FBI knows anthrax mailer but won't make an arrest, US scientist charges
அந்த்ராக்ஸ் கிருமிகளை அஞ்சலில் விடுத்தவர்களை எஃப்.பி.ஐ க்குத் தெரியும்
ஆனால் கைது செய்யமாட்டார்கள், அமெரிக்க விஞ்ஞானி குற்றச்சாட்டு
By Patrick Martin
25 February 2002
Back to screen version
உயிரி யுத்தம் பற்றிய அமெரிக்க முன்னணி வல்லுநர் ஒருவர், அமெரிக்க காங்கிரசின் ஜனநாயகக்
கட்சித் தலைமை மற்றும் ஏனைய இலக்குகள் மீது கடைசியாக நடாத்தப்பட்ட அந்த்ராக்ஸ் தாக்குதலை ஏற்பாடு செய்தவர்களை
எஃப்.பி.ஐ அடையாளம் காட்ட முடியும், ஆனால் கைது செய்வதில் மற்றும் குற்றங்களை வலியுறுத்துவதில், அரசாங்கத்தின்
இரகசிய நடவடிக்கைகள் அம்பலமாகிவிடும் என பயந்து "பின் வாங்குகிறார்கள்" என்றார்.
அரசு சாராத, சுயேச்சையான, வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களின் குழுவான,
வேதிப் பொருள் (இரசாயன)
மற்றும் உயிரி ஆயுதங்கள் திட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குநர்
பார்பரா ஹாட்ச் ரோசன்பேர்க், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பொது மற்றும் பன்னாட்டு அலுவல்கள் தொடர்பான
உட்ரோ வில்சன் பள்ளியில் பெப்ரவரி 18ல் நடந்த ஒரு சொற்பொழிவில் குற்றஞ்சாட்டினார்.
சென்ற அக்டோபரிலிருந்து செனட் பெரும்பான்மைத் தலைவர் ரொம் டாஷ்லே, செனட்டர்
பாட்ரிக் லெஹி மற்றும் பல செய்தி நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் பயங்கர அளவில் அந்த்ராக்ஸ் கிருமிகளை அனுப்பியது
யாரென எஃப்.பி.ஐக்குத் தெரியும் என அவர் கூறினார். "அரசு வட்டாரங்கள்" தனிநபரை பலமுறை விசாரித்திருந்தனர்,
ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்று அவரிடம் கூறியதாக விபரித்தார்.
கடைசியாக குறைந்தது 5 அந்த்ராக்ஸ் கிருமிகள் தாங்கிய கடிதங்கள் அஞ்சல் செய்யப்பட்டன.
இதன் விளைவாக 4 உயிரிழப்புகள் மற்றும் பலர் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாயினர். இவைகளில் மூன்று (வலிமை
குறைந்த பாக்டீரியா இனம் ஆகும்) ஸ்டார் செய்தித்திரட்டு வெளியீட்டாளர், நியூயோர்க் போஸ்ட்
பத்திரிகையின் ஆசிரியர் மற்றம் என்.பி.சி. செய்தி வாசிப்பாளர் ரொம் பிரோக்காக்கும் அனுப்பப்பட்டன
மற்றும் இரண்டு மிகவும் வலிமை வாய்ந்தவை டாஷ்ச்லே (Daschle)
மற்றும் லெஹிக்கு (Leahy)
சென்றன.
டாஷ்ச்லே மற்றும் லெஹியின் கடிதங்களிலிருந்த அந்த்ராக்ஸ் கிருமிகளை மிகவும் கவனமாக
ஆராய்ந்து பார்த்த நுண்ணுயிரியல் நிபுணர்கள், அவைகள் மிகவும் சுத்தமாகவும், உயிர் நுண்மங்கள் வீரியமாகவும் உள்ளவை
எனக் குறிப்பிட்டனர். போதுமான விஞ்ஞான அறிவும் உயிரி ஆயுதங்களுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட அந்த்ராக்ஸின் அரசாங்க
இருப்பைத் தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு சிலரே இதனைப் பரப்பும் பணியைச் செய்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத்
தெரியத் தொடங்கி இருக்கிறது.
வாஷிங்டன் டி.சி.யிலிருந்து 40 மைல்கள் வடமேற்கில் உள்ள ஃபிரடெரிக் அருகிலுள்ள மேரிலேண்டின்
டெட்ரிக் கோட்டையிலுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயிரி யுத்த ஆய்வுக்கூடத்தில் முன்னாளில் பணியாற்றிய விஞ்ஞானி
ஒருவரே சந்தேகத்திற்குரிய நபராக இருக்கும் எனத் தெரிகிறது என பிரின்ஸ்டன் பார்வையாளர்களிடம் ரோஸன்பேர்க்
கூறியதாக டிரென்டன் டைம்ஸ் விவரித்துள்ளது.
பிரதான மருந்து மற்றும் இரசாயன கம்பெனிகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளிடையே அந்த்ராக்ஸ்
கிருமிகளை உண்டாக்க போதுமான விஞ்ஞான அறிவு உள்ளதா என்னும் வினாவுக்கு பதிலளிக்கும் முகமாக கப்பிடல் ஹில்லிற்கு
(காங்கிரஸ் கட்டிடம்) வந்த கடிதங்களை கவனமாக ஆராய்ந்து இந்தக் கருத்துரு மறுக்கப்பட்டதென ரோசன்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த ஆய்வின் விளைவு வகைப்படுத்தப்பட்ட விவரங்களைப் பெற தொடர்பு அவசியம் வேண்டும் என காட்டுகின்றது",
மற்றும் "மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் அநேகருக்குப் பொருந்தாது" என எண்ணுகிறேன் எனவும் கூறுகிறார்.
அந்த்ராக்ஸ் நுண்ணுயிர்மங்களின் வேகம் இதைக் கையாள்பவர் இராணுவ ஏற்பாட்டில் உள்ள
அந்த்ராக்ஸை கையாளுவதில் நல்ல பயிற்சி பெற்றிருந்தார் என்பது மட்டுமல்ல அதன் பாதிப்பு தனக்கு ஏற்படாத வகையில்
எதிர்ப்பு ஊசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஆண்டிறுதியில் செறிவூட்டக் கூடியதைப் பெற்றிருக்க வேண்டும்
என்றும், இந்த நுண்ணுயிரிகள் ஒன்றாய்ச் சேர்ந்து கெட்டியாகி விடாமல் காற்றில் பரவி உரிய எதிர்பார்ப்பைத் தரத்தக்க
முறையில் அந்த உயிர்மங்களை வேதி இயல் (இரசாயனவியல்) முறையில் கையாளும் திறனை அவர் பெற்றிருக்க வேண்டும்
என்றும் கருத்துரைக்கிறது.
"இதனைச் செயல்படுத்தியவர் தற்பொழுது வாஷிங்டன் டி.சி. பகுதியில் ஒப்பந்தப் பணியாளராக
பணியாற்றும் விஞ்ஞானி, டெட்ரிக் கோட்டையில் முன்னாள் விஞ்ஞானி என நாம் அனுமானிக்கலாம்" என்று ரோசன்பேர்க்
கூறினார். "அதோடு அவருக்கு புளோரிடா, நியூஜேர்ஸி மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் செல்ல காரணம்
இருந்திருந்தது... நுண்கிருமிகளை அவரே உருவாக்கி, திடப் பொருள் ஊடகத்தில் வளர்த்து, இதை தனியோரிடத்தில் சாதனத்தையும்
பொருளையும் அவர் திரட்டி அந்த்ராக்ஸ் கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்த உபயோகித்தார் எனலாம்."
"எஃப்.பி.ஐ இவரை குற்றக்கண்ணோடு பார்ப்பது நமக்குத் தெரியும். இவர் இரகசிய
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதும் எஃப்.பி.ஐக்குத் தெரியும். இருப்பினும் அரசு அதனை வெளிப்படுத்த
விரும்பவில்லை" என்று ரோசன்பேர்க் கூறினார்." எனவே எஃப்.பி.ஐ இந்தக் குற்றத்தை யார் செய்தார் என்பதைப்
பொதுமக்களுக்கு உணர்த்துவதில் ஆர்வம் காட்டவில்லையோ என்ற ஐயத்தைக் கிளப்புவதாக ரோசன்பேர்க் கூறினார்.
"இந்த நபரை அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு சிலருக்குத் தெரியும் என்பதை நான் அறிவேன்
சீரிய நடவடிக்கை தொடர்ந்தால் இவ்விபரம் வெளிப்படும் என்று கவலைப்படுபவர்கள் அவர் நேரடி பார்வையிலிருந்து மறைவாக
உள்ளார் என நினைக்கும் வண்ணம் பேரம் செய்யப்பட்டிருக்கிறது" என ரோசன்பேர்க் கூறினார்.
"ஆனால் இது நிகழவில்லை என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கம் இதற்கு முக்கியத்துவம்
கொடுத்து, செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி எஃப்.பி.ஐ-யை தூண்டி இதற்கு காரணமானவர் மீது வழக்குத் தொடர
வேண்டும் என்பதே."
உயிரி ஆயுதங்களை இரகசியமாக அபிவிருத்தி செய்யவும் ஆய்வு செய்யவும் நடந்து
கொண்டிருக்கும் ஆய்வின் காரணமாக புஷ்ஷின் நிர்வாகம் நுண்ணுயிர் யுத்த ஆயுதங்களைத் தடை செய்யும் சர்வதேச உயிரி
ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் கடந்த கோடையில் கையெழுத்திட மறுத்தது என்ற நம்பிக்கையையும் கூட ரோசன்பேர்க் வெளியிட்டார்.
ரோசன்பேர்க் இது தொடர்பாக மேற்கொண்ட விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவை. எஃப்.பி.ஐ அந்தராக்ஸ் தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மறுப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க
பொதுமக்களிடம் அவர்கள் மீது நடவடிக்கைக்கு முயற்சிகள் எடுப்பதாகப் பொய்யும் சொல்லி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு
முன்பு ரோசன்பேர்க் தமது பேச்சில், டிரென்ட்டனில் நடந்த எஃப்.பி.ஐ கூட்டத்தில் இக்குற்றத்தைச் செய்தவர்களை அடையாளம்
காட்டும் தகவல் கொடுத்து அதனால் கைது செய்யப்பட்டால் தகவல் கொடுத்தவர்களுக்கு இரட்டிப்பு மடங்காக 2.5
மில்லியன் டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டதைச் சொன்னார். எஃப்.பி.ஐ யும் 40,000 நுண்ணுயிரியல்
ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களது விசாரணைப் பணியில் உதவுமாறு மின்அஞ்சல்களை அனுப்பியுள்ளது.
நியூயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் ஜனவரி 23ல் பிரசுமான செய்தியின்படி,
எஃப்.பி.ஐ விசாரணையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்ததாகவும் சந்தேகப்படும் நபர்கள் பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை
என்றும் எஃப்.பி.ஐ வட்டாரங்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியதாக செய்தி வெளியாயிற்று. ஆனால்
ரோசன்பேர்க் கூற்றின்படி எஃப்.பி.ஐ க்கு நீண்ட காலமாக இதனை தபாலில் அனுப்பியது யார்? யார்? எனத் தெரியும்,
இதனுடன் தொடர்புடையவர்களைப் பலமுறை அவர்கள் நேரில் விசாரித்திருந்தனர்.
பிப்ரவரி 12 ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் இதுபோன்ற தவறான தகவல் வெளியாயிற்று.
செய்தித்தாளின் அறிக்கையின்படி எஃப்.பி.ஐ வட்டாரத்தை ஆதாரமாகக் காட்டி, அந்த்ராக்ஸ் கிருமிகள் பற்றிய விசாரணை
அமெரிக்க இராணுவ விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்து வருகிறது. அது டெட்ரிக் கோட்டை, டக்வே, உடாவில்
தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் மறுபடியும் இந்த விசாரணை முற்றிலும் வேதனை தரத்தக்க வகையில் முன்வைக்கப்பட்டது.
எஃப்.பி.ஐ இன் ஆர்வக் குறைவுக்கான மேலும் ஆதாரம் கனடாவைச் சேர்ந்த அந்த்ராக்ஸ்
கிருமிகளின் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து தெரியவருகிறது. புஷ் நிர்வாகத்தின் அலுவலர்கள், அந்த்ராக்ஸ் கிருமிகளின் மூலாதாரத்தைக்
கண்டறிய பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், அதற்காக வடஅமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்தும் ஆராய்ச்சிக்காக
அனுப்பப்படும் ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் ஏம்ஸ் வகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது என்றும் அண்மைய பத்திரிகையாளருக்கான
பேட்டியில் கூறினர். ஆனால் ஆல்பர்ட்டாவிலுள்ள, ஸஃபீல்டில் இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிரியல் வல்லுநரான பில்
கோர்னிகாகிஸ் கூற்றின்படி, "இந்த ஏம்ஸ் வகை பெருக்கு நுண்ணுயிர்கள் தொடர்பாக சட்டம் ஒழுங்குத் துறையிலிருந்து
நாங்கள் ஒருபோதும் தொடர்பு கொள்ளப்படவில்லை." என்றார்.
மேலும் ஒரு விபரப்படி, டெட்ரிக் கோட்டையுடன் தொடர்புள்ள யாரோ ஒருவரே அந்த்ராக்ஸ்
கிருமிகளின் தாக்குதலுக்குக் காரணமானவர் என்ற முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்க. கடற்படைத்
தளத்திற்கு ஒரு கையெழுத்திடப்படாத கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இது அந்த்ராக்ஸ் கிருமிகளைத் தாங்கிய கடிதங்கள்
அஞ்சல் செய்யப்பட்ட பிறகும் ஆனால் அது தொடர்பாக செய்திகள் வெளிவரும் முன்பும் அனுப்பப்பட்டது. அதில் எகிப்திய
அமெரிக்க விஞ்ஞானி ஆயாத் ஆசாத் (Ayaad Assaad)
என்பவர் ஒரு நுண்ணுயிர் பயன்படுத்தும் பயங்கரவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசாத் 1997ல் டெட்ரிக் கோட்டையிலிருந்து
நீக்கப்பட்டார். பின்னர் அவர் அவருடைய நீக்கத்திற்கு இனவெறுப்பும், கொடுமையும் காரணம் எனச் சுட்டிக் காட்டினார்.
அந்த்ராக்ஸ் கிருமியை அஞ்சல் செய்ததில் அவருக்கு எந்தப் பாத்திரமும் இருந்ததா என்ற ஐயப்பாட்டிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பழிப்பு நிகழ்ந்த காலம் - செப்டெம்பர் 11ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப்
பின்னர் அந்த்ராக்ஸ் கடிதங்கள் பொதுமக்களுக்குத் தெரிய வருமுன்னரே நிகழ்ந்துள்ளது -இந்தக் கையெழுத்திடாத கடிதத்தை
அனுப்பியவரே அந்த்ராக்ஸ் கடிதங்களை அனுப்பியிருக்கக்கூடும் எனக் கருத்தறிவிக்கிறது. தாக்கியவர் திசை திருப்புமுகமாகத்தான்,
அனுப்பிய அந்த்ராக்ஸ் கடிதங்களில் அவர் இஸ்லாமிய பழமைவாதிகளின் மொழியை உபயோகித்திருந்தது போலவே, ஒரு
அராபிய அமெரிக்கர் மேல் குற்றச்சாட்டை ஏற்படுத்த விழைந்தார். தன்மேல் சந்தேகம் எழாதபடி குற்றவாளிகளைக்
கண்டுப்பிடிப்பவர்களைத் திசை திருப்பினார். அத்தகைய ஜோடனைக்கு ஆசாத் சாத்தியமான இலக்காக இருக்கக் கூடிய
அளவுக்கு, தாக்கியவர் டெட்ரிக் கோட்டை தொடர்பாக போதிய அளவு பரிச்சயம் உள்ளவராக இருக்க வேண்டும்.
|