World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்May Day marchers in Paris speak on the French electionsபாரீசில் மே தின ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு தேர்தலைப் பற்றி பேசுகிறார்கள்By a WSWS reporting team மே 1 ல் பாரீசில் நடைபெற்ற அதி வலதுசாரிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத்தள பத்திரிக்கையாளர்கள் ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசினார்கள். ''தனது கருத்துக்களை எப்படி முன்னெடுப்பது என்பதை சோசலிச கட்சி அறியாது இருக்கலாம். அது இந்த அனைத்து அரசியல் விளையாட்டிலும் ஒரு பாத்திரம் வகித்துவரலாம், கொடூரமான ஒரு அமைப்பில் பங்கெடுத்ததற்காக அது கண்டிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இடது கட்சிகளுக்கிடையில் வாக்குகள் பிளவுண்டுபோனமை அல்லது புறக்கணிப்பு எப்படி அவரது வாக்கினை அதிகரித்தது, லு பென் 1995 லும் பார்க்க அதிக வாக்குகளை எப்படி பெறக்கூடியதாக இருந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வினை படிப்பதற்கு நான் விருப்பம் கொண்டிருந்தேன். அதன் எண்ணிக்கை எனக்கு தெரியாது'' என ஒர்லேயோன் (Orleans) என்னுமிடத்திலிருந்து வந்த ஒரு நாடக திரையரங்கத்தின் இயக்குனரான ஜில் தெரிவித்தார். ''அங்கே கருத்துக்கள் இல்லாதிருக்கின்றது. ஒரு கூட்டான மற்றும் ஒரு ஐக்கியப்பட்ட உலகினை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் இதில் இருந்து வெளிவரலாம். அது பற்றிய போதுமான கலந்துரையாடல் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ''இடது கட்சிகள் உள்ளடங்கலாக அனைத்துக் கட்சிகளும் சட்ட ஒழுங்கு என்ற தீயுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு தேர்தல் பிரச்சாரத்திலும் கூட அது சரியான ஒன்றல்ல. அது ஆபத்தானது. நான் ஒர்லெயோனில் இருந்து வந்துள்ளேன், அங்கு குற்றவியல் பிரச்சனைகள் உண்டு ஆனால் ஒடுக்குமுறை எதையும் தீர்த்துவிடப்போவதில்லை. ஆனால் சிந்தனைக் கருத்துக்கள் எங்கே? மற்றும் சாதாரணமாக லு பென் இற்கு எதிராக வாக்களியுங்கள் என்ற சாதாரண கருத்து எனக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணவில்லை. அது ஐனநாயகத்தை மட்டுப்படுத்துகிறது. ''சிராக்குக்கு வாக்களிப்பது அவர் செய்யும் அனைத்துக்கும் பொறுப்பெடுப்பதாக இருக்கும் என நீங்கள் கூறுவதுடன் நான் உடன்படுகிறேன். அப்படி வாக்களிப்பதன் ஊடாக நாம் ஏதாவது முக்கியமான மாற்றத்தை செய்யப்போகிறோமா? ''லு பெனுக்கான வாக்கினை கிடைப்பதற்கு வழிவகுத்த முதலாவது விடயம், சமூக, பொருளாதார, கலாச்சார சீரழிவாகும். அதி வலது மற்றும் அதி இடது என்ற ஒரு அரசியல் துருவப்படுத்தலை நீங்கள் இங்கே பார்க்கலாம் என நான் நினைக்கிறேன் என ஒர்லேயோனின் ஒரு நாடக திரையரங்கத்தின் இயக்குனரான ஜில் குறிப்பிட்டார். ''லு பென் வாக்கு ஒரு பரந்த அளவில் என்னை காயப்படுத்தியுள்ளது. ஏனையவர்களுக்கும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சிந்தனை ரீதியாக பல மக்கள் நெருக்கமாக இருப்பது என்னை தொந்தரவுக்குள்ளாக்கியுள்ளது. அது உண்மையில் என்னை பயமுறுத்துகிறது. நான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன். லு பென் என்னை மிகவும் நடுக்கம் கொள்ள வைக்கிறார். இந்த கொடூரமான அமைப்புக்கான சிந்தனைக்கு மக்கள் வீழ்ந்தது என்னை தொந்தரவு படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கள் கொடூரமானவையாக இருக்கின்றன. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமூகத்தினை அவர் ஆலோசனை செய்கிறார். ''நாம் எதிராக போராட வேண்டியது லு பெனுக்காக வாக்களித்த மக்களுக்கு எதிராகவல்ல, மாறாக அவரது கருத்துக்களுக்கு எதிராகவாகும். லு பென்னுக்கு வாக்களித்த மக்கள் எல்லா வகையிலும் ஒரு ஆபத்தான கருத்துக்களைக் கொண்ட மனிதனுக்கு வாக்களித்துள்ளனர். நான் உற்சாகம் எதுவும் இல்லாமல் சிராக்குக்கு வாக்களிக்கப் போகிறேன், அப்படியென்றால்தான் லு பென் உள்ளே வரமுடியாது போகலாம். இரண்டாவது சுற்றில் ஒருவருக்கு வாக்களிக்கும் ஒருவருக்கு எந்த பொறுப்புமில்லை என நான் கருதுகிறேன். முதலாவது சுற்றில் பொறுப்பிருந்தது தான். ஆனால் இரண்டாவது சுற்றில் எமக்கு எந்த தேர்வுமில்லை.'' இயந்திரவியல் வல்லுனரான அன்துவான் (Antoine) உலக சோசலிச வலைத் தளத்திடம் குறிப்பிட்டார். ''இன்றைய ஆர்ப்பாட்டம் அவசியமாக இருக்கிறது என நான் நினைக்கிறேன், ஆனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஜாக் சிராக்குக்கு வாக்களிப்பதன் மூலம் எதுவும் மாறப்போவதில்லை. ஐந்தாவது குடியரசின் அரசியல் சட்ட அமைப்பானது முடிவடைந்துவிட்டது. லு பென்னுக்கு தேர்தலில் பங்கெடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. ஐனநாயகத்திற்கு எதிரானவராகவும், இனவாதமிக்கவராகவும் அவர் இருக்கிறார். ''சிராக்குக்கு வாக்களிப்பதானது மாற்றீடாகாது. அவர் ஐனநாயகத்திற்கு எதிரானவராவார். அரசியல் சட்ட அமைப்பினை இன்னும் ஜனநாயகப்படுத்துவதற்கு சீர்திருத்தம் செய்யவேண்டும் என நான் நினைக்கிறேன். மக்கள் தமது கருத்துக்களை தெருக்களில் வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் பங்கெடுக்கக் கூடியதாக இருக்கும் ஒரு அமைப்பினை நாம் உருவாக்கியாக வேண்டும். தேர்தலை புறக்கணிக்க அழைப்புவிடும் உங்களது சுலோகத் துண்டினை பார்த்தேன், ஆகையால் தான் அதைப் நான் பெற்றுக்கொண்டேன்.'' என அல்ஜீரியாவில் பிறந்த ஒரு ஆசிரியரான டானியல் குறிப்பிட்டார். ''கம்யூனிஸ்ட் கட்சி இறந்துவிட்டது. வருங்காலத்திற்கு போவதற்கு நாம் ஒரு புதிய மற்றும் மாற்றீடான தீவிர இடதுசாரிக் கட்சியினை உருவாக்க வேண்டும். Lutte Ouvrière, LCR இல் இருக்கும் மக்கள் மற்றும் எந்தவொரு அமைப்பினையும் சாராது இருக்கும் நபர்களுடன் ஒரு தீவிரமான மிகையான அல்லது குறைந்த புரட்சிகரமான மற்றும் பிரான்சில் அபிவிருத்தியடையும் என நான் எதிர்பார்க்கிறேன். ''ஒருவர் சமூக ஜனநாயக கட்சியிலோ அல்லது எதிலும் எந்தப் நப்பாசைகளையும் கொண்டிருக்கக்கூடாது. சோசலிச கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்த நிலைமைக்கு பொறுப்பு வகிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது தனியார்மயப்படுத்தலை எதிர்த்ததா? ஆம் அல்லது இல்லையா? அவர்கள் விளையாட்டு நிகழ்வுகளுக்காக போராடினார்கள் ஆனால் அவைகளா சமூகத்தில் மிகமுக்கியமானவையாக இருக்கின்றன? மக்கள் இங்கே வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள், அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தம்மைப் பற்றியும் மற்றும் தமது சொந்த வசதி வாய்ப்புகளைப் பற்றியுமே கவலைப்படுகிறார்கள். அது தெளிவானது. நான் சிராக்குக்கு வாக்களிக்கப்போவதில்லை.'' என ஜோன் குறிப்பிட்டார். ''யதார்த்தமற்ற வகையில் எல்லாவகையான இடதுகளுக்கும் மக்கள் வாக்களித்ததுதான் பிரச்சனையாக இருந்தது. அவர்கள் ஏதேதோ பற்றி கனவுகண்டுகொண்டிருந்தார்கள் ஆனால் அந்தக் கணத்தில், ஜொஸ்பனும், சோசலிச கட்சியும் தேர்தலில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இது அந்த வகையில் பிரிந்ததன் விளைவாகத்தான் இருக்கிறது. ''இன்றைய நிலைக்கு அதி இடதுகளும் பாதிப்பொறுப்பு வகிக்கின்றனர் மற்றும் பாதிப்பொறுப்பினை அரசாங்கத்தின் கொள்கைகள் வகிக்கின்றன என நான் நினைக்கிறேன். இங்கே திருப்தியற்ற மக்களும் இருப்பதுடன், அதை அவர்கள் வெளிக்காட்ட விரும்புகிறார்கள். போதுமான வகையில் மக்களுக்கு அறியப்படுத்தப்படவில்லை என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கிடையிலான வித்தியாசங்களையும், ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமாக இருக்கின்றன என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன். தேசிய முன்னணிக்கு பாதையை திறக்க வாக்களிக்கக் கூடாது. ''மதிப்பின் இழப்பும், பிரான்சில் இருக்கும் வெளிநாட்டவர்களின் பயமும் தான் தற்போதைய சமூக நெருக்கடிக்கு காரணம் என பதிலளிக்கும் 'லு பென் ஒரு பேய். கல்வி மற்றும் கலாச்சார பகுதிக்கு லு பென் ஒரு உண்மையான ஆபத்தான மனிதன். லு பெனின் பாதையை அடைக்க வேண்டும் என நான் கருதுகிறேன். பெரும்பாலும் தொழிலாளர் பகுதிகளில் அபிவிருத்தியடைந்து வரும் பாதுகாப்பின்மையை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது மற்றும் நாம் ஒரு சிறிய சோசலிச கூடாரத்தினுள் வசிக்கிறோம். அங்கே இருந்துவரும் வறுமையினைப் பற்றி நாம் கணக்கில் எடுக்கவில்லை. அது பயங்களில் இருந்த ஒரு வாக்காக இருந்தது. ''நான் சிராக்குக்குத்தான் வாக்களிக்கப் போகிறேன். சட்டசபைத் தேர்தலில் நல்ல விடயத்தை எதிர்பார்க்கிறேன். இதுவொரு கணித கணிப்பீடுதான். ஒருவரின் வெறுமையான வாக்கு லு பென்னுக்கான ஒரு சிறிய விலகலை விட்டுச் செல்லும். இதுவே போதுமான தர்க்கமாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். எப்படியாயினும், சிராக் வெற்றி பெற்றால் அழிவுகரமாக இருக்கும் என கருதுபவர்களில் நானும் ஒருத்தியில்லை. எனது கண்டனங்களுக்கான ஒரு சவாலாக அது இல்லை.'' என ஒரு மருத்துரான ஜாக்லின் WSWS இடம் குறிப்பிட்டார். ''நான் சிராக்குக்கு வாக்களிக்கப்போவதில்லை. அதிர்ச்சியடைய வைக்க கிட்டதட்ட நான் லு பென்னுக்கு வாக்களிப்பேன். நல்லது, நான் வாக்களிக்கப்போவதில்லை. நான் அதி இடதுசாரியாக இருக்கிறேன். ஒரு கிழமைக்கு மேலாக அதி தீவிர வலதுகளுக்கு எதிரான போராட்டம் பற்றிய பேச்சு இங்கே இருந்துவந்தது. ஆனால் இப்போது வார்த்தைகள் மாறிவிட்டதுடன், 'தீவிரத் தன்மை' க்கு எதிராக போராடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். எல்லாவகையிலும் அது ஒரே விடயமல்ல. மக்களை அவர்கள் கட்டிப்போட விரும்புகிறார்கள். லு பென் தேர்வு செய்யப்பட்டிருந்தால் கடந்த இரண்டு கிழமை இருந்திருக்க முடியாது. இரண்டு கிழமைக்குள்ளேயே அவர் தூக்கியெறியப்பட்டிருப்பார். லு பென்னின் தேர்தல் எதையும் மாற்றிவிடப்போவதில்லை. தற்போதைய அமைப்புக்கும், மக்கள் வேலை செய்யும் முறைக்கும், நவ தாராளவாதத்திற்கும் எதிரானவன். ''பயத்திற்கு அப்பால், லு பென் மற்றும் பாசிச பயத்திற்கும் அப்பால் சிராக்குக்கு வாக்களிக்கும் படி மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பாசிசம் பிரான்சில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. தொழில்நுட்பரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் அது சாத்திமற்றது. ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்களின் நோக்கமானது மக்களை சிராக்குடனும், நவ தாராளவாதத்துடனும் கட்டிவைப்பதாக இருக்கிறது. தற்போது எவ்வித மாற்றீடும் இல்லை. முதலாவது சுற்றில் மாற்றீடு அதி இடதுகளுக்கு வாக்களிப்பதாக இருந்தது. சோசலிச கட்சி முதலாளிகளின் நலன்களை பேணுகிறது. மாற்றீடு? புரட்சிதான்.'' என ஒரு மாணவரான, Pierre குறிப்பிட்டார். தேர்தலின் விளைவினை கேட்ட போது நான் கத்தினேன். எமக்கு என்ன நடந்துவிட்டது? 17 வீதம் லு பென்னுக்கு வாக்களிக்க பிரான்சுக்கு என்ன நடந்துவிட்டது? என நான் நினைத்தேன். ''நாம் தற்போது சிராக்குக்கு வாக்களிக்க வேண்டும். போராட்டம் பின்னர் வரும். இதுவொரு அவசர விடயமாக இருக்கிறது. வீட்டின் மீது நெருப்பு பிடித்துள்ளது. எமக்கு வேறு எந்த தேர்வும் கிடையாது. பெரும்பாலும் இது மிகைப்படுத்தலாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகும். வரலாறு எனக்குத் தெரியும். லு பென் 1 அல்லது 2 வீதத்தை பெற்றபோது, ஒருபோதுமில்லை, ஒரு போதுமில்லை என மக்கள் கூறினர். ஆனால் இப்போது லு பென்னுக்கு 17 வீதம் கிடைத்திருக்கிறது. ஒரு நாள் ஆட்சிக்கும் வரலாம். ''லு பென்னுக்கு வாக்களித்தவர்களில் அனவரும் பாசிசத்திற்கு வாக்களிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதை என்னால் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது ஆனால் இவை பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறியவிரும்புகிறேன். பூகோளமயமாக்கம் மற்றம் வெளிநாட்டவர்களை இட்டு மக்கள் பயப்படுகிறார்கள். மக்கள் பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பதை நான் விளங்கிக்கொள்கிறேன், ஆனால் ஒரு பாசிச கட்சிக்கு வாக்களித்ததை நான் ஒருபோதும் விளங்கிக்கொள்ளப் போவதில்லை. அது ஏற்றுக்கொள்ள முடியாது. லு பென்னுக்கு ஒரு 30 வீதமான வாக்கு இருக்குமானால், அது கொடூரமானதாக இருக்கும்.'' என ஒரு வடிவமைப்பாளரான டொமினிக் குறிப்பிட்டார். ''அரசியல் நிலைமையானது மிக மோசமானதாக இருக்கிறது. முதல் எப்போதும் செய்யாததை இப்போது அவர்கள் செய்திருக்கிறார்கள். என்னுடன் வேலை செய்யும் பல கூட்டாளிகள் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர். முதலில் அவர்கள் இதைப்பற்றி பேசவில்லை இப்போது வெளிப்படையாக பேசுகிறார்கள். ''அவர்கள் துவேசமானவர்களல்ல, அவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் பணிபுரிகிறேன். அவர்களை நான் அறிவேன். அவர்கள் வெறுப்புற்றுவிட்டனர். அவர்கள் இதை அடைந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் நான் உடன்படவில்லை ஆனல் அவர்கள் தமக்கு விரும்பியதை செய்வதில் சுதந்திரம் உடையவர்கள். ஆனால் கொடூரமானது என்னவெனில் லு பென்னை நிறுத்த சிராக்குக்கு வாக்களிக்க வேண்டும் என கருதுவதுதான். அது ஒரு மாற்றீடாகாது. சிராக் 5 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஒரு பிற்போக்கு மனிதர். தொழிற் சங்கங்கள் கூட ஒரு பிரச்சனையாக இருக்கின்றன. அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட குறைகூறப்படுகிறது, ஆனால் அவர்கள் அரசாங்கத்தில் இருந்ததால் விளைவுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்கள் அதற்கு இப்போது விலை செலுத்துகிறார்கள். நான் துனிசியாவில் பிறந்தேன். எனது குழந்தைகள் இங்கேதான் பிறந்தன. மக்கள் வெளிநாட்டவர்களைப் பற்றி குறைகூறுகிறார்கள். இங்கே வந்த நிறையப் பேர் இந்த நாட்டினை நேசிக்கிறார்கள், அவர்கள் முட்டாள்கள் இல்லை. எல்லா இடத்திலும் பிரச்சனைகள் இருக்கின்றன.'' என துனிசியாவில் பிறந்த பாரீஸ் நகர பூங்காவனத்துறை தொழிலாளியான அலி WSWS இடம் குறிப்பிட்டார். ''அரசியல் நிலைமை பிரான்சில் முடிவடையாததாக இருப்பதாக நான் கருதுகிறேன். குற்றம் பற்றிய பயத்தினால் பாசிசம் வளர்ந்துகொண்டிருக்கிறது. பிரச்சனை யதார்த்தமானது தான், ஆனால் லு பென் அந்த விடயத்தினை பயன்படுத்திக்கொள்கிறார். கறுப்பு, அராபிய மற்றும் பிரெஞ்சு மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும், ஏனெனில் நாம் மனிதர்கள். லு பென்னுக்கு வாக்களித்த அனைவரும் துவேசமானவர்களல்ல. பிரெஞ்சு மத்தியதர வர்க்கத்தினுள் குற்றச்செயல்கள் மற்றும் அதேபோல் ஏனைய விடயங்களைக் கண்டு கவலைப்படும் மக்கள் இருக்கின்றனர். பயமானது அந்நியர்கள் மீதான வெறுப்பு, துவேசத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வேலையின்மை வீதமும் கூட மக்களை பயம் கொள்ள வைக்கிறது. ''உண்மையில் சோசலிச அரசாங்கம் அதிகமாக எதையும் செய்யவில்லை. நாம் ஒரு இடதுசாரி
வேட்பாளரை கொண்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இடதுசாரிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை. எதிர்கால
உலகத்தில் சுற்றுசூழலியல் தான் எனது கருவாக இருக்கிறது.'' என மொறோக்கில் பிறந்த பல்கலைக்கழக வளாக
காப்பாளராக பணிபுரியும் சப்ரினா கூறினார். |