World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்

Letters to the WSWS on the US war in Afghanistan

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போரைப்பற்றி உலக சோசலிச வலைத்தளத்திற்கு வந்த கடிதங்கள்

Back to screen version

25 January 2002

உலக சோசலிச வலைத் தளத்திற்கு அண்மையில் வந்த கடிதங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை பின்வருமாறு வெளியிடுகிறோம்.

உண்மையை கூறுவதற்கு ஒருவருக்கேனும் தைரியமிருக்கிறது என நான் மகிழ்ச்சி அடைகிறேன்! நன்றி!

NS

14 ஜனவரி 2002.


அன்புள்ள திரு. மார்ட்டின்,

ஆப்கன் போர்க்கைதிகளை அமெரிக்க அரசு நடத்தும் முறை பற்றி அமெரிக்க அமெரிக்க குடிமகன் என்ற வகையில் நான் வெட்கமடைகிறேன். இது புதிய ஏகாதிபத்திய உலக ஒழுங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்களுடன் மோதும்போது ஏற்படும் பயங்கர விளைவுகளை எதிரொலிக்கிறது. ராணுவ விசாரணை மற்றும் மரண தண்டனைக்கு இருத்தப்பட்டுள்ள இந்த கைதிகளுக்கான முடிவை யதார்த்தம் ஏற்கனவே முன்கணித்திருக்கிறது. அமெரிக்க எல்லைக்கு வெளியில் இரண்டாயிரம் கைதிகளுக்கு கடூழியச் சிறைமுகாம் என நீங்கள் குறிப்பிடும் ஒரு சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. இது நாஜிக்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளது முகாம்களுடன் போட்டியிடத்தக்கது.

இவர்கள் ஆப்கான் இஸ்லாமிய அடிப்படைவாத அரசின் ஆதரவாளர்கள் சிலர் ஒசாமா பின் லேடனின் அமைப்பை சேர்ந்தவர்கள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், இவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக போரிடுகின்றனர் என்பதால், இவர்களைக் கண்டு பயப்படுகின்றனர். அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் உலகத்தை மேலாதிக்கம் செய்வதை எதிர்த்து போராடுவதற்கு, பயங்கரவாதத்தை ஒரு வழிமுறையாக ஆதரிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை இந்த போராளிகளுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. இவர்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆவர். இவர்கள் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை. தாங்கள் இறக்குமுன் மற்றவர்களையும் தம்மோடு மரணத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அஞ்சாதவர்கள்.

சுதந்திரத்தை விரும்பும் பாட்டாளி மக்களும் விவசாயிகளும் இத்தகைய பழிவாங்கும் போக்கையும் காழ்ப்புணர்ச்சியையும் வளர்க்கும் எந்த இயக்கத்தோடு எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. இது நம்முடைய நீதிமுறை அன்று; அவர்களுடையது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்காவை வன்மையாகக் கண்டிக்கும் போராட்டத்தில் சேரவேண்டும். அமெரிக்க ஆளும் தட்டினரைப் பொறுத்த அளவில் உண்மையானது எதுவெனில், மக்களை சுரண்டி வறுமையில் ஆழ்த்தும் ஆளும் முதலாளித்துவத்துக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடும் இவர்கள் செய்த ஒரே குற்றத்திற்காக அமெரிக்க முதலாளித்துவம் அவர்களை ஒட்டு மொத்தமாக அழித்துத் தள்ளுவதை அனுமதிக்கும் தொடர்ச்சியான பொய்களாகும்.

ஒவ்வொரு போரிலும் உண்மையான போர்க்குற்றவாளிகள் உள்ளனர். பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்த சில தலிபான் போராளிகள் அங்கு இருக்கின்றனர். ஆப்கான் மக்களால் இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

உங்கள் அன்புள்ள,

TS

15-01-2002


நான் இன்று இணையதளத்தில் பட்ரிக் மார்ட்டினின் கட்டுரையைப் படித்தேன். ("Afghan PWOs at Guantanomo Base; bound and gagged drugged caged Like animals") நான் கவலையுடன் கூற வேண்டியதெல்லாம் நீங்கள் அமெரிக்காவை குற்றம் சாட்டுவது போலவே ஒருதலைப்பட்சமாய் குருட்டாம் போக்கிலேயே இந்த பிரச்சனையை அணுகுகிறீர்கள். 3,000 சாதாரண நிராயுதபாணியான அமெரிக்க குடிமக்கள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மனித நேயமற்ற சூழ்நிலை; பிரதிவாத வக்கீல்கள், சரியான நீதி எங்கே போயிற்று? மேற்கூறப்பட்டவர்கள் கையில் ஆயுதமில்லை யாரையும் அவர்கள் அச்சுறுத்தவில்லை. அவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களைப் அன்று பார்க்க விரும்பினர். இவர்களின் உரிமைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களா? பர்தா அணியாத பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண் கல்வி மறுக்கப்பட்டது. இந்த பெண்கள் உரிமைகள் என்னவாயிற்று? நீங்கள் இந்த மிருகங்களுக்காக உரிமையுடன் கோரும் நியாயமும் நீதியும் எங்கே போயிற்று?

ஆம் அவர்கள் மயக்க மருந்து அளிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டனர். ஒரு தனி அமெரிக்கனின் உயிர் காப்பாற்றப்படுமாயின் அப்படியே நடக்கட்டும். அவர்களுக்கு எந்த விதமான சட்டத்திட்டம் இல்லாதபோது ஏன் அமெரிக்க உள்நாட்டு சட்டமோ சர்வதேச சட்டமோ ஏன் அவர்களுக்காக பயன்படுத்தப்படவேண்டும்? தலிபான் பயங்கர ஆட்சியின்போது நீங்கள் இதைப்போன்ற அவர்களைப் பற்றிய நேர் எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்க முடியுமா, அவர்களின் தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிகைகளிலோ அதனை வெளியிட்டிருக்க முடியும் என நினைக்கிறீர்களா? --ஓ பொறுங்கள், ஆப்கான் மக்களுக்கு தொலைக்காட்சி கிடையாது; எப்படியோ ஆப்கான் பெண்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. நீங்கள் அமெரிக்காவில் உங்கள் நம்ப முடியாத பகட்டுக் கூச்சலை வெளியிட முடிகிறது, நீங்கள் அதிர்ஷ்டசாலி. அமெரிக்க வாழ்க்கை முறையையும் அமெரிக்க சுதந்திரத்தையும் பற்றி பொறாமை கொண்ட இந்த "மத வெறியர்கள்" நிரம்பிய நாட்டில் இதனை முயற்சி செய்யுங்கள்.

BZ

15 ஜனவரி 2002


புஷ்ஷின் வரி குறைப்பு பற்றி இனைய தளத்தில் செய்தி தேடும்போது (US Planned War in Afghanistan Long Before Sept.11) நான் அந்த நாளிலிருந்து அதைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அமெரிக்க அதிகாரிகளுக்கு இது முன்கூட்டியே தெரிந்திருக்கக்கூடும் அல்லது அவர்கள் அதில் சம்பந்தப்பட்டிக்க வேண்டும். என்னிடம் எல்லா விவரங்களும் கிடையாது. புஷ் நிர்வாகம் செப்டம்பர்11 தாக்குதலிலிருந்து லாபம் பெற்றிருக்கக்கூடும் என்பதே எனது ஊகம். தகவலுக்கு நன்றி.

BK

Portland Orelon

17 ஜனவரி 2002


வெல்க! வெல்க!

உமது கட்டுரைகள் ஆணித்தரமாய் இருக்கின்றன. நன்கு ஆய்வு செய்யப்பட்டு நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. நான் மேலும் உங்களுடைய படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி,

பாராட்டுக்களுடன்,

VM

18-01-2002


அமெரிக்க காங்கிரஸ்தான் போர் அறிவிப்பு செய்ய முடியும். இரு நாடுகளுக்கு இடையே போர் என்றால் ஏன் சம்பிரதாயமான போர் அறிவிப்பு செய்யப்படவில்லை?

இப்போது ஆப்கானுடன் போரிடும் எந்த நாடும் சம்பிரதாயமாக போர் பிரகடனம் செய்யவில்லை. மேலும் "பதில் தாக்குதல்" நடவடிக்கைகள் என்று முத்திரை குத்தப்படும் கொடுமைகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் அளிக்கவில்லை. பல நாடுகளும் ஆப்கனில் சட்டவிரோத போராளிகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தலிபானுக்கு பயிற்சியும் ஆயுதங்களையும் அளித்துவிட்டு பிறகு அவர்களையே சட்டவிரோத ஆயுதபாணிகள் என்று கூற முடியாது.

தலிபான் சட்ட விரோத ஆயுதபாணிகள் என்றால் ஏன் ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா அவர்களை ஆயுதபாணி ஆக்கியது? சட்டவிரோத ஆயுதபாணிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து பயிற்சி அளித்தது என்ன? உண்மையில், உலக வர்த்தக மையக் கட்டிய அழிவுக்கு தலிபான் பொறுப்பு என்றால், முதலாவதாக அமெரிக்காவின் பயிற்சி இல்லாமல் அவ்வாறு செய்திருந்திருக்க முடியாது என்பது முற்றிலும் தாமே சான்று கூறும்.

J

20 ஜனவரி 2002


இது உங்கள் இனையதளத்திற்கு தன்னியல்பாய் வந்த பாராட்டுக்கள் குறிப்பாக ஆப்கான் நெருக்கடியைக் தொடர்பாக உங்கள் நிருபர்களின் கருத்துக்கள் பயனுள்ளவை. கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவு பிரபலமான மற்றும் மிகவும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட செய்திகளை தேடும்போது உங்களது இணையதளத்தை நான் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. உங்கள் பணி தொடரட்டும். நான் ஒரு நல்ல செய்தி ஆதாரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என இறுதியாய் முடிவு செய்தேன்.

CC

20-01-2002


அன்புள்ள ஆசிரியருக்கு,

என்னைப் பொறுத்தவரை, சி.ஐ.ஏ செம்டம்பர் 11 நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கான பெரும் சான்று, செப்டம்பர் 11-13 க்கு நடுவே அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஒருவர் பின் லேடன் மற்றும் செளதி அரச குடும்பத்து உறவினர்களை சுற்றி வளைத்து பாதுகாப்புக் கொடுத்து ஒன்று சேர்த்து அமெரிக்காவை விட்டு வெளியேற்றிவிட்டது என்ற சம்பவம்தான். குண்டு வீச்சாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டோருள் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். சதி நடவடிக்கை முன்னோக்கிலிருந்து இவர்களில் ஒருவர் குண்டு வீச்சாளர்களுக்கு விஷயத்தைக் கையாளும் அதிகாரியாக இருந்திருக்கலாம் என்று அது சரியாக உணர வைக்கிறது. ஆயிரக்கணக்கான அரபு முஸ்லீம்களை சிறைப்படுத்திய போது, பிரதான சந்தேகத்திற்குரிய ஒரு குழு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டது. இது எனக்கு சி.ஐ.ஏ பங்கை உறுதிப்படுத்தியது.

முழு நிறைவுடன்

DV

Congmeadow, Massachosets

24, ஜனவரி 2002


நல்ல செய்திக்கும் நல்ல ஆய்வுக்கும் நன்றி. ("Was the US government alerted to september 11 attack?") என்ற கட்டுரையை செனேட்டர்கள் கிரஹாம் மற்றும் நெல்சன் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு கடிதம் எழுதி அவர்கள் ஏன் துப்பு துவக்கவில்லை எனக் கேட்டிருந்தேன்.

உண்மையில், "நீங்கள் அக்கறைப்படுபவை பற்றி நாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம்" என்ற பணிவான சாதாரண பதிலைக் கூட எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினால் அவர்கள் சிறிது அழுத்தத்தை உணர்வார்கள்.

RR

Orange Park, Florida

24 ஜனவரி 2002


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved