Dave Van Ronk, folk and blues artist, dead at 65
ஃபோக் மற்றும் புளூஸ் இசைக் கலைஞன் டேவ் வான் ரொங் 65 ஆவது
வயதில் மரணம்
By Fred Mazelis
14 February 2002
Back to screen version
பிரபல்யமான புளூஸ் மற்றும் ஃபோக் பாடகர், கிற்றாரிஸ்ட் மற்றும் பாடலாசிரியருமான
டேவ் வான் ரொங், முள்ளந்தண்டு (Colon)
புற்றுநோய்காக சத்திரசிகிச்சை செய்யப்பட்டு மூன்றுமாதங்களின் பின்னர் பெப்ரவரி 10 அன்று மரணமடைந்தார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலுமிருந்தும் நன்மதிப்பையும், எண்ணற்ற ரசிகர்களையும் மற்றும்
விசிறிகளையும் இத்துறையிலான அவரது 40 வருடப் பயணத்தில் வான் ரொங் பெற்றுக்கொண்டார். அவரது முதல்
"அல்பம்" Folkways Records
இற்காக 1959 இல் பதிவானது, இதனைத் தொடர்ந்து இரண்டு டசினுக்கும் மேலானவை
வெளியாகின. அவர் தன் வாழ்கையின் முடிவுவரை தயாரிப்பினையும் கற்பித்தலையும் தொடர்ந்தார்.
வான் ரொங்கின் இசையின் பாணி (Style
) இலகுவாக வகைப்படுத்தகூடியதன்று. இவரது முன்னய நாட்களைப்
பார்க்கிமிடத்து, 1950 களில் இவர் தினமும் நியூ யோர்க் நகரில் ஜாஸ் மன்றங்களுக்கு (Jazz
clubs) சென்று
Coleman Hawkins
மற்றும் Jimmy Rushing
போன்றவர்களை சந்தித்துவத்த காலங்களில் இவர் தான் செல்வாக்குச் செலுத்திய
வட்டங்களில் ஜாஸ் கலைஞனாக அழைக்கப்பட்டார். அத்துடன் இவர் புளூஸ் இசைக் கலஞர்களினல் மிகவும் செல்வாக்கு
செலுத்தப்பட்டிருந்தார், Blind Lemon Jefferson
மற்றும் ஏனைய முன்னோடிகளது அடிப்படை இசைகளின் (Classics)
தனது சொந்த பதிப்புகளைப் பதிவுசெய்தார். இவரது பணி எப்பொழுதும் அமெரிக்க இசையின் (சங்கீதத்தின்) வேர்கள்
என எவை அழைக்கப்பட்டு வருகினறனவோ அவற்றினையிட்ட ஆர்வத்தினையும் ஆழ்ந்த படிப்பினையையும் குறித்து நின்றது.
ஒடெற்றா மற்றும் பெற் சீகர் (Odetta
and Pete Seeger) போன்ற பிரபல்யமான படைப்பாளர்களையும்,
அத்துடன் அவரது சமகாலத்தவர்களையும் மற்றும் இளம் இசைக்கலைஞர்களான --மிகப் பிரபல்யமான
Bob Dylan மேலும்
Jack Elliott, Phil Ochs, Tom Paxton,
Joni Mitchell, Janis Ian, Christine Lavin, Suzanne Vega
மற்றும் ஏனைய பலரையும் அறிந்திருந்ததுடன் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியுமிருந்தார்.
Dylan 1961 இல் தனது
20 வது வயதில் நியூயோர்கின் கிறீன்விச் விலேச்சுக்கு வந்த பின்னரான மாதங்களில் பெரும்பாலும் வன் ரொங் மற்றும்
அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். வான் ரொங் அவரது 25 வது வயதில் கிற்றார் வாத்தியத்தில் அவரது நுட்பங்களினாலும்
மற்றும் ஏனைய பல வழிகளினூடாகவும் இளம் இசைக்கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்ததுடன்,
Bertolt Brecht
[ஜேர்மானிய நாடகாசிரியர்]
மற்றும் பிரெஞ்சு
symbolist கவிஞர்களுடையவற்றையும் கற்பதில் ஆர்வமுற்றிருந்தார்.
அவர் Seeger, Peter,
Paul, Mary மற்றும்
ஏனைய ஃபோக்-இசைப் பாடகர்களுடன் சேர்ந்து பணியாற்றியும் சேர்த்து
மதிக்கப்பட்டும் இருந்தபோதிலும், அவரது பணி ஏதோ ஒரு வகையில் வேறுபட்டதும், பரந்ததும் மற்றும் பல வகையிலானதுமாகும்.
இவரது இசைப்படைப்புகள் Louis Armstrong,
Leonard Cohen, Randy Newman மற்றும்
Rev. Gary Davis போன்ற புளூஸ் இசைக் கலைஞர்களின் படைப்புகளுடன்
ஒப்புநோக்கத்தக்கவையாகும். இவர் ஜாஸ், புளூஸ், ஃபோக் மற்றும் நாட்டுப்புற இசைகளிலிருந்து அவர் மேலும் அபிவிருத்தி
செய்தார்.
வான் ரொங்-கின் வாழ்வு முழுவதனையும் மற்றும் பணிப் பயணத்தினையும் வடிவமைத்த அவரது
அரசியல் மற்றும் அறிவுஜீவித நோக்குநிலை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆழ்ந்திருந்தது, இருப்பினும் அவர் வழமையாக
"அரசியல்" சார்ந்தோ அல்லது கண்டனப் பாடல்களையோ இசைத்ததில்லை.
New York Times இல் பொப் இசை விமர்சகர்
Jon Pareles வான் ரொங்கிற்கான அவரது அஞ்சலிக் குறிப்பில், "வரலாற்றின்
உணர்மை மற்றும் நகைச்சுவை உணர்வை கொண்டிருந்ததுடன், சக இசைக்கலைஞர்கள் இவர் ஒரு கொடை என்பதை உணர்ந்தார்கள்"
என எழுதுகின்றார். இது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாகும், மேலும் வான் ரொங் ஆயிரக்கணக்கான அவரது சகாக்களினால்
நேசிக்கப்பட்டார் என்று கூறின் அது மிகையாகாது, இது அவரை நோய் வாழ்வின் இறுதிக்கு இட்டுச் சென்றநேரத்தில் அவருக்குக்
கிடைத்திருந்த கட்டுக்கடங்காத ஆதரவினால் எடுத்துக்காட்டப்பட்டது.
வரலாற்றின் உணர்மையும் அது எங்கிருந்து வந்ததது என்பதும், எவ்வாறாயினும், நிச்சயமாக
தெளிவுபடுத்தப்படவேண்டும். வான் ரொங் அவரது முழுவதுமான வாழ்க்கைக்காலத்தில் தொழிலாள வர்க்கத்துடன் இனங்காணப்படுவதுடன்
முதலாளித்துவத்தின் வெறுக்கத்தக்க சுரண்டலையும் அத்துடன் சோசலிசத்தின் மீதான ஆதரவினையும் வெளிப்படுத்தினார்.
அவரது இளம் பிராயத்தில் அவர் அராஜக-தொழிற்சங்கவாத (Anarcho-syndicalism)
கருத்துகளினால் கவரப்பட்டிருந்தார், பின் 1960 களின் ஆரம்பத்தில் அவர் ட்ரொட்ஸ்கிச ஆய்வுகளுடனும் முன்னோக்குடனும்
தனது உடன்பாட்டை வெளியிட்டிருந்தார். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியினது முன்னோடியான தொழிலாளர்
கழகத்தில் (Workers League)
இணைந்ததுடன் 1960களின் இறுதிவரை இத்தொடர்பினைப் பேணிவந்தார். 1998 மே மாதம் வான் ரொன்க்
WSWS இன் கலையியல்
ஆசிரியர் டேவிட் வோல்ஷ் உடன் நீண்டதும் பரந்ததுமானதோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். [டேவ்
வான் ரொங் உடன் ஓர் கலந்துரையாடல்]
1936 இல் பூறூக்லின் என்னுமிடத்தில் வான் ரொங் பிறந்தார், சிறுபிள்ளையாக
இருந்தபோதே அவர் குயின்ஸ் என்னுமிடத்திற்கு இடம்பெயர்ந்ததுடன் அங்கு றிச்மொன்ட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
15 ஆவது வயதிலேயே பாடசாலையை விட்டு வெளியேறி, அவர் பெருமளவில் சுயமாகவே கல்விகற்றார். அவர் ஒரு
பெரும் வாசகராக இருந்ததுடன், அவரது பரந்த அறிவும் மற்றும் ஆர்வங்களும் வழக்கமாய் சுயமான நகைச்சுவை
பண்புடன் இருந்ததோடு, உரையாடல் மற்றும் அவரது படைப்பு இரண்டிலுமே பிரதிபலித்தன.
வான் ரொங் தனது இளமைப் பருவத்தில் வணிக கப்பலில் பணியாற்றினார். அதேவேளை
கிறீன்விச் விலேச்சிலுள்ள வாஷிங்டன் சதுக்கத்தின் பக்கம் அதிகம் சென்று வந்தார், அப்பொழுதுதான் 1960 இன்
ஆரம்பத்திலிருந்து நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் நலிவுற்றுப்போன ஃபோக் மறுமலர்ச்சி இயக்கம் எழுச்சிபெறத்
தொடங்கியிருந்தது. Gaslight
மற்றும் Folk City
போன்ற பிரபல்யமான மன்றங்களிலும் அவர் பாடினார், அவை அரங்கிலுருந்து மறைவதற்கு நீண்டகாலம் பிடித்தது. அவரது
ஆரம்பகால பதிவுகளும் அரங்கேற்றங்களும் அவர் இதற்கு பெரிதும் தகமை வாய்ந்தவர் என்பதை தெளிவுபடுத்தின.
"Cocaine Blues," "You're a Good Old
Wagon," "He Was a Friend of Mine," "Stackerlee"
மற்றும் "House of
the Rising Sun" என்பவை உள்ளடங்கலாக நன்கு அறியப்பட்ட
அவரது பாடல்கள் மற்றும் Interpretations
களில் அதிகமானவை 1960 களிலிருந்தே வெளியாகின.
அக்கொஸ்திக் (Acoustic)
இசை மற்றும் ஃபோக் மறுமலர்ச்சி 1960களின் பிற்பகுதியிலும் 1970 களிலும் வீழ்ச்சிக்கு சென்றதும், வான் ரொங் தனது
பணியுடன் இதனை இணைத்துக் கொண்டார். அவர் ஒருபோதும் தனது புகழுக்காகவோ அல்லது தனது செல்வம் சார்ந்த
நலன்களுக்காகவோ கடுகளவும் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர் 1970 களின் நடுப்பகுதியில் ஓர் குறுகிய காலம்
இசைத்துறை வேலைகளை கைவிட்டிருந்தபோதிலும் பின்னர் ஒரு வருடத்தில் அப்பணிக்குத் திரும்பினார், அவரது வாழ்நாள்
படைப்புக்களின் முக்கியமான பகுதியினை ஒருபோதும் தள்ளிவைத்துவிட முடியாது. மேலும் தனது கலைத்திறனை அபிவிருத்தி செய்ய
அவர் தொடர்ந்து சென்றார், அவர் சாதாரணமாக தனது பழைய வேலைகளை மீண்டும் செய்துகொண்டோ அல்லது
அவற்றினை மீண்டும் புடம்போட்டுக்கொண்டோ இருக்கவில்லை. அவர் தனது பணிக்கு புதியதோர் அகன்ற பாதை அமைத்தார்,
அவரது அணுகுமுறை பின்தொடர்ந்துவரும் மாணவ தலைமுறையினருக்கு கிற்றார் இசையினை பயிற்றுவிப்பதற்கு முற்று முழுவதும்
இசைவானவற்றினை நாடி நின்றது.
வான் ரொங்கின் கடைசி அல்பமான "இனிமையும் உண்மையும்" ("Sweet
and Lowdown") ஒரு வருடத்திற்கு முன்னராகவே வெளியாகியிருந்தது.
அவர் நோயுறும் வரையில் தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், நாடு பூராகவும் அவர் கழகங்களிலும்
மற்றும் தேனீரகங்களிலும் பழைய மற்றும் புதிய பார்வையாளர் முன்னிலையில் பாடினார், அத்துடன் கனடா மற்றும்
ஐரோப்பாவிற்கும் சென்றுவந்தார்.
வான் ரொங் மீதான மதிப்பும் நேசமும் அவர் சுகவீனமுற்றிருந்தபோது பெருமளவில் வெளிப்பட்டது.
அவர் உடல்நலமற்று இருந்தபோது அவருக்காக அதிக எண்ணிக்கையிலான நிதியீட்டு கச்சேரிகள் நடாத்தப்பட்டன. கடந்த
நவம்பர் மாதத்தில் Arlo Guthrie, Tom Paxton
மற்றும்
Peter, Paul மற்றும்
Mary நியூயோர்கின்
Bottom Line இல் தமது நண்பருக்காக நிதி சேகரிக்கும் கச்சேரி
நடாத்தினர்.
அதன் முன்னராக, 1997 டிசம்பரில் வான் ரொங் அமெரிக்க இசைபதிவாளர்கள், படைப்பாளர்கள்,
மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் அதாவது ASCAP (American
Society of Composers, Authors and Publishers)
அளித்த வாழ்கைக்கால சேவைக்கான விருதை (Lifetime
Achievement Award)
பெற்றுக்கொண்டார். அந்நேரத்தில் விருதுவழங்கும் நிகழ்ச்சியை தலைமைதாங்கி
நடாத்திய Christine Lavin
என்பவரினால் அமைக்கப்பட்ட இணையதளத்திற்கு இவரது ரசிகர்களும் மற்றும் இவரை
பின்பற்றும் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
டேவ் வான் ரொங்- இன் இசை மரபின் மகிமை, அவரது பல பதிவுகளில் மாத்திரமல்ல,
அவரை எண்ணும் ஆயிரமாயிரம் உள்ளங்களிலும் மேலும் அவர் செல்வாக்குச் செலுத்திய நீண்ட பணியின் தொடர்ச்சியிலும்
என்றும் உயிர்வாழும்.
|