சமீபத்திய தொடர் நேர்காணல்களில், டொனால்ட் ட்ரம்பின் "எல்லை சக்கரவர்த்தியான" ரொம் ஹோமன், வரவிருக்கும் நிர்வாகத்தின் பயங்கரமான பாரிய நாடுகடத்தல் திட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறார். ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அதன் கூட்டாளிகளிடையே இதற்கு மௌனமான விடையிறுப்பு இருந்து வருகின்றபோதிலும், ஹோமனின் அறிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரலாற்று சமூகக் குற்றத்தைத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பாசிச முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே இரவில், மாநில வாரியாக வெளிவந்த முடிவுகளின் கணிப்புகளின்படி, வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட, 276 தேர்தல் வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார். இது ட்ரம்புக்கு கிடைத்த வெற்றி அல்ல, மாறாக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி ஆகும்.
பெரும் பொய்யால் களத்தில் உரமிட்ட டிரம்ப், அவரது வழக்கறிஞர்கள் வலையமைப்பு, காங்கிரஸ் மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அவரது கூட்டாளிகள் ஆகியோர் உள்ளூர், மாநில மற்றும் மத்திய மட்டங்களில் வாக்குகள் சான்றிதழை தாமதப்படுத்தவும் தடுக்கவும் தயாராகி வருகின்றனர். இந்தத் திட்டம் வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
எழுச்சி பெற்று வரும் இயக்கத்தின் சாத்தியமான சக்தி, இலாபங்களை சீர்குலைக்கும் அல்லது வெளிநாட்டில் ஏகாதிபத்திய போரை நடத்தும் அதன் திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அஞ்சி, ஒபாமா குறிப்பிட்ட உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கு எந்த ஒரு உண்மையான வேண்டுகோளையும் விடுப்பதற்கு ஜனநாயகக் கட்சி இலாயக்கற்றுள்ளது.
ஓஹியோவில் உள்ள ஸ்பிரிங்பீல்டில் ஆயிரக்கணக்கான ஹைட்டிய தொழிலாளர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் தொடங்கப்பட்ட அரசியல் பயங்கரவாதப் பிரச்சாரம், நெருக்கடிக்குள் இருக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையானது, ஒரு திருப்புமுனையில் இருப்பதை குறிக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தின் இழிவான காட்சியானது, அசாதாரண நெருக்கடியில் இருக்கும் ஒரு அரசியல் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. பாசிசவாத ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களுக்கும் போர்வெறியர் ஹாரிஸின் வெற்றுக் கருத்துக்களுக்கும் இடையே, அமெரிக்க முதலாளித்துவத்தின் வக்கிரமான முகத்தை முன்வைத்து இந்த விவாதம் இடம்பெற்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்வினை மற்றும் பின்தங்கிய தன்மையின் காட்சியாக இருந்தது. இதனை ஒப்புக்கொள்வதற்கு ஒருவர் பல தசாப்தங்களாக இருந்துவரும் அமெரிக்க கட்சி மரபுகளை விவரிக்கத் தேவையில்லை.
ஹிட்லருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கிய 1933 அதிகாரமளிக்கும் சட்டத்தின் (1933 Enabling Act) அமெரிக்க பதிப்பிற்கு நிகரான ஒன்றாக, உச்ச நீதிமன்றம், அமெரிக்க ஜனாதிபதி "தைரியமான மற்றும் தயக்கமற்ற நடவடிக்கையில்" ஈடுபட வேண்டுமானால், அவர் வழக்கு விசாரணையில் இருந்து விதிவிலக்கை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தது.
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் (UAW) - பைடென் நிகழ்வு, அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகம் முழுவதும் நடத்தி வரும் இருமுனைப் போரை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
•Eric London
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
ஜனாதிபதி ஜோ பைடென் வியாழக்கிழமை ஆற்றிய உரையில், அமெரிக்க இராணுவத்திற்கு நிதியளிக்கவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அதிகரிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலை தாக்குதலுக்காக, இஸ்ரேலிய இராணுவத்தை தோட்டாக்கள், குண்டுகள் மற்றும் எறிகணைகள் மூலம் ஆயுதபாணியாக்குவதற்கும், காங்கிரஸிடம் மேலும் 105 பில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, ஒரு முகநூல் நேரலை வீடியோவில், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஷான் பெயின், மூன்று பெரிய விநியோக ஆலைகளின் வாகனத்துறை தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இது வோல் ஸ்ட்ரீட்டுக்கு நிவாரணத்தையும், 97 சதவீதம் பேர் முழு வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்த சாமானிய தொழிலாளர்களிடையே விரக்தியையும் உருவாக்குகிறது.
சாமானிய தொழிலாளர் இயக்கம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அலபாமாவில் 200 பகுதித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காட்டுகிறது. ஆனால், பெருநிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க (UAW) அதிகாரத்துவம் ஆகியவை சாமானியர்களை பின்னுக்குத் தள்ளுவதற்கான அனைத்தையும் செய்து வருகின்றன.
மூன்று பாரிய வாகன நிறுவனங்களின் 150,000ம் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த வியாழன் காலாவதியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்துவிட்டதுடன், ஐக்கிய வாகனத் தொழிலாளர் தொழிற்சங்க (UAW) அதிகாரத்துவத்தால் அழைக்கப்பட்ட "தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தமானது" நிர்வாகத்துக்கு பாரிய சலுகைகளை வழங்குவதற்காக உறுப்பினர்களை பலவீனப்படுத்துவதையும் பிளவுபடுத்துவதையும் தனிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட ஒரு "வேலைநிறுத்தம்" என்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது தெளிவாகிறது.
“தொழிற்சங்கம் முடிவெடுக்கும் குறிப்பிட்ட ஆலைகளிலுள்ள தொழிலாளர்களை மட்டுமே ஈடுபடுத்தும் வேலை நிறுத்தம்” (stand-up strike) என்பது ஒரு "புதிய கண்டுபிடிப்பு" என்றும் அது "நிறுவனங்களை ஊகிப்பில் வைத்திருக்கும்" என்ற பெயினின் கூற்றை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்வது என்பது, மிகப்பெரிய ஆபத்தாகும். அதன் உண்மையான நோக்கம் வாகனத்துறை தொழிலாளர்களை நசுக்கி, தொழிலாள வர்க்கத்தின் மீது மூன்று பெரிய கம்பெனிகள் (மூன்று வாகன கம்பெனிகள்) போரை தொடுப்பதாகும்.
ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரை, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பாரிய சமூக எதிர்ப்புகளைத் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாசிச ஆபத்தைக் குறித்து வாய் திறக்காமல் உள்ளனர்.