World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party attempts to pick up the pieces

பிரெஞ்சு சோசலிசக் கட்சி துண்டுகளை ஒட்ட முனைகிறது

By David Walsh in Paris
3 May 2002

Back to screen version

நவபாசிச லு பென்னுக்கும் அவரது தேசிய முன்னணிக்கும் எதிராக மேதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அதனது அரசியல் சக்திகளை அணிதிரட்டும் ஒரு முயற்சி மற்றும் யூன் 9 மற்றும் 16 ம் திகதி இரண்டு சுற்றாக நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பிற்காக பிரெஞ்சு சோசலிச கட்சி ஏப்ரல் 30 ல் ஒரு பொதுக்கூட்டத்தை நடாத்தியது

தமது சொந்த பார்வையிலேயே, ஏப்பிரல் 21 நடைபெற்ற முதலாவது சுற்றுத் தேர்தலில் அதனது வேட்பாளரான பிரதமர் லியோனல் ஜொஸ்பன் 15.9 வீத வாக்குகளுடன் கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் லு பென்னுக்கு அடுத்து மூன்றாவதாக வந்தமை பிரெஞ்சு சோசலிஸ்ட்டுகளை ஒரு வெட்கக்கேடான தோல்விக்கு இட்டுச்சென்றது.

அதிதீவிர மற்றும் லு பென்னை தோற்கடிப்பதற்கான ஒரேவழி வலதுசாரியான தற்போதைய ஜனாதிபதிக்கு ஒரு பரந்த வாக்கினை அளிப்பதுதான் என ஏப்ரல் 21 ல் இருந்து சோசலிஸ்ட்டுகள் மே 5 நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிராக்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் இடைவிடாத ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். உத்தியோகபூர்வ இடது கட்சிகள் சிராக்கிற்கான பிரச்சாரத்தில் கேள்விக்கிடமற்ற முறையில் மிக வெளிப்படையான மற்றும் செயலூக்கம் கொண்ட மூலங்களாக இருந்து வருகின்றனர்.

சோசலிசக் கட்சியின் சமூக ஜனநாயக வாதிகள், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்ட்டுகள், பசுமைக் கட்சியினர் மற்றும் ஏனைய எதிர்ப்பு இயக்கத்தினைச் சேர்ந்தவர்கள் நவ பாசிசத்திற்கான ''பாதையினை தடுப்பது'' தான் தமது ஒரே அக்கறை என குறிப்பிடுகின்றனர். பரந்துபட்ட தொழிலாளர்களும், இளைஞர்களும் தேசிய முன்னணியின் வாக்கின் வளர்ச்சியினை இட்டு அதிர்ச்சியடைந்திருப்பதுடன், கோபமடைந்திருக்கிறார்கள். அது சரியானதும் கூட. அதன் பின்னர் ''குடியரசு'' இனை பாதுகாக்கும் பலர் ''சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்'' என்பதன் ஒரு உண்மையான நம்பிக்கையில் அக்கறை கொண்டிருப்பதுடன், இனத்துவேசம் மற்றும் அந்நியர்கள் மீதான வெறுப்பிற்கும் எதிராக போராடுகிறார்கள். எப்படியிருந்தபோதும், உண்மையான அக்கறைகள் தற்போது இருந்துவரும் அரசியல் அமைப்பினை பாதுகாக்கும் முயற்சியின் பாகமாகவும், கோலிஸ்ட்டுகளுக்கும், ''பன்முக இடது'' (SP, PCF, Greens) களுக்கும் ஒரு உண்மையான சோசலிச மாற்றீடு தோன்றுவதை தடுக்கும் நோக்கத்துடன் சோசலிசக் கட்சியாலும் மற்றும் ஏனைய சக்திகளாலும் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டது.

கிட்டதட்ட ஆயிரக்கணக்கானோரை கவர்திருந்த ஏப்ரல் 30 கூட்டம் பாரீஸ் சோசலிசக் கட்சி அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அதில் முன்னாள் அமைச்சரவை அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், குறிப்பிட்ட மட்டத்தில் ஒரு தயக்கத்திற்குரிய தன்மை இருந்தபோதும் சிராக்கிற்கான ஒரு தேர்தல் அணிதிரள்வின் பண்பினை அது கொண்டிருந்தது. ''தீவிர வலதுக்கு எதிரான இடதுகளின் அணிதிரள்வில்-எல்லோரும் இணைவோம், மே 5 சிராக்கிற்கு வாக்களியுங்கள்'' என மேடையின் மீதிருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

இந்த முன்னைய நடைமுறை மீதான ஒருமனதான உறுதிப்பாடும், ''சோசலிஸ்ட்'' என அழைக்கப்படும் கட்சியினால் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஒரு கலந்துரையாடலின்மையும், இலகுவான வழியில் கூறினால், இது பலத்தின் ஒரு அறிகுறியல்ல. சமூக ஜனநாயக தலைமை தனது சொந்த அரசியல் பங்கு தொடர்பாகவும், லு பென்னின் வாக்கின் வளர்ச்சிக்கான தனது பொறுப்பு பற்றி ஆய்வுக்குள்ளாவது தொடர்பான ஒரு விவாவதத்தினை நடாத்துவதற்கு எந்தவொரு அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் காரணமும் ஒரு பதட்ட நிலையை உருவாக்குவதே. இதனால் தொந்தரவுபடுத்தும் கேள்விகள் எதுவும் எழுப்பப்படக்கூடாது என்பதே.

பாரீஸ் சோசலிச கட்சி அமைப்பின் தலைவரான Patrick Bloche இனால் கூட்டமானது தொடங்கிவைக்கப்பட்டது. இவர் மே 5 திகதி ''வாக்குப்பெட்டிக்குள் சிராக்குக்கு அதிகமாக வாக்களியுங்கள்'' என்ற தொனியில் சோசலிச கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். இதை அவர் ''லு பென்னுக்கு எதிரான வாக்கெடுப்பு'' என அழைத்தார். ஏப்பிரல் 21 தேர்தல் தோல்வியினைத் தொடர்ந்து கட்சித் தலைவரான ஜொஸ்பனின் பயணத்தினை சுட்டிக்காட்டி,'' நாம் அநாதைகளாக இருக்கிறோம், ஆனால் லு பென் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவதாலும் மற்றும் எமது உரிமைகளை பயமுறுத்துவதாலும் நாம் இந்த மாலை ஒன்றுகூடலை மனச்சோர்வாலும் சந்தோசமின்மையாலும் தூண்டப்பட்டிருக்கவில்லை.

அண்மையில் தேர்வான பாரீஸ் மேயர் Bertrand Delanoë, தற்போதைய ஜனாதிபதி சிராக் மேயராக இருந்தபோது அவர் உள்ளடங்கலாக குடும்பத்தினரால் செய்யப்பட்ட ஊழல்களை ஏப்ரலில் ஒரு அறிக்கையில் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அவர் பேசியபோது ஒரு ''சுயவிமர்சனம்'' செய்வதுகொள்வது அவசியம் என்றார், ஆனால் தொடர்ச்சியாக எதையுமே செய்யவில்லை. ''முற்றாக தம்மை சமூகத்திற்கு வெளியே இருப்பவர்களாக உணர்பவர்களுடன் ஒரு தொடர்பினை செய்வதற்கு சாத்தியமான சக்தியை இடதுகள் மட்டும்தான் கொண்டிருக்கிறார்கள்'' என எந்தவொரு அத்தாட்சியும் இல்லாமல் அவர் பிரகடனம் செய்தார்.

ஏன் இதை யாரும் நம்பவேண்டும்? சோசலிச கட்சி தசாப்தங்களாக ஆட்சியை பகிர்ந்துகொண்டதன் மற்றும் 5 வருடத்திற்குப் பின்னரான ஜொஸ்பன் அரசாங்கத்தின் சாதனைகள் தான் என்ன? பிரான்சில் அறுபது இலட்சம் மக்கள் ஏழ்மையின் கீழ் வாழ்கிறார்கள், இது கடந்த தசாப்தத்தில் அபிவிருத்தியடைந்த ஒரு எண்ணிக்கையாகும். முழுநேர வேலை செய்யும் கிட்டதட்ட பத்தரை இலட்சம் மக்கள் உழைக்கும் ஏழைகளாக (working poor) தம்மை இனம் கண்டுகொண்டுள்ளார்கள். பகுதிநேர வேலை, கூலி உடன்படிக்கை மற்றும் ஏனைய வேலையை சார்ந்திருக்கும் வடிவங்களும் பலமடங்காகியிருப்பதுடன் குறிப்பாக இளைஞர்களை பாதித்துக்கொண்டுள்ளன. இருபது இலட்சத்திற்கு மேலானவர்கள் உத்தியோகபூர்வமாக பிரான்சில் வேலையற்று இருப்பதுடன், பகுதிநேரமாக பணிபுரிபவர்கள், ஓய்வுபெறும் காலத்தை அடைய முன்பே ஓய்வினை எடுக்கும் படி நிர்பந்திக்கப்பட்டவர்கள் அல்லது தொடர்ச்சியற்று வேலை செய்பவர்கள் இங்கே கணக்கில் எடுக்கப்படவில்லை. சமூக சமத்துவமின்மை வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன், உழைக்கும் மக்களின் நிலைமைகள் சீரழிந்துகொண்டு அல்லது முடங்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, 2001 இல் பெரு வர்த்தகர்களின் வருமானம் 36 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஜொஸ்பன் மற்றும் அவரது ஸ்ராலினிச கூட்டுகள், பசுமைக் கட்சியினர், ஜோன் பியர் செவனுமோனின் Civic Block மற்றும் சிறிய இடது தீவிர கட்சிகளும் தமக்கு முன் பதவியிலிருந்த ஏனைய இரண்டு வலதுசாரி கட்சிகளையும் விட அதிகமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கியுள்ளனர். 35 மணிநேர வார வேலை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யவில்லை மாறாக அது நிலைமைகளை இன்னும் சீரழித்துள்ளது. அது பாரிய வேலை அழுத்தத்தை அதிகரித்துள்ளதுடன், ''மாற்றத்திற்குள்ளாக்ககூடிய (நெகிழ்வான)'' வேலை சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சாதகத்தை முதலாளிக்கு இது வழங்கியுள்ளது. சிராக்கிற்கும், லு பென்னிற்கும் உதவிசெய்ததுடன் குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்களுக்கு எதிராக பின்தங்கிய மக்கள் பகுதியினரினை அணிதிரட்டுவதற்கு ஜொஸ்பனும் அவரது கட்சியும் சட்டமும் ஒழுங்கும் பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்தில் பாவித்தனர்.

இவ்வாறான அற்புதமான பணியினை உத்தியோகபூர்வ இடதுகள் செய்திருந்திருந்தால், ஜொஸ்பனுக்கு குறைவாகக் கிடைத்த 15.9 வீதம் வாக்குகளையும், மற்றும் 30% இனர் வாக்களிப்பில் கலந்துகொள்ளததையும் எப்படி விளக்கப்படுத்துவது? ஏப்பிரல் 30 இல் சுயதிருப்தி கூட்டத்தின் தீர்மானகரமான முடிவுரையாக இருந்தது என்னவெனில், பிரெஞ்சு மக்கள் நன்றிகெட்டதாகவும், பிரயோசனமற்றதாக இருக்கின்றார்கள் என்பதுதான்.

சோசலிச கட்சியின் அணிதிரள்வு சுயதிருப்திக் கூட்டமாக இருந்ததை விட ஒரு கருணைக் கூட்டமாக இருந்தது. அதி வலதுசாரிகளின் ஆபத்து பற்றி பெரிய கத்தல் இருந்தபோதும், பேச்சுக்களிலோ அல்லது அரங்கத்திலோ எவ்வித அவசர நிலை உணர்வும் இருக்கவில்லை.

சோசலி கட்சி ஒரு முதலாளித்துவக் கட்சியாகும், அது தன்னை இலாப அமைப்பினை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்திருப்பதுடன், பிரதானமாக மத்தியதர வர்க்கம் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தினை அது கொண்டிருக்கிறது. சோசலிச கட்சி அங்கத்தவர்கள் சிலர் நவபாசிச லு பென்னால் எழுப்பப்பட்டிருக்கும் பயமுறுத்தலையிட்டு சிரத்தையுடன் கவனம் செலுத்தியிருந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் கட்சி அதிகாரத்துவத்தின் குறிப்பிட்ட தட்டினர் தமது சொந்த தொழிலுக்கும், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கும் தேர்தல் விளைவுகள் உண்டாக்கிய பாதிப்புகளை இட்டு மிக தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். சோசலிச கட்சி சிராக்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டினை உற்சாகத்துடன் தொடராமல் இருப்பது ஏனெனில், அது அதனது சொந்த தேர்வு செய்யப்பட்ட உத்தியோகஸ்த்தர்களும் அதே பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதால் தான்.

தமது நீண்ட கால அரசியல் எதிரியான சிராக்கு ஒரு வாக்கினை அளிப்பது தமக்குள் உள் முரண்பாடுகளை உண்டாக்கும் என்பதை எந்தப் பேச்சாளர்களும் குறிப்பிடவில்லை. ''வரும் ஞாயிற்றுக் கிழமை சிராக்குக்கு நான் வாக்களிக்கும்போது எனது கைகள் நடுங்கப்போவதில்லை.... இந்த வாக்கட்டையுடன் நாம் எமது குடியரசவாத நம்பிக்கைக்கு வாக்களிக்கிறோம்'' என Bertrand Delanoë அதிக புகழ்ச்சியுடன் பிரகடனம் செய்தார்.

தொலைக் காட்சி மற்றும் திரைப்பட நடிகையான Sophie Duez சிராக்குக்கான வாக்களிப்பதை ''ஒரு இடதுசாரி நடவடிக்கை'' என நியாப்படுத்த முனைந்தார். ''லு பென்னுக்கு எதிராக வாக்களிப்பதென்பது ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், மீண்டும் லியோனல் ஜொஸ்பனுக்கு வாக்களிப்பதாகும்'' என அவர் சொல்ல விரும்பியதைவிட அதிகமாக குறிப்பிட்டார். இந்த உணர்வு இளம் சோசலிஸ்ட் இயக்கத்தின் தலைவியான Charlotte Brun இலும் எதிரொலித்தது.

கட்சியின் செயலாளரும் அதனது புதிய தலைவரும், அதற்கு எல்லாத் தகுதியும் வாய்ந்த ஒரு வெற்றிகரமான கணக்காளரான François Hollande இறுதிப் பேச்சாளராக இருந்தார். ''இன்னும் கெட்டதைவிட வலதினை தேர்வு செய்வது ஒரு ஒழுக்கவியல் கடமையாகவும், ஒரு குடியுரிமை கடமையாகவும், குடிமகனுக்குரிய கடமையாகவும் இருக்கிறது... நாம் ஜாக் சிராக்குக்கு வாக்களிப்போம், நாம் அறிந்த நபருக்கும் மற்றும் நாம் முரண்பட்டுக்கொண்ட அவரது கொள்கைகளுக்கும் வாக்களிக்கவில்லை ஆனால் மே 5 தீர்மானகரமான முறையில் தேர்வு செய்யப்படும் ஜாக் சிராக்கினைவிட குடியரசுவாத மதிப்பினை பேணுபவர்கள் யாரும் இல்லை என நாம் கருதுவதாலே'' என Hollande கூட்டத்தின் மத்தியில் குறிப்பிட்டார்.

இது மிக மோசமான சுயதிருப்தி தன்மையை பிரெஞ்சு மக்களுக்குள் தூவுகிறது. ''ஜாக் சிராக் இடதுகளால் தேர்வு செய்யப்படுவதுடன், அடிக்கடி இதை அவருக்கு ஞாபகக்ப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது.'' என முன்னாள் சுகாதார அமைச்சர் Bernard Kouchner கூட்டத்தில் ஒரு பத்திரிகையாளர்களுக்கு குறிப்பிட்டார். இப்படியான ஒரு பதிலளிப்பு உண்மையில் கேலிக்கூத்தானதாகும்.

தமது பாகத்திற்கு சிராக் குழுவினர் ஜனாதிபதி எவ்வித தயக்கமும் இல்லாமல் அவரது சட்ட ஒழுங்கு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பார் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டினர். சிராக்கினை பலகீனப்படுத்துவதற்கு மாறாக, உத்தியோகபூர்வ இடதுகளும், அதனது கூட்டாளிகளும் சிராக்குக்கு ஒரு பலமான ''ஒழுக்க'' நிலையினையும் மற்றும் அவர் ஒருபோதும் கற்பனை செய்திராத சாத்தியத்தினை விட அதிகமான அரசியல் நகர்வுக்கான பாதையினையும் உத்தரவாதப்படுத்துகிறார்கள். சிராக்குக்கு பிரச்சாரம் செய்த சோசலிசக் கட்சியும் ஏனையோரும் முக்கியமாக பெரு வர்த்தகர்களுக்கும் மற்றும் அதனது அரசியல் பிரதிநிதிகளுக்கும் நன்றியுடன் இருக்கும்படி பிரெஞ்சு மக்களை முக்கியமாக கேட்டுக்கொண்டுள்ளனர். இது, அந்நியப்படுத்தல் மற்றும் வெறுப்பினை அதிகரிப்பதுடன், லு பென் ஆதரவுக்கான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும்.

சோசலிச கட்சி கூட்டம் ஒரு சலுகை படைத்த, சுயதிருப்திகொண்ட மற்றும் ஆழமான பழமைவாத சமூகத் தட்டிடரையும் கொண்டிருந்ததுடன், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை விட்டு மிக தூரத்தில் இருந்தது. லு பென்னது வாக்கின் மீதான சமூக ஜனநாயக அரசியல் மற்றும் ஊடக அமைப்புகளின் அதிர்ச்சி அதனது சொந்த வழியில் இந்த அமைப்புகளின் அந்நியப்படலை வெளிப்படுத்தியடதுடன், ஆழமான பிளவானது மக்களின் பரந்த பகுதியினரிடமிருந்து அவைகளை பிரித்தன. ஏழ்மையில் வாழும் பல இலட்சக்கணக்கான பிரெஞ்சு மக்களின் வெறுப்பினையும் கோபத்தினையும் இந்த தட்டினரால் புரிந்துகொள்ளவே முடியாதிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச கட்சி உயர் நிர்வாகிகள் மற்றும் ஊடகத் துறையின் நிர்வாகிகள் கடந்த 7 வருடங்களாக இப்படியான நிலைமைக்கு மிக நன்றாக சேவை செய்திருக்கிறார்கள்.

வாக்குகளின் பிளவை-தனியே லு பென்னுக்கான வாக்குமட்டுமல்ல, அத்துடன் ''தீவிர இடது'' என அழைக்கப்படும் கட்சிகளுக்கு கிடைத்த 10 வீத வாக்கு உள்ளடங்கலாக-- அவர்களால் விளங்கமுடியாது இருக்கிறது. இந்தப் பிரெஞ்சு பகுதியினரின் தன்மையும், நடவடிக்கையும் ஒரு பிரபஞ்சப் -பொதுவான- போக்கினை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் ''இடது'' மற்றும் வலதுகளின் அனைத்து அரசியல் அமைப்பு பிரிவு ஒவ்வொரு நாடுகளிலும் ''இடது'' மற்றும் வலதுகளின் அனைத்து அரசியல் அமைப்பு பிரிவுகளின் அதிகரித்துவரும் தனிமைப்படுத்தலானது அரசியல் நெருக்கடியின் தவிர்க்க முடியாத வெடிப்பினையும் மற்றும் ஒரு வெடிப்பு நிறைந்த வடிவத்தினை எடுக்விருக்கும் வர்க்க முரண்பாட்டினையும் இது உறுதிப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved