சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The SYRIZA model

சிரிசா மாதிரி

By Cristoph Dreier
7 December 2012

use this version to print | Send feedback

ஆளும் வர்க்கம் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து இன்னும் அதற்கு அப்பாலும் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீதான தாக்குதலை நடத்துகையில், ஐரோப்பிய சனத்தொகையின் பாரிய ஏழ்மைப்படுத்தல் அனைத்து சமூகப் போக்குகளின் வர்க்கத் தன்மையையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றது.

தொழிலாள வர்க்கம் அனைத்துவகை அரசாங்கங்களாலும் வரலாற்றுத் தன்மை வாய்ந்த தாக்குதலுக்கு தான் உட்பட்டிருப்பதைக் காண்கிறது. கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும், மக்களில் காற்பகுதிக்கு மேற்பட்டவர்களும், இளைஞர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்களும் வேலையின்மையில் உள்ளனர். பிராந்தியம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை மட்டும் இழக்கவில்லை, தங்கள் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வீடுகளையும் இழக்கின்றனர். சமூக எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் ஐரோப்பா முழுவதும் பெருகியுள்ளன. பல தசாப்தங்களாகக் காணப்படாத மிருகத்தனமான சமூகத்தீமைகளை காட்டுமிராண்டித்தனமான கொள்கைகள் தோற்றுவிக்கின்றது. இவற்றில் இத்தாலியில் சிறார் உழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை நிறுத்தப்படுவது ஆகியவையும் அடங்கும்.

ஜேர்மனிய நகரான கோலோனில், இடது கட்சியின் சமீபத்திய மாணவர் சங்க (SDS) மாநாடு தெளிவாக்கியுள்ளதுபோல, அரசியல் ஆளும் தட்டின் "இடது" எனப்படுபவை தொழிலாளர்களுடன் ஒரு மோதல் போக்கில்தான் உள்ளதுடன், சிரியாவில் மறைமுக போருக்கும் ஆதரவு கொடுக்கிறது, கிரேக்கத்தின் இடது மாற்றீட்டின் கூட்டான சிரிசா (SYRIZA) வாதிட்டுள்ள மாதிரி தொழிலாளர்கள் மீதான தாக்குதலை நடத்துகின்றன. கோலோனில் ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு இடது கட்சி உறுப்பினர்கள், கியூபெக்கில் மாணவர் குழுவான CLASSE, பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சி ஆகியவை கிரேக்கத்தில் ஆட்சியை பிடிக்க தயாரிப்புக்களை செய்யும் சிரிசா பற்றிய அறிக்கைகளை ஆர்வத்துடன் அவதானிக்கின்றன.

கிரேக்கத்தின் இழிவுற்ற சமூக ஜனநாயக PASOK கட்சி பற்றிய சிரிசாவின் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் அதற்கு இந்த ஆண்டுத் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தன. ஆனால், சர்வதேச செய்தி ஊடகத்தில் சிரிசா இழிந்த முறையில் வங்கிகளிடம் கிரேக்கத்தின் கடன்களை நாடு கொடுத்துவிடும் என்றும் கிரேக்கத்தை யூரோப்பகுதியினுள் நிலைநிறுத்த அனைத்தையும் செய்யும் என்றும் கூறியது. இராணுவ, பொலிஸ் அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுக்கள் நடத்தியிருக்கையில், சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் செய்தி ஊடகக் கவனிப்பை புயலென ஈர்த்து, மொத்த வாக்குகளில் 27% பெற்று இரண்டாம் இடத்திற்குக் கட்சியைக் கொண்டுவந்தார்.

சிரிசாவின் 71 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய கிரேக்க சிக்கனப் பொதி கிடைப்பதற்கு உறுதி செய்யும் வகையில் பாராளுமன்றக் கலைப்பை தூண்டுவதற்கு மறுத்துவிட்டனர். கிரேக்கத் தேர்தல் சட்டம் 300 பாராளுமன்ற பிரதிநிதிகளில் குறைந்தப் பட்சம் 60 பேர் கோரினால் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், அவர்களை பிரதியீடு செய்பவர்கள் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

சிரிசா இப்பொழுது தேர்தல் காலத்தில் இது பயன்படுத்திய அவநம்பிக்கைத்தன்மை நிறைந்த "இடது" சொற்றொடர்களையும் கைவிட்டுவிட்டது. இதையொட்டி அது தவிர்க்கமுடியாத சிக்கன சார்பு கட்சி என்று முதலாளித்துவத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. புரூகெஸில் உள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் Georgios Papanagnou ஜேர்மனிய நாளேடான Süddeutschen Zeitung இடம் சிரிசாவை அரக்கத்தனமாக சித்தரிப்பது "ஆழ்ந்த எதிர் விளைவைத்தான்தரும்... தேர்தல்கள் முடிவுற்றதில் இருந்து, சிரிசாவின் தலைமை அதன் வார்த்தைஜாலங்களும் கட்சி வேலைத்திட்டமும் ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொள்ளவேண்டும் என்பதையே அதன் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஈர்க்கும் தன்மையும் பலமும் காட்டுகின்றது என்பதை உணர்ந்துள்ளது" என்றார்.

எழுச்சி பெற்று வரும் சிக்கன சார்பு கட்சி என்னும் முறையில், சிரிசா கோலோனில் கூடிய உலகெங்கிலும் இருந்து வந்த போலி இடது போக்குகளுக்கு ஆர்வம் கொடுக்கும் ஒரு மாதிரி என நிரூபணம் ஆயிற்று. SDS தலைவர் Paula Rauch அவற்றின் கருத்தைச் சுருக்கிக்கூறும் வகையில், "இத்தகைய செயல்களைப்பற்றி ஒருவர் கேட்கையில், உண்மையில் கிரேக்கத்தின் மீது பொறாமை வரும்" என்று சிரிசா பற்றிய ஓர் அறிக்கையைப்பற்றி அறிந்ததும் கூறினார்.

இதுபோன்ற கருத்துக்கள்தான் கோலோன் மாநாட்டில் பிரதிபலிப்பான குட்டி முதலாளித்துதவ இடதுகட்சிகளின் வசதி வாய்ந்த அரசியல் செயலர்களின் தட்டுக்களுடைய பார்வையை உருவகப்படுத்துகின்றன. நிதிய மூலதனம் கிரேக்கத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படுத்தியுள்ள கொடூரக் குற்றங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவை சிரிசாவைப் பொறாமையுடன் கண்டு, தங்கள் போக்கை வளர்ப்பதற்கும் தங்கள் நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு எதிராக இதேபோன்ற குற்றங்களைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகின்றனர்.

இந்நிகழ்வுகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகரத் தொடர்ச்சியை பாதுகாப்பது குறித்தும், சிரிசா, இடது கட்சி போன்ற குட்டி முதலாளித்துவத்தின் "இடது" சக்திகளின் அரசியலை தொடர்ந்து எதிர்ப்பதையும் சரி என்றே காட்டுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் சமூகத் தாக்குதல்கள், சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிகரப் போராட்டத்திற்காக அணிதிரண்டு போராடுவதின் மூலம் மட்டுமே எதிர்க்கப்பட முடியும்; அது அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர் அரசாங்கத்தைக் கட்டமைக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியுள்ளபடி, இத்தகைய போராட்டம் தொழிலாளர்கள் நலன்களை குட்டிமுதலாளித்துவத்தின் பிரிவுகளுடைய நலன்களுக்குத் அடிபணியவைக்க விரும்பும் கோலோன் மாநாட்டிற்கு வந்திருந்த சக்திகளை எதிர்ப்பதின் மூலம்தான் வளர்ச்சி அடைய முடியும்.1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மறுபுனருத்தானம் செய்த கிரெம்ளின் அதிகார வர்க்கத்தின் நட்பு அமைப்புக்களில் தோன்றிய அல்லது 1968 மாணவர் இயக்கத்திறகுப் பின் வெளிப்பட்ட வசதி படைத்த சக்திகளில் இருந்து வந்த இக்கட்சிகள், புரட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின்மீது விரோதப்போக்கு கொண்டவை ஆகும்.

தசாப்தங்களுக்கு மேலாக கணிசமான சொத்து மற்றும் பொருள்சார் நலன்களை அபிவிருத்திசெய்த முக்கிய தொழில்நேர்த்தியாளர்கள், உயர்கல்விக்கூடத்தினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினராக வணிகத் தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களுடன் சமூகநலக் குறைப்புக்களுக்கு பேச்சுக்கள் நடத்தியவர்கள் என்று உள்ளனர். இப்பொழுது அவர்கள், ஐரோப்பிய அரசியல் நடைமுறையின் ஸ்திரமின்மை அவர்களுக்கு ஒரு முதலாளித்துவ அரசில் ஒருங்கிணைந்து நிதிதிரட்ட, மிகப் பிற்போக்குத்தன நிலைப்பாடுகளை முன்னேற்றுவிப்பதற்கு சந்தர்ப்பம் வரும் என்ற பாடத்தை தருவதாக சிரிசாவின் அனுபவத்தை காண்கின்றனர்.

சிரிசாவைப் போலவே கோலோன் மாநாட்டில் பங்குபெற்ற மற்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும். இடது கட்சித தலைவர் கற்யா கிப்பளிங் கட்சி கோசமான "ஹார்ட்ஸ் நான்கு சிக்கனச் சட்டங்கள் வீழ்க" என்பது கைவிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மாறாக "சுற்றுச்சூழல்பகுதிக்கு" திருப்ப வேண்டும் என்று கோருகிறார். முன்பு இடது கட்சி அரசாங்கத்துடன் சேர்வதைத் தடுப்பதற்காக இடது கட்சியினுள் வேலைசெய்தவை என்று கூறிய இடது கட்சியின் மார்க்ஸ் 21 அல்லது SAV எனப்படும் சோசலிச மாற்றீடுப் போக்குகள், இப்பொழுது வெளிப்படையாக அரசாங்கத்தில் நுழைவதற்கான திட்டங்களைப் பாராட்டுகின்றன.

SWP தலைவர் அலெக்சிஸ் காலிநிகோஸைப் பொறுத்தவரை, எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவத்தைப் பாராட்டி அவர் கோலோனில் பேசினார். ஆனால் ஒரு சில நாட்களின் பின்னர் அது இஸ்லாமியவாத ஜனாதிபதி முகம்மது முர்சி சர்வாதிகார அதிகாரங்களைப் பெறும் முயற்சிகளுக்கு எதிராக இருந்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்புக்களை கொலைகாரத்தனமாக ஒடுக்கத் தொடங்கியது.

இப்போக்குகள் வலதிற்கு விரையும் தன்மை ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தெளிவான எச்சரிக்கை ஆகும். அவை தொழிலாளர்கள் மீதான சமூகத் தாக்குதல்களை சுமத்துவதற்கும் மற்றும் எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்குவதற்கும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

இந்த அபிவிருத்திகள், இச் சக்திகளுக்கு எதிராக, இருக்கும் அமைப்புக்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டிய இடைவிடாத அரசியல் போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்காக தொழிலாள வர்க்கம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் பிரநிதித்துவப்படுத்தப்படும் சுயாதீனமான தொழிலாள வர்க்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தன் சொந்த அரசியல் கட்சியைக் உருவாக்கும் கட்டாயத்தை கொண்டுள்ளதை காட்டுகின்றது.