுகொலைப் போர் வரிசையில் நிற்கின்றனர்

காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை ஆதரிப்பதில் இந்தியாவின் அதி-வலதுசாரி அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைகிறது

இந்தியாவும் இலங்கையும் காஸா மீதான அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலிய அரசுடன் துணை நிற்கின்றன

Loading