யேமன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் சதித்திட்டம் குறித்த வெளிப்பாடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, தொகுக்கப்படுகின்றன, தொடங்கப்படுகின்றன மற்றும் மோசடியாக நியாயப்படுத்தப்படுகின்றன என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், எஞ்சியிருக்கும் மக்களை உள்நாட்டில் இடம்பெயரச் செய்யவும், "உயிர்வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச கலோரி அளவை" மட்டுமே வழங்கவும் தயார் செய்து வருவதாக மூன்று சர்வதேச வெளியீடுகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் நிர்வாகம் காஸா பகுதியை இனரீதியில் சுத்திகரித்து இணைத்துக் கொள்வதற்கான அதன் திட்டங்களை இரட்டிப்பாக்கி வருகின்றது. இந்த நிலையில், வாஷிங்டனின் மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்க அமெரிக்க-இஸ்ரேலிய போரை திட்டமிட்டு தீவிரப்படுத்துவதன் பாகமாக, அமெரிக்கா யேமனையும் இறுதியில் ஈரானையும் இலக்கில் வைத்து ஒரு புதிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
கடந்த செவ்வாயன்று, இஸ்ரேல் காஸாவில் உள்ள 400 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்துள்ளது. மேலும், காஸாவில் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் திட்டமிட்டு அழித்தொழிப்பது அல்லது அங்கிருந்து இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இனப்படுகொலையின் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் தொடக்கியுள்ளது.
காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்றுவது மற்றும் அவர்களை வலுக் கட்டாயமாக மீள்குடியேற்றுவது தொடர்பாக சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து அதிகாரிகளுடன் அமெரிக்கா, இஸ்ரேலிய அரசாங்கங்கள் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.
சிரியாவில் அலவைட் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளில் குறைந்தபட்சம் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, இஸ்லாமிய HTS ஆட்சியை ஆதரித்து சட்டப்பூர்வமாக்குகின்ற நேட்டோ சக்திகளின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
அமெரிக்கா காஸாவை "சொந்தமாக்கும்" என்று அறிவிப்பதன் மூலம், ட்ரம்ப் காலனித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக, மில்லியன் கணக்கான மக்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் பலியிடப்படுவார்கள்
ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் சமூக அழிப்பு மற்றும் நிர்வாக சர்வாதிகாரம் என்ற தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும்போது, ஜனநாயகக் கட்சி முடங்கிப் போயுள்ளது.
கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்யுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸா பகுதியை முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யவும், அதன் அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கவும், அமெரிக்கா அந்தப் பகுதியை இணைத்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
காஸா மீதான இன சுத்திகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரை விரிவுபடுத்துவது குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த வாரம் ட்ரம்புடன் விரிவான தொடர் சந்திப்புகளுக்காக நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு வந்தடைந்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பேரழிவுக் காட்சிகளுடன் மட்டுமே காஸாவிலுள்ள படங்களை ஒப்பிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 92 சதவீத குடியிருப்புகள் கடுமையாகவோ அல்லது பகுதியாகவோ காஸாவில் சேதமடைந்துள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாலஸ்தீனத்தில் இனச் சுத்திகரிப்புக்கு வெளிப்படையாக, காஸாவை அதன் அரபு குடியிருப்பாளர்களிடமிருந்து "தூய்மைப்படுத்த" இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.
காஸாவில் அதன் இனப்படுகொலை குற்றவியல் போரில் பயன்படுத்திய தந்திரோபாயங்களை மீண்டும் செய்து, இஸ்ரேலிய படைகள் கலீல் சுலைமான் அரசாங்க மருத்துவமனையை சுற்றி வளைத்துள்ளன. ஜெனின் பகுதியின் பல சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளையும் நகரத்தையும் விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
காஸாவில் இனப்படுகொலையை மேற்கொண்டுவரும் இஸ்ரேல், போர்நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டதாக கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காஸா முழுவதும் அதன் வெறியாட்டத்தைத் தொடர்கிறது.
இந்த ஆய்வுகள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் காஸா மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்ற மறுக்க முடியாத உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடனும், உதவியுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த இனப்படுகொலை, 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இனப்படுகொலைகளில் ஒன்றாகும்.
புதிய நிர்வாகிகளை நியமித்தல், ஜனநாயக உரிமைகள் மீதான ஏனைய தாக்குதல்கள், 40 ஆண்டுகளாக அங்காரா நசுக்க முயற்சித்து வருகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் (PKK), அங்காராவிற்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் என்பன, "அமைதி மற்றும் ஜனநாயகம்" என்ற கூற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.