தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை SEP meeting in Colombo on the Egyptian revolutionஎகிப்திய புரட்சி பற்றி சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. கொழும்பில் கூட்டம்16 February 2011Use this version to print | Send feedback சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், எகிப்திய புரட்சியின் சர்வதேச முக்கியத்துவத்தையும் அரசியல் உட்பொருளையும் பற்றி கலந்துரையாடுவதற்காக பெப்பிரவரி 25 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், மில்லியன் கணக்கான எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் நடத்திய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார். ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் புரட்சிகர போராட்டங்களுக்குள் இப்போது பிரவேசித்துக்கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சக்தியையே இத்தகைய வெடிப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த எழுச்சி, எகிப்திய அராபிய முதலாளித்துவத்துக்கு மட்டுமன்றி, இஸ்ரேலில் சியோனிஸ அரசாங்கத்துக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளது. இலங்கை ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் சக்திகள் உள்நாட்டிலும் அத்தகைய போராட்டங்கள் வெடிக்கக் கூடும் என கவலை வெளியிட்டுள்ளன. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான தசாப்த காலமாக நீண்ட யுத்தத்தின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை உக்கிரமாக்கியிருப்பதானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஆழமடையச் செய்துள்ளது. சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. நடத்தும் இந்தக் கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் எமது வாசகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்தக் கூட்டத்தில் எகிப்திய புரட்சியின் சர்வதேச தாக்கத்தின் அளவுகளையும் அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத அரசியல் படிப்பினைகளைப் பற்றியும் கலந்துரையாடப்படும். பிரதான உரை: சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் திகதியும் நேரமும்: பெப்பிரவரி 25, வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணி இடம்: மஹாவலி மத்திய நிலையம், கிறீன் பாத், கொழும்பு 7. |
|
|