|
அத்தியாயம் 4
ஏப்ரல் மாநாடு
Use this version to print |
Send
feedback
பின்லாந்து
ரயில்வே நிலையத்தில் ரஷ்ய புரட்சியின் சோசலிசத் தன்மை பற்றி லெனின்
ஆற்றிய உரை கட்சியின் பல தலைவர்களுக்கு குண்டுத்தாக்குதல் போல்
இருந்தது. லெனினுக்கும் "ஜனநாயகப் புரட்சியை நிறைவுசெய்வதற்கு" ஆதரவு
கொடுத்திருந்தவர்களுக்கும் இடையில்,
முதல் நாளில் இருந்தே சர்ச்சை தொடங்கியது.
"தற்காலிக
அரசாங்கம் வீழ்க!" என்ற முழக்கத்தை எழுப்பிய,
ஆயுதமேந்திய ஏப்ரல்
ஆர்ப்பாட்டங்கள் பற்றி ஒரு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நிகழ்வு,
வலதுசாரி
பிரதிநிதிகள் சிலருக்கு லெனின் பிளாங்கிசத்தை (Blanquism)
கொண்டிருக்கிறார் என்ற குற்றச் சாட்டை எழுப்புவதற்கு ஒரு போலிக் காரணம்
ஆயிற்று. அந்த நேரத்தில் சோவியத் பெரும்பான்மையினால்
ஆதரவளிக்கப்பட்டிருந்த தற்காலிக அரசாங்கத்தை தூக்கியெறிதல்,
உங்கள் மனதிற்கு
உகந்ததாக இருந்தால்,
பெரும்பான்மை உழைப்பாளர்களை புறக்கணிப்பதன் மூலமே நிறைவேற்றப்பட
முடியும்.
ஒரு
பொதுவான நிலைப்பாட்டின்படி,
அத்தகைய
குற்றச்சாட்டு நம்பக்கூடியதாக உள்ளதோ எனத் தோன்றும்;
ஆனால் உண்மையில்
லெனினின் ஏப்ரல் கொள்கையில் பிளாங்கிசத்தின் நிழல்கூட சிறிதும்
படிந்திருக்கவில்லை. லெனினை பொறுத்தவரை முழுக்கேள்வியும்,
சோவியத்துக்கள்
எந்த அளவிற்கு மக்களுடைய உண்மையான உணர்வை தொடர்ந்து பிரதிபலித்தனர்,
சோவியத்
பெரும்பான்மையினால் கட்சி தன்னை வழிநடத்திக்கொள்வது சரியா,
பிழையா என்பதை
சுற்றியே இயங்கியது. உத்தரவாதம் தருவதற்கும் அதிகமாகவே "இடது" புறம்
சென்ற ஏப்ரல் ஆர்ப்பாட்டம்,
மக்களுடைய உணர்வை
சோதித்தல்,
அவர்களுக்கும் சோவியத்
பெரும்பான்மைக்கும் இடையே இருக்கும் உறவுகளை பற்றிய ஒரு வகை முன்னீடான
ஆய்வின் எதிர்த்தாக்குதல் என்று கூறவியலும். இந்த முன்னாய்வு
எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஒரு நீண்ட தயாரிப்புக்காலம் தேவை என்ற
முடிவிற்கு வழிவகை செய்தது. மே மாத ஆரம்பத்தில் லெனின்,
இடைக்கால
அரசாங்கத்தை அங்கீகரித்தலுக்கு எதிராக அறிவித்த மற்றும் சற்று
அதிகமாகவே சென்ற, Kronstadt
இல்
இருந்து வந்த நபர்களை தீவிரமாகவே தடுத்தார் என்பதை நாம் கவனிக்கிறோம்.
அதிகாரத்திற்கான போராட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்த வினா பற்றி
முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை கொண்டிருந்தனர். ஏப்ரலில் நடந்த கட்சி
மாநாட்டில் தோழர் கமெனேவ் கீழ்க்கண்ட புகாரை கூறினார்: "பிராவ்தாவின்
19வது
இதழில்,
ஒரு தீர்மானம் முதலில்
தோழர்களால் முன்மொழியப்பட்டது [இங்கு வெளிப்படையாக குறிப்பு லெனினைப்
பற்றியதாகும் L.T.]
அதில் நாம் இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும் என்ற கருத்து
உள்ளது. கடைசி நெருக்கடிக்கு முன் இது அச்சில் வந்தது;
பின்னர் இந்த
சுலோகம் நிலைமையை சீர்குலைக்கக் கூடும் என்று நிராகரிக்கப்பட்டது;
மேலும் அது சாகசவாத
நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. எமது தோழர்கள் இந்த
நெருக்கடியின்போது சிலவற்றை கற்றுக் கொண்டுள்ளனர் என்று இது
உட்குறிப்பாய்க் கூறுகிறது. இப்பொழுது [லெனினால்,
L.T.]
முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் அதே தவறை மீண்டும் செய்துள்ளது.
வினா
முறைப்படுத்தப்பட்ட விதம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒரு
முன்னாய்வு அனுபவத்திற்கு பின்னர் இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிய
வேண்டும் என்ற கோஷத்தை லெனின் உடனடியாகத் திருப்ப பெற்றுக் கொண்டார்.
ஆனால் அவர் ஒன்றும் அதை ஒரு குறிப்பிட்ட சில வாரங்கள் அல்லது
மாதங்களுக்கு என்று திரும்பிப் பெறாமல்,
எவ்வளவு விரைவில்
சமரசவாதிகளுக்கு எதிராக மக்களின் எழுச்சி வளரும் என்பதைப் பொறுத்து
அமையும் என்று கருதினார். மாறாக,
எதிர்பாளர்களோ கோஷமே ஒரு
பெரிய தவறு என்ற கருத்தை கொண்டனர். லெனின் தற்காலிகமாக பின்வாங்கியதில்
அரசியல் நிலைப்பாட்டில் மாறுதல் இருக்கும் என்ற குறிப்பு சிறிதுகூட
காணப்படவில்லை. ஜனநாயகப் புரட்சி இன்னும் முற்றுப்பெறவில்லை என்ற
நிலைப்பாட்டில் இருந்து அவர் ஒன்றும் மேற்கூறிய கருத்துக்களை
கூறவில்லை. மக்கள் அந்த நேரத்தில் இடைக்கால அரசாங்கத்தை அகற்றும் திறனை
கொண்டிருக்கவில்லை என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் அவர் தன் கருத்தை
முற்றிலும் கொண்டிருந்தார்;
எனவே தொழிலாள வர்க்கம்
இடைக்கால அரசாங்கத்தை மறுநாள் தூக்கியெறிவதற்கு எதையெல்லாம்
செய்யவேண்டுமோ,
அதையெல்லாம் செய்யவேண்டும் என்று கருதினார்.
ஏப்ரலில்
நடைபெற்ற கட்சி மாநாடு முழுவதும் இந்த அடிப்படை பிரச்சினைக்காக
ஒதுக்கப்பட்டது. சோசலிசப் புரட்சியின் பெயரால் அதிகாரத்தை கைப்பற்றும்
முயற்சியில் நாம் முன்னேறுகிறோமா அல்லது ஜனநாயகப் புரட்சியை (எவரும்,
அனைவரும்)
முற்றுப்பெறச் செய்வதற்கு நாம் உதவிக் கொண்டிருக்கிறோமா?
நம்முடைய
புரட்சியின் விதியைப் பற்றி உடனடியாக,
மிக அசாதாரண
முறையில்,
எமது கட்சியின் வரலாற்றில்,
ஏப்ரல்
1917
மாநாடு நடந்து கொண்டது போல் வேறு எந்த மாநாடும் நடக்கவில்லை
என்றாலும்கூட,
துரதிருஷ்டவசமாக,
ஏப்ரல் மாநாட்டின் அறிக்கை இன்று வரை வெளியிடப்படாமல்
உள்ளது.
லெனினுடைய
நிலை இதுதான்: சமரசத்திற்கு இடமில்லாத வகையில்,
பாதுகாப்புவாதம்
மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம்;
சோவியத்தின்
பெரும்பான்மையை கைப்பற்றுதல்;
இடைக்கால அரசாங்கத்தை
தூக்கியெறிந்துவிட்டு,
சோவியத்துக்களின் மூலம்
அதிகாரத்தை கைப்பற்றுதல்;
ஒரு புரட்சிகரமான சமாதான
கொள்கை மற்றும் உள்நாட்டில் சோசலிச புரட்சி வேலைத்திட்டம்,
வெளிநாடுகளில்
சர்வதேச புரட்சி வேலைத்திட்டம். இதிலிருந்து முற்றிலும்
வேறுபட்டவகையில்,
நாம் ஏற்கனவே அறிந்தவாறு,
எதிர்த்தரப்பினர்
இடைக்கால அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் ஜனநாயகப்
புரட்சியை முழுமைபெறச் செய்வது அவசியமானது என்ற கருத்தை கொண்டிருந்தனர்,
இந்த வழிவகையில்
சோவியத்துக்கள் பூர்சுவாக்களின் அதிகாரத்தின்மீது "கட்டுப்பாடு
செலுத்தும்" கருவிகளாக தொடர்ந்து இருக்கும். எனவே பாதுகாப்புவாதம்
தொடர்பாக முற்றிலும் வேறொரு ஒப்பிடமுடியாத தன்மையும்,
சமரசப் நோக்கும் இதிலிருந்து உருவாகின்றது.
லெனினுடைய
நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களில் ஒருவர் ஏப்ரல் மாநாட்டில் கீழ்க்கண்ட
வகையில் வாதிட்டார்: "தொழிலாளர்கள்,
படைவீரர்களின்
பிரதிநிதிகளுடைய சோவியத்துக்களை ஏதோ அவைகள் தாம் நம்முடைய படைகள்,
அரச அதிகாரத்தை
ஒழுங்கமைக்கும் மையமாய் இருந்தாற்போன்று பேசுகிறோம். ...அவர்கள் ஒரு
குட்டி முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க சக்திகளின் கூட்டை
கொண்டுள்ளனர் என்பதை அவர்களின் பெயர்களே காட்டுவதோடு,
அவை இன்னும்
முற்றுப்பெறாத முதலாளித்துவ ஜனநாயக பணிகளையும் எதிர்கொண்டிருக்கின்றன
என்பதையும் தெரிவிக்கிறது. முதலாளித்துவ ஜனநாயக புரட்சி முற்றுப்
பெற்றிருந்தால்,
இந்த கூட்டணி தொடர்ந்து
இருக்காது. ... பாட்டாளி வர்க்கம் இந்த கூட்டணியை எதிர்த்து ஒரு
புரட்சிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். ...ஆயினும்கூட,
நாம் இந்த
சோவியத்துக்களை சக்திகளின் ஒழுங்கமைப்பதற்கான மையங்கள் என்று
ஏற்கிறோம். ...இதன் விளைவாக,
முதலாளித்துவ புரட்சி
இன்னும் முற்றுப் பெறவில்லை;
தன்னுடைய காலப் பயன்பாட்டை
அது இன்னும் இழந்துவிடவில்லை;
நாம் அனைவரும் இப்புரட்சி
முழுமையாய் நிறைவேறிய பின்னர்,
அதிகாரம் பாட்டாளி வர்க்கத்திற்கு உண்மையிலேயே சென்றடைந்து விடும்
என்பதை உணரவேண்டும் என்று நான் நம்புகிறேன்." (தோழர் காமெனேவின்
உரையில் இருந்து).
இந்த
வாதத்தின் சிறிதும் நம்பிக்கை கொடுக்காத சூழ்ச்சிவாதம் வெளிப்படையாகவே
உள்ளது. இவ்வாதத்தின் மிக முக்கியமான பிரச்சினை,
"அதிகாரத்தை
பெறுபவர்களை மாற்றாமல் இப் புரட்சியை பூரணமாய் நிறைவேற்றல்" என்பது ஒரு
பொழுதும் இயலாது என்ற உண்மையில் அடங்கியுள்ளது. மேற்கூறிய பேச்சு
புரட்சியின் வர்க்க அச்சை நிராகரிக்கிறது;
அது கட்சியின் பணி
வர்க்க சக்திகளின் உண்மையான குழுசேர்தலிலிருந்து உய்த்துணரப்படுவது
என்றில்லாமல்,
புரட்சி முதலாளித்துவ
புரட்சியா அல்லது முதலாளித்துவ ஜனநாயக புரட்சியா என்ற மேலோட்டமான
விளக்கத்திலிருந்து உய்த்துணரப்படுகிறது. குட்டி முதலாளித்து
வர்க்கத்துடன் ஒரே கூட்டில் நாம் பங்கு கொண்டு,
முதலாளித்துவ
புரட்சி முழுமையாக நிறைவேற்றப்படும் வரைக்கும் முதலாளித்துவ
வர்க்கத்தின் அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டுமாம்.
இந்த பாணியானது வெளிப்படையாகவே மென்ஷிவிசமாகும். நோர்மன் கிளாத்ராவால்
(ஒரு "முதலாளித்துவ" புரட்சி) புரட்சியின் பணிகள் வறட்டுவாதபாணியில்
முன்மாதிரியாகக் கொண்டு,
இடைக்கால அரசாங்கத்தின்
மீது கட்டுப்பாட்டை செலுத்தும் கொள்கைக்கு,
மற்றும் இடைக்கால
அரசாங்கம் இணைப்புக்கள் இல்லாமல் சமாதானக் கொள்கையை முன்னுக்கு
கொண்டுவரவேண்டும் என்றவாறாக ஒருவர் வந்து சேர தவறக்கூடாது. ஜனநாயக
புரட்சி பூரணப்படல் என்பது அரசியலமைப்பு நிர்ணய சபையால் தொடர்ந்த
சீர்திருத்தங்கள் மூலம் அடையப்படுவது என்று கொள்ளப்பட்டது! மேலும்
போல்ஷிவிக் கட்சிக்கு அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடதுசாரி பாத்திரம்
ஒதுக்கப்பட்டது. அத்தகைய பார்வை, "அனைத்து
அதிகாரமும் சோவியத்துக்களுக்கே!" என்ற கோஷத்தின் பொருளை எத்தன்மையிலும்
இழக்கச் செய்துவிடும். இதுதான் மிகச் சிறந்த முறையில்,
தொடர்ச்சியாக,
மிகவும் முழுமையாக
ஏப்ரல் மாநாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்திருந்த,
காலம் சென்ற
நோஜினால் கூறப்பட்டது: "வளர்ச்சிப்போக்கில் சோவியத்துக்களின்
முக்கியமான செயற்பாடுகள் சரிந்துவிடும். ஏராளமான தொடர்ச்சியான
நிர்வாகப் பணிகள் நகர,
மாவட்ட மற்ற
அமைப்புக்களுக்கு மாற்றப்பட்டுவிடும். அரசின் எதிர்கால வளர்ச்சியை நாம்
ஆராய்ந்தால் அரசியல் நிர்ணயசபை கூட்டத்திற்கு அழைப்புவிடப்படும்,
அதற்குப் பின்னர் பாராளுமன்றத்திற்கு விடப்படும் என்பதை
மறுக்கமுடியாது ...இதையொட்டி மிக முக்கியமான சோவியத்துக்களின்
செயற்பாடுகள் அனைத்தும் படிப்படியாக உதிர்ந்துபோய்விடும். இதனால்
சோவியத்துக்கள் இழிவான முறையில் தங்கள் இருப்பை முடித்துக்
கொண்டுவிடும் என்று பொருள் கிடையாது. அவை தங்களுடைய செயல்களை மட்டும்
மாற்றிக் கொள்ளும். இதே சோவியத்துக்களின் கீழ் நாம் எமது நாட்டில்
நகராண்மை குடியரசை அடைய முடியாது."
இறுதியாக,
ரஷ்யா
சோசலிசத்திற்கு இன்னும் தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து,
ஒரு மூன்றாம்
எதிர்ப்பாளர் பிரச்சினையை அணுகினார். "பாட்டாளி வர்க்க புரட்சி என்ற
முழக்கத்தை எழுப்பினால்,
நாம் மக்களுடைய ஆதரவை
பெறமுடியாமா?
ஐரோப்பாவிலேயே மிகுந்த
குட்டி முதலாளித்துவ தன்மையை உடையது ரஷ்யாதான். சோசலிசப் புரட்சிக்காக
மக்களுடைய ஆதரவை பெறுதல் என்பது சாத்தியமற்றது;
மற்றும் இதன்
பலாபலனாக,
கட்சி ஒரு சோசலிச
நிலைப்பாட்டை கூடுதலாக எந்த அளவிற்குக் கொள்ளுகிறதோ,
அந்தக் கூடுதலான
அளவிற்கு அது ஒரு பிரச்சார வட்டம் என்ற பாத்திரம் வகிக்க
குறைக்கப்பட்டுவிடும்." அவர் மேலும் கூறியதாவது: "சோசலிசப் புரட்சியின்
சூரியன் எங்கு உதிக்கும்?
அனைத்து சூழ்நிலைகள்,
மற்றும் நம்முடைய
பொது கலாச்சாரத்தையும் கருத்திற் கொள்ளும்போது சோசலிசப் புரட்சியை
ஆரம்பித்து வைப்பது நம்மால் முடியாது. அதற்குத் தேவையான சக்திகளை நாம்
பெற்றிருக்கவில்லை;
அதற்கான புறச்சூழ்நிலைகள்
நம்நாட்டில் இல்லை. ஆனால் மேற்கு நாடுகளுக்கு,
இந்தப் பிரச்சினை நம் நாட்டின் ஜாரிசத்தை
தூக்கியெறியும் பிரச்சினையை போலவே காட்டப்பட்டு வந்துள்ளது."
லெனினின்
கண்ணோட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அனைவருமே ஏப்பரல் மாநாட்டில் நோஜின்
கொண்டது போன்ற முடிவுகளுக்கு வரவில்லை;
ஆனால் அவர்களில்
பெரும்பாலானவர்கள் இந்த முடிவுகளை தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ளும்
கட்டாயத்திற்கு சில மாதங்களுக்கு பின்பு,
அக்டோபருக்கு சற்று
முன்னர்,
தள்ளப்பட்டனர். ஒன்று நாம்
பாட்டாளி வர்க்க புரட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது
முதலாளித்துவ பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை ஏற்கவேண்டும்:
இப்படித்தான் எமது கட்சிக்குள் பிரச்சினையின் தன்மை காட்டப்பட்டது.
பிந்தைய நிலைப்பாடு அடிப்படையில் ஒரு மென்ஷிவிக் நிலைப்பாடு என்பது
வெளிப்படையானதுதான்;
அல்லது பெப்ரவரி
புரட்சிக்கு பின்னர் அத்தகைய நிலையை தாங்களே ஏற்கவேண்டிய கட்டாயத்தில்
இருந்ததை மென்ஷிவிக்குகள் கண்டனர். உண்மையில்,
பல ஆண்டுகளாகவே
வரவிருக்கும் புரட்சி முதலாளித்துவ புரட்சியாக இருந்தாக வேண்டும் என்ற
கருத்தை பல மரங்கொத்திப் பறவைகள் மரத்தை கொத்துவதைப் போலவே
கூறிவந்திருந்தனர்;
முதலாளித்துவ அரசாங்கம்,
முதலாளித்துவ
வர்க்கத்தின் பணிகளைத் தான் செய்ய முடியும்;
சமூக ஜனநாயகம்
முதலாளித்துவ ஜனநாயகத்தின் பணிகளை தாமே ஏற்று நடத்த முடியாது,
மற்றும்
"முதலாளித்துவத்தை இடதிற்குத் தள்ளும்" அதேவேளை அது கட்டாயம்
எதிர்கட்சியாக தொடர்ந்து இருக்கும் என்றெல்லாம் அது கூறியது. இந்தக்
கருத்துத்தான் சற்று கூடுதலான சோர்வுகொடுக்கும் ஆழ்ந்த தன்மையில்
மார்டினோவால் பெரிதாகக் கூறப்பட்டது. 1917ல்
முதலாளித்துவ புரட்சியின் தொடக்கத்துடன்,
மென்ஷிவிக்குகள்
விரைவில் தங்களை அரசாங்க பணியாளர்களாக கண்டுகொண்டனர். அவர்களுடைய
முற்றிலும் "கொள்கை சார்ந்த" நிலைப்பாட்டில் இருந்து ஒரே ஒரு அரசியல்
முடிவுதான் எஞ்சியிருந்தது;
அதாவது தொழிலாள வர்க்கம்
அதிகாரத்தை கைப்பபற்றுவதற்கு துணிவற்றது என்பதாகும். ஆனால்
மென்ஷிவிக்குகளின் அமைச்சர் நிலை செயலாற்றலை குற்றம்சாட்டிய,
அதேநேரத்தில்
பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவதை எதிர்த்த
போல்ஷிவிக்குகளுக்கு உண்மையில் இது புரட்சிக்கு முன் மென்ஷிவிக்குகள்
கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கே மாறியது போல்தான் தெளிவாகத் தெரிந்தது.
புரட்சி அரசியல் நகர்வுகளை இரு திசைகளில் நடக்குமாறு செய்தது:
பிற்போக்காளர்கள் காடேட்டுக்களாவும்,
காடேட்டுக்கள் தங்கள்
சொந்த விருப்பத்திற்கும் எதிராகவே குடியரசுவாதிகளாகவும் மாறியதுதான்
அது;
இது முற்றிலும் இடதிற்கான
மேலோட்டமான நகர்வு ஆகும். சமூகப் புரட்சியாளர்களும்,
மென்ஷிவிக்குகளும்
ஆளும் முதலாளித்துவக் கட்சியாயினர் -- இது வலதுக்கு மாற்றம் எனலாம்.
இத்தகைய வழிவகைகளில்தான் முதலாளித்துவ சமுதாயம் அரச அதிகாரம்,
உறுதி,
ஒழுங்கு ஆகியவை
அடங்கிய ஒரு புது முதுகெலும்பை தனக்காக தோற்றுவித்துக்கொள்ள
முயல்கிறது. அதே நேரத்தில் மென்ஷிவிக்குகள் ஒருமேலோட்டமான நிலையில்
இருந்து இழிந்த ஜனநாயக முறைக்கு கடந்து கொண்டிருக்கையில்,
போல்ஷிவிக்குகளின்
வலதுசாரியினர் மேலோட்டமான சோசலிச நிலைப்பாட்டிற்கு,
அதாவது நேற்றைய மென்ஷிவிக்கு நிலைப்பாட்டிற்கு மாறிக்
கொண்டிருந்தனர்.
போர்ப்
பிரச்சினை பற்றியும் இதே வகையிலான சக்திகளின் மீளகுழுசேர்தல்
இடம்பெற்றது. ஒரு சில வறட்டுக் கோட்பாட்டாளர்களைத்தவிர,
முதலாளித்துவத்தினர் ஒரே மாதிரியான இராகத்தைத்தான் முணுமுணுத்து
வந்தனர்: இணைப்புக்கள் கூடாது;
இழப்புத் தொகைகள்
கொடுக்கப்படக்கூடாது ----ஏனெனில் நாடுகளை இணைப்பது என்பது ஏற்கனவே
அரிதாக போய்விட்டது. தங்களுடைய முதலாளித்துவ தந்தை நாட்டு குடியரசை
காக்கவேண்டும் என்பதற்காக பிரெஞ்சு சோசலிஸ்ட்டுக்களை விமர்சித்திருந்த
சிம்மர்வால்டிய மென்ஷிவிக்குகளும் சமூகப் புரட்சியாளர்களும் தாங்களே
ஒரு பூர்சுவா குடியரசின் அங்கம் என்று உணர்ந்த அளவில் உடனடியாக
பாதுகாப்புவாதிகளாக மாறிவிட்டனர். ஒரு செயலற்ற சர்வதேச நிலைப்பாட்டில்
இருந்து,
அவர்கள் துடிப்பு நிறைந்த
தேசபக்த நிலைக்கு மாறிக்கொண்டனர். அதே நேரத்தில்,
போல்ஷிவிக்குகளின்
வலதுசாரியினர் ஒரு செயலற்ற சர்வதேச நிலைப்பாட்டிற்கு (அதாவது ஜனநாயக
அமைதிக்காகவும் "இணைப்புக்கள் இல்லாமலும் இழப்புத் தொகைகள்
கொடுக்காமலும் இருக்கவேண்டும்" என்பதற்காகவும் இடைக்கால அரசாங்கத்தின்
மீது "அழுத்தம்" கொடுக்கும் நிலைப்பாட்டிற்கு) மாறினர். இவ்வாறு ஏப்ரல்
மாநாட்டில் பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்
என்பது கோட்பாட்டளவிலும்,
அரசியல் முறையிலும்
பகுதிகளாக இயக்கப்பட்டு,
அதில் இருந்து இரண்டு
விரோதப் போக்கு உடைய பார்வைகள் வெளிப்பட்டன;
இவை சோசலிச
வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றிமறைக்கப்பட்ட ஜனநாயகக் கண்ணோட்டம்.
மற்றையது,
ஒரு புரட்சிகர சோசலிச
கண்ணோட்டம்,
அதாவது
உண்மையான போல்ஷிவிக் மற்றும் லெனினிச கண்ணோட்டம் என்ற முறையில்
வெளிவந்தன. |
|