ஐரோப்பாவும் அமெரிக்காவும்Europe and America |
WSWS : Tamil : நூலகம் |
Leon Trotsky Europe and America லியோன் ட்ரொட்ஸ்கி ஐரோப்பாவும், அமெரிக்காவும் பெப்ரவரி, 1926 ரஷ்யாவில், கட்சி வரலாற்று கழக்கத்தால் 1926இல் உத்தியோகபூர்வ ஆண்டுதின தொகுப்பில் வெளியிடப்பட்டது. American Pacifism in Practice நடைமுறையில் உள்ள அமெரிக்க அமைதிவாதம் Use this version to print | Send feedback எல்லா பிரச்சினைகளுக்கும் காலம் தான் ஒரு சிறந்த விமர்சகராக உள்ளது. அவ்வாறிருக்கையில், கடந்த ஆண்டுகளின் போது, என்ன மாதிரியான அமெரிக்க அணுகுமுறைகள் சத்தமில்லாமல் ஊடுறுவின என்று பார்ப்போம். மிக முக்கியமான உண்மைகளைக் குறித்த ஒரு சாதாரண மதிப்பீடே போதுமானது, அமெரிக்க "அமைதிவாதம்" மெதுமெதுவாக வெற்றி பெற்றுள்ளது என்பதை நமக்கு எடுத்துக்காட்டிவிடும்; ஆனால் அது சத்தமில்லாமல் ஏகாதிபத்தியத்தின் ஒரு சூறையாடும் அணுகுமுறையாகவும், மிகப்பெரும் மோதல்களுக்குப் பாதி-மறைமுகமான தயாரிப்புகளாகவும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க "அமைதிவாதத்தின்" சிறந்த வடிவார்ந்த வெளிப்பாடும், அதன் சாரத்தின் வெளிப்பாடும், 1922 வாஷிங்டன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. 1919-20இல் பெரும்பாலான மக்கள், அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன், தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டது இதுதான்: அமெரிக்கா அதன் கப்பற்கட்டும் திட்டத்தின் மூலமாக, பிரிட்டனுடன் கடற்பிரதேச சமத்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டால், 1922-23இல் என்ன நடக்கும்? ஒரு சிறிய தீவான இங்கிலாந்து, வேறெந்த இரண்டு நாடுகளின் கூட்டு-கடற்படைகளையும் விட, அதனுடைய சொந்த கடற்படையின் மேலாதிக்கத்தினால் அதன் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருந்தது. எந்தவொரு போராட்டமும் இல்லாமல், அது இந்த மேலாதிக்கத்தைக் கைவிட்டுவிடுமா? ஜப்பானின் பங்களிப்புடன், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே 1922-23இல் ஒரு யுத்தம் வருவதைத் தவிர்க்க முடியாது என்று என்னைப் போலவே, நிறைய நபர்கள் கருதினார்கள். ஆனால் அதற்கு மாறாக நடந்ததென்ன? யுத்தம் வரவேண்டிய இடத்தில், பட்டவர்த்தனமாக "அமைதிவாதம்" வந்தது. இங்கிலாந்தை வாஷிங்டனுக்கு அழைத்த அமெரிக்கா, இதைத்தான் கூறியது: "தயவுசெய்து பங்கீடுகளைப் பெற்று கொள்ளுங்கள். எனக்கு 5 யூனிட்கள், உங்களுக்கு 5 யூனிட்கள், ஜப்பானுக்கு 3, பிரான்சிற்கு 3." அங்கே ஒரு கடற்படை திட்டம் இருக்கும்! இங்கிலாந்து இதை ஏற்றுக்கொண்டது. இது என்ன? இது தான் "அமைதிவாதம்". ஆனால் இது, கொடூரமான பொருளாதார மேலாதிக்கதின் பலத்தைக் கொண்டு அதன் விருப்பத்தைத் திணிக்கின்ற மற்றும் அடுத்த வரலாற்று காலக்கட்டத்தில் "அமைதியாக" இராணுவ மேலாதிக்கத்திற்குத் தயார் செய்கின்ற, ஒருவகையான அமைதிவாதமாகும். அடுத்து, டேவெஸ் திட்டம் என்ன ஆனது? ரூஹெர் பள்ளத்தாக்கினை கைப்பற்றிய பின்னர், புவான்கேர் (Poincare) மத்திய ஐரோப்பாவிற்குள் அவரின் மழலை திட்டங்களுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த போதினும், அமெரிக்கர்கள் அவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை உற்றுப்ப்பார்த்துக் கொண்டு, அந்த காட்சியில் தாக்குப்பிடித்து காத்திருந்தார்கள். பிரான்க் (Franc) வீழ்ச்சி மற்றும் ஏனைய ஆத்திரமூட்டிய சம்பவங்கள் ஓர் உடன்படிக்கையை உடைக்கும் நிலைக்கு புவான்கேரை நிர்பந்தப்படுத்திய போது, அமெரிக்கா ஓர் ஐரோப்பாவின் அமைதி திட்டத்துடன் உள்ளே நுழைந்தது. ஜேர்மனியை மேற்பார்வையிடும் உரிமையை அது, 800 மில்லியன் மார்க்குகளைக் கொண்டு வாங்கியது. இன்னும் கூற வேண்டுமானால், அதில் பாதி இங்கிலாந்தால் வினியோகிக்கப்பட்டது. இந்த ஒரு சில மில்லியன் டாலர் பேரவிலைக்காக, வோல்ஸ்ட்ரீட் அதன் கட்டுப்பாட்டு விரிவை (Controller astride) ஜேர்மன் மக்களின் கழுத்தில் வைத்தது. "அமைதிவாதம்"? கழுத்தை நெரிக்கும் இந்த அமைதிவாதத்தின் மூக்கை உங்களால் உடைக்க முடியாது. அடுத்து, செலாவணியை ஸ்திரப்படுத்தல் என்றால் என்ன? ஐரோப்பாவில் ஏற்படும் செலாவணி ஏற்ற இறக்கங்கள், அமெரிக்கரைப் பாதிக்கிறது. அமெரிக்கர் பாதிக்கப்படுகிறார், ஏனென்றால் இது மலிவாக ஏற்றுமதி செய்ய ஐரோப்பாவை அனுமதிக்கிறது. தாம் அளித்த கடன்களின் மீது வழக்கமான வட்டித்தொகைகளைச் சேகரிக்கவும், அத்துடன் பொதுவாக நிதியியல் ஒழுங்கமைப்பைப் பாதுகாக்கவும், இந்த இரண்டிற்காகவும் ஒரு ஸ்திரமான செலாவணி அமெரிக்கருக்குத் தேவைப்படுகிறது. அப்படியில்லையென்றால் ஒருவரால் அவருடைய மூலதனத்தை எவ்வாறு ஐரோப்பாவில் முதலீடு செய்ய முடியும்? ஆகவே அமெரிக்கா, ஒரு ஸ்திரமான செலாவணியை ஏற்படுத்த ஜேர்மனியர்களை நிர்பந்தித்தது. இந்த தேவைக்காக அவர் பிரித்தானியர்களுக்கு 300 மில்லியன் டாலர் கடனாக அளித்து, அவர்களையும் கட்டாயப்படுத்துகிறார்; இலாய்டு ஜோர்ஜ் சமீபத்தில் குறிப்பிட்டார்: “தற்போது பவுண்ட் ஸ்டேர்லிங், டாலரின் முகமதிப்பிற்கு பொருந்தி இருக்கிறது.” இலாய்டு ஜோர்ஜ், ஒரு வயதான திமிர்பிடித்த கிழவன். பவுண்டு ஸ்டெர்லிங் டாலரின் முகமதிப்பிற்கு பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் பெருமிதமான பவுண்டு ஸ்டேர்லிங்கின் முதுகெலும்பை அந்த 300 மில்லியன் டாலர் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்து, பிரான்சின் நிலை என்ன? பிரெஞ்சு பூர்ஷூவா, ஒரு ஸ்திரமான செலாவணி மாற்றத்திற்காக ஏங்கிக் நிற்கிறது. இதுவொரு வலிமிக்க செயல்முறையாக இருக்குமென்று அமெரிக்கர் கூறுகிறார்: எந்தவித நிபந்தனைகளின் அடிப்படையிலும் உங்களுக்கு கடன் கிடையாது; உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள். பிரான்ஸ் அதன் கடன்களைத் திருப்பி அளிப்பதற்காக நிராயுதபாணியாக வேண்டும் என்று அமெரிக்கர் வலியுறுத்துகிறார். இதுதான் பட்டவர்த்தனமான அமைதிவாதம், நிராயுதபாணியாக்குதல், செலாவணியை ஸ்திரப்படுத்துதல் - இதை யாராலும் மாற்ற முடியாது. பிரான்ஸைத் தனது காலடியில் கொண்டு வர அமெரிக்கா "அமைதியாக" தயார் செய்கிறது. தங்கத்தை சமச்சீராக்குதல் மற்றும் கடன்கள் குறித்த பிரச்சினைகள் ஏற்கனவே இங்கிலாந்துடன் தீர்க்கப்பட்டிருந்தன. சரியாக சொல்வதானால், பிரிட்டிஷ் இனிமுதல் ஆண்டுக்கு சுமார் 330 மில்லியன் ரூபிளை (ruble) அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டும். இங்கிலாந்து, அதன் பங்கிற்கு, இத்தாலிய கடன் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது. ஆனால் இதிலிருந்து அது சொல்லும்படியாக ஒன்றையும் பெறப்போவதில்லை. பிரான்ஸ் தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் முதன்மை கடனாளியாக இருக்கிறது; இதுவரை அது ஒன்றையுமே செலுத்தவில்லை. இருந்தாலும், அந்த பழைய கடன்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட, ஒரு வித்தியாசமான அமைப்பு - நிதியியல் அல்லாத, மாறாக புரட்சிகரமான ஓர் அமைப்பு - நிகழ்வுகளில் முழுமையாக தலையீடு செய்யாத வரையில், அது அதன் கடன்களைச் செலுத்தித் தான் ஆகவேண்டும். பிரான்சிற்கும், இங்கிலாந்திற்கும் ஜேர்மனி கடன்களைக் கட்டி வருகிறது. அது நம்மிடமிருந்தும் கூட கடன்களைக் கோருகிறது. அப்படியென்றால், ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவின் நிலைமை என்ன? பிரிட்டிஷ் முதலாளித்துவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவிடமிருந்தும் அதன் கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது அல்லது வசூலிக்கத் தயாராகிறது. இது ஏனென்றால், இதன்பின்னர், இவ்வாறு வசூலிக்கப்பட்ட கூட்டுத்தொகையையும், அதனுடன் அதனின் சொந்த தொகையையும் சேர்த்து, அட்லாண்டிக் வழியாக அங்கிள் சாமிற்கு (அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய புனைப்பெயர்) அளிக்க வேண்டியதிருக்கிறது. திரு. பால்ட்வினோ அல்லது கிங் ஜோர்ஜோ இன்று என்ன மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறார்கள்? ஐரோப்பா என்றழைக்கப்படும் ஒரு பிராந்தியத்தில், வெறுமனே அமெரிக்காவிற்கான தலைமை வரி-வசூலிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பிய மக்களிடமிருந்து நிலுவைகளைப் பறித்து, அமெரிக்காவிற்கு அனுப்புவது தான் இந்த முகவர்களின் வேலை. நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்த நிர்வாகம் சத்தமில்லாமல், பட்டவர்த்தனமான அமைதிவாதியாக இருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்க அமைப்புமுறையின்கீழ், கடன்-வினியோகித்தலானது, மிகவும் நேர்மையான வரிசெலுத்துவோர்களின் மேற்பார்வையில், அதாவது பிரிட்டனின் மேற்பார்வையில் (இதற்காக இது தலைமை வரி-வசூலிப்பாளர் என்ற பெயரைப் பெறுகிறது) ஐரோப்பிய மக்களின் பரஸ்பர நிதியியல் உறவுகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஐரோப்பிய கொள்கை முற்றுமுதலாக இதில் தான் தங்கியுள்ளது: ஜேர்மனி பிரான்சிற்கு நிதியளிக்கும்; இத்தாலி இங்கிலாந்திற்கு அளிக்கும்; பிரான்ஸூம், இங்கிலாந்திற்கு அளிக்கும்; ரஷ்யா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, எனக்கு நிதியளிக்கும், அதாவது அமெரிக்காவிற்கு. கடன்சுமையின் இந்த அமைப்புநிலை அமெரிக்க அமைதிவாதத்தின் தூண்களில் ஒன்றை கட்டியமைக்கிறது. இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் எண்ணெய் வளத்திற்காக நடக்கும் சர்வதேச போராட்டம், ஏற்கனவே புரட்சிகர அதிர்ச்சிகளுக்கும், மெக்சிக்கோ, துருக்கி, பேர்சியாவில் இராணுவ மோதல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஆனால் ஒருவேளை நாளைய செய்தியிதழ்கள், எண்ணெய் வளத்தின்மீது இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஓர் அமைதியான உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாக நமக்கு அறிவிக்கலாம். இது எதைக் குறிக்கும்? இது வாஷிங்டனில் நடைபெறும் ஒரு எண்ணெய்வள மாநாட்டைக் குறிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இங்கிலாந்திற்குப் போதியளவிற்கு எண்ணெய் வினியோகிக்க உடன்பாடு செய்யப்படும். மீண்டும் விளைவு, 14-காரட் அமைதிவாதம் தான். மற்றொரு துறையில், அதாவது சந்தைகளுக்கான போட்டியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு, ஓர் "அமைதியான" நெறிமுறைகளை நோக்கி இம்மாதிரியே நடத்தப்படும். முன்னாள் மந்திரியும், ஒரு ஜேர்மன் எழுத்தாளருமான பாரோன் ரெப்னிட்ஜ், அவர் எந்த அரசாங்கத்தில் இருந்தார் என்று நினைவில்லை, (ஜேர்மனியில் முன்னாள் மந்திரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்) அவர் இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சந்தை போட்டியைக் குறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார்: உங்களுக்கே தெரியும், அமெரிக்காவிற்கு ஆதரவாக, கனடாவிற்குள்ளோ, தெற்கு அமெரிக்காவிற்கு உள்ளோ, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கடற்கரையிலும், பசிபிக் பிராந்தியத்திலும் இங்கிலாந்து விலகி இருக்கும் வரையில், அதனால் யுத்தத்தைத் தவிர்க்க முடியும்: “அப்படியிருந்தால், ஐரோப்பாவிற்கு வெளியே அதற்கு வேறு துறைகள் கிடைக்கும்.” அதற்குப் பின்னர், இங்கிலாந்திற்காக என்ன தங்கியிருக்கும் என்று வெறுமனே என்னால் கூற முடியாது. ஆனால் மாற்றீடு மிகத் துல்லியமாக முன்னால் நிற்கிறது: அதாவது, “ஒன்று யுத்தத்தை நாட வேண்டும் அல்லது ஒரு பகிர்வு பற்றாக்குறைக்காக "அமைதிவாதத்திற்கு" சுருங்க வேண்டும். இங்கே சமீபத்திய அத்தியாயமாக, முற்றிலும் புதிய ஒன்றாக இருப்பது இது தான்: அதாவது, வெளிநாட்டு மூலப்பொருட்களின் மீது அக்கறை கொண்ட - உயர்ந்தமட்டத்தில் ஆர்வம் கொண்ட ஓர் அத்தியாயம். பாருங்கள், ஏனையவர்களிடம் உள்ள பல விஷயங்கள் அமெரிக்காவில் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து, ஒட்டுமொத்தமாக உலகளவிலுள்ள மூலப்பொருட்களின் பகிர்வை எடுத்துக்காட்டும் ஒரு வரைபடத்தை அமெரிக்க இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் ஒட்டுமொத்த கண்டத்தின் அடிப்படையில் பேசுகிறார்கள்; சிந்திக்கிறார்கள். ஏதோவொரு வகையில் அல்லது வேறுவிதத்தில் வடிகால்களாக இருந்த, அல்பேனியா, பல்கேரியா ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்திய ஐரோப்பிய குறுநிலவாதிகள் (pygmies), அந்த நிலங்களின் பகுதிகளை அபகரித்தனர். அமெரிக்கர்கள் கண்டங்களின் அடிப்படையில் சிந்திக்கின்றனர்: இது புவியியலின் ஆய்வை எளிமைப்படுத்துகிறது என்றாலும், இதில் மிக முக்கியமானது என்னவென்றால், இது கொள்ளையடிப்பதற்கும் பெரும் நிலப்பகுதியை அளிக்கிறது. மேலும், பத்து கரும்புள்ளிகளுடன், அதாவது அமெரிக்க பொருளாதாரத்திற்குத் தேவையான பத்து மூலப்பொருட்களின் பெரும் பற்றாக்குறைகளைக் குறித்த, ஓர் உலக வரைபடத்தை அமெரிக்க இதழ்கள் பிரசுரித்திருக்கின்றன: இரப்பர், கோப்பி, நைட்ரேட்கள், தகரம், பொட்டாஷ், சீஷல் மற்றும் ஏனைய முக்கியத்துவம் குறைந்த மூலப்பொருட்கள். இந்த அனைத்து மூலப்பொருட்களும் அமெரிக்காவால் அல்லாமல், ஏனைய நாடுகளால் ஏகபோகமாக்கப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது (கொடுமையிலும் கொடுமை!). உலக உற்பத்தியில் சுமார் 70 சதவீதமாக இருக்கும் இரப்பர், வெப்ப மண்டல (tropical) தீவுகளில் இருந்து வருகிறது, இது இங்கிலாந்திற்குச் சொந்தமானது, இந்நிலையில் அமெரிக்கா அதன் வழியில், வாகனத்துறை டயர்களுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் உலக உற்பத்தியில் 70 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. கோப்பி, பிரேசிலில் இருந்து வருகிறது. ஆங்கிலேயரின் நிதியுதவியைப் பெறும் சிலி, நைட்ரேட்களை அளிக்கிறது. மேலும், உடனடியாகவும் இடைவெளி இல்லாமலும், முன்னோக்கித் தள்ளுவதில் இலாய்டு ஜோர்ஜை விட்டுவைக்காத திரு. சேர்ச்சில், இரப்பரின் விலை ஏறியதால் அமெரிக்காவிற்கு வரவேண்டிய கடன்தொகைகளை திரும்பப்பெற முடிவு செய்தார். ஒரே ஆண்டில் அதாவது 1925இல், ஒரு "நேர்மையான" விலை மதிப்பிற்கும் மேலாக, இரப்பருக்காக மொத்தம் 600 முதல் 700 மில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்கா ஆங்கிலேயர்களுக்கு அளித்ததாக, அமெரிக்க வர்த்தகத்தின் இயக்குனரான ஹூவர், ஒரு கணக்கு இயந்திரத்தின் உதவியுடன் கணக்கிட்டு இருக்கிறார். அவர் அதைத் தான் கூறினார். நேர்மையான விலைக்கும், நேர்மையற்ற விலைகளுக்கும் இடையில் எவ்வாறு வேறுபடுத்துவது என்பது ஹூவருக்கு மிக நன்றாகவே தெரியும்: அவருடைய வேலையே அது தான். இது குறித்து அமெரிக்க இதழ்கள் புரிந்து கொண்ட உடனேயே, அவை ஒரு விசித்திரமான பிம்பத்தை எழுப்பி, கதறின. The Evening Post இதழின் ஒரேயொரு மேற்கோளை இங்கே நான் எடுத்துக்காட்டுகிறேன்: “சக்திவாய்ந்த நாடுகளின் ஒரு கூட்டம், சர்வதேசரீதியில் அமெரிக்காவை ஒதுக்கி வைக்கின்றன என்றால், இத்தகைய அனைத்து லொகார்னோக்கள் மற்றும் ஜெனிவாக்களால், இத்தகைய உடன்படிக்கைகள் மற்றும் நெறிமுறைகளால், இத்தகைய நிராயுதபாணியாக்கும் மாநாடுகளினாலும் பொருளாதார மாநாடுகளினாலும், என்ன நன்மை இருக்கிறது?” இவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கும், எல்லாவிதத்திலும் சுரண்டப்பட்டிருக்கும் இந்த ஏழை அமெரிக்காவை நீங்கள் கட்டாயம் உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து பார்க்க வேண்டும். இரப்பர், கோப்பி, தகரம், நைட்ரேட்கள், கயிறுகளுக்கான சீஷல், பொட்டாஷ் - எல்லாமே பறிக்கப்பட்டு, ஒரு கௌரவமான அமெரிக்க கோடீஸ்வரர் அவருடய வாகனத்தை ஓட்ட முடியாமல், தேவைக்கு காப்பி குடிக்க முடியாமல், அல்லது தூக்கில் தொங்குவதற்கு ஒரு முழம் கயிறு கூட கிடைக்காமல், அல்லது அவருடைய மூளையைச் சிதறடிக்க ஒரு வெள்ளீய தோட்டாவைக் கூட பெற முடியாமல், அனைத்தும் ஏகபோகமாக்கப்பட்டிருக்கின்றன. இது உண்மையிலேயே சகிக்கமுடியாத பரிதாபமான நிலைமை தான்: அந்தோ! எல்லா திசைகளிலும் சுரண்டப்படுகிறார்களே! ஒரு "தரமான" சவப்பெட்டியில் ஒரு மனிதனைப் படுக்க வைக்க இதுவே போதும் தான்! இது தொடர்பாக திரு. ஹூவர் சிறப்பாக ஒரு கட்டுரை எழுதினார் - என்னவொரு அற்புதமான கட்டுரை! அது பிரத்யேகமாக பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது - எண்ணிக்கையில் கூறுவதானால் 29 - ஒவ்வொன்றும் இதற்கு முன்னர் அதுபோல் ஒன்று இல்லாத அளவிற்கு சிறப்பாக உள்ளன. இந்த அனைத்து பிரச்சினைகளின் கூர்முனைகளும் இங்கிலாந்தைக் குறிவைத்திருக்கின்றன என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள். ஒரு நேர்மையான விலைக்கும் மேலாக மக்களை மூழ்கடிப்பது ஒரு நல்ல விஷயமா? இது ஒரு நல்ல விஷயமில்லை என்றால், இது ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையிலான உறவுகளில் எரிச்சலைக் கொண்டு வருவதோடு தொடர்புபட்டதில்லையா? அவ்வாறு எரிச்சலைக் கொண்டு வருவதோடு இணைந்த விஷயம் என்றால், இதில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமல்லவா? ஒரு சுய-கௌரவமுள்ள அரசாங்கம் தலையீடு செய்கிறதென்றால், நாசகரமான விளைவுகளைத் தடுக்க வேண்டுமல்லவா? ஓர் ஆங்கில இதழ், இதர பிற இதழ்களை இழிவாகவும், பெரும் சூழ்ச்சியுடனும் இந்த மதிப்பீட்டைக் குறித்து எழுதும் போது, ஒரு நூறு அறிவாளிகளால் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை ஒரு முட்டாளால் கேட்க முடியும் என்று எழுதியது. இதன் மூலம் அந்த தேசாபிமான செய்தியிதழ், அதன் சுமையைக் கீழிறக்கி வைத்தது. முதலாவதாக, ஒரு முட்டாள் அந்தளவிற்கு பொறுப்பான ஒரு பதவியைப் பெறுவாரா என்று கேட்க நான் தயாராக இல்லை. அது தான் நிலைமை என்றாலும் கூட… தோழர்களே, இது என் கருத்தல்ல, மாறாக இதை வெறுமனே ஒரு தர்க்க அனுமானத்திற்காக எடுத்துக் கொள்வோம். இது இவ்வாறு இருந்தது என்றாலும் கூட, அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரமாண்டமான இயந்திரங்களின் தலையில் ஹூவர் ஒன்றுமேயில்லை என்று தான் நான் கூறுகிறேன். மேலும் இதன் விளைவாக, ஒட்டுமொத்த பூர்ஷூவா "எந்திரமும்" அவருக்காக அவருடைய சிந்தனையைச் சிந்திக்கின்ற நிலையில், உளவுப்பிரிவின் தேவையே இல்லை. மேலும் ஹூவரின் 29 கேள்விகளும், எல்லா நிகழ்வுகளிலும், திரு. பால்ட்வினின் காதுகளுக்குத் துப்பாக்கி வெடி சத்தத்தைப் போன்று வந்தன. அதற்குப்பின்னால் உடனடியாக இரப்பர் விலை குறைந்தது. இந்த உண்மையானது, உலக நிலைமைகளைப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதை விட சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. தோழர்களே! அமெரிக்க அமைதிவாதம் நடைமுறையில் இப்படித் தான் இருக்கிறது. ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப்பதற்கு வழியே இல்லை தனது பாதையில் எவ்வித தடையும் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும், ஒட்டுமொத்த உலகத்தைச் சுரண்டுவதில் தனக்கென நீடித்த உரிமையைப் பெறுவதற்கு ஒரு வஞ்சகமான தாக்குதல் நடத்த முடியாமல், ஒவ்வொரு மூலப்பொருட்களின் விலையிலும் உயர்வைக் கண்டுவருவது இந்த அமெரிக்கா தான் - பெரிதும் புறக்கணிக்கப்பட்டும், அதை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளாமலும், பிரிந்துகிடக்கும் ஐரோப்பா அதனை அதன் எதிர்பலத்தில் காண்பதும் இந்த புதிய அமெரிக்காவைத் தான் - அதாவது, யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட வறுமையிலும், இன்னும் அதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட அதன் சந்தைகளின் கட்டமைப்புடன், கடன்சுமைகளால் நிறைக்கப்பட்டு, அராஜகவாதங்களால் சீரழிக்கப்பட்டு, முழுவீச்சிலான இராணுவவாதத்தால் நசுக்கப்பட்டு, யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட ஏழையாக இருக்கும் ஓர் ஐரோப்பா. மறுகட்டுமான காலகட்டத்தின் போதும் கூட, ஐரோப்பாவின் மறுஉருவாக்கத்திற்கான சாத்தியக்கூறு குறித்த விஷயத்தில் சமூக ஜனநாயக பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பூர்ஷூவாக்களின் மத்தியில் போலி ஏமாற்றுத்தனங்கள் இல்லாமல் இல்லை. முதலில் பிரான்சிலும் பின்னர் ஜேர்மனியிலும், யுத்தத்திற்குப் பின்னர் ஐரோப்பிய தொழில்துறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெரும் வேகமெடுத்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; முதலாவதாக பொதுவான தேவை முழு அளவில் இல்லை என்றாலும் கூட, முந்தைய அனைத்து கையிருப்புகளும் தீர்ந்து போனதால் மீண்டும் பொதுவான தேவை உருவாகி இருந்தது. அங்கே ஒன்றுமே இல்லை. அதற்கும் மேலாக, ஒரு துணை சந்தையாக அமைந்திருந்த பெரிதும் சூறையாடப்பட்ட பகுதிகள் பிரான்சில் இருந்தன. இத்தகைய யுத்த-வடுக்கள் மற்றும் சூறையாடப்பட்ட சந்தைகளின் மிக அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத வரையில், பெரும் நம்பிக்கைகள் மற்றும் பெரும் போலித்தனங்களை அதிகரிக்கும் வகையில் தொழில்துறையால் ஓர் ஆரோக்கியமான வேகத்தில் செயல்பட முடிந்தது. தற்போது, இந்த விஷயத்தின் சாரத்தைப் பொறுத்த வரையில், இந்த போலித்தனங்களைக் குறித்த இருப்புநிலை குறிப்பானது (balance sheet), மிகவும் எச்சரிக்கையான பூர்ஷூவா பொருளாதார நிபுணர்களாலும் கூட தருவிக்கப்படுகின்றன. ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப்பதற்கு வழியே இல்லை. அமெரிக்க பூர்ஷூவாவின் பக்கத்தின் நனவுபூர்வமான கொள்கையை ஒருவர் கருத்தில் எடுக்காதுவிட்டாலும், முன்னுதாரணமற்ற அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் எழுச்சியை ஒருபோதும் அனுமதிக்காது. ஐரோப்பாவை மேலும் மேலும் ஒரு முட்டுச்சந்திற்குத் தான் விரட்டிச் செல்லும். அவ்வாறே அமெரிக்க முதலாளித்துவம், அதனை தானாகவே ஒரு புரட்சிகரப் பாதைக்குள் விரட்டும். இது தான் உலக நிலைமைக்கு மிக முக்கிய திறவுகோலாக இருக்கிறது. இது இங்கிலாந்து நிலைமையில் மிகவும் விளக்கத்தோடும், சந்தேகத்திற்கிடமில்லாமலும் வெளிப்படுகிறது. இங்கிலாந்தின் கடல்கடந்த-பன்னாட்டு ஏற்றுமதிகள் அமெரிக்காவினாலும், கனடாவினாலும், ஜப்பானினாலும், மற்றும் அதன் சொந்த காலனி நாடுகளில் ஏற்பட்ட தொழில்துறை அபிவிருத்தியினாலும் வெட்டப்படுகின்றன. ஒரு பிரிட்டிஷ் காலனி நாடான இந்தியாவின் ஜவுளித்துறை சந்தையைக் குறிப்பிட்டுக் காட்டுவதே போதுமானது. ஜப்பான் இங்கிலாந்தை ஓரங்கட்டுகிறது. மேலும் ஐரோப்பிய சந்தையில், ஆங்கிலேயர்களின் ஒவ்வொரு சரக்குகளின் விற்பனை உயரும் போதும், அது ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் விற்பனையை வெட்டுகிறது. இதேதான் தலைகீழாகவும் நடக்கிறது. பெரும்பாலும் இது தலைகீழாக தான் நடக்கிறது. ஜேர்மன் மற்றும் பிரான்சின் ஏற்றுமதிகள் பிரிட்டனின் அதே சரக்குகளைப் பாதிக்கிறது. ஐரோப்பிய சந்தை விரிவாகவில்லை. அதன் குறுகிய வரம்புகளுக்குள், தற்போது ஒருபக்கத்திலிருந்து, மற்றொரு பக்கத்திற்கு மாற்றம் நடக்கிறது. ஐரோப்பாவிற்குச் சாதகமாக விரைவில் சூழ்நிலை மாறும் என்று நம்புவது, அற்புதங்கள் ஏதேனும் நடக்க வேண்டும் என்று நம்புவது போலத்தான். ஜனநாயக சந்தை நிலைமைகளின்கீழ், சிறிய அல்லது பின்தங்கிய நிறுவனத்தை விட பெரிய மற்றும் மிக முன்னேறிய நிறுவனத்தின் வெற்றி உறுதியாக இருக்கிறது, ஆகவே, உலக சந்தையின் நிலைமைகளில், ஐரோப்பாவை விட குறிப்பாக முதலாவதும், முன்னோடியுமான இங்கிலாந்தைவிட அமெரிக்காவின் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. 1925இல் இங்கிலாந்தின் இறக்குமதிகளும், ஏற்றுமதிகளும் யுத்தத்திற்கு முந்தைய அதன் அளவுகளை விட முறையே 111 சதவீதம் மற்றும் 76 சதவீதத்தை எட்டியது. இது முன்னொருபோதும் நிகழ்ந்திராத விகிதங்களின் ஒரு மோசமான வர்த்தக சமநிலையைக் உட்கொண்டிருக்கிறது. ஏற்றுமதிகள் குறைவதென்பது, இரண்டாம்பட்சமாக வந்து மோதும் ஒரு தொழில்துறை நெருக்கடியை, ஆனால் தொழில்துறையின் அடிப்படை துறைகளில், அதாவது நிலக்கரி, எஃகு, கப்பல் கட்டுமானம், கம்பளி, இதரபிறவற்றில் ஏற்படக்கூடிய நெருக்கடியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. தற்காலிகமான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் கூட சாத்தியம் தான், அது தவிர்க்க முடியாததும் கூட, ஆனால் வீழ்ச்சியின் அடிப்படைப்போக்கு முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. புதிய நிலைமைகளோடு மிகவும் பொருந்தாமல் அவர்களின் அனைத்து பழைய அனுசரணைகளைத் தக்க வைத்திருப்பவர்களும், உலக நிலைமைகளின் மற்றும் அதற்குள்ளே தங்கியிருக்கும் தவிர்க்கமுடியாத விளைவுகள் குறித்து மிக அடிப்படையான புரிதல் கூட இல்லாதவர்களும் இங்கிலாந்தின் "மக்கள் தொடர்பாளர்கள்" நியாயப்படுத்தும் புறக்கணிப்புகளில் தங்களை நிரப்பிக் கொள்கிறார்கள். பதவியிலிருக்கும் ஆங்கில அரசியல்வாதிகளான பால்ட்வினும், சேர்ச்சிலும் அவர்களின் நியாயங்களோடு, சமீபத்தில் நமக்கு மீண்டும் உதவி இருக்கிறார்கள். ஒரு நேர்மறையான மனோநிலையில் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதியில் சேர்ச்சில் அறிவித்தார் (ஆம், அதை அவர் குறிப்பிட்டார்). முதலாவதாக, ஒரு ஸ்திரமான தேசிய செலாவணி. ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் விலைகளில் குறைந்தபட்சம் 10 சதவீத குறைப்பு மற்றும் அதன் விளைவாக மோசமான வர்த்தக சமநிலைமை என்பதையே இந்த ஸ்திரப்பாடு குறிக்கிறது என்ற உண்மையை ஆங்கில பொருளாதார நிபுணர் கெய்னெஸ், சேர்ச்சிலின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். நேர்மறையான சிந்தனையில் இருப்பதற்கான இரண்டாவது காரணம், சிறந்த இரப்பர் விலையாக இருந்தது. கூறுவதற்கே வருத்தமாக இருக்கிறது, திரு. ஹூவரின் 29 கேள்விகள், சேர்ச்சிலின் இரப்பர் குறித்த அனுகூலவாதம் கணிசமாக குறைத்திருந்தது. மூன்றாவது, போராட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் சுரங்கத்தொழிலாளர்களின் ஒப்பந்த தொகுப்பு ஏப்ரல் இறுதியில் கவனத்திற்கு வரும் வரையில் இந்த மதிப்பீட்டிற்காக காத்திருப்போம். அனுகூலவாதத்திற்கான நான்காவது காரணம் --- லொகர்னோ. ஒரு மணி நேரத்திலிருந்து அடுத்த ஒருமணி நேரத்திற்கு, அங்கே எந்த முன்னேற்றமும் இல்லை. லொகர்னோவிலிருந்தே, ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல் குறைவதற்கு பதிலாக தீவிரமடைந்துள்ளது. ஆகவே லொகர்னோவை எட்டும் வரையில், அதற்காகவும் நாம் காத்திருப்போம்; அவர்கள் அவரவர்களின் குஞ்சுகளை அடைகாத்து வரும் போதே, ஒருவர் மற்றொருவருடையதைப் பார்க்கிறார். அனுகூலவாதத்திற்கான மீத காரணங்களைக் கணக்கில் எடுக்காமல் விட்டுவைப்போம்; வோல்ஸ்ட்ரீட்டில் அவர்கள் வெளிக்கொணர முயலும் விலை, தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதே விஷயத்தைக் குறித்து இலண்டனின் The Times இதழ், நம்பிக்கையின் இரண்டு கதிர்கள் (Two Rays of Hope) என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை பதிப்பித்திருப்பதைக் குறிப்பிடுவது சுவாரசியமாக இருக்கும். The Times இதழ், சேர்ச்சிலை விட மிகவும் அடக்கஒடுக்கமாக இருந்தது (modest); அதனிடம் பன்னிரெண்டு இல்லை, இரண்டே இரண்டு நம்பிக்கை கதிர்கள் மட்டுமே இருக்கிறது, இவையும் ஊடுகதிர்களாக (x-rays) இருக்கின்றன, அதாவது, பிரச்சினைக்குரிய கதிர்களாக இல்லை. தங்களின் சொந்த நிலைப்பாட்டில் இருந்தும், பிரிட்டிஷ் தொழில்துறையினரின் கருத்துக்களில் இருந்தும் கூட ஒரு மதிப்பீட்டைச் செய்யும் அமெரிக்கர்களின் மிக தீவிரமான கருத்துக்களை, சேர்ச்சிலின் தொழில்திறன் படைத்த மேம்போக்கான மனப்போக்கிற்கு எதிரிடையாக ஒருவரால் நிறுத்த முடியும். ஐரோப்பாவில் இருந்து திரும்பிய பின்னர் அமெரிக்க வர்த்தகத்துறை இயக்குனர் கிளெய்ன், தொழிலதிபர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார். முற்றிலும் மரபார்ந்த அமைதிப்படுத்தும் தொனிக்கு மத்தியிலும் உண்மை உடைத்துக் கொண்டு வருகின்றது. அவர் கூறினார், “பொருளாதார கண்ணோட்டத்திலிருந்து, ஒரேயொரு இருண்ட பிரதேசம், [பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் நிலைமைகளிலிருந்தும், அத்துடன் அதைச் சார்ந்து ஜேர்மனியின் படிப்படியான மீட்டமைப்பிலிருந்தும் வெளிப்படையாக வெளியில் கொண்டு வரப்பட்டது] --- என்னைப் பொறுத்தவரையில், ஒரேயொரு இருண்ட பிரதேசம் ஐக்கிய இங்கிலாந்து பேரரசு தான். இங்கிலாந்து ஒரு சந்தேகத்திற்கிடமான வர்த்தக நிலைப்பாட்டில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. இங்கிலாந்து நம்முடைய சிறந்த வாடிக்கையாளர் என்பதால் நான் அதை மிகவும் எதிர்மறையாக பார்க்க விரும்பவில்லை. ஆனால் அந்நாட்டில் பல காரணிகள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. அவற்றால், இன்னும் அதிகமாக உன்னிப்போடு கவனிப்பதை வேண்டியதிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கிலாந்தில் கொடுமையான வரிகள் நிலவுகின்றன, இதற்கு காரணம், சில குறிப்பிட்ட மக்களைப் பொறுத்த வரையில், நம்முடைய பணத்தாகத்தைக் காணலாம், இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் கூட இது முழுவதும் சரி என்பதல்ல … நிலக்கரி தொழில்துறை கருவிகளின் கையிருப்பு, முன்னர் இருந்த சில டஜன் கணக்கான ஆண்டுகளைப் போலவே, ஒரு டன்னுக்கான மனித உழைப்பின் விலை அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் நிலையில், இருக்கிறது.” இதுவரையிலும் அவ்வாறு தான் இருந்தது; இனியும் கூட அவ்விதத்திலே தான் இருக்கும். இப்போது, இங்கே மற்றொரு கருத்து வைக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தவரும், ஆங்கிலேயர்களின் "நண்பராகவும், நலம்-விரும்பியாகவும்" கருதப்பட்ட ஜெ. ஹார்வே, இங்கிலாந்திற்கு உதவ முன்வரவேண்டியதன் தேவைக்குறித்து உணர்வுபூர்வமாக ஒரு விதியாக பேசுவதன் அடிப்படையில், இது உண்மையாகவும் இருக்கிறது. இதுவே சமீபத்தில் வெளியான, ''இங்கிலாந்தின் முடிவு'' ("The End of England” -தலைப்பு மட்டும் தான் விலைமதிப்பில்லாததாக இருக்கிறது!) என்று தலைப்பிட்ட அவருடைய ஒரு கட்டுரையில், “ஆங்கிலேயர்களின் உற்பத்தி அவற்றின் காலத்தைக் கடந்துவிட்டிருந்தன. இனிமேல் பெரும்பாலான ஆங்கிலேயர்கள் ஓர் இடைத்தரகராகத் தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அதை சுருக்கமாக கூற வேண்டுமானால் அவர்கள் அமெரிக்காவின், விற்பனை குமாஸ்தாக்களாகவும், வங்கி கணக்காளர்களாகவும் தான் இருக்க வேண்டும்: இது தான் ஒரு நண்பரின், நலம்-விரும்பியின் தீர்மானமாக இருக்கிறது. அரசாங்கத்திற்கு எழுதிய ஒரு குறிப்பின் மூலம், மொத்த பிரிட்டிஷ் பத்திரிக்கையிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்திய கப்பல்கட்டும் தொழிலில் ஒரு பிரபல ஆங்கிலேயரான ஜோர்ஜ் ஹண்டர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: அவர் கூறுகிறார், “இங்கிலாந்து தொழில்துறையின் பேரழிவு நிலைமையைக் குறித்த ஒரு தெளிவான கருத்தை அரசாங்கம் [அடிப்படையில், அனுகூலவாதத்திற்கான 12 காரணங்களுடன் சேர்ச்சில் தான் அரசாங்கமாக இருக்கிறார்] கொண்டிருக்கிறதா? இந்த நிலைமை, முன்னேற்றமடைவதில் இருந்து விலகி, தொடர்ந்து மோசமடைந்து வருவதை அது அறியுமா? நம்மிடையே வேலையில்லாதோர் மற்றும் பகுதியாக வேலையற்றோர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் வேலையில் இருக்கும் தொழிலாளர்களில் 12.5 சதவீதத்தைக் குறிக்கிறது. நம்முடைய வர்த்தக கணக்கு திருப்திகரமாக இல்லை. நம்முடைய இரயில்பாதைகளும், நம்முடைய தொழில்துறை நிறுவனங்களின் பெரும்பகுதி அவற்றின் கையிருப்புகளில் இருந்து பங்குவருமானங்களை செலுத்துகின்றன அல்லது ஒன்றுமே செலுத்துவதில்லை. அதுவே தொடர்ந்தால், அது திவால்நிலையாக, அழிவாக இருக்கும். எதிர்கால வாய்ப்புவளங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.” நிலக்கரி தொழில்துறை தான் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் முக்கியபடிக்கல்லாக இருந்தது. தற்போது அது முழுவதுமாக அரசு மானியத்தைச் சார்ந்துள்ளது. “நாம் விரும்பும் அளவிற்கு நம்மால் நிலக்கரி தொழில்துறைக்கு மானியம் வழங்க முடியும்; அது நம்முடைய தொழில்துறையின் அதிகாரத்தைக் குறைப்பதை பொதுவாக தடுக்காது" என்று ஹண்ட்டர் தெரிவிக்கிறார். ஆனால் மானியங்கள் நிறுத்தப்பட்டால், ஆங்கிலேய தொழிலதிபர்கள் தற்போது அளித்து வரும் கூலிகளைத் தொடர முடியாது; அது அடுத்த மே தினத்தின் தொடக்கத்துடன், ஒரு பிரமாண்டமான பொருளாதார மோதலைத் தூண்டிவிடும். ஏறக்குறைய ஒரு மில்லியன் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களால் காட்டப்படும் அனைத்து அறிகுறிகளின்படி, அவர்களின் ஆதரவுடன், ஒரு மில்லியனுக்கும் குறைவில்லாத சுரங்கத் தொழிலாளர்கள் அரவணைக்கும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தால் என்ன எடுத்துக்காட்டப்படும் என்பதை கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் சிரமமில்லை. இங்கிலாந்து ஒரு மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சிகளின் ஒரு காலக்கட்டத்திற்குள் நுழையும். ஒன்று ஒருவர் நாசகரமான மற்றும் நம்பிக்கையற்ற மானியங்கள் அளிப்பதைத் தொடர வேண்டும் அல்லது ஓர் ஆழ்ந்த சமூக மோதலுக்கு விட்டுவிட்டு அவர் தன்னைத்தானே பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அனுகூலவாதத்திற்கு சேர்ச்சிலிடம் பன்னிரெண்டு காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, ஆனால் உல்லாச உணவகங்களின் தொழிலாளர்கள், கபரே நடனக்காரர்கள் மற்றும் உதிரி பாட்டாளி வர்க்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதைத் தான் இங்கிலாந்தின் சமூக புள்ளிவிபரங்கள் ஆதாரப்படுத்துகின்றன. உற்பத்தியாளர்களின் செலவில் முகஸ்துதி செய்பவர்களின் எண்ணிக்கை உயர்கிறது, ஆனால் அதேநேரத்தில், இந்த புள்ளிவிபரங்களில் அமெரிக்கர்களின் தாழ்மையான சேவையுடன் மன்றாடும் அரசியல் முகஸ்துதியானும் மற்றும் மந்திரிகளும் சேரவில்லை. மீண்டும் ஒருமுறை அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் எதிர்நிறுத்திப் பார்ப்போம். அமெரிக்காவில் தொழிற்சங்க அதிகாரத்துவம் (aristocracy of labor) அதிகரித்து கொண்டிருக்கிறது. இது நிறுவன தொழிற்சங்கங்களின் ஸ்தாபகத்திற்கு உதவுகிறது; இதுவே நேற்றைய மேலாதிக்கத்திலிருந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் இங்கிலாந்தில், உதிரிப் பாட்டாளி வர்க்க அடுக்குகள் வளர்கின்றன. இந்த அடுத்தடுத்து மற்றும் எதிர்நிலைபாட்டில் எல்லாவற்றையும்விட சிறந்ததை வெளிப்படுத்துவதென்பது உலக பொருளாதார அச்சின் இடபெயர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த இடப்பெயர்வு, சமூகத்தின் வர்க்க அச்சே இடப்பெயர்வாகும் வரையில், அதாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி வரையில் தொடர்ந்து செயல்படும். திரு. பால்டுவின் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார் என்பது உண்மை தான். சேர்ச்சிலை விட திரு. பால்டுவின் அதிக பலத்தைக் கொண்டிருக்கிறார் என்றாலும், அவர் மிகக் குறைந்த அளவில் தான் புரிந்து கொண்டிருக்கிறார். தொழிலதிபர்களின் ஒரு கூட்டத்தில், இக்கட்டான நிலைமையிலிருந்து வெளியே வருவதற்கான கருவிகளை - ஒரு பழமைவாத பிரதம மந்திரி எப்போதுமே அனைத்து வியாதிகளுக்கான காப்புரிமை பரிகாரங்களைக் கொண்டிருக்கிறார் - அவர் விளக்கினார். “நம்மில் சிலர் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு தூங்கி விட்டிருக்கிறோம் என்று சிலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது.” இது வெகு நீண்டகாலம்! மற்றவர்கள் ஒருவகை நிலைப்பாட்டில் நின்றிருந்த நிலையில், திரு. பால்டுவினே கூட குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தூங்கிவிட்டிருக்கிறார். அந்த பிரதம மந்திரி தொடர்ந்தார், “இந்த காலக்கட்டத்தின் போது அமெரிக்காவால் உணரப்பட்ட முன்னேற்றத்தால் வழிநடத்தப்பட்டால், நம்மால் சிறப்பாக செய்ய முடியும்.” உண்மையில் அமெரிக்காவின் "முன்னேற்றத்தால்" வழிநடப்படுவதற்கு சிறிது முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அந்த நாட்டில் 320 பில்லியன் தேசிய செல்வவளத்தை, வங்கிகளில் 60 பில்லியனை, ஆண்டுதோறும் 7 பில்லியன் திரட்சியை அவர்கள் வெளியில் கொணர்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் கொஞ்சம் வழிநடத்தப்பட்டு தான் பார்ப்போமே! முயன்று பார்ப்போமே! பால்டுவின் தொடர்கிறார், “மாஸ்வின் நிலைமையை ஆராய்வதிலிருந்து படிப்பதை விட, அந்த இரண்டு பிரிவினரும் [முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள்] அமெரிக்காவின் பள்ளியில் நிறைய படிக்க முடியும்.” மாஸ்கோவை துவேசிப்பதை திரு. பால்டுவின் விலக்கிக் கொள்ள வேண்டும். அவருக்கு நாம் சில விஷயங்களைக் கற்றுத் தர முடியும். உண்மைகளினூடாக நம்மைநாமே எவ்வாறு நிலைநோக்கில் நிறுத்துவது, உலக பொருளாதாரத்தைப் பகுத்தாராய்வது, ஒரு விஷயத்தையோ அல்லது இரண்டையோ, குறிப்பாக முதலாளித்துவ இங்கிலாந்தின் வீழ்ச்சியை முன்கூட்டியே கணிப்பது போன்றவற்றை நாம் அறிவோம். ஆனால் திரு. பால்டுவினால் இதை செய்ய முடியாது. நிதிமந்திரி சேர்ச்சிலும் மாஸ்கோவைக் குறிப்பிட்டார். அது இல்லாமல், இப்போதெல்லாம் ஒரு சிறந்த உரையை அளிக்க முடிவதில்லை. பாருங்கள், அன்று காலை பிரபுக்கள் சபை ஓர் உறுப்பினரான திரு. தோம்ஸ்கியின் ஓர் எழுச்சிகரமான உரையைப் படித்திருந்தார். சோவியத் ஒன்றியத்தில் மிகவும் முக்கியமான பதவியில் இருக்கும் ஒரு மனிதராக அவர் இருக்கிறார் என்று திரு. சேர்ச்சில் உண்மையிலேயே உறுதியளிக்கிறார். திரு. தோம்ஸ்கி அவருடைய இளமை காலத்தை திரு. சேர்ச்சிலுடன் ஆக்ஸ்போர்டிலோ அல்லது கேம்ப்ரிட்ஜிலோ கழிக்கவில்லை. மாறாக இங்கே மாஸ்கோவில் உள்ள, பௌடிர்கி சிறைச்சாலையில் கழித்தார். இருந்தபோதினும், திரு. சேர்ச்சில் திரு. தோம்ஸ்கியைக் குறித்து பேச வேண்டியதிருக்கிறது. மேலும், அவர் ஸ்கார்பொரோவில் (Scarborough) நடந்த தொழிற்சங்கங்கள் மாநாட்டில் திரு. தோம்ஸ்கியின் உரையைக் குறித்து மிகவும் மரியாதையோடு பேசவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். உண்மையில் திரு. தோம்ஸ்கி அங்கே ஓர் உரை நிகழ்த்தினார்; திரு. சேர்ச்சில் மீது ஏற்படுத்திய தோற்றத்திலிருந்து பார்த்தால், வெளிப்படையாக அது ஒன்றும் மோசமானதல்ல. பிந்தையவர் அந்த உரையிலிருந்து பிரித்தெடுத்தவைகளை மேற்கோளிட்டு காட்டினார், அவற்றை அவர் "காட்டுமிராண்டியின் உளறல்கள்" என்று பாத்திரப்படுத்தினார். அவர், "வெளியிலிருந்து சாமாதானப்படுத்தும் தலையீடுகள் எதுவுமில்லாமல், இந்நாட்டில் நம்முடைய சொந்த விவகாரங்களை நம்மால் சமாளிக்க முடியும் என்று நான் கருதுகிறேன்,” என்றார். திரு. சேர்ச்சில் மிகவும் பெருமிதமான மனிதர், ஆனால் அவர் கூறுவது தவறு. அவருடைய ஆதரவாளர் பால்டுவின், அமெரிக்க பள்ளியிலில் படிக்க வேண்டும் என்று கூறுகிறார். “காலை உணவிற்கு எங்களுக்கு புதிய முதலை முட்டைகள் தான் வேண்டுமென்பதில்லை,” திரு. சேர்ச்சில் இவ்வாறு தொடர்கிறார். தோம்ஸ்க்கி, இவர் தான் இங்கிலாந்தில் முதலை முட்டைகளைப் போட்டவர் என்று தெரிகிறது. திரு. சேர்ச்சில் இதை விரும்பவில்லை; அவர் நிலத்திற்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியின் அரசியலை விரும்புகிறார். மேலும் நெருப்புக்கோழியும் சரி, முதலையும் சரி இரண்டுமே இங்கிலாந்தின் ஒரேமாதிரியான சொந்த பிராந்திய காலனிகளில் அவற்றை அவையே பிரச்சாரம் செய்து கொள்கின்றன. இதனால் திரு. சேர்ச்சிலுக்கு உண்மையிலேயே திமிர்பிடித்து விடுகிறது: “இந்த நாட்டில் போல்ஷ்விக் புரட்சியைக் கண்டு நான் அஞ்சவில்லை. நான் அந்த தலைவர்களை விமர்சிக்கவில்லை.” ஆனால் இனியும், இதுவரையிலும், தோம்ஸ்கிக்கு எதிராக கடுமையான உரைகளை அளிப்பதிலிருந்து அது அவரை தடுத்துவிடவில்லை. ஆகவே அவர் ஒருவகையில் பயந்திருக்கிறார். அவர் தோம்ஸ்கியின் குணாதியசத்தை விமர்சிக்கவில்லை. அவரை அவர் வெறுமனே முதலை என்று கூறுவதிலிருந்து கடவுள் தான் தடுத்து நிறுத்த வேண்டும். “பிரிட்டன் ரஷ்யா இல்லை." உண்மை தான். “கார்ல் மார்க்சின் மந்தமான மேதமையை ஆங்கில தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும், சர்வதேசிய கீதத்தை அவர்கள் பாடும்படி செய்வதிலும் என்ன பயன் இருக்கிறது?” ஆங்கில தொழிலாளர்கள் சில நேரங்களில் மெக்டொனால்டால் அளிக்கப்பட்ட இசையோடு அரைகுறையாக பாடுவதும் உண்மை தான். ஆனால் அவர்கள் மாஸ்கோவின் எவ்வித தவறும் இல்லாத குறிப்புகளுடன் அதை பாட பயில்வார்கள். நம்மைப் பொறுத்தவரையில், அனுகூலவாதத்தின் அனைத்து 12 காரணங்களுக்கு இருந்தாலும் கூட, இங்கிலாந்தின் பொருளாதார சூழ்நிலையானது, ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் அவர்களில் உரத்த குரலில் சர்வதேசிய கீதத்தை பாடும் அந்த நேரத்தை நெருக்கமாக கொண்டு வருகிறது. ஆகவே உங்களுடைய செவிப்பறைகளை தயாராக வைத்திருங்கள், திரு. சேர்ச்சில்! ஜேர்மனியையும், பிரான்ஸையும் பொறுத்த வரையில், என்னை நானே சுருக்கமான குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறேன். நம்முடைய உற்பத்தி ஆணைகளை (Orders) நிறைவேற்றித் தரும் ஜேர்மனிய தொழிற்சாலைகளுக்கு சென்று வந்திருந்த நம்முடைய பொறியாளர்களில் ஒருவரிடம் இருந்து நேற்றைக்கு முன்தினம் நான் ஒரு கடிதத்தைப் பெற்றேன். அதில் அவர் பின்வரும் வரிகளில் சூழ்நிலையை பாத்திரப்படுத்தி இருந்தார்: “ஒரு பொறியாளராக நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். இங்கே தொழிற்துறை சந்தையில்லாமல் சரிவடைந்து வருகிறது, மேலும் இந்த சந்தைக்கு அமெரிக்க கடன்களும் அளிக்கப்படாது.” ஜேர்மனியில் வேலைவாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை இரண்டு மில்லியனையும் தாண்டிவிட்டிருக்கிறது. உற்பத்தியை பொருத்தமாக பகிர்மானம் செய்ததன் மூலமாக, மொத்த வேலைவாய்பற்றோரில் சுமார் நான்கில் மூன்று பங்கு தொழிலாளர்கள் தொழிற்திறன் படைத்த தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஜேர்மனி பணவீக்க நெருக்கடியில் சென்று கொண்டிருக்கிறது; தற்போது ஓர் உயர்வு ஏற்படலாம் ஆனால் அதற்கு மாறாக அங்கே ஒரு பயங்கர பொறிவு ஏற்படும் - இரண்டு மில்லியனுக்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். மேலும் ஜேர்மனிக்கு டேவ்ஸ் ஆட்சியின் மிக கடினமான விளைவுகள் இனிமேல் தான் வரவிருக்கின்றன. பிரான்ஸில், யுத்தத்திற்குப் பின்னர் தொழிற்துறை கணிசமான அளவிற்கு ஒரு முன்னோக்கிய படியை எடுத்தது. இது பல மக்களை ஏமாற்றியதுடன், “மறுஸ்தாபகத்தின்" பிரமையையும் உருவாக்கியது. உண்மையில், பிரான்ஸ் அதன் தகுதிக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறது; தற்காலிக உள்நாட்டு சந்தையின் (பேரழிவுக்கு உள்ளான பிராந்தியங்கள்) அடிப்படையில், அத்துடன் ஒட்டுமொத்த நாட்டையும் (பிராங்கின் வீழ்ச்சியை) விலையாக அளித்து அதன் தொழிற்துறை வளர்ச்சி கண்டது. இப்போது அதைத் திருப்பி அளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அமெரிக்கா கூறுகிறது: “ஆயுதங்களைக் குறை, ஆட்களைக் குறை, உங்கள் இடுப்புபட்டையை இறுக்கு, ஒரு ஸ்திரமான செலாவணிக்குத் திரும்பு” என்கிறது. ஒரு ஸ்திரமான செலாவணி என்பது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைப்பு என்பதாகும்; அதாவது வேலைவாய்ப்பின்மை, வெளிநாட்டு பாட்டாளி வர்க்கத்தை வெளியேற்றுதல், பிரெஞ்சு தொழிலாளர்களின் கூலிகளைக் குறைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பணவீக்க காலகட்டம் குட்டி முதலாளித்துவத்தை நாசமாக்கியது; பணச்சுருக்க (deflation) காலகட்டம் பாட்டாளிகளை நடவடிக்கைகளுக்குள் தூண்டிவிடும். பிரெஞ்சு அரசாங்கம் நிதியியல் பிரச்சினையை தீர்க்க முயல்வதற்கும்கூட அஞ்சுகிறது. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு மாறிமாறி வந்து கொண்டிருக்கும் நிதியமைச்சர்கள், ஏமாற்றுவதற்காக தொடர்ந்து வங்கிநோட்டுகளை அச்சடித்து கொண்டிருக்கிறார்கள். இது நாட்டு பொருளாதார வாழ்வை நெறிப்படுத்துவதில் அவர்களின் முழு நிர்வாக திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. ஹங்கேரியில், அட்மிரல் ஹோர்தே, இந்த கலையில் எந்த சிக்கலும் இல்லை என்று நம்பிக்கொண்டு, முடியாட்சியை மீட்டமைப்பதற்காக அல்லாமல், குடியரசை தக்க வைப்பதில் கூட பார்வையைச் செலுத்தாமல், பிரெஞ்சு நோட்டுகளை நகலாக்க தொடங்கிவிட்டார். இந்த முடியாட்சியவாத போட்டியை சகித்துக் கொள்ள மறுத்த பிரான்ஸ் குடியரசு, ஹங்கேரியில் கைது நடவடிக்கைகளைச் செய்ய தொடங்கியது. ஆனால் இதை தவிர, அது பிரெஞ்சு செலாவணியை மீட்டெடுக்க ஒன்றுமே செய்யவில்லை. பிரான்ஸ் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளில், அதாவது, பிரிந்துசெல்லும் ஐரோப்பாவின் பின்புலத்திற்கு எதிராக, தேசங்களின் கழகம் (League of Nations) இந்த ஆண்டு இரண்டு மாநாடுகளைக் கூட்ட விரும்புகிறது. ஒன்று ஆயுதக்குறைப்புக்காக; மற்றொன்று ஐரோப்பாவின் பொருளாதார மறு உருவாக்கத்திற்காக. ஆயினும், நம்முடைய இடத்திற்காக நாம் அவசரப்பட வேண்டாம். இந்த மாநாடுகளுக்கான தயாரிப்புகள் மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன என்பதுடன், ஒவ்வொரு படியிலும் நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் சந்தித்து வருகிறது. ஆயுதக்குறைப்பு மாநாட்டிற்கான தயாரிப்புகள் நெருங்கி வருகின்ற நிலையில், “உளவுத்துறை” என்ற சொல் அலங்காரத்துடன் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட, பாதியளவிற்கு உத்தியோகபூர்வமான ஓர் ஆங்கில மதிப்பாய்வு கட்டுரை ஒன்று, பிரத்தியேகமான நலன்களை தாங்கியுள்ளது. இது உளவுத்துறை அமைச்சகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் திரைக்கு மறைவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்து பொதுவாக மிக நன்றாக வெளிப்படுகிறது. ஆயுதக்குறைப்பு மாநாட்டிற்கான தயாரிப்பு என்ற போர்வையில் பிரிட்டிஷ் உளவுத்துறை, பசிபிக் முறைமைகள் அல்லாத முறைமைகளுடன், நம்மை அச்சுறுத்துகிறது.” இது நேரடியான யுத்த அச்சுறுத்தலைக் காட்டுகிறது. யார் அச்சுறுத்துகிறார்கள்? தனது வெளிநாட்டு சந்தைகளை இழந்துவரும் இங்கிலாந்து; வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் இங்கிலாந்து; எந்தவிடத்தில் உதிரி பாட்டாளிவர்க்கம் அதிகரித்து வருகிறதோ அந்த இங்கிலாந்தில்; ஒரேயொரு அனுகூலவாத இடதை, வின்ஸ்டன் சேர்ச்சிலைக் கொண்டிருக்கும் அந்த இங்கிலாந்து தற்போதைய சூழ்நிலையில் யுத்தத்தைக் கொண்டு நம்மை மிரட்டுகிறது. ஏன்? என்ன காரணத்திற்காக? அமெரிக்காவால் அதன் அவமதிப்புகள் தொடர்புபட்டிருப்பதால் வேறு எவரிடமிருந்தும் எடுக்க வேண்டும் என்பதற்காகவா? நம்மைப் பொறுத்தவரையில், நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கங்கள் பிரசவவலியைக் கிளறிவிட விரும்பினால், வரலாறு அவற்றை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவதற்கு முன்னால் அவர்களுக்காக அவற்றை கீழிறக்க விரும்பினால், அது துல்லியமாக இப்போது செய்ய வேண்டும், அவற்றை யுத்தத்தின் கூர்மையான பக்கம் தள்ளுகிறது. அங்கே கணக்கிடமுடியாத துயரங்கள் இருக்கும். ஆனால் அந்த முட்டாள் குற்றம்மிக்க மனிதர்கள் ஐரோப்பாவிடம் ஒரு புதிய யுத்தத்தை இழந்துவிடத் தான் வேண்டுமா, அதில் வெற்றி பெறுபவர்கள் பால்டுவினாகவோ அல்லது சேர்ச்சிலாகவோ அல்லது அவர்களின் அமெரிக்க தலைவர்களாகவோ இருக்க மாட்டார்கள், மாறாக ஐரோப்பாவின் புரட்சிகர பாட்டாளிகளாக இருப்பார்கள். முதலாளித்துவம் தனது வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா? முடிவாக, என் அறிக்கையின் உள்ளார்ந்த சாரத்திலிருந்த பொங்கி வருவதாக, எனக்குத் தோன்றும், ஒரு கேள்வியை முன்னிறுத்துகிறேன். அந்த கேள்வி இதுதான்: முதலாளித்துவம் வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா? அல்லது வேறுவிதமாக கூறுவதானால்: உலகளவில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்யவும், மனிதயினத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லவும் முதலாளித்துவத்திற்கு இன்னும் தகுதி இருக்கிறதா? இது ஓர் அடிப்படையான கேள்வி. இது ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்திற்கும், கீழைநாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும், மற்றும் முதலாவதும் முக்கியமானதுமாக, சோவியத் ஒன்றிய மக்களுக்கும் அதி முக்கியமானதாகும். ஒரு முற்போக்கான வரலாற்று நோக்கத்தை நிறைவேற்றும், மக்களின் செல்வவளத்தை அதிகரிக்கும், அவர்களின் உழைப்பு சக்தியை இன்னும் ஆக்கப்பூர்வமாக ஆக்கும் தகுதி முதலாளித்துவத்திற்கு இன்னும் இருக்கிறது என்று காட்டப்பட்டால், நாங்கள், அதாவது சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் முடிவினைப்பற்றி (De profundis) காலத்திற்கு முன்னரே பாடிவிட்டது என்பதையே அது குறிக்கும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோசலிசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் நாங்கள் மிக முன்னதாகவே அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம் என்பதையே அது குறிக்கும். ஏனென்றால், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, எந்த சமூக அமைப்பும் உள்ளார்ந்திருக்கும் அதன் எல்லா சாத்தியத்திறன்களையும் வெளிப்படுத்தாமல் அகலாது. தற்போது நம்முன்னால் புதிய பொருளாதார சூழ்நிலை கட்டவிழ்ந்து வருவதை எதிர்கொண்ட நிலையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ மனிதயினத்தின்மீதும் அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சக்திகளின் பிணைப்பில் இருக்கும் தீவிர மாற்றங்களுடன், நாம் இந்த ஒரு புதிய கேள்வியை முன்னால் நிறுத்த வேண்டும். அதாவது: முதலாளித்துவம் வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா? அல்லது முற்போக்கு பணியின் ஒரு முன்னோக்கை அது இன்னும் அதன் முன்னால் கொண்டிருக்கிறதா? ஐரோப்பாவை பொறுத்தவரையில், நான் காட்ட முயன்றிருப்பதைப் போல இந்த கேள்வி நிச்சயமாக எதிர்மறையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட ஐரோப்பாவின் நிலைமை யுத்தத்திற்குப் பின்னர், இன்னும் மோசமடைந்தது. ஆனால் அந்த யுத்தம் தன்னிச்சையாக நடந்த ஒரு விபத்தல்ல. அது, தேசிய அரசுகள் உட்பட, முதலாளித்துவ வடிவங்களுக்கு எதிராக உற்பத்தி சக்திகளின் குருட்டுத்தனமான கிளர்ச்சியாக இருந்தது. முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளை, தேசிய அரசின் கட்டமைப்பு உட்பட, முதலாளித்துவ சமூக வடிவங்களின் கட்டமைப்பிற்குள் இனியும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இதன்விளைவு தான் யுத்தம். எது ஐரோப்பாவை யுத்தத்திற்கு இழுத்து வந்தது? நிலைமை முன்னர் இருந்ததைவிட பத்து மடங்கு மோசமாக உள்ளது: அதே முதலாளித்துவ சமூக வடிவங்கள் தாம், ஆனால் மிகவும் பிற்போக்குத்தனமாக; அதே வரிச்சுவர்கள் தாம், ஆனால் இன்னும் கடினமாக; அதே எல்லைக்கோடுகள் தாம், ஆனால் இன்னும் குறுகலாக; அதே இராணுவங்கள் தாம், ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக; அதிகரிக்கப்பட்ட கடன்சுமை; இன்னும் அதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட சந்தை. ஐரோப்பாவில் பொதுவான நிலைமை இப்படித்தான் உள்ளது. இன்று இங்கிலாந்து சிறிது மேலெழும்பினாலும், அதற்கு ஜேர்மனி விலைகொடுக்க வேண்டியதிருக்கும்; அதுவே நாளைக்கு இங்கிலாந்தை அதிகளவில் விலையாக கொடுத்தால், ஜேர்மனியின் பக்கம் திரும்பும். ஒரு நாட்டின் வர்த்தக சமநிலையில் நீங்கள் உபரியைக் கண்டால், நீங்கள் மற்றொரு நாட்டில் வர்த்தக சமநிலையில் அதேயளவிற்கு பற்றாக்குறையைப் பார்த்தே ஆக வேண்டும். உலக அபிவிருத்தியானது --- முக்கியமான அமெரிக்க அபிவிருத்தியானது, ஐரோப்பாவை இந்த முட்டுச்சந்திற்கு ஓட்டி வந்துள்ளது. அமெரிக்கா இன்று முதலாளித்துவ உலகின் ஆதார சக்தியாக உள்ளது. மேலும் அந்த சக்தியின் குணாம்சம் தானாகவே முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிற்குள் ஐரோப்பாவின் பிரித்தெடுக்கமுடியா நிலையை முன்நிபந்தனை ஆக்குகிறது. ஐரோப்பிய முதலாளித்துவம் முற்றிலுமாக ஒருவிதத்தில் பிற்போக்குத்தனமாக மாறியுள்ளது. அதாவது, நாடுகளை முன்னோக்கி இட்டுச்செல்ல அதனால் முடியவில்லை என்பதில் மட்டுமல்லாமல், முன்னர் பெறப்பட்ட அவற்றின் வாழ்க்கை தரங்களை தக்கவைக்கவும் கூட அவற்றால் முடியவில்லை. முக்கியமாக இது தற்போதைய புரட்சிகர சகாப்தத்தின் பொருளாதார அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த அடித்தளத்தில் அரசியல் ஏற்றயிறக்கங்கள், எந்தவிதத்திலும் அதை மாற்றாமல் கட்டவிழ்கின்றன. ஆனால் அமெரிக்காவின் நிலை என்ன? இதுவரை அமெரிக்காவை பொறுத்தவரையில், பிம்பம் முற்றிலும் வேறுவிதமாக தெரிகிறது. அடுத்து ஆசியா? ஆசியாவையும் இந்த கணக்கிலிருந்து விட்டுவிட முடியாது. ஆசியாவும், ஆபிரிக்காவும் பூமியின் மேற்பரப்பில் 55 சதவீதமும், உலக மக்கள்தொகையில் 60 சதவீதமும் கொண்டுள்ளன. நிச்சயமாக அவற்றிற்கு ஒரு பிரத்தியேக, விரிவான ஆய்வு தேவை; ஆனால் அது இந்த தற்போதைய அறிக்கையின் எல்லைக்கு வெளியில் உள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான போராட்டமென்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஆசியாவின் ஒரு போராட்டம் என்பது இதுவரை சொல்லப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் தெளிவாக உள்ளது. அப்படியானால் விஷயங்கள் எவ்வாறு நிற்கின்றன? அமெரிக்காவில் ஒரு முற்போக்கான திட்டத்தைப் பூர்த்தி செய்வதில் முதலாளித்துவத்திற்கு இன்னும் தகுதி உள்ளதா? அது ஆசியா மற்றும் ஆபிரிக்காவிற்கும் இத்தகையதொரு திட்டத்தைக் கொண்டுள்ளதா? ஆசியாவில், முதலாளித்துவ அபிவிருத்தி அதன் முக்கிய முதல்படிகளை மட்டும் தான் எடுத்துள்ளது; அதேவேளையில் ஆபிரிக்காவில் இந்த புதிய உறவுகள் விளிம்புகளில் இருந்து மட்டும்தான், அந்த கண்டத்தின் பாகத்தில் ஊடுருவுகின்றன. அப்படியானால் இங்கே என்ன முன்னோக்குகள் உள்ளன? பின்வருபவைகள் தான் முடிவுகளாக தெரிகின்றன: முதலாளித்துவம் ஐரோப்பாவில் வாழவில்லை என்றாகியுள்ளது; அமெரிக்காவில் அது உற்பத்தி சக்திகளை இன்னும் முன்னோக்கி நகர்த்தி வருகிறது; அதேநேரத்தில், ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் நூற்றாண்டுகள் இல்லையென்றாலும், பல தசாப்தங்களுக்காகவாவது கன்னித்தன்மை கலையாமல் ஒரு பெரும் செயல்களத்தை அது அதன் முன்னால் கொண்டிருக்கிறது. உண்மையில் அதுதான் நிலைமையா? இதுவரை அது எங்கேயிருந்ததோ, தோழர்களே, முதலாளித்துவத்தின் வேலைத்திட்டம் உலகளவில் இன்னும் சோர்ந்து போய்விடவில்லை என்பதையே இது குறிக்கிறது. ஆனால் நாம் உலக பொருளாதார நிலைமைகளின்கீழ் வாழ்கிறோம். ஆகவே இதுதான் எல்லா கண்டங்களிலும் - முதலாளித்துவத்தின் தலைவிதியை தீர்மானிக்கிறது. முதலாளித்துவம் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அதிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக, ஆசியாவில் ஒரு தனிப்பட்ட அபிவிருத்தியைக் கொண்டிருக்க முடியாது. பிராந்திய அளவிலான பொருளாதார செயல்முறைகளின் காலகட்டம் எல்லாம் மலையேறிவிட்டது. அமெரிக்க முதலாளித்துவம் ஐரோப்பிய முதலாளித்துவத்தை காட்டிலும் மிகவும் வலுவாகவும், ஸ்திரமாகவும் உள்ளது; அது இன்னும் அதிகமான உத்திரவாதத்தோடு எதிர்காலத்தைக் காண முடியும். ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் நீண்டகாலத்திற்கு தன்னிறைவு (self-sufficing) காண முடியாது. அது உள்நாட்டிற்குள்ளேயே சமநிலையில் நிறுத்திக்கொள்ள முடியாது. அதற்கு ஓர் உலக சமநிலைமை தேவை. ஐரோப்பா மேலும் மேலும் அமெரிக்காவைச் சார்ந்து வருகிறது என்பதையே இது குறிக்கிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவில் ஏழு பில்லியன் குவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு என்ன செய்வது? வெறுமனே அவற்றை, ஒரு முடங்கிய மூலதனமாக (dead capital), கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டால், அது அந்நாட்டில் இலாப அளவுகளைக் கீழே இழுத்து வந்துவிடும். எல்லா மூலதனமும் வட்டியைக் கோருகின்றன. இருக்கும் நிதியை எதில் செலுத்துவது? நாட்டிற்குள்ளேயேவா? ஆனால் அங்கே அதற்கு தேவையில்லையே, அவை மிதமிஞ்சியுள்ளன, உள்நாட்டு சந்தை பெரிதும் மந்தப்பட்டுள்ளது. அதற்கு வடிகாலாக ஒரு வெளிநாடு கண்டறியப்பட வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு கடனளிக்க, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய தொடங்குகிறது. ஆனால் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பவரும் வட்டியை என்ன செய்வது? அதை வெளிநாட்டிற்குச் செலுத்தியாக வேண்டும். அது தங்கமாகவோ அல்லது இதர ஐரோப்பிய பொருட்களாகவோ இறக்குமதி செய்தாகப்பட வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் அமெரிக்க தொழில்துறைக்கு குழிபறிக்கத் தொடங்கும். ஏற்கனவே அதன் பெரும் உற்பத்திக்கு வெளிநாட்டு வடிகால்கள் தேவைப்படுகின்றன. முரண்பாடு என்னவென்றால்: ஒன்று, ஏற்கனவே உபரியாய் இருக்கும் தங்கத்தை அவர்கள் இறக்குமதி செய்தாக வேண்டும் அல்லது ஒட்டுமொத்த தேசிய தொழில்துறையையும் சேதமாக்கும் வகையில் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும். தங்கத்தின் "பணவீக்கமும்" (தயவுசெய்து இவ்வாறு அழைக்க என்னை அனுமதியுங்கள்) அதன் வகையில் செலாவணி பணவீக்கத்தைப் போன்றே அதேயளவிற்கு ஆபத்தானதாகும். ஒருவர் இரத்தசோகையினால் (anemia) மட்டுமல்ல இரத்தபுஷ்டியினாலும் (plethora) கூட சாகலாம். பெருமளவிற்கு ஓரிடத்தில் தங்கம் இருக்கிறதென்றால், அதிலிருந்து புதிய வருவாய்கள் எதையும் பெற முடியாது. மூலதனத்தின் வட்டி குறைந்துவிடும். அவ்வகையில் மேற்படி உற்பத்தி விரிவாக்கம் சாத்தியப்படாது என்பதோடு, அது நியாயமாகவும் கூட இருக்காது. கருவூலங்களுக்குள் ஒருநாட்டின் தங்கத்தை வைப்பதற்காக உற்பத்தி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதென்பது ஒருநாட்டின் சரக்குகளைக் கடலுக்குள் வீசியெறிவதற்குச் சமமாகும். இதன் விளைவாக, காலப்போக்கில், அமெரிக்காவின் விரிவாக்குவதற்கான தேவை இன்னும் பெரியளவில் வளர்கிறது இதனால் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்காவில் அதன் உபரி வளங்களை அது முதலீடு செய்தே ஆக வேண்டும். இது எந்தளவிற்கு அதிகமாக நடக்கிறதோ, அந்தளவிற்கு ஐரோப்பாவும், ஏனைய பகுதிகளின் பொருளாதாரமும் அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்திருக்கும். இராணுவக் கலையில் ஒரு வாசகம் கூறப்படுவதுண்டு: அதாவது, வெட்டுவதற்காக யார் எதிரியின் பின்னால் செல்கிறோரோ அவரே பெரும்பாலும் வெட்டுப்படுவார் என்று. பொருளாதாரத்திலும் சிலநேரங்களில் இதேபோன்ற ஒப்புமை நேர்வதுண்டு: அமெரிக்கா எந்தளவிற்கு ஒட்டுமொத்த உலகமும் அதனைச் சார்ந்திருக்கும்படி செய்கிறதோ, அதேயளவிற்கு அது அதன் எல்லா முரண்பாடுகள் மற்றும் மேலெழும் எழுச்சிகளின் அச்சுறுத்தல்களுடன், ஒட்டுமொத்த உலகையும் சார்ந்திருக்கும். இன்று ஏற்கனவே, ஐரோப்பிய புரட்சி என்றால் வோல் ஸ்ட்ரீட் கொந்தளிக்கிறது; நாளையோ, ஐரோப்பிய பொருளாதாரத்தில் அமெரிக்க மூலதனத்தின் முதலீடுகள் அதிகரிக்கும் போது, அது மேலெழும் ஓர் ஆழமான எழுச்சியாகவே இருக்கும். ஆசியாவில் தேசிய-புரட்சிகர போராட்டம் என்னவாக உள்ளது? இங்கேயும் அதே பரஸ்பர ஒட்டுறவு தான் நிலவுகிறது. ஆசியாவில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தியென்பது, தேசிய-புரட்சிகர போராட்டத்தின் வளர்ச்சியில் உள்ளடங்கியுள்ளது. அது வெளிநாட்டு முதலீட்டுடன், ஏகாதிபத்தியத்தை எடுத்துவருவோருடன் முன்னில்லாத அளவிற்கு வெறுப்பான மோதலுக்கு வருகிறது. ஏகாதிபத்திய காலனித்துவவாதிகளின் உதவியுடனும், அவர்களின் அழுத்தத்தின்கீழ் நடந்துவரும் சீன முதலாளித்துவ அபிவிருத்தி எவ்வாறு புரட்சிகர போராட்டத்திற்கும், மேலெழுச்சிகளுக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாம் கவனிக்கிறோம். இதற்கு முன்னர் அமெரிக்காவின் சக்தியையும், அதற்கேற்ப ஐரோப்பாவின் பலவீனத்தையும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய காலனித்துவ மக்களையும் குறித்து நான் பேசினேன். ஆனால் முக்கியமாக அமெரிக்காவின் இந்த சக்தியே அதன் மரண பலகீனமாக உள்ளது; இந்த சக்தியில் நாடுகள் மீதான அதன் அதிகரிக்கும் ஒட்டுறவு தங்கியுள்ளது என்பதுடன் அது பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, ஸ்திரமற்ற ஐரோப்பாவின் மீது, அதாவது நாளைய ஐரோப்பிய புரட்சிகளின் மீதும், ஆசியா மற்றும் ஆபிரிக்க தேசிய-புரட்சிகர போராட்டங்களின் மீதும் அதன் சக்தியை பிரயோகிக்க பலவந்தப்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவை ஒரு பிராந்தியமாக பார்ப்பது சாத்தியமேயில்லை. ஆனால் அமெரிக்காவும் கூட, நீண்டகாலத்திற்கு ஒட்டுமொத்தமாக தன்னிறைவு பெற்று இருக்க முடியாது. அதன் உள்-சமப்பாட்டை தக்க வைத்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு ஒரு பெரிய, மிகப்பெரிய அன்னிய வடிகால் தேவை; ஆனால் அதன் அன்னிய வடிகால் அதன் பொருளாதார அமைப்புமுறைக்குள் இன்னும் அதிகமாக ஐரோப்பிய மற்றும் ஆசிய பேரழிவைத் தான் தோற்றுவிக்கிறது. இந்த நிலைமைகளின்கீழ் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நடக்கும் ஒரு வெற்றிகரமான புரட்சி தவிர்க்கமுடியாமல் அமெரிக்காவிலும் ஒரு புரட்சிகர சகாப்தத்தை தொடங்கிவைக்கும். அமெரிக்காவில் ஒரேயொரு புரட்சி தொடங்கிவிட்டால், அது அமெரிக்காவின் ஓர் உண்மையான வேகத்தோடு அபிவிருத்தி அடையும் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதே இல்லை. அதுதான், ஒட்டுமொத்தமாக உலக நிலைமையின் ஒரு மதீப்பீட்டிலிருந்து தொடர்கிறது. மேலே கூறப்பட்டவைகளிலிருந்து, புரட்சிகர அபிவிருத்தியின் வரிசையில் அமெரிக்கா இரண்டாவதாக நிற்கிறது என்பதும் தொடர்கிறது. வரிசையின் முதலில் ஐரோப்பாவும், கீழைநாடுகளும் உள்ளன. சோசலிசத்திற்கான ஐரோப்பாவின் மாற்றம் முக்கியமாக, அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் அதன் சக்திவாய்ந்த எதிர்ப்புகளுக்கு எதிரான ஒரு வாய்ப்புவளமாக கருதப்பட வேண்டும். நிச்சயமாக மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவின் உற்பத்திக் கருவிகளை சமூகமயமாக்கத் தொடங்குவதும், பின்னர் அதையே உலகின் மீத இடங்களுக்கு விரிவாக்குவது மிகவும் அனுகூலமானதாக இருக்கும். ஆனால் புரட்சிகள் ஏற்படக்கூடிய அமைப்புமுறையை சரிசெய்வதென்பது ஒருதலைபட்சமாக சாத்தியமில்லை என்பதை நம்முடைய சொந்த அனுபவங்களே நமக்கு காட்டியுள்ளது. பொருளாதாரரீதியில் பலவீனமாகவும், பின்தங்கிய நாடாகவும் உள்ள நாம் தான், பாட்டாளி வர்க்க புரட்சியைச் செய்ய முதலில் நிர்பந்திக்கப்பட்டு இருந்தோம். இந்தமுறை இது ஐரோப்பிய நாடுகளினுடையது. முதலாளித்துவ ஐரோப்பா மீண்டும் வளர்வதை அமெரிக்கா அனுமதிக்காது. அதில்தான் அமெரிக்க முதலாளித்துவ சக்தியின் புரட்சிகர அர்த்தம் உள்ளது. ஐரோப்பா எந்தமாதிரியான அரசியல் ஏற்றத்தாழ்வுகளில் புரண்டெழுந்தாலும், அதன் பொருளாதார முட்டுச்சந்து அடிப்படை காரணியைச் சுற்றித்தான் இருக்கும். ஆகவே இந்த காரணி, ஓர் ஆண்டு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர பாதையினுள் தள்ளிவிடும். அமெரிக்கா இல்லாமலும், அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒரு சோசலிச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், அதிகாரத்தைத் தக்கவைக்கவும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தால் முடியுமா? இந்த கேள்வி காலனித்துவ கேள்விகளோடு மிகநெருக்கமாக பிணைந்துள்ளது. ஐரோப்பாவின் முதலாளித்துவ பொருளாதாரமும், குறிப்பாக இங்கிலாந்தும், தொழிற்துறைக்கு தேவையான இன்றியமையாத மூலப்பொருட்களையும், அத்துடன் உணவுப்பொருட்களின் வினியோகத்தையும் அளிக்கும், காலனித்துவ உடைமைகளோடு நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது. இடது அதன்வகையில், அதாவது, புற உலகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும், ஒரு மிகக் குறைந்த காலகட்டத்திற்குள்ளாகவே பொருளாதார மற்றும் ஸ்தூல மரணங்களுக்கு இங்கிலாந்து மக்கள் நிந்திக்கப்படுவார்கள். ஐரோப்பாவின் அனைத்து தொழில்துறைகளும், பெருமளவிற்கு, அமெரிக்காவின் மற்றும் காலனித்துவ நாடுகளின் உறவுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்துகொண்ட பின்னர், ஒடுக்கப்பட்ட காலனித்துவ மக்கள் அவர்களின் காலனித்துவ விலங்குகளிலிருந்து உடைத்துக்கொள்ள உதவுவதே அதன் முதல் வியாபாரமாக ஏற்படுத்தும். இந்த நிலைமைகளின்கீழ் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, காப்பாற்றி வைக்க முடியுமா? ஜாரிய ரஷ்ய மக்களாகிய நம்மால், உள்நாட்டு யுத்தம் மற்றும் முற்றுகை காலங்களில் அவ்வாறு காப்பாற்றி வைக்க முடிந்தது. வறுமை, பஞ்சம், கொள்ளைநோய்களையும் நாம் சகித்துகொண்டோம்-ஆனால் நாம் காப்பாற்றி வைத்திருந்தோம். நம்முடைய பின்தங்கியநிலைமையே தற்காலிகமாக நமக்கு ஆதாயமளித்தது. புரட்சி முக்கியமாக அதன் முதுகில், அதாவது பிரமாண்டமான விவசாயிகளின் முதுகில் நிறுத்தப்பட்டிருந்தது. கொள்ளைநோய்களால் ஏற்பட்ட பட்டினியிலும், அழிவுகளிலும் நிறுத்தப்பட்டிருந்தது. தொழில்மயமான ஐரோப்பா, குறிப்பாக இங்கிலாந்து-ஏதோவகையில் மீண்டும் இம்மாதிரியாக உள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அடித்தளத்திலும் கூட, அது துண்டுதுண்டாக இருக்கும்வரையில் பொருளாதாரரீதியில் நிறுத்திவைக்க அதன் பிரிவினை சாத்தியமா என்ற பேச்சும் கூட அங்கே இருக்கமுடியாது. பாட்டாளி வர்க்க புரட்சி ஐரோப்பாவின் ஐக்கியத்தை கோருகிறது. முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களுக்கும், யுத்த எதிர்ப்பாளர்களுக்கும், வியாபார தந்திரிகளுக்கும், பகல் கனவு காண்பவர்களுக்கும், முதலாளித்துவத்தின் வெறும் வாயாடிகளுக்கும், ஓர் ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் குறித்து பேச இன்றைய நாட்களில் இஷ்டமில்லாமல் இருக்கிறது. ஆனால் வேலையோ முரண்பாடுகளால் முற்றிலுமாக துருப்பிடித்துப் போயுள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பலத்திற்கும் அப்பாற்பட்டுள்ளது. வெற்றிபெற்ற ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டும்தான் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியும். புரட்சி முதலில் எங்கே வெடிக்கும் என்பதோ, அதன் அபிவிருத்தி வேகம் எவ்வாறு இருக்கும் என்பதோ விஷயமல்ல, ஐரோப்பிய பொருளாதார ஐக்கியம்தான் அதன் சோசலிச மறுகட்டமைப்பிற்கான முதல் இன்றியமையாத நிலைமையாக உள்ளது. சோசலிச ஐக்கிய ஐரோப்பிய அரசுகளை ஸ்தாபிப்பதற்காக ஐரோப்பாவைப் பிரித்துள்ளவர்களை விரட்டுவதும், பிரிந்துகிடக்கும் ஐரோப்பாவை ஒருங்கிணைக்க அதன் அதிகாரத்தைப் பிடிப்பதும், அவசியமாகும் என்று 1923லேயே கம்யூனிச அகிலம் வலியுறுத்தியது. புரட்சிகர ஐரோப்பா அதற்கு தேவையான மூலப்பொருட்களையும், உணவுப்பொருட்களையும் தானாகவே அதற்கான பாதையை ஏற்படுத்திக் கொள்ளும்; விவசாயிகளிடமிருந்து எவ்வாறு உதவி பெறுவது என்று அதற்கு தெரியும். பல சிக்கலான காலங்களில் புரட்சிகர ஐரோப்பாவிற்கு சில உதவி வழங்க நாமே நம்மளவிற்கு போதிய பலத்தைப் பெற்றிருக்கிறோம். இதுவும் இதற்கு மேலாகவும் கூட ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் ஓர் அருமையான பாலமாக நம்மால் இருக்க முடியும். இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம், இந்திய மக்களின் தோளோடுதோள் சேர்ந்து அந்நாட்டின் விடுதலைக்கு உத்தரவாதமளிப்பார்கள். ஆனால் இதனால் இந்தியாவுடன் ஒரு நெருக்கமான உறவின் சாத்தியக்கூறை இங்கிலாந்து இழந்துவிடும் என்று அர்த்தமல்ல. சுதந்திர இந்தியாவிற்கு ஐரோப்பிய தொழில்நுட்பமும், கலாச்சாரமும் தேவைப்படும்; ஐரோப்பாவிற்கு இந்தியாவின் பொருட்கள் தேவைப்படும். ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்துடன் மிக நெருக்கமாக பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை ஸ்தாபிப்பதை நோக்கி ஆசிய மக்கள் ஈர்க்கப்படுவதற்கு சோவியத் ஒன்றியத்துடன் சேர்ந்து ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் சக்திவாய்ந்த காந்தங்களாக இருந்து உதவும். இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம் இந்தியாவை ஒரு காலனித்துவ நாடாக விட்டுவிடுமேயானால், பின் அது ஐரோப்பிய-ஆசிய கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அதன் கூட்டாளியைப் பெறும். ஐரோப்பா மற்றும் ஆசிய மக்களின் சக்திவாய்ந்த அணி அசைக்கமுடியாததாக இருக்கும் என்பதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க சக்தியால் பாதிப்படையாமலும் இருக்கும். இந்த சக்தியை நாம் கணநேரம் கூட குறைத்துவிட முடியாது. நம்முடைய புரட்சிகர முன்னோக்குகளில், அவர்கள் கொண்டிருப்பதைப் போலவே உண்மைகளின் ஒரு தெளிவான புரிதலுடன் நாம் முன்னேறுவோம். அதற்கும் மேலாக - இயங்கியலின்படி - அமெரிக்காவின் சக்தியே இப்போது ஐரோப்பிய புரட்சியின் சக்திவாய்ந்த நெம்புகோலாக இருப்பதை நாம் காண்கிறோம். அந்தசக்தி தகர்ந்து போகும்போது, ஐரோப்பிய புரட்சிக்கு எதிராகவே அந்த நெம்புகோல், அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் திரும்பும் என்ற உண்மையையும் நாம் கவனியாமல் இருக்கமுடியாது. அதன் சொந்த மேல்மடிப்பு பணயத்தில் இருக்கும்போது, அமெரிக்க முதலாளித்துவம் போராட்டத்திற்குள் மூர்க்கத்தனமான ஆற்றலைக் கட்டவிழ்த்துவிடும். தங்களின் செல்வாக்கிற்காக சலுகைபடைத்த வர்க்கங்கள் நடத்தும் போராட்டமானது, அமெரிக்க முதலாளித்துவம் புரட்சிகர ஐரோப்பாவின்மீது சுமத்த முயலும் வன்முறைக்கு முன்பே வெளிறிப்போகும் என்பதை எல்லா நூல்களும், மற்றும் நம்முடைய சொந்த அனுபவமும் நமக்கு கற்றுக்கொடுக்கும் சாத்தியக்கூறு பெரிதும் உள்ளது. ஆனால் ஆசிய மக்களின் புரட்சிகர கூட்டணியுடன் இருக்கும் ஐக்கிய ஐரோப்பா, அமெரிக்காவையும்விட எல்லையில்லா சக்தியுடன் இருப்பதை நிரூபிக்கும். சோவியத் ஒன்றியத்தின் மூலமாக, ஐரோப்பிய-ஆசிய உழைப்பாளர்கள் கலைக்கமுடியாதபடிக்கு இணைக்கப்பட்டிருப்பார்கள். போர்குணமிக்க கீழைநாட்டு கூட்டணியில், ஐரோப்பிய புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உலக பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்க முதலாளித்துவத்திடமிருந்து பறித்து, ஒட்டுமொத்த உலகிலும் சோசலிச மக்கள் கூட்டமைப்பிற்கான அஸ்திவாரத்தை அமைக்கும். |