WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
எகிப்து முழுவதும் வேலைநிறுத்தங்களும்
ஆர்ப்பாட்டங்களும் பரவுகின்றன
By Patrick Martin
10 February 2011
Use this version to print | Send
feedback
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின்
சர்வாதிகாரத்திற்கு எதிரான எகிப்திய வேலைநிறுத்த இயக்கம்
புதன்கிழமையன்று கணிசமாக படர்ந்து,
ஆலைத்
தொழிலாளிகள்,
ஆட்சித்துறை ஊழியர்கள்,
விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரையும் பங்குபெறச் செய்து ஆட்சி
தப்பிப் பிழைப்பதற்கு மிகப் பெரிய அச்சறுத்தலை மேற்கொண்டுள்ள
நடவடிக்கையாக மாற்றிவிட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ டாங்குகளை நேருக்குநேர்
எதிர்கொண்டு நிற்கும் நிலையைக் கொண்ட மத்திய கெய்ரோவின்
தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கும் மோதல் பற்றிப் பெரும்பாலான
செய்தி ஊடகக் கவனக்குவிப்பு இருக்கையில்,
மக்கள்
சீற்றம் நாடு முழுவதும் வேலையின்மை,
உயரும்
விலைவாசிகள் மற்றும்
30
ஆண்டுகாலமாக நடக்கும் மிருகத்தன சர்வாதிகாரம் ஆகியவற்றை
எதிர்த்து தீவிரமாகி வருகிறது.
தஹ்ரிர் சதுக்கத்திலுள்ள இளைஞர்கள் மற்றும்
தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில்
ஐக்கியத்தை நாடுகின்றனர் என்பதற்கு தெளிவான அடையாளங்கள் உள்ளன.
செவ்வாய் நடந்த பெரும் ஆர்ப்பாட்டம்,
நூறாயிரக்கணக்கானவர்களை தலைநகரத் தெருக்களுக்குள்
கொண்டுவந்ததுடன்,
ஒரு
பொது வேலைநிறுத்த அழைப்புடன் இணைந்திருந்தது.
அத்தகைய அழைப்பு ஜனவரி
25ல்
கெய்ரோவில் எதிர்ப்புக்கள் தொடங்கியதிலிருந்து விடுக்கப்பட்ட
முதலாவது அழைப்பாகும்.
அந்த அழைப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரே
வேலைநிறுத்த அலை தொடங்கிவிட்டது.
ஆனால்
அது குறிப்பிடத்தக்க வகையில் விடையிறுப்பை விரைவுபடுத்தியது.
ஊதியங்கள்,
வேலைகள்,
பணி
நிலைகள் இன்னும் பிற பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மட்டும்
நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை,
ஆனால்
முபாரக் ஆட்சிக்கு எதிரான தங்கள் உயரும் அரசியல் முழு நனவு
மற்றும் விரோதப் போக்கின் வெளிப்பாடாகவும்தான் ஈடுபடுகின்றனர்
என்பதைக் காட்டியது.
கடந்த தசாப்தம்,
எகிப்திய தொழிலாள வர்க்கத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஏனெனில் நாடு கூடுதலானளவில் உலகப் பொருளாதாரத்துடன்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் நேரடி முதலீட்டைக்
கொட்டியுள்ளனர்.
இது
வர்க்கப் போராட்ட எழுச்சிக்கும் வழிவகுத்துள்ளது.
3,000க்கும்
மேற்பட்ட தொழில்துறை மோதல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்
நடைபெற்றுள்ளன.
பல
போராட்டங்களிலும் எழுப்பப்படும் முக்கிய கோரிக்கை எகிப்தில்
குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பதாகும்.
இது
1984ல்
இருந்து நாளொன்றிற்கு
6
டொலர்
என்று முடங்கியுள்ளது.
செவ்வாய் இரவு மற்றும் புதனன்று வேலைநிறுத்த
இயக்கத்தில் சேர்ந்த புதிய தொழிலாளர்கள் பிரிவுகளில் பானி
சுவெய்ப் என்னும் இடத்திலிருந்து வந்துள்ள இரயில்வே
தொழில்நுட்பத் தொழிலாளர்கள்,
க்வெஸ்னாவிலுள்ள
Sigma pharmaceutical
நிறுவனத்தின்
2,000
தொழிலாளர்கள் மற்றும் கெய்ரோவில் பொதுத்துறைப் பிரிவுகளிலுள்ள
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
அரசாங்க சுகாதாரத்துறை,
அரசாங்க எரிசக்தித்துறை தொழிலாளர்கள்,
பொதுப்
போக்குவரத்துத் தொழிலாளர்கள் உட்பட இருந்தனர் என்று செய்தி
ஊடகம் தெரிவிக்கிறது.
மிகவும் வெடிப்புத்தன்மை வாய்ந்த,
மூலோபாய வகையில் முக்கிய பகுதிகளில் ஒன்று சூயஸ் கால்வாயை
ஒட்டி உள்ளது.
கால்வாயின் தெற்குப் பகுதி இறுதியிலுள்ள ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்,
சூயஸ்
நகரில் இருப்பவர்கள்,
அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில்
—ஜவுளி
ஆலைகள்,
கப்பல்
பழுதுநீக்கும் பிரிவுகள்,
துப்பரவுப் பணிகள்,
மருந்து பாட்டில் தயாரிக்கும் ஆலை உட்பட—
உள்ளவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் செய்தனர்.
சூயஸ் கால்வாயின்
2,000
தொழிலாளர்கள் புதனன்று வேலைநிறுத்தம் செய்தனர்.
ஆனால்
கால்வாய் வழியே செல்லும் கப்பல் போக்குவரவத்து
பாதிக்கப்படவில்லை.
நூற்றுக்கணக்கான வேலையின்மையிலுள்ள இளைஞர்கள் ஒரு பெட்ரோலிய
நிறுவனத்தை மறியல் செய்து வேலைகளைக் கோரினர்.
ஒரு
பிரெஞ்சு நிறுவனமான
Lafarge
சிமென்ட் ஆலையும் வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டது.
நீண்டகால வேலைத்தொடர்புடைய வியாதிகளினால்
அவதியுறும் தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவு அளிக்க மறுக்கும்
நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக
1,500
தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடங்கியதாக செய்தி
ஊடகத்திடம் சூயஸ் கப்பல் தளத் தொழிலாளி கூறினார்.
மற்றும் ஒரு
500
தொழிலாளர்கள் ஒரு இரும்பு ஆலையில் உட்கார்ந்து அருகிலுள்ள
சாலைகளையும் தடுப்பிற்கு உட்படுத்தினர்.
தங்கள்
குறைந்த ஊதியங்கள் மற்றும் தொடர்ந்த மாசுகள் அவர்களை
நோய்வாய்ப்படுத்துகின்றன என்று மேற்கோளிட்டனர்.
கால்வாயின் வடக்குப் பகுதியான மத்தியதரக்
கடற்கரை நகரமான
600,000
மக்களைக் கொண்ட போர்ட் சயித்தில் நூற்றுக்கணக்கான வறிய
சேரிவாழ் மக்கள் உள்ளூர் கவர்னரின் நிர்வாகக் கட்டிடத்தைத்
தாக்கி தீ வைத்தனர்.
உறுதிமொழி கொடுக்கப்பட்ட குறைந்த செலவிலான வீடுகளை கட்டிக்
கொடுப்பது என்பதை செய்யாததால் இது என்று எதிர்ப்புக் காட்டினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய தியாகிகள் சதுக்கத்தில்
கெய்ரோவில் தஹ்ரிரி சதுக்கத்தில் உள்ளதைப் போல் முகாம்களை
நிறுவியதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை.
“நைல்
முகத்துவாரத்தில் கெய்ரோவிற்கு வடக்கேயுள்ள நகரங்கள்,
தெற்கே
தொலைதூரத்தில் உள்ளவை இன்னும் கிழக்கில் உள்ளவையும்
தெருக்களில்
“முபாரக்கே
வெளியேறு”
என்று
கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் குழுமியதைக்
கண்ணுற்றன”
என்று
பிரிட்டிஷ் செய்தித்தாள்
கார்டியன்
எழுதியுள்ளது.
நைல்
முகத்துவார டன்டா நகரத்திலுள்ள வேலையற்ற ஒரு இளைஞரான மஹ்மத்
சபயி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்
“முபாரக்
அகல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,
இந்த
அமைப்பு முறையே அகற்றப்பட வேண்டும்,
இம்முறையில் அனைத்து ஊழல்களும் உள்ளன”
என்றார்.
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரும்,
முகத்துவாரத்தில் மிகப் பெரியதுமான அலெக்சாந்திரியாவில்
கிட்டத்தட்ட
18,000
பேர்
முக்கிய சதுக்கத்தில் முபாரக் அரசாங்கத்திற்கு எதிராக
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கெய்ரோவிற்குத் தெற்கே,
நைல்
ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான மைல்கள் படர்ந்துள்ள அதிக
மக்களைக் கொண்ட இடங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களும் சில வன்முறை
மோதல்களும் இருந்தன.
ஒரு
சுற்றுலாத் தலமான லக்சரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென
சுற்றுலாத்துறையின் சரிவினால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடு செய்ய
அரசாங்க நலன்களைக் கோரி அணிவகுத்துச் சென்றனர்.
அஸ்வானில்,
5,000
வேலையின்மையிலுள்ள இளைஞர்கள் அரசாங்கக் கட்டிடம் ஒன்றைத்
தாக்கி ஆளுனர் அகற்றப்பட வேண்டும் என்று கோரினர்.
அஸ்யுட்டில்
8,000
பேர்
முபாரக்கிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி முக்கிய நெடுஞ்சாலை
மற்றும் கெய்ரோவிற்குச் செல்லும் ரயில்பாதையை பனை மரங்களைக்
குறுக்கே போட்டு அடைத்து,
ரொட்டி
வேண்டும்,
சர்வாதிகாரி அகல வேண்டும் என்று கோரினர்.
உள்ளூர் கவர்னர் கூட்டத்தில் பேச முற்படுகையில்,
அவர்கள் அவருடைய வாகனத்தின் மீது கற்களை வீசி,
அதன்
கதவுகளை உடைத்து அவர் ஓடிவிடுமாறு செய்தனர்.
தொலை தெற்கிலும் தென்மேற்கிலும் இரு சிறு
நகரங்களில் செவ்வாயன்று படுகொலைகள் நிகழ்ந்ததாக செய்தி ஊடகத்
தகவல்கள் கூறுகின்றன.
எகிப்திய செய்தித்தான்
Youm7
அல்-வாடி
அல்-ஜடிட்டில்
பொலிஸ் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்,
100
பேர்
காயமுற்றனர் என்று கூறுகிறது.
கெய்ரோவிற்கு தெற்கே
240
மைல்
தூரத்திலுள்ள எல் கர்கோ நகரில் பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது
சுட்டதில் மூன்று பேர் இறந்து போயினர்.
இரண்டாவது நகரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதனன்று மீண்டும்
வந்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிற அரசாங்கக் கட்டிடங்களை
அத்தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் தீக்கிரையாக்கினர்.
எகிப்தில் பெரும்பாலான மக்கள் இன்னும் கிராமப்
புறத்தில் வாழ்கின்றனர்.
ஒரு
அரை நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் கீழ்
நிலங்கள் உழுது சாகுபடி செய்கின்றனர்.
இத்தகைய மிருகத்தனமான அடக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள்,
சிறு
விவசாயிகளிடையேயுள்ள அமைதியின்மை பற்றிய சில தகவல்களை
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கொடுத்துள்ளது.
“கிராமப்புற
எகிப்தும் மாற்றத்திற்காக அமைதியற்று உள்ளது”
என்று
குறிப்பிட்டு,
நைல்
முகத்துவராத்தில் டன்டாவிற்கு அருகே ஒரு விவசாயி
“புரட்சி
நல்லது”
என்று
கூறியதாகவும் மேற்கோளிட்டுள்ளது.
“நிலத்தில்
இருந்து மிக எளிய வாழ்க்கையை மேற்கோண்டுள்ள விவசாயிகள் மற்றும்
கிராமப்புறத் தொழிலாளர்கள்,
எகிப்தின் முக்கிய விவசாயப் பகுதியில் உள்ளவர்கள்,
ஆளும்
முறையை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள பெரும் நகர்ப்புற
எழுச்சியைக் கண்ணுறுவதுடன் பலரும் வலைத் தள தொடர்பு கொண்ட
இளைஞர்கள் நாட்டிற்கு ஊக்கம் கொடுப்பதற்கும் ஆதரவை
அளிக்கின்றனர்.
சிலர்
கெய்ரோவிற்கு தங்கள் வயலில் வேலை செய்யும் கலபியா ஆடைகளுடன்
வந்தனர்.
ஆனால்
பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே
உழைக்கின்றனர்.
பலரும்
இது ஒரு புதிய சகாப்தம் நெருங்கிவிட்ட காலம் என்று
நம்புகின்றனர்”
என்று
அறிக்கை தொடர்கிறது.
தலைநகரில் செவ்வாயன்று கிட்டத்தட்ட ஒரு
மில்லியன் மக்கள் மகத்தான முறையில் திரண்டது முபாரக்
அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்தின் பரப்பைப் பெரிதும்
விரிவாக்கியது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அப்பாலும்
படர்ந்து நின்றனர்.
இவர்களுடன் தெருக்களுக்கு வந்துள்ள அரசாங்கத் தொழிலாளர்களின்
பிரிவினரும் சேர்ந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான அரசாங்க மின்சாரத்துறைத்
தொழிலாளர்கள் தெற்கு கெய்ரோ மின்சார நிறுவனத்தின் முன்
அணிவகுத்து அதன் இயக்குனர் அகற்றப்பட வேண்டும் என்று கோரினர்.
நூற்றுக்கணக்கான சுகாதார அமைச்சரகத் தொழிலாளர்களும்
வெளிநடப்புச் செய்து அதிக ஊதியங்களையும் ஊழல் மிகுந்த
அதிகாரிகளின் இராஜிநாமாவையும் கோரினர்.
இதேபோல் அரசாங்க அருங்காட்சியகத்தின் டசின் கணக்கான
தொழிலாளர்களும் கோரினர்.
ஒரு செய்தி ஊடகத் தகவல் சுகாதார அமைச்சரகத்
தொழிலாளர்கள்,
நாட்டை
ஆட்சி கொள்ளை அடிப்பது பற்றி கண்டிக்கும் வகையில்,
“ஓ
முபாரக்கே!
70
பில்லியன் டாலர்களை எங்கு பெற்றாய் என்று சொல்லு என்று
கோஷமிட்டனர்.
மற்றய தகவல்களும் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு
தொழிலாளர்கள் கெய்ரோவில் ஆயிரக்கணக்கில்
“ஊதியங்கள்”,
“சுதந்திரம்”
மற்றும்
“உரிமைகள்”
என்று
கோஷமிட்டுக் கொண்டு வெளிநடப்புச்செய்தனர் என்று தெரிவிக்கின்றன.
தஹ்ரிர் சதுக்கத்திலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்
பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் சென்று அது புதனன்று
மூடப்படுமாறு கட்டாயப்படுத்தி,
எகிப்திய இராணுவம் நிறுவியிருந்த துருப்பு வரிசைகள்,
டாங்குகள் ஆகியவற்றிற்கு முன் உட்கார்ந்து போராட்டமும்
நடத்தினர்.
ஒரு
19
வயது
அல் அஜர் பல்கலைக் கழக மாணவர் மஹ்மத் சோபி ஒரு நிருபரிடம்
“மக்கள்
இந்தப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்கவில்லை.
முழு
ஆட்சியும் கவிழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,
ஏனெனில் அனைத்துமே இவரின் கீழ் ஊழல் மிகுந்துள்ளன”
என்றார்.
எகிப்திய செய்தி ஊடகத்தை சேர்ந்த
500
உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ செய்தி ஊடகம் மற்றும்
தொலைக்காட்சி எதிர்ப்பு இயக்கத்தை பற்றிக் கொடுக்கும் தகவலைக்
கண்டித்து அறிக்கை வெளியிட்டு,
தகவல்துறை மந்திரி அனஸ் எல்-பிக்கி
“உண்மைகளை
தவறாகக் கூறுதல்,
எகிப்திய இளைஞர்கள் தலைமையின் கீழ் நடத்தப்படும் மக்களின்
முபாரக் எதிர்ப்பு எழுச்சி பற்றி வெளிப்படைத்தன்மை இல்லாமல்
கொடுக்கப்படும் தகவல்கள் ஆகியவற்றை எதிர்த்து”
அவர்
இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினர்.
முபாரக் அரசாங்கமும் அதன் முக்கிய சர்வதேச
ஆதரவு நாடான அமெரிக்காவும் தஹ்ரிர் சதுக்கத்தில் வன்முறையை
பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் திட்டங்களை தொடர்வதை
தடுக்கும் முக்கிய காரணம் பரந்த அளவில் தொழிலாள வர்க்கப்
போராட்டம் வெடித்துள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை.
முபாரக்கோ,
துணை
ஜனாதிபதி ஒமர் சுலைமானோ,
ஒபாமா
நிர்வாகமோ மக்கள் இயக்கத்தைக் குருதி கொட்ட வைக்கும் நேரடியான
முயற்சியின் விளைவு பற்றி நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
ஆனால்
அதே நேரத்தில் அவை முன்கூட்டியே தாக்குதல் நடத்த வேண்டும்,
எதிர்ப்பு இயக்கம்,
முக்கியமாக இளைஞர்களை கொண்டது தொழிலாள வர்க்கத்துடன்
இணைந்துவிடும் தன்மையை தவிர்த்து விட வேண்டும் என்றுதான்
முயலும்.
அத்தகைய இணைப்பைத் தடுப்பதற்குத்தான்
துல்லியமாக சீன ஸ்ராலினிச ஆட்சி ஜூன்
1989ல்
தியனன்மென் சதுக்கத்தில் ஒரு படுகொலையை நடத்தியது.
முபாரக் ஆட்சியின் தந்திரோபாயமும்—ஒபாமா
நிர்வாகத்தின் உதவி,
உடந்தையுடன்,
அத்தகைய தாக்குதலுக்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
துணை ஜனாதிபதி சுலைமானிடமிருந்து முக்கியமான
தீய எச்சரிக்கை வந்துள்ளது.
இவர்தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவிற்கு உட்பட்டு
முபாரக் கட்டாயமாக பதவியை விட்டு விலகினால்
“இடைமாற்ற”
அரசாங்கத்திற்கு தலைவராக ஆகவுள்ளார்.
செவ்வாயன்று அரசாங்கம் நடத்தும் பேச்சுக்களுக்கு ஒரே மாற்றீடு—முபாரக்
ஜனாதிபதி பதவிக்காலத்தை முடிப்பார் என்ற அடிப்படையில்—“ஆட்சிக்
கவிழ்ப்பு மாற்றம்தான்”
என்றார்.
அதன்
பின்,
“பொலிஸ்
கருவிகளைக் கொண்டு எகிப்திய சமூகத்துடன் போராட நாங்கள்
விரும்பவில்லை”
என்றார்.
அரசாங்கம்
“தொடர்ந்த
எதிர்ப்புக்களை”
நீண்ட
காலம் பொறுக்க முடியாது என்றும்,
முபாரக் உடனடியாக விலகிச்செல்வதால்
“ஆட்சி
முடிவடையாது”
என்றும் அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுலைமான் சில எதிர்ப்புத் தலைவர்கள்
பரந்த வேலைநிறுத்தங்கள்,
மக்கள்
ஒத்துழையாமை பற்றிப் பேசுவது
“மிகவும்
ஆபத்தானது”
என்றார்.
இதற்கிடையில் குறைந்தபட்சம்
500
பேர்,
முதல்
இருவார எதிர்ப்புக்களில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும்
கணக்கில் வரவில்லை என்று எகிப்திய மனித உரிமைகள் அமைப்பு
கூறியுள்ளது.
எகிப்திய வெகுஜன இயக்கத்தின் மிகப் பெரிய
ஆபத்து முதலாளித்துவக் கூறுகளின் அரசியல் செல்வாக்குத்தான்.
இதில்
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மட்டும் இல்லை,
Wafd
மற்றும்
Ghad
போன்ற
தாராளவாதக் கட்சிகளும் முன்னாள் ஐ.நா.
ஆயுதக்
கட்டுப்பாட்டு அதிகாரியான மஹ்மத் எல்பரடெய் போன்ற
பிரமுகர்களும் உள்ளனர்.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு,
நகர்ப்புற,
கிராமப்புற மக்களை அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு
அணிதிரட்டும் முன்னோக்குடைய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய
புரட்சிகர தலைமையை கட்டமைப்பதுதான் உடனடித் தேவை ஆகும். |