World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா: ஆப்கானிஸ்தான்Letters on "Political reaction and intellectual charlatanry: US academics issue statement in support of war" "அரசியல் பிற்போக்குத்தனமும் புத்திஜீவித பாசாங்கும்: யுத்தத்துக்கு ஆதரவாக அமெரிக்க கல்விமான்கள் அறிக்கை" மீதான கடிதங்கள்27 February 2002பிப்ரவரி 18ல் வெளியான, அரசியல் பிற்போக்குத்தனமும் புத்திஜீவித பாசாங்கும்: யுத்தத்துக்கு ஆதரவாக அமெரிக்க கல்விமான்கள் அறிக்கை எனும் டேவிட் நோர்த்தின் கட்டுரை தொடர்பாக பின்வரும் கடிதங்கள் வரப் பெற்றன. அன்புடன் ஆசிரியருக்கு, கல்விப்புல ரீதியாக வெளியிடப்பட்ட யுத்த ஆதரவு அறிக்கை தொடர்பான டேவிட் நோர்த்தின் கட்டுரை வியப்பூட்டும் வண்ணம் இருந்தது. அது நன்றாக எழுதப்பட்டதில் விஞ்சி நிற்பது மட்டுமல்லாமல், நமது நாடு சம்பந்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கவிருக்கும் "ஜனநாயக ரீதியாகத் தொடுக்கப்படும் யுத்தம்" என்பதின் முழு கேலிக்கூத்து சம்பந்தமாகவும் முனைப்பான கருத்துக்களை வியப்பூட்டும் வண்ணம் செய்யப்பட்டிருக்கிறது. நான் எனது நன்றியை அவருக்கும் உங்களது அமைப்புக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். FW 18 பிப்ரவரி 2002 "அரசியல் பிற்போக்குத்தனமும் புத்திஜீவித பாசாங்கும்.....," இவை உங்களது வார்த்தைகள், அவற்றுக்காக உங்களுக்கு மிக்க நன்றி! பிரான்சிலும் ஐரோப்பாவிலும் "அமெரிக்கர்கள் எல்லோரும் ஒரேமாதிரி" என்று கிட்டத்தட்ட நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இல்லை, ஊடக அழுத்தத்தின் கீழும் கூட (மேலும் என்ன அழுத்தம்!) உலக சோசலிச வலைத் தளம் உயிரோடு இருக்கிறது மற்றும் சிந்திக்கின்றது. பிரான்சில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது பிரான்சிஸ் ஃபுக்குயாமா (Francis Fukuyama) பேர்னாட் பிவோ (Bernard Pivot) உடன் (இலக்கியம், கவிதைகளில் துறைபோகியவர்) நடந்தது நினைவுக்கு வருகிறது. அவர் "ஜனநாயகத்துக்கு நன்றியுடன்.... வரலாறு முடிகிறது" என்ற அவரது தத்துவத்தில் அடிமுட்டாளாக இருந்தார். பேர்னாட் பிவோவும் அவரது விருந்தினரும் முற்றிலும் திகைத்துப்போயினர் மேலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. பத்தாண்டுகள் கழித்து, பலமாகவும் கடினமாகவும், வரலாறு செல்கின்ற பொழுது, திரு.பிரான்சிஸ் ஃபுக்குயாமா இங்கு இன்னும் அளந்து கொண்டிருக்கிறார், இன்றும் குறுகிய நோக்கமுள்ள சிறுபிள்ளைத்தனமான வாதங்களைப் பொழிகிறார். ஆனால் வரலாறு ஜனநாயகத்துடன் முடிந்துவிட்டால், இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? எனக்கு வியப்பாக இருக்கிறது. மிக்க நன்றி. தங்கள் அன்புள்ள PZ பிரான்ஸ் 18 பிப்ரவரி 2002 புஷ்ஷின் பயங்கரவாத யுத்தத்திற்கு ஆதரவில் அமெரிக்க கல்விமான்களால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றிய உங்களது திடமான ஆய்வுக்கு நன்றி. கட்டுரையின் முதலாவது வாக்கியம் அவர்களை அழைக்கின்றவாறு ஆதரவாளர்கள் அனைவரும் "வலதுசாரியினர்" அல்லர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மைக்கேல் வால்சர் (Michael Walzer) "தாராண்மை" வகையினத்தில் நிச்சயம் வருவார், முன்னாள் செனட்டர் மொய்னிஹன் போன்றோருக்கான அரசியல் ஒளிக்கற்றையில் அதேநிலை பொருந்தும். ஐயத்திற்கிடமின்றி, இது எந்த வகையிலும் பத்திரத்தை சிறப்பானதாக ஆக்கப்போவதில்லை, மாறாக கல்விப்புலத்தின் பகுதிகளிலும் அரசியலிலும் புத்திஜீவித ஊழலை நீட்டிக்கும் காட்சியைக் காட்டுகின்றன-- சிலவேளைகளில் பின்னதன் அருவருப்பு இருப்பினும். உண்மையுடன், MG பிரின்ஸ்டன், நியூ ஜேர்சி 21 பிப்ரவரி 2002 அன்புடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு, உங்களது அடுத்த காலாண்டு மதிப்பாய்விதழில் எந்தக் கட்டுரைகளைச் சேர்க்க ஏற்கனவே தீர்மானித்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் டேவிட் நோர்த்துடைய கட்டுரையான "அரசியல் பிற்போக்குத்தனமும் புத்திஜீவித பாசாங்கும்: யுத்தத்துக்கு ஆதரவாக அமெரிக்க கல்விமான்கள் அறிக்கை" என்பதைக் கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன். அது மிக நன்றாக எழுதப்பட்டிருப்பதை நான் காண்கின்றேன். டொனால்ட் ரம்ஸ் பீல்ட் மற்றும் பால் வோல்போவிட்ஸ் ஆகியோரை "மனநிலை திரிந்தவர்கள்" எனக் குறிப்பிடும் உங்களது அண்மைய குறிப்பை நானும் கூடப் பாராட்டுகிறேன். பரந்த அளவிலான படுகொலைகளை வடிவமைத்த மனிதர்களைப் பற்றி விவரிக்க இதைவிட என்ன பொருத்தமான பெயர் இருக்கிறது? GS நியூ ஹாம்ப்ஷயர் 18 பிப்ரவரி 2002 உங்களது அண்மைய கட்டுரையைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் சுருக்கிச் சொல்ல முடியும் : உங்களுக்கு நன்றி. தங்கள் உண்மையுள்ள, VM 18 பிப்ரவரி 2002 திரு. நோர்த், அமெரிக்க "கல்விமான்களால்" வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் தொடர்பான உங்களது அருமையான ஆய்வை ஆர்வத்துடன் வாசித்தேன். மூலப் பத்திரங்களை நான் வாசித்திராத போதிலும், உரையிலிருந்து பல மேற்கோள்களுடன் நீங்கள் கணிசமான அளவுக்கு மேலோட்டமாக ஒரு பார்வையை வழங்கி உள்ளீர்கள் --செய்யப்பட்ட விவாதங்களின் நல்ல கருத்து ஒன்று கிடைக்கப் பெற்றேன். அரசியல் / சமூகப் பிரச்சினைகள் தொடர்பான முழுமையான பெரும்பாலான ஆய்வுகள் உலக சோசலிச வலைதளத்தில் காணப்படுவதை நான் கவனித்திருக்கிறேன். செப்டம்பர் 11ல் அமெரிக்கா ஏன் தாக்கப்பட்டது என்ற "அறிவுஜீவிகள்" ஆய்வு, சம்பவங்கள் நடந்த பிறகு உடனே அறிவுஜீவி எதிர்ப்பாக தீர்மானிக்கப்பட்ட போல் வெல் மற்றும் றொபேட்சன் வழங்கிய விவாதங்களின் பிரதிபலிப்பாகக் காணப்படுவது கவனிக்கத்தக்கது. அந்த கருத்துக்களுக்காக அவர்கள் சில வெளியீடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். "யுத்தம்" சம்பந்தமான வலதுசாரி கொள்கைப் பிரச்சாரம் அவை கல்விப்புலத்திலிருந்து வந்ததா அல்லது சுவிசேஷ கிறித்தவ அடிப்படைவாத மூலங்களிலிருந்து வந்ததா என்பதைத் தொடர்ந்து பொருட்படுத்தாமல், அது உண்மையில் தோன்றும்படி செய்யப்பட்டது. அவர்கள் "அந்தப் புள்ளியில்" நிற்பதற்கு நல்ல தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். உண்மையுள்ள, GA நியூயோர்க் 18 பிப்ரவரி 2002 மேற்கண்ட கட்டுரையை குறிப்பாக வாசித்தேன் மேலும் அற்புதமான ஆய்வுக்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். ஆசிரியர்களின் பின்புலங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் புஷ் நிர்வாகத்தின் உத்தியோகப் பூர்வ நிலையைக் குறைவாகச் சார்ந்திருக்கிற கல்விப் புல ஆய்வு சிலவற்றையும் கூட மதிப்பீடு செய்வதற்கும் ஒருவேளை தொடர்ச்சிகள் வரக்கூடும். தற்போதைய சூழலின் மிகவும் எச்சரிக்கையான போக்கு என்னவெனில், நிர்வாகத்தால் "யுத்தம்" மற்றும் "யுத்தத்தில் நாம்" போன்ற வார்த்தைகள் தவறாகவும் சூழ்ச்சித் திறத்துடனும் பயன்படுத்தல் ஊடகத்தாலும் அறிவுஜீவிகளாலும் (குறைந்த அளவு பகிரங்கமாக) அங்கீகரிப்பின்மை "வறுமை மீதான யுத்தம்" மற்றும் "போதைப் பொருள் மீதான யுத்தம்" ஆகியன உருவகமாகத்தான் இருந்தன. இது "பயங்கரவாதம் மீதான யுத்தம்" பற்றியதிலும் உண்மையாக இருக்கிறது. அமெரிக்கா யுத்தத்துடன் சிறிதே சம்பந்தம் கொண்ட பிரச்சினையை-- மிகச் சிக்கலான பிரச்சினையைக் கொண்டிருக்கிறது. சக்திமிக்க நாடுகள் என்று கூறப்படுவதை அண்மையில் வெற்றி கொண்டிருந்த, உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான இராணுவ எந்திரங்கள் கொண்ட இரு நாடுகளை அமெரிக்கா எதிர்கொண்ட 1941 டிசம்பர் சூழ்நிலையை சில மத வெறியர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுடன் எந்தவகையிலும் சமப்படுத்துவது சூழ்ச்சி மிக்கதாகத் தெளிவாகவே தெரிகிறது. பின்னது செப்டம்பர் 11 வரைக்கும் அமெரிக்காவில் பயங்கரவாத சட்டத்தில் வெற்றிகரமாகக் கொண்டு வரப்பட்டிருந்ததில்லை (வர்த்தக மையங்களின் மீதான முறியடிக்கப்பட்ட ஆரம்ப முயற்சிக்கானது தவிர) அத்தகைய தாக்குதல்களைக் கொண்டுவர அவர்களின் பலமான ஆவல் இருந்த போதிலும். செப்டம்பர் 11 தாக்குதல்களை கிட்டத்தட்ட சாவதற்கு தயாரான எவராலும் செய்யமுடியும் (கொலம்பைன் உயர்நிலைப் பள்ளி கொலையாளர்களால் கூட செய்யமுடியும்). "டாக்டர். நோ" --போன்ற திட்டம் வகுத்து இயக்குபவருக்கு ஆதாரமாக இருக்கும் பயணச்சீட்டுகள் வாங்குதல் மற்றும் box cutters- க்கு இடையிலான தொடர்பை நான் காணத் தவறிவிட்டேன். விமானக்கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் உத்தியோகபூர்வமான கொள்கையின் காரணமாக மாத்திரமே தாக்குதல்கள் வெற்றி பெற்றன. எந்த நிகழ்ச்சியும், இதில் எதுவும் யுத்தத்துடன் மற்றும் நிச்சயமாக இரண்டாம் உலக யுத்தத்துடன் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அவர்கள் தனித்தனியாக என்ன நினைத்தாலும் அரசியலில் அல்லது ஊடகத்தில் உள்ள ஒருவர் கூட இதைப்பற்றிப் பேசுவதில்லை. இந்த நல்லவேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். அது சோசலிச மரபைக் கெளரவிக்கின்ற போதிலும், உங்களது தெளிவான எழுத்துக்கள் சோசலிசத்திற்கு உங்களது அர்ப்பணிப்பினை விஞ்சும் வண்ணம் இருட்டில் விளக்காக இருக்கின்றன. RT 18 பிப்ரவரி 2002 |