World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

University students in US protest Israeli aggression

ஐக்கிய அமெரிக்காவில் பல்கலைக் கழக மாணவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை எதிர்க்கிறார்கள்.

By Joseph Kay
11 April 2002

Back to screen version

மேற்குக் கரை மற்றும் காசாவிலான தொடரப்பட்டு வரும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச ரீதியாக ஆத்திரத்தினை கட்டவிழ்த்துவிட்டுள்ளது, அமெரிக்கா முழுவதுமான கல்லூரிகள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை எதிர்ப்பதற்கும் இந்த வாரம் அணிதிரண்டனர்.

செவ்வாய்கிழமை நாடு முழுவதும் கல்லூரிகளில் இருக்கும் சில பாலஸ்த்தீன குழுக்கள் ஏப்பிரல் 9 1948 இல் Deir Yassin இல் நடைபெற்ற படுகொலையின் ஞாபகர்த்தமாக ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்புவிட்டனர். அன்று, வருங்கால இஸ்ரேலிய பிரதமரான Menachem Begin இன் தலைமையின் கீழ் ஒரு சியோனிச அதிரடிப்படை அவர்களது நிலங்களில் இருந்து அவர்களை விரட்டியடிக்கும் ஒரு முதற்கட்ட முயற்சியாக கிட்டதட்ட நூற்றுக்கு மேலான கிராம வாசிகளை படுகொலை செய்தது. இந்தச் செவ்வாய்கிழமை, ஏப்ரல் 9 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருக்கும் ஜெனின் அகதி முகாமில் பாலஸ்த்தீன மக்களை இஸ்ரேலிய படைகள் படுகொலை செய்தததில் அந்த நிகழ்வு எதிரேலித்தது. [பார்க்கவும் ஜெனின் நகரத்தில் இஸ்ரேலிய படுகொலை]

முழுவதுமாக கிட்டதட்ட 30 பல்கலைக் கழகங்கள் தேசிய எதிர்ப்பு தினத்தில் கலந்துகொண்டிருந்தன. கலிபோர்னியா மற்றும் பேர்கெலி பல்கலைக் கழகத்தில் தான் மிகப்பெரும் அணிதிரள்வு நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் சமூகமளித்திருந்தனர். முன்னேற்பாட்டிலே, காவல் துறையினரின் வருகை ஒரு பரபரப்பூட்டும் வகையில் அதிகரித்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 79 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கோரிக்கையின் பட்டியலை படிப்பதற்காக ஒரு வகுப்பறைக்குள் நுழைந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்டார்கள். ஒரு தனிப்பட்ட நபரை கைதுசெய்தபோது ஒரு காவலரை தாக்கியதற்காக குற்றவாழியென குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீன மக்களின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்ற ஒரு மத்திய பகுதியாக Berkeley இருந்ததுடன், மாநிலம் மற்றும் பல்கலைகழக நிர்வாகத்தின் மத்தியில் கவலையை அதிகரித்திருந்தது. கடந்த வாரம் Berkeley இல் மாணவர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பாகமாக வாகனங்களிற்கான ஒரு பெரும்பாதையை சில மணித்தியாலங்களுக்கு மூடிவிட்டனர்

பாலஸ்தீனத்தில் நீதிக்கான ஒரு மாணவர்கள் பிரதிநிதி, ஒரு குழு Berkeley இல் தொடங்கப்பட்டதுடன் ஏனைய கல்லூரிகள் எங்கும் பரப்பப்பட்டதுடன், அவர்கள் செவ்வாய்கிழமை அன்று பல ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்ததுடன், ''பாலஸ்தீன நகரங்களில் இடிக்கும் கவச வாகனங்களின் உருவங்களை மக்கள் பார்த்த போது, ஒரு ஆம்புலன்சின் ஒட்டுனர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார், பரிசோதனை இடத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார், இவையெல்லாம் இரண்டு சமமான தவறான பக்க சண்டையில்லை என்பதை தெளிவாக்குகின்றன'' என கூறினர்.

Berkeley இல் நாசிப் படுகொலையின் ஞாபகர்த்த ஆர்ப்பாட்டம் அதே இடத்தில் நடைபெற்றதுடன், அது சியோனிசத்திற்கான எதிர்ப்பை யூத எதிர்ப்பு வாதத்துடன் சமப்படுத்த முயற்சித்த இஸ்ரேலுக்கு சார்பான கல்லூரியின் குழுவினரிடம் இருந்து கோபத்தை உண்டுபண்ணியது. ''இந்த இரண்டு நிகழ்வும் ஒன்றோடொண்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. நாசிப்படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களை நாம் நினைவுகூருகிறோம், அதே நேரம் நாம் பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு படுகொலையை நிறுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்'' என பாலஸ்தீனத்திலான நீதிக்கான இன்னொரு அங்கத்தவரான மாணவர் அப்துல் மேற்காணும் மோசடித்தனமான அறிக்கைக்கு பதிலளித்தார்.

கலிபோர்னியா மற்றும் டேவிஸ் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த சனிக்கிழமை, ஆயிரக் கணக்கானோர் லாஸ் ஏஞ்சலில் அணிதிரண்டனர்.

Ann Arbor அமைந்திருக்கும் மிஸ்சிங்கன் பல்கலைக் கழகத்தில் 100 மாணவர்கள், ''பாலஸ்தீன குரல்: ஆக்கிரமிப்பால் அமைதியாகிவிட்டது'' மற்றும் சரோன்=யுத்தக் குற்றவாழி,'' என எழுதப்பட்டிருந்த பதாகைகளுடன் அணிதிரண்டிருந்தனர். Berkeley போல்தான், Ann Arbor உம் பல அராப் மாணவர்களை கொண்டிருக்கிறது, பல வலதுசாரி விபரணையாளர்களின் ஒரு தாக்கும் குறியாக அது இருந்துவருவது உண்மையாகும். இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகள் மாணவர்களின் ஒரு பகுதியினர் மத்தியில் கவலைகளையும் கோபத்தினையும் உண்டாக்கியுள்ளதுடன், அன்றாடம் அணிதிரள்வதுடன் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். Rabih Haddad- முஸ்லிம் குழுவின் அங்கத்தவர் மற்றும் Ann Arbor இல் குடியிருக்கும் இவர் டிசம்பர் மத்தியில் அமெரிக்க அரசாங்கத்தினால் நீதியற்ற முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்- இவரது வழக்கு மாணவர்கள் மத்தியில் பரந்த ஆதரவினை பெற்றுக்கொண்டிருக்கிறது மற்றும் அராப் மற்றும் ஏனையவர்கள் புஷ் அரசாங்கத்தினால் செய்யப்பட்டுவரும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலால் கவலையடைந்துள்ளனர்.

பல மாணவர்கள் பாலஸ்தீன மக்களின் அமைதியின் அறிகுறியாக தமது வாய்களை கட்டிக்கொண்டும், கரங்களை ஒன்றாக இறுக்கிக் கொண்டும் நடந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கல்லூரியினை சுற்றி ஒரு வட்டம் அடித்த பின்னர், ஆர்ப்பாட்டக்கார்ர்கள் செய்த ஒரு நாடக வடிவான பிரதியில், இஸ்ரேலிய படையினரால் நடாத்தப்படும் ஒடுக்குமுறையை பிரதிநித்துவம் செய்வதற்கு அனைத்து பாலஸ்த்தீன ஆண்களும் விளையாட்டு மைதானத்தில் கைகளை கட்டிக்கொண்டு முழங்காலில் நிற்கும்படி கேட்கப்பட்டனர்.

இப்படிப் பல ஆர்ப்பாட்டங்களுடன், சியோனிச சார்பானவர்கள் ஒரு சிறிய எதிர் ஆர்ப்பாட்டம் செய்வதில் ஈடுபட்டனர், அவர்கள் இஸ்ரேல் கொடியினை தாங்கிவந்ததுடன், கத்திப்பாடுவதன் ஊடாக ஆர்ப்பாட்டத்தினை தொந்தரவு செய்ய முயற்சித்தார்கள். Berkeley இல், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் ஞாபகர்த்தமாக ஒரு பாரம்பரிய பிராத்தனைப்பாடலை ஒரு பாலஸ்தீனிய யூத ஆதரவாளரார் பாடத் தொடங்கிய பின்னர், சியோனிசவாதிகள் ஆர்ப்பாட்டத்தினை தொந்தரவு செய்தனர்.

உலக சோசலிச வலைத்தளம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில மாணவர்களுடன் பேசியது. ஆஸ்மா, பாலஸ்த்தீனத்தின் மீது இஸ்ரேல் நடாத்தும் ஆக்கிரமிப்பினை தான் எதிர்ப்பதாக கூறினார். நெருக்கடிகள் பற்றி அமெரிக்க ஊடகங்களினால் வளங்கப்படும் செய்திகள் பொதுவாக பாலஸ்தீன மக்களை குறைகூறுவதாக இருக்கின்றன என அவர் கோபமடைந்திருந்தார். ''பல மக்கள் தற்கொலை குண்டுகளை ஆதரிக்காத போதும் அவர்களை இவர்கள் பயங்கரவாதிகளாய் வகைப்படுத்துகிறார்கள்.'' எனக் கூறியதுடன், ஒரு நம்பிக்கையிழந்த மற்றும் நிராயுதபாணியான மக்களின் ஒரு இறுதி முடிவாக அவர் அழைப்புவிட்டார்.

''நாம் செய்யும் ஒரு சிறிய விடயம் இது மற்றும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும், அதனால் தான் நான் இதில் கலந்துகொண்டேன்.'' என மாலிகா WSWS இடம் குறிப்பிட்டார். ஊடகங்கள் இந்த நெருக்கடியினை ஒரு பக்கச் சார்பாகவும் ஊழல் நிறைந்த வழியிலும் வெளிப்படுத்திக் காட்டும் ஊடகங்களின் பாத்திரத்தினை அவர் குறைகூறினார்.

''பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை'' என்பதாய் இஸ்ரேலிய நடவடிக்கையினை ஊடகங்கள் விமர்சனமற்றமுறையில் ஏற்றுக்கொள்கின்றன என குறிப்பிட்டுக்காட்டினார், அது அடக்குமுறையை சட்டமாக்குவதாக இருக்கிறது என சபீர் சுட்டிக்காட்டினார். ''இப்படியான ஒரு இஸ்ரேல் சார்பான நிலைப்பாட்டை ஆக்கிரோசமானமுறையில் புஷ் எடுத்திருக்கிறார். இஸ்ரேல் பின்வாங்கவேண்டும் என புஷ் தற்போது அழைப்பு விட்டதற்கு எந்த அர்த்தமும் கிடையாது'' என சபீர் தொடர்ந்து கூறியதுடன், அமெரிக்க அரசாங்கத்தின் பாத்திரத்தினை கண்டனம் செய்தார்.

இப்படியான அனைத்து கல்லூரிகளின் ஆர்ப்பாட்டம் போல், UM இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது ஒரு வித்தியாசமான முன்னோக்கு மற்றும் ஆலோசனைகளின் கலப்பிடமாக இருந்த்து. ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்த குழுவினரின் முக்கியமான ஒரு கோரிக்கையாக இஸ்ரேலை அம்பலப்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு ஆயுதம் வளங்கும் நிறுவனங்களுடன் செய்துகொண்ட அனைத்து உடன்படிக்கையையும் பல்கலைக்கழகம் கைவிடவேண்டும் என்பதாக கோரிக்கை விடப்பட்டது. வித்தியாசமான உள்ளடக்கத்திற்குள் இதையொத்த கோரிக்கை, உதாரணமாக இனிப்பு பண்டங்களை நடாத்தும் நிறுவனங்களுடனான பல்கலைக்கழக உடன்படிக்கையை இரத்து செய்யும்படி இன்னொரு மாணவர் குழுவினரால் வைக்கப்பட்டது.

மத்திய கிழக்கிலான நெருக்கடியின் அதிகரிப்பு மற்றும் நெருக்கடிக்கு ஒரு நீதியான தீர்வினை கண்டுபிடிப்பதற்கான மாணவர்களின் விருப்பம் இரண்டும் மட்டுப்படுத்தப்பட்ட இந்தக் கோரிக்கைகளுடன் வெளிப்படையாக மோதிக்கொள்ளும்.

கடந்த சில வருடங்களாக அபிவிருத்தியைடந்த ஒரு வளர்ச்சியடைந்துவரும் மாணவரின் தீவிரப்படுத்தப்பட்ட அலையின் பாகமாக இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இருக்கிறது. ஏப்ரல் 20 இல் வாஷிங்டனில் ஷரோன் மற்றும் புஷ் க்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவும் அத்துடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவுமான ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்பு பொதுவாக ஆயிரக்கணக்கான மக்களை, முக்கியமாக நாடெங்கிலும் இருந்தும் மற்றும் சர்வதேசரீதியாகவும் இளைஞர்களையும் மாணவர்களையும் கவர இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved