World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பாA revealing decision by the European Union economic summitஐரோப்பிய ஒன்றிய பொருளாதார உச்ச மாநாட்டின் ஒரு வெளிப்படையான தீர்மானம்By Nick Beams இலாப அமைப்பின் நடவடிக்கைகளினை சுற்றியிருக்கும் 'சுதந்திர சந்தை'' யின் புகைமூட்ட கருத்தியல் ஊடாக அடிக்கடி இடம் பெறும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு ஒளியின் பிரகாசத்தை அனுப்புகின்றது. ஐரோப்பாவில் ஓய்வுபெறும் வயதினை 58 ல் இருந்து 65க்கு அதிகரிப்பதற்காக கடந்த வாரம் பார்சலோனாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார உச்ச மாநாட்டின் கூட்டத்தின் தீர்மானம் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கின்றது. இந்த நகர்வின் தாக்கங்களை கவனத்தில் கொள்வோம். இருபதாம் நூற்றாண்டின் இறுதி பாதிப்பாகத்தில் ஓய்வு பெறும் வயதின் ஒரு குறைப்பிற்கு பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தலைவர்கள் சராசரி உழைக்கும் வாழ்கைக் காலத்தை கிட்டதட்ட 20 வீதமாக நீடிக்கப்படவேண்டும் என பிரகடனம் செய்வதன் மூலம் 21 நூற்றாண்டினை ஆரம்பித்து வைக்கின்றார்கள். ஏன் இது? இது நிட்சயமாக தொழில்நுட்ப மாற்றத்தின் முன்னேற்றமும் அபிவிருத்தியும், உற்பத்தி திறனின் அதிகரிப்புகளும் பலகீனமாகிவிட்டது என்பதால் அல்ல. மாறாக கடந்த 20 வருடங்களாக ஏற்பட்ட கணினிமயமான முறையுடன் இணைந்த நீண்ட மாற்றங்கள் உற்பத்தியில் பிரதான அதிகரிப்புக்கு வழிகோலியது. ஓய்வு பெறும் வயதின் அதிகரிப்புக்கு இல்லாமல், உண்மையில் ஓய்வு பெறும் வயது மேலும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கே இது வழிகோலியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பின்னர், தொழில்நுட்பம் உற்பத்தியின் பாரிய அதிகரிப்பிற்கான சாத்தியத்தை உருவாக்கியிருக்குமானால் இது அவசியமான வேலைநேரத்தின் ஒரு குறைப்பாகவே இருக்கவேண்டும். அதேநேரம் இது சார்புரீதியில் இதுவரை நலமான ஆரோக்கியத்துடன் இருப்பதால் உழைக்கும் மக்கள் ஓய்வுபெற்ற வருடங்களை அனுபவிக்க மேலதிக ஓய்வு நேரத்தையல்லவா இது கொண்டுவந்திருக்கவேண்டும். இதற்கு பதிலாக அதற்கு எதிரானதுதான் இடம்பெற்று இருக்கிறது. இந்த முரண்பாடான விளைவின் மூலங்கள், பொதுவாக இலாப அமைப்பின் நடவடிக்கைகளுடனும் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் முகம்கொடுக்கும் பிரேத்தியேகமான விடயங்களுடனும் தொடர்புபட்டிருக்கின்றன. இறுதி ஆய்வில், சமூகநல செலவுகள், ஓய்வூதியங்கள் மற்றும் அனைத்துவித சமூக சேவைகளும் இலாப வடிவத்தில் மூலதனத்திற்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கறந்தெடுக்கப்படும் உபரிமதிப்பிலிருந்து ஒரு குறையும் தொகையாகும். ஓய்வுபெறும் வயதினை அதிகரிப்பதற்கான அனைத்து தீர்மானமும் மற்றும் ஓய்வூதிய வருவாய்களை குறைப்பதானதும் இலாப வீதத்தை அதிகரிப்பதற்கான மூலதனத்தின் ஒரு உந்துதலாகும். யுத்தத்திற்கு பின்னரான செழுமைக்காலத்தில் இலாப வீதம் அதிகரித்துக்கொண்டிருந்தபோது அல்லது குறைந்தபட்சம் நிலையாக இருந்தபோது ஓய்வுபெறும் வயதின் ஒரு பொதுவான குறைப்பு உள்ளடங்கலாக சமூகநல சலுகைகளையும் அளிப்பது முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு சாத்தியமானதாக இருந்தன. ஆனால் அண்மைய காலத்தில், ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து பாகத்திலும் இந்தப்போக்கு பின்நோக்கி செல்வதானது உற்பத்தியின் உழைப்பில் (Labour productivity) முக்கியத்துவம் வாய்ந்த அதிகரிப்பு இருந்தபோதும் இலாப வீதம் தேக்கமடைந்திருப்பதையும் மற்றும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் இந்த விடயம் பற்றிய பகிரங்க கலந்துரையாடல் எதுவும் இந்த வகையில் நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றிருந்தால், உற்பத்தியின் உழைப்பினை அதிகரித்திருக்கும் பொருளாதாரத்தினை ஒரு மறு ஒழுங்கு செய்யும் அவசியத்தினையும் மற்றும் ஓய்வுபெறும் வயதின் மேலதிக குறைப்பு உள்ளடங்கலாக சடத்துவ வளங்களின் (Material wealth) அதிகரிப்பும் உற்பத்தி முன்னேற்றமடைந்த சமூக நிலைமைகளில் பிரதிபலித்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு அது இலாப அமைப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்பியிருக்கும். ஒரு முயற்சி செய்யப்பட்ட மற்றும் பரீட்சிக்கப்பட்ட முறையின் ஊடாக இடம்பெற்ற இந்த தீர்மானமானத்திற்கு பின்னால் சமூக போக்குகளின் தெளிவற்ற தன்மையும் இணைந்திருக்கின்றன. ஓய்வுபெறும் வயதின் அதிகரிப்பு இயற்கை போக்கின் தவிர்க்க முடியாத வெளிபாடாக இருப்பதுபோல் எடுத்துக்காட்டப்படுகிறது. கடந்தகால ஓய்வூதிய அமைப்பினை பாதுகாப்பதற்கு தற்போது உழைக்கும் வயதினையுடைய மக்கள் போதாமையாக இருக்கின்றபடியால், அதாவது மக்கள் தொகையின் வயோதிபம் அடையும் அபிவிருத்தியால் இந்த அவசியம் எழுகிறது எனவும் இந்த விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது. எப்படித்தான் இருந்தபோதும் உழைப்புச் சக்தியின் ஒரு கீழ்நோக்கிய சரிவால் -குறைவால்- இது ஏற்படவில்லை என்பதுதான் உண்மையான காரணமாகும். மாறாக சந்தைக்களுக்கான போட்டியிலும், இலாபங்கள் மற்றும் நிதிமுதலீட்டுக்கான வளங்களுக்காக சமூகநல செலவுகள், நிறுவனங்களின் மீதான வரிவிதிப்புகளை குறைப்பதற்கு அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் முகம்கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே இவை இடம்பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டி ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பாக தனது பூகோள போட்டியாளரான ஐக்கிய அமெரிக்காவுடன் தற்போது ஒரு அதிகரித்தமுறையிலான போராட்டத்தில் இருப்பதுடன் இந்த அழுத்தம் இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2000 ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரோவை (Euro) ஒரு ஒற்றை நாணயமாக கொண்டுவந்தபோது, முதன்மையான சர்வதேச நாணயமாக இருக்கும் அமெரிக்க டாலருக்கான ஒரு அற்புதமான சவாலாக இருக்கப்போகிறது என எதிர்பார்க்கப்பட்டது. எப்படியிருந்தபோதும், 1 ஈரோவை 1.17$ என்ற ஒரு விகிதத்தில் வெளிக்கொணர்ந்த பின்னர், ஈரோ மிகவிரைவாக அமெரிக்க டாலருடன் சமநிலைக்கு வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர் ஏறத்தாழ 90 சென்ற் இனை அடைந்தது. அதிக இலாபநோக்க சந்தர்பங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அமெரிக்க நிதி மற்றும் வட்டியில்லா பங்குச் சந்தையில் முதலிடுவதற்காக ஈரோ மண்டலத்திற்கு வெளியே மூலதனம் சென்றதுதான் இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். இந்த நகர்வை நிறுத்துவதன் பாகமாகவும் மற்றும் அதனது அட்லாண்டிக்குக்கு அப்பால் இருக்கும் போட்டியாளருடன் அதிக பயனுள்ளமுறையில் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு வருடத்திற்கு முன்னர் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பன் நகரத்தில் மாறிச்செல்லும் பொருளாதார 'சீர்திருத்தம்' என்ற ஒரு வேலைத்திட்டத்தை வெளிப்படுத்தியது. 2010 அளவில் ''உலகின் மிக போட்டியும் ஆற்றல் வாய்ந்த அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம்'' ஆக ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதே 'லிஸ்போன் போக்கின்' பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கத்தின் துவக்க மதிப்பீடாக இருந்தது. வேறு வார்த்தையில் கூறினால், பூகோளரீதியாக திரண்டுநிற்கும் முதலீட்டு மூலதனத்தை கவர்ந்திழுக்கும் யுத்தத்தில் திறமையாக போட்டியிடுவதன் பாகமாக, கண்டங்களுக்கு அப்பால் இலாபவீதத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் வரையறை செய்தது. அந்த வேலைத்திட்டத்தை வெளிக்கொணர்ந்ததில் இருந்து, பொருளாதார மாற்றங்களுக்கான மேலதிக அழுத்தத்திற்கு அரசியல் மற்றும் இராணுவ காரணிகள் பொறுப்பாக இருந்தன. 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான யுத்தம் மற்றும் இப்போது ஆப்கானிஸ்த்தான் மீதான யுத்தம் என்பனவற்றில் இராணுவ தகமையில் அர்த்தத்தில் கூடிய அளவில் அமெரிக்காவுக்கு கீழ்படிந்து இருப்பது தொடர்பாக ஐரோப்பாவில் கவலையை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய சக்திகள் சர்வதேச அளவில் தமது நலன்களை உறுதிசெய்ய வேண்டுமானால், பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டத்தை பரந்த அளவில் அதிகரிப்பது அவசியமாக இருக்கிறது. எப்படியிருந்தபோதும், இப்படியான அதிகரிக்கரிக்கப்பட்ட இராணுவ செலவுகளுக்கு மக்கள் மீதான வரிகளை அதிகரிப்பதால் மட்டுமே நிதி ஒதுக்கிடமுடியும். இது பொருளாதார நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி நிலையை இன்னும் சீரழிப்பதாக மட்டுமே இருக்கும். அத்துடன் இப்படியான ஒரு ஒத்திசைவான போக்கு சமூக நலத்திட்ட சலுகைகளை வெட்டித்தள்ள தொடங்கிவிட்டிருக்கிறது. ஓய்வுபெறும் வயதின் அதிகரிப்பானது அந்த திசையை நோக்கிய ஒரு படியாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் அவர்களது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரதான அரசியல் பிரச்சனைக்கு, குறைந்தபட்சம் ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் எழுச்சிக்கு முகம் கொடுக்கிறார்கள். அவ்வியக்கம் அரசியல் ரீதியான குழப்பத்துடன் இருந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தின் முடிவில் பார்சலோனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் அளவானது --ஒரு அரை மில்லியன் வரை கணிப்பிடப்பட்டதோடு இதுவரை ஸ்பெயின் கண்டிராத பரந்த எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்றாக இருந்தது-- ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கான ஆழமாகிவரும் எதிர்ப்பின் சாட்சியமாக இருக்கிறது. ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கூர்மையான அரசியல் பிரச்சனைக்கு முகம்கொடுத்து வருகின்றன. ஒரு பக்கத்தில் பொருளாதாரம் மற்றும் இப்போது இராணுவம், அமெரிக்காவுடனான அவர்களது போட்டி நிலையை பேணுவதற்கான போராட்டம் தொடர்பாக கருத்துப்பாடுகள் உழைக்கும் மக்களின் சமூக நிபந்தனைகளை தாக்குவதற்கு அவர்களைத் தூண்டுகின்றது. மற்றொரு பக்கத்தில், முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகள் வளர்ச்சியடைவதை முகம் கொடுக்கையில், அமெரிக்க வகையறாவைச் சேர்ந்த ''சிகப்பு பற்களையும் நகங்களையும்'' ஒத்ததாக இல்லாமல் ''ஐரோப்பிய முதலாளித்துவம்'' சற்று மென்மையாக இருக்கிறது என்ற புதினத்தை --கதையளப்பினை-- அவர்கள் பேண வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய கொள்கை மையத்தின் இயக்குனர் ஐோன் பால்மெர், ''பார்சிலோனாவின் கூர்மையான கருத்துக்கணிப்பாளராக இருந்தார்'' என வர்ணித்து இவரை மேற்கோள்காட்டிய Australian Financial Review இன் குறிப்பில் இந்த அரசியல் ஆராய்வுகளை பிரதிபலித்தன. ''அதனது முழுமையிலும் அமெரிக்க உருமாதிரியை பின்பற்றும் எதிர்பார்ப்பு ஐரோப்பாவுக்கு இல்லை (ஏனெனில்) ஐரோப்பிய சமூகநல உருஅமைப்பு ஆழமான வகையில் உறுதியாய் நிறுவப்பட்டிருக்கிறது''. ''இந்த போக்கு செய்து கொண்டிருப்பது என்னவென்றால் எவ்விதமான சமநிலை இருக்கவேண்டும் எனும் பணியையே'' என அவர் கூறினார். ஒரு 'ஐரோப்பிய உருமாதிரி'' க்குள் சமூகநல அளிப்புகளை பேணலாம் என்ற பிரமையினை தூக்கிபிடிப்பதற்கான இப்படியான முயற்சியானது அட்டாக் (Association for the Taxation of Financial Transactions for the Aid of Citizens) போன்ற அரசியல் அமைப்பினால் உதவியளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் இடதுசாரி பிரிவாக செயல்படுவதன் மூலம் 'அமெரிக்க' வடிவிலான முதலாளித்துவத்தின் அபிவிருத்தியை தடுப்பதற்காக அது தேசிய அடிப்படையிலான கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுகிறது. ஏற்கனவே பார்த்ததுபோல், முதலாளித்துவ அமைப்பு முழுவதற்கும் எதிரான ஒரு சுயாதீன சர்வதேச இயக்கத்தின் அபிவிருத்தியை தடுக்கும் முயற்சியின் நோக்கத்தையே இந்த வகையான அமெரிக்க எதிர்ப்புவாதம் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட இன்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் லெனின் ஏகாதிபத்தியம் என்ற தனது குறிப்பேட்டில், நிதி மூலதன காலகட்டத்தில் ஐரோப்பிய பேராசிரியர்களும் மற்றும் நல்ல நோக்கம் கொண்ட பூர்சுவாக்களும் மிக கேடுகெட்ட முறையில் ''அமெரிக்க ஒழுக்கத்தை'' கண்டனம் செய்கிறார்கள்'' என சுட்டிக்காட்டினார். (Lenin, Collected Works, Volume 22, p. 236). இது இன்று உலகம் முழுவதிலும் காணக்கூடிதாக உள்ளது. எது உண்மையாக இருந்ததோ அது பின்னர் இன்னும் அதிகமாக இன்று செல்லுபடியானதாக
இருக்கின்றது. அங்கு அமெரிக்க வடிவிலான முதலாளித்துவத்திற்கு எதிரான சில ஐரோப்பிய வடிவிலான முதலாளித்துவம்
என்பதில்லை. அதற்கு மாறாக நிதிமூலதனத்தின் பூகோள ஆதிக்கமானது இலாபங்களை அதிகரிப்பதற்காக முன்னைய
சமூகநல சலுகைகளை அழிப்பதற்கான அதனது கோரிக்கைகளை ஒவ்வொரு அரசாங்கங்களுக்கு மேலும் திணிக்கிறது. ஓய்வுபெறும்
வயதினை நீடிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய உச்ச மாநாட்டின் தீர்மானத்தின் முக்கியத்துவம் இதுவாகத்தான் இருக்கிறது. |