US troops deployed to former Soviet republic of Georgia
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவுக்கு அமெரிக்க துருப்புக்கள்
அனுப்பப்பட்டன
By Patrick Martin
1 March 2002
Back to screen version
பிப்ரவரி 21 அன்று, முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவின் தலைநகர் த்பிலிசி
(Tbilisi)
க்கு நாற்பது இராணுவத்தினரை இரு அமெரிக்க விமானப்படை விமானங்கள் கொண்டு
வந்தது, உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயலுக்கு அடுத்த பகுதியில், காகசஸ் பிராந்தியத்தில் அமெரிக்க போர்ப்படையினரை
முதல் தடவையாக அனுப்பியதைக் குறிக்கிறது.
பாதுகாப்பு உளவுத்துறை சேவை
STRATFOR.com- ஆல் வழங்கப்பட்ட அறிக்கையின்படி, "பயங்கரவாத
எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்புப் படைப்பிரிவினர், மற்றும் விமானப்படை சேவை அளிப்பு பிரிவினர்
வழமையாக துருக்கியில் உள்ள, இன்சிர்லிக்கில் தளத்தைக் கொண்டுள்ளனர்."
STRATFOR,
Nezavisimoe Voennoye Obozrenie
என்ற ரஷ்யப் பத்திரிகையில் வெளிவந்த வருகை பற்றிய விவரங்களை மேற்கோள்
காட்டியது.
இந்த இராணுவ அனுப்புகை பிப்ரவரி 26 அன்று பென்டகன் அதிகாரிகளால் செய்தியாளர்களுக்கான
விளக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த 40 இராணுவ வீரர்களும் ஜோர்ஜிய இராணுவத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கு,
இராணுவத்தின் ஐரோப்பிய ஆணையகத்திலிருந்து அனுப்பப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆவர். அவர்களில் சிறு எண்ணிக்கையினர்்
ஜேர்மனியில், ஸ்ருட்கார்ட்டில் உள்ள அவர்களது தளத்திற்கு இப்பொழுது திரும்பி உள்ளனர். ஆனால் அவர்கள் 200 சிறப்புப்
படைப்பிரிவினரால் இடப்பெயர்ச்சி செய்யப்படுவர், அவர்கள் ஜோர்ஜியப் படையினருக்கு பயிற்சியையும் தந்திரோபாய
திக்கையும் வழங்குவர்.
பிலிப்பைன்ஸில் போல, அமெரிக்கத் துருப்புக்களானது பயங்கரவாதிகள் என்று கூறப்படுவோருக்கு
எதிராக தந்திரோபாயங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி உள்ளூர் படைகளுக்கு "ஆலோசனை" வழங்கும்
என்ற நிலையை பென்டகன் பேணிவருகிறது. இந்த விஷயத்தில் அது செச்சென்யாவுடனான ஜோர்ஜிய எல்லை அருகே உள்ள,
பான்க்கிசி ஜோர்ஜில் (Pankisi Gorge)
செயல்படும் செச்சென் மற்றும் இஸ்லாமிய போராளிகள் ஆகியோருக்கு எதிராக
ஆகும். அவர்கள் Predator drones
முறையில் இயக்கவும் கூடும் அது ஏவுகணைகளை தானியங்கி முறையில் ஏவும்.
ஒரு பென்டகன் அதிகாரி, "செச்சென்ஸ் மற்றும் அல்கொய்தா இவற்றுக்கு இடையிலான
தொடர்பு பற்றி நாம் தெளிவாக இருக்கிறோம்." அவர்கள் பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தத்தின் சாத்தியமான
இலக்குகளின் கீழ் தெளிவாகவே விழுவார்கள் என வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார்.
பென்டகன், ஜோர்ஜியாவுக்கு ஏற்கனவே பத்து
UH-1H Huey ஹெலிகாப்டர்களை
வழங்கியதுடன், கொரில்லாக்களின் நிலைகள் மீது தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் விமானத்தை எப்படி இயக்குவது
மற்றும் பராமரிப்பது என்று ஜோர்ஜிய படையினருக்கு பயிற்சி கொடுத்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள், ஜோர்ஜியா- பான்க்கிசி ஜோர்ஜ் மீது சரியான
கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளனர். கொடூரமான ரஷ்ய இராணுவத் தாக்குதல்களில் இருந்து
தப்பித்து ஆயிரக்கணக்கான செச்சென்கள் அங்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஜோர்ஜியன் பலவீனம், நூற்றுக்கணக்கான
செச்சென் போராளிகள் மற்றும் அல்கொய்தாவுக்கு விசுவாசமான டஜன் கணக்கான போராளிகள் அப்பிராந்தியத்தை புகலிடமாகவும்
இராணுவ ஆதரவு அளிப்புத் தளமாகவும் பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது என்று கூறி உள்ளனர்.
தலையீடு செய்வதற்கு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பு என கூறப்படும் சாக்குப்
போக்கினை யார் சாதகமாக எடுத்துக் கொள்வது என்பது தொடர்பானதில் இரு ஆட்சிகளும் மோதலுக்கு வந்துள்ளன.
அமெரிக்கா, அமெரிக்க சிறப்புப் படையினரையும் அவர்களின் உயர் தொழில் நுட்ப ஆயுதங்களையும் வழங்க அதேவேளை
ரஷ்யர்கள், செச்சென் யுத்தத்தை மும்முரமாக ஜோர்ஜிய மண்ணுக்கு கொண்டுவரும் பொருட்டு, பான்க்கிசி ஜோர்ஜில்
தாங்கள் ஆக்கிரமிக்க ஜோர்ஜிய அனுமதியை நாடியுள்ளனர்.
ஜோர்ஜிய ஜனாதிபதி எடுவார்ட் ஷெவர்னாட்சே, ரஷ்யக் கோரிக்கைகளை திருப்பித்
திருப்பி மறுத்ததுடன், அதற்குப் பதிலாக தற்போது பலனை அனுபவிக்கும் புஷ் நிர்வாகத்தை தேர்ந்தெடுத்தார்.
பிப்ரவரி 11 அன்று ஜோர்ஜிய வார இதழுக்கு அளித்தபேட்டியில், அமெரிக்கத் துணைநிலைத்
தூதுவரும் தற்காலிக தூதுவருமான பிலிப் ரெம்லர், பான்க்கிசி ஜோர்ஜ் தொடர்பான ரஷ்யப் புகார் மீதாக முதலாவது
தடவையாக அமெரிக்க அங்கீகாரத்தை வழங்கினார். டஜன் கணக்கான ஆப்கான் முஜாஹைதீன்கள் வெளியேறி ஜோர்ஜியாவிலுள்ள
செச்சென் கொரில்லாக்களிடம் சேர்ந்துள்ளனர் என கூறியதுடன், பயங்கரவாத எதிர்ப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்க
அமெரிக்கா, ஜோர்ஜிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் வேலைசெய்யும் என்று கூறினார்.
மத்திய ஆசிய காகசஸ் நிலையத்தின் அமெரிக்க சிந்தனையாளர்கள் தலிபான் ஆட்சியின் சீர்குலைவு
ஜோர்ஜியாவுக்குள் சிந்தியிருக்கிறது என்று கருத்துரைத்து அதேவாரம் அறிக்கை விடுத்தனர். அந்நிலையம், "சர்வதேச பயங்கரவாதத்தை,
போதைப் பொருட்கள் வியாபாரம் மற்றும் ஏனையவகை நடவடிக்கைகளைக் கையாளும் சட்டவிரோத குழுக்கள் ஆப்கானிஸ்தானை
விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டால் மற்றும் பலவீனமான அரசாங்கத்தைக் கொண்ட புதிய நாடுகளைத் தேடினால்,
ஜோர்ஜியா ஒரு தேர்வாக இருக்கலாம்" என எழுதியது.
ரஷ்ய அதிகாரிகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகக் கருதும் ஜோர்ஜியாவில்
அமெரிக்க ஒருதலைப்பட்சமான தலையீட்டின் முன்னேற்றம் குறித்து கடுமையாக எதிர் வினை ஆற்றி உள்ளனர். உஸ்பெக்கிஸ்தான்,
தஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜக்கஸ்தான் ஆகியன ஆப்கானிஸ்தானில் யுத்தத்திற்கு குறிப்பிடத்தக்க உதவியை
வழங்கியிருக்கிறதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவ ஆலோசகர்களுக்கு உபசரிப்பு செய்வதில் முன்வந்ததில் ஜோர்ஜியா
ஐந்தாவது முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருக்கும்.
ரஷ்ய அதிகாரிகள், தங்களின் எதிர்ப்பை செச்சென் மற்றும் இஸ்லாமிய கொரில்லாக்கள்
மீதான அமெரிக்க--ரஷ்ய கூட்டுத் தாக்குதலைக் கூட்ட வேண்டும் என்ற ஆலோசனைகளுள் மறைத்தனர். பிப்ரவரி 20
அன்று ரொய்ட்டர், செச்சென் போராளிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகளுடன் சேர்ந்த எந்தவிதமான கூட்டு நடவடிக்கையையும்
நிராகரிக்கும் வகையில் "அமெரிக்க உயர் அதிகாரி" யை மேற்கோள்காட்டியது. அமெரிக்கா, ரஷ்ய முன்மொழிவுக்கு
சம்மதித்தது என்ற ரஷ்ய செய்தி ஸ்தாபனம் இட்டார்-டாஸ் வைத்த அறிக்கையை அந்த அதிகாரி மறுத்தார், மேலும்
பான்க்கிசி ஜோர்ஜில் நடக்கும் எந்த நடவடிக்கையும் சிறப்பாக அமெரிக்க--ஜோர்ஜிய நடவடிக்கையாக இருக்கும்,
ரஷ்ய சம்பந்தம் இருக்காது என்று கூறினார்.
ரஷ்ய பத்திரிக்கைச் செய்தி பற்றி செய்திச்சுருக்க விளக்கத்தில் கேட்டபோது, அரசுத்துறை
பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் அமெரிக்கக் கொள்கையில் அங்கு இடப்பெயர்வு எதுவும் இருந்திருக்கவில்லை என கூறினார்.
ரஷ்யப் பாதுகாப்பு அதிகாரிகள் பான்க்கிசி பிராந்தியத்தின் நடவடிக்கையில் ஜோர்ஜிய ஒத்துழைப்பை
தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றனர். பிப்ரவரி 21 அன்று, முதலாவது அமெரிக்க இராணுவ ஆலோசகர் வந்து சேர்ந்தபொழுது,
ரஷ்ய உளவு சேவை FSB
-ன் தலைவர் நிக்கோலாய் பட்ருஷேவ், ஷெவர்னட்சே மற்றும் ஜோர்ஜிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் வாலரி கபுர்த்சானியா
ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜோர்ஜியா சென்றார்.
STRATFOR ஆய்வின்படி, ஜோர்ஜியாவில் அமெரிக்கத்
துருப்புக்களை அனுப்புவது அமெரிக்காவைப் பொறுத்தவரை "ஒரு மூலோபாய வெற்றி" ஆகும். ஈராக் மீதான அமெரிக்கத்
தாக்குதலுக்கு ஜோர்ஜியாவைத் தளமாகப் பயன்படுத்தும் சாத்தியம், காஸ்பியன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலக
சந்தைக்கு கொண்டு வருவதற்காகத் திட்டமிட்ட குழாய்வழிப் பாதைகள் இட வகையில் அண்மையாக இருப்பது, மற்றும்
ஜோர்ஜிய அண்டை அயலாருடன், குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க அஜர்பெய்ஜான் மீது செல்வாக்கை அதிகரிப்பது என
ரஷ்யாவின் மேற்கு மற்றும் தெற்கு எல்லை முழுதும் அமெரிக்க அழுத்தம் அதிகரித்ததை அவ்வெளியீடு மேற்கோள்காட்டியது.
"அமெரிக்க இராணுவ இருப்பு, காஸ்பியன் எண்ணெய்ப்படுகையிலிருந்து பெரும்பான்மை எண்ணெய்
மற்றும் எரிவாயு மேற்குநோக்கி செல்வதை உறுதிப்படுத்த உதவும், புவிசார் அரசியல் போட்டியாளர்களான ரஷ்யா
மற்றும் சீனாவைக் கடந்து செல்லும்" என STRATFOR
எழுதியது.
அங்கு ஏனைய மூலோபாய சுட்டிக் காட்டல்கள் இருக்கின்றன, சிறப்பாக இந்தப் பிராந்தியத்தில்
ரஷ்ய செல்வாக்கைக் குறைப்பது மற்றும் அமெரிக்காவின் கூட்டாளியான துருக்கியின் பாத்திரத்தை விரிவாக்குவது ஆகியனவாகும்.
ரஷ்யா கடந்த ஆண்டில் கைவிட்ட, த்பிலிசி
(Tbilisi) க்கு
அருகில் உள்ள வாஜியானி விமான தளத்தில் அமெரிக்கப்படைகள் நிலைகொள்ளலாம். காகசஸ் மலைகளின் தெற்கில் ரஷ்ய
இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, டிரான்ஸ் காகசஸில் ரஷ்யப் படைகளின் கூட்டத்து ஜோர்ஜிய
தலைமையகத்தை மூடச் சொல்லி ரஷ்ய தளபதி திரும்பத்திரும்ப ஆணையிட்டார். இந்த இராணுவத் தலைமையகத்தை இல்லாமற்
செய்தது இப்பொழுது ஆர்மேனியாவில் நிலைகொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை ஆபத்தான வகையில் தனிமைப்படுத்த வழிவிட்டிருக்கிறது,
ரஷ்யாவினுள்ளே உள்ள அவர்களின் இராணுவ ஆதரவு மற்றும் அளிப்புக்களில் இருந்து ஜோர்ஜியன் எல்லைப் புறத்தால் பிரிக்கப்பட்டது.
இந்தப் பிராந்தியத்தில், துருக்கிய மொழி அதிகமாகப் பேசும் அஜர்பைஜானில் மற்றும்
துருக்கி பெரிய வர்த்தகப் பங்காளராக ரஷ்யாவை முந்திச் செல்லும் ஜோர்ஜியாவில் துருக்கியின் செல்வாக்கு சீராக
அதிகரித்து வருகிறது.
கடந்தமாதம் இஸ்தான்புல்லில் இருந்து வந்த செய்தியின்படி, பிராந்தியப் பாதுகாப்பு
சம்பந்தமாக அஜர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் துருக்கி ஆகியன முத்தரப்பு உடன்பாடு தொடர்பான வேலையை இறுதி
முடிவு செய்தனர். அப்பத்திரமானது பயங்கரவாதத்தையும் திட்டமிட்ட குற்றத்தையும் எதிர்த்துப் போராடுவதையும்
அதேபோல பல எண்ணெய் குழாய்வழிப்பாதைகளை, சிறப்பாக காஸ்பியன் எண்ணெயை அஜர்பைஜான், ஜோர்ஜியா மற்றும்
துருக்கி வழியாக மத்தியதரைக்கடலுக்குக் கொண்டுவரும் அமெரிக்க ஆதரவு பாக்கு-த்பிலிசி-செய்ஹான் செயல் திட்டத்தை
பாதுகாப்பதையும் பற்றிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அந்த உடன்பாடு அஜர்பைஜானில் உள்ள தளங்களை துருக்கியர்கள் பயன்படுத்துதல் பற்றி
கூறுகிறது. இது முதலாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் காகசஸில் முதல் முறையாக துருக்கியப் படைகள் அனுப்பப்படுவதைக்
குறிக்கும். ரஷ்யப் பத்திரிகைச் செய்திகளின்படி, துருக்கியப் பிரதமர் புலெண்ட் எசெவிட் அஜர்பைஜானில் உள்ள
தளங்களைப் பற்றி அவரது அண்மைய வாஷிங்டன் விஜயத்தின்பொழுது விவாதித்தார். ஜோர்ஜியாவின் இராணுவக் கட்டமைப்பை
நவீனப்படுத்தும் வேலையில் துருக்கிய ஆட்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த முத்தரப்பு உடன்படிக்கை இம்மூன்று நாடுகளோடும் பொது எல்லைகளைக்
கொண்டிருக்கும் ஆர்மீனியாவை உள்ளடக்கவில்லை. இராணுவ ஒத்துழைப்பு பற்றிய புதிய உடன்பாடு, 1990களின்
ஆரம்பத்தில் இரத்தம் தோய்ந்த இராணுவ மோதல் பகுதியான, சர்ச்சைக்குரிய ஆர்மீனியா கட்டுப்பாட்டில் உள்ள வேற்று
நாட்டால் சூழப்பட்ட நிலப்பரப்பான நகோர்னோ-கரபாக் எல்லைப் பகுதிக்கு அஜர்பைஜானின் உரிமைகோரலைப்
புதுப்பிக்கும் என ஆர்மீனிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
|