The Netherlands: social democrats eulogize murdered neo-fascist Pim Fortuyn
நெதலார்ந்து: கொலை செய்யப்பட்ட
Pim Fortuyn
ஐ சமூக ஜனநாயகவாதிகள் புகழ்ந்தனர்
By Ulrich Rippert and Steve James
9 May 2002
Back to screen version
மே 15 பாராளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், இனவாத பிரசங்கியான
Pim Fortuyn
ன் கொலை நெதர்லாந்தில் அரசியல் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
இச்சம்பவம் உடன்பாட்டையும் சகிப்புத்தன்மையையும் அடித்தளமாக கொண்ட அரசியல் அமைதியின் வெளித்தோற்றத்தை
கவனமாக பாதுகாத்த சமூகத்தில் உள்ள ஆழமான பிளவுகளை வெளிக்காட்டுகிறது.
54 வயதான Fortuyn
ன் தலை, மார்பு மற்றும் கழுத்தில் ஐந்து சூட்டுக் காயத்தால் கொடுரமாக தாக்கப்பட்ட செய்தி வெளிவந்த பின்னர்,
உடனடியாகவே அவருடைய ஆதரவாளர்கள் நெதர்லாந்தின் தலைநகரமான
The Hauge ன் மத்தியில்
கலவரத்தை ஏற்படுத்தினர். அன்று மாலை அவர்கள் பொலிசாருடன் உக்கிரமான தெரு சண்டையில் ஈடுபட்டனர்.
கல்லுகளாலும் போத்தில்களாலும் எறிந்த வலதுசாரி கலகக்காரர்ளை எதிர்ப்பதற்கு நடமாடும்
பொலீஸ் பிரிவினர் தண்ணீர்ப் பீரங்கிகளையும் சிறு தடிகளையும் பாவித்தனர். பாராளமன்ற கட்டிடத்துடன் இணைந்த தரையின்
கீழ் உள்ள வாகன தரிப்பு நிலையத்தினுள் Fortuyn
னுடைய ஆதரவாளர்கள் உட்புகுந்து பல வாகனங்களுக்கு தீ வைக்கக் கூடியதாகவிருந்தது.
Fortuyn ன் ஆதரவாளர்கள்
சுவாஸ்ரிக்காவையும் (swastikas)
நாசி (Nazi)
அடையாளங்களையும் அணிந்த வண்ணம் அவரின் படத்துடன் கூடிய தேர்தல்
விளம்பர மட்டைளையும் தாங்கியிருந்தனர்.
வெளிநாட்டவர்களுக்கு எதிராக தாக்குதலைகளை தடுக்குமுகமாக அக்கொலையை செய்தவர்
ஒரு வெளிநாட்டவர் அல்ல மாறாக 32 வயது உள்ள ஓர் வெள்ளை டச்சுகாரன் என திங்கள் மாலையும் செவ்வாய்கிழமை
அன்றும் டச்சு உள்ளூர் மந்திரியின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் வலியுறுத்தினார். பின்னர்
Fortuyn ஐ கொலை
செய்தவர் டச்சு சுற்றுசூழல்பாதுகாப்பு அமைப்பில் இருந்து வந்த உறுப்பினர் என அறிவிக்கப்பட்டிருந்து.
திங்கள் மாலை, சமூக ஜனநாயக பிரதம மந்திரியான விம் கோக் (Wim
Kok) தேர்தலை பின்போடுவதா இல்லையா என தீர்மானிப்பதற்கு தனது
மந்ததிரி சபையை விசேட கூட்டத்திற்கு அழைப்புவிட்டிருந்தார். எல்லா அரசியல் கட்சிகளுமே தற்காலிகமாக தேர்தல்
பிரச்சாரத்தை நிறுத்தி வைப்பதற்கு சம்மதித்திருந்தனர்.
இவ் வருடம் பெப்ரவரியில் முதல் முதலாக நிறுவப்பட்ட நவ பாசிச
List
Pim Fortuyn (LPF)
உடனான பேச்சுவார்த்தையில் கோக்
(Kok) தேர்தலை தள்ளிப்போடும்
பிரேணையை வைத்தார். ஆனால் பல மணித்தியாலத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தின் பின்னர்
LPF பேச்சாளர் தங்கள்
நிறுவனம் ஆரம்பத்தில் குறிக்கப்பட்ட திகதியிலேயே தேர்தலை நடாத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.
LPF தனது
முன்னணி வேட்பாளர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட மக்களின் பிரதிபலிப்பை தனக்கு சாதகமாக ஒன்று திரட்ட
முனைக்கிறது என்பது தெளிவாகும்.
Fortuyn ஒர் இனவாத வாய்வீச்சாளர்களின் ஒரு
மோசமான வகைப்பட்டவர். அவர் இஸ்லாம் ஓர் "ஆதிகால கலாச்சாரம்" என ஏளனப்படுத்தி, புதிதாக நாட்டில்
குடியேறுபவர்களை நிறுத்தும் படி அழைப்பு விட்டதுடன் தான் வெற்றி பெற்றால், தனது பதவியில் முதற்செயல் எதுவாக
இருக்கும் என குறிப்பிடுகையில், டச்சு அரச சட்ட அமைப்பில் உள்ள உடன்படிக்கையான பாகுபாட்டு எதிர்ப்பை (anti-discrimination)
நீக்குவதாக இருக்கும் என்றார். தற்பொழுது, இக் கொலைமுயற்சி இவரை தேசத்தலைவராகவும்,
தியாகியாகவும் காட்டியுள்ளது.
சுடப்பட்ட அன்று மாலை
Fortuynனுடைய பிறந்த இடமான
Rotterdam நகரசபையில்
அனுதாப கையெழுத்திடுவதற்கான புத்தகம் வைக்கப்பட்டது. அன்றிலிருந்து டச்சு மற்றும் சர்வதேச தொலைக்காட்சி குழுவினர்
அதிவலதுசாரி கட்சி ஆதரவாளர்களில் யார் நகரமண்டப சபையில் தங்களது அனுதாபங்களை எழுதுவதற்கு வரிசையில்
கூடினார்களோ அவர்களின் பல பேட்டிகளை ஒளிபரப்பினர்.
செவ்வாய்கிழமை மாலை பிரதம மந்திரி கோக் ஞாபகார்த்த கூட்டத்திற்காக பாராளுமன்றத்தை
கூட்டியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுடன், ஓர் நிமிட மெளன அஞ்சலியின் பின், கோக் தனது தனிப்பட்டதும்
அத்துடன் தனது அரசாங்கத்தினதுமான அனுதாபங்களை, தனியே
Fortuyn உறவினருக்கு மட்டுமல்ல, அவருடைய கட்சியில் உள்ள எல்லா
ஆதரவாளர்களுக்கும் தெரிவித்தார்.
டச்சு ஐரோப்பிய கூட்டின் கமிசனரும்,
வலதுசாரி
சுதந்திரத்திற்கானதும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சி (VVD)
அங்கத்தவரும், அத்துடன் முன்னைய பாதுகாப்பு மந்திரியுமான
Frits Bolkestein உரையாற்றுகையில் "போருக்கு பிந்திய டச்சு
வரலாற்றில் கேவலமான அரசியல் சம்பவம்" என்றார்.
Brussels இல் அவர் உரையாற்றுகையில், இக் கொலை "ஓர் சுதந்திரத்திற்கு
மேலான தாக்குல், எல்லாவற்றிற்கும் மேலாக, சுதந்திர பேச்சுரிமையின் மேலானது" என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியான,
Javier Solana,
இக் தாக்குதல் ஜனநாயக மதிப்பின் மேலானது என குற்றம் சாட்டினார். "எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் கருத்தினை
பாதுகாக்கும் அரசியல்வாதிகளுக்கு மேலாக திருப்பப்படும் இக்குற்றச்செயல்களை நான் கண்டிக்கிறேன்" என்றார்.
எழுத்தாளரான Harry
Mulisch னுடைய புத்தகமான கொலை (1983)
டச்சு எழுத்தாளர்கள் மத்தியில்ஏதோ நீதியின் வல்லுனராக அவரை உருவாக்கியதை ஜேர்மனிய
Süddeutsche Zeitung
குறிப்பிட்டுக் காட்டுகையில், "Fortuy
ஐ டச்சு லீ பென் போல அல்லது ஆஸ்திரியாவின் ஹேயிடர்
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார். ஆனால் பிரச்சனை அப்படியல்ல. அவன் தனது
வலிமையை அதாவது தன்னிலுள்ள கூடாத செயல்களின் தன்மையில் இருத்து ஒன்று திரட்டவில்லை. ஒரு பாசிசவாதிக்குரிய
தன்மை அவரது கொடுமையான தன்மையாகும். எப்படியிருந்தாலும் அவர் ஒர் 12 வயது அப்பாவி சிறுவன் போலவுள்ளார்.
இப்படித்தான் அவர் தன்னை பார்க்கிறார் என நான் நம்புகிறேன். அத்துடன் இதுதான் அவருடைய வலிமை. அவர் வெளிநாட்டவர்ளைப்
பற்றி கோரமான முறையில் கூறலாம், ஆனால் எப்படியோ மக்கள் அவரை விரும்புகிறார்கள். இன்று காலை எனது துப்பரவாக்கும்
பெண் வந்தாள். அவள் ஓர் வேறு இனப்பெண், Pim
Fortuyn னுடைய மரணத்தைப் பற்றி என்ன நிறைக்கின்றாய் என
கேட்டவுடன் அவள் அழத் தொடங்கி விட்டாள். அத்துடன் இது தனியே அவளினுடைய பிரதிபலிப்பு மட்டுமல்ல, நெதலார்ந்திலுள்ள
கூடிய பகுதி வேறுநிறத்தோல் இன மக்களிடையே உள்ள பிரதிபலிப்பாகும்".
பிரித்தானிய பிரதம மந்திரி
Tony Blair ம் வெளிவிவகார மந்திரியான
Jack Straw ம்
தாக்குதலின் அதிர்ச்சியை தெரிவித்து, இது ஜனநாயகத்திற்கு எதிரான சவால் என விபரித்தனர்.
Fortuyn ஐ நியாயமானவர் என காட்டுவதற்கு இங்கே
இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. ஒன்று பழைமைவாதமானால், ஜனநாயகத்திற்கு அரசியல்வாதிகளும் தியாகிகளும் ஆகின்றனர்.
முதலாவது பல ஐரோப்பிய நாடுகளின் அபிவிருத்தியை அவதானிக்க வேண்டும்: சமூக ஜனநாயகவாத அரசாங்கங்கள் மீது
தொடர்ச்சியாக அழுத்தம் அதிகரித்து வரும் நிலைமையின் கீழ் ஆட்சி புரிவதும், பாரிய தேர்தல் தோல்விகளை சத்திப்பதும்
(அண்மையில் பிரான்சிலும் ஜேர்மனியில் Saxony-Anhalt மாநில தேர்தலிலும்
நடந்தது போல), வளர்த்து வரும் அதிவலது அரசியல்வாதிகளின் செல்வாக்கு, சமூக ஜனநாயகவாதிகளை வலது திருப்பத்திற்கு
துாண்டியுள்ளது. கடந்த காலங்களில், தீவிர வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆஸ்திரிய அரசாங்க Haider உடைய சுதந்திர கட்சி (FP)
பங்கு பற்றுவதை எதிர்த்து ஐரோப்பிய கூட்டின் பகிஷ்கரிப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது-. ஒர் புது திருப்பம் தற்பொழுது
ஐரோப்பிய அரசியல் பிரமுகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெளிப்டையாகவே தீவிர வலதுகளுடன் கூட்டுச்சேர
கூடியபடி ஆயத்தப்படுத்துகின்றார்கள்.
Fortuyn ஐ புகழ்வதற்கான இரண்டாவது காரணி
அரசியல் குழப்பத்தையும் பிற்போக்கான உணர்வு களையும் தொழிலாள வர்க்த்தில் விதைப்பதற்காக வேண்டுமென்றே எடுக்கப்பட்ட
முயற்சியாகும்.
நெதலார்ந்தில் நிகழ்ந்த அண்மை கால சம்பவங்கள் ஒன்று திரட்டப்பட்ட முறையில்
ஐரோப்பாவை பிடிக்கும் சமுகத்தினதும் அரசியல் மாற்றத்தினதும் வெளிப்பாடாகும். சகாப்தங்களாக வடக்கு கடலை
தழுவி Hamburg
இற்கும் Brussels
க்கும்
இடையிலுள்ள
இத்த சிறிய நாடு தாராளவாதத்திற்கு உதாரணமாக கருதப்பட்டது.
இது ஒரே பாலியலை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கு இடமளித்த முதல் நாடு, நீண்ட கால நோய்வாய்பட்டிருப்பவர்களை
"கருணை கொலை" (Mercy killing)
என அழைக்கப்பட்டதை அனுமதித்துடன், "மென்மையான" (Soft)
போதை வஸ்துகளையும் விற்பதற்கு சட்டபூர்வமாக்கியது. ஆனால் இது
பரந்தளவு புகழப்பட்ட விலாசமான தன்மையின் மேற்பரப்பின் கீழ், எங்கே வலதுசாரி வாய்ப்பிரசங்கிகள் வெளிப்படையாகவே
இன வேறுபாட்டை ஒல்லாந்தில் வசிக்கும் 800.000 முஸ்லீம்கள் உட்பட இரண்டு மில்லியன் வெளி நாட்டவர்களுக்கு எதிராக
வியாபிக்க கூடியளவில் சமூக கெடுபிடிகள் வளர்வதற்கு வாய்ப்பளித்துள்ளது.
1980ன் ஆரம்பத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒல்லாந்தில் அதிகரிக்கத் தொடங்கி,
1984ல் மாதாந்த அதிகரிப்பு 10,000 ஆக அதிகரித்தவேளை "Polder
Model" என அழைக்கப்பட்தை உருவாக்கினர். அரசாங்கம்,
தொழிற்சங்கம் அத்துடன் கூட்டுத்தாபன முதலாளிகள் நெருங்கிய கூட்டுறவுடன் திடீரென சம்பளம் குறைக்கும் நோக்குடன்,
சமூக வசதிகளை அழித்ததுடன் கூட்டுத்தாபன வரிகளையும் குறைத்தனர். வேலை நேரங்களும் நிபந்தனைகளும் "மாற்றியமைக்க
கூடிய" (flexible)
வகையில் செய்யப்பட்டன.
இதன் விளைவாக பாரிய குறைந்த சம்பள பிரிவு அதிகரிக்கத் தொடங்கியதுடன், மணித்தியாலம்
குறைந்த வேலைகளுக்கு (அதிகமாக கிழமைக்கு 12 மணித்தியாலத்தை விட குறைந்தது) குறைத்த சம்பளம் வழங்கப்பட்டது.
ஐரோப்பாவில் இன்று நெதலார்ந்து உயர்ந்த மட்ட "உழைக்கும் ஏழைகளை"
கொண்டுள்ளது.
கடந்த எட்டு வருடங்களாக முன்னைய தொழிற் சங்கத்தின் தலைவரும் தற்போதைய சமுக
ஜனநாயக கட்சியின் தலைவருமான Wim Kok,
வலதுசாரி "சுதந்திர சந்தை" கட்சியுடனும் (VVD),
மத்திய இடது ஜனநாயகம் 66 என்ற கட்சியுடனும் கூட்டு அரசாங்கத்தை நடாத்தினார். இது சமூகநலத்திட்டங்களை தாக்கியதுடன்,
தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பை இல்லாதொழித்து, பொதுக் காரியாலங்களுக்கு அதிகரித்த அதிகாரத்தை
வழங்கியது.
மார்ச் தொடக்கத்தில் நடந்த உள்ளூர் தேர்தலில், பரந்தளவிலான அரசியல் எதிர்ப்புகளை
Fortuyn
தனது லாபத்திற்காக சுரண்டியதுடன், இனவாத வழியினுள் திருப்பினார். பழைய சமூக ஜனநாயக வாதிகளின் இடமான
Rotterdam
ல் அவர் 34 வீத வாக்குகளால் வென்று, நகரத்தில் பலமான கட்சியாக்கினார். அதன் பின்னர் முன்னய சமூகவியல்
பேராசிரியரானவர், வெளிப்படையாகவே கெட்டநடவடிக்கை பழக்கத்தையுடைய இவர், பரந்தளவு தொடர்பு சாதனங்களால்
ஊக்குவிக்கப்பட்டர்.
Fortuyn னுடைய கொலைக்கு முன்னர், கருத்து
கணிப்பிடும் நிலையங்கள் இவருடைய கட்சி டச்சு பாராளுமன்றத்திலுள்ள 150 ஆசனங்களில் 26 ஆசனகளை பெறுவார் என
மதிப்பிட்டனர்.
|