சோசலிச
சமத்துவக் கட்சியின் தீர்மானங்கள் (அமெரிக்கா)

2வது தேசிய காங்கிரஸ்

WSWS : Tamil : நூலகம்

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்

 
2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து

தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

 

 

 
The New Course 1923
 

Resolutions of the SEP (US) National Congress

The Organization of the Working Class and the Fight for Socialism

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்

தொழிலாள வர்க்கத்தின் அமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்

Use this version to print | Send feedback

ஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்  கொள்ளப்பட்ட மூன்றாவது தீர்மானம் இங்கே வெளியிடப்படுகிறது.

1. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகம் (Workers League) அது தொடங்கப்பட்ட 1966 ஆம் ஆண்டு  முதலாகவே, அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்க்கும் திறன்படைத்த ஒரே சக்தியாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின்  புரட்சிகரப் பாத்திரத்தை வலியுறுத்தியதன் மூலம், அத்தனை பிற அரசியல் போக்குகளில் இருந்தும் வித்தியாசப்பட்டு தனித்துவம்  பெற்றிருந்தது. அச்சமயத்தில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவரான ஜெரி ஹீலி  கூறியதென்னவென்றால், "நமது காலத்தின் அடிப்படையான கேள்விகளைத் தீர்க்கவிருப்பது கறுப்பினத்தவர் சக்தியோ அல்லது நாடு முழுவதும்  விரிந்து பரவியிருக்கும் பலபத்து அமைதிவாத இயக்கங்கள் மற்றும் மக்கள் உரிமை இயக்கங்களோ அல்ல, மாறாக ஒரு புரட்சிகரக்  கட்சியைத் தலைமையில் கொண்ட தொழிலாள வர்க்கமே."

2. தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டுவதற்கான போராட்டமென்பது, முதலாளித்துவ அமைப்புமுறையாலும் மற்றும் தொழிற்சங்கங்கள் பெருவணிகக் கட்சிகள் மற்றும் தாராளவாத மற்றும் போலி-இடது குழுக்களில் இருக்கும் அதன் சேவகர்களாலும் ஊக்குவிக்கப்படுகின்ற  அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் பிரமைகளின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராய் சோசலிச நனவிற்காய் மிகத் தீர்மானத்துடன்  போராடுவது குறித்ததாகும். சோசலிச நனவு வர்க்கப் போராட்டத்தில் இருந்து தன்னிச்சையாக எழுவதல்ல, மாறாக சோசலிச சமத்துவக் கட்சி காரியாளர்களால்  தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டியதாகும். லெனின் விளக்கியதைப் போல, "புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் எந்த  புரட்சிகர இயக்கமும் இருக்க முடியாது."

3. தொழிலாள வர்க்கம் தனது சுயாதீனமான வர்க்க நலன்களுக்காகவும் மற்றும் தனது அடிப்படையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காவும் நடத்துகின்ற போராட்டங்களில் இருந்து தான் சோசலிசத்துக்கான அரசியல் அடிப்படையை உருவாக்கியளிக்கும் புரட்சி பிறக்கிறது. இப்போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்பே சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் அதன் மிக முன்னேறிய கூறுகளிடையும் ஒரு அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்வதற்காய் உழைக்க வேண்டும்இந்தப் போராட்டங்களை ஒன்றுபடுத்தி அவற்றை முதலாளித்துவ  அமைப்புமுறைக்கு எதிரான ஒரு அரசியல் தாக்குதலில் செலுத்துவதற்குப் போராடும் ஒரு அரசியல் முன்னணிப் படையை அது முறைப்படி  கட்டியெழுப்ப வேண்டும். ஒரு புரட்சிகர அரசியல் தலைமை இருக்கவில்லை என்றால், தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கம் மற்றும்  அதன் பிரதிநிதிகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இலக்காகும் படி விடப்படுகிறது என்பதை எகிப்து, கிரீஸில் தொடங்கி அமெரிக்கா  வரையிலுமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புதிய அலையினது அனுபவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

4.  சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமாக நடப்புத் தொழிற்சங்கங்களின் அரசியல்ரீதியான  மற்றும் அமைப்புரீதியான கழுத்துப் பிடியை உடைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. அமைப்பு இல்லாமல் தொழிலாள வர்க்கம் போராட  முடியாது. என்றபோதிலும், AFL-CIO தொழிற்சங்கங்கள் மற்றும் வெற்றி மாற்றக் கூட்டணி (Change to Win Coalition) ஆகியவை தொழிலாள வர்க்க அமைப்புகள்  அல்ல, மாறாக அவை பெருநிறுவன நிர்வாகத்தின் துணை உறுப்புகள் ஆகும். இந்த அமைப்புகளை "சங்கம்" என்கிற வார்த்தையைக் கொண்டு  குறிப்பிடுவதும் கூட சமூக யதார்த்தத்தை மறைக்கும் செயலாய் இருக்கிறது. அவ்வமைப்புகள் இனியும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை பாதுகாப்பு  அமைப்புகளாய் செயல்படுவனவாக இல்லை. வேலையிழப்புகளில் இருந்தும், ஆலை மூடல்களில் இருந்தும், ஊதியங்கள் மற்றும் நல  உதவிகள் வெட்டுகளில் இருந்தும், வேலைவேக அதிகரிப்பில் இருந்தும், அல்லது நிர்வாகத்தின் வேறு எந்த கோரிக்கையில் இருந்தும் அவை  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. பொதுவான நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு  தொழிலாளர்களை அவர்கள் ஐக்கியப்படுத்தவில்லை. அதற்கு நேரெதிராக, அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களின் ஒவ்வொரு  போராட்டத்திற்கும் குழிபறிக்கின்றன, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமின்மையை பராமரிக்கின்றன. இவ்வமைப்புகள் எல்லாம் வெகு காலத்திற்கு  முன்பே கூட்டுழைப்புவாதத்திற்கு சாதகமாகவும், தொழிலாளர்-நிர்வாக கூட்டு என்பதற்குச் சாதகமாகவும் மற்றும் பொருளாதாரத்  தேசியவாதத்திற்கு சாதகமாகவும் வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை நிராகரித்துச் சென்று விட்டன. இதற்கான விலையைக் கொடுக்கும்  நிர்ப்பந்தத்தைப் பெறுகின்ற தொழிலாளர்களுக்கோ இந்த அமைப்புகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், இந்த அமைப்புகள்  நிர்வாகத்தின் கட்டளைகளைத் திணிக்க மிரட்டலையும், தேர்தல் மோசடியையும் மற்றும் வன்முறையையும் வழமையாகப்  பயன்படுத்துகின்றன.

5.  இந்த அமைப்புகள் ஜனநாயகக் கட்சிக்கான முக்கியமான முட்டுத் தூண்களாக சேவை செய்கின்றன. போராட்டங்கள் எழுகின்ற போதுஅந்தப் போராட்டங்கள் முதலாளித்துவ இரு-கட்சி ஆட்சியமைப்புமுறையில் இருந்து உடைத்துக் கொண்டு விடாமல் தடுப்பதற்கு இந்த  அமைப்புகள் நனவுடன் திட்டமிட்டு வேலை செய்கின்றன. சென்ற ஆண்டில் விஸ்கான்சினில் வரவு-செலவுத் திட்ட வெட்டுகளுக்கு எதிராக பெருந்திரளான ஆர்ப்பாட்டங்கள் வெடித்த சமயத்தில், அந்தப் போராட்டத்தை குடியரசுக் கட்சி ஆளுநரான ஸ்காட் வாக்கருக்கு எதிரானதும் மற்றும்  ஜனநாயகக் கட்சியில் இருந்து அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவருக்கு ஆதரவானதுமான ஒரு திருப்பியழைக்கும் பிரச்சாரத்திற்குப்  பின்னால் திசைமாற்றி விடுவதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் AFL-CIO தொழிற்சங்கங்கள் நெருக்கமாக வேலை செய்ததுதொழிலாள வர்க்கத்தின் மீது ஒபாமா நிர்வாகம் தொடுத்து வந்த தாக்குதல்களில் தொழிற்சங்கங்கள் நெருங்கி ஒத்துழைத்து  வந்திருக்கின்றன. புதிதாக வேலையில் அமர்த்தக் கூடியவர்களுக்கு வறுமை-நிலை ஊதியங்களை வழங்குவதன் அடிப்படையில் வாகன  உற்பத்தித் துறையை மறுசீரமைப்பதில் ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்கம் (UAW) வழங்கிய ஒத்துழைப்பும் இதில் அடங்கும். இந்த அமைப்புகள் எல்லாமே இப்போது முழுமையாக  ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுக்கும் பிரச்சாரத்தின் பின்னால் நிற்கின்றன.

6. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தலையீடு செய்திருக்கிறது என்றால் அது வெறுமனே பழைய அமைப்புகளின் காட்டிக்  கொடுப்புகளை அம்பலப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் மட்டுமல்ல, மாறாக இந்தப் போராட்டங்களை முன்நோக்கி வழிநடத்தக் கூடிய ஒரு  வேலைத்திட்டத்திற்காகவும் நடைமுறைக்காகவும் போராடும் பொருட்டும் தான் விஸ்கான்சினில், பரந்துபட்ட இயக்கத்தின் உச்ச கட்டத்தில் தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கான சரியான தன்மை  துயரமான வகையில் எதிர்மறையானவகையில் நிரூபணமானது. தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை எதிர்த்தனர்அதற்குப் பதிலாக ஒரு திட்டமிட்ட திசைதிருப்பலாக திருப்பியழைப்பு பிரசாரத்தை முன்னெடுத்தனர். இது தொழிலாள வர்க்கத்தை ஒற்றுமை  குலையச் செய்து, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஜனநாயகக் கட்சி அரசியலின் முட்டுச் சந்திற்குள்ளாக வழிநடத்தி, அத்துடன்  குடியரசுக் கட்சி ஆளுநரான வாக்கரின் வலது-சாரி நிர்வாகத்தை அரசியல்ரீதியாக வலுப்படுத்துகின்ற விளைவைக் கொண்டிருந்தது.

7.  தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான பல போராட்டங்களில், ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்கம் (UAW) போன்ற அதிகாரத்துவ கூடுகளில் இருந்து சுயாதீனப்பட்ட  வகையில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடியிருக்கிறது. இன்டியானாபோலிஸ் ஜெனரல் மோட்டர்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் ஒரு  ஊதிய-வெட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதற்காக UAW நிர்வாகிகளைக் கண்டனம்  செய்தபோது, அந்த கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சாமானியத் தொழிலாளர் குழுவை ஒழுங்கமைத்தது. ஓஹியோ மாநிலத்தின்  ஃபிண்ட்லேயில் இருக்கும் கூப்பர் டயர் தொழிற்சாலையில், கதவடைப்பின் மூலம் வெளியேற்றப்பட்டிருந்த தொழிலாளர்கள் ஐக்கிய உருக்கு  தொழிலாளர்கள் சங்கத்தினால் (United Steelworkers) திணிக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்படல் என்ற தளையை உடைத்துக் கொண்டு  வெளியில் வர வேண்டும், அவர்களது போராட்டங்களை Midwest பிரதேசம் முழுவதிலும் இருக்கும் தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்ல  வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. அடிப்படைத் தொழிற்துறைகளில் இருக்கும் ஆலைத் தொழிலாளர்கள் என்றாலும் சரி, ஆசிரியர்கள்  போன்ற அரசு வேலை ஊழியர்கள் என்றாலும் சரி, அல்லது தொழிற்சங்கங்களின் எந்த அனுபவமும் அற்ற தொழிலாளர்கள் என்றாலும் சரி அத்தொழிலாளர்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி கூறும் உண்மை இதுதான்பழைய அமைப்புகள் சீர்திருத்தப்படவோ புத்துயிரூட்டப்படவோ முடியாதுபுதிய அமைப்புகளைக் கட்டுவதன் மூலமாக வர்க்கப் போராட்டம் முன்சென்றாக வேண்டும்.

8. "தொழிற்சங்க" எந்திரத்தை இயக்குகின்ற நிர்வாகிகளின் அடுக்கு, தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதன் மூலமாக தனது  வருமானத்தையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்ததன் மூலம், வெகு காலத்திற்கு முன்பே  சங்கத்தின் பொருளியல் நலன்களை, அது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தொழிலாளர்களின் பொருளியல் நலன்களில்  இருந்து பிரித்து விட்டது. உதாரணமாக UAW இன் அங்கத்தினர் எண்ணிக்கை 80 சதவீத சரிவைக் கண்ட போதும் அதன் சொத்துகளின்  மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாய் உயர்ந்து சென்றிருக்கிறது. இன்று டெட்ராயிட் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளில்  பில்லியன் கணக்கான டாலர்களை UAW கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு அடிப்படையாக எதிரான ஒரு சலுகை படைத்த உயர்-நடுத்தர-வர்க்க அடுக்கின் சார்பாகவே இந்த அமைப்புகள் பேசுகின்றன.

9. எந்த அளவுக்கு அதிகமாக தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அமைப்புகளாக உருமாற்றம் பெற்றுள்ளதோ, அந்த  அளவுக்கு அதிகமாக சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organisation) போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது  குழுக்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்க அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தை சவால் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று  வலியுறுத்துகின்றன. சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற குழுக்கள் வலது-சாரி பரிணாம வளர்ச்சி பெற்றதில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. இக்குழுக்களின்  அங்கத்தவர்கள் தொழிற்சங்க அமைப்பின் உயர்-ஊதியப் பதவிகளுக்கு ஏற்றம் பெற்றதும், அப்பதவிகளில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தைக்  காட்டிக் கொடுப்பதிலும் அதனை ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் பெரு வணிகத்தின் கட்டளைகளுக்கும் தொடர்ச்சியாக அடிபணியச்  செய்வதற்கும் வேலை செய்திருந்தனர் என்பதுமே அந்த முக்கிய அம்சம். தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து உடைத்துச் செல்ல  அச்சுறுத்துகின்ற அளவுக்கு போராட்டங்கள் எழுகின்ற சமயத்தில் (சோசலிச சமத்துவக் கட்சி இன் முன்முயற்சியில் இன்டியானாபோலிஸ் சாமானியத்  தொழிலாளர் குழு நிறுவப்பட்டதைப் போல) முன்னாள்-தீவிரவாதிகள் எல்லாம் போர்க்குணமிக்க தொழிலாளர்களை  மிரட்டுவதற்கு கம்யூனிச தூற்றலை (red-baiting) பயன்படுத்தினர் என்பதோடு பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால்  பழிவாங்கப்படுவதற்கு அவர்களை அடையாளம் காட்டினர்.

10. AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றம் (Change to Win) ஆகியவை தான் உருப்படியான "தொழிலாள வர்க்க" அமைப்புகள் என்று கூறி, அதனடிப்படையில் அமைப்புரீதியாக தொழிலாள வர்க்கத்தின் மீது அந்த அமைப்புகள் கட்டுப்பாடு கொண்டிருப்பதன் மீது வலியுறுத்துகின்ற போலி-இடது குழுக்கள், வரலாற்றைப்  பொய்மைப்படுத்துகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பானது பொதுவாக, தங்களை பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான தமது தற்போதைய நிலைக்கு தகவமைத்துக் கொண்டிருக்கின்ற பழைய அமைப்புகளுக்கு எதிரான ஒரு கலகத்தின் வடிவத்தைத் தான் எடுத்திருக்கின்றது அமெரிக்காவில், 1930 இல் தொழிற்துறை தொழிற்சங்கங்களின் உருவாக்கம் என்பது, அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (American  Federation of Labor- AFL) என்ற கைவினைச் சங்கங்களின் அமைப்பிற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தின் மூலமாகத் தான்  சாத்தியமானது. அந்த நேரத்தில் AFLக்கு எதிராக புதிய அமைப்புகளின் உருவாக்கத்தை கட்சி அறிவுறுத்த வேண்டுமா என்பதில் மார்க்சிச  இயக்கத்திற்குள்ளாக ஒரு விவாதம் எழுந்தது. இறுதியில், AFLக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுறுத்தியவர்கள் கூறியதே சரி என 1930களின்  மத்திய காலத்து வெடிப்பு மிகுந்த வேலைநிறுத்த அலையும் அத்துடன் தொழிற்துறை அமைப்புகளின் காங்கிரஸின் (CIO) உருவாக்கமும் நிரூபணம் செய்தன. இருப்பினும் 1930களின் AFL அப்போதும் தொழிலாளர்களது அமைப்பாகவே அழைக்கப்பட்டது, அது தொழிற்துறை  தொழிலாளர்களுக்கு கடுமையான குரோதம் படைத்ததாக இருந்தபோதிலும் கூட.

11. AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றம் ஆகிய அமைப்புகளின் நடப்பு நிலையானது, பல பத்து ஆண்டுகளாய் தொழிற்சங்கங்களை ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்து வந்தமை, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நடந்த கம்யூனிச-விரோதக் களையெடுப்புகள், மற்றும்  முதலாளித்துவத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் தொழிற்சங்கங்கள் பாதுகாத்தமை ஆகியவற்றின் உச்சம் ஆகும். இந்த  அடிப்படையான தேசியவாத நோக்குநிலை தான், துல்லியமாய், பூகோளமயமாக்கத்தின் காலகட்டத்தில் அவர்களது உருக்குலைவுக்கு  இட்டுச்சென்றதாகும். நிதி மூலதனத்தின் வளர்ச்சி மற்றும் அதன் விரிவடைந்த நகர்திறனுடன் நாடுகடந்த பெருநிறுவனங்களின் உருவாக்கமும்  சேர்ந்து கொண்டு தொழிற்சங்கங்களின் தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை கீழறுத்தன. இதற்கான பதிலிறுப்பாக தொழிற்சங்க  அதிகாரத்துவமானது, அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களின் நலன்களைப் பலி கொடுத்தேனும் தன் சலுகைகளைப்  பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முன்னெப்போதையும் விட நேரடியாகவே பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக்  கொண்டது.

12. சமரசமற்ற புரட்சிகர உணர்வு மற்றும் பெருவணிகத்தின் இரு கட்சி முறைக்கான எதிர்ப்பு இவற்றால் உயிரூட்டப்படுகின்ற தொழிற்சாலைவேலையிட மற்றும் குடியிருப்புகளில் குழுக்களை கட்டுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்த அமைப்புகள்  தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு தொழிலாள வர்க்கத்தினால் ஜனநாயகரீதியாக  கட்டுப்படுத்தப்படுவனவாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்புள்ளவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்கள், திறம்பட்ட தொழிலாளர்கள்  மற்றும் பயிற்றுத்திறனற்ற தொழிலாளர்கள், அந்நாட்டிலேயே பிறந்த மற்றும் புலம்பெயர்ந்தவர்கள், அத்துடன் பல்வேறு  தொழிற்துறைகள் மற்றும் வேலையிடங்களைச் சேர்ந்தவர்கள் என தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அவர்களது பொதுவான  போராட்டங்களை முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஒழுங்கமைப்பதற்கும் முன்னெப்போதையும் விட அதிகமான அளவில்  பொறுப்புகளை அக்குழுக்கள் ஏற்க வேண்டும்.

13. உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் எல்லாம் பெருநிறுவனங்கள்-தொழிலாளர்கள் ஆலோசனைக் குழுக்களாக (syndicate) உருமாற்றப்பட்டிருப்பது இப்போது தங்களை இந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களாகக் காணும் தொழிலாளர்கள் இடையே கட்சியின் வேலையை இன்னும் கூடுதல் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது. தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது, பெருநிறுவன ஆதரவு ஆலோசனைக் குழுக்களால்  திணிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தலில் இருந்து உடைத்து விடுதலை பெறப் போராடுவது, மற்றும் ஒவ்வொரு குறிப்பான போராட்டத்தின் பொதுவான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை எடுத்துக்காட்டுவது ஆகியவற்றின் கோணத்தில் இருந்து, சோசலிச சமத்துவக் கட்சி நடப்பு அமைப்புமுறைக்குள்  எழுகின்றவை உள்ளிட்ட ஒவ்வொரு போராட்டத்திலும் தலையீடு செய்கிறது.

14. சோசலிச சமத்துவக் கட்சியின் இலக்கு புதிய வேலையிட அமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, சீரழிந்து வரும் சமூக நிலைமைகள் மற்றும் நிதிநிலை வெட்டுகளுக்கு எதிரான பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் குடியிருப்பு அமைப்புகளைக் கட்டுவதும் ஆகும். இதற்கு முக்கியமான  உதாரணமாக டெட்ரோயிட்டில் உருவாக்கப்பட்ட வீட்டுவிநியோங்கங்ளை மூடியதற்கு எதிரான குழுவின் (Committee Aganist Utility Shutoffs- CAUS) அனுபவத்தைக் கூறலாம். உள்ளூரின் எரிசக்தி ஏகபோக நிறுவனமான DTE எரிசக்தி விநியோகங்களை மூடியதை அடுத்து டெட்ரோயிட்டில் பல வீடுகளில் தீப்பற்றல்  சம்பவங்கள் தொடர்ச்சியாய் நடந்தன. இதனையடுத்து சோசலிச சமத்துவக் கட்சியின் முன்முயற்சியால் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. CAUS எரிசக்தி விநியோக மூடல்களுக்கு எதிராக டெட்ரோயிட் மக்களைத் திரட்டியது; DTE தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்தது; நகரின் West Side பகுதியில்  ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஒழுங்கமைத்தது. அத்துடன் நகராட்சி மன்றங்களிலும் மற்ற கூட்டங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் சார்பாகத்  தலையீடு செய்தது.

15. இரண்டு அடுக்கு ஊதியமளிக்கும் அமைப்புமுறையை ஒழிப்பது, ஒரு வேலைக்கான உரிமை, ஒரு வாழத்தக்க வருவாய்க்கும் ஒரு  பாதுகாப்பான வேலைஓய்வு காலத்திற்கும் மற்றும் கண்ணியமான ஆரோக்கியப் பராமரிப்பிற்குமான உரிமை ஆகியவை உள்ளிட்ட  திட்டவட்டமான கோரிக்கைகளைச் சுற்றி இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். இளம் தொழிலாளர்களை  முதியவர்களுக்கு எதிராக நிறுத்துவது, வெள்ளை நிறத்தவர்களுக்கு எதிராய் கறுப்பினத்தவரை நிறுத்துவது, புறநகர்ப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராய் மாநகரவாழ் தொழிலாளர்களை நிறுத்துவது, அமெரிக்க மக்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நிறுத்துவது ஆகியவற்றுக்கான அத்தனை முயற்சிகளையும் அவ்வமைப்புகள் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் இருந்தும்  இரு-கட்சி அமைப்புமுறையில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக விடுதலை பெறுவதற்கு அவ்வமைப்புகள் வலியுறுத்த வேண்டும் என்பதோடு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறுவனங்களின் இலாப நலன்களின் கோரிக்கைகளுக்காய் கீழ்ப்படியச் செய்வதற்கு மறுக்க  வேண்டும்.

16. ஒவ்வொரு போராட்டத்திலும் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் அச்சாக இயங்குவது அதன் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் ஆகும் போராட்டத்தின் புதிய அமைப்புகளுக்கான போராட்டம் என்பது, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டுவது என்ற  அடிப்படை மூலோபாயப் பணியின் ஒரு பகுதியே அன்றி ஒருபோதும் அதற்கான பிரதியீடு அல்ல. உண்மையில், ஒரு சோசலிச நனவை  அபிவிருத்தி செய்யத் தொடங்கியிருக்கின்ற அத்துடன் தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினது பாத்திரம் மீதான அரசியல்  புரிதலுக்கு வந்து சேர்ந்திருக்கின்ற தொழிலாளர்களால் வழிநடத்தப்படுகின்ற மட்டத்திற்கும் வழிகாட்டப்படுகின்ற மட்டத்திற்கும் தான் இந்த சுயாதீனக் குழுக்கள் நிலைத்து நிற்க முடியும்.

17. சோசலிச சமத்துவக் கட்சியின் ஒவ்வொரு கிளையும், உற்பத்தித் துறை, சேவைத் துறைகள், மருத்துவ சுகாதாரத் துறை, கல்வித் துறை, அரசாங்கத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட, தொழிலாள வர்க்கத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒரு தலைமையைக் கட்டுவதற்காகப் போராட  வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை வெளியில் கொண்டுவந்து காட்டுவதற்கான திட்டமிட்ட பிரச்சாரம்  மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளின் குறிப்பான நலன்களானது ஒட்டுமொத்தமாக தொழிலாள  வர்க்கத்தின் பொதுவான நலன்களுடன் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட அரசியல் போராட்டத்தின் மூலமாக  இணைக்கப்பட வேண்டும்.