World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

The World Economic Crisis: 1991-2001

உலகப் பொருளாதார நெருக்கடி:1991-2001

பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3

By Nick Beams
15 March 2002

Back to screen version

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸால் ஜனவரி 16, 2002 அன்று வழங்கப்பட்ட சொற்பொழிவின் இரண்டாவது பகுதியை கீழே நாம் பிரசுரிக்கிறோம். ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேசப் பள்ளியில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. தமிழில் முதலாவது பகுதி மார்ச் 22 அன்று வெளியிடப்பட்டது.

1987 பங்குச் சந்தைப் பொறிவு 1990 களில் பொறிவை முன்னறிவித்தது. வோல்ஸ்ட்ரீட்டில் முதலில் ஆரம்பமாகிய போதிலும் இப்பொறிவானது ஒவ்வொரு அர்த்தத்திலும், ஒரு பூகோளரீதியான நிகழ்ச்சியாக இருந்தது. வட்டி வீதங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கும் நிதிப் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஜேர்மன் வங்கியாளர்களுக்கும் இடையிலான மோதலானது டாலரின் மதிப்பில் (பெறுமதியில்) விரைந்த வீழ்ச்சி பற்றிய பீதிக்கு வழிவகுத்தது, அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து நிதிகளைத் திரும்பப் பெறுவதை விளைவித்தது.

அமெரிக்க மத்திய ரிசேர்வ் வாரியம் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளினாலான பெரும் தலையீட்டின் மூலம் மட்டுமே பூகோள நிதி நெருக்கடி தவிர்க்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் பூகோள நிதி அமைப்பு முறைக்குள் பெரிய அளவிலான பணநகர்வை (liquidity) செலுத்தின. ஆனால், அந்த தசாப்தம் முழுவதும் திரும்பத் திரும்ப செய்யப்பட இருந்த பாணியில், நெருக்கடியை எதிர்த்துப் போராட அவர்கள் பயன்படுத்திய அதே நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தான பிரச்சினைகள் தோன்றுவதற்கான நிலைமைகளைக் கூட உண்டு பண்ணின. இந்த விஷயத்தில், பணநகர்வை செலுத்துதல் ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த ஜப்பானிய நிதிக் குமிழிகளை (நிலையற்றதன்மையை) மேலும் ஊதிப் பெருக்க உதவி செய்தது.

ஜப்பானிய குமிழி அதன் தோற்றுவாயை 1985 செப்டம்பர் பிளாசா உடன்பாட்டில் (Plaza agreement) கொண்டிருக்கிறது. அதன் கீழ் மத்திய வங்கிகள் அமெரிக்க டாலருக்கு ஏற்ப உலகின் பிரதான நாணயங்களை மறுமதிப்பு செய்ய உடன்பட்டன. டாலர் மதிப்பிறக்கம் (பெறுமதி குறைப்பு) மற்றும் யென் மறுமதிப்பிடல் ஆகியன இரு உடனடி விளைபயன்களைக் கொண்டிருந்தன. முதலாவதாக, ஜப்பானிய ஏற்றுமதிகள் மிகவும் செலவுமிக்கதாக மாறின. இது அமெரிக்க டாலர் மதிப்பிறக்கம் செய்யப்பட்டதால் ஒரேயளவு மதிப்புடைய நாணயத்தை கொண்ட இடங்களான கிழக்காசியப் பிராந்தியங்களுக்கு ஜப்பான் தனது உற்பத்தித் தொழிற்துறைகளை நகர்த்தியது. இரண்டாவதாக, ஜப்பானிய சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன, அது ஜப்பானிய சொத்து மற்றும் நில மதிப்புக்களில் வெடிப்புக்களுக்கும் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை எதிர்பாரா உயரத்திற்கு அதிகரிக்கவும் இட்டுச் சென்றது. இறுதியாக, 1989 முடிவில், நிக்கி குறியீட்டெண் (Nikkei index) 40,000 ஐ தாண்டியது (அது இன்று சுமார் 13,000 ஆக இருக்கிறது). ஆனால் குமிழி முடிவிலாது தொடர முடியவில்லை. 1990களின் தொடக்கத்தில் அதன் பொறிவானது ஜப்பானை கடன் பணவீக்கத்திற்கு அனுப்பியது, அதிலிருந்து அது மீள முடியாதிருக்கிறது.

உண்மையில், இது 1990களின் சிறப்பியல்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது: உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் விஷச் சுழலிலிருந்து தப்பிக்க இயலாமை 1980களில் இயங்குவதற்கு ஆரம்பித்தது. ஜப்பானிய நிலம் மற்றும் பங்கு முதல் விலைகளில் வீழ்ச்சி ஜப்பானிய வங்கிகளின் புத்தகங்களில் மோசமான கடன்களை அதிகரிக்கவும் அவர்களின் மூலதன அடித்தளத்தை அரிக்கவும் வழிவகுத்தது. இது, திரும்ப, கடன் வழங்குவதிலும் முதலீட்டிலும் வெட்டுக்களுக்கு வழிவகுத்ததுடன் நிதி நிறுவனங்களின் பொறிவுக்கு வழிவகுத்தது. விளைவான பொருளாதார கீழிறக்கம் பங்குகள் மற்றும் சொத்துக்களின் மதிப்பில் (பெறுமதியில்) மேலும் வெட்டுக்களைக் கண்டிருப்பதுடன், வங்கிகளின் நிலையை மேலும் பலவீனப்படுத்துவதை வீழ்படிவாக்கியது மற்றும் அவ்வாறே தொடர்ந்தது.

நாணயமாற்று வீத இயங்குமுறை பொறிவிலிருந்து அமெரிக்க நிதிக் குமிழி பொறிவுக்கு

1990களின் முதலாவது பிரதான நெருக்கடி 1992ல் ஐரோப்பிய நாணயமாற்று வீத இயங்கு முறையின் (ERM) பொறிவாகும் --இழப்பீட்டுத் தொகையிலிருந்து பெரும் ஊகத்தின் கீழ்வரும் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்-- நாணயமாற்று வீத இயங்கு முறையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது மற்றும் ஸ்காண்டிநேவியன் வங்கி முறை ஒரேநாள் இரவில் 100 சதவீதத்திற்கும் மேலாக வட்டி வீதங்களை எதிர் கொண்டது.

இது 1994 முடிவில் மெக்சிகன் பெசோ பொறிவால் பின்தொடரப்பட்டது மற்றும் அதனை அடுத்து 1995ன் ஆரம்பத்தில் கிளின்டன் நிர்வாகத்தால் 50 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. "மெக்சிகன் பிணை எடுப்பு" ஏதோ தவறான சொல் வழக்காக இருக்கிறது. ஒருவேளை இன்னும் துல்லியமாக சொல்வதானால், மெக்சிகன் கடன்பத்திரங்களில் முதலீடுகளுடன் அமெரிக்க நிதி நலன்களை பிணை எடுப்பதாக விவரிக்க முடியும்.

பிணை எடுப்பு மேற்கொண்டு அதிக காலம் கூட ஆகி இருக்காது இன்னொரு நெருக்கடி அபிவிருத்தி அடைந்தது. 1985 பிளாசா உடன்படிக்கை அமெரிக்க டாலரின் மதிப்பைக் (பெறுமதியை) குறைப்பதற்கும் அமெரிக்க ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும் இலக்குக் கொண்டிருந்தது. 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் முதற்பாதியில் ஏற்றுமதி வளர்ச்சி அமெரிக்க உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மொத்த அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு காரணமாயிருந்தது. ஆனால் குறைவான அமெரிக்க டாலர் சர்வதேச நிதி அமைப்பின் மீது பெரும் (முயற்சிக் கடுமையை) சுமைகளை வைத்தது, மற்றும் அமெரிக்க - ஜப்பானிய பொருளாதார உறவுகளில் நெருக்கடியை உண்டு பண்ணியது.

1995 அளவில், அமெரிக்க டாலருக்கு 79 யென்னாக பதிவில் வரக்கூடிய குறைந்த அளவுக்கு கீழிறங்கி இருந்தது. 1991ன் ஆரம்பத்தில் டாலருக்கு எதிரான அதன் நிலையுடன் ஒப்பிடுகையில், யென்னானது டாலருக்கு எதிராக 60 சதவீதத்தினையும் தாண்டி உயர்ந்திருந்தது, 1994ன் ஆரம்பத்தில் அதன் நிலையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால் யென்னின் மதிப்பில் (பெறுமதியில்) அதிகரிப்பு, ஏற்றுமதி சார்ந்த ஜப்பானிய பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியது. இந்த மட்டங்களில் யென்னுடன் ஜப்பானிய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இலாபத்தைப் பெறாதது மட்டுமல்லாமல், அவர்களின் மாறுகின்ற அடக்கவிலைகளைக் (உற்பத்தி செலவினை) கூட பெற முடியாதவர்களாயிருந்தார்கள். கிளின்டன் நிர்வாகமானது, அது ஜப்பான் தொடர்பாக அதி கடுமையான கொள்கையை பின்பற்றியிருந்தது என்ற உண்மை இருப்பினும், அதனால் யென் உயர்தல் --டாலர் வீழ்தலின் பாதிப்பைப் புறக்கணிக்க முடியவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆபத்தாக இருந்தது என்னவெனில், டாலரில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஜப்பானில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தினால், அமெரிக்க நிதிச் சந்தைகளில் இருந்து ஜப்பானிய நிதிகள் விரைவாக திரும்பப் பெறப்படும், அது எதிரிடையாக வட்டி வீதங்களில் உயர்வையும் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவிலும் ஆழ்த்திவிடும் என்பதாகும். இது 1990-91 பின்னடைவிலிருந்தும் மிகவும் குறைவான வளர்ச்சியைக் கொண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும், இப்பொழுதுதான் மீட்சி அடைந்திருந்த அந்தக் கணத்தில் இருந்தது.

1995 ஏப்ரலில், யென்னின் மதிப்பைக் கீழே தள்ளவும் டாலர் மதிப்பை மேலே தள்ளவும் தலைகீழான பிளாசா வகைப்பட்ட ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் உடனடி டாலர்- யென் நிதி நெருக்கடியைத் தவிர்த்த இந்த உடன்பாடு, நீண்டகால விளைவுகளை ஏற்படுத்த இருந்தது. டாலரின் உயர்வு அமெரிக்க நிதிக் குமிழியை (நிலையற்ற தன்மை) ஆரம்பித்து வைத்தது, அது ஏப்ரல் 2000 வரைக்கும் தொடர்ந்தது. டாலர் மதிப்பிலும் (பெறுமதியில்) அமெரிக்க சொத்து மதிப்பிலும் அதிகரிப்பு உலகின் ஏனைய பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நிதிப்பாய்தலை விளைவித்தது. 1995ல் உலகின் எஞ்சிய பகுதி 197.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள (பெறுமதி வாய்ந்த) அமெரிக்க அரசாங்கக் கடன்பத்திரங்களை வாங்கியது. இது முந்தைய நான்கு ஆண்டுகளுக்கான சராசரியைப் போல் இரண்டரை மடங்காக இருந்தது. 1996ல் 312 பில்லியன் டாலர்களுக்கும், 1997ல் 189.6 பில்லியன் டாலர்களுக்கும் வாங்கியது, இது மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் அரை டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது!

அங்கு பங்குச் சந்தையின் மீது பாதிப்பு இருந்தது. S&P 500 குறியீட்டெண் 1994ல் 2 சதவீத அளவில் அதிகரித்தது. அது 1995ல் 17.6 சதவீதமும் 1996ல் 23 சதவீதமும் மேலும் அதிகரித்தது. அந்த ஆண்டு டிசம்பரில் கிரீன்ஸ்பான் "அறிவுக்கொவ்வாத செழிப்பு" பற்றி எச்சரித்தார். 1997ல் S&P குறியீட்டெண் மேலும் 30 சதவீதம் அளவு உயர்ந்தது.

சந்தையின் ஒட்டு மொத்த உயர்வு பற்றி படம் வரைந்து, றொபர்ட் ஷில்லர் குறிப்பிடுவதாவது: "டெளஜோன்ஸ் தொழிற்துறை சராசரி (Dow Jones Industrial Average)..... 1994 ஆரம்பத்தில் 3,600 அளவில் நின்றது. 1999 அளவில், ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அது 11,000 ஐக் கடந்திருந்தது, பங்குச் சந்தை விலைகளில் 200 சதவீதம் மொத்த அதிகரிப்பாக ஆனது. 2000ன் ஆரம்பத்தில், டெள 11,700 ஐக் கடந்தது. இருப்பினும், இதே காலகட்டத்தில், அடிப்படைப் பொருளாதார குறிகாட்டிகள் மும்மடங்குக்கு அருகில் வரவில்லை. அமெரிக்க தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதத்திற்கும் கீழ் உயர்ந்தது மற்றும் இந்த உயர்வில் கிட்டத்தட்ட அரைப்பங்கு பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்தது. கார்ப்பொரேட்டுகளது இலாபம் 60 சதவீதத்திற்கும் குறைவாக அதிகரித்தது மேலும் அது தற்காலிகப் பின்னடைவான தாழ்வு மட்டத்திலிருந்து அதிகரித்தது." [Shiller, Irrational Exuberance, p. 4].

கடன்சுமையின் வளர்ச்சிக்கும் பங்குச் சந்தை உயர்வுக்கும் டாலரின் மதிப்பில் (பெறுமதியில்) உயர்வுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. உண்மையில், அவை ஒருவகை நேரிய வட்டத்தை (Virtuous circle) அமைத்தன, அது அமெரிக்க நிதிக் குமிழியை (நிதி நிலையற்றதன்மையை) விரிவடையச் செய்வதற்கு வைக்கப்பட்டது. உயர்ந்து வரும் டாலரால் ஈர்க்கப்பட்ட, மூலதன பெருக்கெடுப்பானது, கடன் வளர்ச்சிக்கு நிதி அளித்தது, அதில் பெரும்பான்மையான அளவு, திரும்பவும், பங்குகள் வாங்குவதற்கு நிதியூட்ட பயன்படுத்தப்பட்டது. பங்குச்சந்தை விலைகளில் அதிகரிப்பு, நிதி முதலீடுகளில் உயர்ந்த (திரும்பக் கிடைக்கும்) வருவாய் வீதங்களைக் கணக்கில் கொண்டு அமெரிக்காவுக்குள் அதிக மூலதனத்தை ஈர்த்தது -- வருமான நீரோட்டத்தால் (திரும்பக் கிடைக்கும்) வருவாய் வீதம் அதிகம் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக சொத்துக்களின் மதிப்பில் (பெறுமதியில்) அதிகரிப்பு மூலம், வரலாற்று வடிவமான நிதிக் குமிழி மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சில எண்ணிக்கை விவரங்கள் நிகழ்ச்சிப் போக்கை விளக்குகின்றன. 1999 அளவில், S&P 500 நிறுவனங்களின் பொதுநிலைப்பங்குகளின் விகிதாச்சாரத்திற்கு கார்ப்பொரேட் கடன், 1980களின் முடிவில் இருந்த 84 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 116 சதவீதமாக இருந்தது. 1994-99 காலகட்டத்தில் நிதி அல்லா கார்ப்பொரேஷன்களால் வாங்கப்பட்ட கடன்வாங்கல் 1.22 டிரில்லியன் டாலர்களாகும். இதில், 15.3 சதவீதம் மட்டும் மூலதனச் செலவுகளுக்கு நிதி அளிக்கப் பயன்படுத்தப்பட்டது, அதேவேளை 57 சதவீதத்திற்கும் குறையாத அல்லது 694.7 பில்லியன் டாலர்கள் பங்குமுதல்களை திருப்பி வாங்கப் பயன்படுத்தப்பட்டது.

சந்தையின் உச்சமான 2000ன் முதற் காலாண்டு அளவில் கார்ப்பொரேட்டுகளின் பொதுநிலைப் பங்குகளின் மதிப்பு (பெறுமதி) அவர்களின் சந்தை முதலீடாகப் பயன்படுத்தல், 1994ல் 6.3 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 19.6 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்தது. ஆனால் அதன் கீழுள்ள பொருளாதாரத்துடன் தொடர்பில்லாதிருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தனை சதவீதம் என்ற அடிப்படையில் மூலதனப் பயன்படுத்தமானது, 1995க்கும் 2000க்கும் இடையில் 50 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக மும்மடங்காவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தில், வரிகளுக்குப் பிறகு கார்ப்பொரேட்டுகளது இலாபம் 41.2 சதவீதம் அளவில் அதிகரித்தது. அதற்கு மாறுபாடாக, சந்தை மூலதனப் பயன்படுத்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை இரட்டிப்பாவதற்கு, அது 1982க்கும் 1995க்கும் இடையிலாக 13 ஆண்டுகளை எடுத்தது, அதேவேளை கார்ப்பொரேட் இலாபங்கள் அதே காலகட்டத்தில் 160 சதவீதத்தை அடைந்தன.

"ஆசிய அற்புதம்"

டாலர் மறுமதிப்பீட்டின் ஏனைய விளைவுகளும் அங்கு இருந்தன. 1985 பிளாசா உடன்பாடு மற்றும் ஜப்பானிய யென்னின் மறுமதிப்பாக்கத்துடன், கிழக்காசிய புலிகள் என்று அழைக்கப்படும்--தென்கொரியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் குறிப்பிட்ட அளவுக்கு பிலிப்பைன்ஸ் ஆகியன-- ஜப்பானிய முதலீட்டின் மத்தியாக இருந்தன. பின்னர், அந்த நேரம் அமெரிக்காவில் மந்தமான வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 1990களின் தொடக்கத்திலிருந்து, அமெரிக்க நிதிகள், புதிய இலாபம் உள்ள இடங்களைத் தேடிக் கொண்டு, முதலீட்டிற்காக அவற்றை இலக்காகக் கொள்ளத் தொடங்கின. "ஆசிய அற்புதம்" என்று அழைக்கப்படுவது, இந்த நிதிகளின் உட்பாய்தலில் இருந்தும் இப்பிராந்தியத்தின் மலிவான உழைப்பை சாதகமாக எடுக்க நாடும் கார்ப்பொரேஷன்களின் புதிய உற்பத்தி வாய்ப்புவசதிகளின் ஏற்பாட்டில் இருந்தும் விளைந்தது.

இது வெறுமனே ஆசியப் பிரச்சினை அல்ல. இந்தப் பிராந்தியம் உலகப் பொருளாதாரத்தில் அதிகமாய் முக்கியப் பாத்திரத்தை ஆற்றத் தொடங்கியது. 1990லிருந்து 1997 வரையிலான காலகட்டத்தின் பொழுது, கிழக்கு ஆசியப் பிராந்தியம் புதிய பூகோள முதலீட்டின் முன்றில் இரண்டு பங்கைக் கணக்கில் கொண்டிருந்தது மற்றும் உலக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அரைப்பங்கு அதிகரிப்பைக் கொண்டிருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு முக்கிய தூண்டுதல் என்ற வகையில் அது அதிகரித்த அளவில் முக்கியமானதாக இருந்தது.

பின்வரும் எண் விபரங்கள் முதலீட்டுப் பெருக்கெடுப்பின் அர்த்தத்தில் இந்தப் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 1996 முடிவில், இப்பிராந்தியத்தின் நாடுகளுள் மூன்று தனியார் வெளிநாட்டு மூலதன உட்பாய்வை உயர்ந்த அளவு பெற்றவைகளின் மத்தியில் இருந்தன. இந்தோனேஷியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய பங்கைப் (17.9 பில்லியன் டாலர்கள்) பெற்றது, மலேசியா நான்காவது மிகப் பெரிய பங்கையும் (16 பில்லியன் டாலர்கள்) தாய்லாந்து ஆறாவது மிகப் பெரிய பங்கையும் (14.7 பில்லியன் டாலர்கள்) பெற்றன.

"ஆசிய அற்புதம்" இரண்டு அடித்தளங்களின்மேல் தங்கி இருந்தது: ஏற்றுமதிச் சந்தைகளில் போட்டியிடுவதற்கான இப்பிராந்தியத்தின் திறமை மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் தொடர்ச்சியான உட்பாய்வு. ஆனால் இந்த அடித்தளங்கள் 1995 தலைகீழ் பிளாசா உடன்பாட்டின் அழுத்தத்தின் கீழ் வந்தது. அங்கு டாலரானது யென்னுக்கு எதிராக மறுமதிப்பு (மறு பெறுமதி) செய்யப்பட்டது. அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டிருந்த, ஆசியப் பொருளாதாரங்கள் உடனடி கசக்கிப் பிழிதலால் பாதிக்கப்பட்டன. சீன நாணயமான யுவான் 1994ல் மதிப்பிறக்கம் செய்யப்பட்டிருந்தது என்ற உண்மையுடன் அவர்களின் பிரச்சினைகள் இணைக்கப்பட்டிருந்தன. மற்றும் சீனாவானாது முதலீட்டு நிதிகள் மற்றும் நாடுகடந்த உற்பத்தி இவற்றுக்கான என்றுமில்லாத அளவு அதிகமான இலக்கை ஈர்க்கக்கூடியதாகி இருந்தது. டாலருடனான அவர்களின் தொடர்பை அகற்றி, அது ஏற்றுமதிகளை மலிவானதாக ஆக்க இருக்கும் தேர்வு, கிழக்காசிய புலிகளைப் பொருத்தவரை தேர்வுக்குரியதாக இருக்கவில்லை. ஏனென்றால் முதலீட்டு நிதிகளில் வெட்டுக்கு வழிவகுக்கும். இப்பிராந்தியத்தின் ஈர்ப்புத் தன்மைக்கான காரணங்களுள் டாலருடனான அதன் எதிரெதிர் நாணய ஸ்திரத்தன்மை ஆகும்.

1996 அளவில், இப்பிராந்தியத்தின் ஏற்றுமதி வளர்ச்சி வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது மற்றும் கடன்சுமையின் பிரச்சினைகள் வளர்ந்தன. பின்னர், 1997ல், நெருக்கடியானது தாய்லாந்து நாணயமான பாத் (Thai baht) மதிப்பிறக்கத்தாலும் நாட்டின் நிலம், வீட்டு மனை சொத்து பூரிப்பு பொறிந்ததாலும் தூண்டிவிடப்பட்டது.

1994க்கும் 1996க்கும் இடையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மூலதன உட்பாய்ச்சல் 40 பில்லியன் டாலர்களில் இருந்து 93 பில்லியன் டாலர்களாக இரு மடங்கானது. இருப்பினும், 1997ல் நிகர வெளிப்பாய்ச்சல் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த 105 பில்லியன் டாலர்கள் மொத்த தொகையானது பாதிக்கப்பட்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீதத்திற்கு சமமாகும்.

"1997-98 நெருக்கடி ......2000 ஆண்டளவில் தாய்லாந்து, இந்தோனேஷியா, கொரியா மற்றும் மலேசியாவுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10--20 சதவீத குறுகியகால இழப்பை அர்த்தப்படுத்தியது (இல்லாவிடில் 1996--97 வளர்ச்சி தொடர்ந்திருக்க வேண்டும் என்று கருதும்). நீண்டகால அடுக்கடுக்கான இழப்பு பெரிதாக இருக்கிறது. ஆசிய நெருக்கடி வழமையாக இருக்கும் நிதி நெருக்கடியைவிட மிகக் கடுமையாகவும் ஆழமாகவும் இருந்தது...... ஆசிய நெருக்கடியும் அதன் பூகோள எதிரொலிப்புகளும் 1998-2000ல் பூகோள உற்பத்தியை 2 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு வெட்டியது என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒருவேளை பூகோள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக இருந்தது; பெரிய அளவில், இவ்வாறாக மோசமான நெருக்கடியாக இருந்தது. ஆசிய நெருக்கடி 10 மில்லியன் பேர்களை உத்தியோக ரீதியாக வேலையில்லாதாக்கியது என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், ஆசியாவில் மட்டும் சுமார் 50 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே போயினர்" [Democratising Globalisation, p. 31].

ஆசியன் நெருக்கடி வெடித்தபொழுது, கிளின்டன் அதனை "ஒழுங்கின்மை" என தள்ளுபடி செய்தார். அதன்பின் நீண்டகாலம் ஆகவில்லை, இருப்பினும், 1998 ஆகஸ்டில் ரஷ்யா தவணை செலுத்தத் தவறுதல் மற்றும் 3 பில்லியன் டாலர்கள் இழப்பீட்டு நிதி நீண்டகால மூலதன நிர்வாகத்தின் (Hedge fund Long Term Capital Management -LTCM), பொறிவு இவற்றுடன், கிளின்டன் நிர்வாகம் இந் நிதி நிலைமையை போருக்குப் பிந்தைய கால மிக பிரச்சனைக்குரியதாக விவரித்தது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவும் மேலதிக மூலதனத் திரட்சியும்

நீண்டகால மூலதன நிர்வாகத்தின் (Hedge fund Long Term Capital Management (LTCM), பிணை எடுப்பு மூலம், மத்திய ரிசேர்வ் வாரியத்தால் (Federal Reserve Board) தலையீட்டின் மூலம் வங்கி மற்றும் நிதி அமைப்பின் "முழுதும் இயங்கத் தவறுதல்" தடுக்கப்பட்டது. ஆனால் விளைவுகள் இல்லாமல் இருந்தது. 1998 முடிவில் வட்டிவீதங்களில் வெட்டுக்கள் மற்றும் 2000க்கு இட்டுச் சென்றதில், ஏப்ரல் 2000ல் அது அதன் சிகரத்தை அடையும்வரை, அமெரிக்க நிதிக் குமிழியை மேலும் கூட தூண்டிவிட உதவியது. ஒரு ஆண்டு கழித்து அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவிற்குள் நுழைந்தது.

பின்னடைவின் மிகக் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு என்னவெனில் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வேறெதையும் போன்றதல்ல அது. உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு பதிலாய் மத்திய ரிசேர்வால் (Federal Reserve Board) வட்டிவீதங்கள் தளர்த்தப்படுவதைத் தூண்டி இருக்கவில்லை. மாறுபாடாக, அண்மைய காலகட்டத்தின் பொதுவான போக்கு, பணப்புழக்கத் தளர்ச்சி இல்லை எனில், தாழ்வான விலைகளில் ஒன்றாக இருந்துவருகிறது --அதாவது விலைகளில் வீழ்ச்சியாக இருக்கிறது.

பின்னடைவுக்குக் காரணம் பங்குச் சந்தைப் பூரிப்பின் போது முதலீட்டில் வீழ்ச்சி ஆகும். இது 2001ல் மேல்நோக்கிய திருப்பத்தைக் கொண்டுவரத் தவறிய 11 வட்டிவீத வெட்டுக்களுடன், பணத்தளர்ச்சி நிலைகளின் காரணமாக பணக்கொள்கை விளைவை ஏற்படுத்தி இருக்காத, ஜப்பானுடன் ஒத்த நிலையில் இருக்கக் கூடியதாக அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கொண்டுவரும் என்ற அச்சங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தச் சூழ்நிலைகள், முறையே மேலதிக மூலதனத்திரட்சியின் வெளிப்பாடாக இருக்கின்றன.

இந்த மேலதிக மூலதனத் திரட்சி தொலைத் தொடர்புத் துறைகளில் காணப்பட முடியும். உண்மையில், தொலைத் தொடர்பு குமிழி (Telecom bubble), டொட் கொம் குமிழியை (Dotcom bubble) விடவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கடந்த செப்டம்பர் 4ல் ஃபைனான்சியல் டைம்ஸில் வெளிவந்த கட்டுரை தொலைத்தொடர்பு நெருக்கடி மற்றும் அதன் பாதிப்பு மட்டத்தை சுட்டிக்காட்டியது.

"நஷ்டமடைந்த வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தி பரப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவை உடைவதற்கு முன்னால் சில பத்து மில்லியன் டாலர்களை வீணாக்கி இருக்கின்றன ஆனால், ஐரோப்பிய தகவல் தொழில் நுட்ப மேற்பார்வையகம், 1997க்கும் 2000க்கும் இடையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகளில் 4000 பில்லியன் டாலர்களை செலவழித்திருக்கின்றன.

"தொம்சன் நிதிக் கழகத்தின்படி, 1996க்கும் 2001க்கும் இடையில், வங்கிகள் 890 பில்லியன் டாலர்களை இணைந்த கடன்களுக்கு (Syndicated loans) வழங்கியது. இன்னொரு 415 பில்லியன் டாலர்கள் கடன் பத்திரங்களால் வழங்கப்பட்டது மற்றும் 500 பில்லியன் டாலர்கள் தனியார் பொதுப்பங்கு மற்றும் பங்குமுதல் சந்தை வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டன. இன்னும் நிறைய இலாபகரமான சில்லுகளிடம் (Blue-chips) இருந்து வந்தன, அது தாமே திவாலின் விளிம்பிற்கு ஓட்டியது அல்லது இணையப் பயன்படுத்தத்தின் வெடித்துப் பெருகும் விரிவாக்கம் கிட்டத்தட்ட தொலைத்தொடர்பு திறமைக்கான முடிவில்லாத் தேவையை உண்டு பண்ணும் என்ற நம்பிக்கைக்கு அப்பால் ஓட்டியது.

"பூகோள நிதி அமைப்புமுறை வேண்டாத பொருட்களை தீயிட்டுக் கொளுத்துதலை தூண்டுவதற்கு பழக்கப்பட ஆரம்பித்தது. 1999ல் கிட்டத்தட்ட ஐரோப்பிய வங்கிகளில் பாதிக் கடன் கொடுத்தது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கேயாகும். கடன் நிறுவனமான மூடிஸ், அதிக வருவாய் அளிப்பனவற்றின் 80 சதவீதம் அல்லது எழுச்சியின் உச்சத்தில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட 'குப்பை கூள' கடன் பத்திரங்கள் தொலைத் தொடர்பு இயக்கும் நிறுவனங்களாகும் என்று மதிப்பிடுகிறது. இவ் எழுச்சியின்போது வரலாற்றில் மிகப் பெரிய ஒன்றிணைத்தல் அல்லது கைப்பற்றல்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பத்தில் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களாகும்.

"இந்த பணத்தின் நீடித்திருக்கும் மரபுவழி-- அனைத்து செய்தித் தொடர்பு வலைப்பின்னல்களின் அடிப்படை கச்சாப் பொருட்கள் (மூலப்பொருட்கள்) மற்றும் விவரங்களின் கன அளவை இடைநின்று தொடர்பு படுத்துவதற்கான திறனுடன் 'இசை நிரம்பலால்' திணறடிப்பாதாக இருக்கிறது. அடுத்த ஆண்டில் உலகின் 6 பில்லியன் மக்கள் தொலைபேசியில் உறுதியாய் பேச இருந்தால், அவர்களின் வார்த்தைகள் சிலமணி நேரங்களுக்குள் சாத்தியமன ஆற்றலுக்கு மேலாக ஊடுகடத்தி அனுப்பமுடியும் என்றால், இத்திணறடிப்பு மகத்தானது.

தொலைத்தொடர்பு குமிழியில் பொறிவானது பல்வேறு வழிகளில் உணரப்பட்டு இருந்தது என்று கட்டுரை சுட்டிக் காட்டுகின்றது. தொலைத் தொடர்பு கடன் செலுத்தத் தவறுதல் மொத்தமாக 60 பில்லியன் டாலர்கள் ஆனது; வங்கி முதலீடுகளில் ஆயிரங்களில் மிகுதியாக இருந்தன; ஆறு மாதங்களில் தொலைத் தொடர்பு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் 300,000 வேலைகள் அழிக்கப்பட்டன மற்றும் பகுதிப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவை தொடர்புடைய தொழிற்துறைகளில் 200,000 வேலைகள் அழிக்கப்பட்டன.

"அனைத்து தொலைத் தொடர்பு இயக்ககங்கள் மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகளின் பங்கு மதிப்பு மார்ச் 2000ல் 6300 பில்லியன் டாலர்கள் உச்சத்திற்குப் பின்னர் 3800 டாலர்கள் அளவில் வீழ்ச்சி அடைந்தன. இதனை இணைந்த இழப்பின் மதிப்பு உள்ளடக்கத்துக்குள் வைக்க, 1990களின் இறுதியில் ஆசிய நிதிநெருக்கடியின் பொழுதான அனைத்து ஆசியாவின் பங்குமுதல்களின் மதிப்பில் (பெறுமதியில்) இணைந்த இழப்பு 813 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்." [Dan Roberts, "Glorious hopes on a trillion-dollar scrapheap," Financial Times, September 4, 2001].

உலகப் பொருளாதாரம் முழுவதுமான மேலதிக மூலதனத் திரட்சியின் மிகத் தெளிவான வெளிப்பாடாக மட்டுமே இருக்கிறது. பிப்ரவரி 1999க்குத் திரும்பினால், தி எக்கனாமிஸ்ட் எனும் பிரிட்டிஷ் இதழ், உலகம் "கணினி சில்லுகள், எஃகு இரும்பு, கார்கள், துணிகள் மற்றும் வேதிப்பொருட்களின் மேலதிக கொள்திறன் அலையில் மிதக்கின்றது" அந்த "பெரும் அளவுக்கு அதிகமான கொள்திறனுக்கு நன்றி" என்று எச்சரித்தது. உலகத்தின் உற்பத்தித்திறனின் வெளிப்பாடான தொழிற்துறையின் தகமைக்கும் பாவனைக்கும் இடையிலான இடைவெளி 1930களுக்குப் பின்னர் அதன் மிக உயர்ந்த மட்டங்களை நெருங்கியது என்று அது முடித்தது.

1999 ஜூனில் வழங்கப்பட்ட சர்வதேச தீர்வுகளுக்கான ஆண்டு அறிக்கையில் இந்த உணர்வுகள் பிரதிபலித்தன. "பல நாடுகளிலும் துறைகளிலும் உள்ள அளவுக்கதிகமான கொள்திறனானது நிதி ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருக்கும். கட்டுப்பாடான குறைப்பும், அல்லது அளவுக்கு அதிகமான கொள்திறனை இல்லாது செய்யாமல், முதலீட்டுச் செலவு மற்றும் நம்பிக்கை மீது உள்ளுறை ரீதியாக சோர்வுறச் செய்யும் மற்றும் நீண்டகாலம் நீடித்திருக்கும் பாதிப்புக்களுடன், மூலதனத்தின் மீதாக திரும்பப் பெறும் வருவாய் தொடர்ந்து ஏமாற்றத்தை விளைக்கும். மேலும், நிறுவனங்களின் கடன் தீர்வுத் திறம் நிதியூட்டிய இந்த மூலதன விரிவாக்கமானது அதிகரித்த அளவில் கேள்விக்குரியதாக ஆகிறது."

பூகோளப் பொருளாதாரத்துக்குள்ளே பொருளாதாரப் பின்னடைவு மற்றும் பணத்தளர்ச்சிப் போக்குகளின் ஆழத்தைப் பற்றிய குறியீட்டெண்களை ஒருவர் பட்டியலிட முடியும். "புதிய பொருளாதாரத்தில்" இலாபங்களின் பெருக்கம் பற்றிய கோரல்கள் மீது கணிசமான அளவு ஐயம் காட்டப்பட்டு வருகின்றது என்பதையும் கூட நாம் கவனிக்க வேண்டும். இலாபங்கள் வருமானப் பங்காக 1997க்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது என்று அண்மைய எண் விபரங்கள் காட்டுகின்றன. என்ரோனின் பொறிவானது "புதிய பொருளாதாரம்" ஒட்டுமொத்தமானதின் நோய்க்குறியாய் இருந்தது.

முக்கியமான புள்ளி வெறுமனே பொருளாதாரப் பின்னடைவு வெளிப்பட்டிருக்கிறது என்பது அல்ல, மாறாக பொருளாதாரப் பின்னடைவின் இயல்பாகும். அது உலகப் பொருளாதாரத்துக்குள்ளே மிகவும் ஸ்திரமான நிலைக்கு ஒரு மாறுதலைக் கொண்டிருக்கவில்லை மாறாக 1990 களின் ஆரம்பத்திலிருந்து அபிவிருத்தி அடைந்து கொண்டிருக்கின்ற அதிகரித்து வரும் சமநிலையின்மையைக் கொண்டிருக்கிறது.

நாம் நினைவு கூருவோம்: கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்குள்ளே முதலீட்டுப் பெருக்கெடுப்பின் அலை எழுச்சியுடன் ஆரம்பித்த தசாப்தமானது 1993ல் உலக வங்கியால் "அற்புத பொருளாதாரங்கள்" என்று புகழப்பட்டது. ஆசிய விரிவாக்கமானது உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டில் கணிசமான அளவைக் கணக்கில் கொண்டது. பின்னர் அந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில், அமெரிக்க நிதிக் குமிழி (நிதி நிலையற்றதன்மை) மற்றும் முதலீட்டுப் பெருக்கம் பெருமளவில் உலகப் பொருளாதாரத்திற்கு ஆதரவளித்தது. 1996க்கும் 2000 க்கும் இடையில், உலக மொத்த படிப்படியாய் உயரும் தேவையின் அரைப்பகுதிக்கு சிறிது கீழ் அமெரிக்கா மட்டுமே உற்பத்தி செய்தது என்று மதிப்பிடப்படுகின்றது. ஆனால் அது முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதிக் குமிழிகளுள் (நிதி நிலையற்றதன்மைகளுள்) ஒன்றாக வரிசையில் கட்டாயம் வைத்து எண்ணத்தக்க ஒன்றை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே அவ்வாறு செய்தது.

(தொடரும்... )

See Also:

பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved