சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
WSWS :Tamil : வரலாறு
வரலாற்றில்
இந்த
வாரம்:
ஜனவரி
3 –
ஜனவரி
9
3 January 2011
Use this version to print | Send
feedback
வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி,
இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய
வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை
வழங்குகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்னர்: லிபியா சம்பந்தமாக
ஐரோப்பிய-அமெரிக்க பதட்டங்கள்
லிபியா
8 ஜனவரி 1986 அன்று, ரீகன் நிர்வாகம்,
அமெரிக்காவில் உள்ள லிபிய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட
கட்டளையிட்ட போதும், சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான அதன்
முயற்சிகள் வாஷிங்டன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டின.
இத்தாலி மற்றும் மேற்கு ஜேர்மனியின் தலைமையிலான மேற்கு
ஐரோப்பிய சக்திகள், மும்மார் அல்-கடாஃபியின் அரசாங்கத்துக்கு
எதிராக கடுமையான கட்டுப்பாடுகளைத் திணிக்க வாஷிங்டன் விடுத்த
அழைப்பை பகிரங்கமாக நிராகரித்தன. அவற்றுடன் ஜப்பான், இஸ்லாமிய
ஆலோசனை அமைப்பு மற்றும் சோவியத் கூட்டமைப்பும் இணைந்துகொண்டன.
யுத்தத்துக்கான தயாரிப்புகள் உட்பட,
லிபியாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு
அமெரிக்கா பயன்படுத்திய சாக்குப் போக்குகளில்
“பயங்கரவாதமே”
முதன்மையாக இருந்தது. ரீகன் நிர்வாகம், இரண்டு
வாரங்களுக்கு முன்னர் ரோமிலும் வியன்னாவிலும் விமானநிலையத்தில்
நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலுடன் கடாஃபியை இணைத்ததுடன்
பொதுவில் “பாலஸ்தீனிய
பயங்கரவாதத்துக்கு”
லிபியாவை பொறுப்பாளியாக்கியது. லிபியா அந்தக்
குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததோடு, ரீகனின்
வலியுறுத்தல்களுக்கு பதிலளித்த இத்தாலியும் ஆஸ்திரியாவும், 27
டிசம்பர் 1986 அன்று 19 பேர் கொல்லப்பட்ட குண்டுத்
தாக்குதல்களில் லிபியா சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இல்லை
எனத் தெரிவித்தன.
ஜனவரி 7, மத்திய அரசாங்க புலன்விசாரணை சபை,
அமெரிக்காவில் வாழும் லிபியர்கள் பற்றிய தனது கண்காணிப்பை
அதிகரிக்கும் என அறிவித்ததுடன், இந்த லிபிய பயங்கரவாத
அச்சுறுத்தல் என சொல்லப்பட்டது அமெரிக்காவில் பொலிஸ்
நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.
லிபியாவுடனான ஒரு யுத்த சம்பவத்தில் ஐரோப்பிய
அரசாங்கங்களுக்கு இழப்பதற்கு அதிகம் இருந்தன. இத்தாலி,
லிபியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளியாகவும் சோவியத்
ஒன்றியத்தை அடுத்து லிபியாவுக்கு முன்னணி ஆயுத
விநியோகத்தராகவும் இருந்தது. மேற்கு ஜேர்மனி அதன் இரண்டாம்
இலக்க வர்த்தகப் பங்காளியாக இருந்ததுடன், லிபியா ஆஸ்திரியாவின்
இரண்டாவது முன்னணி பெற்றோலிய விநியோகஸ்தராக இருந்தது.
அதேசமயம், 1984ல் அமெரிக்காவுக்கான லிபிய ஏற்றுமதிகள் 2 வீதமாக
மட்டுமே இருந்தன.
50 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா
கியூபாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது
1959ல் லிங்கன் ஞாபகார்த்த இடத்தில்
காஸ்றோ
1960 ஜனவரி 3 அன்று, கியூபாவுடனான சகல
இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்ட எய்ஸென்ஹொவர்
நிர்வாகம், அமெரிக்க தூதரகத்தை மூடியதோடு வாஷிங்டனுக்கும்
காஸ்றோ அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளை கீழ்
மட்டத்துக்குக் கொண்டு வந்தது. தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகக்
கட்சி ஜனாதிபதி ஜோன் கெனடிக்கு தீர்மானம் பற்றி
விவரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள், 1959ல் புல்ஜென்சியோ
படிஸ்டாவின் சர்வாதிகாரத்தை வீழ்த்திய பின் ஆட்சிக்கு வந்த
காஸ்றோ அரசாங்கத்தை தனிமைப்படுத்தவும் மற்றும் முடிவில் அதை
அகற்றவும் வாஷிங்டன் மேற்கொண்ட ஒரு தொடர்ச்சியான
நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாகும். ஆட்சியைக் கைப்பற்றிய
உடனேயே, காஸ்றோ அமெரிக்காவுடன் உறவுகளைப் பேணுவது பற்றிய
ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு, அவர் தன்னை சோசலிசத்தில் இருந்து
தூர விலக்கிக்கொண்டார். ஆனால், எண்ணெய் மற்றும் தூய்மையான
பெற்றோலிய உற்பத்திகள் மீதான வணிகத் தடை உட்பட கியூபா மீது
அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், அமெரிக்காவுக்குச்
சொந்தமான சொத்துக்களை தேசியமயப்படுத்துவதன் மூலமும் சோவியத்
ஒன்றியத்தின் பக்கம் சாய்வதன் மூலமும் காஸ்றோ பதிலிறுத்தார்.
மறுபக்கம், காஸ்றோ சீனாவுடனும் ஸ்திரமான உறவுகளைப்
பேணிவந்தார்.
நாடுகடந்து வாழ்ந்த கியூபாவின் வலதுசாரிகள்,
இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டதைப் பாராட்டியதோடு, தீவின்
மீது ஒரு படையெடுப்பை விரைவில் முன்னெடுக்க முடியும் என
கூறிக்கொண்டனர். உண்மையில், 1960 மார்ச் மாதம், நாட்டுக்குள்
இறங்கி காஸ்றோ அரசாங்கத்தின் மீது தாக்குதல் தொடுப்பதன்
பேரில், அரசியல் காரணங்களுக்காக நாடு கடந்து வாழ்ந்த கியூப
வலதுசாரிகளை பயிற்றுவிப்பதற்கு சீ.ஐ.ஏ. க்கு எய்ஸென்ஹோவர்
நிர்வாகம் இரகசியமாக அதிகாரமளித்தது.
75 ஆண்டுகளுக்கு முன்னர்: ரூஸ்வெல்ட் யுத்தம்
பற்றி எச்சரித்தார்
ரூஸ்வெல்ட்
ஜனாதிபதி பிராங்க்லின் ரூஸ்வெல்ட், 1936 ஜனவரி
3 அன்று, மாபெரும் பொருளாதார பின்னடைவின் மத்தியில் தனது
மூன்றாவது கூட்டரசு உரையை ஆற்றுகையில்,
“பொது
யுத்தம்”
என அவர் குறிப்பிட்ட விடயத்துக்காக அமெரிக்க
பொதுமக்களை தயார்படுத்தும் நடவடிக்கையை தொடக்கினார்.
எந்தவொரு நாட்டினதும் உண்மையான பெயரைக்
குறிப்பிடாமல்,
“விரிவாக்கத்தை
எதிர்பார்க்கும், முந்தைய யுத்தங்களில் இருந்து தலைநீட்டிவரும்
அநீதிகளை திருத்திக்கொள்ள எதிர்பார்க்கும், அல்லது
வர்த்தகத்துக்காக வெளியிடங்களை எதிர்பார்க்கும் தேசங்கள்...
போர்வாள் சட்டத்தில் உள்ள பழைய நம்பிக்கைகளுக்கு, அல்லது
விசித்திரமான போக்குகளுக்கு திரும்பியுள்ளவை [தேசங்கள்],
மற்றும் அவைகள் மட்டும், ஒரு நோக்கத்தை இட்டுநிரப்ப தேர்வு
செய்துகொண்டுள்ளதோடு, பில்லியன்கணக்கானவர்களுக்கு மத்தியில்
உள்ள ஏனைய சகலரும் மற்றும் உலகில் உள்ள மனித குலத்தின்
அரைப்பங்கினரும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும்
கற்றுக்கொள்வதோடு அந்த குறிக்கோளுக்கு ஆளாவார்கள்,”
என ரூஸ்வெல்ட் குறிப்பிட்ட போது, அவர் நாஸி
ஜேர்மனி, பாசிச இத்தாலி மற்றும் ஏகாதிபத்திய ஜப்பானைப் பற்றியே
குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளில், ஆபிரிக்க முனையில்
எதியோப்பியாவை இத்தாலியப் படைகள் ஆக்கிரமித்தன, நாஸி ஜேர்மனி
தொடர்ந்தும் தன்னை மீள ஆயுதபாணியாக்கிக்கொண்டது, மற்றும்
ஜப்பான் சீனாவுக்கு எதிராக முழு தாக்குதலுக்கான தயாரிப்பை
அபிவிருத்தி செய்துகொண்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவை ஒரு ஜனநாயக,
முற்னேற்றமான, ஏகாதிபத்திய-விரோத தேசமாக, உள்நாட்டுக்குள்
சமாதானம் நிலவுவதாக காட்டிக்கொண்டதோடு அமெரிக்கவை பாதிக்காத
விவகாரங்களில் மத்தியஸ்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும்
காட்டிக்கொண்டது. யதார்த்தம் முற்றிலும் வேறானது. ரூஸ்வெல்ட்
முன்னறிவித்த
“பொது
யுத்தத்தில்”
தனது ஏகாதிபத்திய எதிரிகளை உடைத்தெறிவதற்கு
அமெரிக்க முதலாளித்துவத்தின் பயனற்றுப் போன தொழிற்துறையின்
பலத்தை அணிதிரட்டுவதற்கு மாறாக,
“புதிய
உடன்படிக்கை”
நிர்வாகத்திற்கு பெரும் மந்தகாலத்தின்
முரண்பாடுகளில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை காண
முடியாமல் போனது.
100 ஆண்டுகளுக்கு முன்னர்: லண்டனில்
“சிட்னி
வீதி முற்றுகையிடப்பட்டது”
சிட்னி
வீதியில் ஸ்கொட் பாதுகாவலர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிப்
பிரயோகம் செய்கின்றனர்
1911
ஜனவரி
3
அன்று,
லண்டன் பொலிசாரும் மற்றும் குறைந்தபட்சம்
உள்நாட்டுச் செயலாளர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் கட்டளையின்
பாகமாகவாவது செயற்படும் ஸ்கொட்லாந்து பாதுகாவலர்கள் அணியும்
லண்டனின் ஈஸ்ட் என்டில் உள்ள சிட்னி வீதியில் ஒரு வீட்டை
முற்றுகையிட்டிருந்தனர்.
இவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னர் பொலிஸ்
அதிகாரிகளை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லத்துவியன்
புலம்பெயர் கலகக்காரர்கள் மூவர் அல்லது இருவர் ஒழிந்திருந்த
வீட்டையே முற்றுகையிட்டனர். இராணுவ முறையிலான நடவடிக்கையில்
இருவர் கொல்லப்பட்ட போதும், அந்தக் குழுவின் தலைவர் எனக்
கூறப்படும்
“பீட்டர்
த பெயின்டர்”
அந்த வீட்டில் இருக்கவில்லை அல்லது ஒருவாரு
தப்பிச்சென்றுவிட்டார்.
வீடு புகுந்து திருடும் ஒரு கும்பலைச்
சேர்ந்தவர்கள் என இந்த கலகக்காரர்கள் மீது
குற்றஞ்சாட்டப்பட்டது. டிசம்பர் 16, கலகக்காரர்கள் என
சொல்லப்பட்ட இந்த வீடு புகுந்து திருடுபவர்கள்
நகைக்கடையொன்றில் திருடிக்கொண்டிருந்த போது அவர்களை தாக்கிய
பின்னர், இரு பொலிசார் கொல்லப்பட்டனர். பின்னர், பீட்டர்
பியட்கோவ் என்ற பெயருடைய லத்துவிய நாட்டவராக இருக்கக் கூடிய
பீட்டர் த பெயின்டர் உட்பட அந்த கொலைகளைத் திட்டமிட்டவர்கள்,
சிட்னி வீதியில் உள்ள வீட்டில் ஒழிந்திருப்பதாக ஒரு தகவல்காரர்
பொலிசுக்குத் தெரிவித்திருந்தார்.
சேர்ச்சில் முழுமையாக ஏற்பாடு செய்திருந்தார்
அல்லது மொத்தத்தில் அந்த நடவடிக்கையின் கட்டுப்பாட்டைக்
தன்வசம் கொண்டிருந்தார். அந்த நடவடிக்கையின் அளவுக்குமிஞ்சிய
தன்மை, லண்டன் தொழிலாள வர்க்கத்தை பயமுறுத்துவதை மட்டுமே
இலக்காகக் கொண்டிருந்தது. இந்த ஸ்கொட் பாதுகாவலர்கள்
பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பகுதியாவர்; துரிதமாக சுடும்
கட்லிங் துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஆட்டிலறிப் பகுதியும் இந்த
நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டன. அந்த வீடு தீபற்றிக்கொண்ட
போது, அந்த இடத்துக்கு தனிப்பட்ட முறையில் வந்த சேர்ச்சில்,
தீயை அனைக்க அந்த இடத்துக்கு வரவிருந்த தீயனைப்புப் படையை
வராமல் இருக்கக் கட்டளையிட்டார். மாறாக, தீச்சுவாலைகளில்
இருந்து கலகக்காரர்கள் தப்ப முயற்சிக்காமல் இருக்க, கதவின்
மீது தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு
சிப்பாய்களுக்கு சேர்ச்சில் கட்டளையிட்டார். பிஃரிட்ஸ்
ஸ்வார்ஸ் மற்றும் வில்லியம் சொகொலோவ்வின் தீய்ந்து போன
சடலங்கள் உள்ளே கிடந்த போதும், பீட்டர் த பெயின்டரின் உடல்
அங்கு இருக்கவில்லை. அவரது பெயர் பின்னர் லண்டனிலும்
அயர்லாந்திலும் பிரசித்திபெற்றிருந்தது. |