காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை ஆதரிப்பதில் இந்தியாவின் அதி-வலதுசாரி அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான அதி-வலதுசாரி அரசாங்கம், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதில் ஏகாதிபத்திய சக்திகளுடன் பகிரங்கமாக அணிசேர்ந்து நிற்கிறது.

கடந்த வெள்ளியன்று, இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா மற்றும் கிட்டத்தட்ட அனைத்து நேட்டோ சக்திகளுடனும் அமெரிக்க உடன்படிக்கை கூட்டாளிகளுடனும் இணைந்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே “உடனடி, நீடித்த மற்றும் நீண்டகால மனிதாபிமான போர் நிறுத்தம்” என்ற ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை எதிர்த்தது.

10,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பிள்ளைகள், ஏற்கனவே இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் ஷெல் வீச்சுகளால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பல ஐ.நா அமைப்புகளும் மனிதாபிமான அமைப்புகளும் இஸ்ரேல் விதித்துள்ள உணவு, தண்ணீர், மருத்துவத் வசதி, பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்குமான தடையால், வரவிருக்கும் மனித “பேரழிவு” பற்றி எச்சரித்துள்ள சூழ்நிலையிலேயே இந்த தீர்மானத்தை எதிர்த்துள்ளது.

15 ஜனவரி 2018 திங்கட்கிழமை அன்று இந்தியாவின் புது தில்லியில் ஒரு சந்திப்பிற்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் (வலது) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஊடகங்களுக்கு முன் கைகுழுக்கிக்கொண்ட போது. [AP Photo/ingen opphavsmann]

ஜோர்டானால் முன்மொழியப்பட்ட, கட்டுப்பாடற்ற போர்நிறுத்த தீர்மானம் 120 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நான்கு சிறிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பல தென் பசிபிக் தீவு நாடுகள் உட்பட 12 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன; அதே வேளை, இந்தியா மற்றும் மேற்கத்திய சக்திகள் அனைத்தும் அல்லது உக்ரைன் போன்ற அவற்றின் விசுவாசிகளுமான ஏனைய 44 நாடுகள், காஸா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்துவதற்கு தங்கள் ஆதரவை சமிக்ஞை செய்யும் வகையில் வாக்களிப்பை புறக்கணித்தன.

முன்னதாக வெள்ளிக்கிழமை, வாஷிங்டனின் நெருங்கிய ஏகாதிபத்திய கூட்டாளிகளில் ஒன்றான கனடாவால் இயற்றப்பட்ட போர்நிறுத்த தீர்மானத்தின் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, இம்முறையும் வாக்களித்திருக்கின்றமையானது தற்போதைய போரின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வழங்கிய ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதும், பெருக்குவதும் ஆகும். காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போரை சட்டப்பூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திருத்தம், போதுமான “ஆதரவு” வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. அது ஹமாஸின் “பயங்கரவாத தாக்குதல்கள்களையும்” அது “பணயக்கைதிகளை வைத்திருப்பதையும்” கண்டனம் செய்ததுடன் கைதிகளின் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலையை” கோரிய அதே நேரம், அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை திட்டமிட்டு மறுப்பது மற்றும் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீது பாரிய குண்டுத் தாக்குதல்கள் நடத்துவதுமாக காஸாவின் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு கொடூரமான கூட்டுத் தண்டனை கொடுப்பது உட்பட இஸ்ரேலிய அரசின் போர்க்குற்றங்கள் அனைத்தையும் மௌனமாக கடந்து சென்றது.

“ஹமாஸ்” மற்றும் “பணயக்கைதிகள்” என்ற வார்த்தைகள் அதில் இல்லை என்று குறிப்பிட்டு, போர்நிறுத்த தீர்மானத்தை ஆதரிக்க மறுத்ததை புது தில்லி பின்னர் நியாயப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல், “அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் கண்டனத்துக்கு உரியது” என்று புகார் கூறினார்.

எவ்வாறாயினும், பொதுச் சபை விவாதத்தில் கனடாவுக்குப் பதிலளித்த பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் குறிப்பிட்டது போல், போர் நிறுத்தத் தீர்மானம் இஸ்ரேல், ஹமாஸ் அல்லது வேறு எந்தக் தரப்பையும் குறிப்பிடுவதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.

ஆனால் படேல் மற்றும் மோடி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்னவெனில், அக்டோபர் 7 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் வெகுஜன எழுச்சியான ஹமாஸ் தாக்குதலை “பயங்கரவாதம்” என கண்டித்து இஸ்ரேலிய அரசு, வாஷிங்டன் மற்றும் அதன் ஏனைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் போர்ப் பிரச்சாரத்தை இந்தத் தீர்மானம் மீண்டும் செய்யவில்லை என்பதாகும். சியோனிச அரசு முக்கால் நூற்றாண்டு காலமாக பாலஸ்தீன மக்களை சூறையாடி, அடக்கி வருவது பற்றி எதுவும் கூறாமல், காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றஞ்சாட்டுவதில் தீர்மானம் தோல்வியடைந்தமை, அதைப் பற்றி அவர்களுக்கு சிறிதும் கவலையில்லை என்பதைக் காட்டுகிறது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் ஆரம்பத்திலேயே, இஸ்ரேலின் அதி-வலதுசாரி நெதன்யாகு அரசாங்கத்துடன் இந்தியாவை அணிசேர்க்க விரைந்த மோடி, “இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” என்று ஒரு செய்தியை ட்வீட் செய்தார்.

காஸாவின் பெருமளவில் பாதுகாப்பற்ற மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கான இந்தியாவின் முழு ஆதரவு, நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து புது தில்லியின் மூலோபாய அணிசேர்வில் ஏற்பட்ட வியத்தகு மாற்றம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக தலைதூக்கியதன் அருவருப்பான வெளிப்பாடாகும். “ஏகாதிபத்திய எதிர்ப்பு” போராட்டங்களுக்கும் பாலஸ்தீனிய மக்களின் ஆதரவாளராகவும், “அணிசேரா உலகத்தின்” தலைவராகவும் இந்தியா தோரணை காட்டிக்கொண்ட நாட்கள் நீண்டகாலத்துக்கு முன்பே தொலைந்துவிட்டன..

அக்டோபர் 19 அன்று World Political Review (உலக அரசியல் விமர்சனம்) குறிப்பிட்டது போல், மோடியின் “அறிக்கையானது, அதன் நேரம் மற்றும் நேர்மையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட திகைப்பூட்டுவதாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூட இஸ்ரேலுக்கு தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை. மோடியின் வார்த்தைகளில் குழப்பமோ, மழுப்புதலோ அல்லது இராஜதந்திர அறிக்கையை உருவாக்க ஒரு குழுவிற்காக காத்திருக்கும் காலமோ இருக்கவில்லை.”

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய-அமெரிக்க “உலகளாவிய மூலோபாய கூட்டுறவை” கட்டமைத்ததுடன், மோடி அரசாங்கம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இந்தியாவை ஒரு முன்னரங்க நாடாக மாற்றியுள்ளது. ஆகஸ்டில், வாஷிங்டன் பெய்ஜிங்குடன் போருக்குச் சென்றால், அமெரிக்காவிற்கு அது எத்தகைய ஆதரவை வழங்கும் என்பதை அடையாளம் காண இந்தியாவின் ஆயுதப் படைகளின் உயர் மட்டத்துடன் இணைந்து ஆலோசத்து வருவதாக அரசாங்கம் அறிவித்தது.

இந்தியா தனது சொந்த வல்லரசு அபிலாஷைகளைத் முன்னெடுக்கும் அதே வேளையில், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வாஷிங்டன் புது தில்லியை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய மற்றும் சீன செல்வாக்கை எதிர்ப்பதற்கான அதன் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வேலை செய்கின்ற நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் இந்த ஒத்துழைப்பின் ஒரு முக்கிய களமாக வெளிப்பட்டுள்ளது. 2021 அக்டோபரில், இந்தியா அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து I2U2 குழு எனப்படுவு உருவாக்கியது. செப்டம்பரில், புது தில்லியில் நடந்த G-20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீனாவிற்கு மாற்றாக உலக உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை உயர்த்துவதன் பேரில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கும் வாஷிங்டனின் இலட்சியத்தை கோடிட்டுக் காட்டினார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு இந்தியாவின் ஆதரவில் இரண்டாவது விடயம், குறைவான ஒரு காரணியாக இருந்தாலும், அது ஜெருசலேமுடன் புது தில்லி ஏற்படுத்தியுள்ள நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகள் ஆகும். ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கும் இந்தியாவின் முதன்மையான வெளிநாட்டு நிறுவனங்களில் இஸ்ரேலும் ஒன்றாகும். இந்தியா மற்றும் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இஸ்ரேலை தளமாகக் கொண்ட NSO குழுமம் தனது பெகாசூஸ் (Pegasus) உளவுக் கருவியை மோடி அரசாங்கத்திற்கு விற்க மொசாட் ஏற்பாடு செய்தது. இது அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை சட்டவிரோதமாக கண்காணிப்பதில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியும் (பா.ஜ.க.) அதனுடன் அணிதிரண்டிருக்கும் இந்து வலதுசாரி அமைப்புகளின் வலையமைப்பும் இஸ்ரேல் மீது குறிப்பாக மிகவும் போர்வெறிபிடித்த மற்றும் தனித்துவவாத சியோனிசப் பிரிவுகள் மீது வலுவான அரசியல் மற்றும் கருத்தியல் அனுதாபத்தைக் கொண்டுள்ளன. இரு தரப்பும் முஸ்லீம்களை தங்கள் பொது எதிரியாக சாடுவதுடன் தங்களின் குறிக்கோள்களை அடைய குண்டர் கும்பல் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ உயரடுக்குகளைப் போலவே, இந்தியாவும் வாஷிங்டனின் 9/11 இன்ற பின்னரான “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற வாய்ச்சவடாலை பின்பற்றியது. புது தில்லி தனது நீண்டகால மூலோபாய எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை மேலும் மேலும் நியாயப்படுத்தவும், அதிருப்தியாளர்களை சிறையில் அடைப்பதற்கு சட்டத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட கொடூரமான “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டங்களை அமுல்படுத்தவும் இதைப் பயன்படுத்தியது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் அதிகரித்து வரும் உலகளாவிய மோதலுக்கு ஏற்ப சமீபத்திய ஆண்டுகளில் வாஷிங்டன் கருவிகளை மாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை, புது தில்லியும் ஜெருசலேமும் “பயங்கரவாதத்திற்கு” எதிரான போராட்டத்தில் தங்களை உலகளாவிய தலைவர்களாக காட்டிக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டுகொண்டன.

இந்தியாவின் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வைத்து, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களைத் தாக்குமாறு பொலிசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதற்கு மத்தியில், இந்து மேலாதிக்க குழுக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. அக்டோபர் 25 அன்று, பஜ்ரங் தள் அமைப்பானது ஆத்திரமூட்டும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையினரைக் கொண்ட நகரமான அலிகார் வழியாக “பாலஸ்தீனத்தை வீழ்த்து” மற்றும் “ஹமாஸ் ஒழிக” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கடந்த வாரம் ஊர்வலம் சென்றது. இந்து சேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஏராளமான இந்திய இராணுவ சிப்பாய்கள், புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் “ஹமாஸுக்கு எதிராக” தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புவதாக அறிவித்தனர்.

சீனாவுடனான போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகளில் எப்போதும் நெருக்கமான ஒருங்கிணைவு போலவே, மோடி அரசாங்கம் காஸா மீதான இஸ்ரேலின் போரை அரவனைத்துக்கொள்வதானது இந்திய ஆளும் உயரடுக்கால் பரவலாக ஆதரிக்கப்படுகிறது.

அக்டோபர் 30 அன்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், “இஸ்ரேலில் மட்டுமல்ல, ஏனைய இடங்களிலும் என்ன நடக்கிறது என்பதன் பின்னணியில், வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க இந்தியா எடுத்த முடிவு சரியானது” என்று கூறியது. ஏனைய இடங்களில் என்பது, ரஷ்யா மீதான நேட்டோ போர் தொடர்பாக வாஷிங்டனின் விருப்பத்தை மீறி, மொஸ்கோவுடன் நெருக்கமான மூலோபாய உறவுகளைப் பேணிக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் “வேறு இடங்களில்” தன்னை முழுமையாக இணைத்துக்கொள்வதன் மூலம் வாஷிங்டனை இந்தியா சமாதானப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிடுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஐ.நா.வில் இந்தியாவின் வாக்களிப்பை பாராட்டியது. “மத்திய கிழக்கு கொள்கையில் இது ஒரு புதிய யதார்த்தத்தை குறிப்பதுடன்” “இந்த புதிய யதார்த்தம் வரவேற்கப்படுகிறது,” என்று அது கூறியது.

இதற்கு மாறாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இருந்தமைக்காக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், இந்திய சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியை வழிநடத்திய நேரு-காந்தி குடும்ப வம்சத்தின் முக்கிய உறுப்பினருமான பிரியங்கா காந்தி, “காஸாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு விலகியிருந்தமை குறித்து அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்துள்ளதாக கூறினார். நமது நாடு நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கொள்கைகளான அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த கொள்கைகளே நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையாக அமைகின்றன,” என அறிவித்துள்ளார்.

இவை அனைத்தும் அரசியல் பிதற்றல்கள் ஆகும். 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியாவை மூலோபாய ரீதியில் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 1992 ஜனவரியில் இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ் அரசாங்கமே ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாய கூட்டுறவை ஸ்தாபிப்பதில் பெரும் ஈடுபாடு காட்டியது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமே ஆகும். மற்ற அரசியல் ஸ்தாபனங்களைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் அந்த பிற்போக்கு கூட்டணியை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாகக் கருதுகிறது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலுக்கு இந்தியா பயன்படுத்தப்படுவதற்கு எதிராக எச்சரிப்பதற்குப் பதிலாக, இரு நாடுகளும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் அவற்றின் சர்ச்சைக்குரிய எல்லையில் முன்னோக்கி நிலைநிறுத்தி வந்த எல்லை மோதலில் உட்பட, சீனா மீது “மென்மையான” போக்கை கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மோடி அரசாங்கத்தை வலப்பக்கத்தில் இருந்து அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

காஸா யுத்தத்தில் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பற்றிய காங்கிரஸின் மெல்லிய விமர்சனத்திற்கும் பாலஸ்தீனிய மக்கள் மீதான அனுதாபம் அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தேர்தல் கணக்கீடுகள் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல்கள் சம்பந்தமான வெகுஜன எதிர்ப்பு அரசியல் ஸ்தாபனத்தின் கட்டுப்பாட்டீ மீறி சுழன்றுவிடக்கூடும் என்ற பீதியையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல்களிலும், அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களிலும் பாலஸ்தீனிய மக்கள் மீதான இந்திய மக்களின் அபரிமிதமான அனுதாபத்தை சுரண்டிக் கொள்ள காங்கிரஸ் விரும்புவது.

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஐ.நா. போர்நிறுத்தத் தீர்மானத்தில் இந்தியாவின் “அதிர்ச்சியூட்டும்” புறக்கணிப்பு, “இந்திய வெளியுறவுக் கொள்கை எந்த அளவிற்கு அதன் கூட்டாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா உறவை ஒருங்கிணைக்கும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கீழ்படிந்தவாறு வடிவமைக்கப்படுகின்றது என்பதை காட்டுகின்றது”, எனத் தெரிவித்துள்ளாது.

ஆயினும்கூட, ஸ்ராலினிஸ்டுகளே, இந்திய-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவதில் ஆளும் வர்க்கத்திற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்தனர், அதை வளர்த்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களுக்கு ஆதரவு அளித்தனர். இன்று, சீனா-விரோத இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணி, முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தத்தை” முன்னெடுத்தல் ஆகிய இரண்டுக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இன-பேரினவாத மற்றும் ஜாதிவாத பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் உட்பட வலதுசாரிக் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பான இந்தியக் கூட்டணியின் பின்னால் மோடி அரசாங்கத்திற்கு விரோதமன வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்கு வேலை செய்து வருகின்றனர்.

Loading