பசுமைக் கட்சியானது ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது
By Peter Schwarz
30 November 2001
Back to screen version
24.11.2001 ல் நடந்த தேசியக்கட்சி கூட்டத்தில் பசுமைக் கட்சியின் பெரும்பான்மையினர்
"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்" ஜேர்மன் இராணுவத்தினை தலையீடுசெய்ய ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மூன்றில் இரண்டு பகுதியினர் அதாவது 700 அங்கத்தவர்கள், பாராளுமன்றத்தில் 16ம் நவம்பரில் எடுத்த முடிவினை ஏற்றுக்
கொள்ள கட்சித் தலைமையும் முன்வைத்து விண்ணப்பத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்தவாக்குக்கள் வெளிநாட்டு அமைச்சர்
Joschka Fischer மீதான நம்பிக்கைக்கு ஆதாரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் இவ்விண்ணப்பத்தினை நிராகரிக்கும் பட்சத்தில் இது சமூக ஜனநாயக கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் கூட்டினை பேர்லினில்
முடிவுகட்டப்படும் என்பதை ஏற்கனவே மிகத்தெளிவாக விளக்கமளித்திருந்தார். இன்று பசுமைக் கட்சியிற்கு முன்னால் உள்ள
இரண்டு மாற்றீடுகள், ஒன்றில் இத் தேவையான தலையீட்டிற்கு ஆதரவளித்து பொறுப்புடன் பாராளுமன்றக் கட்சியாக பொறுப்பெடுப்பதா?
அல்லது அனைத்தையும் கைவிடுவதா என்பதே என Fischer
கூறியுள்ளார்.
ஏற்கனவே இரண்டரை வருடங்களுக்கு முன்னர்
Bielefeld என்னுமிடத்தில்
நிகழ்ந்த மாநாட்டில் திட்டவட்டமான பெரும்பான்மையினர் யூகோஸ்லாவியா யுத்தத்தில் ஜேர்மன் இராணுவ தலையீட்டிற்கு
எதிராக அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும். ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு ஆதரவான கட்சியின் நிலைப்பாடு அது யுத்தம்
தொடர்பாக எங்கு நிற்கின்றது என்பது தொடர்பாக எவ்வித ஐயுறவினையும் உருவாக்கவில்லை. தமது முக்கிய கடமையானது
யுத்தத்தை தவிர்ப்பது என சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர்
Fischer எமக்கு
"பசுமைக் கட்சி ஒரு யுத்தத்திற்கு நிபந்தனைகளை உச்சரிப்பது" இது ஒரு சிக்கலான பணியாகும் என கூறியுள்ளார்.
பசுமைக் கட்சிக்குள் உள்ள அமைதிவாத எதிரணியினர் இவ் வளர்ச்சிக்கு எதிராக நிலைநிறுத்த
தம்மை லாயக்கற்றவர்களாக மேலும் காட்டிக் கொண்டுள்ளனர். மாறாக இவர்கள் முக்கியமான பாத்திரத்தினை ஏற்றுள்ளனர்.
அதாவது விமர்சனத்தோடு கூடிய ஆதரவினை வழங்கி கட்சியினுள்ளும், மக்கள் மத்தியில் வளச்சியடைந்துவரும் எதிர்ப்பியக்கத்தினை
திசைதிருப்ப முனைகின்றனர்.
வாக்கெடுப்பிற்கு முன்னர்
இங்கு நடைபெற்ற பல மணித்தியால விவாதமானது
Bielefeld இல் கடுமையான
எதிர்க்கருத்துள்ள விவாதங்கள் எதுவுமில்லாது, ஒவ்வொருவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்து முடித்தது
போல் இருந்தது.
Joschka Fischer அங்கத்தவர்களை அச்சுறுத்தியும்,
கெஞ்சியும் ஒன்றில் நீங்கள் என்னை சுயமாக இயங்க அனுமதிக்கவேண்டு இல்லையேல் நான் வெளியேறுகின்றேன் என தனது
இறுதி முடிவை முன்வைத்தார். Christian Ströbele, Annellie Bunten Bach
மற்றும் பல இடது கன்னை எதிர்ப்பு பிரதிநிதிகள் Fischer
இற்கு எதிராக ஆப்கானுக்கு இராணுவத்தினை அனுப்ப தெளிவான எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும்
Fischer ஆரவாரமாக வரவேற்கப்பட்டார். Ströbele
இற்கும் அங்கத்தவர்கள் மத்தியில் அதேயளவு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பின்னரும் Ströbele,
Fischer ன் ஆதரவாளர்களுடன் கூடியிருந்து இறுதி தீர்மானத்தை பூசிமெழுகுவதில்
ஈடுபட்டிருந்தார். அத்தீர்மானமானது யுத்தத்தில் பங்கு கொள்வது சம்பந்தமான ஒரு ஆணித்தரமான விளக்கத்தினை அவர்
கொண்டிருந்ததுடன் அமைதிவாதம் தொடர்பாகவும் மேலெழுந்தவாரியாக குறிப்பிட்டிருந்தது.
Ströbele இற்கு நன்றி கூறும்வகையில்
Bünnis 90, பசுமைக்
கட்சி எப்போதும் அமைதிவாத பாரம்பரியத்தை கட்டிபாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முழுக் கட்சி தீர்மானமும் இந்த தொனியிலேயே இருந்தது. ஒரு புறத்தில் சமூக ஜனநாயக,
பசுமைக் கட்சியின் கூட்டமைப்பை பேணிக்காத்து தேசிய பாராளுமன்றத்துக்கு பின்னால் நின்று யுத்தத்திற்கு சாதகமான முழு
பொறுப்பினையும் எடுத்து கொண்டும், மறுபுறத்தில் யுத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்த ஒவ்வோரு
உறுப்பினரையும் வாழ்த்திக்கொண்டுமுள்ளார்கள். ''இறுதி முடிவாக நாங்கள் எமது அங்கத்தவர்களுக்கு திட்டவட்டமாக
மரியாதை கொடுக்கின்றோம். திட்டவட்டமான கேள்விகளில் தேவையான மாதிரி அடித்தளமான வித்தியாசமான
கருத்துக்களை வெளிப்படுத்தியமை முக்கியமானது. ஒருவருக்குமே இத்தீர்மானம் சுலபமானதாக இருக்கவில்லை. எம்மில்
பெரும்பான்மையினர் யுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும் அவர்கள் இங்கு வைத்த விமர்சனத்தினை நாம் ஏற்றுக்கொள்ள
வேண்டும். இதற்கு எமது கட்சியில் இடமுள்ளது. இதற்கான அர்த்தம் வாக்கெடுப்பில் வெளிப்பட்டது."
இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் தமக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்தமைக்கான
காரணம் இந்த யுத்தத்திற்கான உண்மையான காரணம் என்பது அங்கு எழுப்பப்படவில்லை.
ஜேர்மனின் யுத்தபங்கெடுப்புக்கு எதிரானவர்கள் கூட தாம் ''பயங்கரவாதத்திற்கு எதிரான
யுத்தத்திற்கு'' எதிரானவர்கள் அல்ல எனவும், யுத்தமானது அமைதிவாத கொள்கைக்கு எதிரானதாலேயே நாம் எதிர்ப்பதாக
கூறியுள்ளனர். அத்துடன் யுத்தம் தவறுசெய்யாத சாதாரண மனிதர்களை பாதிக்கிறது, புதிய எதிர்ப்பை ஏற்படுத்தி ஒரு புதிய
தலைமுறையை பயங்கரவாதிகளை உருவாக்குகின்றது. இது பயங்கரவாதத்தின் அடித்தளமாக அமைகிறது என விவாதித்த
இவர்கள் அமெரிக்கா மீதான சில விமர்சனங்களை வைத்து கொசவோ, மசடோனியா போலவே ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா
"பிரச்சினையின் ஒரு பகுதியாகும்" என Ströbele
கூறுகின்றார்.
ஆனால் யுத்தத்திற்கு சாதகமானவர்கள் குண்டுத்தாக்குதல் ஆப்கானிஸ்தான் பெண்களையும்
நாட்டினையும் தலிபான்கள் ஆட்சியில் இருந்து விடுதலை செய்யவே என காட்டமுயற்சிக்கின்றனர். கட்சி மாநாட்டில் எதிர்மாறான
தீர்மானமானது பேர்லினில் பிற்போக்குவாத, தாராளவாத கட்சியின் அரசாங்கம் உருவாகுவதற்கு காரணமாகிவிடும் என
கூறுகின்றனர். நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோமானால் வலதுசாரிகளான ஆஸ்திரியாவின்
Haidar, இத்தாலியின்
பெர்லுஸ்கோனி மற்றும் டென்மார்க்கில் Rasmussen,
சிலவேளை ஜேர்மனியில் (பவாரியா மாநிலத்தின் கிறிஸ்தவ சமூக கட்சியின் தலைவரான)
Stoiber போன்றவர்களுக்கு
ஐரோப்பாவில் இடத்தை கொடுப்போம். இந்த நிலைமையில் ஐரோப்பா வேறுவிதமாக இருக்கும்.
ஆதலால் இந்த அடித்தளத்தில் இந்த கட்சியினுள் எவரும் இருக்கலாம், ''ஒருவரினதும் குணநலங்கள்
இக்கட்சியினுள் பாதிக்கப்படாது'' இருக்கும் என எவரும் குறிப்பிடலாம் என கட்சியின் முன்னணித் தலைவர்
Cladia Roth குறிப்பிட்டார்.
ஆனால் யுத்தத்தின் நோக்கம் விவாதிக்கப்பட்டிருக்குமானால் இது சாத்தியமற்றதாகியிருக்கும்.
10 வருடங்களுக்கு முன்னர் பசுமைக் கட்சி
Joschka Fischer
உட்பட வளைகுடா யுத்தத்தின் மத்தியில் "எண்ணெய்க்காக இரத்தம் வேண்டாம்" என்ற பதாகையில் ஆர்பாட்டத்தினை
நடத்தினர். Rostork
கூட்டத்தில் எண்ணெய் என்ற வார்த்தையை பிரயோகிக்கவேயில்லை. இந்த யுத்தம் மத்திய ஆசியாவிலும் கஸ்பியன் கடல் பிரதேசத்திலுள்ள
எண்ணெய் வளங்களுக்காகவே என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதேபோலவே அமெரிக்காவிற்கு எதிராக
விமர்சனமும் முணுமுணுக்கப்படவில்லை. ஒருவரும் அமெரிக்காவை தீண்டி அமெரிக்கா எதிர்ப்பு வாதத்தினை தூண்ட
விரும்பவில்லை. அமெரிக்கா ஏற்கனவே, புஷ் இன் அரசாங்கத்தின் கீழ்
Fisher தமது
அங்கத்தவர்களுடன் நின்று கொள்ளவிரும்பும் ஐரோப்பிய அரசியல்வாதிகளைவிட வலதுசாரி ரீதியில் முன்னணியில்
நின்றுகொண்டுள்ளது.
மேலெழுப்பப்பட்ட கேள்விகள் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் பயங்கரவாதத்தினை
முடிவிற்கு கொண்டுவந்து ஒரு பாதிக்கப்பட்ட நாட்டில் ஜனநாயாகத்தினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல
என்பதை விரைவாக தெளிவாக காட்டுகின்றது. ஆனால் உண்மையில்
இது வல்லரசுகளுக்கு இடையில் உலகத்தினை பங்கிடுவதற்கான முதலாவது
அடியாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி புஷ் கூச்சமின்றி தொடர்ந்து கூறுவதுபோல் இது தவிர்க்கமுடியாதபடி தொடர்ச்சியான
விளைவுகளை உருவாக்கும். இந்த யுத்தத்தில் பங்கெடுப்பது தொடர்பான உடன்பாடு செய்வது என்பது கேள்விக்கிடமற்றது.
இதனாலேயே பசுமைக்கட்சி இக்கேள்வியை கடந்த கட்சி மாநாட்டில் மறைத்துள்ளது.
இதனால் சமூக ஜனநாயக கட்சியினதும், பசுமைக் கட்சியினதும் கூட்டும் அக்கட்சியின் ஒன்றிணைப்பும்
தற்சமயம் தலைதப்பியுள்ளது. கட்சிக்கும் பெரும்பான்மை மக்களுக்கும், முன்னாள் பசுமைக் கட்சியின் வாக்காளர்களுக்கும்
இடையேள்ள ஆழமான இடைவெளியை இந்த முறையில் நிரப்பமுடியாது. அடுத்த ஒன்பது மாதங்களில் வரும் தேசிய பாராளுமன்றத்
தேர்தல் இவர்களின் அரசியலுக்கு முடிவாக இருக்கும்.
|